18/10/2017

சித்தர் ஆவது எப்படி - 16...


வேறு ஒன்றும் தோன்றா நிலை...

தோன்றா நிலையில் அனுபவப் பட்ட நாம், அந்த தோன்றா நிலையில் நாம் நம் கடமைகளை செய்ய வில்லையென்றால் அந்த தோன்றா நிலை பெற்றதின் மூலம் எந்த பயனையும் அடைவதில்லை..

அந்த தோன்றா நிலையில் ஒரு காரியத்தை செய்தால், அந்த தோன்றா நிலை கெட்டுதானே போகும் என்ற ஒரு கேள்வி எழலாம்..

ஒரு காரியத்தை செய்ய மனம் தேவைப் படுகிறது.. தோன்றும் நிலையில் உள்ள மனம், நிச்சயமாக தோன்றா நிலையை பாதிக்கவே செய்யும்.. உண்மை தான்..

ஆனால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது..

உணவு உண்டு கொண்டு இருக்கிறோம்.. அது மனம் தன்னை ஈடு படுத்தி அந்த காரியத்தை செய்ய தொடங்குகிறது..

இப்பொழுது அந்த மனம் அந்த உணவு உண்ணும் காலத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தால் அந்த உணவில் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொள்வதில்லை...

அதனால் அந்த உணவில் உள்ள உணர்வு மிக மிக குறைந்து, அந்த உணர்வின் மூலம் பெற வேண்டிய கனலை பெற முடியாமல் போய் உண்கின்ற அந்த உணவு நாசம் ஆகிறது..

ஒரு தோராயமான கணக்கில் பார்த்தால் அந்த உணவில் நூறில் ஒரு பங்கே நாம் கனலை பெறுகிறோம் என்பது மிக மிக ஆச்சரியமான விசயம் மட்டும் அல்ல, மிக மிக உண்மையான விசயமும் கூட...

நாம் வாழ்வில் பாடுபட்டு சேர்த்ததை எப்படி யெல்லாம் விரையம் செய்கிறோம் என்பதை அந்த தோன்றா நிலை அனுபவத்தின் மூலம் நமக்கு நன்கு விளங்க வரும்...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை பெற்றபின், நாம் உணவு உட்கொள்ளும் போது, அந்த ஒரு செயலை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில், அந்த உணவினை உட்கொள்ள வேண்டும்..

வேறு ஒன்றும் தோன்றா நிலையில் நாம் அந்த உணவினை உட் கொள்ளும் போது, அந்த உணவில் நூற்றுக்கு நூறு பங்கு கனலை பெற்று, நாம் வலிமை உடையவர்கள் ஆகிறோம்.. இதை விட மிக உயர்ந்த சிறப்பு எங்கு இருக்கிறது ?

நாம் கடினப் பட்டு ஈட்டிய பொருள்களில் உச்ச கட்ட பயனை பெறுகிறோம்.. மேலும் மேலும் பொருள் ஈட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது..

ஒரு எளிமையான வாழ்க்கையில் ஒரு பெரிய சக்கரவர்த்தியை விட மிக அதிகமான பயன் தூய்ப்பை பெற்று நமது தேடுதல்கள் அறவே நின்று போய் விடுகிறது...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலை ஒன்றில் இணைத்து அந்த தோன்றும் நிலை ஒன்றை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில் செயல் படும் போது அந்த செயல் சித்தி பெறுகிறது..

சித்தி என்பது பூரணத்துவம் என்பதாகும்..

இப்படியாக செய்கின்ற காரியங்கள் எல்லாம் சித்தி பெறுவதால், ஒரு மனிதன் சித்தர் ஆகிறான்.. சித்தர்கள் செய்கின்ற காரியங்கள் எல்லாம் பூரணத்துவமாக இருக்கும்..

சகலமும் சித்தி பெறும் என்பது இப்படி வேறு ஒன்றும் தோன்றாநிலையில் செய்யும் போது மட்டுமே..

இப்படி தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலையோடு பொருத்தி வேறு ஒன்றும் தோன்றா நிலையோடு செயல் படுவதையே அன்பு என்கிறோம்..

தோன்றா நிலையாகிய அருள் சக்தியான அகரமும், தோன்றும் நிலையான புவியின் உலகியல் ஒரு செயலும் பு என்ற எழுத்தும் வேறு ஒன்றும் தோன்றா நிலையாகியாகிய ஒரே முடிவான ஒன்றான ன் என்ற கடைசி மெய் எழுத்தானது இணைந்து அன்பு ஆனாது..

இதில் பதினெட்டாம் மெய் எழுத்தான "ன்" என்பது தான் மிகவும் முக்கியமானதாகும்..

அதுவே வேறு ஒன்றும் தோன்றா நிலையில் ஒரு செயலை ஒரே முடிவாக வைத்துக் கொண்டு அந்த செயலை சித்தி அதாவது பூரணத்துவம் அடையும் வண்ணம் ஆற்றலை தரவல்லது..

சகலமும் சித்தி பெற ஒரு தகுந்த உபாயத்தை அறிந்த நாம் தோன்றா நிலை அனுபவத்தின் அவசியத்தை உணர்ந்து வாசிப் பயிற்சியிலே கற்றுக் கொண்டதை நடை முறைக்கு கொண்டு வந்து சகலத்தையும் சித்தி பெற செய்து சித்தராவோமாக...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


வதந்தியை நம்பாமல் நிலவேம்பு அருந்த அறிவுறுத்தல்...


நிலவேம்பு குடிநீரில் 9 மூலிகைகள் உள்ளன..

நிலவேம்பு குடிநீர் பருகினால் மலட்டுத் தன்மை ஏற்படும் என எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை.

மேலும், நிலவேம்பு குடிநீரை தயாரித்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும் - மருத்துவர் கு.சிவராமன் தகவல்...

கீரை+மரக்கறி+உப்பு - ஆரோக்கியக் குறிப்புகள்...



உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.

காயசித்தி :

உடல் வளத்தைப் பெருக்கி பொன்நிற மேனியைக் கொடுத்து மன்மதனாக்கவல்ல மகோன்னத சக்தி மறைந்துள்ள கீரை மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியாகும். விழிக்கு ஒளியைப்பெருக்கிக் கொடுத்து, சிந்திக்கும் திறத்தைக் கூட்டிக் கொடுத்து அறிவாளியாக அரங்கேற்றி அழகு பார்க்கும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை, குன்மக்கட்டி போன்ற நோய்களை விரட்டியடித்து விடும். மொத்தத்தில் இது ஒரு காயகல்பம். எனவே தான் வடலூரார், இந்தக் கீரைக்கு ‘காயசித்தி’ என வாய்மொழிந்தார்.

தூதுவளை :

செவிமந்தம், செவி அழற்சி, காசம், உடல் நமைச்சல், மதரோகம், திரிகோஷம், உட்குத்தல், விந்து தானாகப் பிரிதல், இருமல், மூச்சுத்திணறல், கோழைகட்டுதல் ஆகியவற்றை வேரோடு கிள்ளி எறிந்து விடும். வெற்றியையே அள்ளித்தரும் அற்புதத் தமிழ்மூலிகை. அகத்தியரும் வள்ளலாரும் இதை ‘கபநாசினி’ என்று போற்றினர்.

பொன்னாங்கண்ணி:

விழியைப் பற்றிய வாதகாசம், பார்வையில் தடுமாற்றம், பக்கவாதம், மூலச்சூடு, ரோகம், பிலிகம் சொறிசிரங்கு, தேமல் போன்ற நோய்களைத் தடுத்து நிறுத்திடும். நோய்கள் கண்டால் இக்கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் பஞ்சாய்ப் பறந்து போகும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து தேக உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்கும்.

புளியாரை:

பித்தம்_மயக்கம்_தலைச்சுற்றல் மூலவாயு_வயிற்றுப்போக்கு பேதிவாந்தி இவற்றை நமது உடலைத்தீண்ட விடாது எதிர்த்து நிற்கும் ஓர் அற்புதக்கீரை. ரத்தத்தைச் சுத்தி செய்து கொடுக்கும் வல்லமை நிறையவே உண்டு. எனவே சித்தர் பெருமக்கள் ‘காயசித்தி’ ‘பித்தமார்த்தினி’ எனப் பாராட்டினார்கள்.

முருங்கைகீரை:

உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி’ எனப் பேசுகிறது.

பசளி:

சிறுநீர்க் கோளாறுகள், மூத்திரக்கடுப்பு, வாந்தி, மூத்திரக்காய்கள் கோளாறு இவற்றைக் களையவல்ல அற்புத மருத்துவ சஞ்சீவி. கால்சியம், பாஸ்பரஸ். சோடியம் குளோரின் வைட்டமின் ஏ.பி.சி.; புரதம் வெஜிடபிள் ஹீமோகுளோபின் அமீன் ஆசிட் போன்ற கணக்கற்ற ஊட்டச்சத்துக்களை ஒருசேர உள்வாங்கிக் கொண்ட கீரைகளில் அரசன். மொத்தத்தில் இது ஒரு தங்க பஸ்பம். முறையாக உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் ‘சிறுநீரகக் கோளாறு’ உங்களைச் சீண்டிப் பார்க்கவே அச்சப்பட்டு வெளியே நின்று தன்னைத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். இது சத்தியம்.

