நீதிமன்றமும்... ஐ.நா சபையும் கண்களை கட்டிக் கொண்டு... வாயை மூடிக் கொண்டும் இருக்கும்...
25/09/2020
ஆழ்மனதின் அற்புத சக்திகள்...
ஒரு மனிதனின் வெற்றி - தோல்வியையும், அவன் பலங்கள், பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.
இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான்.
ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.
1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.
ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும்.
சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில் இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.
அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்துக்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி 'உன்
காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன' என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார்.
பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.
அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.
இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன் படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.
துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள்.
முதலாமவன் "என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?" என்று கேட்கிறான். நம் ஆள் "இல்லையே
நன்றாகத் தானே இருக்கிறேன்," என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் "என்ன உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான்.
இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.
நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். "நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது" என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். "நான் பலவீனமானவன்", "என்னால் இது முடியாது", "எனக்கு ஆரோக்கியம் சரியில்லை" என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும்.
இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.
நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.
தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும்.
அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம்.
ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார்.
கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். "ஏன்?" என்று கேட்ட போது "அது தவறு" என்ற பதில் வந்தது.
நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.
இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.
ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.
பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். "என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" அவர்கள் கூறினார்கள். "ஆமாம் பிரபு" இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். "உங்கள் நம்பிக்கையின் படியே
உங்களுக்கு ஆகக் கடவதாக!". அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்)". (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.
ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள்.
அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள்.
வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்...
விழித்துக்கொள் எம் தமிழினமே...
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 [EIA 2020] சட்டம்...
நிலம் கையகப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை என்ற சட்டம்...
வேளாண் மசோதா சட்டம்...
பிரபஞ்ச சக்தி...
நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும். ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.
இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.
1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.
கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.
ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?
இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?
அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.
நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.
நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.
அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.
பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.
ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.
இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது...
இயற்கை அபரிமிதமானது...
எங்கெல்லாம் ஆபத்து இருக்கிறதோ..
அங்கெல்லாம் அதற்கே உண்டான வாழ்வும் இருக்கிறது...
எவை எல்லாம் விஷமாக கருதப்படுகிறதோ...
அவை எல்லாம் மறுபக்கம் அமிர்தமாக கருதப்படுகிறது...
எவை எல்லாம் வளர்கிறதோ...
அவை எல்லாம் அழியவும் செய்கிறது...
அதனால்...
ஆக்கமும் அழிவும் இயற்கையின் உள்ளே அடங்கி இருக்கிறது...
அதேபோல் தான் மனித வாழ்விலும் நிகழும்...
இதில் துன்பம் வந்தால் துவண்டு போவதும்...
இன்பம் வந்தால் துள்ளுவதும் மாயையே அன்றி வேறில்லையே....
இயற்கையை இயல்பை புரிந்து கொண்டால்...
எதனாலும் பாதிப்பு அடைய வேண்டிய இன்னல் இல்லை...
புரிதலும் அறிதலும் தான்...
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை...
இலுமினாட்டி யும் 666 இரகசியமும்...
கிறிஸ்த்துவம் அரசியல் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை முதலிலே பார்த்தோம்..
கிறித்தவம் கொள்கை ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்..
ஈசா நபி உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயே அவர் கொண்டு வந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப் பட்டுவிட்டது..
கிறித்தவத்தை இந்த அளவு கொள்கை ரீதியாக மாற்றியதில் மிக அதிக பங்கு இருப்பது பவுல் என்பவருக்கே..
யார் இந்தப் பவுல்?
வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர்..
இவரின் உண்மையான பெயர் Saul of tasus..
இது கிரேக்க மொழிப் பெயராகும்.
கிறித்தவத்தை ஏற்க முன்னர் இவர் நசாராக்களுக்கு அதிகம் அநியாயம் செய்த ஒருவராவார்.
இவர் டமஸ்கஸ் நகரத்துக்கு பிரயாணம் போகும் வழியில் இவரில் அதிக மாற்றம் காணப்பட்டது.
திரும்பி வந்த பின்னர் திடீர் என கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்.
ஏற்றது மட்டுமன்றி மும்முர பிரச்சாரகராகவும் மாறி தனது மொத்த வாழ்க்கையையும் கிறித்தவத்துக்காக அர்ப்பணம் செய்கிறார்.
தனது வசதிக்காக இவருடைய பிரச்சார அமைப்பு எப்படி இருந்தது என்றால் தான் பல கடவுள் ரோமனியர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு ரோமானியர் என்றும், யூதர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு யூதன் என்றும் கூறுவார்.
