24/07/2018

தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் மீது திமுக தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்...


நாளை அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கோடு சேர்த்து இதுவும் விசாரிக்கப்படும்.

அரசு தலைமை வழக்கறிஞர், விஜய நாராயணன், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜராவார்.

கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்திய கொடுமையான சம்பவம்...


கன்னியாகுமரி அருகே ஆலங்கோடு என்ற இடத்தில் செயல்பட்டு வரும் CSI மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் சிறுமிக்கு உடல் முழுவதும் தீ வைத்து சூடு வைத்துள்ளனர். மற்றும் பிரம்பால் அடித்தும் சித்தரவதை செய்து வருகின்றனர் என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது...

26 குழந்தைகள் உள்ளதாக கூறிய நிலையில் அங்கு 12 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள
14 குழந்தைகள் கதி என்னவென்று தெரியவில்லை...

காவலர் வருவதைப் பார்த்து குழந்தைகளை அறையில் வைத்து பூட்டி விட்டு யாரும் இல்லை என்று கூறியுள்ளார்கள்... ஆனால் ஒரு அறையில் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு பூட்டை திறந்து பார்த்த போது உள்ளே 12 மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை அழுது கொண்டு இருந்துள்ளனர்...

புலன் விசாரணையில் சமையல் செய்து வரும் சரோஜா குழந்தைகளை அடித்து சூடு வைத்ததாக ஒப்புக் கொண்டார். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார் ஆனால் காப்பகத்தின் நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர்....

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் மோசடிகள் வெளியே வந்து கொண்டு இருக்கிறது... அரசு உதவிப் பெற்று மிகப்பெரிய மோசடியில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிகிறது....

உலகில் உள்ள அனைத்து எழுத்து வடிவங்களையும் உள்ளடக்கிய முதல் எழுத்தைக் கொண்ட ஒரே மொழி நம் தமிழ் மொழி...


உலகில் உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன் கட்டமைப்பு என்பது படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு, வளைவு, வட்டம், அறை வட்டம் என்று இவற்றில் ஏதோ ஒன்றோ அல்ல இவற்றுள் ஒன்று, இரண்டோ அடங்கிவிடும்.

ஆனால் நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" இவற்றில் எல்லா வடிவங்களையும் ( படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு, வளைவு, வட்டம், அறை வட்டம்) உள்ளடக்கியது என்பது ஆச்சர்யத்தை தருதிறது.

நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" என்பதில் உலகில் உள்ள எல்லா எழுத்து வடிவங்களும் இதனுள் அடக்கம் என்பதே குறிப்பதாகும்.

தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது...

அட்டாங்க யோகப் பயிற்சிகள்...


அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.

இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன.

இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர்.

அத்தகைய சித்திக ளை த் திருமந்திரம் விளக்குகிறது.

அட்டாங்க யோகப் பயிற்சிகள்...

1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

“அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி,ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே!”

1. அணிமா: பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

2. மஹிமா: சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருட்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

3. லஹிமா: கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

4. கரிமா: இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடை சியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.

5. பிராத்தி: எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் “எல்லாம்வல்ல சித்தரான படலம்” என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

6. பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல். அவ்வையார் இளவயதி லேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக் கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

7. ஈசத்துவம்: ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

8. வசித்துவம் : ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலிசெய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்...

4-வது நாளாக நீடிக்கும் லாரி ஸ்டிரைக், காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு...


பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்

பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

தற்சார்பை நோக்கி செல்வோம், ஆதிமனிதனாக.. ஆதித்தமிழனாக...


தமிழர்கள் புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?


நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன.

நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே, வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்...

இதய அடைப்புக்கு உடனடி தீர்வு...


தமிழர்களின் அறிவை என்வென்று சொல்வது? பிறக்க போகும் குழந்தையை ஆணா, பெண்ணா என கண்டறிந்து சொன்னவர்கள் நம் தமிழர்கள்...


பிறக்கப்போவது ஆணா பெண்ணா?

ஸ்கேனிங் மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் பிறக்கபோவது ஆனா? பெண்ணா? என்று சொல்லி இருக்கிறார்கள்...

எப்படி? நீங்களும் சோதித்துப் பாருங்கள்..

குறுக்கு வட்ட கட்டங்களில் தாயின் வயது கொடுக்கப்பட்டுள்ளது. நெடுக்குள்ள கட்டங்களில் குழந்தை உண்டான (கருத்தரித்த) மாதங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, "X" என்பது ஆண் குழந்தையையும், "O" என்பது பெண் குழந்தையையும் குறிப்பிடுகிறது.