காய்கறிகளைவிட கீரைகளில் பசுமைச்சத்து இருப்பதால் பல்வேறு நன்மைகள் வந்தடைகின்றன. இதில் உள்ள தாதுப் பொருள்கள் பெரும்பாலும் காரத்தன்மை உடையவை. இதனால் நமது உடலில் சேரும் கழிவுப் பொருள்களை வெளியேற்றிட ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.

காய்கறிகள்:

அவரை, முருங்கை, தூதுவளங்காய், அத்திக்காய், முள்ளிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, பேயன், வாழைத்தண்டு, கொத்தவரைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளைப் பூசணிக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பச்சைப்பட்டாணி, தக்காளி வெள்ளரிக்காய் போன்ற காய்களை மூடிய பாத்திரத்தில் மிதமாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது. மேற்கண்ட காய்கறிகள் சிலவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளில்தான் நார்ப்பொருள்கள் அதிகமாக உள்ளன. வெள்ளரிக்காய் கோடைக் காலத்திற்கு உகந்தது. நமது வயிற்றில் உண்டாகின்ற புளிப்புத் தன்மையைக் கட்டுப்படுத்தும் சக்தியை வெள்ளரி தனக்குள்ளே சேமித்து வைத்திருக்கிறது.

காரத்தன்மையால் உடலில் உண்டாகின்ற, புளிப்புத் தன்மையால் உண்டாகின்ற அசுத்தப் பொருள்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த உயிர் அணுக்களை உற்பத்தி செய்கின்ற உந்து சக்தி உள்ளது. ரத்த உயிரணுக்களின் சேர்க்கையில் மிக அதிகமாகஉள்ள உப்புப்பொருளான பொட்டாசியம் குளோரைடு பொட்டாசியம் பாஸ்பேட் அதிகமாக உள்ள ஓர் அற்புதமான காய் வெள்ளரிக்காய்.

நாம் உட்கொள்ளும் Methionine புரதம் உடலில் Homocy Stein என்ற நஞ்சாக மாறுகின்றது. இந்த விஷப் பொருள் உடலின் இருதயத்துடிப்பையும் இருதயத்தையும் பெரிதும் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த ஹோமோசிஸ்டின் என்ற நச்சுப் பொருளை வெளியேற்றும் சக்திவைட்டமின் ‘‘பி6’’_ல் உள்ளது என அறிவியல் அறிவித்துள்ளது. இத்தகைய சக்தி அதிகமாக உள்ள பேயன் வாழைப்பழம், ரஸ்தாளிப்பழம் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாதுளை, பேரீச்சை இவற்றை உண்பது உத்தமம்.

மாங்காய், கொய்யா, பலாப்பழம் இவற்றை வெகுவாகக் குறைத்துக் கொள்வது நல்லது. பால், பலா, மாம்பழம், மீன், கோழி இவை ஒன்றுக்கொன்று எதிர்மறை சக்திகளை உருவாக்கும் முரண்பாடுகள் கொண்டவை. பேதி வாந்தி சிலநேரங்களில் உயிருக்குக் கூட கேடு வந்து சேரலாம். இவற்றை ஒன்றோடு ஒன்று சேர உதவிடாதீர்கள். எச்சரிக்கைமிக தேவை.

கேரட், பீட்ரூட், டர்னிப், நூக்கல், உருளைக்கிழங்கு இவற்றைச் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு தவிர்ப்பது நல்லது.

சுண்டக்கடலை, தட்டப்பயிறு, மொச்சைப் பயிறு, இவற்றைச் சிறிதளவாக வாரத்திற்கு ஒருமுறை பகல் பொழுதில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை.

நிலக்கடலை, முந்திரி, பாதம், பிஸ்தா பருப்பு, சாரப்பருப்பு வகைகளில் கொழுப்புச்சத்து விஞ்சி இருப்பதால் தனியாகச் சாப்பிடக்கூடாது. மாதத்திற்கு இருமுறை ஏதாவது உணவோடு கலந்து சிறிய அளவே உண்ணவேண்டும்.

முளைகட்டின துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, ஜீரகம், வெந்தயம், இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.

பசுவின் தயிர், மோர், நெய் சேர்த்துக் கொள்வதில் தண்ணீர் கலந்த மோர் சிறப்பானது.

கடையிலே விற்கப்படுகின்ற ஊறுகாய்வகைகளை ஒதுக்குங்கள் வீட்டிலேயே காரம் எண்ணெய் அதிகம் சேர்க்காது, உப்பு மிகமிகக் குறைவாகச் சேர்த்து தயாரித்துக் கொள்வது உத்தமம். எலுமிச்சை, நார்த்தங்காய், பூண்டு, நெல்லிக்காய், மாஇஞ்சி, பச்சைமிளகு மாவல்லிக்கிழங்கு (நன்னாரி), இவை உங்களது ஊறுகாய்களுக்கு மூலப் பொருளாக இருத்தல் அவசியம்.

உப்பு:

நாம் சாப்பிடுகின்ற எல்லா உணவு வகைகளிலேயும் ‘உப்பு’ வஞ்சனை இல்லாமல் நமக்கு சுவையைக் கூட்டிக்கொடுத்து மறைமுகமாக ‘நஞ்சினை’ உடலுக்குள் கூட்டி வருகிறதை நாம் மறந்து விடக்கூடாது. ‘உப்பே தப்பு’ என்பார்கள் தமிழ் மூலிகை மருத்துவர்கள். உப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது கடல் உப்பே. உப்பில் சோடியம் குளோரைடு வெகுவாக உள்ளது. உங்கள் உடலில் ஏதாவது ரத்தக்காயம் ஏற்பட்டால் அதில் கொஞ்சம் உப்பை வைத்துப்பாருங்கள். தாங்க முடியாத எரிச்சல் இருக்கும். அந்த அளவிற்கு வீரிய சக்தி கொடுக்க வல்லது உப்பு. இந்த மாற்றமே நமது குடலிலேயும் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்ற போது ஏற்படுகின்றது.

ஆனால், இந்த உபாதையை நம்மால் உணர இயல முடியவில்லை. காரணம், நமது நாக்கின் ருசியே அந்த எரிச்சலை அரண் போட்டு உணரவிடாது தடுத்துவிடுகிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன். நீங்கள் சாப்பிடுகின்ற 1 கிராம் உப்பின் எரிச்சலைப் போக்க 70 கிராம் தண்ணீர் குடித்தால் தான் உப்பின் நஞ்சுத் தன்மையைப் போக்க இயலும் என மேலை நாட்டு மருத்துவக் குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் உடலின் எடை கூடுகிறது. உப்பே இல்லாது உணவை உட்கொள்ளப் பழக்கிக் கொள்வது நல்லது. துவக்கத்திலே உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் உங்கள் உடலின் பகுதிகளில் சிறுநீரகத்தில் தான் உப்பு தேக்கமாகிறது. அதை நாம் குடிக்கின்ற தண்ணீராலேயே அன்றாடம் வெளியேற்றுகின்றோம். உடலில் உப்புச்சத்துக் குறையக் குறைய உங்களது எடையும் சீராகவே இருக்கும்.

கடற்கரைச் சாலைகளில் உள்ள வானுயர்ந்த கற்கோட்டைகள் எல்லாமே அரித்து அரித்து உதிர்வதைப் பார்க்கின்றோம். கற்கோட்டைகளையே அரித்து விடுகின்ற உப்பு உங்களது உடலை விட்டு வைக்குமா? சிந்தித்துப் பாருங்கள்.

நம்மில் பலர் உப்பில்லா உணவு நமது நினைவாற்றலைக் குறைக்கும் என்று தப்புக் கணக்குப் போடுகின்றனர். இது தவறு. உப்பு உங்களது சிறுநீரகத்தை இயங்காது தடுத்து விடுவதோடு, மூளை வளர்ச்சியையும் பெரிதும் பாதிப்படையச் செய்து விடுகிறது.

ஆங்கில மருத்துவம் இந்த வகையில் நம்மைக் குழம்புகிறது. சில நேரங்களில் உப்பு தேவை என வாதிடுகிறது. இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் சுவடு தெரிந்துவிட்டால் உப்பை நிறுத்துங்கள் என சிவப்புவிளக்கை கையிலே தூக்கிப் பிடிக்கிறது. ஒரு கையிலே பச்சை விளக்கையும் மற்றோர் கையில் சிவப்புக் கொடியையும் பிடித்து நம்மை குழப்புகிறது.

உப்பின் அறிவியல் பெயர் சோடியம் குளோரைடு. மனித உடல் வளர்ச்சிக்கு இரும்பு பொட்டாஷ், கந்தகம், கால்சியம் தேவைதான் உப்பை மனிதனால் ஜீரணிக்க இயலாது. உப்பை உண்பதால் மனிதனது சிறுநீரகம், கல்லீரல், இதயம், இரத்தக் குழாய்கள், மூளை வெகுவாக பாதிக்கப்படுகின்றன என அமெரிக்க மருத்துவர் பால் பேக்கர் தெரிவிக்கின்றார்.

