08/06/2018

குப்பையில் கிடந்த குழந்தைக்கு தாய் பால் கொடுத்த போலீஸ்- பெங்களூர் சிட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்...


தாய்மையை போற்றுவோம்...

பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் குப்பை தொட்டி ஒன்றில் கடந்த 2-ம் தேதி அதிகாலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. எலக்ட்ரானிக் சிட்டி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் நாகேஷ் தலைமையிலான போலீஸார் அக்குழந்தையை பத்திரமாக மீட்டன‌ர். பிறந்து ஓரிரு மணி நேரங்களே ஆன சிசுவை போலீஸார் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்தனர்.

அதே வேளையில் குழந்தையின் பெற்றோர் யார் என அப்பகுதியில் விசாரித்து வந்தனர். போலீஸாரால் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அக்குழந்தையை எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது உதவி ஆய்வாளர் நாகேஷ், “இனி இந்தக் குழந்தை அநாதை அல்ல, அரசு குழந்தை. இதனை குறிக்கும் வகையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமியின் பெயரை, இந்த குழந்தைக்கு சூட்டுகிறேன். இந்த குமாரசாமியை அரசு கவனித்துக் கொள்ளும்''என அறிவித்தார்.

அடுத்த சில நிமிடங்களில் குழந்தை பசியின் காரணமாக‌ அழ ஆரம்பித்தது. இதையடுத்து போலீஸார் பாலை சுட வைக்க பாத்திரங்களைத் தேடிக்கொண்டிருந்தனர். குழந்தை தொடர்ந்து அழுததால் இரக்கப்பட்ட பெண் காவலர் அர்ச்சனா, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். மேலும் குழந்தையை பார்க்கும்போது தன் குழந்தையைப் போல இருந்ததாக அர்ச்சனா நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார். இவருக்கு 3 மாதத்துக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது...

இடம் : பெரம்பலூர் மாவட்டம்.. பேரளி - பீல்வாடி தார் சாலை...


சதுப்பு நில சடலங்கள் (Bog Bodies)...


வட ஐரோப்பாவில், சேறும் சகதியும் நிறைந்த பகுதிகளை கடக்கும் சுற்றுலாப் பயணிகள், சமயங்களில் அதில் சிக்கி இறந்துவிடுவதுண்டு.

அப்படி இறப்பவர்களின் உடல்களையே (அவ்வப்போது வேண்டுமென்றே, சில வயதானவர்களின் பிணங்களை இது போன்ற சேற்றில் புதைத்தும் விடுவார்களாம்) சிக்கிய உடல்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

அத்தகைய உடல்களை ஆய்வுக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் ஐரோப்பியர்கள்...

http://www.youtube.com/watch?v=YW_qutaoYwY

சமூக விரோதி.. சமூக விரோதி தான்...


சென்னையில் அய்யாக்கண்ணு கைது...


ஜனநாயக நாட்டில் விவசாயிகள் உரிமையை கேற்கவோ, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களை சந்திக்கவோ கூடாது என்று காவல்துறை விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் 100நாட்கள் விவசாயிகள் விழிப்புணர்வு பேரணியாக 01.03.2018 முதல் 08.06.2018 வரை கன்னியாகுமரியில் துவங்கி சென்னை தலைமை செயலகம் வரை பயணம் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக முழுதும் 31 மாவட்ட சென்று விழிப்புணர்வு பேரணி செய்து 31 மாவட்ட ஆட்சியர்களை சந்தித்தனர்.

அதனை தொடர்ந்து இன்று 99வது நாளாக விவசாயிகள் விழிப்புணர்வு பேரணியாக சென்னையில் பயணம் மேற்கொண்டனர்.

அதுசமயம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்/திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களைய தலைமை செயலகத்தில் சந்திக்க அனுமதி பெற்று சந்திக்க செல்லும்போது, சென்னை காவல்துறை எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க கூடாது, விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளக்கூடாது என்று தடுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமாநில தலைவர் P. அய்யாக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் மன்னார்குடி பழனிவேல், சென்னை மாவட்ட தலைவர் ஜோதிமுருகன், காஞ்சிபுரம் மாவட்டம் தலைவர் சண்முகம் மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் அனைவரையும் கைது செய்து சென்னை வடபழனி R8 காவல் நிலையத்தில் அடைத்துவைத்துள்ளனர்.
     
ஆகவே, அனைத்து PRESS & MEDIA நண்பர்களும் வடபழனி காவல் நிலையம் வரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
     
இவண்,
PREM - செய்தித்தொடர்பாளர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்...

