14/12/2018

தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்...


வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லா குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

இதனால் அவதியடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரி தன்னுடைய கைப்பட புகார் மனு எழுதி மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர், சிறுமியின் மன தைரியத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவளுக்கு உள்ள உறுதியையும் பார்த்து பாராட்டினார்.

பின்னர் போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனை அழைத்து பேசினார். துப்புரவு ஆய்வாளர், சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால் அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதாக கூறினார். அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.

இந்த நிலையில் மாணவி ஹனீபாஜாரா வீட்டில் கழிவறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தது குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ராமன், மாணவியின் செயலை எண்ணி நெகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு பேசினார்.

மாணவியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி கலெக்டர், கமிஷனருக்கு உத்தரவிட்டார். மேலும் திறந்தவெளியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக அவள் மேற்கொண்ட செயலுக்கும் கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்தார். இதேபோன்று பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மாணவி ஹனீபாஜாராவை ஓரிரு நாட்களில் கலெக்டர் நேரில் சந்திந்து பாராட்டு தெரிவிக்க உள்ளதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹனீபாஜாரா வீட்டில் கழிவறை கட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் பாஸ்கர் ஆகியோர் நேற்று நேரில் சென்று உடனடியாக கழிவறை கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து மாணவியின் வீட்டில் கழிவறை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக நியமித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள் ஆரம்பம்...


யோகா ஆசனங்கள்...


யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும்.

யோகா நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது. எவ்வாறென்றால் உடலின் மூட்டுக்கள், முக்கியமாக முதுகுத் தண்டு. இவற்றை யோகா ஆரோக்கியமாக வைக்கிறது. யோகாசனங்கள் உடலின் முக்கிய பாகமான, சுமை தாங்கியான முதுகு தண்டை சீராக்கி, பயிற்சி தருகின்றன. இதனால் முதுகுத் தண்டு காக்கும் நரம்புகளும் வலிமை பெறுகின்றன.

பெரும்பாலான ஆசனங்கள் முதுகுத்தண்டை முன்னும், பின்னும், பக்கவாட்டில் வளைத்தும் பயிற்சி தருகின்றன.

அடுத்த முக்கியமான உடல் அவயம் நாளமில்லா சுரப்பிகள். இவைகள் தான் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை "கன்ட்ரோல்" செய்கின்றன தசைப்பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. தசைகள் வலிமை பெற்று விளங்கும்.

உடலின் ஒவ்வொரு நிலையையும் சுத்திகரித்து போஷாக்கு அளிக்கும்.
வீரியம், வலிமை, ஒருமுனைப்படுவதில் அபிவிருத்தி ஏற்படும்.

உடல் எடையை குறைக்கும். தினசரி, உடலுழைப்பு, வேலைகளால் ஏற்படும் களைப்பை யோகாசனங்கள் போக்கும்.

யோகாவின் சிறப்பு...

அது ஒரே பயிற்சியாக உடல், உள்ளம், ஆத்மா மற்றும் சுவாசம் ஆகியவற்றை இணைத்து பயிற்சி தருகிறது.

யோகா இயற்கையோடு இணைந்தது. தாவரங்கள், விலங்குகளைப் போல பல யோகாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உதராணம்-விருக்ஸாஸனம், புஜங்காசனம், மயூராசனம் முதலியன மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக யோகா ஊக்குவிக்கிறது.

உதராணமாக ஆஸ்த்துமாவிற்காக செய்யப்படும் ஆசனங்கள் "சிம்பதெடிக்" மற்றும் "பாராசிம்பதெடிக்" எனும் நரம்புகளை "நார்மல்" நிலைக்கு கொண்டு வருகின்றன. இதனால் நுரையீரல் சுவாச நாளங்கள் நன்கு திறக்கின்றன. மூச்சு வருவது சுலபமாகிறது.

யோகாப்யாசங்கள் (தியானம், பிராணாயாமா) நேரடியாக மனதின் டென்சனை போக்குகின்றன. மனதை, உடலை, ரிலாக்ஸ்.. செய்வதற்கென்றே, பிரத்யேக யோகாசனங்கள்-சவாசனம், சுகாசனம், யோக நித்ரா போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

மனச்சுமையை இறக்கி வைக்க யோகாசனங்கள் உதவுகின்றன.
முன்பு சொன்னபடி, இரத்த ஒட்டத்தின் வேகத்தை யோகா அதிகரிக்கிறது. மூளை, இதயம் போன்ற உடலுப்புகள் நல்ல ரத்தத்தால் நிரப்பப்படுகின்றன. இதனால் மனம் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தன்னம்பிக்கை பெருகும்.