கிறித்தவர்களிடம் கிறித்தவராகவும் நடந்து கொள்ளுவார்.
இவர் தெளிவான நயவஞ்சகனாகவே நடந்து கொண்டு அதை சரிகாணவும் செய்தார்.
இதுதான் அவரது வாக்குமூலம்..
நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.
யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.
நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன்.
அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன்.
பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன்.
எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.
சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். (முதலாம் கொரிந்தியர் 9:19-23).
கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம்.
நசாராக்களின் மதக் கலாச்சாரம் யூதர்களைப் போலவே இருந்தது. (யூத வம்சத்தில் வந்ததால்) இதனை முற்றாக மாற்றி வேறு விதமான மதக் கலாச்சாரத்தை நுழைத்தவர் இவரே.
இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும்.
பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும்.
புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது.
லூசிபரிஸத்தை பின்பற்றும் சைத்தானியக் கூட்டம் வேதங்களை மாற்றியமைக்கும் ஒழுங்கு ஒன்று உள்ளது..
1. முதலில் நல்லது என்ற போர்வையில் பித்தத்தை (நவீனம்) தோற்றுவித்தல்.
2. இந்த விரிசலுக்குள் இணைவைப்பை நுழைத்தல்.
3. அப்படியே குப்ருக்கள் (இறை மறுப்பு) கொண்டு செல்லல். அத்தோடு அவ்வேதம் அழிந்து விடும்.
இதனால் தான் இறுதி வேதமான இஸ்லாத்தைப் பாதுகாக்க அல்லாஹ் பித்அத் சம்பந்தமாக அதிக எச்சரிக்கை செய்துள்ளான்.
இனிமேல் நபி வரமாட்டார்கள் என்பதால்தான் கடைசி நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் பித்அத் பற்றி எச்சரித்தார்கள்.
வேதங்களை அழிக்கும் முதல் படிதான் இந்த பித்அத்.
தூய கொள்கைக்குள் பித்அத்தை தோற்றுவிப்பது எவ்வாறு?
மனிதர்கள் மீது அதிக பற்றை ஏற்படுத்துவதன் மூலமே பித்அத் நுழையும்.
அப்பற்றின் காரணமாக அவர் என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம் உருவாகும்.
ஈசா நபி மீதும், அவரது தாயார் மீதும் அளவு கடந்த சென்டிமன்ட் பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல்.
ஈசாவோடு எப்போதும் அம்மாவையும் சேர்த்தே பவுல் காயை நகர்த்துவார்.
இதன் காரணம் பின்னர் விளங்கும்.
ஈசா நபியினதும் அவர் தாயினதும் கலங்கத்தை நீக்க கடவுளையே ஈசா நபியின் அப்பாவாக்கியவர் இவரே.
ஈசா நபியின் மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈசா நபியின் தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்தவே.
இணைவைப்பை நுழைப்பது எவ்வாறு?
வரலாற்றில் சைத்தானியர்கள் (லூசிபரிசம்-இலுமினாடிகள்) ஒரு கடவுள் கொள்கையை அழித்து இணைவைப்பை உருவாக்க எடுத்த முதல் ஆயுதம் திரித்துவம் தான்.
ஈசா நபி தந்தையின்றிப் பிறந்ததை சாதகமாக்கி முதலில் கடவுளை ஈசா நபிக்குக் தந்தையாக மாற்றுகிறார்.
ஈசா நபியின் கலங்கத்தைத் துடைக்க இதுவே நல்லது என்ற போர்வையில் நுழைகிறது.
தந்தை கடவுள் என்றால் மகன் கடவுளாக இருக்க வேண்டும் என்று ஒரு கடவுள் இரண்டாகிறது.
அதேபோல் கடவுளைப் பெற்றவளும் கடவுள்தானே என்ற லாஜிக்கின் அடிப்படையில் மரியமும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்.
கடவுள் ஒன்று என்பதை உறுதியாக நம்பும் மக்களிடம் சென்று அதை உடைக்க ஒரேயடியாக 3 கடவுள் என்று சொல்ல முடியாது.
முதலில் மூடலாக ஆரம்பிக்க வேண்டும். மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. முன்றும் ஒன்று என்ற குழப்பமான கொள்கைதான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம்.
பிதா, சுதன், ஆவி என்ற தற்போதைய திரித்துவம் Tertullian (155-230) என்பவரால் தோற்று விக்கப்பட்டது..
திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட மார்க்கங்கள் இந்த திரித்துவத்தின் மூலமாகவே இணைவைப்புக் கொள்கையாக சைத்தானியர்களால் மாற்றப்பட்டது.
