27/09/2017

அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்...


சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான்.

அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.

அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மந்த புத்தி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்கிறது, இந்த ஆய்வு.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டார்கள்.

600 முதல் 1526 கலோரிகள்,
1526 முதல் 2143 கலோரிகள்,
2143 முதல் 6000 கலோரிகள்

உணவு உட்கொள்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 3 பிரிவினரிடமும் ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது.

இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

2வது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர்.

3வது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர்.

அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.

இந்த வரிசையில் ஞாபக சக்தி குறைவு, மனச்சிதைவு போன்ற நோய்களும் ஏற்படும் என்று புதிய ஆய்வு சொல்கிறது.

வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல.

அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து.

எனவே மிதமான உணவை தினசரி 5 முறைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடே ஆரோக்கியமான வாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அப்போது உடலுக்கும் தீங்கு ஏற்படாது. ஞாபக சக்தியும் குறையாது...

மண்ணை சாப்பிடும் மக்கள்...



ஹைதி - அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு.

இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகிறார்களாம்.

ஹைதியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால் அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது.

கடைசியாக எப்போது சாப்பிட்டார்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே நினைவு இல்லை.

குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகிறார்கள்.

மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும்.

அடுத்தநாள் பட்டினி.

அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும்.

அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும்.

இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது.

பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண்கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள்.

இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கிறார்கள்.

விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹைதியை கடுமையாக பாதித்து இருக்கிறது.

சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடுகளையே நம்பி உள்ளனர்.

உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை.

விளை நிலங்கள் என்று எதுவும் இல்லை.

எல்லாமே பொட்டல் காடுகள் தான்.

எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்து விட்டார்கள்.

நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980 -ல் ஹைதியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது.

எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்தி கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது.

இதன் விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால் விலை தான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது.

போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் பொய், இறுதியில் பிச்சை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மண் கேக் சாப்பிட்டனர்.

இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர்.

இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக ஹைதி மாறி வருவது உலகிற்கு தெரியவந்து, மண்கேக் சாப்பிடும் செய்திகளும் படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறன...

பொருளாதாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால், இது போன்ற பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவையே...

பேய்களின் திருவிழா...


திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்..

இரவு திருவிழாக்களில் முக்கியமானது 'ஹேலோவீன்' என்பது..

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31 -ந் தேதி இரவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது..

கோடை முடியும் நேரம், பூமிக்கும் நரகத்துக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து விடும்.

எனவே பேய் பிசாசுகள் லோக்கல் சிட்டி பஸ்ஸில் பூமிக்கு வந்துவிடும் என்பது பண்டைய செல்டிக் மக்களின் நம்பிக்கை.

டவுன் பஸ் ட்ரிப்பில் சொந்தக்காரப் பேய்களும் வந்துவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

அந்த சொந்தக்காரர்களை தங்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக கூப்பிட்டு விருந்து வைப்பார்கள்.

கெட்ட ஆவிகளை வாசலிலேயே துரத்தி விடுவார்கள்..

மோசமான பேய்களை போலவே அன்றைக்கு மக்கள் மாறுவேஷம் போட்டுக் கொள்வார்கள்.

அட இது நம்ம ஆளுப்பா என்று கெட்ட ஆவிகள் ஏமாந்து, மனிதர்களை தேடி அடுத்த வீட்டுக்கு போகும்.

அங்கும் இப்படியே மனிதர்கள் வேஷம் போட்டிருப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு வீடாக அடைந்து ஏமாந்து மீண்டும் நரகத்துக்கே அந்த பேய் போய்விடும்.

அன்று விருந்துக்கு வரும் ஒவ்வொருவரும் டிராகுலா, வேம்பையர் என்று பதறவைக்கும் வேஷத்தில் அலறவைப்பார்கள்.

பூசணிக்காயில் பேய் உருவங்களை செதுக்கி உள்ளே லைட் போட்டு 'திகில் எபக்ட்' கொடுப்பார்கள்.

மண்டை ஓடு கேக், எலும்பு சாக்லேட், ரத்தக்கத்தி என்று இரவு சாப்பாடே மிரட்டலாக இருக்கும்.

ஒரு அறை முழுக்க பிளாஸ்டிக் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்திருப்பார்கள்.

செட்டப் கல்லறைகள், நகரும் நிழல் உருவங்கள் என்று ஆவிகளை அலறவைப்பார்கள்.

விருந்து முடிந்ததும் திகில் படங்களை பார்த்து கூட்டமாக பயப்படுவார்கள்.

கன்னிப் பெண்கள் 'ஹேலோவீன்' இரவு அன்று தனியறையில் லைட் எதுவும் போடாமல் கண்ணாடியை பார்த்தால் அதில் எதிர்கால கணவனின் முகம் தெரியுமாம்.

ஒரு வேலை கண்ணாடியில் மண்டை ஓடு தெரிந்தால் அவ்வளவுதானாம்.

திருமணம் எதுவும் நடக்காமலேயே அந்த பெண் இறந்து விடுவாளாம்...

இந்தியாவில் வாழ்வோர் அனைவரும் வெவ்வேறு தேசிய இனத்தவர் ஆவர்...


அவர்கள் நாடு அரசியல் ரீதியாக இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ளது அவ்வளவே..

அவர்களிடம் போய் இந்தியன் என்று என்றும் இல்லாத உணர்வைத் தூண்டி அதன்மூலம் ஆதரவு திரட்ட நினைப்பது மடத்தனம்..

ஆகவே தமிழரே நம் பிரச்சனை நம் நாட்டுப் பிரச்சனை அதாவது தமிழர் நாட்டின் பிரச்சனை..

இந்தியாவின் பிரச்சனை அல்ல..

அதாவது இந்தியா என்று எதுவும் நம்மைப் பொறுத்தவரை இல்லை..

நமது பிரச்சனைகளில் முதலில் நாம் முழுமையாக இறங்க வேண்டும்..

தமிழர் சந்திக்கும் பிரச்சனைகளை இன்னொரு தமிழரிடம் கூறிப் புரிய வையுங்கள்..

உலகம் முழுதும் உள்ளத் தமிழரை ஒன்று திரட்டுங்கள்.. அது தான் பலனளிக்கும்..

பிரச்சாரத்துக்காக வேண்டுமானால் பிற இனத்தவருக்கு அதுவும்  தகவலாகத் தெரிவிக்கலாம்..

அதை விட்டுவிட்டு நம்மினம் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு வேறொருவரை நம்புவது முட்டாள்த்தனம்..

ஈழத்திலே
காவிய நாயகனாம்
காக்கும் கடவுளாம்
கண் கண்ட தெய்வமாம்
ஒப்பாரும் மிக்காரும் எவருமிலா
நம் தேசியத்தலைவர் திரு.பிரபாகரன் கூறுவது போல..

நாம் ஒரு  ஆற்றல் மிக்க இனம்...

ஒரு வீரப்பனாரை தோற்கடிக்க மூன்று மாநிலக் காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ்  படை சேர்ந்து நாற்பது வருடம் முக்கினார்கள்...

ஒரு பிரபாகரனைத் தோற்கடிக்க சிங்கள காவல்துறை,  இராணுவம் , இந்திய இராணுவம்,உளவுத்துறை மற்றும்   32 நாடுகள் 30வருடம் முக்கினார்கள்...

ஒட்டு மொத்தத் தமிழனமும் எழுச்சி பெற்றால்   நம்மைத் தோற்கடிக்க உலகநாடுகள் என்ன அண்ட சராசரமும் ஆயிரம் ஆண்டுகள் முக்கினாலும் நடக்காது...

நாளை நம்மீது இந்தியா போர் தொடுத்தாலும் தொடுக்குமேயன்றி நமக்கு நீதி கிடைக்க வழிவிடாது இதுதான் கசப்பான உண்மை...

அதனால் மீண்டும் கூறுகிறேன்..

தமிழராக இணையுங்கள்..
தயாராக இருங்கள்..

நம் விடுதலை நம் கையில்...

ஆதார் இருந்தால் தான் இனி திருப்பதி லட்டு...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அறைகள், லட்டு பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனையொட்டி பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் குறைந்த விலையில் தங்கி செல்ல விடுதி அறைகள் உள்ளன.

இந்நிலையில், முறைகேடுகளை தடுப்பதற்காக தரிசன டிக்கெட், அறைகள் மற்றும் லட்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வெளிப்படையான சேவை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விதமாக, மென்பொருள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இளநீர்...


கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.

இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.

இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள் (ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.

இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்...

முடி உதிர்தல், இளநரை சரியாக....


கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா.... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்...

சிவலிங்கமும் உண்மையும்...


தமிழனின் அனைத்து அடையாளங்களும்  மறைக்கப்படுகிறது...

சில முதல் உதவி தகவல்கள்...


ஆஸ்த்துமா..

கடினமான மூச்சு, சத்தத்துடன் சுவாசம் விடுதல். மூச்சிழப்பு ஏற்படுதல், இருமல் வரலாம். மார்பு இருக்கமடைந்து சுவாசம் கடினமாதல், பேச முடியாமை, உதடு, முகம்-நீல நிறமாதல்.

சிகிச்சை..

சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீது முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். அவரிடம் உறிஞ்சும் மருந்து இருந்தால் ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி-வாயில் வைத்த 3 அல்லது 4 முறை உள்ளே உறியச் சொல்லவும்.

மருந்து ஏதும் இல்லையெனில் அல்லது மேற்சொன்ன முறையில் பலனில்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

மின்சாரம் தாக்குதல்..

சுவாசமும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு சுய நினைவு இழத்தல். மின்சாரம் நுழைந்த - வெளிப்பட்ட இடங்களில் தீக்காயங்கள்.

சிகிச்சை..

சுவிட்ச் தெரிந்தால் - அணைத்து விடவும். இல்லையெனில் மரக்கட்டை போன்ற மின்சாரம் புகாத பொருள்கொண்டு மின் இணைப்பிலிருந்து அவரைத் தொடாமல் அப்புறப்படுத்தவும். சுய நினைவு இழந்திருந்தால் - சுவாசமும் ரத்த ஓட்டமும் உள்ளதா? என்று கண்டறிந்து உடனே சி.பி.ஆர். கொடுக்க தயாராக இருக்கவும்.

தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை 10 நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால் மூடி கட்டுப் போடவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

நீரில் மூழ்குதல்..

சுவாசத்தடையும், உடல் குளிர்ந்து போதலாலும் உயிரிழக்க நேரிடும். தக்க பாதுகாப்பு முறைகளை கையாண்டு நீரில் மூழ்கியவரை வெளியில் கொண்டு வரவும். தரையில் இரண்டு கால்களுக்கு இடையில் குப்புற படுக்க வைக்கவும். உங்கள் இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில் தூக்கவும்.

இரண்டு, மூன்று தடவைகள் அவ்வாறு தூக்கி இறக்கினால் நீரும் தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும். பிறகு அவரை மல்லாந்து படுக்க வைத்து, வாய், நாசிதுவாரங்களை சுத்தம் செய்து, சி.பி.ஆர். முறையைக் கையாளவும். அருகில் உள்ளவர்கள் ஈரத்துணிகளை கழற்றி எடுத்து விட்டு உலர்ந்த துணியால் கீழும் மேலும் முழு உடலையும் சுற்றி வைக்கவும்.

மூச்சுக் குழாய் வழியாக நீர் செல்லும்போது அவை பாதிக்கப்பட்டு வீக்கமடைந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பிறகு, சுவாசக் குழாயை அடைத்து தடையை உண்டாக்கும். ஆகவே அவரை மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்தப் பின் சேர்க்க வேண்டும். நீரில் மூழ்கி சுயநினைவு இழந்தவர்கள் அவசியம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும்.

எலும்பு முறிவு..

பாதிக்கப்பட்ட இடத்தில் வலி (முக்கியமாக அசை ஏற்பட்டால்) சில நேரங்களில் உருமாறி, வீக்கமும் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு உண்டாகியிருக்கும். அசைவுகள் பாதிக்கப்பட்டு, எலும்பு அசைந்தால் தாங்க முடியாத வலி உண்டாகும்.

சிகிச்சை..

அசைவு கொடுக்காமல் இருக்கச் சொல்லவும். உடைந்த எலும்புக்கு மேலும் கீழும் உள்ள மூட்டுகள் அசையா வண்ணம் ஆதரவு கொடுத்து கட்டு போடவும். மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும்.

கீழ்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் சிம்புகள் வைத்து கட்டு போடவும். முக்கியமாக இரு கால்களையும் பாதங்களையும் சேர்த்து வைத்து 8 வடிவகட்டு போடவும்.

சுளுக்கும் - சதை பிடிப்பும்..

வலி, மூட்டின் அசைவுகள் குறைந்தும், வீக்கம், ரத்தக்கட்டு ஏற்படும்.

சிகிச்சை..

ஆர்.ஐ.சி.இ. ஆர்-ஓய்வு, ஐ-பனிக்கட்டி, ஈரத்துணி, சி-அழுத்தமான கட்டு, இ-உயர்த்திப் பிடித்தல். பாதிக்கப்பட்ட இடத்திலுள் இருக்கமான ஆடை, காலணிகள் எடுத்து விடவும். அந்த இடத்தின் மீது அதிக பளுவு தாங்கும்படியாக வைக்க வேண்டாம். ஓய்வு கொடுக்க வேண்டும்.

பனிக்கட்டி ஒரு துணியில் சுற்றியோ அல்லது ஈரத் துணியோ வீக்கத்தின் மீது வைத்து இறுகக்கட்டு போடவும். அதிகமாக இறுக்க வேண்டாம். உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும்.

மருத்துவ உதவிக்கு நாடவும். கை, கால் வலிப்பு (காக்காய் வலிப்பு)..

கை, கால்கள், உடலும் முறுக்கினால் போல் இருக்கும். குழப்பம், கை கால்கள் வலிப்புடன் அசைந்து காணப்படும், சுவாசம் முரடாக இருக்கும்; பற்களை கடித்துக் கொண்டு சில நேரங்களில் நாக்கும் கடிபட்டு இரத்தம் சேர்ந்து நுரை கலந்த எச்சில் வெளிப்படும்; சுயநினைவு இழந்தும் காணப்படுவார்கள்.

சிகிச்சை..

கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த தலையில் அடிபடாமல் படுக்க வைக்கவும். தலைக்கடியில், கை, கால்கள் அசையும் போது தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்படாமல் இருக்க துணிகளைப் போடவும். அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள் படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவைகளை அப்புறப்படுத்தவும். கை, கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம்.

கழுத்தில் மார்பில் உள்ள துணிகளை தளர்த்தி விடவும். வலி நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து, சுவாசமும் இரத்த ஓட்டமும் இருந்தால் அவர்களை மீட்பு நிலையில் படுக்க வைக்கவும் பற்களுக்கு இடையில் எதையும் வைக்க முயல வேண்டாம்.

பக்கவாதம்..

மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டாலோ அல்லது ரத்தம் அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் பரவி அமுக்குதல் ஏற்படும். முகத்தில் வலுவிழந்த நிலை (சிரிக்க முடியாமை), கை, கால்களில் சோர்வு, நாக்கு குழறுதல்-பேச்சில் குழப்பம், தள்ளாட்டமுடன் நடை, கண்களில் பார்வை பாதிப்பு, தாங்க முடியாத தலைவலி, போன்றவை ஏற்படும்.

சிகிச்சை..

இந்த அறிகுறிகள்- தெரிந்தவுடன்-நேரத்தை குறித்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். வாயில் வரும் எச்சில் போன்றவற்றை துடைத்து விட்டு தலையை உயர்த்தி தலையணை மீது படுக்கவைக்கவும். டோலியில் எடுத்துச் செல்லவும்.

இதயக் கோளாறுகள்..

மார்பு வலி:- மார்பின் அடிபாகத்தில் பிழிவது போன்ற வலி எடுத்து அது மேல் நோக்கி பரவுது போல் தெரியும்- தாடை- கைகள் வழியாக வலி, நடுக்கம் கைகளில் எடுக்கும். சுவாசமும் கடினமாகும். திடீரென்று வலு விழந்தது போல் தோன்றும்.

மேல் மூச்சு வாங்கும். சிகிச்சை:-உடனே உட்கார வைத்து கழுத்து மார்பு, இடுப்பிலுள்ள துணிகளை தளர்ச்சி நிதானமாக ஆழ்ந்த மூச்சு வாங்கும்படி சொல்லவும். தைரியம் சொல்லி ஆசுவாசப்படுத்தவும். அவரிடம் ஏதாவது மாத்திரை இருந்தால் நாக்குக்கு அடியில் வைத்து சாரினை உறிஞ்சும் படி சொல்லவும்.

அல்லது ஆவியாக இரசாயன கலவை இருந்தால் அதனை உறிஞ்சச் சொல்லவும். ஓய்வுக்குப் பின் வலிகுறைந்தால் அவர் செய்து கொண்டிருந்த வேலைகளை நிதானமாக செய்யச் சொல்லவும். மறுபடியும் வலி உண்டானால் மருத்துவரை நாடவும்.

இதயத்தில் திடீரென்று கோளாறு..

அடிப்பாகத்தில் பிழிவது போன்று எடுக்கும் வலி நேரமாக அதிகரித்துக் கொண்டே போகும். இடது தாடை-இடது கை, சில நேரங்களில் வலது பக்கமாக ஓடுவது போல் தோன்றும். மார்பு இறுக்கமடைந்து சுவாசம் விடுவது கடினமாகும். மயக்கமும் தலைசுற்றலும் ஏற்படும்.

தனக்கு ஏதோ ஆபத்து நிகழ இருக்கென்ற அச்சம் உண்டாகும். முகம் வெளுத்து, உதடுகள் நீலமாக காணப்படும். வழுவிழுந்த, ஒழுங்கீனமான வேகமான நாடி; அதிக அளவு வியர்த்து கொட்டுதல்; காற்றுக்கு கதறுவது போல் ஆழ்ந்த சுவாசம், குழப்பம்-கை, கால், விரல்களிலிருந்து குளிர்ந்து கொண்டே இதயம் நோக்கி வரும். குமட்டல், வாந்தி உண்டாகும் கைகள் நடுங்கும்.

சிகிச்சை..

மருத்துவ ஊர்திக்கு அழைப்பு கொடு; அவரிடம் ஏதாவது மருந்து இருந்தால் உடனே கொடுக்கவும். தைரியம் சொல்லி ஊக்கம் அளிக்கவும் ஓய்வு எடுக்கச் சொல்லவும்.

பின்புறமாக சாய்ந்து உட்கார வைத்து கழுத்து, மார்பில் உள்ள துணிகளை தளர்த்தவும், முட்டியை மடக்கி தொடைகளுக்கு அடியில் தலையணைகளை வைக்கவும். மருந்து ஏதும் இல்லையெனில் ஒரு ஆஸ்பிரின் (300கிராம்) மாத்திரை அவர் நாக்குக்கு அடியில் வைத்து உறிஞ்சி சாரை விழுங்கச் சொல்லவும். ஊர்திக்கு செல்ல நடக்காமல் உட்கார வைத்து எடுத்துச் செல்லவும். ஊர்தியினுள் சாய்ந்து உட்கார்ந்தபடியே அழைத்துச் செல்லவும்.

நாய்கடி..

வெறி நாய் எச்சலில் ``ரேபிஸ்'' என்ற மிகச் சிறிய கிருமிகள் மனித நரம்பு மண்டலத்தையும் மூளையினையும் தாக்கி உயிரை போக்கக் கூடிய சக்தி கொண்டது.

சிகிச்சை..

கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த காயங்கள் இருந்தால் அதன் மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவும்.

நாயை கால் நடை மருத்துவமனையில் ஒப்படைத்தால் அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன் மூளையை சோதித்து ``ரேபிஸ்'' தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும்.

நாசியிலிருந்து ரத்த ஒழுகல்..

வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல் உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற காரணங்களினால் மூக்கின் முன் பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும்.

சிகிச்சை..

உடனே உட்கார வைத்து தலையை முன்பக்கமாக குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். பேசுவது, விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மூக்கெலும்பின் கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10 நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். மீண்டு ஒழுகல் ஏற்பட்டால் மருத்துவரை நாடவும்.

நீரிழிவு வியாதி..

சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி.

சிகிச்சை..

மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்.

சர்க்கரை குறைந்து விட்டால்..

வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம்.

சிகிச்சை..

உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம்....

தமிழன் டா...


தேங்காயின் மருத்துவக் குணங்கள்...


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.

இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.

விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.

இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.

சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.

சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்...

மருத்துவமனையில் ஜெயலலிதா 3 வது நாள் திராட்சை சாப்பிட்டதை என் கண்ணால் பார்த்தேன் - தீபக் பேட்டி...


தமிழ்நாடு தமிழர்க்கே என்று குரல் கொடுத்த கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர், பின் ஏன்யா திராவிட நாடு திராவிடர்க்கே என்று குரல் கொடுத்தார்?


டி.எம். நாயரும், தியாகராய ரெட்டியாருடைய மனதில் அப்பவே தமிழனை ஒழித்துக்கட்ட வேண்டும் என தோன்றிவிட்டது, அதை நான் முழு மூச்சாக எடுத்து நடத்தப் போகிறேன் என்கிறார் போல..


நல்லா கேட்டுக்குங்க மக்களே நாயர், ரெட்டியார், பலீஜா நாயுடு இந்த மூன்றும் சேர்ந்துதான், தமிழனுக்கு தனிநாடு வாங்கித்தர போராடியவர்கள்..

இவர்களுடைய பிராமண எதிர்ப்பின் யோக்கியதை இதுதான்..


இன்று இந்த நாயர், ரெட்டி, நாயுடு மூன்றும்தான் பிராமணியத்தோடு கொஞ்சி குழாவுகிறது.

தமிழ்நாடு தமிழருக்கே என்று இந்த கன்னட ராமசாமி நாயக்கர் சொன்னதை நன்றாக படித்து சிந்தித்தால் இதிலுள்ள சூச்சமம் நன்றாக தெரியுமடா முட்டாள் தமிழா...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-24...


பெவர்லி ரூபிக்கின் ஆராய்ச்சிகள்..

டாக்டர் ஓல்கா வோரால் ”பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம்.” என்று கூறிய முடிவுக்கே பெவர்லி ரூபிக்கும் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் வந்தார். உயிர்வாழும் அனைத்திலும் மின்காந்த அலைகளை ஒத்த சக்தி சூழ்ந்து இருப்பதை அவரால் அறிய முடிந்தது.

உயிர்களை சூழ்ந்துள்ள மின்காந்த வெளிச்சக்தியில் சிறிது கூடினாலும் அது மிகப் பெரிய பலன்களைத் தருவதாக உள்ளது. ”Salamander என்ற ஒரு உடும்பு வகைப் பல்லி தன் முழுக் காலை இழந்தாலும் குறுகிய காலத்தில் அதைத் திரும்ப வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அதையே ஒரு தவளையால் இழந்த காலை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. அதற்குக் காரணம் அந்த இரண்டு விலங்கு வகைகளின் உடல்களைச் சூழ்ந்துள்ள மின்காந்த வெளியில் உள்ள சில மில்லிவால்ட் சக்தி வித்தியாசம் தான்” என்பதையும் பெவர்லி ரூபிக் 2000 ஆம் ஆண்டு வெளியிட்ட தன் ஆராய்ச்சி முடிவுகளில் கூறினார். மனிதர்களின் மின்காந்தவெளி குறித்து பல ஆராய்ச்சியாளர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மனிதனைச் சுற்றியும் மின்காந்தவெளி உள்ளதென்றும் SQUID என்ற கருவிகள் மூலம் அவற்றை அளக்க முடிகிறதென்றும் முன்பே ஜான் சிம்மர்மன் (John Zimmerman) போன்ற அறிஞர்களின் ஆராய்ச்சியில் வெளியாகி இருந்தது. மனித உடலிலேயே மிக அதிக மின்காந்த அலைகளை வெளிப்படுத்தும் உறுப்பாக இதயத்தைக் கண்டு பிடித்திருந்தார்கள். அடுத்ததாக அதிகாலையில் விழித்தவுடன் கண்களும் மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகிறதாம். அதிசயமாக மனித மூளை தான் மிகக் குறைந்த மின்காந்த அலைகளை வெளிப்படுத்துகின்றன என்கின்றன ஆராய்ச்சிகள். அதை விட தசைகள் கூட தங்கள் செயல்பாடுகளின் போது அதிக மின்காந்த சக்தியை வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள்.
ஜான் சிம்மர்மன் SQUID கருவியை உபயோகித்து மற்றவர்களின் நோய்களைக் குணப்படுத்தும் சக்திபடைத்தவர்களின் கைகளில் இருந்து அச்சமயத்தில் 7 முதல் 8 ஹெர்ட்ஸ் மின்காந்த சக்தி வெளிப்படுவதாகக் குறித்துள்ளார்.

எல்மர் க்ரீன் என்ற ஆராய்ச்சியாளர் சக்திகள் படைத்த குணப்படுத்தும் நபர்களை செம்பாலான தகடுகள் பதிந்த ஆராய்ச்சி அறைகளில் இருத்தி செய்த ஆராய்ச்சிகளில் சில சமயங்களில் நூறு வால்ட்ஸ் வரை சக்திகள் வெளிப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அது போல டான் விண்டர் (Dan Winter) என்ற ஆராய்ச்சியாளர் மரங்களின் கீழ் அமர்ந்து செய்யும் தியானங்களின் போது வெளிப்படும் சக்திகள் குறித்து பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

இது போன்ற பலருடைய ஆராய்ச்சிகளையும் பற்றிக் கூறும் அவர் ஃபாரடே கூண்டுகள் extra low frequency (ELF) என்று கூறப்படும் ஒரு நொடிக்கு 300க்கும் குறைவான அலைகளை வெளிப்படுத்துவனவாக உள்ள சக்திகளைத் தடை செய்வதில்லை என்றும் ஆழ்மனசக்திகளின் ஃபாரடே கூண்டு ஆராய்ச்சிகளின் போது அப்படிப்பட்ட அலைகள் தான் வெளிப்பட்டு அதிசயங்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும் என்றும் கருதுவதாகக் கூறினார். அந்த அளவு குறைந்த அலைவரிசை சக்திகள் உண்மையிலேயே சக்திவாய்ந்தனவாக இருப்பதாக அவர் கருதினார்.

இரண்டு புத்தகங்களையும், சுமார் அறுபது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ள பெவர்லி ரூபிக் பல அறிவியல் கருத்தரங்கங்களிலும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன் ஆராய்ச்சிகள் குறித்து பேசியிருக்கிறார். அமெரிக்காவின் பிரபல டெலிவிஷன் நிகழ்ச்சியான “Good Morning America” (ABC-TV)யில் டிசம்பர் 2000ல் அவர் ஆழ்மன ஆராய்ச்சிகள் பற்றிப் பேசிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

ஆழ்மன சக்திகளின் பிரம்மாண்டம் தன்னை பெரும் வியப்பில் ஆழ்த்துவதாகக் கூறும் பெவர்லி ரூபிக் இந்த ஆராய்ச்சிகளில் இருக்கும் சிக்கல்களையும் ஒத்துக் கொள்கிறார். இந்த ஆராய்ச்சிகள் வியப்பில் ஆழ்த்துகிற முடிவுகளைத் தெரிவித்தாலும் இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஒன்று போலவே இருப்பதில்லை என்கிறார் அவர். விஞ்ஞானம் எத்த்னை முறை ஒரு ஆராய்ச்சி செய்தாலும் அது ஒரே மாதிரியான முடிவைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கையில் இந்த ஆராய்ச்சிகள் அது போன்ற ஒரே முடிவைத் தருவதில்லை என்பதுவே யதார்த்தமான உண்மையாக இருப்பதாகச் சொல்கிறார். ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் சக்தி வாய்ந்த மனிதர்களின் மனநிலை, தயார்நிலை போன்றவை அடிக்கடி மாறுவதால் இந்த ஆராய்ச்சிகளில் ஒரே விளைவைத் தரத் தவறுகிறது என்று கருத இடமிருக்கிறது என்கிறார் அவர்.

இன்றும் எத்தனையோ ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆராய்ச்சிகள் குறித்து ஓரளவு விளக்கமாகவே பார்த்து விட்டதால் அவற்றை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இனி ஆழ்மன சக்தியின் வகைகளையும், அந்த சக்திகளால் அற்புதங்கள் எப்படி சாத்தியமாகின்றன என்பதையும், அந்த ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதையும் விளக்கமாகக் காண்போமா?

மேலும் பயணிப்போம்.....

அதிமுக விஞ்ஞானிகள்...


டாட்டா பிர்லா தெரியும்.. அம்பானிங்களைத் தெரியும். ஏன் புதிய அவதாரம் அதானிய கூட தெரியும். நம்ம ஊரு முருகப்பாவைத் தெரியுமா?


தமிழகத்தின் முன்னணித் தொழில் நிறுவனமான முருகப்பா குழுமத்தின் தலைவர் M.V.முருகப்பன் தமது 81-ம் வயதில் கடந்த செவ்வாய் (செப்-19) இரவு காலமானார். காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூரில் பிறந்த அவர், இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்.

1900-மாவது ஆண்டில் அவங்க தாத்தா A.M.முருகப்பச் செட்டியார் பர்மாவில் உள்ள அவங்க மாமாவோட வட்டிக்கடையில் தமது 14-வது வயதில் தொழில் கற்றுக்கொள்ள சென்றவர். பின்பு தாமே தனியாக தொழில் செய்ய ஆரம்பித்து, மலேசியா, வியட்நாம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் கிளை பரப்பி நன்றாக வளர்ந்து வந்த நேரத்தில்... 1941-ல் பர்மாவை ஜப்பான் ஆக்கிரமிக்க... தமது வியாபாரத்தை தாய்த் தமிழகத்துக்கு மாற்றினார். அவருக்குப் பின் அவரது தனயன் வெள்ளையன் செட்டியார்... அவருக்குப் பின் இந்த M.V.முருகப்பா என தமிழகத் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் இந்தக் குழுமம் தமது பங்களிப்பை நிறைவேற்றி வருகிறது.

சென்னையில்... 1949-ல் TI சைக்கிள் கம்பெனி ஆரம்பித்த அவரது குழுமம்,

1954-ல் கார்போரண்டம் யுனிவர்சல் இந்தியா லிமிடெட் என்ற புகழ்பெற்ற தொழிற்சாலையையும்...

1971-ல் கோரமண்டல் சிமென்ட் தொழிற்சாலையையும் நிறுவியதுடன்...

1981-ல்... 150-ஆண்டுகள் பழமை வாய்ந்த வெளிநாட்டு நிறுவனமான EID-Parry நிறுவனத்தையும் கைப்பற்றியது.

இதனால் தமிழகத் தொழில் துறையில்
கட்டுமானத் தொழில், உரம், பூச்சி மருந்து, சுகர் மில், இனிப்பு வகைகள், சிமெண்ட், சைக்கிள், டெக்ஸ்டைல், ரப்பர் இன்டஸ்ட்ரி, இன்ஸ்யூரன்ஸ் எனப் பல்வேறு தொழில் துறைகளில் கால் பதித்து முன்னணி தொழிலதிபராக திகழ்ந்தவர்.

சென்னை parry's கார்னர் அனைவரும் அறிந்த பிரபலமான இடம். அது இவர்களுடைய இடம் மற்றும் நிறுவனத்தின் பெயரால் தான் அழைக்கப்படுகிறது.

சென்னை தொழில் வர்த்தக சபைத் தலைவர், இந்திய தொழில் மற்றும் வர்த்தகர் சபை கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த இவரோ அல்லது இவர்களது குழுமமோ குஜராத்திஸ் அதானி - அம்பானிகளைப் போல் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டதில்லை. Business ethics-லிருந்து விலகியதில்லை. எனவே நம்மில் பலரும் இக்குழுமத்தை அறிந்திருக்கவில்லை.

முருகப்பா குழுமத்தின் தலைவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்...

கூட்டுச்சதி செய்து நம்மை முட்டாளாக்கிய கதை...


புளியம்பழ மருத்துவம்...


புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை.

குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.

அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.

எகிர் வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது...

இலுமினாட்டி கமல் கலாட்டா...


எனது நிறம் காவியாக இருக்காது..
ஆனால் கருப்புக்குள் காவியும் அடங்கும்...

அன்று முதல் இன்று வரை அரசியலில் தலைவனாவது எப்படி? இது தான் அந்த இரகசியம்...


நீ ஒரு தனிமனிதன்.

உனக்கு ஆளும் விருப்பம் வந்துவிட்டது.

நீ ஆள மக்கள் வேண்டும்.

குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடு.

அவர்கள் மதம்,இனம்,சாதி, ஊர், வரலாறு, பண்பாடு என அனைத்தையும் அலசு.

இதில் எது அவர்களிடம் நன்கு வேறூன்றியிருக்கிறது என்று ஆராய்.

அதைக் கையிலெடு.

அவ்வுணர்வுக்கு எதிரான பிரச்சனைகள், தடைகளை எதிர்த்துப் போராடி அவ்வுணர்வை மேலும் தூண்டு.

உன் பின்னால் ஒரு கூட்டம் வரும்.
உன் வலிமை கூடும்.

அவ்வுணர்வுள்ள மக்களுக்காக ஒருவன் போராடி மடிந்திருப்பான் அவனை அறிந்துகொள்.

அவனின் வாரிசாக மாறு.

உன் மீது விமர்சனங்கள் வரும்.

கருத்தியல் ரீதியான விமர்சனங்களை உன் தலைவனின் பிம்பத்தால் உடை.

நடைமுறை எதிர்ப்புகளை உன் வலிமையால் உடை.

பாதிவாழ்நாள் கழிந்ததும் கிடைத்த நாற்காலியில் அமர்.

கடந்த காலத்தைச் சொல்லியே சுகமாக வாழு.

பணம், புகழும், இல்லமும் தளைக்க நல்லசாவு பெறு.

பத்து தலைமுறைகளுக்கு சொத்தும்.
ஐந்து தலைமுறைக்கு உன் பெயரும் எஞ்சியிருக்கும்...

காவிரிக் கலவரத்தை தட்டிக்கேட்ட அண்ணன் வீரப்பனார்...


1991 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி.

வீரப்பனார் தமது தம்பி அர்ச்சுணனிடம் காவிரியைக் கடக்க பரிசல் ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தார்.

இரண்டு நாட்களாகியும் அர்ச்சுணன் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை.

வீரப்பன் தமது தம்பியிடம் இது பற்றி விசாரித்தார்.

அர்ச்சுணன் தயங்கித் தயங்கிக் கூறினார்.

அண்ணே காவிரியை தமிழ்நாட்டுக்குத் தெறந்துவிட கர்நாடகா மறுத்துட்டதாம்.

கர்நாடகாவுல இருக்குற தமிழ்க் கிராமத்துலல்லாம் ஒரே கலவரமாம்.

நம்ம  மக்களோட சொத்துபத்த கொள்ள அடிச்சுட்டு விரட்டுதானுவ.
அதான் பரிசலுக்குத் தட்டுப்பாடு.

வீரப்பன் குதித்தெழுந்தார்..

மடையா இத ஏன் நீ மொதல்லயே சொல்லல? என்று கடிந்து கொண்டே விருட்டென்று தன் துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டார் அவருடன் இருந்த தளபதிகள் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டனர்.

அப்போது அர்ச்சுணன் அண்ணே அண்ணிக்கு பிரசவமாகுற நேரம்.
நீங்க இங்க இருக்குறது ரொம்ப முக்கியம்.

சேதி தெரிஞ்சா நீ புறப்புட்டுருவனு தான் சொல்லாம இருந்தேன் என்றார்.

அதற்கு வீரப்பன் சரி நீ இங்கயே இரு. மத்தவங்க என்னோட வாங்க என்று கூறிக்கொண்டே வேகமாக ஆற்றங்கரைக்கு ஓடினார்.

அவரது தளபதிகளும் பின்தொடர்ந்து ஓடினர்.

ஆற்றங்கரைக்கு வீரப்பன் வந்ததும் எதிரில் தமிழ் மக்கள் தமது வீடு நிலமெல்லாம் விட்டுவிட்டு கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டு பரிசலில் கண்ணீர் சிந்திய முகத்தோடு கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

அங்கு ஓடோடிச் சென்ற வீரப்பன் அவர்களிடம் என்ன இது? எப்படி ஆச்சு? என்று வினவினார்.

அந்த மக்கள் காவிரில தண்ணி தெறந்து விடனும் கேட்டதுக்கு. நம்ம பங்கு தண்ணீரையும் குடுக்காம இந்தக் கன்னடனுங்க, இங்க காலங்காலமா வாழுற எங்கள எல்லாத்தையும் புடுங்கிட்டு வெரட்டுறானுவ.

தட்டிக் கேக்க யாருமில்ல என்றார் ஒருவர்.

இன்னொருவர் கன்னட வனத்துறையும் போலீசும் இதுக்கு உடந்தை.

பெங்களூர்ல கலவரம் நடந்து நம்ம மக்கள கொன்னுட்டானுவ.

மஞ்சள் கயிறு தாலிய வச்சு அடையாளம் கண்டுபிடிக்கிறானுக.

அடி, உதை, கொள்ளை தான்.

காலங்காலமா இதுதான் நடக்குது என்றார் இன்னொரு தமிழர்.

வீரப்பன் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார்...

யார் இத தூண்டிவிடுறது? என்று மீசையை முறுக்கியபடி கேட்டார்..

ஒரு கட்சியா ஒரு டிபார்ட்மென்டா எல்லாரும் சேந்துதான் செய்றானுவ.

மத்த மாநிலத்தோடயும் தண்ணி பிரச்சன இருக்கு.

ஆனா, தமிழன்னா மட்டும் அடிக்கிறானுக. கேக்க நாதியில்ல பாரு.

இதுல மட்டும் ஒத்துமையா இருக்கானுக என்றார் ஒரு தமிழர்.

ஏன் இல்லை இந்த வீரப்பன் இருக்கான் என்று உறுமியபடி பரிசலில் ஏறி தமது தளபதிகளுடன் அக்கரைக்குப் போனார்.

அக்கரையில் தமிழரை விரட்டி அவர்கள் வெளியேறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கன்னடவர், ஆற்றங்கரையில் 20, 25 பேர் வீரப்பன் தலைமையில் கண்களில் கொலை வெறியுடன் பரிசலில் இருந்து துப்பாக்கிகளைப் பிடித்தபடி இறங்குவதைப் பார்தததுதான் தாமதம், காலியான அந்த தமிழ்ச் சிற்றூரில் வீடுகளுக்குள் கன்னடர்கள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.

மற்றவர் தலைதெறிக்க ஓடினர்.

தமிழர் வெளியேறக் கெடுவிதித்த கர்நாடக வனத்துறை காணாமல் போய்விட்டிருந்தது.

ஊருக்குள் நுழைந்த வீரப்பனார்
எவன்டா தமிழன் மேல கைய வெச்சது.

ஆம்பளனா வெளிய வாங்கடா பாப்போம்.

தமிழனுக்கு யாருமில்லனு நெனச்சீங்களா?

இனிமே ஒரு தமிழனத் தொட்டீங்க தொலச்சிருவேன். என்று முழங்கியபடி தமது ஆட்களை வீதிகளில் தேடச் சொன்னார்.

அப்போது அங்கே சில கன்னடர் வர அவர்கள் வீரப்பனிடம் கொண்டு வரப்பட்டனர்.

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்டா?என்று வீரப்பன் மீசையை முறுக்க..

வீரப்பனைப் பார்த்து நடுநடுங்கிய அவர்கள்..

ஐயா, நாங்க ஒண்ணும் பண்ணல தமிழர் எங்க கூடப் பிறந்தவங்க மாதிரி என்று குழறியபடி சொன்னார்கள்.

ஊருக்கெல்லாம் சொல்லுங்க..

இந்த வீரப்பன் இருக்குற வர எவனாவது எங்க மக்களத் தொட்டீங்க தொலஞ்சீங்க என்று எச்சரித்து விட்டு அந்த சிற்றூரிலிருந்து பரிசல் ஏறி மறுகரைக்கு வந்தார்..

ஆற்றங்கரையில் நின்ற அர்ச்சுணன்.. அண்ணே உங்களுக்கு ரெண்டாவது பெண்கொழந்த பிறந்திருக்குவஎன்று கூறினார்.

அதன் பிறகு அவர் தம் மனைவியை பார்க்கக் காட்டுக்குள் சென்றார்.

இது சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான்  காவிரிப் பிரச்சனை  தீவிரமடைந்திருந்தது.

அப்போதே வீரப்பனாருக்குத் தெரிந்திருந்தால் கன்னடவருக்குத் தக்கப் பாடம் புகட்டியிருப்பார்.

ஆனால், தமிழர் அனைவரும் கிட்டத்தட்ட வெளியேறிய பிறகே வீரப்பனாருக்கு அது தெரியவந்தது.

தவிரவும் வீரப்பனார் அப்போது தமிழ்ப் போராளியாக மாறியிருக்கவும் இல்லை..

ஒரு கடத்தல்காரனாகத் தான் இருந்தார்..

ஆனாலும் தமது இனத்தின் மேலிருந்த பற்றினால் தமது மனைவி அடர்ந்த காட்டில் பிள்ளைபேறு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதும் தமது மக்களைக் காக்கப் பாய்ந்தோடினார்.

வீரப்பனார் தமிழருக்காக முதன் முதலில் வெளிப்படையாகக் குரல் கொடுத்த நிகழ்வு இதுவே ஆகும்...

தற்போது வீரப்பனார் இல்லை.. ஆகையால் காவிரி பிரச்சனை மீண்டும் வந்தது.. இதற்கும் இந்த திருட்டு திராவிட சதி தான் காரணம்...

தமிழ் இலக்கியங்களில் ஓசோன்...


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன்..

தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக..

ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)

என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான்.

ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

“இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய ஆகாயமும்.” (புறநா – 20)

என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

“செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்.” (புறநா – 30)

என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

“மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்.” (புறநா – 365)

என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் “திசை” என்னும் பகுதியில் காற்று இருக்கும். “ஆகாயம்”, “நீத்தம்” என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. “நீத்தம்” என்பது இன்றைய அறிவியலார் கூறும் “வெறுமை” (நத்திங்னஸ்) என்னும் பகுதி.

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான “ஸ்ட்ரோட்ஸ்பியர்” என்னும் பகுதியில் தான் “ஓசோன்” எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது.

இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

“நிலமிசை வாழ்வர் அலமரல் தீர
தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள.” (புறநா – 43)

என்னும் பாடல் வரிகளின் கருத்து, “புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்” என்பதாகும்.

மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

“விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது” என்று
திருமுருகாற்றுப்படை (107) யிலும்,

“சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்” என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி – 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும்.

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ள வேண்டும்..

அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்க வேண்டும்...

மனைவி அமைவதெல்லாம்...


உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்..

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா.

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்று நெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?

அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார்.

இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார்.

குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்...

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் மனைவியின் பிரிவைத் தாளாமல்

"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு"

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறு பாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா..!

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?

பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்...

ஹனிமூன்...


திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான்.

தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன்.

ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது.

அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர்.

டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம்.

இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர்.

எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.

புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு.

மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம்.

ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள்.

புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம்.

போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள்.

பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு.

ஒரு கோப்பையில் தேனை வைத்துக் கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம்.

இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக் கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.

எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அதனால் தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்...