உலகம் அனைத்து உயிர்களுக்குமானது...


மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்...


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்த மல்லிகைப் பூக்கள் உதவுகின்றன. நன்றாக மலர்ந்த 20 மல்லிகைப்பூக்களை பால் ஊட்டும் தாய்களின் மார்பில் வைத்துக் கட்ட வேண்டும்.தினமும் மாலையில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால் பால் சுரப்பி நிற்கத் தொடங்கிவிடும்.

20 பூக்களை அரைத்து மார்பகத்தின் மீது பூசி வரவும் செய்யலாம். 

தொண்டைப்புண் அற்றுப் போவதற்கு மல்லிகைப் பூக்களை அரைத்து, புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும். அதாவது, குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும்.

இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். 

மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.

இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.

மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் தடிமன், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமாகும்.

மல்லிகை மொட்டுக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் குணமாகும்.

மல்லிகை கசாயத்தை அருந்தி வந்தால் கண் வீக்கம், தொண்டை கரகரப்பு, சரும நோய்கள் ஆகியன குறையும். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ...

நீட் தேர்வில் தோல்வி - சுபஸ்ரீ தற்கொலை...


தும்பைப் பூ.....


தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் தடிமன் பறந்தோடி விடும்.

தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் தடிமன் போக்கும் தன்மை இந்த தும்பைப் பூக்களுக்கு உண்டு.

தலைவலி போக்கும் சாறு...

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப் பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும்.

சகலவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு தேக்கரண்டி தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமடையும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்...

கால் தேக்கரண்டி அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் காய்ச்சல், கீழ்வாத காய்ச்சல் (Rheumatic fever) குணமடையும்.

பாம்பு கடி குணமடையும்...

பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு உடனடியாக தும்பைப்பூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன்பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.

கண்கோளறுகளுக்கு மருந்து...

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு குவளை வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள்  குணமடையும்...

கார்பரேட் ( இலுமினாட்டி) அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...


ஐந்திரம் (பஞ்சாங்கம்) பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகள்...


1-திங்கள் நாட்கள் அல்லது திங்களின் பக்கங்கள் அல்லது ஒருக்கலைகள்.

2-கிழமை (வாரம்)என்னும் ஞாயிறு நாட்கள் (Solar days).

3-நாள்மீன்கள் உடுக்காலங்கள் (நட்சத்திரங்கள்).

4-உடுக்களும் கோள்களும் ஒன்றோடொன்று புணர்வதை பற்றிய ஓகம் (யோகம்).

5-கணிய அல்லது வானியல் கணக்கைக் குறிக்கும்.

முதலில் பஞ்சாகத்தை பார்த்து நாள்கோள் குறிப்புகளைச் சொல்பவன் என்ற பொருளிலேயே,

பார்ப்பான் என்ற பெயர்ச்சொல் வந்திருக்க வேண்டும்,

ஆதாரமாக தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில்,

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனே எனும் வரிக்கு நாள்கோள் பற்றிய,

கணியநூலை (பஞ்சாங்கத்தை)க் கற்றுத்தேர்ந்தவன் என்று பொருளாகும்,

இதிலிருந்து மாறுபடும் கருத்துகள் நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்தப் பூசாரியை பார்ப்பான் என்று வந்ததாக கூற்று,

வேள்வி வளர்த்து தமிழரில்லாத பார்ப்பானை வேளாப் பார்ப்பானாக (வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த)கூறிவந்ததாக பாவணார் கூற்று,

பார்ப்பனப் பாங்கன், சூத்திரப் பாங்கன் என்றும் பாங்கர்கள் இருவகைப்பட்டார்கள்,

பாண்குடியினரான பிற்கால பறையரே சூத்திரப் பாங்கர் என்று பாவணார் கூறுகிறார்,

அவரணராக வைக்கப்பெற்ற பறையர்களுக்குச் சூத்திரன் என்ற இழிவான பட்டம் என்றுமே இருந்ததேயில்லை,

பாணர்களுக்கு உரியதாயிருந்த பாங்கன் தொழில் பின்னர் பார்ப்பார் வசமாகியதாக கூறுகிறார்,

ஆக நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்த பூசாரியே (பார்ப்பான்) பிற்காலத்தில் சூத்திரனாக்கப் பட்டானா?

நம்ப முடியாத உண்மைகள்.. டிஜிட்டல் இந்தியா...