உதாரணமாக..
1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, Athena, Apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.
2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய (புத்தரின் 3 உடம்பு).
3. பண்டைய எகிப்தில் Osiris, Isis, Horus இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.
4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.
5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி.
6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்.
7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்.
8. டாவோசியத்தில் Fu, Lu, Shou.
இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு.
இஸ்லாத்திலும் திரித்துவத்தை ஏற்படுத்தி இணைவைப்பைப் புகுத்த இலுமினாடிகள் முயன்று உருவாக்கப்பட்டதே ஷீயா மதமாகும்.
ஆனால் அதை வேறுபடுத்தி மார்க்கத்தை அல்லாஹ் பாதுகாத்தான்.
ஷீயாவில் உள்ள திரித்துவம் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்கள் தேடிப்பாருங்கள்..
இவ்வாறு மதங்களில் பித்அத்தை புகுத்தி பின் திரித்துவத்தை ஏற்படுத்தி அதில் இணைவைப்பை நுழைத்து கடைசியில் குப்ருக்கு இட்டுச்செல்லும் வேலையை கச்சிதமாக செய்தவர்கள் வரலாற்றில் சைத்தானியர்களே.
இதே வேலையை பவுலும் செய்ததால் இவர் ஒரு தெளிவான இலுமினாட்டி என்றே கருதவேண்டும்.
பவுல் இலுமினாட்டி என்பதற்கு இது தவிர வேறு ஆதாரங்களைத் தேடுமாறு வாசகர்களைப் பணிக்கிறேன்..
நீங்கள் தேடும் போது தான் இன்னும் நிறைய படிப்பீர்கள்...
மக்கள் விரோதி பாஜக மோடியின் வேளாண் திட்டம் எல்லாம் அதானிக்கே...
அதன் சேமிப்பு திறன் ஆண்டுக்கு 875,000 மெட்ரிக் டன். அரசாங்கத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் வட இந்தியாவில் உற்பத்தி மையங்களில் இருந்து நுகர்வு மையங்களுக்கு உணவு தானியங்களை கொண்டு செல்ல ஏழு ரயில்கள் இயக்கப்படுகிறது. எதிர்காலத்தில் எதிர்பாராத பேரழிவுகளைக் கையாள நாடெங்கும் சேமிப்பு கிடங்கு அமைக்க அரசாங்கம் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என்று நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இது முழுக்க முழுக்க தானியங்கி கையாளுதலுடன் இயங்கும் சிலோஸ் முறை ஆகும்..
Adani Agri Logistics sent 30,000 tonnes foodgrains for Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY)
The government has introduced a welfare scheme named Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY), wherein it decided to distribute 5 kg foodgrains free of cost to all the National Food Security Act (NFSA) beneficiaries for the next 3 months besides other regular welfare schemes as part of a relief package for the most vulnerable segments during the Covid-19 outbreak.
Adani Agri Logistics Limited (AALL), a part of the Adani Ports and Special Economic Zones Ltd, has facilitated the dispatch of 30,000 tonnes of foodgrains during the lockdown. This is equivalent to feeding over 60 lakh people across different states in India like Tamil Nadu, Karnataka, Maharashtra, Bengal, etc. The company used seven trains owned and operated by it for the transportation of foodgrains from production centres in northern India to consumption centres.
AALL handles 5,75,000 MT of food grain for FCI in the states of Punjab, Haryana, Tamilnadu, Karnataka, Maharashtra and West Bengal. Another 3,00,000 MT of food grain is handled for Govt. of Madhya Pradesh. Additionally, AALL has expanded its footprints in Bihar, UP, Punjab, Haryana, Maharashtra & Gujarat with upcoming capacity of 400000 MT.
The AALL, which operates a network of foodgrain storage silos across 14 locations in India, has worked as a lifeline for lakhs of families depending on the supplies. With a collective storage capacity of 875,000 tonnes per annum, this storage infrastructure caters to nearly 1.5 cr people.
More than 25,000 farmers connected to the AALL grain silo network save Rs 130 per tonne spent otherwise as handling and cleaning charges. Most importantly, the seamless process saves them 2 to 3 mandays which easily get consumed in selling their supplies at traditional mandis.
The company has suggested that the government should formulate a policy on creating a Strategic Reserve of FoodGrain in Silos to handle such unforeseen calamities in the future. Silos are the ideal mode of scientific storage with automated handling for a longer shelf life with sustained quality and nutrition...
இப்பொழுதே விவசாய பொருட்கள் விற்பனை செய்வது பாதிக்கும் மேல் தனியாரிடம் தான் உள்ளது , இனி வரும் காலங்களில் நம் நிலைமை????
இலுமினாட்டி இரகசியம்...
Dan Brown எழுதிய Angels & Demons நாவல் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது.
ஆனால் அதற்குப் பின்னர் 2003ஆம் எழுதப்பட்டு 2006ஆம் ஆண்டு திரைப்பட வடிவில் வெளிவந்த The Da Vinci Code உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி நல்ல வசூலையும் வாரிக் கொட்டியதால் அப்போது Angels & Demons நாவலும் Da Vinci Code திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது.
ஐரோப்பிய அணுசக்தி ஆய்வுக் கூடத்திலிருந்து அணுகுண்டை விட அதிகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய Antimatter கடத்தப்படுகிறது.
அதே சமயத்தில் போப்பாண்டவர் இறந்து விட்ட காரணத்தால் புதிய போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பும் வாட்டிகனில் நகரில் உயர்நிலை கார்டினல்களால் நடத்தப்படுகிறது.
அப்போது வாட்டிகன் நகரே இறந்து போன முன்னாள் போப் அவர்களது வளர்ப்பு மகனான Camerlengo என்ற பாதிரியின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
இதனிடையே அடுத்த போப்-ஆக தேர்ந்தெடுக்கப்படலாம் என கருதப்படும் நான்கு கார்டினல்களை 400 வருடமாக இயங்கிவரும் இலுமினாட்டி என்ற ரகசிய இயக்கத்தினர் கடத்தி விடுகின்றனர்.
(இலுமினாட்டி இயக்கத்தினர் கத்தோலிக்க திருச்சபை மீது எதிர்ப்புணர்வு கொண்டவர்கள்).
அதோடு அன்றிரவு எட்டு மணி தொடங்கி நான்கு கார்டினல்களும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என்றும் முடிவாக வாட்டிகன் நகரே Antimatter வீசி அழிக்கப்படும் என்று தகவல் அனுப்புகின்றனர்.
இந்த சிக்கலான பிரச்னையை தீர்ப்பதற்காக வாட்டிகன், குறியீடு சம்பந்தப்பட விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் Robert Langdon அவர்களது உதவியை நாடுகிறது.
10 வருடமாக தன்னுடைய ஆராய்ச்சிக்காக வாட்டிகன் ஆவணக் காப்பகத்தை பார்வையிட பலமுறை அனுமதி கோரியும் கூட ஒவ்வொரு முறையும் வாட்டிகன் பாராமுகம் காட்டியதை பொருட்படுத்தாது, (காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவரும் வாட்டிகனுக்கு உதவ முன்வருகிறார்.
இவரோடு Antimatter விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற Vittoria Vetra இணைந்துக் கொள்கிறார்.
இதனிடைய கடத்தப்பட்ட 4 கார்டினல்களில் மூன்று கார்டினல்கள் மூன்று வெவ்வேறு தேவாலயங்களில் ‘நிலம்’, ‘காற்று’, ‘நெருப்பு” என்ற வரிசைப்படி கொல்லப்படுகின்றனர்.
ஒவ்வொரு கார்டினலும் கொல்லப்படுவதற்கு முன்பே அந்தந்த தேவாலயங்கள் இருக்குமிடத்தை Robert Landon கண்டு பிடித்தாலும், அவர்கள் சென்று சேர்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.
இறுதியாக “நீர்” என்ற வரிசையின்படி கொல்லப்படவிருந்த Baggia என்ற கார்டினலை மட்டும் Robert Langdon காப்பாற்றி விடுகிறார்.
இலுமினாட்டி யின் அடுத்தக் குறி Camerlengo-வாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் Robert Langdon னும் Vetra வும் அவரைத் தேடி போகின்றனர்.
அங்கே என்ன நடக்கிறது? ஊரையே ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை நடத்தி அடுத்த போப் ஆக ஆசைப்படுபவன் யார்?
அந்த ஏமாற்று வேலையை Robert Langdon எப்படி கண்டு பிடிக்கிறார்? கயவனின் முடிவு என்ன? என்பதுதான் மீதிப் படம்.
ஒரு புதிர் போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் படத்தை பார்த்தால் நிச்சயம் கிடைக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் வாட்டிகன் நகரை அழிவிலிருந்து காப்பாற்றுவதும், அறிவியல் பெரிதா? மதம் பெரிதா? என்று கேள்வி படத்தில் மறைமுகமாக எழுப்பப்படுவதும் சர்ச்சையை எழுப்பக்கூடிய அம்சங்கள்.
ஆகவே அது பற்றி அழமாக விவரிக்க தேவையில்லை.