உதாரணமாக 27 வயது தாய் ஜனவரி மாதம் கருத்தரிக்கிறாள் என்றால் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்.

இந்த அட்டவணையின் பலனுக்கு 99% உத்தரவாதம் என்கிறார்கள்.

இந்த அட்டவணையின் ஒரிஜினல் சைனாவின் ராஜ குடும்பத்து நினைவு சின்ன ஸ்தூபியின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது பீஜிங்கில் உள்ள விஞ்ஞான கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை  கண்டுப்பிடித்து நம் தமிழன்...

வணிகப் போர்....


வணிகப் போர் உச்சம் அடைந்துள்ள தருணத்தில் சீனா தனது காய்களை நகர்த்தி வருகிறது..

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வேறொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ வாங்கமுடியும் என்பது நாம் முன்னரே அறிந்த செய்திதான். ஆனால் ஒரு நாட்டின் பங்கு சந்தையையே வேறொரு நாட்டின் பங்கு சந்தை வாங்க முடியும் என்றால் நம்பத்தான் வேண்டும். இதனை டீமியூச்சுவலைசேஷன் என அழைக்கிறார்கள். நீண்டகாலமாக நடந்துவரும் இப்படியான வர்த்தகத்தில் தான் தற்போது சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.

டாக்கா பங்கு சந்தையின் 25 சதவீத பங்குகளை 12.5 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது சீனாவின் ஷாங்காய் மற்றும் ஷென்சென் பங்கு சந்தைகள்.

ஷாங்காய் மற்றும் ஷென்சென் பங்கு சந்தைகள் மற்றும் சீனா பைனான்சியல் பியூச்சர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் இணைந்து பிசிஎக்ஸில் 35 சதவீதப் பங்குகளையும், பாக்-சீனா இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி மற்றும் ஹபிப் வங்கி ஆகியவை தலா 5 சதவீதப் பங்குகளையும் கைப்பற்றியுள்ளன.

இஸ்ரேலின் டெல் அவிவ் பங்கு சந்தை (டிஏஎஸ்ஈ) , சவுதியின் தடாவுல் பங்கு சந்தைகளும் டீமியூச்சுவலைசேஷன் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் சீனா இவற்றையும் கைப்பற்ற முயற்சிக்கும்..

கஜகஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது பங்கு சந்தையின் பங்குகளை விரைவில் விற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அவற்றையும் வாங்க முனைப்பு காட்டும்...

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது.

மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது...

பாஜக மோடியும் விவசாயிகள் அழிப்பும்...


உடல் நலத்தைப் பற்றி பேசாதீர்கள்..


நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..

அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....

நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....

உங்களால் ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காதவரை.

அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றிற்கு வரவேற்பு விழா நடத்துகிறேர்கள்...

அப்படி ஏற்பட்டு இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..

நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..

எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன... அதுதான் மன இறுக்கம்..

முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்.. பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...

உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று....

வாழ்க நலமுடன்...

பாஜக பொ.ராதா கலாட்டா...


ஜிஎஸ்டி: மேலும் வரிச் சலுகைகள்: ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு வரி குறைப்பு; சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு...


மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி விகிதம் (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பொருள்களின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.

சானிடரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சானிடரி நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு சமூக நல அமைப்பினர் கடந்த ஓராண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமைச்சர் பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் விவரித்தார். அவர் கூறியதாவது...

சானிடரி நாப்கின், ராக்கி கயிறுகள், சிறு கைவினைப் பொருள்கள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, சானிடரி நாப்கினுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது.

ரூ.1000 வரையிலான மதிப்புள்ள காலணிகளின் மீதான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வர்க்க மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பல்வேறு பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, 68 செ.மீ. அளவு வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், விடியோ கேம்கள், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏ.சி. இயந்திரங்கள், வாட்டர் ஹீட்டர், வேக்குவம் கிளீனர்கள், கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள், முகச்சவர சாதனங்கள் ஆகிய பொருள்களின் மீதான வரியும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மின்சார இஸ்திரி பெட்டிகள், லித்தியம் அயன் பேட்டரிகள், முடி உலர்த்தும் சாதனம் (ஹேர் டிரையர்) ஆகியவற்றின் மீதான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன. எத்தனால் மீதான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தரைகளில் பதிக்கப்படும் கோட்டா கற்கள் மற்றும் அதே தரம் கொண்ட உள்ளூர் கற்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விரி விகிதங்கள், வரும் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை விற்றுமுதல் ஈட்டும் தொழில், வர்த்தக நிறுவனங்கள், காலாண்டு அடிப்படையில் வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். இதனால், 93 சதவீத வரி செலுத்துவோர் பயனடைவார்கள். மேலும் வரி கணக்கு தாக்கல் செய்யும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் பதிவுபெறாத நிறுவனங்களிடம் இருந்து பொருள்கள் அல்லது சேவையைப் பெறும் வர்த்தகர்கள், அந்த நிறுவனங்களுக்குப் பதிலாக ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும். இதற்கு பதிலி வரி செலுத்தும் நடைமுறை (ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்) என்று பெயர். இந்த நடைமுறையை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அமல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது என்றார் பியூஷ் கோயல்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம், வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது...

அதிகார போதை என்ன வேண்டுமானாலும் பேசும்... காசுக்கு ஓட்டை விற்ற அடிமைகள் அதை கேட்டே ஆகவேண்டும்...


அண்ட, பிண்ட இரகசியம்...


அண்ட, பிண்ட விசாரம்....

பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது. அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் உஷ்ணதினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை. அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தை தாங்கக் கூடிய சக்தி உள்ளது.மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது. அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்கள்.

சிதம்பர இரகசியம்...

பலரும் சிதம்பர இரகசியம் என்பதை செவிவழியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலரே அதன் உண்மையை அறிந்திருப்பர். சிதம்பரங்கோவில் அர்ச்சகர்க்களுக்கே இதன் தார்ப்பரியம் புரிந்ததில்லை. தாமும் குழம்பி மற்றவரையும் குழப்புவர். இவர்களைச் சித்தர்கள் “முத்திநெறி அறியாத மூர்க்கர்” என்பர். சிதம்பர இரகசியம் என்பது ஆத்மாக்களினதும் அவர்தம் உடலினதும்(பிண்டம்), பிரபஞ்சத்தின் (அண்டம்) இயக்கத்தையும் மறைபொருளாக அங்குள்ள ஆணிமுதல் கட்டடத்தின் ஒவ்வொரு வேலைப் பாடுகளிலும் வெளிப்படுத்தியிருப்பதே இந்த இரகசியமாகும். இவற்றை முற்றுப்பெற்ற ஞானிகளான சித்தர்களும், அவர்தம் நேரடிச் சீடர்களுமே உண்மைப் பொருள் அறிந்திருப்பர். இந்த இயக்கத்தை (இரகசியத்தை) அறிந்தவர்கள் நீண்டநாட்கள் வாழலாம். சாகாக் கல்வியும் கைகூடும்.

“ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே.”

ஓதும் எழுத்தோடு(ஓம்) மூவைந்தும் – ஆக 16 உயிர்ஆதிமெய் – 35. இரண்டும் சேர்த்து 51 அக்கரம் (செந்தமிழ் காலத்திற்கு முந்தி இருந்தவை)பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர். ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் எனுமெழுத்து உருவாக்கப்பட்டது.தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி வழக்கில் உள்ளவை 13 உயிர்(· சேர்த்து)

“வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த
விதழீராறாமங்குலத்தில் திட்டமிட்டவனாகதத்தில்
வீற்றிருந்த சிறந்தருளும் ருத்திரனுத்திரியைப் போற்றி
வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந் திருநீறாயானவாறும்அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்
பாத மைம்பத்தோரட்சரமுங் காப்புத்தானே.”(ஞானம் எட்டி)

“முத்திதரு மூலத்தி லட்சரமே நாலுமுதலானசு
வாதிட்டான மெழுத்தா றாகும்பத்திதரும்
பூரகத்திலெழுத்தோ பத்துபாங்கான அநாகதத்தி
லெழுத்தீ ராறாஞ்சித்திரமாம் விசுத்திதனி
லெழுத்தீ ரெட்டாம்சிறந்தவாக் கினையிலெழுத்
திரண்டு மாகும்சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன்
றாச்சுசார் வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே.”
(ஞானம் எட்டி)

மூலாதாரம் …….. – 4
சுவாதிட்டானம்… – 6
மணிபூரகம் …….. -10
அநாகதம்……….. – 12
விசுத்தி………….. – 16
ஆக்கினை……….. – 2
அம்பரம்………….. – 1

ஆக மொத்தம் ..-51

 இவையே சிதம்பர இரகசியம்.