உப்பு சாப்பிடுவதால் நரம்புகளில் எரிச்சலை உண்டாக்குகிறது. நமது உடலில் உள்ள கால்சியத்தைத் திருடி பற்களையும் எலும்புகளையும் சக்தி இழக்கச் செய்துவிடுகிறது. நமது குடலில் உள்ள லேசான சவ்வுகளை அரித்து குடற்புண் பிராங்கைடிஸ் போன்ற நோய்களை மிகச் சுலபமாக பதியவைக்கிறது இந்தப் பொல்லாத உப்பு. எனவே இன்றிலிருந்து உப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து முற்றிலும் அகற்ற முயற்சி செய்யுங்கள்.

சரி உப்பு வேண்டாம். நமது உடலுக்கு உப்புச் சத்து வேண்டாமா? என்று நீங்கள் இதழ் மூடி முணுமுணுப்பது தெரிகிறது. உப்புச் சத்துக்கள் உள்ள இயற்கை உணவுகளை உண்பதில் தவறில்லை.

நமக்காகவே நமது சித்தர்களும் மேலைநாட்டு மருத்துவமும் வாய் மொழிந்தவை இதோ...

மூளைக்கீரை, வாழைத்தண்டு, கீரைத்தண்டு, முள்ளங்கி, காரட், சௌசௌ, வெண்பூசணி, வெங்காயக்கீரை, முட்டைக்கோஸ் நூல்கோல் வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, ஆப்பிள், திராட்சை, வெங்காயம், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொண்டால் நமக்கு கிடைத்து விடுகிறது.

உங்கள் நலத்திற்குத் தேவையான உப்பு சத்து இயற்கை உணவிலேயே உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சுகமான வாழ்வுக்கே நீங்கள் சொந்தக்காரர் ஆவீர்கள்...

தேசியகீதம் இசைத்த போது ராஜஸ்தான் முதலமைச்சருக்கு தேசபக்தி பொங்கிய போது...


அடேய் மாட்டு மூளை பக்தாஸ் எங்கடா இருக்கீங்க..

தேசமாதமாவே phoneல கூப்பிட்டார், அதான் பேசிகிட்டு இருக்கார் என்று விளக்கம் ஏதும் தந்துராதீங்க டா...

பாஜக பொறி உருண்டை ராதாகிருஷ்னன் கொடுத்த சவடாலுக்கு பின் காவிகளின் டவுசரை கிழித்த கேரளா கம்யூனிஸ்ட் வாதிகள்...


கண்ண நோண்டிருவோம் - பாஜக சரோஜ் பாண்டே...


உங்களால ஒரு மசுறக்கூடப் புடுங்க முடியாது இங்க - கம்யூனிஸ்ட் கொடியேறி பாலகிருஷ்ணன்...

பாஜக மோடியின் புதிய டிஜிட்டல் இந்தியா கிரியேட்டர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்திய போது...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 35...


மந்திர தியானம் செய்முறை...

மந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ஓம்.

பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கிறிஸ்துவ தியானத்தில் ஜான் மெய்ன் மாராநாதா என்கிற மந்திரத்தை உபயோகித்தார்.

இது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய அராமிக் மொழிச் சொல் எனப்படுகிறது. இதற்கு ஏசுவே வாருங்கள், அல்லது ஏசு வருகிறார் என்பது பொருள் என்கிறார்கள். செயிண்ட் பாலும், செயிண்ட் ஜானும் இந்த பிரார்த்தனை சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப் படுகிறது.

புத்த மதத்தில் ஓம் மணி பத்மே ஹம் என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

சிலர் தத்துவார்த்தமான ஒரு சொல்லை மந்திரமாக எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சிலர் சோ-ஹம் என்ற மந்திரத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்கு நானே அது என்பது பொருள். ஆனால் சில தமிழர்கள் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தும் போது சோ ஹம் என்பது சோகம் என்ற சொல் போல இருப்பதாக நினைக்கத் தோன்றுவதாகச் சொல்கிறார்கள். அப்படித் தோன்றுபவர்கள் இந்த மந்திரத்தை தவிர்க்கலாம்.

மதங்களை சாராதவர்கள், தத்துவ ஞானங்களில் பெரிய ஈர்ப்பு இல்லாதவர்கள் தங்களைக் கவர்ந்த ஒரு மேன்மையான சொல்லை மந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மந்திர தியானத்தில் எந்த சொல்லை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றாலும் ஒரு முறை தேர்ந்தெடுத்த பின் அதையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் தியானம் நல்ல பலனைத் தரும்.

மந்திரச் சொல் தகுந்த குரு மூலம் உபதேசம் செய்யப்பட வேண்டும் என்று நம் முன்னோர் நினைத்ததற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் குருவிடமிருந்து பெற்ற எதையும் புனிதமாகக் கருதும் வழக்கம் இருந்தது தான். இக்காலத்தில் அப்படிப்பட்ட குருவைக் காண்பது கஷ்டம் என்பதால் முறையாக அந்த மந்திரச் சொல்லை தியானத்திற்கு ஏற்றுக் கொள்ள இன்னொரு வழியைக் கடைபிடிக்கலாம்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கோ, பூஜையறைக்கோ சென்று தங்கள் இஷ்ட தெய்வத்திடம் இருந்து அந்த மந்திரச் சொல்லைப் பெறுவதாக கண்களை மூடிக்கொண்டு மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். இல்லா விட்டால் நீங்கள் தொழும் மகானிடமிருந்து அதைப் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் சமுத்திரம், மலை, நதி போன்ற இயற்கை சூழ்நிலைக்குச் சென்றோ, இல்லை அமைதியான வேறிடத்திற்குச் சென்றோ பிரபஞ்சத்திடம் இருந்தே அந்தச் சொல்லை உபதேசம் பெறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மிகுந்த நன்றியுடன் அந்தச் சொல்லைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணத்திலிருந்து உங்களுக்கு மிகப் புனிதமான சக்தி வாய்ந்த சொல்.

இனி மந்திர தியானம் செய்யும் முறையைப் பார்க்கலாம். சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பே கடிகாரத்தில் அலாரம் செட் செய்து விட்டு தியானத்தை ஆரம்பித்தால் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு சீராகவும், ஆழமாகவும் தானாக மாறும் வரை உங்கள் கவனம் அதன் மீது இருக்கட்டும்.

3) மூச்சு சீரான பிறகு அந்த மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

4) அந்த மந்திரத்தை நிறுத்தி நிதானமாக உச்சரியுங்கள். உச்சரிக்கும் விதம் மிக வேகமாகவோ, மிக நிதானமாகவோ இல்லாமல் சாதாரண நிதானத்துடன் இருக்கட்டும்.

5) உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும். சில முறைக்குப் பின் மனம் கண்டிப்பாக அலைய ஆரம்பிக்கும். எத்தனை முறை அலைந்தாலும் பொறுமையாக அந்த அதை திரும்ப மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள். உட்காரும் நிலை சில உணர்வுகளை உடலில் ஏற்படுத்தக் கூடும். அதில் கவனம் செல்லும் போதும் மீண்டும் மனதை மந்திரத்திற்கே கொண்டு வாருங்கள்.

6) தியானத்தின் போது மந்திரம் உச்சரிப்பது நின்று போகலாம். நீங்கள் மந்திரத்தை உச்சரிக்கும் வேகம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம். அப்போதெல்லாம். மனதில் மந்திரம் அல்லாமல் வேறெதோ எண்ணம் நுழைந்து விட்டது என்று பொருள். அப்படி எல்லாம் ஆகும் போது சலிப்படையக் கூடாது. இந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டாமல் யாரும் தியானங்களில் உயர்நிலைகள் அடைய முடிந்ததில்லை.

7) திரும்பத் திரும்ப ஆரம்பித்த அதே ஆர்வத்துடன் அதே நிதானமான முறையில் மந்திரத்தை மீண்டும் உச்சரிக்க ஆரம்பியுங்கள். ஒரு சில நாட்களில் அந்த மந்திரம் உங்களுக்குள் பெரும் மாற்றங்கள் கொண்டு வரும். அப்போதும் கூட அந்த மாற்றங்களைப் பற்றி அந்த தியான நேரத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடாதீர்கள். அந்த மந்திரச் சொல்லில் மீண்டும் மீண்டும் லயிக்க விடுங்கள்.

8) தியானம் நல்ல முறையில் கைகூடிய பின் ஒரு நாளில் ஒரு கட்டத்தில் நீங்கள் மந்திரத்தை மட்டுமே உணர்ந்தவராய் இருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே அந்த மந்திரத்தை உச்சரிப்பது போல உணர்வீர்கள். அந்த மந்திரமே உங்கள் பிரபஞ்சமாகி விடும். ஒரு பேரமைதியினை நீங்கள் ஆழமாக உணர்வீர்கள். காலம் அந்த சமயத்தில் ஸ்தம்பித்துப் போவதாய் உணர்வீர்கள்.

