31/01/2018

சாகர் மாலா திட்டத்திற்காக அமெரிக்கா செயற்கையாக சீற்றங்களை உருவாக்கி மீனவர்களை கொன்று வருகிறது...


விழித்துக்கொள் தமிழ் இனம.. சூழ்ச்சியால் விழ்ந்துவிடாதே...

இனி கோவையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம்...



மாநகராட்சி நிர்வாகம் அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதாவது, நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது வாகன போக்குவரத்தை காட்டிலும் தங்களது பைக், கார் போன்ற தங்களது சொந்த வாகனங்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

நகரில் பொது இடங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் செலுத்தும் வாகன நிறுத்தம், இலவச வாகன நிறுத்தம் ஆகியவை உள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளில் கட்டண வாகனங்கள் நிறுத்தும் இடம் தேர்வு செய்யப்பட்டு குத்தகைதாரர்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.

இங்கு வாகனங்கள் நிறுத்த குறிப்பிட்ட மணி நேரத்திற்கு தொகை பைக், கார் போன்ற வாகனங்களுக்கு ஏற்ப நிர்ணயித்ததை விட அதிகம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்த இலவச பார்க்கிங் வசதி உள்ளது.

பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நிறுத்தி வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

சாலையோரம் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளனர்.

மாநகராட்சியின் இந்த முடிவு சமூகஆர்வலர்கள், பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தி வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதாலேயே, சாலையோரம் இலவச வாகனங்கள் நிறுத்தும் இடத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இதற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கடைவீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய 28 இடங்களில் குறிப்பிட்ட மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தனி அடையாளம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இங்கு நியமிக்கப்படும் ஊழியர்கள் மூலம் வாகனம் நிறுத்த குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட உள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் ‘‘ஆன் ரோடு பார்க்கிங்’’ என்ற கட்டணம் செலுத்தும் சாலையோர வாகனம் நிறுத்தும்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் கைவிட வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ..

ஒரு இனத்தின் அடையாளத்தை தன் அடையாளமாக மாற்றுவது எவ்வளவு பெரிய கேவலம்...


திராவிடத்தின் வரையறை தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழர் என்றால் அந்த மாநிலங்கள் ஏன்.. திராவிடத்தை ஏற்கவில்லை..? என கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதிலளிக்க வில்லை..

காரணம் அந்தந்த மாநிலங்கள் அவர்களுடைய மண் மற்றும் மொழி சார்ந்த அரசியலை ஏற்றுக் கொண்டன.. ஆனால் தமிழ்..?

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?


நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல...

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்...

மேலும் படியுங்கள்...

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை.

காரணம் பசு வறட்டியில் உள்ளது.

நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்.

அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர்.

இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும்.

ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே.

இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது.

சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர்.

ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது...

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...

அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்...

பாஜக பினாமி அதிமுக அரசின் மக்களுக்கு வைத்துள்ள அடுத்த ஆப்பு...


ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?


நாம் கற்பனை செய்யும் அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும்.

பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...

திராவிடத்தின் 60 ஆண்டு சாதனைகள்...


ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?


நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின்  உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப் பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்...

ஆரியம் vs திராவிடம் பங்காளி கலாட்டா...


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக் கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை.

நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது...

பாஜக வும் ஏமாற்று வேலைகளும்...


போக்குவரத்து காவலர்ளுக்கு சென்னை காவல்துறை உத்தரவு...


விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் துரத்தி பிடிக்கக் கூடாது.

காவலர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை நிறுத்தி லைசன்ஸ் இருக்கா இன்சுரன்ஸ் இருக்கா என வாகன ஓட்டிகளை தண்ணிச்சையாக தணிக்கை செய்யக் கூடாது.

விதிகளை மீறும் பட்சத்தில் B டைரி வழக்கு பதிந்து காவல் நிலையத்தில் சமர்பிக்க வேண்டும்...

தடியடி நடத்துறது என்ன பெரிய வீரமா.. திருப்பி அடிச்சா ஒருத்தவன் தாங்க மாட்டிங்க.. உன் குடும்பத்துகாகவும் தான்டா போராடுறோம் முட்டா போலிஸ்...


பஸ் கட்டண உயர்வு , ஒரே வாரத்தில் சென்னை புறநகர் ரயிலில் கூடுதலாக 2 கோடி வருமானம் - தெற்கு ரயில்வே துறை தகவல்...


ஜன 20-26 ஆகிய நாட்களில் கூடுதலாக 7.95 லட்சம் பயணிகள் சென்னை புறநகர் ரயிலில் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதிலிருந்து ஒரு வாரத்தில் கிட்ட தட்ட 8 லட்சம் பயணிகளை அரசு போக்குவரத்து கழகம் இழந்துள்ளது தெரியவந்துள்ளது...

பெட்ரோல் விலை உயர்வு : அமைச்சர்களுடன் மாட்டு வண்டி ஓட்டி வந்து மத்திய அரசின் புதிய இந்தியாவை நக்கலடித்த புதுவை முதல்வர் நாராயண சாமி...


