ஆண்கள்னாலே தியாகிகள் தானே😏
19/11/2020
பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு...
பெரும்பாலான சோழியப் பார்ப்பனர் (முன்குடுமி) தமிழரே...
இவர்களே சங்ககாலப் பார்ப்பனர் (அதாவது ஆதித்தமிழர்)..
சோழியப் பார்ப்பனர் முக்கிய 5 பிரிவுகள் கீழ்வருமாறு..
1) தீட்சிதர் [சிதம்பரம் கோயிலைச் சுற்றி].
2) நம்பியார் [ஆவுடையார் கோவிலைச் சுற்றி].
3) பட்டர் [மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி].
4) ஆனைக்கா அந்தணர் (அய்யா நம்பி, திருண பட்டன், பட்டர்).
5) வீழி அந்தணர் [திருவீழிமிழலை கோயிலைச் சுற்றி].
இவர்கள் போக...
தென்கலை வைணவர் (நம்பி).
நயினார் [திருவாரூர்].
திருசுதந்திரர் [திருச்செந்தூர்].
சிவாச்சாரியார் [தமிழகம், ஈழம்].
குருக்கள் (ஐயர்) [மதுரை].
சோழியர் (ஐயர், ஐயங்கார்).
முக்கானி (ஐயர்) [திருச்செந்தூர்].
ஆகியோரும் தமிழினப் பார்ப்பனரே..
பிற வடமா பிராமணர் (பின்குடுமி) பெரும்பாலும் தமிழரல்லாதார்...
பிரகச்சரணம் (ஐயர்).
வாத்திமா (ஐயர்).
அஷ்டசகஸ்ரம் (ஐயர்).
கேசியர்.
வடகலை வைணவர்.
மத்தியானப் பறையர்.
பட்டஸ்ய.
வடமா (ஐயர்).
வடமா தீட்சிதர்.
நம்பூதிரி.
இவர்களில் வடகலை ஐயங்கார், பிரகச்சரணம், வாத்திமா, வடமா, அஸ்ட சகஸ்ரம் ஆகியவற்றில் சில தமிழ்ப் பிரிவுகள் உள்ளன..
அதாவது பிராமணரிலும் பார்ப்பனரிலும் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை.
(அதாவது உட்பிரிவுகளே உண்மையான சாதி.. உட்பிரிவில் கோத்திரம் என்பது திருமணம் செய்ய மட்டும். சிறுபான்மையான சாதி என்பதால் நெருக்கமான உறவுகள் திருமணம் செய்வதைத் தடுக்க இந்த முறை)
ஆனால் பல உட்பிரிவுகள் அவர்களின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு முக்கியப் பிரிவுக்குள் வருகின்றன.
மேற்கண்டவை அத்தகைய முக்கியப் பிரிவுகளே..
அதேபோல ஒரே பட்டத்தை வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.
சுருக்கமாகக் கூறினால்.. நம்பியார், பட்டர், குருக்கள் போன்ற பட்டங்கள் தமிழரைக் குறிக்கும்.
ஐயர், ஐயங்கார், தீட்சிதர், ஆச்சாரி, சாஸ்திரி போன்ற பட்டங்கள் பார்ப்பனரும் பிராமணரும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் யார் வடமா அல்லது வடகலை பிரிவோ அவர்கள் தமிழரல்லாதார்.
ஐயங்காரிலும் சாஸ்திரியிலும் பெரும்பாலும் பிராமணர்.
தீட்சிதரிலும் ஐயரிலும் பெரும்பாலும் பார்ப்பனர்.
தமிழக பூசாரி சாதிகளில் 65% பிராமணர். 35% மட்டுமே பார்ப்பனர்.
(இது ஆரம்பகட்ட ஆய்வு தான்.
பார்ப்பனர்களிலும் பிராமணர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. ஒரே உட்பிரிவினர் ஒரு இடத்தில் பார்ப்பனராகவும் வேறு இடத்தில் பிராமணராகவும் உள்ளனர்.