9) ஆனால் அந்த அனுபவங்கள் ஆரம்பங்களில் சில வினாடிகளே நீடிக்கும். பின் அது போன்ற அனுபவங்கள் சீக்கிரம் கிடைக்காமல் போகலாம். அதையே எதிர்பார்த்து தியானம் செய்வது தியானமாகாது. எதிர்பார்ப்பு மனதில் இருக்கிற நேரம் மனம் முழுமையாக தியானத்தில் லயிக்காது.

10) இது போன்ற அனுபவங்கள் வரும். போகும். ஆனால் இதிலெல்லாம் அலைக்கழியாமல் தியானத்தை மீண்டும் தொடருங்கள். மனம் அலைகின்ற நேரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் எப்படி அதை மீண்டும் மந்திரத்திற்குக் கொண்டு வருவீர்களோ அப்படியே இந்த எதிர்பார்ப்புகள் வரும் போதும் அதை ஒரு விலகலாக எண்ணி மீண்டும் மனதை மந்திரத்திற்குக் கொண்டு வாருங்க்ள்.

தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்.

மேலும் பயணிப்போம்...

போலி தேசிய நெடுஞ்சாலை...


பாஜக - இந்துத்துவத்திற்கு எதிரான இந்திய அளவிலான அரசியல் செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு உருவானது...


பாஜக-இந்துத்துவ பாசிசத்தினை இந்திய அளவில் வீழ்த்துவதை குறிக்கோளாக பிரகடப்படுத்தியிருக்கிறது இக்கூட்டமைப்பு.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் அவர்கள் தலைமையிலும், சமூகநீதி போராட்டகளத்தில் நிற்கும் தோழர்களாலும் ’நீதி மற்றும் அமைதிக்கான கூட்டமைப்பு’ இன்று உருவாக்கப்பட்டது.

ஆரிய-பார்ப்பனிய அரசாக விளங்குகின்ற இந்துத்துவ பாசிசத்தினை வீழ்த்தவேண்டுமென்று அனைத்து தோழர்களும் ஒரே குரலில் பதிவு செய்தார்கள்.

பார்ப்பனியம் என்கிற பாசிச கருத்தியலே சனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் முதல் கர்நாடகம், மராத்தியம், ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த செயல்பாட்டாளர்கள் வெளிப்படையாக பதிவு செய்தார்கள்.

அனைத்து சமூக மக்களுக்கும் எதிரானதாக இப்பாசிச கருத்தியல் செயல்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வமான முறையில் பதிவு செய்தார்கள்.

பார்ப்பனியம் என்பதை ஆதிக்க கருத்தியலாக கிட்டதட்ட அனைத்து தரப்பினரும் முன்வைத்து விவாதித்தார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக மும்பை நகரில் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாட்டு அரங்கம் பல்வேறு செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்திருக்கிறது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. கோல்சா பாட்டேல்,  அல்ஃபர்க்கான் இதழின் ஆசிரியர்  திரு. கலீலுர் ரஹ்மான், BAMCEF- அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பழங்குடி பணியாளர் அமைப்பின் தலைவர் திரு. வமன் மேஷ்ராம்,  குஜராத் படுகொலைக்கான சட்டப்போராட்டத்தினை நடத்தும் தோழர். தீஸ்டா சட்டல்வட், புரட்சிகர கவிஞர் தோழர்.வரவரராவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற நிகழ்வில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குழுவும் பங்கெடுத்தது.

 தலித்திய செயல்பாட்டாளர்கள், பெண் உரிமைச்செயல்பாட்டாளர்கள், இசுலாமிய தோழமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் என ராஜஸ்தான், மராத்தியம், கர்நாடகம், தமிழ்நாடு, டில்லி, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என பல மாநிலப் பிரதிநிதிகளும் பங்கெடுத்து இக்கூட்டமைப்பினை உருவாக்கி இன்று -16/10/2017 ‘மும்பை பிரகடனத்தினை’ வெளியிட்டார்கள். கிட்டதட்ட 150  பிரதிநிதிகள் பங்கெடுத்த இந்நிகழ்வில் SDPI கட்சியின் தமிழக தலைவர் தோழர்.தெகலான் பாகவி,  தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர்.நாகை திருவள்ளுவன், பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தோழர் அன்சாரி,  உள்ளிட்டோருடன் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் குழுவும் பங்கெடுத்தது.

ஆரிய பாசிசத்தினை வீழ்த்தும் வரை மே17 இயக்கத் தோழமைகளுக்கு ஓய்வில்லை.

- திருமுருகன் காந்தி
  மே 17 இயக்கம்

மறுபிறப்பு...


தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட
திருக்குறளில் அறத்துப்பாலில் நிலையாமை பற்றி குறிப்பிடும் போது...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு என்று.

இறப்பை உறங்குவது போலும் என்றும்.

பிறப்பை உறங்கி எழுவது போலும் என்கிறார்.

அப்படிப் பார்க்க போனால் நாம் ஒவ்வொருவரும் தினம் காலையில் புதுப்பிறவி எடுப்பதாகத் தானே
பொருள்.

ஆனால் வாழும்போதே மரணத்தின் வாயிலைத் தொட்டு திரும்புவதை என்னவென்று சொல்வது ?

அதை மறுபிறவி என்று சொல்லலாமா?

எனது இந்த வாழ்நாள் பயணத்தின் போது, இதுவரை பல முறை மரணத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அதுகூட மறுபிறப்பு போன்றது தான் என்பது என் கருத்து...

இன்று அதிகாலை பிரதமர் மோடி அலுவலகத்தில் தீ விபத்து , உடனடியாக விரைந்து தீயை அணைத்த தீயணைப்பு படை...


பிரதமர் அலுவலகத்தின் 2 வது மாடியில் உள்ள அறை எண் 242 ல் தீ விபத்து ஏற்பட்டு உடனடியாக அணைக்கப்பட்டுள்ளது...

சித்தர் ஆவது எப்படி - 15...


பேரருளை உணர்த்தாத குருவருள் பாழ்...

அன்பே சிவம் என யாரும் அறிகிலர் என சித்தர் பாடிய பாட்டின் படி, அன்பை பற்றி சதா பேசிக் கொண்டே இருக்கும் மனித வர்க்கம் அதன் உண்மை தன்மையை உணராது இருக்கிறது.. அது முக்தியில் மட்டுமே தோற்றத்திற்கு வரும்.. விளக்கம் கிடைக்கும்...

அந்த மூன்று இணைக்கக் கூடிய ஒளி நிலை பெறவே முதலில் முனைய வேண்டும்... அந்த மூன்று கிடைத்த ஒளி நிலையில் மட்டுமே மரணமற்ற நீங்காத பேரன்பு கிடைக்கும்.. முதலில் பேராற்றல் மிகுந்த பேரருளின் தோன்றா நிலையின் தொடர்பு..

அப்படி அப்படி பெற்ற ஆற்றலை உருவ சக்தியாக மாற்றும் வல்லமை வாய்ந்த ஒரு ஊடகமான குருவருளின் தொடர்பு.. அது இரண்டாம் நிலை..

பின் குருவின் தொடர்புடன் உருவ பொருள்களுடன் உலகத்தோடு தர்மமாக வாழுதல்.. இது மூன்றாம் நிலையான திருவருள்..

பேரருள் குருவருள் திருவருள் இந்த மூன்று நிலைகளையும் ஒரே நேரத்தில் பூரணமாக பெற்று இயங்குகிற அந்த தருணம் தான் முக்தி அடைந்த நிலை என்பர்..

அந்த நிலை தான் நிகழ் கால தொடர்பாகிய அன்பு என்பர்..

அந்த நிலையில் வற்றாத சக்தியை பிரபஞ்சமாகிய தோன்றா நிலையில் பெற்று பெற்று, அதனை சத்திய பொருளாக குருவின் துணையால் உருவமாக மாற்றி உலக சார்புகளோடு, சத்திய வாழ்க்கை தர்ம வாழ்க்கை, கருணையோடு வாழும் தகுதி பெறுகிறோம்..

முக்தி ஆனது தோன்றா நிலையாகிய பேரருளையும், அந்த பேரருளை வேண்டிய வண்ணம் பொருளாக மாற்றும் ஒரு ஊடகமான குருவருளையும், அதனால் உண்டான சத்திய நிலையில் ஏற்படும் உலக பந்தங்களில் பயன் தூய்ப்பு என்ற அனுபவநிலையும் ஒன்று சேர்ந்த நிலையில், இணைந்த நிலையில், இருக்கும் தன்மையாகும்..

அதாவது மூன்றும் பூரணமான செயல் நிலைதான் முக்தி என்பது.. இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டோ நீங்கிய நிலையில் குறைவு பட்டவர்களாக உள்ளோம்.. பேரருளும் குருவருளும் குறைவு பட்ட காரணத்தால், தொடர்பு மையமாகிய உலகியலில் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்...

தோன்றா நிலையாகிய பேரண்டமும் பேரறியும் அதன் பேராற்றலும் உணர்த்த வேண்டிய மதங்கள், இடையில் உள்ள குருவருளை மற்றுமே பற்றிக்கொண்டு, முயன்று முயன்று மூல ஆதார சக்தியை பற்ற முடியாமல், விதிக்கப் பட்ட சக்தியையும் செலவு செய்து தோற்றுப் போய் கொண்டே இருக்கின்றன..