இது போன்ற சீரியல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்...


17-01-18 அன்று வெளியான தெய்வமகள் சீரியலில் தண்ணீரில் ஊசி மூலம் விஷம் கலப்பது போன்று காட்சி அமைத்துள்ளனர்.

ஏற்கனவே சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் நடக்கையில் இது போன்று புது புது உத்திகளை இவர்களே கற்றுதருவது கண்டிக்க தக்கது.

கில்லி படத்தை போன்று எத்தனை இடங்களில் மிளகாய் பொடி உபயோகித்து குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் அறிய வேண்டும்.

சினிமாவை விட சீரியல்கள் வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு உறவுகளை சீரழித்து வருகிறது.

இந்த நிலையில் இது போன்று வக்கிர எண்ணத்தை மக்கள் மனதில் விதைப்பதை போன்று சீரியல் எடுப்பதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஒபிஎஸ் இபிஎஸ் ஆட்சி கவிழும் - முன்னால் அமைச்சரும் டிடிவி ஆதரவாளருமான செந்தில் பாலாஜி...


தமிழ் இந்தியாவின் தேசிய மொழி...


ஒரு சீனர் கடையில் அந்த அந்த நாட்டு தேசிய கொடியுடன் அந்த நாட்டு தேசிய மொழியில் வரவேற்பு (welcome) என்று எழுதப்பட்டிதருந்தது..

அதில் இந்திய நாட்டு கொடியும் இருந்தது  இந்தியாவின் தேசிய மொழியாக  எழுதப்பட்டது  என் செம்மொழியான தமிழ்...

வாழ்க தமிழ்...

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடங்கள்...


எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடியில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் எகிப்தில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டு பிடிக்கப்பட்டன. தாய்லாந்தில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கி.மு. 3ம்-4ம் நூற்றாண்டு உரைகல் ஒன்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள்.

இலங்கை: கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 3ம் நூற்றாண்டு கால கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டு பிடிக்கப்பட்டன.

தட்டையான தட்டத்தின் கருப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் இலங்கையின் திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 300 என அகழ்வினை மேற்கொண்ட செருமன் ஆராட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா: கி.மு. 2ம் நூற்றாண்டு பானையில் வாயில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கேரளாவில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.பி. 3ம் நூற்றாண்டு கால நான்கு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் கேரளாவிலுள்ள குகையிலும் மலையிலும் காணப்பட்டன. அதில் ஒன்று ‘சேரன்’ என்ற சொல்லுடன் காணப்பட்டது.

தமிழ்நாடு: ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு.

கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கொடுமணலில் கண்டு பிடிக்கப்பட்டன.

கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ துரத்திலுள்ள பொருந்தலில் கண்டு பிடிக்கப்பட்டன.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் “மு-ன-க-ர” எனவும் “மு-ஹ-க-டி” எனவும் எழுதப்பட்டிருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது.

ஐந்தாம் ‘வீரர்’ கல் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் போர்ப்பனக் கோட்டையில் கண்டு பிடிக்கப்பட்டன...

நாம் எளிதாக நினைக்கும் விஷயமெல்லாம் அதன் பின்புலத்தில் எப்பொழுதும் மிகப்பெரும் கார்பரேட் சதி உள்ளது...


சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்...


சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது.

இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு பெயர்களும் உண்டு.

நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

இரத்த குழாய் அடைப்பு நீங்கும்...

அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்..

சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.

நெறிகட்டிகள் குணமாகும்...

சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.

நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.

சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்...

போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

நீண்ட நாள் கப நோய்களுக்கு சங்குப்பூ  பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வந்தால் எளிதில் நிவாரணம் கிடைக்கும்.

சங்குப்பூ வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீரக நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.

மேலும் இந்த கொடியின் இலைகள் ஞாபக சக்தியை வளர்க்கும் சக்தி கொண்டது. நரம்பு சம்பந்தமான குறைகளையும் போக்கும்...

இதன் இலைச்சாறு வயிறு உப்புசத்தை போக்கும்.. தொண்டை புண்ணை ஆற்றும்...

தமிழக காவல்துறை என்றால் சும்மா வா...


மண்ணுக்கும் உழவருக்கும் நண்பன் மண்ணுளிப் புழு - ஒரு அதிர்ச்சித் தகவல்...


பாம்பென்றால் படையே நடுங்கும் என்பர். பாம்பை மனிதர்கள் இன்றுவரை ஒரு காலனாய் தான் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழர்களாகிய நமது முன்னோர்கள் நாகர்கள் என்றும் அரவர்கள் என்றும் அழைக்கப்பட்டது நாகங்களை கையாளும் வித்தையை நன்கு உணர்ந்ததால் என்பதே வரலாறு நமக்கு உரைக்கும் செய்தி. சரி ஏன் இந்த விளக்கங்கள். நேரடியாக செய்திக்கு செல்வோம்.