தஞ்சை பெரிய கோவில் கோபுரம் இடித்தாக்கி சேதம்...


தஞ்சை பெரிய கோவில் நுழைவு கோபுரம் இடி தாக்கி சேதம் அடைந்தது. நேற்று மாலை முதல் கனமழை பெய்த நிலையில் பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது.

90 அடி உயரம் உள்ள அந்த கோபுரத்தின் மீது இடிதாங்கி அமைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த இடிதாங்கியும் சேதம் அடைந்து கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த யாழி சிற்பமும் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த யாழி சிற்பம் கோபுரத்தின் மேலேயே விழுந்துவிட்டதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இடிதாங்கி இல்லாமல் இருந்திருந்தால் கோபுரத்துக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

கோபுரம் சேதம் அடைந்ததையடுத்து பரிகார பூஜைகளுக்குப் பின் இரண்டொரு நாளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

நம்ப முடியாத உண்மைகள்... கொலம்பஸ்...


விடுதலை புலிகள் இயக்கத்தில் தமிழக இளைஞர்கள்...


ஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றேறக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்..

அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன்.

வீரமரணம் அடைந்தோருக்கு புலிகள் வழங்கும் 'மாவீரர்' பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண் போராளிகள் உட்பட 14 பேரின் விபரங்கள்..

பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு

பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது..

நடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப் பற்றிப் பேசிக் களைப் படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்...

கருப்பு சக்தி - நம்ப முடியாத உண்மைகள்...


ஈழத்தில் அடக்குமுறை தாங்கமுடியாமல், 22.2.1972 அன்று ஈழத்து தந்தை செல்வா அவர்கள் சென்னை வந்து ஈ.வே. ரா-வைச் சந்தித்து உதவி கேட்டார்...


ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட முடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்.. என்று ஈவேரா சொல்லி திருப்பியனுப்பினார்.

(அங்கு சென்று போராடுங்கள் என்றால் என்ன பொருள், 'நீ இங்கே எதற்கு வந்தாய்?' என்று பொருள்; ஒரு அடிமை போராடமுடியாது என்றால் பார்ப்பனர் குடுமியை அறுத்தது போராட்டமன்றி வன்முறை என்பது தெளிவாகிறது தானே- இது எனக்குத் தோன்றுவது).

அங்கே போய் போராடத்தான் சொன்னார்; பணிந்து போய்விடுங்கள் என்று சொல்லவில்லை.

(பெரியார் அப்படிச் சொன்னதால்தான் செல்வா அங்கே சென்று போராடி, ஈழப்பிரச்சனைக்கு தனிநாடு கோரி, தமிழர்கள் ஆயுதம் ஏந்தி படையமைத்து, நமக்கு தேசியத் தலைவர் கிடைத்து, நிழலுக ஈழம் அமைந்து, உலக நாடுகளையெல்லாம் எதிர்த்துநின்றி போராடி வீழ்ந்து, இன்று அது உலகம் முழுவதும் அதிர்வுண்டாக்கி, உலகத்தமிழர் எழுச்சிகொள்ள காரணமாகியுள்ளது; ஆக இதிலிருந்து பெரியார் தந்த பகுத்தறிவுக்கு எட்டுவது என்ன?

இன்று நம் எழுச்சிக்குக் காரணம் அன்று வந்த ஈழத்தலைவரை பெரியார் 'இங்கே ஏன் வந்தாய் அங்கேயே போய் போராடிக்கொள்' என்று கூறியதை அவர் வேதவாக்காக கொண்டு செயல்பட்டது தான். அன்று பெரியார் மட்டும் 'நீங்கள் பணிந்துபோய்விடுங்கள்' என்று கூறியிருந்தால் அவர்கள் பணிந்து போயிருப்பார்கள் அல்லவா?; அடடா பெரியாரின் சிந்தனையே தொலை நோக்கு சிந்தனை-- இது எனக்கு தோன்றுவது இல்லை, தமிழருக்குள் ஊடுருவியிருக்கும் தமிழின எதிரிகளுக்குத் (திராவிடர்களுக்கு)  தோன்றுவது.

1954ல் 'திருவாங்கூர் தமிழர் காங்கிரசு' கட்சியினர் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மார்சல் நேசமணி தலைமையில் திருச்சியிலுள்ள 'பெரியார் மாளிகை'க்கு வந்து ஈவேராவைச் சந்தித்தனர்; பட்டதாணுப்பிள்ளை என்ற மலையாளியின் ஆட்சியில் 'திருவாங்கூர் - கொச்சி சமஸ்தானத்தில் '(கேரள மாநிலம் உருவாகும் முன் இருந்த மலையாள மாநிலம்) தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லி 9தமிழ் வட்டங்களை(தாலுகா) தமிழகத்துடன் இணைக்கும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோருகின்றனர்;

"நீங்கள் வருவதற்கு சற்றுமுன்தான் கே.எம்.பணிக்கர் வந்தார்; அவர் தோட்டவேலை செய்யும் கூலிகள்தான் தமிழர்கள், தோட்ட முதலாளிகள் அனைவரும் மலையாளிகள்; எனக்கே அங்கு மூன்று ஏக்கருக்கு மேல் தோட்டம் உள்ளது, தமிழர் அந்த வட்டங்களைக் கோருவது அநியாயம் என்று கூறினார்; எனக்கு அவர் சொல்வதுதான் சரியாகப் படுகிறது".

என்று சொல்லி திருப்பியனுப்பினார்.

(பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து தமிழர் பெரும்பான்மை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கக் கோருவதை விட, ஒரே ஒரு மலையாளி மூன்று ஏக்கர் தோட்டம் பற்றிக் கூறியது நியாயமாகப் படுகிறதா?;

அன்று ஆதரவு கொடுத்திருந்தால் இன்று திருவனந்தபுரம் தமிழகத்தில் இருந்திருக்குமே; முல்லைப் பெரியாறு அணை உள்ள மாவட்டமே தமிழகத்தில் இருந்திருக்குமே; சிறுவாணி ஆறு, முல்லைப்பெரியாறு, ஆகிய ஆறுகள் வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தமிழக வயல்களுக்கு பயன்பட்டிருக்குமே; 2,000 தமிழர்கள் உயிரைக் கொடுத்து போராடி 9வட்டங்களில் வெறும் 4 அதுவும் நீர்வளம், காடுகள் போன்ற முக்கிய வளங்கள் இல்லாத நான்குவட்டங்களை (தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம்) அதிலும் முக்கிய நகரமான திருவனந்தபுரத்தையும் எடுத்துக் கொண்டு பிச்சை போட்டார்களே அந்தக் கேவலம் நடந்திருக்காதே;

1955லேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் தந்த வனப்பகுதி இன்று தமிழ்நாட்டில் இருந்திருக்குமே; கண்ணகிக் கோவில் சிதைந்த நிலையில் கேட்பாரற்று கேரள எல்லைக்குள் இருந்திருக்காதே --இது எனக்குத் தோன்றுவது..

"அந்தப் பகுதிகள் இல்லையென்றால் கேரளம் கஷ்டப்படும், என்று பெரியார் கூறியுள்ளார்; கேரளாவே சிறியது அதிலும் பாதி தமிழர் பகுதி என்றால் எப்படி; காமராசர் கூட அப்பகுதிகளை இணைப்பதற்கு ஆதரவு தரவில்லை அவரிடம் போய்க் கேட்க வேண்டியது தானே; பெரியாரை மட்டும் குற்றம் சாட்டுகிறீர்கள் பார்ப்பனக் கூலிகளே".

(பெரியார் அன்று அப்படி செய்ததால் தான் இன்று முல்லைப் பெரியாறை முழுதாக அடைக்காமல் கொஞ்சமாவது தண்ணீர் தருகின்றனர்; ஈழப் படுகொலையில் மலையாளிகள் பெரும்பங்கு ஆற்றியதோடு நிறுத்திக் கொண்டனர், இல்லையென்றால் முழுப்பங்கு ஆற்றியிருப்பர்; அன்று அப்படி செய்ததால்தான் ஈழத்திற்கு உதவிசெய்த ம.கோ.ரா(எம்ஜிஆர்) என்ற மலையாளி நமக்கு கிடைத்தார்; நம்மீது மலையாளிகள் கருணை கொண்டு எல்லைப்பகுதி தமிழக சிற்றூர்களில் கொஞ்சமாக வேதி(ரசாயன)க் கழிவுகளைக் கொட்டுகின்றனர்; தற்போதைய தமிழகத்திலும் எட்டில் ஒரு பகுதி நிலம் மட்டும் மலையாள முதலாளிகளிடம் உள்ளது, இல்லையென்றால் முழு தமிழகத்தையும் வாங்கியிருப்பார்கள்; அவர்கள் நம்மீது பாசமாக இருப்பதால்தான் நம் ஆற்றுமணலை அள்ளிக்கொண்டுபோய் வீடுகட்டுகின்றனர்; திருவனந்தபுரம் அவர்களுக்குக் கொடுத்ததால்தான் அவர்கள் நன்றியுடன் அதை தலைநகராக்கி உணவகங்கள் கட்டி அதில் படித்த தமிழ்இளைஞர் மேசை துடைக்கும் வேலைக்குப்போய் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது- இது எனக்குத் தோன்றவில்லை, தமிழருக்குள் ஊடுருவியிருக்கும் தமிழின எதிரிகளுக்குத் (திராவிடர்களுக்கு)  தோன்றுவது...