சூரிய வெளிச்சத்தை முறைபடுத்தி குவித்து ஒரு குவி ஆடி ( lense ) தன் கீழ் உள்ள பஞ்சை எரிய வைக்கிறது..

இதில் சூரிய வெளிச்சம் பிரபஞ்ச ஆற்றல் என்ற பேரருள் என்றால், குவி ஆடி குருவருள் ஆகும்.. பஞ்சு என்பது உலக சம்பந்த பட்ட சார்புகளான திருவருள் ஆகும்.. இந்த மூன்றும் சேர்ந்த பூரணமாக பெற்ற நிலையே முக்தி என்பதாகும்..

இன்று நிழலிலே குவி ஆடி வைத்துக் கொண்டு பஞ்சை எரிக்க, படாதபாடு அனைவரும் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..

எல்லா மதங்களும் யோக பயிற்சிகளும் இன்று மூல ஆதாரத்தை விட்டு விட்டு வெறும் வழிபாட்டிலும், வெற்று பயிற்சியிலும் ஈடுபட்டு, இருக்கும் விதிக்கப் பட்ட ஆற்றலையும் இழந்து இழந்து நாசமாகி போய் கொண்டு இருக்கிறது.. எல்லாமே சூரிய ஒளி படாத குவி ஆடிகளாக இருக்கின்றன..

ஆனால் சில அற்புதங்கள் மதங்களில் நடக்கின்றனவே என்று வாதாடலாம்.. அற்புதங்கள் நடந்தபின், அதன் பின் வந்த நிலையை யாரும் வெளிப் படுத்துவது இல்லை..

அற்புதங்கள் நடந்த ஆனந்தத்தில் பின்னால் தொடர்ந்து வரும் அவல நிலையை மறைக்கப் பட்டு விட்டது..

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல் நடந்த அற்புதங்கள் பின், ஏற்படும் அவலங்களை சொல்லாமலே போய் விட்டனர்..

அற்புதங்கள் நடந்த போது பெருமை பட்ட போது, அந்த பெருமையே தனக்கு ஏற்பட்ட அவல நிலையை சொல்ல தடையாக இருந்தது.. சித்தர்களை தவிர எந்த மதவாதிகளுக்கும் எந்த அற்புதமும் நடக்கவே இல்லை..

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கு நூறாக மிகை படுத்தப் பட்ட அந்த அற்புதங்கள் பொய்யாகவே இருக்கும்..

முக்தி என்ற ஞான நிலையில் மட்டுமே அவைகளின் உண்மை தோற்றம் புலப்படும்..

தோன்றா நிலையில் உள்ள பேரருளின் துணை இல்லாமல் சத்தியமாக எந்த அற்புதமும் நடக்காது..

அந்த மூலாதார சக்தியின் துணையின்றி எந்த அற்புதமும் நடக்கவே நடக்காது..

மூலசக்தியின் துணையின்றி எல்லை கடந்து பலப்படுத்தப் பட்ட குருவருள் நாசத்தையே உருவாக்கும்..

பெருகி வரும் கோவில்களும் மசூதிகளும் சர்ச்களும், பேரருளுக்கு எதிரானவை.. பேரருளை பெற மிகப் பெரும் தடையாக உள்ளன..

அவைகள் எல்லாம் நிழலில் பயன் படுத்தப் படும் குவி ஆடிகள்.. எந்த கனலையும் எழுப்ப தகுதி அற்றவை..

மாறாக இருக்கின்ற கனலையும் கிரகித்து மனிதனை சக்கையாக செய்து விடும்.. இன்றைய குருமார்களும் அப்படியே இருக்கின்றார்கள்..

அதனால் தான் நிலைதடுமாறிய நிலையில் மனிதன் எண்ண செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்...

இந்த தோன்றா நிலையை உணர்த்தாத எதுவும் பலன் அளிக்காது..

மூலக்கனலோடு தொடர்பு அற்ற எதுவும் வெறும் சடப் பொருளே.. தோன்றும் நிலையில் உள்ள தொடர்பு, தோன்றா நிலையை உணர தடையாக இருப்பதால், தோன்றும் நிலையில் உள்ள குருவருள் மறைந்திருந்து ஒருவனுக்கு தோன்றாநிலையை உணர்த்த வேண்டும்..

அப்படி எதுவும் இன்றைய சூழ்நிலையில் நடப்பது இல்லை... தானே கடவுள் என பிரகடனப் படுத்தி மனித குலத்திற்கு நாசமே விளைவிக்கின்றனர்..

தோன்றா நிலையில் பெறப்பட்ட மூல சக்தியால் மட்டுமே முக்தியின் விளைவாக ஒருவர் அன்பு உடையவராய் ஆகி திருவருளான உலக சார்புகளுக்கு, அதாவது உலக உயிர் இனங்களுக்கு நன்மை செய்ய முடியும்..

மற்றபடி மற்றவர்கள் அன்பை பற்றி பேசிக் கொண்டு இருக்கலாமே தவிர அன்பாய் இருக்க முடியாது..

ஆகவே இன்றைய மனிதக் குலத்திற்கு தோன்றா நிலைக்கு அழைத்து சென்று பேராற்றல் என்ற மூலக் கனலை பெற வேண்டிய கட்டாயம் அவசியம் உள்ளதால், தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் பயிற்சியே தலை சிறந்த பயிற்சி என்பது சத்தியமான உண்மை..

தோன்றா நிலையில் இருக்கும் மூலதார மூலக்கனலுக்கு அழைத்து செல்லாமல், தோன்றும் நிலையில் உள்ள பொய்யான மூலாதாரத்தினை காட்டி காட்டி பயிலும் இன்றைய முறையற்ற வாசி பயிற்சி நாசம் மட்டுமே விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

தோன்றா நிலை என்பது எண்ண ஆதிக்கங்கள் இல்லாத கனல் பொருந்திய சுத்த மனம் ஆகும்..

அம்மனம் ஒன்றே தோன்றா நிலையில் அகப்படும் கனலை ஈர்த்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையது..

எண்ண ஆதிக்கங்களால் ஆளப் படும் அசுத்த மனம் இருக்கின்ற ஆற்றலை எண்ணங்களில் விரையம் செய்து கொண்டிருக்கும்....

தோன்றா நிலையில் மட்டுமே இறைவனும், இறை ஆற்றலும், இருப்பதால் தோன்றா நிலையில் இருக்கும் அந்த தருணம் மட்டுமே இறைவன் வழிபாடு பயன் உள்ளதாக இருக்கும்..

மற்றபடி எண்ண ஆதிக்கங்களான வேண்டுதல்களை முன் வைத்து சிலைகளுக்கு முன் செய்யும் எந்த பிரார்தனையும் தகுந்த பலனை தராது..

எண்ணியவாறு எண்ணிய வண்ணம் எதுவும் உடனே நடைபெற தோன்றா நிலையில் நின்றால் மட்டுமே சாத்தியமாகும்...

தோன்றா நிலையில் முன் வைக்கப் படும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படும்.. காரணம் அங்கே மட்டுமே பேரண்ட பேராற்றலின் கனல் என்ற கடவுளின் கருணை சுலபமாக அகப்படும்...

ஆகவே முக்தியின் முன் நின்ற நிலையான பேரருளின் ஆசியை பெற வாசியோகத்தில் தோன்றா நிலை அனுபவப் பட வேண்டும் என வற்புறுத்தப் படுகிறது..

தோன்றா நிலையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அந்த தருணம் முதல் மனிதனுக்கு வாழ்வு உயர நல்ல தருணம் தொடங்கி விட்டது என்பது சத்தியமான உண்மை...

ஆகவே தான் பேரருள் பொருந்திய தோன்றாநிலையை முன்வைத்து விளக்கத் தவறிய எந்த ஒரு மதமும் யோகமும் மன்னிக்க முடியாத ஒழுங்கின்மையை செய்கிறது என சொல்லப் படுகிறது..

எல்லாமே ஒழுங்கின்மையாக உள்ள நிலையில் சுவாச ஒழுங்கு என்ற மிக அற்புத மிக மிக சாதாரணமான பயிற்சியை, செய்ய மனித குலத்திற்கு மிக மிக கடினமாக உள்ளது...

திருட்டு திராவிடம்...


முகமதியரின் காட்டுத்தனத்திற்கு அஞ்சி பெண் பிள்ளைகளோடு ஓடிவந்த கும்பல் யார் என்று கொஞ்சம் கைத்தூக்குங்கள் ஒறவுகளே?

ஜக்கமா என்ற பெண்ணின் தலைமையில் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக தென் திசை வழியாக தமிழகத்தில் உள்நுழைந்த கூட்டம் யாரென்று கொஞ்சம் கையத்தூக்குங்க ஒறவுகளே?

பாதுகாப்புகாக அஞ்சி வந்தோருக்கு அடைக்கலம் கொடுத்த அறம் சார்ந்த தமிழினத்தை வஞ்சித்தது யாரென்று கையத்தூக்குங்க ஒறவுகளே?