 ஐம்பத்தியொன்று ஐந்தானது.

‘ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே’

இங்கு மறையை வேதமெனவும், முறையை ஆகமமெனவும் கூறுவர்.மறையும் ஆகமமும் 5 எழுத்தில் அடங்கும். அவை ந, ம, சி, வ, ய.

“அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்” எனத் திருமூலர் கூறுவதிலிருந்து ஐந்தெழுத்தில் ஐம்பூதங்களாலாகிய இவ்வுடல் அடக்கம். திருவைந்தெழுத்து தமிழ் மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தெழுத்தாம். இவைகளைக்கொண்டே சித்தர்கள் பூடகமாகப் மருமங்களைப் பாடிவைத்துள்ளனர்.

கால்கள் – நகரம் – நடப்பு – நிலம் – உ – சிவப்பு -வயிறு – மகரம் – மறைப்பு – நீர் – எ – பச்சை -தோள் – சிகரம் – சிறப்பு – அங்கி – அ – பொன்னிறம் -வாய் – வகரம் – வனப்பு – விண் – ஒ – கறுப்பு -கண்கள் – யகரம் – யாப்பு – வாயு – இ – வெள்ளிநிறம் -

“ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.”இதுவே பிண்ட இரகசியம்.

வழிபாடு:“மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பதுஉந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலார்நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.”(திருமந்திரம்)

“நமசிவய”வே வழிபாட்டு முதன்மை மந்திரம்.
அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் கணிக்க – மலர் வழிபாடு
எனும் அருட்சுனையாம்(அருச்சனை) உந்தியினுள்ளே
உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாம்.

நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல்(சாந்தி), அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுபவன அகர முதலிய எழுத்துக்கள்.இவைகளை ஐந்து கலைகளென்பர்: அவையாவன: நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம்.

நீண்ட நாள் வாழ்வது எப்படி?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்.

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்...

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்..

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை
 (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்.

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) இரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்...

மொஸாத் - இஸ்ரேல் - 2...


மொஸாதின் செயல்பாட்டிற்கும் மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் முக்கிய வேறுபாடு ஒன்று உள்ளது.

மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்கள் உளவறிந்து, உளவுத்தொகுப்பை அரசிடம் ஒப்படைத்து விடும். ஆனால் மொஸாத் அப்படிச் செயல்படாது. அது அரசை எதிர் பார்க்காமல் தன்னிச்சையாக செயல்படும்.

அதுவே உளவு பார்த்து அந்த உளவிற்க்கான எதிர்வேலைகளையும் அதுவே செய்து முடித்துவிடும்.

மொஸாதில் பணியாற்றுபவர்கள் கூலிக்காக வேலை செய்யவில்லை. மொஸாதின் நோக்கமே வேறு. துவக்க நாட்களில் சொற்பாமான உளவாளிகளே பணி புரிந்தார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்‌ ஆனால் இன்றோ உலகம் முழுவதும் விரிந்து இருக்கிறார்கள்.

அதில் இணைவது சாதாரண விஷயமல்ல அதன் சோதனைகள் அபரீதமானவை. அவற்றை சொல்ல நேரம் போதாது என்பதால் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்.

இப்படிப்பட்ட மொஸாத் பல அப்ரேஷன்களை நிகழ்த்தி இருக்கிறது. இன்றளவும் அரங்கேறிக்க கொண்டு இருக்கிறது டிரம்ப் அதிபரானது முதல் இந்தியாவின் அரசியல் நகர்வு தென் இந்திய ஆப்ரேஷன்கள் என நீண்டு கொண்டே போகிறது.

இதில் ரகசியம் என்ன என்றால்..?

எல்லா உளவு நிறுவனங்களையும் இணைத்து ஒரு அமைப்பை கட்டமைத்துள்ளது மொஸாத்..

அதில் அணைத்து நாட்டு உளவு அமைப்பின் தலைமைகளும் அடங்கும்..

மொஸாதின் ஆரம்பகால ஆப்ரேஷன முதல் இன்று நடைமுறையில் இருப்பது வரை ஒவ்வொனறாக தோலுறிப்போம் காத்திருங்கள்...

சித்தர்கள் மீண்டும் வெளியில் வரப் போகிறார்களா? அதன் அறிகுறி என்ன?


சில தினங்களுக்கு முன்பு ( 2017)  திருநெல்வேலியில் உள்ள சித்தர் ஒருவர்  விரைவில் போகர் சித்தர் (பழனி முருகன் சிலையை செய்தவர் இவரே) மீண்டும் வரப்போகிறார் என்று கூறியுள்ளார்.

