04/07/2017

மறைக்கப்படும் தமிழர் வரலாறு...


தமிழ் வரலாற்றின் உச்சம் தெரியாததன் விளைவு..... இன்று ஜெய் ஹிந்த்..க்கு சோடை போகின்றனர் தமிழரில் சிலர்.

உலகிற்கே முன்னோடியான ஒரு அறிவார்ந்த சமூகத்தை.... குமரிக்கண்டத்தைப் பற்றிய ஆய்வில்கூட அயலாரின் பெரும்பங்கு நமக்கு தேவைப்படுகிறது.

இத்தகைய ஆய்வுகளை இந்திய அரசு மறைமுகமாக தடுத்துவருவது இன்னொரு வரலாறு.....

தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.. தளராது இனமான விடுதலைக்கு தோள்கொடுப்போம்..

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தலைவர்களாய் பரிணமித்தவர்கள் சமூக - அரசியல் தளத்தில் தங்களை (பெரும்பாலும் மரபுவழி வேற்று மொழிக்காரர்களாக இருந்தமையாலா.) நிலைநிறுத்திக் கொள்ள வேண்டி, தமிழ், தமிழின வளர்ச்சியை அடகுவைத்தும், அலட்சியப்படுத்தியும், தாழ்த்தியும் திசைதிருப்பியும் வந்ததே இன்றைய தமிழின் – தமிழனின் நிலைக்கு காரணம்...

இஸ்ரேல் பிரதமர் யார்?


Link - http://www.bollyn.com/the-ties-between-netanyahu-and-silverstein

கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கதிராமங்கலத்திற்க்கு ஆதரவாக போராட்டம்...


ஐந்தாம் நாளாக தொடர்ந்து கதிராமங்கலத்தினில் கடையடைப்பு கருப்புக்கொடி மற்றும் உள்ளூர் வாகனங்களின் வேலை நிருத்தம் தொடர்கின்றது...


மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தை புறக்கணிப்பு கைது செய்யப்பட்ட போராளிகளை எந்த வழக்குமின்றி விடுதலை செய்த பிறகு தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும்...

தமிழா விழித்தெழு...


தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்...


தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள்.

தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள்.

எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும்.

ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள்.

'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம்.

பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது.

சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான்.

ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள்.

அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை.

தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார்.

யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்...

திமுக, அதிமுக இடையே என்ன வேறுபாடு..?


கீழே உள்ள படம் தான் இதற்கு பதில்...

தமிழர்களுள் எந்த சாதியும் உயர்ந்ததும் அல்ல, எந்த சாதியும் தாழ்ந்ததும் அல்ல...


தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சமமே என்றே கருத்தை ஆதி காலம் தொட்டே நம் முன்னோர்கள் முன்மொழிந்து வந்துள்ளனர்.

சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஒளவையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம் வள்ளுவனும் மனிதர்களுள் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்று தெளிவுபட உரைத்துள்ளனர்.

எனினும் ஆரியம் தமிழ்ச் சாதிகளிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்க, அதை திராவிடம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாதி இறுக்கத்தை உருவாக்கி தமிழர்கள் ஒன்றிணைய விடாமல் பார்த்துக் கொண்டது.

இதன் விளைவாகத் தான் தமிழ் சாதிகள் ஒன்றோடு ஒன்று மோதி தங்களுக்குள் அடித்து சாகிறது...

திமுக ஸ்டாலின் கலாட்டா...


தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப் கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்...


சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்;வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ் (திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள். (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556).

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள், கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (தெலுங்கர்)  இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்.

(பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550).

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ, தெலுங்கர்களோ, மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு!

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை 'நமது மொழி தமிழ் என்றார்;
எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்...

யார் தீவிரவாதி..?


தீவிரவாதி என்பதற்கு இந்தியாவின் வரையறை என்னவென்றால்.....

ஆதிக்க / ஆளும் சக்திகளின் வாதங்களை விவாதிக்காமல் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்....

குறிப்பாக பார்ப்பனிய - பனியா கும்பலின் கருத்தியலுக்கு எதிராக..

இல்லாத இந்திய தேசியத்திற்கு - இந்தி(ய) இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்...

தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்படுவார்.

இதில் வேடிக்கை - உண்மை என்னவென்றால்....

மக்களுக்கு எதிராக தீமை செய்பவர்கள் எல்லாம் 'போராளிகள்' என்றும்....

தம்மின மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் 'தீவிரவாதிகள்' என்றும் வகைப்படுத்தப்படுவது தான்..