தில்லுமுல்லு தகிடுதத்தம் பண்ணி தமிழரின் பட்டங்களை தன்வயப்படுத்தி அடைக்கலம் கொடுத்த தமிழ் மண்ணை அபகரித்தும்,

வாழ்வளித்த வள்ளலான தமிழினத்தை துரோகித்து ஒற்றுமையுடன் இருந்தவர்களை சிதறடித்து உண்டுக்கொழுக்கும் கூட்டமே கொஞ்சம் கையத்தூக்கி அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் ஒறவுகளே?

வரலாறு உம்மை மன்னிக்காது...

தமிழ் மெய்யியலும் பிராமணத் திணிப்பும்..


இந்த ஒரே படத்தில் உள்ளன..

அதாவது நம் முன்னோர்கள் செய்த வழிபாட்டு முறை இன்று புறக்கணிக்கப்பட்டு வேற்று இனத்தார் அவர்களுக்காகக் கட்டிக் கொண்ட உயந்த கோபுரங்களையும் உயிரில்லா கற்சிலைகளையும் நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம்..

காலக் கொடுமை..

இந்த லட்சணத்தில் கோவிலுக்குள் நாங்களும் நுழைவோம் என்று தேவையில்லா அலப்பறை வேற..

போங்கடா நீங்களும் உங்க கோவிலும்.. எனக்கு கோவிலும் வேண்டாம் சிலையும் வேண்டாம்...

அரியானாவில் மீண்டும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்...


மாட்டிறைச்சி கடத்தியதாக ஊனமுற்ற இஸ்லாமிய இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உயிருடன் கொலுத்த முயன்ற ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள்..

வயிற்றுப் பிழைப்புக்காக ஒருவரிடம் ஆட்டோ ரிக்ஷா வாடகைக்கு எடுத்து ஓட்டி குடும்பத்தின் பசியை போக்குவதற்காக ஊனமுற்ற நிலையில்  அரியானாவின் ஃபரீதாபாத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார் ஆசாத் என்ற இளைஞன்.

மாட்டிறைச்சி கடத்துகிறாயா ? என்று ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி ஒருவன் அவரிடம் கேட்க அதற்கு அவர் மறுக்க, இதற்கிடையில் போன் மூலம் அவன் ஐந்து ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளை அழைத்து அந்த ஊனமுற்ற இளைஞனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அதில் நிலைகுலைந்து அவர் மயக்கமுற்று கீழே சரிந்ததும் ஈவிறக்கமற்ற பாவிகள் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குச்சியை பற்ற வைக்கும்போது ஒரு போலீஸ்காரர் தடுத்து அவரைக் காப்பாற்றி உள்ளார்.

அந்த இடத்தில் ஒரு போலீஸ் காரர் வந்து தடுக்கவில்லை என்றால் உயிருடன் எரிக்கப்பட்டிருப்பார்.

மனித உயிருக்கு மோடியின் ஆட்சியில் பாதுகாப்பின்மை தொடருகிறது. நேற்று பஞ்சாபில் நடந்த இடைதேர்தலில் மோடியின் பாஜக மண்ணை கவ்வியது போல் இனி வரக் கூடிய அனைத்து தேர்தலிலும் வரலாறு காணாத அளவுக்கு மண்ணை கவ்வினால் தான் காவி பயங்கரவாதிகளின் கொட்டம் அடங்கும்...

கரீபியன் தமிழர்...


கிறித்தவத் தேவாலயம் போன்ற கட்டிடத்தில் ஏசு சிலை இல்லை..

ஆனால், வேறு ஏதோ தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன..

அவை மாரியம்மனையும் அய்யனாரையும் ஒத்திருக்கிறது..

அங்கே பூசாரி தன்னை ஒரு இசுலாமியர் என்கிறார் நோய்வாய்ப்பட்டு வந்த மக்களுக்கு வேப்பிலை அடித்து, சாமியாடி, மருந்து தருகிறார்..

யார் இவர்கள்?

பார்ப்பதற்கு தமிழர்கள் போலவே இவர்கள் முகம் இருக்கிறது..

ஆனால் உடையோ வேறுமாதிரி இருக்கிறது.

இவர்கள் பெயர்களோ தமிழோடு ஒத்துப் போகிறது..

ஆனால் பேசும் மொழி வேறு எதுவோ..

இவர்கள் சமைக்கும் உணவு வகைகளின் பெயரும் சுவையும் தமிழ் மண்ணோடு ஒத்துப்போகிறது..

இவர்களின் இருப்பிடமோ தமிழ் மண்ணிலிருந்து பாதி உலகம் கடந்து இருக்கிறது..

கிறித்தவப் பெயர்களோ இசுலாமியப் பெயர்களோ வைத்துள்ளனர்..

ஆனால் திருமணமுறை தமிழ்முறைப்படி உள்ளது.

நீங்கள் யார் என்று கேட்டால் 'தமிழர்' என்கின்றனர்..

வாழ்வதோ வேற்றின மக்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு பட்டியூரில் (குக்கிராமம்)..

மிகவும் பின்தங்கிய மக்கள், தங்கள் வாழ்க்கையை அடையாளத்தைத் தொலைத்துவிட்ட மக்கள்.

நீங்கள் இந்தியர்கள் என்று அங்கே இயங்கும் இந்திய அரசு அமைப்புகள் இந்தியைக் கற்றுக் கொடுத்து இந்து சமயத்தை அந்த மக்களிடம் பரப்புகின்றன..

விடுமுறை நாட்களில் ஆடு, கோழி பலியிட்டு, கும்மிப்பாட்டு பாடி, விருந்துண்ணும் போது அவர்கள் தாங்கள் தமிழகத்தில் வாழ்ந்த கண்ட அனுபவித்த விடயங்களை பகிர்ந்து கொள்கின்றனர்..

எந்த திசையில் இருக்கிறதென்றே தெரியாது ஆனாலும் அவர்கள் தமிழகத்தின் நினைவாகவே இருக்கின்றனர்...

சக்கரை நோய்க்கு வெண்டைக்காய் உபயோகபடுத்தலாம்...


காணாமல் போனவைகள் - தானிய குதிர்...


பண்டைய பழந்தமிழர் நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு.

குதிரிடல் (ஆங்கிலம்-granary, bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும்  முக்கியமான நடைமுறையாகும்.

நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத் தேவைக்காக, விளைந்த தானியங்களைச் சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.

சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.

தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன...

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பற்றி ஒரு விவாதம் தேவை...


தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு உள்ளது.

அதில் அதிகம் பலன் அடைந்து வருபவர்கள் யார்?

தமிழர்களுக்கு இடஒதுகீட்டால் கிடைத்த பலன் என்ன?

அரசு ஊழியர்களாகப் பெரும்பாலும் பிற (தெலுங்கு, கன்னட, மலையாள) மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களே? அது எப்படி சாத்தியம் ஆனது.

தமிழ்நாட்டில் மட்டும் இடஒதுக்கீட்டில் 373சாதிகள் இருக்கின்றனவே அது எப்படி சாத்தியம் ஆனது.

கேரளாவில்169சாதிகளும் ஆந்திராவில் 223 சாதிகளும் மட்டுமே இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும்373 சாதிகள் இடம் பெற்றிருப்பதின் ரகசியம் என்ன.

நாம் இவைபற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும் தமிழர்களே..

அச்சி அசலாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைப் போன்று கலர் ஜெராக்ஸில் அடித்து ஆடு வாங்கி ஏமாற்றி சென்ற இருவருக்கு போலீஸ் வலை வீச்சு...


அதுவும் ஆயிரம் ஐநூறு இல்லிங்க ₹32500 ரூபாய் எப்புடியெல்லாம் கிளம்பிட்டானுங்க…

ஆனால் ஒன்னுங்க மோடி அறிமுகப்படுத்திய புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் எதற்க்கு பயன்படுகிறதோ இல்லையோ ஈஸியா கலர் ஜெராக்ஸ் அடிச்சி மக்களை ஏமாற்ற பயன்படுகிறது...

தீபாவளி யும் உண்மைகளும்...


உலகநாடுகளில் பல இடங்களில் Halloween Day = Oct 31 (ஆவிகளின் திருவிழா) என்றும்...

கல்லறைத் திருவிழா = Nov 2 என்றும் கொண்டாடப்படும் திருவிழா..

இந்தியாவில் மட்டும் இறந்த முன்னோர்களை  விரட்ட கூடிய நாளாக மாறியது எப்படி?

தீபாவளி = அக்டோபரின் இறுதி நாட்கள் (அ) நவம்பரின் ஆரம்ப நாட்கள் (ஐப்பசி அமாவாசை).

மற்ற இரு பண்டிகைகளிலும் (இருளை) முன்னோரின் நினைவலைகளை கொண்டாடும் போது தீபாவளி மட்டும் இருளை விலக்கச் சொல்வதில் முரண் தெரிகிறது.

ஐப்பசி - ஐ -கருப்பு  பசி.

கருப்பு பசியாக இருக்கும் மாதம் அம்மாவாசை நாள்.

'ஐ' எனப்படும் இருள்சக்தி உச்சத்தில் இருக்கும் நள்ளிரவு 12.00 to 2.00 மணிக்கு கிடாய் வெட்டினால் தான் அதிகாலை 4.00 to 6.00 கறி சமைக்க முடியும்.

