27/09/2017

மண்ணை சாப்பிடும் மக்கள்...



ஹைதி - அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு.

இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகிறார்களாம்.

ஹைதியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால் அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது.

கடைசியாக எப்போது சாப்பிட்டார்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே நினைவு இல்லை.

குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகிறார்கள்.

மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும்.

அடுத்தநாள் பட்டினி.

அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும்.

அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும்.

இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது.

பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண்கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள்.

இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கிறார்கள்.

விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹைதியை கடுமையாக பாதித்து இருக்கிறது.

சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடுகளையே நம்பி உள்ளனர்.

உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை.

விளை நிலங்கள் என்று எதுவும் இல்லை.

எல்லாமே பொட்டல் காடுகள் தான்.

எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்து விட்டார்கள்.

நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980 -ல் ஹைதியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது.

எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்தி கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது.

இதன் விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால் விலை தான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது.

போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் பொய், இறுதியில் பிச்சை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மண் கேக் சாப்பிட்டனர்.

இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர்.

இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக ஹைதி மாறி வருவது உலகிற்கு தெரியவந்து, மண்கேக் சாப்பிடும் செய்திகளும் படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறன...

பொருளாதாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால், இது போன்ற பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவையே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.