08/06/2018

ஈழத்தில் அடக்குமுறை தாங்கமுடியாமல், 22.2.1972 அன்று ஈழத்து தந்தை செல்வா அவர்கள் சென்னை வந்து ஈ.வே. ரா-வைச் சந்தித்து உதவி கேட்டார்...


ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட முடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்.. என்று ஈவேரா சொல்லி திருப்பியனுப்பினார்.

(அங்கு சென்று போராடுங்கள் என்றால் என்ன பொருள், 'நீ இங்கே எதற்கு வந்தாய்?' என்று பொருள்; ஒரு அடிமை போராடமுடியாது என்றால் பார்ப்பனர் குடுமியை அறுத்தது போராட்டமன்றி வன்முறை என்பது தெளிவாகிறது தானே- இது எனக்குத் தோன்றுவது).

அங்கே போய் போராடத்தான் சொன்னார்; பணிந்து போய்விடுங்கள் என்று சொல்லவில்லை.

(பெரியார் அப்படிச் சொன்னதால்தான் செல்வா அங்கே சென்று போராடி, ஈழப்பிரச்சனைக்கு தனிநாடு கோரி, தமிழர்கள் ஆயுதம் ஏந்தி படையமைத்து, நமக்கு தேசியத் தலைவர் கிடைத்து, நிழலுக ஈழம் அமைந்து, உலக நாடுகளையெல்லாம் எதிர்த்துநின்றி போராடி வீழ்ந்து, இன்று அது உலகம் முழுவதும் அதிர்வுண்டாக்கி, உலகத்தமிழர் எழுச்சிகொள்ள காரணமாகியுள்ளது; ஆக இதிலிருந்து பெரியார் தந்த பகுத்தறிவுக்கு எட்டுவது என்ன?

இன்று நம் எழுச்சிக்குக் காரணம் அன்று வந்த ஈழத்தலைவரை பெரியார் 'இங்கே ஏன் வந்தாய் அங்கேயே போய் போராடிக்கொள்' என்று கூறியதை அவர் வேதவாக்காக கொண்டு செயல்பட்டது தான். அன்று பெரியார் மட்டும் 'நீங்கள் பணிந்துபோய்விடுங்கள்' என்று கூறியிருந்தால் அவர்கள் பணிந்து போயிருப்பார்கள் அல்லவா?; அடடா பெரியாரின் சிந்தனையே தொலை நோக்கு சிந்தனை-- இது எனக்கு தோன்றுவது இல்லை, தமிழருக்குள் ஊடுருவியிருக்கும் தமிழின எதிரிகளுக்குத் (திராவிடர்களுக்கு)  தோன்றுவது.

1954ல் 'திருவாங்கூர் தமிழர் காங்கிரசு' கட்சியினர் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மார்சல் நேசமணி தலைமையில் திருச்சியிலுள்ள 'பெரியார் மாளிகை'க்கு வந்து ஈவேராவைச் சந்தித்தனர்; பட்டதாணுப்பிள்ளை என்ற மலையாளியின் ஆட்சியில் 'திருவாங்கூர் - கொச்சி சமஸ்தானத்தில் '(கேரள மாநிலம் உருவாகும் முன் இருந்த மலையாள மாநிலம்) தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லி 9தமிழ் வட்டங்களை(தாலுகா) தமிழகத்துடன் இணைக்கும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோருகின்றனர்;

"நீங்கள் வருவதற்கு சற்றுமுன்தான் கே.எம்.பணிக்கர் வந்தார்; அவர் தோட்டவேலை செய்யும் கூலிகள்தான் தமிழர்கள், தோட்ட முதலாளிகள் அனைவரும் மலையாளிகள்; எனக்கே அங்கு மூன்று ஏக்கருக்கு மேல் தோட்டம் உள்ளது, தமிழர் அந்த வட்டங்களைக் கோருவது அநியாயம் என்று கூறினார்; எனக்கு அவர் சொல்வதுதான் சரியாகப் படுகிறது".

என்று சொல்லி திருப்பியனுப்பினார்.

(பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து தமிழர் பெரும்பான்மை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கக் கோருவதை விட, ஒரே ஒரு மலையாளி மூன்று ஏக்கர் தோட்டம் பற்றிக் கூறியது நியாயமாகப் படுகிறதா?;

அன்று ஆதரவு கொடுத்திருந்தால் இன்று திருவனந்தபுரம் தமிழகத்தில் இருந்திருக்குமே; முல்லைப் பெரியாறு அணை உள்ள மாவட்டமே தமிழகத்தில் இருந்திருக்குமே; சிறுவாணி ஆறு, முல்லைப்பெரியாறு, ஆகிய ஆறுகள் வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தமிழக வயல்களுக்கு பயன்பட்டிருக்குமே; 2,000 தமிழர்கள் உயிரைக் கொடுத்து போராடி 9வட்டங்களில் வெறும் 4 அதுவும் நீர்வளம், காடுகள் போன்ற முக்கிய வளங்கள் இல்லாத நான்குவட்டங்களை (தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம்) அதிலும் முக்கிய நகரமான திருவனந்தபுரத்தையும் எடுத்துக் கொண்டு பிச்சை போட்டார்களே அந்தக் கேவலம் நடந்திருக்காதே;

1955லேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் தந்த வனப்பகுதி இன்று தமிழ்நாட்டில் இருந்திருக்குமே; கண்ணகிக் கோவில் சிதைந்த நிலையில் கேட்பாரற்று கேரள எல்லைக்குள் இருந்திருக்காதே --இது எனக்குத் தோன்றுவது..

"அந்தப் பகுதிகள் இல்லையென்றால் கேரளம் கஷ்டப்படும், என்று பெரியார் கூறியுள்ளார்; கேரளாவே சிறியது அதிலும் பாதி தமிழர் பகுதி என்றால் எப்படி; காமராசர் கூட அப்பகுதிகளை இணைப்பதற்கு ஆதரவு தரவில்லை அவரிடம் போய்க் கேட்க வேண்டியது தானே; பெரியாரை மட்டும் குற்றம் சாட்டுகிறீர்கள் பார்ப்பனக் கூலிகளே".

(பெரியார் அன்று அப்படி செய்ததால் தான் இன்று முல்லைப் பெரியாறை முழுதாக அடைக்காமல் கொஞ்சமாவது தண்ணீர் தருகின்றனர்; ஈழப் படுகொலையில் மலையாளிகள் பெரும்பங்கு ஆற்றியதோடு நிறுத்திக் கொண்டனர், இல்லையென்றால் முழுப்பங்கு ஆற்றியிருப்பர்; அன்று அப்படி செய்ததால்தான் ஈழத்திற்கு உதவிசெய்த ம.கோ.ரா(எம்ஜிஆர்) என்ற மலையாளி நமக்கு கிடைத்தார்; நம்மீது மலையாளிகள் கருணை கொண்டு எல்லைப்பகுதி தமிழக சிற்றூர்களில் கொஞ்சமாக வேதி(ரசாயன)க் கழிவுகளைக் கொட்டுகின்றனர்; தற்போதைய தமிழகத்திலும் எட்டில் ஒரு பகுதி நிலம் மட்டும் மலையாள முதலாளிகளிடம் உள்ளது, இல்லையென்றால் முழு தமிழகத்தையும் வாங்கியிருப்பார்கள்; அவர்கள் நம்மீது பாசமாக இருப்பதால்தான் நம் ஆற்றுமணலை அள்ளிக்கொண்டுபோய் வீடுகட்டுகின்றனர்; திருவனந்தபுரம் அவர்களுக்குக் கொடுத்ததால்தான் அவர்கள் நன்றியுடன் அதை தலைநகராக்கி உணவகங்கள் கட்டி அதில் படித்த தமிழ்இளைஞர் மேசை துடைக்கும் வேலைக்குப்போய் சம்பாதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது- இது எனக்குத் தோன்றவில்லை, தமிழருக்குள் ஊடுருவியிருக்கும் தமிழின எதிரிகளுக்குத் (திராவிடர்களுக்கு)  தோன்றுவது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.