ஆயுர்வேதத்தின் படி உடலை விட்டு வெளியேறாத கழிவுப் பொருட்களால் நோய்கள் உருவாகின்றன. சத்கிரியை, பிராணாயம் கூடிய யோக தியானம், ஆசனங்கள் இவற்றால் கழிவுப்பொருட்கள் சரியாக, சீராக வெளியேறும்...

பாஜக கலாட்டா...


தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில்...


எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது.

ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர்.

ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.

எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக் கொண்டவர்.

எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர்.

எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

- தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்...

நாம் தமிழர் கட்சி எப்படி முயற்சிக்கும்...


தன் முதலாளி வைகுண்டராஜன் ஆலோசனை படி தானே ஸ்டெர்லைட் செயல்படுகிறது...

திராவிடத்தால் தமிழகத்தின் நிலை..


2011ல் தமிழகத்தின் கடன் ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி. (தலைக்கு ஏறத்தாழ ரூ.14000).

2017ல் தமிழகத்தின் கடன் மூன்று லட்சத்து பதினான்காயிரம் கோடி. (தலைக்கு ஏறத்தாழ ரூ40,000).

அதாவது வெறும் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு கடனாளி ஆபியுள்ளோம்.

தற்போது தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை 40,000 ரூபாய் கடனாளியாகப் பிறக்கிறது.

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்களின் உரையிலிருந்து...

அல்சர் குடல்புண் பிரச்சனை தீர சில எளிய வழிமுறைகள்...


அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள். இந்த புண்கள் உணவை தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து இரைப்பையின் சுவற்றில் புண்கள் உண்டாகி அதன் மூலம் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.
   
குடல் புண் என்னும் அல்சர் அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தாலும் வரும். இந்த அல்சர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
 
அல்சர் பிரச்சனைக்கான சில எளிய முறைகள்...

தேங்காய் பால்...

அல்சர் இருப்பவர்கள் தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.

ஆப்பிள் ஜூஸ்...

தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜீஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம்.

வேப்பிலை...

கொளுந்து வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்ததுக்கு அப்புறம் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

முட்டைகோஸ்...

அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் அல்சரை குணமாக்கலாம்.

அகத்திக்கீரை...

அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர் சீக்கிரம் நீங்கும்.

வெங்காயம்...

அல்சரால் கடுமையான வயிற்று வலியை சந்தித்தால் பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு உட்கொள்ளுங்கள் இதன் மூலம் அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பீட்ரூட் ஜுஸ்...

பீட்ரூட் கூட அல்சருக்கு நல்ல நிவாரணம் தரும். அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் செய்து தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

பாகற்காய்...

பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வர விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து தினமும் 1 டீஸ்பூன் பாகற்காய் பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய்...

வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய் , அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மணத்தக்காளி கீரை...

மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல் சருக்கு மிகவும் நல்லது எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உ ட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்...

நம் தாய்மொழியை தமிழை அழிக்க ஏன் துடிக்கிறார்கள்..?


அதிகாரம்...


அதிகாரம் என்பது ஒவ்வொரு அதிகாரியாலும், தன்னால் கையாளப் படுவதாக நினைத்தாலும் கூட, அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடு தான்.

உங்களால் அதிகாரம் செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல் கொண்ட கட்டாயம் இருக்க வேண்டும்.

ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல் திட்டத்துடன் சரியாக இணைந்து கொள்வதன் மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கை வருகிறது.

தனித்துச் செல்லும் தோறும் அதிகாரம் இல்லாமல் ஆகிறது.

நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்து கொள்கிறான்.

கூடவே அது எப்படி  உருவாகிறது என்பதயும் கண்டு கொள்கிறான்.

மேலும் மேலும் அதிகாரத்திற்காக அவன் மனம் ஏங்குகிறது.

அதற்காகத் தன்னை மாற்றிக் கொண்டே  இருக்கிறான்.

சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறி விடுகிறான்.

அவன் கொண்டு வந்த கனவுகள் லட்சிய வாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன.

மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல, முகமும் கூட பிறரைப் போல ஆகி விடுகிறது...

பாஜக வின் சதி திட்டம்...


உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்...


நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அசு(ஸ்)கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அசு(ஸ்)பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்...

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற...

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்...

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத் தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம்,செரிமானம் நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம்.

இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம்.

ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்...

பாஜக - அதிமுக - என்.எல்.சி நிறுவனம் இனைந்து மக்களை அழிக்கிறது...


மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?


விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.

இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப் போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். ..

கான்ஸ்பிரஸி தியாரிஸ்ட்...


இதை உலக முதலாளிகள் சாத்தானுக்கு பலி கொடுக்கும் நிகழ்ச்சி என கூறுகிறார்கள்.

