கர்நாடகா போன்று நாங்கள் காலாவுக்கு தடைபோட போராடவில்லை.. விநியோகஸ்தர்களை அடிக்கவில்லை.. கன்னட மொழியில் கெஞ்ச வைக்கவில்லை..
ஜனநாயக வழியில் புறக்கணிப்பு செய்ய அறம் சார்ந்த கோரிக்கைகளை எங்களின் தமிழ்மக்களிடம் வைக்கிறோம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் மனநிலை பொறுத்தது. தாங்களின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அபிமானத்தை ஓட்டாக மாற்ற BJP துடிக்கிறது.
அதற்கு ஒத்துழைக்கும் தாங்களின் செயல்பாட்டையும் அதனால் தமிழ் வார்த்தைகளின் வலிமை தெரியாமல் நீங்கள் உதிர்த்த விமர்சனத்தையும் தூத்துகுடி மக்களின் தியாகத்தை போராளிகளை கொச்சை படுத்தியதோடு அந்த தூத்துகுடி போராட்டத்தையே தற்போது மடைமாற்றி காலா எதிர்ப்பாக மாறி திசைதிருப்பி விட்ட அரசியல்சகுணிகளுக்கு தாங்கள் கொடுத்த ஒத்துழைப்புமே உங்களது அஸ்திவாரத்தை தற்போது அசைத்து விட்டது.. இப்போதும் தாங்களுக்கு கைகொடுப்பது தமிழ்நாட்டின் இரசிகர்களே! இப்போதாவது தமிழனை புரிந்து கொள்ளுங்கள்.
ஆளில்லாத இடத்தில் அடாவடி செய்யும் கன்னட வெறியர்களுக்கும் ஆயுதத்தை நம்பி அதன் பின்னே பயந்து நடுங்கும் வடஇந்திய வெறியர்களுக்கும்.
ஆயிரம் படைகள் மார்பை கிழிக்க காத்திருந்தாலும் அஞ்சாமல் அறத்தின் பால் நம்பிக்கை கொண்டு ஆயுதத்தை நம்பாமல் மனவலிமையும் உணர்வையும் தாங்கி நிலத்தில் யாருக்கும் அஞ்சாத ஞானச்செருக்கும் ஆளுமையும் வீரமும் கொண்ட தமிழனையும் ஒரே தட்டில் எடைபோடாதீர்.
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு.
கூடாநட்பு கேடாய் முடியும் என்பது போல்
உடனிருந்தே கொல்லும் வியாதிப்போல சேர்ந்தாரைக் கொல்லும் நோய் விஷக்கிருமி "RSS" சமூகவிரோதிகள் தானேத்தவிர உரிமைக்காக போராடும் தமிழனல்ல! இப்போதும் தங்கள் மீது அபிமானம் கொண்ட காரணத்தால் அனைத்து ஏச்சு பேச்சுகளையும் சுமந்து தாங்களுக்கு தோள் கொடுப்பது தாங்கள் தமிழ் இரசிகர்களே தவிர உங்களை பயன்படுத்தி குளிர்காய்ந்த எந்த மூர்த்தியும் BJP யும் RSS ம் தங்களுக்கு உதவப்போவதில்லை.
அந்த இரசிகர்களை உங்கள் தெய்வங்களை இந்த அரக்கர்களுக்காக பலி கொடுத்து விடாதீர்கள். BJP&RSS மிரட்டலுக்கு பணிந்து கோமாளி ஆகிவிடாதீர்கள். இரசிகர்களை ஏமாளி ஆக்கிவிடாதீர்..
இனியாவது உண்மையான ஆன்மீகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்த பிரபஞ்சம் (கடவுள்) தாங்களுக்கு அளித்திருக்கும் கொடை இத்துணை கோடிமக்களின் அன்பு வேறு எந்த மனிதனுக்கும் கிட்டாதது. அதை மிரட்டலுக்கு பயந்து தவறாக உபயோகபடுத்துவோரின் காலடியில் அடகு வைக்காதீர்.
ஏனெனில் நமக்கு கொடுத்த ஒவ்வொரு திறமைக்கும் கடமைக்கும் நாம் பிரபஞ்சத்திடம் கணக்கு கொடுத்தாக வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.