ஆக உட்பிரிவு தெரிந்தாலும் வாழ்விடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுபற்றி மேலும் தெரிந்தோர் கருத்துகளில் இடலாம்)...
தேங்காய் நண்டு....
மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள், இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படுகிறது. கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை நண்டுகள். இவற்றில் பல வகை இருந்தாலும் நாம் அறிந்திராத பார்த்திராத நண்டு வகையை சேர்ந்தது தேங்காய் நண்டு.
10 கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பைக் கொண்ட இவை இந்திய பெருங்கடல் மற்றும் பசும்பிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றை மக்கள் உணவாக உட்கொள்கின்றனரா என்பது புதிராக உள்ளது.
காரணம், இவற்றின் தோற்றம் பூச்சியை போன்று உள்ளதால் இதை நண்டு என்று பலரும் ஏற்பதில்லை. இவ்வகை நண்டுகள் கடலின் கழிவுகளையும், மரங்களில் வாழும் பூச்சிகளையும் உட்கொள்ளும்.
தென்னை மரங்களில் பதுங்கி வாழும் இவற்றின் பழக்கமே பிற நண்டு வகைகளிலிருந்து இவற்றை வேறுபடுத்துகிறது. இதனால் தான், ‘தேங்காய் நண்டு’ என இவ்வகை நண்டுகளுக்கு பெயர் ஏற்பட்டது. மரம் ஏறுபவர்கள் சில நேரங்களில் இந்த நண்டுகளை பார்த்து பயந்து கீழே விழுவதும் உண்டு. தேங்காய் நண்டுகளை பொறுத்த வரை பல வண்ணங்களில் காட்சியளிக்கும்.
சில இடங்களில் அவற்றின் வண்ணத்தை வைத்து வகை பிரிக்கின்றனர். ஆனால் இவை நிற பாகுபாடின்றி ஒன்றோடு ஒன்று கூடி இன விருத்தி செய்கின்றன. இவற்றை நண்டு என அறிந்தவர்கள் மட்டுமே பிரத்தியேகமாக தேடி பிடித்து உண்கின்றனர்.
இந்து சமுத்திரம் மற்றும் தென் பசிபிக் மகா சமுத்திரத்திர தீவுகளிலும் காணப்படும் நண்டு வகையில் ஒன்று தான் Coconut Crab. இதனை தமிழில் கொள்ளைக்கார நண்டு என அழைக்கின்றனர்.
எட்டுக் கால்களை உடைய இந்த நண்டு தென்னை மரங்களில் ஏறி தேங்காயை தனது பலம் பொருந்திய இடுக்கியால் (முன் இருக்கும் ஒரு சோடி கால்கள் – pincers) உடைத்துத் தின்று விடும்.
தனது இடுக்கியால் 29 கிலோகிராம் வரையான பாரத்தை தூக்கும் திறன் படைத்தது. இதன் உடலின் நீளம் 40 சென்டி மீட்டர் ஆகும். பொதுவாக பெண் நண்டை விட ஆண் நண்டு பெரிதாக இருக்கும். இதன் நிறை அன்னளவாக 4 கிலோகிரமுடையது.
இந்த கொள்ளைக்கார நண்டால் நீந்த முடியாது, நீரில் மூழ்கி விடும். ஆறு மீட்டர் உயரமுள்ள (தென்னை) மரங்களிலும் ஏறும் இந்த கொள்ளைக்கார நண்டு 30 தொடக்கம் 60 வரையான வருடகாலம் வாழக்கூடியவை...
பெரியாரும் திருட்டு திராவிடமும்...
சுயமரியாதை தன்மானம் என்று எவற்றை வரையறுத்தார் பெரியார். இதனால் தமிழர்களும் தமிழகமும் பெற்ற கல்வி அறிவூட்டல் என்ன..? பொருளாதார நன்மை என்ன..?
தமிழ் தேசிய உணர்வை இது எந்த வகையில் வளர்த்தது..?
ஏன் திராவிடத்தை தமிழகம் முதன்மைப் படுத்துகிறது..?
