19/11/2020

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ஆங்கிலேயரோடு அனுகூலமாக வடக்கில் வியாபாரம் துவங்கிய போது. அந்த ஆங்கிலேயனை எதிர்த்து கப்பல் விட்ட‌ ஒரே ஆள் வ.உ.சிதம்பரம் பிள்ளை...

 


இப்போது சூரைப்போற்று படத்தில் ஒரு வசனம் த்த்த்தா வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா என்பது போல அக்காலத்தில் கடலை தன் அப்பன் வீட்டு சொத்து போல கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனியை கதிகலங்க வைக்கும் விதமாக கப்பலை கடலில் விட்டு கெத்து காட்டிய தமிழன்..

நேரடியாக மோத முடியாது சூழ்ச்சியால் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவன கப்பலில் பயணம் செய்தால் சலுகைகள் என்ற இலவச அறிவிப்பு சூழ்ச்சி செய்து அன்று சிதம்பரம் பிள்ளையின் நிறுவனத்தை வீழ்த்தினார்கள் கடனாளியாக்கினார்கள்..

காந்தி, நேரு போன்ற‌ மற்றோரெல்லாம் சிறையில் புத்தகங்கள் எழுத வ.உ.சி மட்டும் கோவை சிறையில் செக்கிழுத்தாரென்றால் வ.உ.சியின் வீரியத்தை ஆங்கிலேயன் எவ்வளவு தூரமுணர்ந்து அதை அடக்க முயன்றிருப்பான்..

ஆனால் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எல்லாப் புகழும் வடக்கிற்கே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.