19/11/2020

பார்ப்பனர் - பிராமணர் வேறுபாடு...

 


பெரும்பாலான சோழியப் பார்ப்பனர் (முன்குடுமி) தமிழரே...

இவர்களே சங்ககாலப் பார்ப்பனர் (அதாவது ஆதித்தமிழர்)..

சோழியப் பார்ப்பனர் முக்கிய 5 பிரிவுகள் கீழ்வருமாறு..

1) தீட்சிதர் [சிதம்பரம் கோயிலைச் சுற்றி].

2) நம்பியார் [ஆவுடையார் கோவிலைச் சுற்றி].

3) பட்டர் [மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி].

4) ஆனைக்கா அந்தணர் (அய்யா நம்பி, திருண பட்டன், பட்டர்).

5) வீழி அந்தணர் [திருவீழிமிழலை கோயிலைச் சுற்றி].

இவர்கள் போக...

தென்கலை வைணவர் (நம்பி).

நயினார் [திருவாரூர்].

திருசுதந்திரர் [திருச்செந்தூர்].

சிவாச்சாரியார் [தமிழகம், ஈழம்].

குருக்கள் (ஐயர்) [மதுரை].

சோழியர் (ஐயர், ஐயங்கார்).

முக்கானி (ஐயர்) [திருச்செந்தூர்].

ஆகியோரும் தமிழினப் பார்ப்பனரே..

பிற வடமா பிராமணர் (பின்குடுமி) பெரும்பாலும் தமிழரல்லாதார்...

பிரகச்சரணம் (ஐயர்).

வாத்திமா (ஐயர்).

அஷ்டசகஸ்ரம் (ஐயர்).

கேசியர்.

வடகலை வைணவர்.

மத்தியானப் பறையர்.

பட்டஸ்ய.

வடமா (ஐயர்).

வடமா தீட்சிதர்.

நம்பூதிரி.

இவர்களில் வடகலை ஐயங்கார், பிரகச்சரணம், வாத்திமா, வடமா, அஸ்ட சகஸ்ரம் ஆகியவற்றில் சில தமிழ்ப் பிரிவுகள் உள்ளன..

அதாவது பிராமணரிலும் பார்ப்பனரிலும் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை.

(அதாவது உட்பிரிவுகளே உண்மையான சாதி.. உட்பிரிவில் கோத்திரம் என்பது திருமணம் செய்ய மட்டும். சிறுபான்மையான சாதி என்பதால் நெருக்கமான உறவுகள் திருமணம் செய்வதைத் தடுக்க இந்த முறை)

ஆனால் பல உட்பிரிவுகள் அவர்களின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு முக்கியப் பிரிவுக்குள் வருகின்றன.

மேற்கண்டவை அத்தகைய முக்கியப் பிரிவுகளே..

அதேபோல ஒரே பட்டத்தை வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்துகின்றனர்.

சுருக்கமாகக் கூறினால்.. நம்பியார், பட்டர், குருக்கள் போன்ற பட்டங்கள் தமிழரைக் குறிக்கும்.

ஐயர், ஐயங்கார், தீட்சிதர், ஆச்சாரி, சாஸ்திரி போன்ற பட்டங்கள் பார்ப்பனரும் பிராமணரும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் யார் வடமா அல்லது வடகலை பிரிவோ அவர்கள் தமிழரல்லாதார்.

ஐயங்காரிலும் சாஸ்திரியிலும் பெரும்பாலும் பிராமணர்.

தீட்சிதரிலும் ஐயரிலும் பெரும்பாலும் பார்ப்பனர்.

தமிழக பூசாரி சாதிகளில் 65% பிராமணர். 35% மட்டுமே பார்ப்பனர்.

(இது ஆரம்பகட்ட ஆய்வு தான். 

பார்ப்பனர்களிலும் பிராமணர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. ஒரே உட்பிரிவினர் ஒரு இடத்தில் பார்ப்பனராகவும் வேறு இடத்தில் பிராமணராகவும் உள்ளனர்.

ஆக உட்பிரிவு தெரிந்தாலும் வாழ்விடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுபற்றி மேலும் தெரிந்தோர் கருத்துகளில் இடலாம்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.