சரி.... நம்மின மக்களுக்கு நல்லது செய்வது என்பது, இந்திய அரசின் 'தீவிரவாதி' பட்டத்தை சுமந்தால் தான் முடியும் என்றால்....

இது நல்ல பேரும் பெருமையும் மிக்கது தானே...

ஆதித் தமிழன்....


ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும்  எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.

ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் கடவுள்  பெயரை சொல்லிவிட்டு சென்றது தான், ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது,

வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி, தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று.

இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண்டுபிடுப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும், கோவிலுக்கு செல்ல கூடாது, சாமியும் இல்லை, பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.

அது உண்மையா, பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது. ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால், பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை.

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித "நேர்மறை ஆற்றல்" (Positive Energy) நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு, நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஞானம் கூறுகின்றது.

இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது.

அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாடசாலைகள் அமைக்கப்பட்டது.

சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து "அறுவை சிகிச்சை......." (Surgery) வரை நடைபெற்றுள்ளது.

இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும், கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடம் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரணமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது. அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது, கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது, அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராச ராசன் " என்று நிலைவட்டு (hard disk), பென்ட்ரைவிலோ (Pen Drive) பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்?

என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம், மொழி மட்டும் போதும் என்பவர்கள், மரங்கள் வேண்டாம் பிராணவாயு மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.

ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ?

மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும், இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்ல இருக்கிறோம்?

தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம்.

வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம். அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம்! தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்...

கன்னட ஈ வெ ராமசாமி நாயக்கரின் கொள்கைகளும் திருகுதாளங்களும்...


ஈ வெ ராமசாமி (பெரியார் எனப்படுபவர்) வட இந்திய ஆரியரை எதிர்க்க திராவிடம் பேசினார் எங்கிறீர்கள்..

இன்று தமிழக திராவிட கழகங்கள் வட இந்திய ஆரியக் கட்சிகளுடன் ஒத்துழைத்து தமிழருக்கு எதிராகச் செயற்படவில்லையா..?

அதை போன்றே ராமசாமி காந்திஜியிடம் அரசியல் நடத்த பேரமும் பேசியவர். இதுதான் திராவிட வாதத்தின் ஆரிய எதிர்ப்பின் தார்ப்பரியமா..?

இப்படி சொந்த மக்களையே ஏமாற்றி அடுத்தவருக்கு அடிபணிந்து பிழைப்பு நடத்த ஏன் ஒரு திராவிடக் கொள்கை.?

அது இனியும் நமக்கு அவசியம் தானா..?

தமிழன் என்ற இன உணர்வை ஊட்டவல்ல தமிழ் தேசிய எழுச்சி தான் இன்றைய உலகில் தமிழரின் இருப்புக்கு அவசியாமனது...

GST பற்றி எரிவதால்... அது தொடர்பான ஒரு பதிவு...


மறைந்த முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் கலந்துக்கொண்ட திட்டக்குழு கூட்டம்...

ஜெ. சென்று தமிழக தேவைகளை எடுத்துக்கூறி.. நாற்பத்து ஐந்து ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டார்.. அப்போது திட்டக்குழு கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா மறுத்துவிட்டு 22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாக கூறினார்..

கடுப்பாகிபோன ஜெ.. கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார்.

அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் விபரம் கேட்க விட்டு விளாசி விட்டார் ஜெ..

தமிழகத்தில் இருந்து வருடந்தோறும் 78400 கோடி பலவகைகளில் மத்திய அரசுக்கு தருகிறோம்..

ஆனால் எங்கள் தேவைக்கு நாங்கள் இங்கே வந்து காத்திருக்கும் நிலை உள்ளது.

அப்படியும் நாங்கள் கேட்கும் தொகையை தர மறுக்கிறார்கள்...

இது மிக முக்கிய உற்பத்தி மாநிலமான தமிழகத்தை உதாசீனப் படுத்தும் செயல்.. எனக்கூறி.. தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றுவிட்டார்.. ஆடிப்போனது மத்திய அரசு..

உடனடியாக உயர் அதிகாரிகளை அனுப்பி 36000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் இது திட்டமிட்ட செலவினங்களுக்கு மட்டுமே.
திட்டமிடா உபரி / திடீர் செலவுகளுக்கு மேலும் நிதி ஒதுக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருப்பதாக சொல்லி மேடத்தை சமாதானம் செய்தார்கள்..

இப்படி ஆளுமை உள்ள தலைவர் வழிநடத்திய இந்த மாபெரும் இயக்கம் இன்று.....

தமிழர்களை அழிக்கும் தமிழக ஊழல் டெட்பாடி அரசு...


