27/05/2017

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் 3 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் - வீட்டுவசதித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்...


யாருக்கு அமைச்சரே ? ஏழைகளுக்கா அல்லது கட்சிக்காரர்களுக்கா ? என்பது பொதுமக்களின் கேள்வி..

மேலும் வீடு கட்ட அரசாங்கம் ஒதுக்கிய பணத்தை தருவதற்கு குறிப்பிட்ட அளவு கமிஷனை அதிகாரிகளே எடுத்துக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது...

தமிழர் வாழ்வில் புலால் (Non-veg) உணவு...


புலால் (Non-Veg) தமிழர் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம்...

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவையில் காய் கனிகள் மட்டுமல்லாது, ஏராளமாய் புலால் உணவும் அன்றைய ஐந்து திணையிலும் இருந்தது.

ஆட்டிறைச்சி, மாட்டியிறைச்சியில் இருந்து ஆமை, மூஞ்சூறு, முதலை வரை அனைவற்றிலும் நம் அப்பத்தாக்கள்  லெக் பீஸ், ஹெட் பீஸ் என போட்டு வெளுத்து வாங்கிய வரலாறு சங்க இலக்கியம் முதல் தொட்டே உள்ளது. கோழி, காடை, கவுதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலாலில்லை.

பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும், புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன் குறித்து சங்க இலக்கியம் பல இடங்களில் பேசும்.

(உடனே வீரமாய் பச்சை ஊன் பிரியாணி ஒரு பிளேட் எனக் கேட்டுக் கிளம்பிவிட வேண்டாம். சரியாய் சமைக்காத கறியில் உள்ள பூச்சி முட்டைகள் மூளை இரத்த நாளங்களின் முடிவில் சென்று அடைத்து ஏற்படும் Cysticircosis  நோய் வந்துவிடும்)

சில 100 ஆண்டுகள் சமணமும், பவுத்தமும் தமிழகத்தை ஆண்டதில்தான் நம் சாமியும்கூட சுத்த வெஜிடேரியன் ஆகிவிட்டது. புலால் உண்ணாமையும், கள் உண்ணாமையும் வள்ளுவனால் கற்பிக்கப்பட்டவுடன், புலால் மெல்ல உழைக்கும் வர்க்கத்தில் மட்டும் ஒட்டிக் கொண்டது.

நான் வெஜ் சாப்பிட்டால் உடம்பு வளரும், மூளை வளராது என்ற பொய்ப் புராணங்கள் கற்பிக்கப்பட்டதில், புலாலைப் பார்த்தவுடன் ஐய்யே உவ்வே என்பது அதிகமாகிவிட்டது.

100 க்கு 100 வாங்கி என்  பையன் புரபஷனல் காலேஜில் ஐக்கியமாகிவிடவேண்டும் என முக்கி முனகும் பெற்றோருக்கு ஒரு விஷயம். 90 சதவீதம் நோபெல் பரிசு வாங்கியவர்களும், உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்;ட், ஆப்பிள் முதலாளிகளும் மூணு வேளையும் நான் வெஜ்ஜர்கள்தான்.

புலாலில் உள்ள புரதமும், சில நுண் சத்துக்களும் பொதுவாய் காய்கறிகளில் குறைவு. உதாரணத்திற்கு 100 கிராம் ஈரலில் 6000 மைக்ரோகிராம் இரும்பு உண்டு. 100 கிராம் கேரட்டில் 3000 மைக்ரோகிராம்தான் இரும்பு.

எதை, எப்போது, எவ்வளவு சாப்பிடனும் என்பதை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அன்று போருக்குப் போன வீரன் சாப்பிட்டதைப்போல இன்று காரில் போகும் சுகவாசி உண்டால் சரிப்படாது. நெடுஞ்சாணாய் நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாய் லைட் டின்னரில் ஃபிஷ் பிரை ஆர்டர் செய்யும் நபருக்கு சரிவராது.

உழைக்கும் அளவும், வாழும் நிலமும்தான் உண்ணும் அளவை இனி தீர்மானிக்க வேண்டும்.

