1989.. தி.மு.க சட்டசபையில் மானபங்கம்… ஐயோ.. அதைச் சாகும் வரை மறக்காத முதல்வர் ஜெ..
பூ போல பிறந்து.. பூவாய் வளர்ந்து… பூ முகத்தை திரையில் காட்டி.. பூ போல சிரித்து மகிழ்ந்த ஒரு பெண்ணை.. செல்வச் சீமாட்டியை… உலுக்கி எடுத்த ஒரு அதிர்ச்சி சம்பவம் அன்று அரங்கேறியது..
ஆம்.. தமிழக சட்ட மன்றம் அதுவரை கண்டிராத அவலம்.. ஒட்டு மொத்த தமிழகமும்.. ஏன்.. உலகமே ச்சீ.. என்று இகழ்ந்த காரி துப்பியச் சம்பவம் அன்று நடந்தது..
அத்தனை பேர் கூடி இருந்த சபையில் திமுகவின் ரவுடி எம்.எல் .ஏ கள் பாய்ந்து சென்று முதல்வரின் சேலையைப் பிடித்து இழுத்து மரணத் தாக்குதல் நடத்தினர்..
கதறினார் ஜெ.ஜெயலலிதா...
கூக்குரலிட்டு அபயக் குரல் எழுப்பினார்… ஆனாலும் விடாமல் சேலையைப் பிடித்து இழுத்து கடுமையாகத் தாக்கினர் திமுக ரவடிகள்..
திடுக்கிட்டு ஓடிவந்த ஜெ.விசுவாச படை சூழ்ந்து நின்று தங்கள் மேல் அடியை தாங்கிக் கொண்டு ஜெயலலிதா வை கைப்பற்றினர்..
அன்று தான் பூ ஒன்று புயலானது..
அன்று அவர் போட்ட சபதம்.. இனி நான் சட்டமன்றத்தில் நுழைந்தால் முதல்வராக மட்டுமே நுழைவேன் என்று...
பிறகு முதல்வர் ஆகி ஜெ. சாகும் வரை தி.மு.க விற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்…
இவை அனைத்தும் சட்டமன்ற குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டவையே.. தேவை படுவோர்.. உண்மையா என்று ஆராய்ந்துக் கொள்ளலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.