பல்வேறு அமெரிக்க அதிபர்களும் இந்த குழுவின் உறுப்பினராக இருந்து இந்த வழிபாட்டில் கலந்துள்ளனர்...

பயம்...


பயத்தை பற்றி  சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்  தன் உயிரின் நிலையை வாழும் காலத்தில்  உணராமல் - இந்த உயிர் பிரிந்து விடுமோ என்ற பயம் தான் அடிப்படையான உண்மை ஆகும்.

பயத்தை பற்றி புரிந்து கொள்ள  தனிமையில் தினமும் சில நேரங்களில்  இருந்து பழகினால் சாத்தியம் - இது போக போக யார் கூட இருந்தாலும் இல்லா விட்டாலும் தனித்துவமாக இருந்து வாழும் தன்மை - நம்மை உணரும்  சந்தோசத்தின் மூலம்  நம்முள் நாம் காண முடியும்.

சதா எல்லா நேரங்களிலும் தியானத்தன்மையில்  இருப்பவருக்கு பயம் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.

ஒவ்வோரு பயமும் இந்த உயிர் பிரபஞ்சத்தில் - உடல் மூலம் பிறப்பு  எடுத்து அதன் நோக்கம் என்ன என்ற அடிப்படையை உணராத தருணங்களில் வருவது தான் பயம்.

நிரம்பிய ஆசைகளின் குப்பைகள் கரைத்து தன்னுள் இருக்கும் இயற்கையை உணர கொடுத்த வாய்ப்புகள் இழக்கும் இடங்களில் வருவது பயம்.

ஏனெனில் ஒவ்வொரு நொடியிலும் இயற்கை தன்னை உணரவே - ஒவ்வொரு சூழலிலும் உண்மையை உணர்த்தவே வடிவமைத்து உள்ளது -அதை சற்று ஆழமாக புரிந்து கொள்ளாத நிலை உணர்வே பயம்.

எங்கெல்லாம் பயம் வருகின்றதோ அங்கெல்லாம் உயிரின் நிலையை உணரவில்லை என்று புரிந்து கொள்ள முடியும்.

தன் உணர்வாக இயங்கும் உயிரின் நிலையை எங்கெல்லாம் ஆழமாக உணர்கிறதோ அங்கு பயம் கரைந்து விடுகிறது.

ஒவ்வொரு பயத்துக்கு பின்னால் ஒழிந்து இருப்பது மரண பயம் தான் - நாம் பயத்தை வேறு படுத்தி பார்க்கிறோம்  ஆனால் அதன் அடி ஆழத்தில் இருப்பது மரண பயம் தான் என்று சற்று ஆழமாக செல்லும் பொழுது உணர முடியும்.

பொதுவாக தேக்கமாக  இருக்கும் ஆசைகள் செயல் படுத்தி அனுபவிக்க முடியாத சூழ்நிலைகள் வரும் பொழுது அங்கு கவலை தோன்றி அதன் சக்தி இழப்பு தான் பயமாக மலர்கின்றது.

உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்...

இந்த பயமானது பொருள்கள் மீதும், நபர்கள் மீதும், எதிர்கால கற்பனை வாழ்க்கை கொண்ட பற்றின்  அடிப்படையில் - இவைகளை ஒட்டியே அதிகம் வருகின்றது.

ஒரு நபர் மீது பாசம் என்பதை காட்டி பயத்துக்குரிய தீனி போட்டு , வெளியே சென்றால் போயிட்டியா வந்துட்டியா என்ற பாங்கு படுத்தும் பேரில் பயத்தை உருவாக்கி கொள்வது.

வாகனத்தை ஒட்டி சென்றால் ஏதாவது accident ஆகி விடுமோ என்ற பேதியில் வரும் உணர்வுகள்.

மிருகங்கள் கடித்து விடுமோ கொன்று விடுமோ என்ற பயங்கள்.

பக்கத்து வீட்டில் ஏற்படும் மரணம் மூலம் வரும்  பயம்.

ரத்தக் கசிவுகளை பார்க்கும் பொழுது வரும் பயம்.

வீட்டுக்கு உள்ளே சின்ன ஒரு sound கேட்டால் வரும் பயம்.

Machineries இயக்கும் பொழுது வரும் பயங்கள்.

வருங்கால சேமிப்பை பற்றிய பயம்.

குழந்தைகளை சேர்க்கும் hi fi schools பற்றிய பயம்.

ஒவ்வொரு நபருடன் ஒப்பீடு செய்து அதன் படி நாம் இன்னும் முன்னேற வில்லை என்ற பயம்.

உடல் வலிகள், நோய்கள் கொண்ட பயம்.

தனிமையில் இருக்கும் பொழுது பயம்.

தேர்வு எழுத பயம்.

வேளைகளில் - தொழில்களில்  முன்னேற வில்லை என்ற பயம்.