தீபாவளி அன்று மட்டும் அதி காலையிலேயே எழுந்து கறி சமைக்கும் வழக்கம் தமிழர்களிடையே இன்று வரை தொடர்வது முன்னோர்களுக்கு படையல் போட்டதின் நீட்சியாக இருக்கலாம்.

ஆண்டுக்கு 12 அமாவாசை இருந்தும் குறிப்பாக ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அசைவம் சமைக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு விதித்து கடுமையான கேதார கௌரி விரதம் இருக்கச் சொல்வதின் நோக்கம் என்ன? இது எவன் செய்த வேலை ?

வீதியெங்கும் விளக்கேற்றுவது
தீயசக்தியை விரட்ட.

வீதியெங்கும் பட்டாசுகள் வெடிப்பது
தீயசக்தியை விரட்ட.

அசைவம் சமைக்காமல் விரதம் இருப்பது
தீய சக்தியை விரட்ட.

வருடத்தில் எவ்வளவோ அமாவாசை இருக்கும் போது ஏன் அன்னைக்கு மட்டும் இதையெல்லாம் செய்யச் சொல்கிறார்கள்.?

தீய சக்தி உச்சத்துல இருக்குற அன்னைக்கு தானே அதை விரட்ட வேண்டிய தேவை வருதுன்னு சொல்லாம சொல்லுறாங்க.

அந்த தீய சக்தி வேறு யாரும் இல்லைங்க. நம்மோட முன்னோர்களின் நினைவலைகள் தான். அந்தப் பண்டிகை தீபாவளி.

தீர்வு :  ஐப்பசி அமாவாசை தான் தீபாவளி. இது உறுதி. தீபாவளி எப்ப வருதுன்றது முக்கியம் இல்ல. நமக்கு ஐப்பசி அமாவாசை தான் உண்மையான தீபாவளி. முன்னோர்களின் நினைவலைகளுக்கு படையல் போட வேண்டும். இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கௌரி கேதார நோன்பு என ஒன்றை உருவாக்கி தீபாவளியன்று வைத்தான்.

அந்த விரதம் கடை பிடிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாளிலும். பிந்தைய நாளிலும் கட்டாயம் சைவ விரதம் இருந்தே ஆக வேண்டும். எதிரி நம் முட்டாள் மக்களுக்கு சொருகிய பெரிய ஆப்பு. புரியுதா?

எங்கே சென்றார் கோவை மாவட்ட வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமார்?


கோவை மாவட்ட வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமார், கோவை கொடிசியாவை அடுத்து உள்ள ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி வீட்டுக்கு வந்த சிவக்குமார் விடியற்காலையில் வீட்டில் இல்லாதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் சிவக்குமாரைக் காணவில்லையென அவரது சகோதரர் ராம்குமார் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாகவும், குடும்ப பிரச்சனை காரணமாக சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவில் நள்ளிரவில் சிவக்குமார் சிறிய பெட்டியோடு வீட்டைவிட்டு வெளியேறும் காட்சி பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

மசூர் துவரம் பருப்பை தவிர்க்கவும்...


மசூர் துவரம் பருப்பில் பயன்படுத்தப்படும் ஆசிட்டால், மூட்டுவலி, முடக்குவாதம் உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும், மசூர் துவரம் பருப்புக்குத் தடை விதிக்க வேண்டும்- ஜெகன்நாதன் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு...

700 கோடி (1988)... இந்திய - ஈழப்போர் உச்சநிலையை அடைந்திருந்த காலகட்டம்..


தலைவர் சொற்ப போராளிகளுடன் மணலாறுப் பகுதியில் இருந்தபடி இந்தியப்படைக்கு எதிரான கரந்தடி (கொரில்லா)ப் போரை தொடர்ந்து நடத்திவந்தார்..

கர்னல்.வர்மா என்ற ஒரு 'ரா' உளவுத்துறை அதிகாரி புலிகளின் மூத்த உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு பேசினார்..

பல கோடி ரூபாய் பணமும் படையும் செலவளித்து நாங்கள் இந்தப் போரை நடத்திவருகிறோம். இத்தனை அழிவும் உயிர்ச்சேதமும் தேவையில்லாதது..

அந்த பணத்தை ஏன் நீங்களே பெற்றுக் கொள்ளக் கூடாது? என்று நேரடியாக பேரத்திற்கு அழைத்தார்.

மக்கள் புணர்வாழ்வுக்கு 500கோடி தருவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு 200 கோடி தருவதாகவும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பணத்தைப் பெற்று கொள்ளுமாறும், புலிகளுக்கு பதவிகளும் பாதுகாப்புக்கென்று தனிப்படை வைத்துக் கொள்ள இசைவும் தருவதாகவும் மேலும் பல சலுகைகளையும் தருவதாகவும் கூறினார்..

ஒத்துவர மறுத்தால் முற்றாக அழிய நேரிடும் என்று மிரட்டினார்..

அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆன்டன் பாலசிங்கத்தை பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்கு வரவழைத்து போரைக் கைவிடுமாறும், தங்கள் கட்சி தடை செய்யப்பட்ட போது 'திராவிட நாடு' கொள்கையை தாங்கள் கைவிட்டதையும் கூறி பேசிப்பார்த்தார்..

அதனால்தான் இன்று, 25வருட பதவி கிடைத்து, அலைக்கற்றை ஊழல் உட்பட பல்வேறு வழிகளில் கொள்ளையடித்து, 200 தலைமுறைக்கு தேவையான சொத்து சேர்த்துவைத்துள்ளார்..

தமிழகத் தமிழர் எத்தனை கொடுப்பினையற்றவர்கள்?

பிறந்ததோ ஒரு பிரபாகரன் அவரும் ஈழமே போதும் என்று நின்றுவிட்டார்..

தமிழக மக்கள் இந்திய நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி கருணாநிதி அரசுக்கு நெருக்கடி முற்றிக் கொண்டு வந்தபோதும் அவர் தமிழகத்திலிருந்து புலிகளுக்கு செல்லவிருந்த சிறுசிறு உதவிகளையும் தடுத்தார்.

அந்தக் காலம் நூறாயிரம் (ஒரு லட்சம்) இந்தியப் படையினர் தாங்கிகளுடனும் (tank) வானவூர்திகளுடனும், போர்க் கப்பல்களுடனும் புலிகளைச் சுற்றி வளைத்திருந்த காலம்..

அப்போது புலிகள் வெறும் 2000பேர், தலைவர் ஆயுதங்களை வேறு ஒப்படைத்து விட்டார். பாதுகாப்பிற்கென கமுக்கமாக கொஞ்சம் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்..

திலீபன் உண்ணாநோன்பிருக்கும் முன் மக்களிடம் சென்று பரப்புரை செய்தபோது அவசியம் ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்றே பரப்புரை செய்தார்..

தலைவரின் முன்னெச்சரிக்கை தான் புலிகள் மீண்டும் ஆயுதம் தூக்க நேரிட்டபோது அவர்களுக்கு வலுசேர்த்தது..

இந்தியம் கொண்டு வந்த ஆயுத தளவாடங்களானது, கொரியப் போருக்கு பிறகு அததனை அதிகமான ஆயுதத் தளவாடங்கள் கடல்வழி கொண்டு வரப்பட்ட ஒன்றாக வரலாற்றில் பதிவாகியுள்ளது..

கப்பற்படையிடம் அப்போது 17 'அலைஜ்' வானூர்திகள் இருந்தன..

அத்தனையும் புலிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன, புலிகளுக்கு ஆயுதம் கொண்டுவந்த படகுகளை அவைகள் மூழ்கடித்துவிட்டன..

மணலாற்றி களமாடும் புலிகளுக்கு உணவும் தண்ணீரும்கூட தட்டுப்பாடாக இருந்தகாலம்..

ஒருநாளைக்கு ஒரு குவளை (டம்ளர்)க் கஞ்சிதான் தலைவர் உட்பட அந்தக்காட்டில் இருந்த 27பேருக்கும் கிடைத்தது..

ஈழத்தின் மூத்த அரசியல்வாதிகளும் தமிழக மூத்த அரசியல்வாதிகளும்கூட போரைக் கைவிடுமாறு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தனர்..

காட்டுக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்த 'குமரன் பத்மநாபன் (கே.பி)' சென்றது..

புலிகளின் மூத்த உறுப்பினர் பலரும் கூட தற்போதைக்கு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் இந்தியப்படை வெளியேறியபின் அப்பணத்தின் மூலம் பெருமளவு ஆயுதம் வாங்கி மிகப்பெரிய அளவில் போராட்டத்தைத் தொடங்கலாம் என்றும் கூறினர்..

ஆனால் தலைவர் அதை ஏற்கவில்லை..

தலைவர் பண்பை நன்கறிந்திருந்த இந்தியப்படையினர் கணக்கில்லாமல் பொதுமக்களைக் கொன்று குவித்தனர்..

ஈழத் தலைவர் பலரும் கூட பொதுமக்கள் இழப்பைச் சுட்டிக்காட்டி புலிகளைச் சரணடையுமாறு கூறினர்..