அவர் எப்போது வருவார்? அவருடன் சேர்ந்து யார் யார் வரப்போகிறார்கள்? அவர்கள் வருவதற்கான அறிகுறிகள் என்ன என்று அந்த சித்தர் கூறியதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

கொடிய விஷமுடைய நவபாஷாணங்களை கட்டி அதில் ஒரு அற்புதமான முருகன் சிலையை உருவாக்கிய போகர் சித்தர் வருகிற 2018 ஆம் ஆண்டு மீண்டும் இந்த பூமியில் வந்து இருக்கப் போகிறார் என்று கூறியுள்ளார் அந்த சித்தர்.

அவர் வரும் வேலையில் சமாதி நிலையில் உள்ள அனைத்து சித்தர்களும் வெளிவருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதோடு பழங்காலத்தில் சித்தர்கள் சமாதி அடைந்ததும் அதற்கு மேல் சிவன் கோவில் அமைக்கும் ஒரு வழக்கம் இருந்தது. அதில் சில கோவில்கள் இப்போது சிதிலமைந்துள்ளது. அந்த கோவில்கள் அனைத்தும் பொலிவு பெரும் என்றும் அந்த சித்தர் கூறியுள்ளார்.

போகர் இந்த பூமியில் வந்து நடமாடுவதற்கு முன்பாகவே சில சித்தர்கள் இங்கு வந்து மக்களோடு மக்களாக கலந்து வாழ்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சித்தர்கள் வர ஆரமித்துவிட்டனர் என்பதற்கு அடையாளமாக கடுமையான மழை பொழுந்து ஒரு சிறிய நாட்டையே உலுக்கிவிடும். ஆனால் அந்நாட்டு மக்கள் அந்த ஆபத்தில் இருந்து தப்பி விடுவார்கள் என்றும், இந்த நிகழ்வு போகர் வருவதற்கு முன்பு, மற்ற சித்த பெருமக்கள் வர தொடங்கிய பின்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி பார்த்தால்  அமெரிக்காவில் அதிபயங்கர புயல் வந்து அந்த நாட்டையே உலுக்கியது. ஆனால் அந்த பேராபத்தில் இருந்து அந்த நாடு தப்பித்தது. இது தான் அவர் கூறிய அறிகுறி என்றால் சித்தர்கள் வர துடங்கிவிட்டனர் என்றே அர்த்தம்.

ஆனால் அந்த திருநெல்வேலி சித்தர் ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி, அதை நாம் தேவை இல்லாமல் அமெரிக்க புயலோடு ஒப்பிடுகிறோமோ என்ற எண்ணமும் நமக்குள்ளே எழ தான் செய்கிறது.

ஒருவேளை அவர் கூறியதை உண்மையாக இருக்குமாயின், சித்தர்கள் வெளிவர ஆரமித்தால் நிச்சயம் தமிழ்நாட்டில் தெய்வீக சக்தி ஓங்க ஆரமிக்கும், அறிவியலில் அளவற்ற புதிய சாதனைகளை தமிழர்கள் படைப்பார்கள். உலகின் தலைசிறந்த ஒரு இடமாக தமிழகம் மாறும்.

இவற்றில் சில 2018 – 2019 ஆண்டுகளில் நடந்தால் திருநெல்வேலி சித்தர் சொன்னதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...

திருமூலர் செய்த பிரபஞ்சப் பயண அனுபவம்...


இந்தியா பி எஸ் எல் வி சி 23 என்ற ராக்கெட்டை ஏவி 5 செயற்கை கோள்களை ஜூன் 30 இல் விண்ணில் வெற்றிகரமாக நிறுவியது . இந்த வெற்றியை பற்றிப் பாரத பிரதமர் “பாஸ்காரரும் ஆரிய பட்டரும் செய்த விண்வெளி ஆராய்ச்சியின் தொடர்ச்சி” என்று புகழ்ந்துகூறினார் . நமக்கு மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய சாதனை.

இன்றைய விண் வெளிப் பயணத்தில் முக்கியமானது பயண சாதனம் வேகமும், காலமும். மற்ற ஒன்று திரும்பிவருவது ..