பாம்புகள் என்றால் ஏன் படையே நடுங்கும் என்றால் பாம்பு கடித்து நஞ்சு பரவத்துவங்கிவிட்டால் அதன் பிறகு அதில் இருந்து உயிரை மீட்பது என்பது சிரமமான காரியமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பல வகையான பாம்புகள் பூமியில் உள்ளன. அவற்றில் பல கொடிய நஞ்சுடையது. பல நஞ்சற்றது. இப்போது நாம் பார்க்க இருப்பது மண்ணுளி பாம்பு, இல்லை இல்லை மண்ணுளி புழு.

ஆம். மண்ணுளி என்பது பாம்பின் இனமே கிடையாது. அது புழுவின் இனம். சற்று பெரிய அளவில் வளரக்கூடிய புழு இனம். பிறகு ஏன் துவக்கத்தில் பாம்பை பற்றி இவ்ளோ பெரிய கதை அளந்தீர்கள் என்று நீங்க கேட்பது தெரிகிறது.

இதோ விடை... சில வருடங்களுக்கு முன்னர் மண்ணுளி பாம்பை கடத்துகிறார்கள். மண்ணுளி பாம்பு ஏதோ கேன்சர் நோய்க்கு மருந்தாக பயன்படுகிரதாம் என்றவாறு பல செய்திகளை நாம் பதித்தும் கேட்டும் இருப்போம். அதுவும் உண்மை இல்லை. அது நம்மை ஏமாற்ற செய்த சூழ்ச்சியே.

என்ன சூழ்ச்சி?

மண்ணுளி புழு என்பது வேளாண்மையின் நண்பன். மண் புழு எப்படி மண்ணில் புரத சத்து உற்பத்தியாக வழி செய்கிறதோ அதை விட பல மடங்கு வீரியமான இயற்கையான உரத்தை மண்ணிற்கும் வழங்கும். இந்த புழு அதிக கூச்ச சுபாவம் கொண்டது.

மேலும் இந்த புழுக்கள் மணற்பரப்பு உள்ள இதங்களில் தான் அதிகம் வசிக்கும். இவைகள் மூச்சு விடுவதன் மூலம் மண்ணில் காற்று கடத்தப்படும் திறனும், ஆக்சிஜனும், நைட்ராஜெனும் அதிகமாகிறது. ஆகவே வேளாண்மையில் அதிகமான விளைச்சலை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இப்படியான நன்மைகளைக் கொண்டிருக்கும் காரணிகளாலே தான் இந்த புழுவை உலக சந்தை குறிவைத்தது. இப்படியான உயிரனங்கள் இருப்பதால் தான் உழவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்யமுடிகிறது. அதனால் அவர்கள் நமது செயற்கை உரத்தையும், பூச்சிமருந்தையும் வாங்காமால் இருகிறார்கள் என்று உணர்ந்த நிறுவனங்கள் தான் இந்த புழுவை பாம்பென்றார்கள், இந்த பாம்பை மருந்தேன்றார்கள், அதற்கு லட்சக்கணக்கில் விலை வைத்தார்கள், நம்மையே அதை கடத்தவும் வைத்தார்கள், இன்று அப்படியான ஒரு புழு இனத்தையே இல்லாமல் செய்து விட்டார்கள்.

சிந்தித்து பாருங்கள் ஒரு புழுவிற்கு லட்சக்கணக்கில் விலை வைக்கிறார்கள் என்றால் அதன் திறன் என்னவாக இருக்கும். அவைகளின் நமது வேளாண்மைக்கு எந்த அளவில் பயன்பட்டிருக்கும் என்று. தொடர்ந்து இந்த வியாபார அரசியலால் நாம் முட்டாளாக்கப்பட்டு வருகிறோம்...

28% தமிழர்கள் வாழும் தமிழர்களின் பூர்வீக மண்ணில் தமிழில் பேசவே தடையாம், இதை அங்குள்ள தமிழர் இனவாதம் என்று சொல்லக் கூட முடியாது...


இங்க சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் என சகல பதவிகளையும் வேற்று இன மக்கள் திராவிடப் போர்வையில் வகித்து வருகின்றனர். ‘தமிழர் தான் தமிழர் நாட்டை ஆள வேண்டும்’ என்றால் நம் மண்ணிலேயே அவர்கள் நம்மை இனவாதிகள் என்பார்கள்..

ஒரு கன்னட கிழவன் தமிழர் நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தமிழர் நாட்டை ஆளுவேன் என்பானாம்.

மானத் தமிழர் நாட்டை மாற்றான் என்னடா ஆள்வது? என போர் கொடி தூக்க வேண்டிய தருணம் இது...

இருசக்கர வாகன ஓட்டிகளை ஆபாசமாக திட்டி நடுரோட்டில் மிருகத்தனமாக தாக்கும் காவல்துறை போர்வையிலுள்ள மக்கள் விரோதிகள்...


வேலூர் பஸ் கட்டண உயர்வு போராட்டம் , கலைந்து செல்லாததால் மாணவிகளை லத்தியுடன் விரட்டி விரட்டி துரத்திய காவல்துறை எனும் மக்கள் விரோதிகள்...