பொண்டாட்டி - புருஷன் வேறு உறவுகள் இருக்குமோ என்ற சந்தேகம் கொண்ட பயம்.

என சொல்லிக் கொண்டே போகலாம்..

தன் வயது வந்த மகன் - மகள் கெட்டு விடுவார்கள் என்ற பயம்.

அதிக நேரம் மொபைல் use பண்ணும் பொழுது ஏற்படும் சந்தேகம் கொண்ட பயம்.

நெருங்கிய உறவுகள் பிரிந்து சென்று விடுவார்கள் என்ற பயம்.

சடங்கு சம்பிரதாய முறைகளை கொண்டு இதை செய்யாமல் விட்டால் அப்படி நடந்து விடுமோ இப்படி நடந்து விடுமோ என்று வரும் முட்டாள் தனமான பயம்.

இவர் இப்படி நினைத்து விடுவாரோ அவர் அப்படி நினைத்து விடுவாரோ என தன்மேல் நம்பிக்கை இல்லாத முட்டாள் பயம்.

வசதியான ஆட்கள் பெரிய பதவிகள் அரசியல் வாதிகள் கொண்ட நபர்கள் முன் ஏற்படும் உயர்வு - தாழ்வை கொண்ட பயம்.

இவை அனைத்துமே கடந்த கால சுமைகளை - தேக்கம் கொண்ட ஆசைகளையும் சுமந்து அடுத்த நாள் அடுத்த வருஷம் - அடுத்த generation வரை நடக்க வேண்டும் என்று தீர்மானத்து விட்டு செயல்பட வில்லை என்ற ஏற்றுக்கொள்ள தெரியாத மனோ நிலையே பயத்துக்குரிய மூலம் ஆகும்.

ஏன் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை பிடிப்புகளை மனதில்  சுமக்கும் பொழுது அங்கு வேறுபாடு கொண்ட சூழ்நிலைகள் நிகழும்  பொழுது அங்கு கவலையும் அதனுள் இருக்கும் பயமும் எழுகிறது.

இங்கு அவரவர் குணத்தை வைத்து அவரவர் ஒப்பீட்டு கொண்டே இருப்பது தான் எதையும் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

முதலில் பயத்துடன் வாழ வேண்டும்..

பயம் வந்தால் என்ன உடல்  ரசாயன மாற்றம் நிகழ்கிறது.

அடிவயிற்றில் கிங்க் காங் trailer ஓடுகிறது , சில சமையங்களில் பேதி ஆகி விடுகிறது , நெஞ்சில் படபடப்பு, உடல் நடுக்கம், பேச்சு குளறுபடிகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த ரசாயன மாற்றம் உள் நிலைக்கு பொருந்தாமல் செயல்படும் நிலையை உணர முடியும்.

முதலில் ஒவ்வொரு பயத்துடன் வாழ வேண்டும் ஏன் பயம் வந்தது.

அதன் வேர் எங்கு உள்ளது அது வருவதுக்கு காரணம் என்ன ?

பயம் வரும் சூழலில் அங்கு நாம் இன்னும் அந்த இடத்தில் உண்மையை உணரவில்லை என்பதை சற்று ஆழமாக கவனிக்க கூடிய விஷயம்.

எங்கும் எதிலும் நான் அடிப்படையான உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான பார்வை ஆரம்ப கால கட்டங்களில் பயத்தைக் கொண்டவர்கள் தனக்குள் உறுதியான நிலை பாட்டில் இருக்க வேண்டும்.

தினசரி தியானம் செய்ய செய்ய நம்மமுள் நாம் ஆழ்ந்து செல்ல முடியும் அப்படி ஆழமாக செல்லும் பொழுது தன்னிலை அறிந்து கொள்ள முடியும்.

இப்படி நம்மை உணர உணர நீ நீயாக வாழ தொடங்கி விடுவாய்.

அங்கு யார் என்ன சொன்னாலும்  சொல்லாமல் காண்பிக்கிற செயல் உணர்வுகளில் - அதில் இருக்கும் உண்மை என்ன என்பதை எளிதில் உணர்ந்து அதில் ஒன்னும் இல்லை..

அவர்கள் உண்மையை உணராமல் செய்கின்றனர் - அதை நமக்கு திணிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அது போல அடிப்படையில் இந்த பயம் மூலம் சில வந்த நோக்கத்தில் முழுமை அடையாத அடிப்படையை உணர முடியாத காரணம்  அதர்க்கு பல பிடிப்புகளை சுமப்பது தான் காரணம் என்ற   உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த நிலை வரும் பொழுது ஒவ்வொரு விஷயத்தையும் செயலையும் நுட்பமாக கவனிக்கும் திறன் அதில் இருக்கும் உண்மைகள் உணர்ந்து தனித்துவமான தன்மை பெற்றுக்கொண்டே நம் உயிர் பயணிக்கும்.