இந்தியாவின் எதிர்காலம் கார்ப்பரேட் கையிலா?


அதோடு தமிழக சுயதொழில் முனைவோர்கள் கார்ப்பரேட்டுகளுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது கண்கூடு...


மேலும் தமிழக சினிமா 80% Independant தயாரிப்பாளர்களை கொண்டது. அதுவும் கார்ப்பரேட் மயமாகும் சூழ்நிலை தெரிகிறது...

பொருளாதார அறிஞர் Venktesh Athreya GST பற்றி விவரிக்கிறார்....


இப்பொழுது அமலுக்கு வந்துள்ள ஜி‌எஸ்‌டி. யில் ஒரு வரிவிகிதம் என்பது கிடையாது பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன (0%, 5% 12% 18% 28%). இதில் மிக முக்கிய அம்சம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இன்றய சூழலில் சில வரிவிகிதங்களை ஜி‌எஸ்‌டி கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

மாநிலங்கள் ஒரு வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜி‌எஸ்‌டி கவுன்சில் ஒப்புதலை பெற வேண்டும். மத்திய அரசின் கையே கவுன்சிலில் ஓங்கி இருக்கிறது அதனால் அது மிக கடினமான காரியமாகும்.

இதில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா முன்னணி முதலாளித்துவ நாடு. ஆனால் அங்கு வரிவிதிப்பு உரிமைகள் பலவும் மாநிலங்களிடம் உள்ளன. மாநிலத்திற்கு மாநிலம் வரிவிகிதங்கள் வேறுபடுகின்றன.

ஏன் இங்கு இப்படி மாநிலங்களின் உரிமைகளை பறித்து ஒற்றை வரி விதிப்பு முறை திணிக்கப்படுகிறது?

இரண்டாம் அம்சம் என்னவெனில், வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்தின், சட்டமன்றங்களின் கையில் இருந்தது. இப்பொழுது ஜீ எஸ் டி கவுன்சில் கைக்கு போய்விட்டது. அதிலும் மத்திய அரசின் கை ஓங்கிவிட்டது. இது ஜனநாயகத்திற்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும்.

ஜி‌எஸ்‌டி அமல்படுத்திய பின்னர் வரி குறையும் என்கிறார்கள் ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது.

ஜி‌எஸ்‌டி சட்டம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், மது போன்ற பொருட்களை வெளியில் வைத்திருக்கிறது. இவற்றின் விற்பனை மூலம் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கும் வாட் மூலம் மாநில அரசுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. (மதுவை ஜி‌எஸ்‌டி கீழ் கொண்ட வர தனி சட்ட திருத்தம் தேவை.).

ஜிஎஸ்டி வரி சுமையை குறைக்கும் என்பதில் உண்மை இல்லை. இந்த வரி விதிப்பானது நுகர்வோர்களை பாதிக்கப்பட கூடியதாக அமையும். பணக்காரர்களிடம் இருந்து முறையாக நேர்முக வரிகளை வசூலிப்பதற்க்கு பதிலாக சாதாரண மக்களின் சுமைகளை கூட்டியிருக்கிறது.

இது மட்டுமின்றி, சிறு குறு தொழில்முனைவோர், வணிகர்கள் அரசு நிர்வாக அமைப்பின் கடுமையான தொந்தரவுக்கும் ஊழல்சார் நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாக்கப்படுவார்கள்.

மத்திய அரசு ஒற்றை மொழி, ஒற்றை மதம் கலாச்சாரத்தை திணிக்க முயல்வதைப் போன்றே ஒற்றை வரி என்று கொண்டு வந்திருக்கிறார்கள். 8 கோடி, 20 கோடி மக்கள் கொண்ட மாநிலங்களின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நகராட்சி போல் நடத்துவது தவறு.

மத்திய அரசின் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும் முறைசாரா தொழில்கள், சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிராகவும் உள்ளன. உழைப்பாளர்கள் பணி நிலமைகளை முறைப்படுத்தி பயன்களை தொழிலாளிகளுக்கு தர அரசு தயாராக இல்லை.பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் உழைப்பாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

இதேபோல், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தோல்வி கண்ட பிறகு, மாநில சட்டங்கள் மூலம் பாஜக மாநிலங்களில் அதேகாரியத்தை செய்து வருகின்றனர்.

செல்லாக்காசு நடவடிக்கையும், விலங்கு சந்தைகள் தொடர்பான விதிமுறைகள் அறிவிக்கையும் இதே வகையில் தான் அமைந்துள்ளன.

கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கான நடவடிக்கையாகத் தான் ஜிஸ்டியையும் பார்க்க முடிகிறது...

பாஜக செலவழித்த தேர்தல் நிதி எங்கிருது வந்தது என்பதற்கு ஒரு நல்ல சாட்சியம் இதுவே, உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய மாட்டார் எங்க மோடி...


நடவடிக்கை எடுக்கப்படுமா? அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது அம்பலம்...


அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்தார் ஓபிஎஸ்.

அப்போது சசிகலா முதல்வராக பதவியேற்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சகல வசதிகளுடன் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது கூவத்தூர் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சென்னை ராயபுரம் மீனவர்கள் நலசங்கத்தினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு பதிலளித்த நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் சட்டவிரோதமாக கட்டியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் கடலோர ஒழுங்குமுறை விதியில் இருந்து கூவத்தூர் விடுதிக்கு விலக்கு ஏதும் தரவில்லை என அவர் கூறினார்.

கூவத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் நல சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மீனவர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் விடுதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்...

இந்தியா ஜனநாயக நாடு.. சட்டம் அனைவருக்கும் சமம்.. சொன்னால் நம்புங்கள்...


கடலைமிட்டாய் நிறுவனம் 20 லட்சம் ரூ.க்கு கீழ் வணிகம் இருந்தால் வரி கிடையாது - நிர்மலா சீதாராமன்...


20 லட்சம் என பார்த்தால் பெரிதாகத்தான் தெரியும்..  ஆனால் இருபது லட்சம் 12 மாதங்களுக்கு எனில் மாதம் சராசரியாக 1.70 லட்சம்..

அதை 30 நாட்களுக்கு என பாருங்க.. சராசரியாக 5600 ரூ. வரும்..

ஒரு நிறுவனம் நடத்த ஒரு முதலாளி.. மற்றும் இரு தொழிலாளர்கள் தேவை.. தொழிலாளர் சம்பளம் தலா 600 என வைத்தால் 1200.00, முதலாளி சம்பளம் 800.00 ஆக மொத்தத்தில் தினக்கூலி மட்டுமே 2000 தேவை....

இதில்லாமல் பிளாஸ்டிக் கவர்.. கரண்ட் பில்.. டெலிவரி கொடுக்க வாகணம்.. தொலைபேசி கட்டணம் .. என எல்லாம் சேர்த்து 1000.00..

ஆக எவ்வளவு குறைவாக பார்த்தாலும் தினசரி அவர்களுக்கு 3000.00 தேவை..

இந்த மூவாயிரம் ரூபாயை சம்பாரிக்க அவர்கள் குறைந்தது 8000.00 முதல் 10000.00 வரை தினசரி வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது....

அப்படி 8000.00 முதல் 10000 .00 வரை வியாபாரம் செய்வதானால் சராசரியாக வருடம் 28,50,000 முதல் 35,00,000 வரை வியாபாரம் செய்ய வேண்டும்....

அதாவது அடிப்படையாக அவங்க ஜீவிக்கவே இருபத்துஎட்டு லட்சம் முதல் முப்பது லட்சம் வியாபாரம் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளவர்களிடம்..

இருபது லட்சத்திற்கே வரி என்றால்.. அவங்க எப்படி தொழில் நடத்த முடியும்..?

இதில் வருடத்திற்கு நாற்பது ஆயிரம் யார் கட்ட இயலும்...? இழுத்து மூட வேண்டியது தான்..

யாரை ஏமாற்ற இந்த பித்தலாட்டம்..

ஜி எஸ் டி க்கு ஆதரவாக கம்பு சுத்தறவங்க இந்த பதிவிற்கு பதில் அளிப்பார்களா...

கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி கதிராமங்கலத்தில் பள்ளி மாணவ மாணவியர்கள் போராட்டம்...


GST யால் ? புதுவை குடிமகன்கள் கொண்டாட்டம்...


9 ஆம் தேதிக்குள் கதிராமங்கலத்தில் இருந்து போலிசார் வெளியேற வேண்டும், கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும், இல்லை எனில் என் தலைமையில் அங்கு போராட்டம் - வைகோ நாயூடு அறிவிப்பு...


பர்மாவில் ஐராவதி நதிக்கரையில் இங்கிருந்து கொண்டு சென்ற பணியாட்களைக் கொண்டு அங்கே நெல் பயிரிடுதலில் ஈடுப்பட்டனர் ஒரு வணிகக்கூட்டம் - உறுதிசெய்யப்பட்ட தகவல்...


அந்த பணியாட்கள் யார்?
அந்த வணிகக்கூட்டம் யார்?
அந்த வணிகக்கூட்டத்தை இயக்கிய அரசகுடும்பம் யார் என்பதை மறைக்கதானே இங்கே மள்ளரியலே பேசப்படுகிறது...

ஒஎன்ஜிசி க்கு எதிராக 3 வது நாளாக கடையடைப்பு போராட்டம் . மயான அமைதியில் கதிராமங்கலம்...


நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கும் மூன்று நாள் கெடு...


தமிழர்களுக்காக போராட எவனும் வரமாட்டான்..

தமிழ்நாட்டை ஆள மட்டும் வருவார்களா நடிகர்களும் திராவிடர்களும்..

மண்ணை மீட்கும் போராட்டத்தை மண்ணின் மைந்தர்கள் முன்னெடுக்கிறோம் இதையும் இனவாதம் என்று சொல்லிக்கொங்கள்..

இது  தான்  உண்மையான போர்.....

போருக்கு  தயாராகுங்கள்  தமிழ் சொந்தங்களே...

மலேசியாவில் திராவிடத்தையும் திராவிடர்களை அடித்து விரட்டிய மானத் தமிழர்கள்...


2050 ல் நம் சந்ததி புகைப்படத்தில் மட்டும் பார்க்கும் அபூர்வ காட்சி...


அம்மா என்ன இது அழகா இருக்கு...?

இது தான்டா கண்ணா நெல்மணி. இதுல தான் அரிசி வரும் அத சோறு சொல்லுவோம் நான் சின்ன வயசில சாப்டேன் அமிர்தமா இருக்கும்..

இது தான் நடக்க போகிறது..

வருத்ததுடன்...

உலகமே மரங்கள் நடுங்கள் வளருங்கள் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் போது மருத்துவக் குணங்கள் நிறைந்த அத்தி மரங்களை அபசகுனம் என்று வெட்டிச்சாய்க்கச் சொல்லும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?


அத்தி மரத்தின் பலன்கள் :

அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

மூலிகையின் பெயர்- அத்தி
தாவரப்பெயர் – FICUS GLOMERATA, FICUS  AURICULATE
தாவரக்குடும்பம் – MORACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.

மிக அரிதாகிக்கொண்டிருக்கும் இந்த மரங்களை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.

பதிவு - விஷ்வா விஸ்வநாத்

அவசரம் அவசரமாக வானதியை பொதுச் செயலாளராக பதவி ஏற்க வைத்தார் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்...


ஆனால் அவசரம் அவசரமாக அதே பொதுச் செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு நடவடிக்கை இன்றி ஆறப் போட்டீர்கள்.

கட்சி சார்பாக அவரது நினைவை கூட மறந்தே போய் விட்டீர்களே பங்காளிகளா..

இரண்டாம் ஆண்டு முதல் நினைவு நாள் படம் வைத்த தொண்டர்கள் தங்கத் தலைவர் திருவாயால் மாவட்ட தலைவர்களால் மிரட்டப்பட்டனர்.

அதோடு போயே போச்சு.

காற்றோடு போன ரத்தச் சரித்திர உணர்வுகள் தமிழக பாஜகவுக்கு மீண்டும் மீட்கப் படுமா?.

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்...


மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்...

அரசு சாரா நிறுவனங்களில், ஆர்எஸ்எஸ் தான், வெளிநாட்டு நிதியைப் பெறுகிறது...


வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ஆர்எஸ்எஸ் தான்! மதவாதத்தையும், வெறுப்பையும் பரப்புவதன் பின்னணி விசாரிக்கப்பட வேண்டும்.

 இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்ற தகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக் கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்எஸ்எஸ் செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுவதாக உளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்எஸ்எஸ் தான் என்ற உண்மையை, “அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள்” என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மேலும்இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப்பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச்சூழல், கட்டுமானத் தொழிலாளர் கள்துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.

உளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன.

ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்எஸ்எஸ் தான் என்பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக்கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே “வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி” என்ற தலைப்பில், ஆர்எஸ்எஸ் தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை,

“வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து” என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்காவின் நிதி, எப்படி ஆர்எஸ்எஸ்ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசியலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வ மாக அந்த அறிக்கை முன்வைத்தது.

பலலட்சம் கோடி டாலர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு சென்றுள்ளதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,

என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.நாட்டில் அரசு சாரா அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்எஸ்எஸ்-ஸின் அந்நிய நிதி பின்னணிகுறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சிபிஐ-யின் உயர்மட்ட உளவுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திரமோடி அரசு விசாரிக்குமா?

அந்த விசாரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியிலிருந்து தான், இவ்வளவு காலமாக வும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. அதன்மூலம் அரசியலில் வளர்ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக் கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்எஸ்எஸ் மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?