இதற்குள் தான் தமிழன் என்பவனின் இனத்துவ சுயமரியாதையும் தன்மானமும் அடங்கி இருக்கிறதா..? அப்படி என்றால் எந்த வகையில்..?
இந்த சுயமரியாதையும் தன்மானமும் 21ம் நூற்றாண்டில் தமிழர்களை தயார்படுத்தி 22ம் நூற்றாண்டில் எப்படி செயற்பட வைக்கப் போகிறது உலக அரங்கில்...? இதற்கு தமிழகத்தின் பங்கு என்ன..?
ஈழத்தில் தமிழ் தேசிய உணர்வோடு.. ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்க ஏன் தமிழகம் தயங்க வேண்டும்..?
இதற்கும் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் ஏதாவது தொடர்பை காண்பித்திருக்கிறதா தமிழகம்..?
தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் தானா..?
ஓரிரண்டு குரல்களைத் தவிர ஏனைய தமிழ்மக்களின் குரல் ஏன் நசுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தமிழீழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறது..?
இன்னும் இந்திய தேசியத்துக்கு அடிபணிந்து தானே உள்ளது தமிழகம். அப்படி இருக்க..
இந்த சுயமரியாதையும் தன்மானமும் எதைக் குறித்து எழுந்து நிற்கிறது. தமிழர்களின் திராவிட அடையாளம் குறித்தும் பார்பர்ன பிராமண இந்து சமய எதிர்ப்பு குறித்து மட்டும் தானா..?
ஏன் தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் இதர மதங்களை நோக்கி மக்களை அன்போடு வழி அனுப்பி வைக்கும் போது எங்கே போகின்றது இந்தச் சுயமரியாதையும் தன்மானமும் பகுத்தறிவும்.?
அது ஏன் இந்து சமயத்தை மட்டும் கண்டவுடன் இவை விழித்துக் கொள்கின்றன. மற்றைய மதங்களை ஏன் மென்போக்கோடு அணுகுகிறது.?
பகுத்தறிவுவாதிகள் எவராவது இறந்த மனிதன் ஏசு உயிர்த்ததற்கு சான்று கேட்டிருக்கின்றனரா..? அல்லா எங்கிருக்கிறார்.. அவருக்கு என்ன உருவம் என்பதற்கு சான்று கேட்டுள்ளனரா..?
அது ஏன் பகுத்தறிவு இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகள் சமயம் மட்டும் சார்ந்து தானா எழுந்துள்ளது. வேறு வகைகளில் இல்லையா.?
ஏன் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளில் மூடநம்பிக்கைகள் இல்லையா..? மத நம்பிக்கைகள் இல்லையா..? அவர்கள் ஏன் அறிவியலை ஊட்டுகிறார்கள்.. பகுத்தறிவு என்பதையும் சுயமரியாதை என்பதையும் தன்மானம் என்பதையும் உச்சரிச்சுக் கொண்டு மத எதிர்ப்பை சமூக எதிர்ப்பைச் செய்யவில்லை..?
அது ஏன் ஊருக்கு சொல்லும் சுயமரியாதை பகுத்தறிவை நீங்களும் உங்கள் குடும்பங்கள் மட்டும் கடைப் பிடிப்பதில்லை.. அனைத்தும் தொண்டனுக்கும் தமிழனுக்கும் மட்டும் தானா?
இப்படி பல தொடரான வினாக்களுக்கு நீங்கள் விடை கூறத் தயாரா..?
தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்...
தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல் வயிற்றுப் போக்கை சரிசெய்ய கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல், வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடியது..
எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.
இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது.
ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.
அருகம்புல்லை கொண்டு கண் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.
அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.
அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
பல்வேறு நன்மைகளை கொண்ட அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது.
கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.
வெள்ளைப்போக்கு, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.
அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்...
அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய். ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விட்டு சூடுபடுத்தவும்.
இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.
இது உடல் உஷ்ணத்தை குறைக்கும். வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கைகால் வீக்கத்தை போக்குகிறது.
மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும், வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆறும்.
எளிதில் நமக்கு கிடைக்க கூடிய அரும்கபுல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது...
கூடுவிட்டு கூடுபாயும் சித்துகளை பெற்றவருக்கு மரணம் இல்லை...
முன்னோர்கள் நம் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.
1) பரு உடல் 2) நுண்ணுடல் (astral body ) 3) காந்த உடல் ( causal body ).
1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது . பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.
2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும் நுண்அனுவாகும். அதுவே உயிர் என்றும் உயிராற்றல் என்றும் , உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது. உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம். உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.
3). காந்த உடல் என்பது நுண்ணிய இறைதுகளால் ஆனது. ஒவ்வொரு இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது. எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது . அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும் . சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும் அழைக்கிறோம். உயிரிலிருந்து. வெளியாகும் ஜீவ காந்த
ஆற்றலே இத்தனை வேலைகளையும் நடத்துகிறது.
கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?.
சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில் மனதை வைத்து தவம் செய்யும்போது கூடுவிட்டு கூடு பாயலாம்.
இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன் இரகசியத்தை அறிவது கடினம். உயிரை உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே போய்விட்டது.
யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு கூடு பாயும் செயல் தான். கூடுவிட்டு கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.
பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள் ஒன்றாக கருதபடுகிறது.
விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம். இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை. உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில் வலி உண்டாகிறது.
எல்லாம் நன்மைக்கே...
ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ஆங்கிலேயரோடு அனுகூலமாக வடக்கில் வியாபாரம் துவங்கிய போது. அந்த ஆங்கிலேயனை எதிர்த்து கப்பல் விட்ட ஒரே ஆள் வ.உ.சிதம்பரம் பிள்ளை...
இப்போது சூரைப்போற்று படத்தில் ஒரு வசனம் த்த்த்தா வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா என்பது போல அக்காலத்தில் கடலை தன் அப்பன் வீட்டு சொத்து போல கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனியை கதிகலங்க வைக்கும் விதமாக கப்பலை கடலில் விட்டு கெத்து காட்டிய தமிழன்..
நேரடியாக மோத முடியாது சூழ்ச்சியால் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவன கப்பலில் பயணம் செய்தால் சலுகைகள் என்ற இலவச அறிவிப்பு சூழ்ச்சி செய்து அன்று சிதம்பரம் பிள்ளையின் நிறுவனத்தை வீழ்த்தினார்கள் கடனாளியாக்கினார்கள்..
காந்தி, நேரு போன்ற மற்றோரெல்லாம் சிறையில் புத்தகங்கள் எழுத வ.உ.சி மட்டும் கோவை சிறையில் செக்கிழுத்தாரென்றால் வ.உ.சியின் வீரியத்தை ஆங்கிலேயன் எவ்வளவு தூரமுணர்ந்து அதை அடக்க முயன்றிருப்பான்..
ஆனால் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எல்லாப் புகழும் வடக்கிற்கே...
ஓபிஎஸ் சும் குடும்ப ஆட்சியும்...
தமிழகத்துக்கு ஒரு முக குடும்பம் ஒரு சசி குடும்பம் போதும்.. இனியும் தாங்காது தமிழகம்..
அதிகாரம் கட்டுப்பாடற்று கிடைக்கும் போது இந்த குடும்பமும் இன்னொரு மாபியாவகவே மாற வாய்ப்புள்ளது...
கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்...
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.
இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
வயிற்றில் வித்தியாசம் - உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.
குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு - வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.. ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.
பெண்டுலம் ட்ரிக் - உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.
எடை ஜாஸ்தியா இருக்கா - சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.. குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.
புளிப்பா? இனிப்பா - உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.. அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.
அதிக வாந்தியா - கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம்.
ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.. குறைவாக இருந்தால் பெண் குழந்தை என அர்த்தம்...
பிராண சிகிச்சை...
இச்சிகிச்சையளிக்கும் முன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல் சிகிச்சையின் போது தெரிவித்தல் வேண்டும். இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும்.
சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன. இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும். அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.
முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும். இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும்.
அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும் பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின் உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும், பிராணா கூடிய பகுதிக்கு தேவையற்ற பிராணாவை நீக்குவதன் மூலமும், ஒரு சம நிலையை உருவாக்கி, நோய்களை அந்தப் பகுதிகளில் குணப்படுத்துகின்றது.
இச்சிகிச்சை, அதனைப் பெறுபவரின் முழுச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலும் இதனைப் பெறுபவரின் மனம் இச்சிகிச்சையின் போது, இந்த அரிய சக்தியிலோ அல்லது இதனைச் செய்பவரின் மேலோ சந்தேகம் கொண்டால் இதனால் பயன் ஏற்படாது.
மேலும் மனதை ஒரு நிலையில் வைத்து அமைதியாக இச்சிகிச்சையின் தாக்கத்தை உணர்ந்து, அனுபவித்து, அந்த அனுபவத்தை இதனைச் செய்பவரிடம் தேவையெனில் தெரியப்படுத்துவதோடு நில்லாமல், மனத்தை சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அல்லது முற்றிலும் புறம்பான எண்ணங்களை மனதில் அலைய விட்டு, பிறவிடயங்களில் முக்கிய கண்ணாக இருந்து கொண்டால் இச்சிகிச்சையினால் பயன் கிட்டாது.
இதனைச் செய்பவருக்கும் அதிருப்தியையும் சோர்வையுமே உண்டாக்கும்.
சிலர் இச்சிகிச்சையின் தூய உயர் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இதனை ஒரு மனோ வசியம் அல்லது மாந்த்ரீகம் (மந்திரம்) சம்பந்தமானது என்று தாமும் ஐயம் கொண்டு, பலரையும் தடுமாற வைக்கிறார்கள்.
இது அவர்கள் இது பற்றி சரியான அறிவை, அல்லது தகவல்களைப் பெறாததாலும், அல்லது இச்சிகிச்சையினால் பலன் கிட்டாத சிலரின் கதைப் பரப்பலாலும் (gossip) ஏற்பட்ட விளைவேயன்றி இச்சிகிச்சையில் எந்தவித கெட்ட தன்மையும் இல்லை.
ஒரு வைத்தியரிடம் (medical doctor) எவ்வாறு முழுமையாக அவரை நம்பி சிகிச்சை பெறுகிறோமோ, அதே போல் இச்சிகி்ச்சையில், எம்மை ஆளும் ஒரு இயற்கைச் சக்தியிடமோ அல்லது அத்தகைய ஒரு பரம் பொருளிடமோ மனத்தளவிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.
அடுத்து இச்சிகிச்சையைச் செய்பவரிடமும், முழுமையான நம்பிக்கையை, அவர் அச்சக்தியை வழிப்படுத்தி நம்மில் நன்மையை, தன்னலமற்ற முறையில் இந்த அரிய சக்தியை தம்மூடே கடத்தி அதனைத் தகுந்தவாறு சிகிச்சை செய்பவருக்காக உபயோகப்படுத்துகிறார், என்பதையும் புரிந்து கொண்டு, மனப் பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.
இறைவன் ஒருவன் இருப்பதை நம்பாமல் இறை வழிபாடு அல்லது கோயில் வழிபாடு செய்வது போல், அல்லது வைத்தியரிடம் நம்பிக்கை வைக்காது அவரிடம் சிகிச்சை பெறுவது போல், அல்லது குருவின் அறிவை ஆற்றலை உணராது, மதிக்காது அவரிடம் பாடமோ, பயிற்சியோ பெறுவது போல் இப்பிராண சிகிச்சையின் போது, நம்பிக்கை வைக்காது சிந்தனையை அலைய விட்டால் பயன் கிடைக்குமா..?
திருட்டு கன்னட தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்...
வடக்கெல்லையை மீட்க தமிழ் நாட்டில் தீவிரமான மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது...
பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் திராவிட நைனா ராமசாமி நாயக்கர்...
என்ன ஒரு நரித்தனம் ?
அறிவாலயத்திலிருந்து கசிந்த தகவல்...
*காங்கிரஸ்-27*
*மதிமுக-6*
*கம்யூனிஸ்ட்கள் தலா 6 மொத்தம்-12*
*விடுதலை சிறுத்தைகள்-6*
*கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-3*
*இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக்-3*
*இந்திய ஜனநாயக கட்சி-3*
*மனித நேய மக்கள் கட்சி-3*
*கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம்-63*
*திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் -171...
I-PAC ன் இறுதி பட்டியல்...
காங்கிரஸ்......
1.மதுரவாயல்
2 ராயாபுரம்
3.நாமக்கல்
4.கோபிசெட்டிப்பாளையம்
5.உதகமண்டலம்
6.வேடசந்தூர்
7.திருச்சி ( கிழக்கு)
8.முசிறி
9.காட்டுமன்னர்கோவில்
10.நன்னிலம்
11.பட்டுக்கோட்டை
12.அறந்தாங்கி
13.காரைக்குடி
14.சிவகாசி
15.முதுகுளத்தூர்
16.வைகுண்டம்
17.நாங்குநேரி
18.விளவங்கோடு
19.கிள்ளியூர்
20.அம்பத்தூர்
21.மதுரை
22.விளாத்திகுளம்
23.வால்பாறை
24.ராதாபுரம்
25.மைலாப்பூர்
26.பூவிருந்தவல்லி
27.திருமயம்
பறிபோகும் சில்லறை வணிகம்; தன் முதலாளி அம்பானிக்கு வாரிக் கொடுக்கும் பாஜக மோடி அரசு...
ரிலையன்ஸ் சில்லறை வணிக நிறுவனத்தில் சவுதி அரேபிய நிறுவனம் சுமார் 9555கோடி மதிப்பில் 2.4% பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் பங்கு பதிப்பு 3.37% அதிகரித்ததோடு, அந்த நிறுவனம் கடந்த ஒராண்டுக்குள் சுமார் 4.587லட்சம் கோடி அளவுக்கு தனது நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்திருக்கிறது.
அத்தோடு ரிலையன்ஸ் ரிறுவனம் தொடர்ந்து சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அனைத்து நிறுவனங்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பியூச்சர் குரூப் என்ற சில்லறை வணிகத்தில் ( ஆன்லைன்) ஈடுபட்டுக்கொண்டிருந்த நிறுவனத்தின் அனைத்து கட்டுமானத்தையும் சுமார் 24,713கோடிக்கு வாங்கிவிட்டது. அந்த வரிசையில் நேற்று ’அர்பன் லேடர்’ என்ற ஆன்லைனில் பர்னிச்சர்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது.
ஒருபக்கம் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு அந்நிய நிறுவனங்களை உள்நுழைத்து அதன் மூலம் பெரும் பணத்தை திரட்டி, அந்த பணத்தைக் கொண்டு இந்தியாவிலுள்ள சில்லறை வணிகத்தில் ஈடுபடுகிற அனைத்து நிறுவனங்களையும் ரிலையன்ஸ் வாங்கி இந்தியாவில் இனி யார் எதை வாங்கினாலும் ரிலையன்ஸிடம் தான் வாங்க வேண்டுமென்ற ஒரு இக்கட்டான நிலையை உருவாக்கி வருகிறது.
இதற்கேற்றார் போல இந்தியாவை ஆளும் மோடி அரசும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, விவசாய பொருட்களை பெரிய முதலாளிகளிடம் மட்டுமே விற்க வைக்கும் வேளான் மசோதா என முதலாளிகளுக்கு இன்னும் சொல்லப்போனால் மார்வாடி சேட் பனியாக்களுக்கு சாதகமான சட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி இந்தியாவில் இருக்கும் பணத்தை மொத்தமும் பனியாக்களுக்கு போகிற வேலையை செய்கிறது.
இதை மறைப்பதற்கு பிஜேபி ஆர்.எஸ்.எஸ் போலியான ’இந்து’ மதவெறியை உருவாக்குகிறது. ஏதேனும் சாதாரண விழா வந்தால் கூட இந்துக்கள் கடையில் வாங்குங்கள் என்று இஸ்லாமியர்களை, கிருத்துவர்களை குறிவைத்து தாக்கும் இந்த இந்து வெறிக் கும்பல்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் அமேசான், பேஸ்புக், சவுதி அரேபிய நிறுவனம் என விற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பது ஏன்?
ஆக ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியை போல இந்தியாவை மறுபடியும் வியாபாரத்தின் மூலம் அடிமையாக்கும் வேலையை செய்யும் ரிலையனஸ் போன்ற பாராசூர கம்பெனிகளையும், அதற்கு சேவகம் செய்யும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கூலிகளான மோடி கும்பல்களையும் தூக்கியெறியும் இன்னொரு சுதந்திரபோருக்கு மக்கள் தயாராக வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு அடிமை வாழ்விற்கு நம்மை இந்த கும்பல்கள் இட்டுச் சென்றுவிடும்...
குறிப்பு...
1.https://theprint.in/economy/saudi-arabias-pif-invests-rs-95-55-billion-in-reliance-retail/537867/
தந்தையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சிறுமி...
ஒடிசாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான மதிய உணவிற்கான அரிசி மற்றும் பணத்தை அம்மாநில அரசு மாணவர்களின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறது.
இந்நிலையில் கேந்திரபாரா மாவட்டத்தின் டுகுகா கிராமத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி சங்கீதா சேத்தி மதிய உணவிற்காக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் பணத்தை தனது தந்தை வழங்க மறுப்பதாக கூறி அவற்றை மீட்டுத் தர வேண்டும் எனக்கோரி 10 கி.மீ நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மாவிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளார்.
சிறுமியின் துணிச்சலான இச்செயலை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்...
உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்...
முத்திரைகளின் அரசன் என்று கேசரி முத்திரையைச் சொல்வார்கள்.
அதைப்போல ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள்.
நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும் உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.
அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி. குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற கருத்தும் உண்டு.
குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.
பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.
குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர்.
பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு.
அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும்.
நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.
இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.
மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்
கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.
மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்தி தான் சித்தி எனப்படும்.
மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினி குண்டலினி என்பர்.
அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள்.
அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள்.
முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது.
அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.
யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.
அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான்.
இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ளது.
அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.
முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல.
அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும்...
திராவிட திருடர்களே பதில் சொல்லுங்கள்...
ஏன் தமிழரின் அடையாளத்தை அடகு வைத்து திராவிடத்தை புகுத்திய ஈ வெ ராமசாமி நாயக்கரை மட்டும் பகுத்தறிவுவாதியாக இனங்காணப்பட வேண்டும்...
மனிதன் நாகரிக அறிவை விட்டு விலங்குகள் போல புணர்ந்து வாழுதல் தானா மனித சமூகத்துக்கு பாதுகாப்பானது..?
திருமணம் பெண்களுக்கு அவசியமில்லை.. பிள்ளை பெறுவது கேடு என்றால்.. (திராவிட சொம்புகள் இதை ஏன் செய்யவில்லை)..
மனித இனம் உலகில் எப்படி நிலைத்திருக்கும்...
அடிப்படை உயிரியல் அறிவு கூட இல்லாத ஒரு முட்டாள் தனமான வாதத்தை பகுத்தறிவு என்று காட்டுவது வெட்கமாக இல்லையா..?
இதனால் மக்கள் என்ன அறிவூட்டலைப் பெறப் போகின்றனர்..?
நாகரிகம் தொலைத்த ஈ வெ எதிர்பார்த்த காட்டுமிராண்டிகளா தமிழர்களை ஆக்குவது தான் பகுத்தறிவின் நோக்கமா..?