இந்த நிலை வரும் பொழுது பெரும்பாலன பயம் காணாமல் உடைந்து போய் விடுகிறது.

வாழ்க்கை தைரியம் - பயம் கடந்த இயல்பில் மலர தொடங்கி விடும்.

தியானம் செய்வோம் உண்மையை உணர்வோம் - இயல்பில் பயத்தைக் கடப்போம்.

உயிரின் நிலைகளை முழுமையாக உணரும் பொழுது அங்கு மரணத்தை கொண்ட பயம் கடந்த நிலை வரும்.

அங்கு மரணம் இல்லாத பெரு வாழ்வை ஞானிகள் பெற்றதை  பெற முடியும்...

நம் அடிமைத்தனம் எவ்வாறு வளர்க்கப்படுகிறது..?


தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?


தமிழகத்தில் வந்தேறிகள் கைவசமுள்ள நிலவுடைமை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது (நீலநிறம்).

(இதில் பிராமணர் என்பதில் பார்ப்பன குலத் தமிழர் உண்டா என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ்ப் பார்ப்பனர் எவரிடமும் நிலவுடைமை இல்லை. எனவே பி என்று குறிக்கப்பட்டோர் வடுக பிராமணராகவே இருக்க வாய்ப்பு அதிகம்)

மேலும் இது ஆங்கிலேயர் கால வரைபடம் ஆகும்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தெலுங்கு கன்னட வந்தேறிகளின் நிலவுடைமை வரைபடத்தில் உள்ளதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்துடன் திராவிட ஆட்சியில் நகர்ப்புற நிலவுடைமை மார்வாடிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது.

தமிழகத்தில் 8 ல் ஒரு பங்கு நிலம் மலையாளிகள் கையில் உள்ளது.

கேரள எல்லைப்பகுதிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி கேரள குடியுரிமைக்கு விண்ணப்பித்து எல்லைக்கற்களை பிடுங்கி கேரளாவுடன் இணைக்கப்பட்ட தாளூர் போன்ற கிராமங்கள் பல.

இவையெல்லாம் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

அதாவது தமிழகத்தில் பெரும்பாலான நிலம் தமிழருக்கு சொந்தமில்லை.

விவசாய நிலங்கள் பெரும்பாலும் தெலுங்கர் கையில் உள்ளன.

விவசாய சங்கங்களில் பொறுப்பில் பதவியில் இருப்பவர்கள் இவர்களே..

கீழவெண்மணி படுகொலை செய்த கோபாலகிருஷ்ண நாயுடு நினைவுக்கு வரலாம்.

அவருக்கு ஈ.வே.ராமசாமியும் அண்ணாதுரையும் முட்டுக்கொடுத்து நினைவிருக்கலாம்.

விவசாயக் கூலிகளை விவசாயியாக யார் ஒத்துக்கொள்கிறார்கள்?

தெலுங்கர்கள்தான் தமிழக விவசாயிகளை ஒன்றுசேரவிடாமல் நடுநடுவே ஊடுறுவி உள்ளனர்.

இதுவே விவசாய போராட்டம் பெரிய அளவு வெடிக்காத்தற்கு காரணம்.

நாராயணசாமி நாயுடு சீனிவாசராவ் போன்றவர்களை உப்புக்கு சப்பாணியாக ஒத்துக் கொள்ளலாம்...

ஊடகமே மக்களின் முதல் எதிரி...


அவன் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள்...

மனிதன்...


இங்கே மனிதர்கள் இல்லாமல் இருந்தால் அனைத்து கருத்தியலுமே கண்களுக்கு தெரியாமல் சென்று விடும்...

அங்கே உன்மை மட்டுமே மையம் கொண்டு விடும்...

சிறந்த கற்பனையாளன் மனிதன்...

பாஜக அடிமை அதிமுக என் விசுவாசத்தை காட்டுதாம்...


கஜா புயல் சீரழிவு...


மீத்தேன் நிலக்கரி எடுக்க மறைமுக அனுமதி...
கட்டற்ற மணல் கொள்ளை..
அடுத்து வரும் நீரை தடுத்து நிறுத்துதல்..

அழிவின் விளிம்பில் டெல்டா....

தமிழகத்தில் அகதியாய் தமிழர்கள்...

மின்சாரமும் உலக அரசியலும்...


உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தன் மக்களிடம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துகிறது...

ஆனால் எந்த நாடும் இந்த முறையை ஏற்காது.. ஏனென்றால் அவர்கள் கட்டமைத்த அமைப்பு அவ்வாறு உள்ளது...

பாஜக - காங்கிரஸ் இரண்டுமே தமிழின எதிரிகள் தான்...