ஆனால் 4000 ஆண்டுக்கு முன் தமிழ் சித்தர் திருமூலர் இந்த பிரபஞ்சத்தை சுற்றிவந்தார் . இப்பிரபஞ்சம் 1008 அண்டம் கொண்டது என்று சொல்லியதுடன், அவரின் பிரபஞ்சப் பயணத்தை பதிவு செய்துள்ளார். உலகில் பிரபஞ்சப் பயணத்தை பதிவு செய்த முதல் விண்வெளிப் பயணி திருமூலர் . அவரின் அனுபவம் இன்றைய விண்வெளிப் பயணத்திற்கு உதவலாம் . பல சித்தர்கள் விண் வெளிப்பயணம் செய்துள்ளார்கள். ஆனால் அவர்களின் பயணப்பதிவுகள் நமக்கு கிடைக்கவில்லை.

இன்று விண் உலக மனிதர்கள் உள்ளார்களா அல்லது இல்லையா என்று விவாதிக்கிறோம் . திருமூலரின் விண் வெளிப் பயணத்தில் அவர் சந்தித்த விண் உலக மனிதர்களையும் பார்ப்போம்.

பிரபஞ்ச பயணத்  தயாரிப்பு:

சித்தர்களின் உச்ச பட்ச சித்தி கெவுணம் பாய்தல் என்ற பிரபஞ்சபயணம். அதற்குத் தயாரிப்பாக சிவயோகம் செய்து, காய சித்தி செய்து, உடலை ஒளி உடலாக மாற்றவேண்டும். இதனால் காலத்தை வெல்லலாம் மற்றும் கணக்கில்லா வேகத்தில் பயணிக்க முடியும். விண்வெளிப் பயணம் செய்ய சித்தர்கள் குளிகை என்ற சாதனம் செய்தனர்.

குளிகை என்பது பாதரசத்தை மூலப்பொருளாகக் கொண்டது. திரவ பாதரசத்தை அணுமாற்றம் செய்து, திடப்பொருளாக மாற்ற வேண்டும். அதன் பின் உலோகங்கள் ரத்தினங்கள்(உபரசங்கள் 120) பாசானங்கள் ஆகியவற்றின்  அணுக்களை (சத்து)  திடரூப பாதரசத்துக்குக் கொடுத்து (சாரணை) பாதரசத்தின் நிறையை தங்கத்தின் நிறைக்குச்  சமமாக கொண்டு வரவேண்டும்.

இவ்விதம் ஒருமுறை சாரணை செய்தால் அந்தக் குளிகைக்குச் சகம் என்று பெயர். பதினான்குமுறை சாரணை செய்தால் “கமலினி “என்ற குளிகை ஆகும்.17 முறை சாரணை செய்தால் “சொரூபம்” என்ற குளிகை. கமலினியும், சொருபமும் விண்வெளிப் பயணத்திற்கு பயன்படுத்தினார்கள்.

அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி
தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .
ஒண்டிஇருந்தது  ஓடி நுழை என்றார்
கண்டி கமலினி காணீர் சொரூபமே

சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
அரூபத்தை ஜோதிபோல் அண்டம் நுழைந்திட்டேன்
நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
தரு வோத்த ஞான சதகோடி சித்தரே

சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே------ 

திருமூலர் கருக்கிடை வைத்தியம்  பாடல் 353, 354

நந்தி என்ற அம்மையப்பனாகிய சிவன் பிரபஞ்சத்தைப்  பற்றி விளக்கிச்  சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது.    கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன் . சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன்.
அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகம் எனது வேகமும் ஒத்துப் போக வேண்டும். எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார்.

நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடிவந்து அண்டத்துள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்த அண்டத்தில் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள்( அறிவியலார்) இருந்தனர் .

சித்தர்  ஒருவரைக் கண்டு, அவருக்குப்  பணிவான வணக்கம் செய்தேன்.  அந்த  விண்வெளி சித்தர்  என்னிடம் “எத்தனை வகைச்  சித்தி செய்து உள்ளீர்கள்? “என்றார். நான் ,” அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன் “. என்றேன்

அதற்கு அவர், “ இன்னும் நீங்கள் இளமையான சித்தர். மேலும் பல சித்திகள் செய்து பாருங்கள்” என்றார். எனவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.

என்றே நுழைந்தேன்  அயலொரு அண்டத்தில்
கண்டேன்சித்தரை கடிபதுமை போல .
தண்டே கை கூப்பினேன் தடவினேன் தட்டது
அண்ட  நிராகாரத்து  அடைந்த பெரியோர் -------------------------பாடல் 356

பெரியோர் தனைகண்டேன் பேராய்  வலம் வந்தேன்
நரியோ மௌனம் மென்று அப்பால் நுழைந்திட்டேன்
பரிவை அதுகொண்டு பாய்ந்து முடிஏறி
விரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே.  ------------------- பாடல் 357

அதன்பின் வேறு ஒரு அண்டத்துள் நுழைந்திட்டேன்.  அங்கு சித்தர்களைக் கண்டேன். அவர்கள் அசையாத பொம்மை போல் இருந்தார்கள்.  அவர்களைக்  கைகூப்பி வணங்கினேன். தடவிப்பார்த்தேன். அவர்கள் தட்டுப்படவில்லை.

அவர்கள் நிராகாரன் என்ற கடவுள்நிலை அடைந்த பெரியவர்கள் என்று அறிந்தேன்.அவர்களை வலம் வந்தேன் . அவர்கள் மௌன யோகத்தில் இருக்கிறார்கள் என்று வியந்தேன். அந்த அண்டத்து உச்சிக்குச்  சென்றேன். அதில் இருந்து, அடுத்த அடுக்குக்குள் விரைவாய் நுழைந்திட்டேன்..

நுழைந்திடில் அண்டத்தில்  நூல்பார்த்த சித்தர்கள்
அழைந்திடு நூல்சொன்னது  ஆர்தான் எனகேட்டேன்
தனஞ்செய வீசண் தாய்கண்டு சொன்னது
களைந் தேழு லட்சம்  கரைகண்டு பார்த்தோமே  ---------------------------        பாடல் 358

பார்த்தோம் என்றிறே பராபர சித்தரே
கார்த்தே இந்நூல்தனை கண்டு சுருக்காததேன்
சேர்த்ததே சுருக்க சிவனாலும் கூடாது
மார்த்ததே உண்டாகில் மகத்துவம் சொல்வீரே--------------------------------------பாடல் 359

சொல்லிடும் என்றீர் சுகஞான சித்தர்கள்
மல்லிய நந்தி தான் வைத்தர்கேள் ஆயிரம்
பல்லுயிர் பார்க்க பகர்ந்தேழு லட்சமும்
க்லலுயிர் வெட்டுபோல்  காட்டினார் பார்த்திடே-------------------------------------பாடல் 360

நான் நுழைந்த அண்டத்தில் சித்தர்கள் நூல்களை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் “ இந்த நூல்களை எழுதியது யார்” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “ஈசன் பார்வதியிடம் சொன்ன எழு லட்சம் பாடல்கள். இவற்றை ஆராய்ந்து பார்த்துவிட்டோம் “ என்றனர் .

அதற்கு நான் “ இறைவனுக்கு ஒப்பான சித்தர்களே. ஆராய்ந்து பார்த்தோம் என்றீர்கள். அதை சுருக்காதது ஏன் ? “என்றேன். அவர்கள் “ இவற்றை சுருக்க ஈசனாலும்  ஆகாது .

அப்படி யாராகிலும் சுருக்கியிருந்தால் , அந்த மகத்துவமான நூல் பற்றி சொல்லுங்கள் “ என்றனர்.

நான் ‘நந்தி என்பவர்  உலகில் பலஉயிர்கள் பார்த்துப் பயன் பெற  எழுலட்சம் பாடல்களைச்  சுருக்கி ஆயிரம் பாடல்களாக எழுதி உள்ளார் . இது கல்வெட்டில் எழுதியது போன்று  தெளிவானது . அதை படித்துப்  பாருங்கள் “ என்றேன்.

துளசி குணமாக்கும் வியாதிகள்...


1. உண்ட விஷத்தை முறிக்க
2. விஷஜுரம்குணமாக
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக
4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்க
5. காது குத்துவலி குணமாக
6. காது வலி குணமாக
7. தலைசுற்றுகுணமாக
8. பிரசவ வலி குறைய
9. அம்மை அதிகரிக்காதிருக்க
10. மூத்திரத் துவாரவலி குணமாக
11. வண்டுகடி குணமாக
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற
16. அஜீரணம் குணமாக
17. கெட்டரத்தம் சுத்தமாக
18. குஷ்ட நோய் குணமாக
19. குளிர் காச்சல் குணமாக
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க
23. காக்காய்வலிப்புக் குணமாக
24. ஜலதோசம் குணமாக
25. ஜீரண சக்தி உண்டாக
26. தாதுவைக் கட்ட
27. சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள் கொட்டு குணமாக
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக
31. கண்ணில் விழுந்த மண், தூசியை வெளியேற்ற
32. வாதரோகம் குணமாக
33. காச்சலின் போது தாகம் தணிய
34. பித்தம் குணமாக
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த
36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக
38. மாலைக்கண் குணமாக
39. எலிக்கடி விஷம் நீங்க
40. காச்சல் வரும் அறிகுறி தோன்றினால்
41. ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த
42. வாந்தியை நிறுத்த
43. தனுர்வாதம் கணமாக
44. வாதவீக்கம் குணமாக
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக
46. வாய்வுப் பிடிப்பு குணமாக
47. இருமல் குணமாக
48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த
50. இளைப்பு குணமாக
51. பற்று, படர்தாமரை குணமாக
52. சிரங்கு குணமாக
53. கோழை, கபக்கட்டு நீங்க...