தமிழகத்தில் ம.பொ.சி கூட வானொலியில் புலிகளை சரணடைய வலியுறுத்தினார்..

அதுவரை 5000 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்..

200 புலிகளும் 500 இந்தியப் படையினரும் பலியாகியிருந்தனர்..

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியோர் நூறாயிரம் (லட்சம்) பேர்..

சிறையிலடைக்கப்பட்டோர், காணாமல் போனோர் கணக்கேயில்லை..

400 தமிழ்ப் பெண்கள் இந்திய படையால் வல்லுறவுக்கு ஆளாகிய செய்திகள் வந்திருந்தன, ஊரடங்கு உத்தரவால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தலைவர் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார்..

குழுவினர் கடைசியாக அந்த மணலாற்றுப் பகுதியை விடுத்து வேறு பாதுகாப்பான பகுதிக்கு தலைவர் மாறவேண்டும் என்று கூறினர்..

இது பண்டார வன்னியன் களமாடிய மண், இங்கேயே நான் தொடர்ந்து போராடுவேன், அல்லது வீரமரணம் அடைவேன்..

நான் இறந்த பிறகு இயக்கத்தையும் இலக்கையும் மொத்தமாகவோ சில்லரையாகவோ எவருக்கும் நீங்கள் விற்கலாம் என்று நெத்தியடியாகக் கூறி கேபி குழுவை அனுப்பி வைத்தார்..

பணத்தை வாங்காத தலைவர் பிரேமதாச என்ற சிங்களர் ஆயுதம் தந்தபோது மறுக்காமல் வாங்கிக் கொண்டார்..

அவர் விலைபோகவும் இல்லை, விமர்சனத்தைத் தூண்டும் வாய்ப்புகளை நழுவவிட்டதும் இல்லை..

எனக்கு ஒரு கேள்வி?

அப்போது புலிகள் வெறும் 2000பேர், அவர்கள் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் மட்டும் இருந்தது. அதற்கே அத்தனை பெரிய விலை கிடைத்த போது..

2009 ல் புலிகள் 30,000பேர், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது..

அப்போது எத்தனை பெரிய விலை கிடைத்திருக்கும்?

ஆனால் இறுதிவரை யாருக்கும் எதற்கும் விலை போகாமல் தன் இனத்தின் நலனுக்காக மட்டுமே போராடியவர் தான் நம் தலைவர் பிரபாகரன்...

பண்டைத் தமிழகத்தில் தீபாவளி...



பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை..

ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு கூறும்.

இக்காலத்தில், மலை உச்சியில் கூட விளக்கேற்றி வைத்தனர். இந்த நிகழ்வு பிற்காலத்தில் தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.

விஜயநகர, நாயக்க பேரரசு காலத்தில் தமிழகத்தில் தீபாவளி விழா பெரிய அளவில் அறிமுகமானது என்ற கருத்து உண்டு. செஞ்சி நாயக்கர், தஞ்சை நாயக்கர் செல்வாக்காலும் மராட்டிய வணிகர்கள், போர் வீரர்கள் ஆகியோரின் செல்வாக்காலும் தஞ்சை, மதுரை பகுதிகளில் தீபாவளி பரவலாகியிருக்கிறது.

இது குறித்த ஆவணங்களை புலவர் ராசு பதிப்பித்திருக்கிறார்...

தஞ்சை அரண்மனை தேவதாசியான சுந்தரி என்பவள் தீபாவளி சமயம் அரண்மனையில் நடனமாட கொடுக்கப்பட்ட பரிசுகளை ஒரு மோடி ஆவணம் கூறும் ( கி.பி. 18 ஆம் நூற்.) 1821-ம் ஆண்டு ஆவணம் தஞ்சை கோட்டைக்குள் நகர்வீதியில் செல்லும் மக்களுக்கு இனிப்பு பண்டங்களைத் தானமாக வழங்கியதை குறிப்பிடுகிறது.

இன்னொரு ஆவணம், தீபாவளி முந்திய நாளில் எண்ணெய் குளியல் செய்யப்பட்டதையும் கூறும்.

1827- ம் ஆண்டு ஆவணம் தஞ்சை அரண்மனைகளில் 100 பட்டாசு கட்டுகள் வாங்கப்பட்டதற்கு முக்கால் பணம் கொடுக்கப்பட்டதையும் 1839- ம் ஆண்டு ஆவணம் 300 கட்டு பட்டாசு வாங்கியதையும் கூறும்.

இந்தப் பட்டாசுகள் பொது மக்களுக்கும் இலவசமாய்க் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் 19- ம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே தீபாவளி விழாவில் பட்டாசு கொளுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது...

தமிழின போராளி வீரபனார்...


தமிழ் நாட்டுக் கொடியானது முதன் முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி (தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது..

வீரப்பனார் தமிழர் விடுதலைக் குழுக்களான..

தமிழர் நாடு விடுதலைப் படை (TNLA).
தமிழர் நாடு மீட்புத் துருப்புகள் (TNRT).

ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கிய போது, காட்டில் தமிழர் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது...

தமிழ் மெய்யியல்...


நாள் கணக்கைத் தீர்மானிப்பவன் கிழக்கில் உதிக்கும் ஆதவன் (ஞாயிறு/சூரியன் )..

மாதக் கணக்கைத் தீர்மானிப்பவன் மேற்கில் பிறக்கும் யாதவன் (திங்கள்/சந்திரன் )..

இலுமினாட்டி இரகசியம்...


தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?


அசுரர் என்பது காரணப் பெயரே...

சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.

இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர்.

அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது.

அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.

இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன்...

நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள்.

இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது போல் அன்று ஆரியர்கள்  தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள்.

முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமானபற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்...

சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா?

நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால்.

அப்பொழுது நம் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.

நமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலை வீரனின் நினைவு நாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.

ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையே கொண்டாட வைத்து விட்டார்கள்...

இதை உணர்ந்து தமிழினம் தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்...

வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...


சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால்..

நீ ஏம்மா இங்க எல்லாம் வர? பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற...

ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ என்று கையில் இருக்கும் காசை கொடுத்து காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு போவாராம் வீரப்பன்..

வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...

1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவு கூற வேண்டும்.

2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்டஈடு தரவேண்டும்.

3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..

4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.

5.தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.

6.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் மட்டுமே தமிழர்களை வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது திராவிடர்களே...

நெடுஞ்சாலை வழியாக பதிக்க மாட்டோம் கிராமங்கள் வழியாக சென்று விவசாய நிலங்களை அழித்து கார்பரேட் பொருளை விற்க மறைமுக வழிசெய்வோம் கெயில் மாஸ்டர் பிளாண்...


தீபாவளி என்றால் என்ன?


புராணம் கூறுவது...

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்..

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை தமிழ் அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பிராமணன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பிராமணர்கள் வந்து பார்த்து, “கங்காசு நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்.. சிந்தியுங்கள்..

மாணவர்களே. உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள்.

எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பிராமணர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன்.

தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும்.

அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே.. இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு?

எதையுமே நம்பாத சில பகுதறிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்..

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...

தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது.

அசுரர்கள், அரக்கர்கள், தஸ்யுக்கள், ராட்சதர்கள், குரங்குகள், கரடிகள், என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ?வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம்.

'தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் , தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் ''
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24].

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ].

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் , தஸ்யுக்கள் , அசுரர்கள் , என்றும் கூறபட்டிருக்கின்றது.. ஆரியருக்கும் , ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் . இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் , மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் , உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77].

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82].

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் தமிழர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி..

இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே 18 யைக் கூட விழாவாக  கொண்டாடுவர்...

வீரப்பனார் 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - 18.10.2017...


தமிழர்கள், தனக்கேயான மெத்தனத்தால் தவறவிட்ட மாவீரன் வீரப்பன்...

மலையாளியும் , கன்னட பிராமனதியும் இனைந்து, ஒரு வீரதமிழனை நரித்தனம் செய்து கொன்ற நாள் அக்டோபர் 18....

எல்லை காத்த மாவீரனை சூழ்ச்சி செய்து கொன்று விட்டு, தமிழகத்தின் சாலைகளில், மலையாளி தலைமையில் வெற்றி உலா வந்தார்கள்......

மண்டையை சொறிந்து கொண்டு, அதையும் வேடிக்கை பார்த்தான் மானமிகு தமிழன்....

கன்னட பாசத்தில்.... வீரப்பன் அரக்கன் என்றான் ரஜினி....

அவனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தான் பன்னாடை தமிழன்...

நமது கேள்விகள்...

வீரப்பன் சந்தன மரங்களை கடத்தினார்.... சரி அப்போ வாங்கியவர்கள் யார் ? அவர்களை ஏன் கைது செய்யவில்லை ?

2G அலைகற்றயில் அடித்த கொள்ளையை விடவா,  அல்லது கோடாநாடு சிறுதாவூர் என்று ஏக்கர் கணக்கில் வளைத்து போட்ட கொள்ளையை விடவா  வீரப்பன் கொள்ளை அடித்தார் ?

இந்த கேள்விகளோடு, நமது இனத்தின் வீரமிகு நாயகனை நினைவு கூர்வோம...