பாஜக மோடியின் டூபாக்கூர் பேச்சுக்கள்...


ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அரசியலை விட்டே விலகிடுவேன்...

தேர்தல் பிரசாரத்தில் மோடி..

We are waiting... ஆம்பளைக்கு அழகு கொடுத்த வாக்குறுதிய காப்பாத்தரது... என்ன சொல்றீங்க...

பெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள் எவை...


பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். அவை..

1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும்
இருக்க இவற்றை செய்யலாம்.

சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும். காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.

பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெல் மில் பயிற்சியினையும், மெல்லிய நடை பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்...

இந்த காலங்களில் 30 வயது மேல் நோயில்லாமல் ஒருவனை பார்ப்பது கடினம்...


தெலுங்கர் வைகோ நாயூடும் அரசியல் வியாபாரமும்...


1994 ல் கட்சி துவங்கியபோது திமுக எதிரி.

1996 ல் திமுக மட்டுமல்லாமல், அதிமுகவும் எதிரி.

1998 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி.

1999 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி.

2001 ல் ரெண்டு பேருமே எதிரி.

2004 ல் அதிமுக எதிரி; திமுகவுடன் கூட்டணி.

2006, 2009 ல் திமுக எதிரி; அதிமுகவுடன் கூட்டணி.

2011 ல் வாக்காளர் உட்பட எல்லோரும் எதிரி.

2014 ல் ரெண்டு பேருமே எதிரி ; பாஜகவோடு கூட்டணி.

2016 ல் திமுக அதிமுக இரண்டுமே எதிரி..

2017 ல் அதிமுக எதிரி திமுக கூட்டணி..

2018 ல் பாஜக அதிமுக எதிரி திமுக கூட்டணி...

ஒரே குழப்பமா இருக்கு. நம்ம எதிரி யார் தான் தலைவா? இவன் மதிமுக அப்பாவி தொண்டன்...

தன்மானம் உள்ளவன் இனிமேல் திமுகவோடு கூட்டணி வைக்கமாட்டான்னு சொன்னியே தலைவா.. அப்பவே தெரியும்.. திமுகவுடன்  நீ கூட்டணி வைப்பன்னு...

மரபியல்...


தன்னுடைய இயற்கை தன்மையை ஆரம்பம் முதல் இன்று வரை கடத்தி வருகிறது...

மனிதனை தவிர அனைத்தும்...

பேய்களுக்கு கால்கள் உண்டா?


சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும்..

கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது  அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப் பட்டது.

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது.

ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்.

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது.

இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்.

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல..

அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு..

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன..

எனவே பேய்களுக்கு கால் உண்டு..

பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்..

நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...

மராட்டிய ரஜினி கலாட்டா...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள் - நாஜி பெல்...


மர்மமான நாஜி பெல். ஒரு சதித்திட்ட கோட்பாட்டின் படி, புரியாத, எதிர்விளைவு ஈர்ப்பு உந்துதல் மூலம் சந்திரன், செவ்வாய் மற்றும் தொலைதூர நட்சத்திர மண்டலங்களை பார்வையிட நாஜி உருவாக்கி பறக்கும் தட்டு போன்ற இயந்திரம்.

பல தசாப்தங்களாக, "நாஜி பெல்" என்ற வதந்திகள் சிதறிக் கிடந்தன. அதாவது, இரண்டாம் உலகப் போர்க்கு நாஜிக்கள் உருவாக்கிய பறக்கும் தட்டு போன்ற மர்மமான இயந்திரம்.  நாசிகள் இந்த பெல் இயந்திரம் மூலம் சந்திரன், செவ்வாய் மற்றும் சூரிய மண்டலத்திற்கு விஜயம் செய்தார்கள் என்றும் சதிகோட்பாடு  ஆதாரங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். இந்த இயந்திரம் ஒரு அறியப்படாத எரிசக்தி ஆதாரத்தைக் கொண்டிருந்தது, அது பூமியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் நீடித்த பயணத்தை அதிகரிக்க வல்லது.

இந்த ஆற்றல் தொழில்நுட்பம் உலகின் மற்ற பகுதிகளுக்கு தெரியாதபோதிலும், அது ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஜேர்மனியின் இரகசிய விண்வெளித் திட்டத்தின் ஒரு மையப் பகுதியாக இருந்தது. ஜேர்மனியின் மறு கட்டமைப்பு காலத்தின்போது பலர் "பெல்" என்ற இயந்திரத்தை "அதிரடி ஆயுதத்தை" என கூறிவந்தனர்.

சில சித்தாந்தவாதிகள், நாசி தலைவர்கள். ஆல்டபரன் சூரிய மண்டலத்தில் பெல் தொழில்நுட்பத்துடன் பயணம் செய்ததாக நம்புகின்றனர். மேலும் அந்த வேற்றுகிரகங்களும் மற்ற யுஎஃப்ஒ திட்டங்களை ஊடகங்கள் ஊடாக பரிமாறிக்கொண்டன என்றும், நாஜிக்கள் இன்னமும் ஆர்ட்டிக் பகுதியில் இரகசிய யுஎஃப்ஒ-மேம்பாட்டு தளங்கள் கொண்டு இயங்கி வருவதாக நம்புகின்றனர்.

ஜெர்மனியில் 'டி க்ளோக்' என்று அழைக்கப்பட்ட நாஜி பெல், SS ஜெனரல் ஹன்ஸ் காம்லர் தலைமையில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் கொண்ட சிறந்த குழுவால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த இயந்திரம் பரந்த கீழ் பகுதி மற்றும் குறுகிய மேல் பகுதியை கொண்டு- ஒரு தேவாலய மணி வடிவத்தில் இருந்ததால் பெல் என்று அதற்கு பெயர் கிடைத்தது.

அது 30 முதல் 50 அடி உயரமும் 20 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. பெல் பற்றிய அறிவைக் கொண்டிருப்பவர்கள், மிகவும் கடினமான மற்றும் கனமான உலோகத்துடன், "லெயிச்செட்டெல்லால்" என்று குறிப்பிடப்படும் ஒரு மெல்லிய உலோகத்துடன் தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். மற்றும் யுரேனியம், பெல்லிலியம் பெராக்சைடு, தோரியம் பெராக்ஸைடு ஆகியவற்றைப் பயன்படுத்தினர் என்று சில சாட்சிகள் கூறுகின்றனர்.

மேலும் "சீரம் 525" அல்லது "செரெம் 525" என்று அழைக்கப்படும் ஒரு திரவ எரிபொருளால் இந்த இயந்திரம் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. சாட்சிகள் அதை, சிவப்பு நிற , அல்லது இளஞ்சிவப்பு போன்ற பிசுபிசுப்பான, அடர்த்தியான பொருள் என்று கூறினார். சதி கோட்பாளர் ஹென்றி ஸ்டீவன்ஸ் உட்பட சிலர் இந்த திரவம் உண்மையில் சிவப்பு மெர்குரி என்று கூறுகின்றனர்.

அந்த இயந்திரம் சுழற்சி அமைப்புக்கு, உள்ளே இரண்டு எதிர் சுழலும் டிரம்ஸ் அமைந்துள்ளது. ஒரு கோளம் ஒரு பொதுவான அச்சு மீது மற்றொரு சுழற்சியை உள்ளே காட்டியது. துகள் வேகக்கட்டுப்பாட்டுடன் பொதுவானதாக இருப்பதால், இந்த காலி இடங்களில் பிளாஸ்மாவை பரப்புவதற்கு ஒரு வெற்றிடத்தை உருவாக்க வேண்டும்.

பின்னர் சூடான சிகப்பு பாதரச நீராவி அந்த குழிக்குள் போடப்பட்டிருக்கும், பின்னர் மெர்குரி அயனிக்கு மின்சக்தியின் சக்திவாய்ந்த வெளியேற்றத்திற்கு உட்படுத்தப்படும். இந்த செயலின் கீழ் மெர்குரி ஒளிரும் மற்றும் ஃபோட்டான்கள் மிகவும் சக்திவாய்ந்த எலக்ட்ரான்களுடன் மோதி, காமா எக்ஸ்-கதிர்களை உருவாக்கும்.

இந்த எக்ஸ்-கதிர்கள் வெப்பமான நியூட்ரான்களை வெளிப்படுத்த செரெம் 525 இல் பெரிலியம் ஆக்சைடு தூண்டுகின்றன. இந்த வெப்ப நியூட்ரான்கள் தோரியம் 232 மூலமாக 233 புரோட்டினினியமாக மாற்றுவதன் மூலம் உறிஞ்சப்படும். இந்த விளைவுகள் மூலமே இயந்திரம் சூழன்று பறக்கும் ஆரம்பிக்கும். இந்த திட்டம் கிரோனோஸ் (சனி கிரகம்) என்றும் அழைக்கப்படுகிறது, ஏனென்றால் சனியின் வளையங்கள் மற்றும் கிரகத்தில் உள்ள சுழற்சி முறை பெல் உள்ளே இயங்குவதால் இந்த பெயர் பொருத்தமாக இருக்கும் என்று கருதினர்.

எனினும், இந்த ரகசிய திட்டத்தின் முக்கிய நோக்கம். காலப்பயணம் தான், இது ஒரு காலப்பயண இயந்திரமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது, அதன் சுழற்சிகளுக்கான முறைகளை செயல்படுத்தவும் அதே நேரத்தில் சிறிய விமான இயக்கங்களை உருவாக்கவும் தேவைப்படுகிறது. உண்மையில், ஒரு கால இயந்திரம் போரின் போக்கை மாற்றுவதற்கு ஒரு சிறந்த பயனுள்ள ஆயுதம், இறுதி ஆயுதம் கூட.

ஆனால் மூன்றாம் ஆட்சி (மூன்றாம் ஆட்சி என்பதின் அர்த்தம், 1933-45 இலிருந்து ஜேர்மனி மற்றும் அதன் ஆட்சியின் நாஜி பதவி பெயர். வரலாற்று ரீதியாக, முதல் ஆட்சி இடைக்கால ரோமானியப் பேரரசு 1806 வரை நீடித்தது. இரண்டாவது ஆட்சி 1871-1918 ஆண்டுகளில் ஜேர்மன் சாம்ராஜ்யத்தை உள்ளடக்கியது.)

தோற்கடிக்கப்பட்ட பின்னர், நாஜிகளின் இந்த இரகசிய தொழில்நுட்பம் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு, மனிதகுலத்திற்கு எதிரான மனித உரிமை மீறலுக்காக பல நாஜிக்கள் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒரு பிரதிவாதி ஜாகோப் ஸ்போர்ரன்பெர்க் என்பவர் அமெரிக்காவிடம் இந்த இயந்திர திட்டம் பற்றி வாக்கு மூலம் அளித்தார். அவரின் வாக்குமூலத்தின் படி, பெல் மிகவும் முன்னேறிய தொழில்நுட்பமாக இருந்தது, அது செயல்படும் போது ஒருவிதமான ஒலியை எழுப்பும். இது இரண்டாவது உலக போருக்கு முன்பே விண்வெளிக்காக மறைமுகமாக இயங்கியதாக கூறினார்.

டிசம்பர் 9, 1965 அன்று, அறியப்படாத ஒரு பறக்கும் பொருள், ஏகோர்ன்-வடிவ அல்லது மணி வடிவமாக, பென்சில்வேனியா, காக்ஸ்பர்க் அமெரிக்கப் பகுதியின் அருகே மோதியது. இந்த இயந்திரம் நாஜி பெல் போன்ற விசித்திரமான வடிவத்தை கொண்டிருந்தது, விரைவில் அமெரிக்க  இராணுவப் படைகளால் மீட்கப்பட்டது. பல சாட்சிகளும் இந்த விசித்திரமான நிகழ்ச்சியைக் கண்டனர். ஒருவேளை அது நாஜிகளிடம் களவாடிய பறக்கும் தட்டாக இருக்கலாம்!?

மேலும் அந்த இயந்திரம் அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தளங்களில், "ஆபரேஷன் பேப்பர் ஸ்லிப்" க்குள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டுள்ளது...

இலுமினாட்டி களும் கடல் வணிக அரசியலும்...


காவிரி கலவரத்தில் உயிர் நீத்த தமிழர்கள் நினைவு நாள்... 13.12.1991...


காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டதை எதிர்த்து கன்னட இனவெறியர்கள் கும்பல் கும்பல்களாக இணைந்து கொண்டு கையில் ஆயுதங்களை தூக்கியபடி  கன்னட வாழ் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் .

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். 

ஒரு இலட்சத்திற்கும் மேல் அகதிகளாக தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர்.

கன்னட  காமுகர்கள் வெறி கொண்டு தமிழ்ப்பெண்கள் பலரை பாலியல் வல்லுறவு கொண்டனர்.

தாலி அணிந்த பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

கோடிக்கணக்கான தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டன.

தமிழர் வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டன.

இலங்கையில் சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய சூலைக் கலவரத்திற்கு இணையாக  கன்னட இனவெறியர்கள் நடத்திய இந்த திசம்பர் கலவரத்தை குறிப்பிடலாம்.

கன்னட இனவெறியன் வட்டாள் நாகராஜ் என்பவன் முழு அடைப்பு என்ற பெயரில் தமிழர் மீது தாக்குல் நடத்த உத்தரவிட்டான்.

காங்கிரசு முதல்வர் பங்காரப்பாவோ ஒருபடி மேலாக காவல்துறை பாதுகாப்போடு தமிழர் மீது தாக்குதல் நடத்த தன் கட்சியினரை தூண்டி விட்டான்.

தமிழர் மீது கோரத்தாண்டவம் நடத்திய கன்னட வெறியர்கள் தண்டிக்கப்படவும் இல்லை.

தமிழர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்படவும் வில்லை. 

தமிழர்களாகிய நாம் இந்த கறுப்பு நாளை நினைவு கூறுவோம்..

கன்னட இனவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடி தமிழர் உயிரையும், உடைமையும் காக்க உறுதியேற்போம்...