லைக்கா விசுவாசி சீமான்...


கற்பனை தான் உண்மையான மாயக் கம்பளம்...


உங்களுடைய சக்தியை சரியான முறையில் இடம் பெயரச் செய்து நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்கு சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும்.

நீங்கள் வேண்டும் என்று விரும்பிய வற்றிற்கு, முன்னதாகவே நன்றி தெரிவிக்கும் செயல், உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்ஞையை அனுப்பும்.

உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவது தான் அக்காட்சியின் படைப்பாகும்.

 அகக் காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணங்களையும் உருவாக்குகி றீர்கள். நீங்கள் உங்கள் மனக் கண்ணால் என்ன பார்த்தீர்களோ? அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்.

ஒரு நாளின் இறுதியில், தூங்கப் போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக்கண்ணால் பாருங்கள்.

ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ, நீங்கள் விரும்பியபடி அமைய வில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி நிகழ வேண்டும் என்று விரும்பியிருந்தீர்களோ அப்படி நடை பெற்றதைப் போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள்.

அடுத்தநாள் நீங்கள் விரும்பியபடி எல்லாம் மாறிவிடும்...

நீட் தேர்வு உண்மைகள்...


சென்னை (நாய்க்கெப்) பட்டிணம்...


சென்னை' என்கிற தெலுங்கு பெயர் எப்படி தமிழர்களின் தலைநகருக்கு வந்தது தெரியுமா?

ஆங்கிலேயர்களான 'பிரான்சிஸ்டே' மற்றும் 'ஆன்ட்ரு கோகன்' ஆகியோரின் உதவியாளராக இருந்த 'பெரிதிம்மப்ப' என்ற தெலுங்கர் மூலம், தற்போது 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' அமைந்துள்ள இடத்தை 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' என்ற தெலுங்கரிடம் இருந்து விலைக்கு வாங்கி குந்த இடம் அமைத்துக் கொண்டு தமது ஆக்கிரமிப்புக்கு அடிகோலிய 1639 ஆகஸ்ட் 22நாளை 'சென்னை நாள்' என்று
அறிவித்து இன்றும் வெட்கமானமில்லாமல் கொண்டாடி வருகிறோம்..

விஜயநகர பேரரசில் அரவீடு மரபைச் சேர்ந்த (வந்தவாசி , காளகஸ்தி பகுதியை ஆட்சி செய்த) தெலுங்கு பரம்பரையினரான 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' 300 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரனிடம் பணத்துக்கு நிலம் விற்றதை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

'அய்யப்ப நாய்க்கெர்' , 'ராயர் நாய்க்கெர்' என்ற சென்னப்ப நாய்க்கெரின் வாரிசுகள் பெயரில் தற்போது ஐயப்பன்தாங்கல், ராயபுரம் போன்ற பகுதிகள் சென்னையில் உள்ளன; அவர்கள் என்ன விடுதலைப் போராளிகளா?

பணத்துக்கு நிலம் விற்றவர் என்றாலும் தெலுங்கர் என்ற ஒரே தகுதி அவர்கள் நினைவை தமிழ்நாட்டில் விதைக்க போதுமானதா?

1957ல் சங்கரலிங்கனார் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை 'தமிழ் நாடு' என்று மாற்றக்கோரி 76நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறந்தாரே அவர் பெயரில் ஒரு சாலை கூட இல்லை.

அவர் இறந்த பிறகும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 24-2-1961ல் தமிழில் 'தமிழ் நாடு' என்றும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்'  என்றும் குறிப்பிடப்படும் என்ற அறிவிப்பை சி.சுப்பிரமணியன் வெளியிடுகிறார்.

ஆனால் 1969ல் தான் அது நடைமுறைக்கே வருகிறது; அதில் மட்டும் ஏன் இத்தனை மெத்தனம்?