- மருத்துவர். கு.சிவராமன் (நல்லுணவும், நலவாழ்வும் என்ற புத்தகத்தில்)...

பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...


கிடா வெட்டக்கூடாது என்று 2003ஆம் ஆண்டு அன்றயை ஜெயா அரசால் அரசாணை வெளியிடப்பட்ட போது, இது எங்க தெய்வத்திற்கும் எங்களுக்குமான உறவு, பண்பாடு, கலாச்சாரம் என்று எம்பிகுதித்து அரசையே ஆட்டம் காண  செய்த சமூகம், மாடுகளை, ஒட்டகங்களை வெட்டுவதற்கு மறைமுக தடைகள் தற்போதைய அரசு உருவாக்குவதை கண்டும் காணாதது போல் இருக்கிறது.

பாதிப்பு முஸ்லீமுக்கும் பிறருக்கும் தானே, நமக்கென்ன என்று நினைக்கலாம். ஒரு விசயத்தை மறந்து விடக்கூடாது.

அன்றைய எந்த கூட்டம் உங்களை கிடா வெட்டக்கூடாதுன்னு அரசை நிர்பந்தித்ததோ, அதே கூட்டம் தான் இன்றைக்கு மாட்டுக்கறிக்கு எதிராக அரசாணை பிறப்பித்திருக்கிறது.

இதே கூட்டம் நாளைக்கு உங்க சங்கையும் அறுக்கும்...

உலகில் நடந்த வித்யாசமான திருட்டுகள்...


இறந்த உடலை திருடிய வரலாறு...

உலகில் திருட்டு சம்பவம் என்பது தவிர்க்க முடியாதது..

இந்த நவீனயுகத்தில் இந்த திருட்டால் நாம் பெரிதும் பாதிப்பு அடையவில்லை என்றாலும் கூட நம் முன்னோர் சமூகம் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்த வரலாறுகள் உண்டு..

இப்பதிவில் இரண்டு வித்யாசமான திருட்டும் ஒன்று அதற்கான முயற்சி எடுத்ததை பற்றியும் பார்க்க இருக்கிறோம்..

மோனலிசா மர்ம ஓவியம்...

உலகையே திரும்பி பார்க்க வைத்த திருட்டில் ஒன்று தான் டாவின்சியால் வரையப்பட்ட உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம்..

மர்மப்புன்னகை ஓவியம் என்றும் அழைக்கப்படும் இவ்வோவியம் சில வருடம் திருடர்கள் கைகளில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...

அதே போன்று உலகை மிரளச் செய்த
திருட்டுகளில் ஒன்று தான் பிரேத திருட்டு...

அதாவது உலகப்புகழ் பெற்ற நபர்களின் உடல்களை கல்லறையில் இருந்து அகற்றி கடத்திக் கொண்டு போய்
அந்த நபரின் குடும்பத்தாருடன் பேரம் பேசுவது..

இந்த திருட்டு [வியாபாரம்] சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ஜரூராக நடந்து கொண்டு இருந்தது என்பது தான் கொடுமை..

அதில் பாதிக்கப்பட்டது  முக்கியமான இரு நபர்கள்...

முதலாமவர் சார்லி சாப்ளின்...

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் 1977இல் இறந்தார். அவரது உடலை அடுத்த ஆண்டே கல்லறையை தோண்டி திருடியுள்ளனர்..

ஸ்விட்சர்லாந்தில் இருந்த இவரது உடலை கடத்திய பின்பு  உலகமே அல்லோலகல்லோலப் பட்டது..

உடலைத் திருப்பித் தர பெரும் தொகையை சவத் திருடர்கள் கேட்ட போது சார்லி சாப்ளினின் மனைவி பணம் தர மறுத்து விட்டார்.

செத்த உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற அவரது பதிலைக் கேட்டத் திருடர்கள் அதிர்ந்து போனார்கள்....

ஆனால் இவர்களது உரையாடலை பதிவு செய்து கிழக்கு ஐரோப்பாவில் பதுங்கி இருந்த இரண்டு பிரேதத் திருடர்களைப் பிடித்தனர் காவல்துறை அதிகாரிகள்..

கல்லறையிலிருந்து சற்று தூரத்தில் வேறொரு இடத்தில சார்லி சாப்ளினை மாற்றி புதைத்து விட்டு இவர்கள் நாடகம் ஆடியது அம்பலத்திற்கு வந்தது..

2014இல் இண்டிபெண்டண்ட் என்ற பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவரது மகன் உலகின் மோசமான சம்பவம் இது என்று விமரிசித்தார்..

இரண்டாமவர் ஆப்ரஹாம் லிங்கன்...

ஆப்ரஹாம் லிங்கனின் உடலை கடத்த போவதாக அரசால் புரசலாக செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அத்திட்டத்தை தடுத்து விட்டனர் காவல் அதிகாரிகள்..

1876இல் அவரது உடலுக்கு பெரும் தொகை பிணையாகக் கேட்கப்பட இருந்த ஒரு முயற்சியை ஆரம்பத்திலேயே ரகசிய காவல் அதிகாரிகள்  தகர்த்தனர்.

இல்லையெனில் இவரும் கடத்தப்பட்டு இருப்பார்..

இதன் பின்னர் அவரது மகன் ராபர்ட் தன் தந்தையின் உடல் வைத்துள்ள
சவப்பெட்டியை கெட்டியான எளிதில் தகர்க்க முடியாத கான்க்ரீட் சுவர் ஒன்றை அமைத்து அதன் கீழ் புதைத்து விட்டார்..

அதனால் அதை யாராலும் தோண்டி எடுக்க முடியாது, இப்போது வரைக்கும் அந்த கான்கிரீட் சுவருக்கு கீழ் பகுதியில் தான் லிங்கனின் உடல் வைக்கப்பட்டுள்ளது..

எது எப்படியோ 1800 களில் பிரேத திருட்டு மிகவும் ஜரூராக நடந்துள்ளது என்பதை வரலாறு அழுத்தமாக பதிவு செய்துள்ளது...

நம்ப முடியாத உண்மைகள்...


108 காயகல்ப மூலிகைகளின் தளபதி வல்லாரை...


நினைவாற்றலை பெருக்கும் கிழட்டு தன்மையை தடுக்கும்...

நினைவாற்றலை பெருக்க வேண்டும் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது ‘வல்லாரை’ தான். ஆனால் வல்லாரைக்கு இதை தவிர வேறு சில  நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. வல்லாரைக்கு ‘சரஸ்வதி’ என்ற பெயரும் உண்டு. ஒருவரை புத்திமானாக்கும் அற்புத சக்தி  இருப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது.

தென்மாவட்டங்களில் வல்லாரையை கீரையாகவோ, துவையலாகவோ சமைத்து சாப்பிடுகிறார்கள். இது மிக  நல்லது. வல்லாரையை அப்படியே உலர்த்தி பொடி செய்து மாத்திரையாகவும் தருகிறார்கள்.

இதன் தாவரவியல் பெயர் Centelle asiatia (linn) Urban.  மண்டூகபரணி, ஆரை, சிங்கி, சண்டகி, குடகம், விக்கிராத்தா, குளக்குறத்தி, குணச்சாலி குணத்தி என்ற பெயர்களும் உண்டு.

மலை வல்லாரை, கருவல்லாரை என்ற இருவகைகள் உள்ளன. இது கணுக்களில் வேர்விட்டு தரையோடு படரும் சிறு செடி இனம். இதன் இலைகள்  கரும்பச்சை நிறமாக இருக்கும். வட்ட, அரைவட்ட வெட்டு பற்களுடன் கூடிய கை வடிவ நரம்பு அமைப்புகளுடன் நீண்ட காம்புடைய ஆழமான இதய  வடிவ இலைகளை கொண்டது. இதன் பூ ரோஸ் நிறத்திலும், பழங்கள் சிறிய முட்டை வடிவிலும் இருக்கும். கசப்புடன் கூடிய துவர்ப்பு சுவை  உடையது. இதன் மகத்துவம் மிகப்பெரியது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர  நடராஜன்.

இந்த மூலிகையில் asiaticoside, resins  போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இது நினைவாற்றல், அறிவு, மனதை ஒருமுகப்படுத்துவது,  துடிப்போடு இருக்க செய்வது ஆகிய செயல்களை தூண்டி, மூளையின் திசுக்களை புதுப்பிக்கவும் செய்கிறது. வல்லாரையில் இருக்கும் antiascorbic  acid  தோலில் ஏற்படும் பலவித நோய்களையும் குணப்படுத்தும். இது தொழுநோயை கூட குணப்படுத்தும் சக்தி படைத்தது. இதில் இருக்கும்  ஹைட்ரோகாட்டிலின் நம் மூளையின் செயல்களை முடுக்கி விடுகின்றன. வல்லாரையில் இருக்கும் வல்லாரின் என்கிற அல்கலாய்டு நரம்புகளுக்கு  மிகப்பெரிய சக்தியை தருகிறது.

நோயை நீக்கவும், உடலை பலப்படுத்தவும், வியர்வையை அதிகப்படுத்தவும், தாதுபலத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

மூலாதார நரம்புகள் புதுப்பிக்கப்பட்டு கபால நரம்புகள் செயல்பட்டு நல்ல நினைவாற்றலை தருகிறது.

வல்லாரையுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி, சிறு பருப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் கடைந்து தக்காளி, சிறிது கடுகு சேர்த்து தாளித்து  வைத்துக்கொண்டு வெயில் நேரத்தில் உண்டு வந்தால் நரம்புகள் நல்ல வலுப்பெற்று சுருக்கத்தை போக்கி சீராக வைத்துக்கொள்கிறது.

வல்லாரை இலையை உலர்த்தி பொடி செய்து சிறிது நெய் சேர்த்து உணவில் பிசைந்து ஒரு பிடி அளவு சாப்பிட்டால் வாதம், வாயு, அண்டவீக்கம்,  யானைக் கால், குஷ்டம், நெறிகட்டி, கண்ட மாலை, மேகரணம் குணமாகும்.

வல்லாரை சூரணத்தை ஒரு சிட்டிகை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் வீக்கம், தோல் வியாதிகள், மூளை நரம்பு சம்பந்தமான  நோய்கள், இளநரை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் குணமாகும். உடல் கிழட்டுதன்மை அடைவதை தடுக்கும். தோலுக்கு நிறத்தையும் மினு மினுப்பையும்  தரும்.

வல்லாரை இலையுடன் தூதுவளை இலையை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து 20 துளியை மட்டும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து  2 வேளை குடித்து வர தொண்டை கரகரப்பு, சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் குணமாகும்.

பல மருத்துவ குணங்கள் வல்லாரைக்கு உண்டு. மூலிகைகள் பல இருந்தாலும் அவற்றில் வல்லாரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 108  காயகல்ப மூலிகைகளில் வல்லாரை ஒரு தளபதி நிலையில் உள்ளது.

உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்குவதில் வல்லாரைக்கு முக்கிய பங்கு உண்டு. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும்  வல்லாரை தனி இடம் வகிக்கிறது.

சிலருக்கு வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே என்ற தவிப்பான மனநிலை (anxiety) இருக்கும். இதை செய்யலாமா, அதை செய்தால்  சரியாகிவிடுமா என்ற மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்களது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கும்  வல்லாரையில் தீர்வு இருக்கிறது.

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த Scleroderma (ஸ்கிளீரோடெர்மா) என்ற இணைப்பு திசுக்கள் கடினமாதல் மற்றும் தண்டுவட பிரச்னைக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது. வல்லாரை குளம், குட்டை  போன்ற சிறிய நீர் நிலைகளில் அமோகமாக வளரும். இது குறிப்பாக மலைபாங்கான இடங்களில் தானாகவே வளர்கிறது.

விஷத்தை நீக்க வேண்டும்...

வல்லாரையை பச்சையாக உபயோகிக்க கூடாது. இதில் ஒருவித விஷத்தன்மை உள்ளது. எனவே சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும். புதிய மண்  சட்டியில் பசும்பால் முழுவதும் ஊற்றி ஒரு வெள்ளை துணியை கட்டி அதில் வல்லாரை இலைகளை போட்டு மூடி வைத்து சிறு தீயில் எரிக்க  வேண்டும். பால் ஆவியாகி வல்லாரையிலுள்ள விஷத்தன்மையை முறித்து கீழே தள்ளிவிடும். பின்னர் இலையை உலர்த்தி இடித்து பொடியாக்கி  பயன்படுத்தவேண்டும்.

வல்லாரை கேப்சூல் ஆபத்து...

வல்லாரையின் மொத்த செடியும் மருந்துதான். ஆனால் சிலர் வல்லாரையிலுள்ள அல்கலாய்டுகளை சிந்தெடிக் முறையில் பிரித்து கேப்சூல்களாக  விற்கிறார்கள். இது தவறு. காரணம் இயற்கை எப்போதும் தன் படைப்புகளில் ஒரு சமநிலையை வைத்திருக்கிறது. அதை பிரிப்பதால் நிச்சயம் பக்க  விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை கேப்சூல்களை தவிர்த்து நேரடியாக தயாரிக்கப்பட்ட மாத்திரை அல்லது சமைத்து சாப்பிடலாம்...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


கோஹினூர் ஒரு 108 காரட் வைரம். இதற்கு மலையின் வெளிச்சம் என்று பொருள். இது விலை மதிப்பில்லாதது. தென்னிந்தியாவின் கோல் கொண்டாவில் வெட்டப்பட்டது...

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி முகத்தில் கரிபூசிய ஜின்னா...


1940ஆம் ஆண்டு  பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள்.

உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை.

பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட  முன்வரவில்லை.

அதற்குக் காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான்.

இதைப் பற்றி விரிவாகக் காண்போம்...

8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகிறார். இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கூறுவதை பார்ப்போம்.

தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பிய போது நான் உடன்வர மறுத்தேன் என்றும் நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நான் உடன்போக மறுத்தது உண்மை தான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக் கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காகப் பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு உபச்சார சந்திப்பு என்று நான் அறிந்து கொண்ட காரணத்தினால் தான், நான் உடன் போக மறுத்தேன்.

தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், சைவச்சீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது ‘மனக்கசப்போடு’ தான் வந்தார்கள். சந்தர்ப்பம் அப்போதெல்லாம் தவற விடப்பட்டது. தோழர் அம்பேத்கரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று.

இப்படியாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் (சி.என்.ஏ. பரிமளம்- அறிஞர் அண்ணாவின் தன் வரலாறு)

அண்ணா  மூவரும் மனக்கசப்போடு தான் வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வில்லையென்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்து, ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965)  சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்..

இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு….

கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?

பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க.

பெரியார் பேட்டியில் ஜின்னா சொல்ல வந்ததை மறைத்து விட்டு உன்பிரச்சனை என்று கூறியதாக தெரிவிக்கிறார். திராவிடநாடு என்பது பெரியாரின் அகநிலைக் கருத்து என்பதே ஜின்னாவின் திட்டவட்ட முடிவாகும்.

26.1.1941இல் நீதிக்கட்சி பிரமுகர் வி.வி.இராமசாமி நாடார் மற்றும் ‘நாடார்குல மித்திரன்’ இதழாசிரியர் எம்.ஏ.முத்து நாடார் இருவரும் மும்பை சென்று ஜின்னாவை சந்தித்து திராவிட நாடு குறித்துப் பேசினர்.

வி.வி.இராமசாமி: எங்களுடைய திராவிடநாடு கோரிக்கை கதி என்ன?

ஜின்னா: ‘உங்களுடைய திராவிட நாட்டினுடைய ஜனங்களின் விருப்பம் இன்னாதெனத் தெரிய வேண்டும்’ என்றார். மிகச்சரியாக ஓராண்டு முடியும் நிலையில் ஜின்னா நினைவாற்றலுடன் தான் இதைக் கேட்டுள்ளார். (செ.அருள் செல்வன்-அண்ணாவின் அரசியல்குரு ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்ரமணியம்)

அன்று பெரியார்- ஜின்னா பேச்சை மொழிபெயர்த்தவர் பி.பாலசுப்பிரமணியம். அப்போது ஜின்னா கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரியார் திணறியுள்ளார்.

இந்த தகவலை தனது தந்தையார் பாலசுப்பிரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக அவரின் மகள் ஜெயா தெரிவித்ததையும் மேற்படி நூலில் அருள்செல்வன் குறிப்பிடுகிறார்.

9.8.1944இல் பெரியார் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சு வார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார். அப்போது ஜின்னா அதற்கு கோபம் கொப்பளிக்க பதில் தந்தார். அது வருமாறு..

எனக்கு எப்போதும் மதராஸ் மக்களிடம் பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் பிராமணர் அல்லாதவர். திராவிட நாட்டை அமைக்க நினைத்தால் அதைப்பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது. உங்களுக்காக  நான் பேச முடியாது. உங்களுடையை நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். உங்களது செயல்பாடுகளில் உறுதியில்லை . (Dr.E,Sa.Viswanathan- The Political Career of E.V.Ramasami Naicker)

பெரியார் இந்தக்கடிதத்தில் தனக்குச் சாதகமாக உள்ள பகுதிகளை மட்டும்  வெளியிட்டதாகவும் அதைக் கேள்விபட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை செய்தி ஏடுகளுக்கு கொடுத்ததாகவும் மேற்படி நூலாசிரியர் விசுவநாதன் கூறுகிறார்.

திராவிட நாட்டு விடுதலையை தமிழரல்லாத தெலுங்கர் கன்னடர், மலையாளி ஆகிய மூன்று இனத்தவரின் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை வடநாட்டில் பிறந்த ஜின்னாவால்  கூற முடிகிற போது, தமிழ்நாட்டில் பிறந்த பெரியாரால் இதை ஏன் கூற முடியவில்லை என்பது தான் தமிழர்கள் மனதில் எழும்புகின்ற கேள்வியாகும்...

இலுமினாட்டி யும் ஜெயலலிதா மரணமும்...


நீல நிறமும் இரகசியமும்...


ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால்..

நீல நிறம் உங்களின் பசியின் தன்மையை குறைக்கும் ஒரு மந்திர கோலாக‌ நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பசியின்மையை குறைக்கவும், ஒரு வித்தியாசத்தை காணவும் நீல வண்ணத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் உணவு தட்டுகள், மேஜை துணி எல்லாம் மாற்றியமையுங்கள்.

அத்துடன் உங்கள் டைனிங் பகுதியில் ஒரு நீல நிற லைட்பல்ப் சேர்க்கும் போது அது ஒரு பசியின்மையை தருகிறது.

ப்ளூ ஒரு இயற்கை வண்ணமாக இருப்பதோடு மற்றும் பெரும்பாலும் விஷ உணவுக்கு தொடர்புடையதாக உள்ளது..

எனவே நீங்கள் இதற்காக இந்த வண்ணத்தை பாராட்ட வேண்டாம், இது நம் பசி வேட்கையை நீக்கச் செய்கிறது அவ்வளுவே...

தழும்புகள் மறைவதற்கு சூப்பர் டிப்ஸ்...


உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது.

அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

எலுமிச்சை சாறு..

எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்..

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை..

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்..

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்..

ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

தக்காளி சாறு..

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்...

நம்ப முடியாத உண்மைகள்...


திருக்குறளை விட சிறந்த நூல் பகவத்கீதை ஆர்.எஸ்.எஸ் மலையாளி அர்ஜுன் சம்பத்...


பாஜக நேரடியா இதை சொன்னால் செருப்படி விழும்என்று தெரியும்..
 
அதனால் தான் இது போன்ற அல்ல கைகளை விட்டு பேச வைப்பான்...

வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்...


அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில்  சேர்த்துக் கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.

இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அதே போல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து,  செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில்  எரிச்சல் குறைந்து விடும்.

அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை  மற்றும் வழுவழுப்பு தன்மை  குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது...