வணிகப் போர் உச்சம் அடைந்துள்ள தருணத்தில் சீனா தனது காய்களை நகர்த்தி வருகிறது..
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வேறொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ வாங்கமுடியும் என்பது நாம் முன்னரே அறிந்த செய்திதான். ஆனால் ஒரு நாட்டின் பங்கு சந்தையையே வேறொரு நாட்டின் பங்கு சந்தை வாங்க முடியும் என்றால் நம்பத்தான் வேண்டும். இதனை டீமியூச்சுவலைசேஷன் என அழைக்கிறார்கள். நீண்டகாலமாக நடந்துவரும் இப்படியான வர்த்தகத்தில் தான் தற்போது சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.
டாக்கா பங்கு சந்தையின் 25 சதவீத பங்குகளை 12.5 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது சீனாவின் ஷாங்காய் மற்றும் ஷென்சென் பங்கு சந்தைகள்.
ஷாங்காய் மற்றும் ஷென்சென் பங்கு சந்தைகள் மற்றும் சீனா பைனான்சியல் பியூச்சர் எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் இணைந்து பிசிஎக்ஸில் 35 சதவீதப் பங்குகளையும், பாக்-சீனா இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி மற்றும் ஹபிப் வங்கி ஆகியவை தலா 5 சதவீதப் பங்குகளையும் கைப்பற்றியுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ் பங்கு சந்தை (டிஏஎஸ்ஈ) , சவுதியின் தடாவுல் பங்கு சந்தைகளும் டீமியூச்சுவலைசேஷன் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் சீனா இவற்றையும் கைப்பற்ற முயற்சிக்கும்..
கஜகஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது பங்கு சந்தையின் பங்குகளை விரைவில் விற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அவற்றையும் வாங்க முனைப்பு காட்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.