1990களில் 'மெட்ராஸ்' என்ற பெயரை மாற்றி தமிழில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது; 1996ல் 'சென்னை' என்ற பெயர்மாற்றம் செய்யப்படுகிறது; இது தமிழ்சொல் அன்று; ஆராய்ந்த போது இதுவும் தெலுங்கு பெயரே.

சென்னையில் வேற்றினத்தார் பெயர்கள்:

1)தமிழக சட்டமன்ற தலைமைச் செயலகம் 2010ல் 400கோடி செலவில் கட்டப்பட்டு அதற்கே ஓமந்தூரார் என்றறியப்படும் ராமசாமி ரெட்டியார் என்ற தெலுங்கர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

2) டி.நகர், தெலுங்கரான சர்.பிட்டி. தியாகராஜ செட்டி என்பவர் பெயரில் உள்ளது; தியாகராயர் மாளிகை கூட உள்ளது.

3) பனகல் பூங்கா (panagal park) , பனகல் ராஜா என்றறியப்படும் தெலுங்கர் 'பனங்கன்டி ராமராய நியங்கார்' என்பவரின் பெயரில் அமைக்கப்பட்டு அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது; சைதாப்பேட்டையில் 'பனகல் மாளிகை' கூட உள்ளது.

4) மரு.நாயர் சாலை (Dr.Nayar road) என்பது டி.எம்.நாயர் என்ற மலையாளியின் பெயரில் உள்ளது.

5) தமிழினக் கொலையாளி பெயரில் 'ராஜீவ் காந்தி சாலை'யும், 'ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை'யும் உள்ளது

6) மரு.ம.கோ.இரா சாலை (Dr.M.G.R road) மலையாளியின் பெயரில் உள்ளது.

7) ஜெயலலிதாவுடன் குடித்தனம் நடத்திய கன்னட நடிகன் 'சோபன் பாபு'வுக்கு பொது இடத்தை ஆக்கிரமித்தபடி சிலை உள்ளது.

8) இராதாகிருசணன் சாலை தெலுங்கரான 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்' பெயரில் உள்ளது.

9) சர்தார் படேல் சாலை, குசராத்தியரான வல்லபாய் படேல் பெயரில் உள்ளது.

10) காந்தி சாலை குசராத்தியரான 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' பெயரில் உள்ளது; அது போதாதென்று அவர் மனைவி பெயரில் 'கஸ்தூர்பா நகர்' உள்ளது.

11) பெரியார் ஈ.வே.ரா சாலை கன்னட தெலுங்கரான 'ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாய்க்கெர்' பெயரில் உள்ளது.

12) மரு.முத்துலச்சுமி ரெட்டி சாலை (Dr.Muthulakshmi Reddy) என்ற தெலுங்கரின் பெயரில் உள்ளது.

13) பொபிலி ராஜா சாலை, பொப்பிலி ராஜா என்றறியப்படும் தெலுங்கர் பெயரில் உள்ளது.

14) கே.கே.நகர் (கலைஞர் கருணாநிதி நகர்) தெலுங்கராக கருணாநிதி பெயரில் உள்ளது.

மேலும் ஜவஹர்லால் நேரு சாலை, நேரு நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், அசோக் நகர், சைதா பேட்டை, சௌகார் பேட்டை, ஜாபர்கான் பேட்டை, ராயப்பேட்டை, ஷெனாய் நகர், மேத்தா நகர், முனுசாமி நாயுடு நகர்…… என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களில் சிலர் தமிழக அரசியலில் அல்லது சமூகப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம்; ஆனால், இவர்களை விட பெரிய அளவில் போராடிய தமிழர்கள் மறைக்கப்பட்டுள்ளனர்.

காமராசர், முத்துராமலிங்கனார், வள்ளலார், திரு.வி.க போன்ற மறைக்க முடியாத தலைவர்கள் பெயரில் மட்டுமே சில பகுதிகள் உள்ளன; வேறுசில தமிழ்ப் பார்ப்பார்ப்பனர் பெயர்களும் ஆங்கிலேயர் பெயர்களும் இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்காக பாடுபட்டவர்கள் அல்லர்..

சுருக்கமாகக் கூறினால் தமிழ்த் தலைவர்கள் யாருக்குமே தமிழகத்தைத் தாண்டி சாலையோ, சிலையோ, மாளிகையோ, நினைவிடமோ இல்லாத நிலையில், தமிழகத் தலைநகரில் பெரும்பாலும் பிற இனத்தவர் பெயரே வைக்கப்பட்டிருப்பது ஏன்?

இருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ்ப் பெயர்களிலும் அடையாளமே தெரியாத தமிழர்கள் பெயரே இருப்பது ஏன்?

நன்கு அலசி ஆராய்ந்ததில் டெல்லியில் 'சுப்ரமண்ய பாரதி' சாலை இருப்பதாகத் தெரிகிறது. அவர் தமிழ்ப் பார்ப்பனர் இல்லையென்றால் அதுவும் இருந்திருக்குமா?

தேர்தல் என்று வந்து 100வருடங்களில் தமிழகத்தை வெறும் 15வருடங்கள் தமிழர்கள் ஆண்டனர்; 85வருடங்கள் தமிழரல்லாதவரே ஆண்டு வருகின்றனர்;

800 வருடமாக கண்டவனையும் ஆள விட்டு விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம்...

எமது கண்கள் விரிந்த நிலையில் உம்மை நோக்கி என்றுமே...


கழிவு நீரை பளிங்கு நீராக்கி நீங்களும் வீட்டுத் தோட்டம் போடலாம்...


வீட்டுத்தோட்டம் போட ஆசைதான், ஆனால் தண்ணீருக்கு எங்கு செல்வது? என்று மலைத்து நின்றுவிடுவோம். இனி அந்த கவலையை விடுங்கள். வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரையே எளிய முறையில் சுத்தப்படுத்தி பயன்படுத்தால்.

இதோ அதற்கான தொழில்நுட்பம்...

வீட்டில் உள்ள குளியல் அறை, கழிவறை, சமையல் அறை ஆகியவற்றில் இருந்து வெளியே செல்லும் நீரில் ரசாயனங்கள் கலந்து இருக்கும். அவற்றை அப்படியே செடி, கொடிகளுக்குப் பாய்ச்சினால்... அவை பாதிப்படையும்.

அதேசமயம், இந்த நீரை எளிய முறையில் சுத்திகரித்துவிட முடியும். அதைப் பயன்படுத்தினால் செடி, கொடிகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.

நீளம், அகலம், ஆழம் அனைத்தும் மூன்று அடி அளவுள்ள ஒரு சிமிட்டி (cement) தொட்டியின் வழியாக கழிவுநீர் செல்வது போல் அமைக்க வேண்டும். தொட்டியின் அடிபாகத்தில் தண்ணீர் வெளியேற துளை இருக்க வேண்டும்.

தொட்டியில் நீரை விடுவதற்கு முன்பு, மணல், கருங்கல் ச(ஜ)ல்லி போன்றவற்றை பாதி அளவுக்கு நிரப்பி, அதில் கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நடவும்.

சல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பொருட்களைப்புளிக்க வைக்கும் அல்லது நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) , குளியல் அறை நீரில் கலந்துள்ள பொசு(ஸ்)பேட் உப்பு (Phosphate salt), வெடியம் (sodium) என பல உப்புகளையும் தின்றுவிடும்.

கல்வாழை செடிகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் தொட்டியின் கீழ்ப் பகுதிக்குச் செல்ல உதவும். தொட்டியில் நீரை விட்ட ஒரு மணி நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வரத் தொடங்கும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரில் செடி, கொடிகள் நன்றாக வளரும்...

மண் பானைகள்...


மிஸ்டர் மராட்டிய ரஜினிக்காந்த் மற்றும் அவரின் இரசிகர்களே...


கர்நாடகா போன்று நாங்கள் காலாவுக்கு தடைபோட போராடவில்லை.. விநியோகஸ்தர்களை அடிக்கவில்லை.. கன்னட மொழியில் கெஞ்ச வைக்கவில்லை..

ஜனநாயக வழியில் புறக்கணிப்பு செய்ய அறம் சார்ந்த கோரிக்கைகளை எங்களின் தமிழ்மக்களிடம் வைக்கிறோம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் மனநிலை பொறுத்தது. தாங்களின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அபிமானத்தை ஓட்டாக மாற்ற BJP துடிக்கிறது.

அதற்கு ஒத்துழைக்கும் தாங்களின் செயல்பாட்டையும் அதனால் தமிழ்  வார்த்தைகளின் வலிமை தெரியாமல் நீங்கள் உதிர்த்த விமர்சனத்தையும் தூத்துகுடி மக்களின் தியாகத்தை போராளிகளை  கொச்சை படுத்தியதோடு அந்த தூத்துகுடி போராட்டத்தையே தற்போது மடைமாற்றி காலா எதிர்ப்பாக மாறி திசைதிருப்பி விட்ட அரசியல்சகுணிகளுக்கு தாங்கள் கொடுத்த ஒத்துழைப்புமே உங்களது அஸ்திவாரத்தை தற்போது அசைத்து விட்டது.. இப்போதும் தாங்களுக்கு கைகொடுப்பது தமிழ்நாட்டின் இரசிகர்களே! இப்போதாவது தமிழனை புரிந்து கொள்ளுங்கள்.

ஆளில்லாத இடத்தில் அடாவடி செய்யும் கன்னட வெறியர்களுக்கும் ஆயுதத்தை நம்பி அதன் பின்னே பயந்து நடுங்கும் வடஇந்திய வெறியர்களுக்கும்.

ஆயிரம் படைகள் மார்பை கிழிக்க காத்திருந்தாலும் அஞ்சாமல் அறத்தின் பால் நம்பிக்கை கொண்டு ஆயுதத்தை நம்பாமல் மனவலிமையும் உணர்வையும் தாங்கி நிலத்தில் யாருக்கும் அஞ்சாத ஞானச்செருக்கும் ஆளுமையும் வீரமும் கொண்ட தமிழனையும் ஒரே தட்டில் எடைபோடாதீர்.

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு.
கூடாநட்பு கேடாய் முடியும் என்பது போல்
உடனிருந்தே கொல்லும் வியாதிப்போல சேர்ந்தாரைக் கொல்லும் நோய் விஷக்கிருமி "RSS" சமூகவிரோதிகள் தானேத்தவிர உரிமைக்காக போராடும் தமிழனல்ல! இப்போதும் தங்கள் மீது அபிமானம் கொண்ட காரணத்தால் அனைத்து ஏச்சு பேச்சுகளையும் சுமந்து தாங்களுக்கு தோள் கொடுப்பது தாங்கள் தமிழ் இரசிகர்களே தவிர உங்களை பயன்படுத்தி குளிர்காய்ந்த எந்த மூர்த்தியும் BJP யும் RSS ம் தங்களுக்கு உதவப்போவதில்லை.

அந்த இரசிகர்களை உங்கள் தெய்வங்களை இந்த அரக்கர்களுக்காக பலி கொடுத்து விடாதீர்கள். BJP&RSS மிரட்டலுக்கு பணிந்து கோமாளி ஆகிவிடாதீர்கள்.  இரசிகர்களை ஏமாளி ஆக்கிவிடாதீர்..

இனியாவது உண்மையான ஆன்மீகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சம் (கடவுள்) தாங்களுக்கு அளித்திருக்கும் கொடை இத்துணை கோடிமக்களின் அன்பு வேறு எந்த மனிதனுக்கும் கிட்டாதது. அதை மிரட்டலுக்கு பயந்து  தவறாக உபயோகபடுத்துவோரின் காலடியில் அடகு வைக்காதீர்.

ஏனெனில் நமக்கு கொடுத்த ஒவ்வொரு திறமைக்கும் கடமைக்கும் நாம் பிரபஞ்சத்திடம் கணக்கு கொடுத்தாக வேண்டும்...

மத மிருகங்களுக்காக சிறப்பு பதிவு...


கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துள்ள புகைப்படம், கோவை அதிமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


கோவை, வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர், சுந்தர் மற்றும் கிதர் முகமது ஆகியோருடன் இணைந்து, கலர் ஜெராக்ஸ் மூலம், கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளார். போலீஸாரின் வாகனத் தணிக்கையின்போது கள்ளநோட்டு விவகாரம் வெளியில் வந்தது. இதையடுத்து, ஆனந்த் மற்றும் கிதர் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கள்ளநோட்டு அச்சடிப்பதற்காகப் பயன்படுத்திய அலுவலகத்தில் இருந்து, 1.18 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹவாலா நெட்வொர்க் மூலம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களை குறிவைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தக் கள்ளநோட்டு கும்பலின் தலைவனான சுந்தர், நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துள்ள படம் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில், கடந்த ஆண்டு ஆதியோகி சிலையை திறந்து வைப்பதற்காக, பிரதமர் மோடி வந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் கோவை விநியோகஸ்தர் ஆத்மா சிவக்குமார் மூலம், முதல்வரைச் சந்தித்துள்ளார் ஆனந்த். இதனால், கள்ளநோட்டு வழக்கு முறையாக நடக்குமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் புகைப்படம் எடுத்துள்ள ஆனந்த் மீது, டூ வீலர் திருட்டு வழக்கு, செயின் பறிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன...