தமிழ் மண்ணில் தலைசிறந்த சித்தர்கள் வந்து போனார்கள் என்பதற்கு அவர்கள் விட்டு சென்ற பாதசுவடுகளாகிய ஒலைச்சுவடிகள் அடையாளமாய் இருக்கின்றன..
இப்படி எத்தனையோ சித்தர்கள் இங்கே வந்து போனாலும் வந்து போனவர்களில் ஒரு வித்தியாசத்தை தந்து போனவர் போகர் முனிவர்..
போகர் என்றாலே பாஷாண நினைவு பலருக்கு வரும்..
போகரையும் பாஷாணத்தையும் பற்றி அறிய பலர் முயற்சி செய்து பல நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளிலும் வலைதளத்திலும் போடுவதை பார்க்கிறோம்..
கிராமங்களில் பொதுவான சில கதைகள் தன் முன்னோர் காலத்தில் நடந்ததாய் சொல்வார்கள்..
தன் வீட்டில் உள்ள முன்னோர்கள் நாகரத்தினத்தை வைத்திருந்தார்கள் என்ற கதையை சொல்வது போல் போகருடைய விசயத்திலும் ஒரு கதை உருவாகிவிட்டது..
அதாவது போகர் இரு பாஷாணங்களை செய்தார் என்றும் அதில் ஒன்று தற்போது பழனியிலே சீல் வைக்கப்பட்ட செல்லா சிலையா இருக்கும் முருகர் சிலை.. மருத்துவ குணம் கொண்ட மகத்தான இந்த சிலை..
சித்தவைத்தியத்தில் சிறப்பாய் பேசப்படும் மருந்துகள், மூலிகைகள், கசாயங்கள் (ஆயுர்வேதம்), யுனானி, என பலதரப்பு மருந்துகள் இருந்தாலும் ரசவாதிகள் என சொல்லப்படும் உயர்தர சித்தர்களால் செய்யப்படும் பாஷாணம் எல்லாவற்றையும் விட உயர்வானதாய் வீரியமிக்கதாய் பேசப்படும்..
இப்படி வீரியமிக்க விஷேசமான பாஷாணத்தை கட்டி போகர் பழனி மலையிலே சிலையாய் வைத்து முப்பூ என்ற தன்மையில் ஒப்பு உயர்வு அற்றதாய் மருத்துவத் தன்மையோடு மகத்தான தன்மைபெற நன்மைபெற வைத்தார் போகர்..
எனவே முதல் சிலையைப் பற்றி எந்த பூடகமும் இல்லை..
சொல்லும் ஊடங்களில், பிரச்சனையே அவரால் எழுப்பபடும் இரண்டாம் பாஷாணம் தான்.
முன்னதை விட மிக மிக சிறப்புப் பொருந்தியதாக தீர்க்க தரிசனங்களில் திவ்யமாய் உரைக்கப்பட்டு நிற்கிறது..
இறுதிகால இறையரசு எனும் சித்தராட்சி இந்த பூமியிலே வர போகரின் தலைமைக் கொண்டு சித்தர்கள் ஒன்று கூடி சித்தர் ஆட்சியை அதாவது இறையரசை இங்கே (தமிழ்நாட்டில்) நிறுவுவார்கள், போகர், கோரக்கர், அகத்தியர்,போன்ற தீர்க்க தரசிகளெல்லாம் நிறையவே சொல்லி நிற்கிறார்கள்...
உலக அரசு உன்னதமாய் ஒரு குடைக்குள் அமையும்..
இறையரசு எனும் சித்தராட்சி சிறப்பாய் தமிழ் மண்ணில் மலரும் என்று சொல்வதில் முதன்மை பெற்று நிற்கிறார் போகர்..
போகரின் சீடர் கோரக்கர் வளமையாய் இக்கருத்தை ஆமோதித்து இறுதி நாள் இறைவனின் நியாய தீர்ப்பு நாளில் என் குருநாதர் போகர் தலைமையில் சித்தர் ஆட்சி மலரும் என தமிழராட்சி தவழும் என சொல்லி நிற்கிறார்..
உலகத்திலே எழுந்து வந்த மார்க்கங்கள் எல்லாம் இதே இறையரசை எடுத்து சொல்லி நிற்கின்றன..
ஒரு மார்கத்தில் இறுதி நாளில் மோஸஸ் தன் தலைமையில் இறையரசு வருவதாயும் ஒருவர் யகோவா தலைமையில் ஏற்படும் என்றும், இயேசு தலைமையில் ஏற்படும் என்றும், போகர் தலைமையில் ஏற்படும் என்றும் சொல்லி இறையரசை வர்ணிக்கும் காட்சிகள் எல்லாம் ஒரே காட்சிகளாய் இருப்பதைப் பார்த்து வியப்பாய் இருக்கிறது..
ஆம் மோசேவாகட்டும், எசாயாவாகட்டும், எரேமியாவாகட்டும், எசேக்கியேலாகட்டும், தானியேலாகட்டும், யோவேலாகட்டும், ஆமோஸ், மீக்கா, ஆகாய், மலாக்கி, செக்கரியா, இயேசு, திருவெளிப்பாடு யோவான், பவுல் முகமதுநபி மற்றும் தமிழ் சித்தர்களாகட்டும் அத்தனை பேரும் ஒரே கருத்தை ஒரே விதமான காட்சிகளை விவரித்து நிற்கின்ற பொழுது, தலைமை தாங்குபவர் மட்டும் பெயர்மாறி நிற்பதை இங்கு காண முடிகிறது..
இதில் எவர் சொல்வதும் பொய்யில்லை என்றால் அனைவரும் குறிப்பிடும் நபரும் ஒரே ஒரு ஆன்மாவாகத் தானே இருக்க முடியும்..
எனவே இறுதியில் வரும் அந்த ஒப்பற்ற ஆன்மா கலாச்சார ஓட்டத்தில் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறுதியில் முக்கிய ஆளுமையில் வந்து நிற்கிறது..
இப்படி இறுதியில் வரும் ஆன்மா அவரவர் கருத்துபடி, மார்க்கப்படி யாரை வைத்து அடையாளம் காட்டி நின்றாலும், அனைவரும் இறுதியில் வரும் ஒருவரையே அடையாளம் காட்டி நிற்கிறார்கள்..
இப்படி இறுதியில் வருபவர் தான் மண்ணின் வாசனைப்படி மணக்கும் போகர் எடுக்கும் இறுதி பிறப்பு பாஷாணத்தோடு சம்பந்தபட்டது அல்லவா.. இது ஒருபுறம் இருக்கட்டும்..
இதுகாறும் போகரைப் பற்றி கதையாய் கதைத்து நின்றவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்..
வைத்திய மார்க்கங்களில் மருந்துகளுக்கு மருந்தின் வீரியம் மடியும் நாள் (expiry date) என்று ஒன்று உண்டு.
அவை "பஸ்பத்திற்கு" ஒரு விதமாய், " கசாயத்திற்கு "ஒருவிதமாய்" இலேகியத்திற்க்கு" ஒருவிதமாய் இருப்பது போல் "பாஷாணத்திற்க்கும் " மருந்தின் வீரியம் மடியும் நாள் உண்டு.
ஒரு பாஷாணம் கட்டி செய்து விட்டால் அதன் வீரியம் ஒரு கல்பம் பூராவும் நிற்கும் என்ற கதையைக் கட்டி விடுவதில் கெட்டிகாரரர்களாக இருக்கிறார்கள் அநேகர்.
எப்படிபட்ட நிலையில் செய்த பாஷாணமானாலும் மிக அதிகபட்சமாக 700வருடங்களுக்கு மேல் இருக்காது.
அதற்கு பிறகு அதன் வீரியம் மடிவதோடு அதுவும் வீணாகி போகும்.
ஏன் புழு பூச்சிகள் கூட வைத்து விடும்.
அப்படியிருக்க போகரின் இரண்டாம் பாஷாணம் இந்த பூமியில் எழுந்து வந்து உலகாளும் என்று சொல்லி திரிபவர்களை பற்றி என்ன சொல்வது, போகர் செய்த" முதல் பாஷாணசிலை வீரியமிழந்து சிதலமடைந்து சீல்வைக்கப்பட்டு "அந்த இடத்தை விட்டு அப்புறபடுத்தி நகர்த்தி வைத்ததை உலகம் அறியுமல்லவா..
அப்படியிருக்க அதே காலத்தில் செய்யபட்ட இன்னொரு பாஷாண சிலை இப்போது இருந்தால் அதன் வீரியம் மட்டும் எப்படி காலத்தில் ஜீவிக்க முடியும். கொஞ்சமாவது சிந்தித்தார்களா இந்த அப்பாவிகள்.. தேடி நிற்கிறார்கள் இரண்டாம் பாஷாணத்தை..
வீரியமற்ற அந்த இரண்டாம் பாஷாணம் என்ன விடியலை தரபோகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்..
எனவே இந்த ரகசிய முடிச்சை " போகர் ஒருவரே அவிழ்க்க கூடியவர்..
அப்படியென்றால் போகரின் இறுதி பிறப்பு நிச்சயமாய் இதற்கு விடைச் சொல்லி நிற்கும்.
அப்படியென்றால் மறுபிறப்பெடுக்கும் இரண்டாம் வருகை போகர் தான் எழுப்பி தரமுடியும் இன்னொரு பாஷாணத்தை புதிதாக தன் காலத்தில் இப்போது...