பாஜக மோடி எனும் வியாபாரி...


கிணறு...


நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதைச் செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்தக் காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது. ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ...

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

பாஜக மோடியின் ஊழல்...


மரணத்தின் பின்னர்...


சட உலகுக்கே உரித்தான ஆவிப் பொருளை (Etheric Matter) உதறினாலொழிய சூட்சும உலகை அடைய முடியாது.

எனவே இவர்கள் சில நாட்களுக்கு ஆவி வடிவத்தை உதற முடியாமலும் தாம் நேசித்துப் பக்குவப்படுத்தி வந்த உடல் அழிந்துவிட்டபடியால் புலணுணர்வுகளைத் திருப்பிப் பெற இயலாமலும் இங்குமின்றி அங்குமின்றி இழுபறிப்பட்ட இடைநடுவே நின்று சஞ்சலப்படுகிறார்கள்.

பலவிதமான ஆசைகளையும் கற்பனைகளையும் மனதில் வளர்த்து வைத்துக் கொண்டு தங்கள் உடல்களை ஆசையுடன் அலங்கரித்துப் பேணி வந்த யுவதிகளும் இளைஞர்களும் சடுதி மரணம் அடைய நேரும் பொழுது இத்தகைய பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இறந்தவரின் உடலை எரித்துவிடுவது தான் சிறந்த முறை.

ஆவி இரட்டை வடிவமானது தான் இதுவரை காலமும் எந்த உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்ததோ அந்த உடலின்பால் ஈர்க்கப்பட முடியாத நிலையில் அழிந்துவிடுகிறது.

உடலை விட்டு உயிர் நீங்கும் தருணத்தில் உடலின் பல்வேறு உறுப்புகளினதும் சக்திகள் யாவும் ஒருமுனையில் ஒன்றுபட்டு நின்றபின் “சுழுமுனை” நாடிவழியே மேலெழுந்து மூளையின் உட்குழிவுப் பள்ளத்தையடைந்து மண்டையோட்டின் உச்சிப்பாகமும் தலையோட்டின் பின் எலும்பும் சந்திக்கும் இணைப்பின் வழியாக (Parietal and Occipital Suture) வெளியேறுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு சக்திகள் ஒன்றுபட்டு வெளியேறும் நேரங்களில் சிலருக்கு நுண்நோக்காற்றல் ஏற்படுவதால் தூர தேசத்தில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு ஆவியுருவாகக் காட்சி கொடுப்பதும் உண்டு.

இறக்கும் தறுவாயில் சிலமனிதர்களால் இச்சட உலகுக்குரிய அதிர்வுகளுக்கு (Vibrations) அப்பாற்பட்ட குறைந்த அல்லது கூடிய அதிர்வுகளை ஏற்படுத்தி சிலதோற்றங்களை வெளிப்படுத்தவும் சட உலகிற்குரிய புலனுக்கு அப்பாற்பட்டதை காணவும் கேட்கவும் கூடியதாக இருக்கும்.

நமது பார்க்கும் கேட்கும் உணரும் திறன்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மிக நுண்ணிய உயிரணுக்களையே மிகத்தொலைவிலுள்ள பொருட்களையோ வெற்றுக்கண்களால் நம்மால் பார்க்க முடிவதில்லை.

உலகம் சுற்றுவதால் ஏற்படும் சத்தத்தையோ நிலத்தில் ஊர்ந்து செல்லும் ஜந்துக்கள் உண்டாக்கும் ஓசையையோ எம்மால் கேட்க முடிவதில்லை.

நமது சூழலிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்ணுயிர்களை நம்மால் உணர முடிவதில்லை.

நமது புலனுணர்வுகளை இவ்வாறாக மட்டுப்படுத்தாது விட்டிருந்தால் எத்தனை சிக்கல்கள் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்…