Robert Langon ஆக நடித்திருக்கும் Tom Hanks வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார்.
Transformers: Revenge of the Fallen வெளிவரும் வரை 2009ஆம் ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற பெருமையை இப்படம் கொண்டிருந்தது.
பார்க்க வேண்டிய படம். படத்தின் இயக்குநர் Ron Howard...
திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...
திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை..
அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்..
அவர் எழுதிய நூல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" இல்லை..
"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" என்பதே..
திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...
கம்யூனிசம் என்றால் என்ன?
இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி
மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டுபோய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான், தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...
குறிஞ்சாக்குளம் காந்தாரி...
மகாபாரதத்தில் வரும் காந்தாரி.. காந்தாரா (Ghandhara) நாட்டைச் சேர்ந்தவள்.
இது காஸ்மீரை ஒட்டிய இன்றைய பாகிஸ்தானின் வடபகுதி.
இன்றைய ஆப்கானிஸ்தானின் கந்தஹார் (kandahar).
இதன் பழையபெயர் இஸ்கந்தரியா (iskandariya).
ஈரான் நாட்டின் தென்பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி குறிஞ்ச் (kurinch) என்ற ஊரும் உள்ளது...
தமிழ் மீது ஏன் இத்தனை வெறுப்பு?
தமிழகத்திலுள்ள அனைத்து இந்தி பள்ளிகளையும் மூட வேண்டும்...
செய்யுமா இந்த அதிமுக ஊழல் எடப்பாடி அரசு...
சிவன் குகை...
புராண சம்பவங்களோடு தொடர்புடைய பழமையான தலங்கள் நமது நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை.
அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ரேசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மலைகள் சூழ்ந்த இப்பகுதியில் பௌனி பிளாக் எனப்படும் குன்றுள்ளது. இந்தக் குன்றில் ஒரு குகை அமைந்துள்ளது.
ஷிவ்கோரி (சிவன் குகை) எனப்படும் இந்தக் குகைக்குள்ளே சுயம்புவாகத் தோன்றிய சிவபெருமானின் திருவுருவம் காணப்படுகிறது.
பொதுவாக லிங்க வடிவங்கள் சுயம்புவாய் முகிழ்த்ததைத் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு சிவபெருமானின் தியானக்கோல முழு வடிவமே சுயம்புவாகக் காணப்படுவது அதிசயம். சுமார் நான்கு மீட்டர் உயரம் கொண்டது!
அருகே லிங்கம், பார்வதி தேவி, விநாயகர், முருகன், நந்தி ஆகியோரின் வடிவங்களும் காணப் படுகின்றன. எல்லாமே தான்தோன்றி வடிவங்கள்தான்; சிற்பியால் செதுக்கப்படாதவை.
இந்தக் குகையே அற்புதம் நிறைந்ததாக உள்ளது. அதாவது, சிவன் கையிலிருக்கும் உடுக்கை போன்ற வடிவில் உள்ளது. ஒரே நேரத்தில் 300 பேர் நுழையுமளவுக்கு குகையின் முன்புற வாயில் அமைந்துள்ளது.
போகப்போக அகலம் குறைந்து சிறிதாகி, பிறகு மீண்டும் அகன்று சென்று குன்றின் அடுத்த பகுதியில் முடிவடைகிறது.
குகைக்குள் நுழைந்து சிவனை வணங்கிவிட்டு பின்புற வாயிலில் வெளியேறிவிடலாம். இந்தக் குகையின் நீளம் சுமார் 150 மீட்டர்.
இந்தக் குகைக்குள் 33 கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். குகையின் மேற்பகுதி பாம்புத்தோல் போன்று தோற்றம் தருகிறது. சுதர்சன சக்கர வடிவம், காமதேனு வடிவம் போன்றவை இந்தக் குகைக்குள் காணப்படுகின்றன.
"நான் யார் தலையில் கைவைக்கிறேனோ, அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டு'மென்று சிவபெருமானிடம் வரம்பெற்றான் பஸ்மாசுரன். தான் பெற்ற வரத்தை சோதிக்க எண்ணி சிவன் தலைமீதே கைவைக்க முயன்றான். சிவபெருமான் அங்கிருந்து தப்பியோட, பஸ்மாசுரன் விடாமல் துரத்தினான்.
இதைக்கண்ட மகாவிஷ்ணுவானவர் மோகினி வடிவம் கொண்டு அசுரனின் எதிரில் வர, மோகினியின் அழகில் மயங்கினான் அசுரன். தந்திரமாக அவனிடம் பேசி, அவன் தலைமேலேயே கைவக்கச் செய்தார் மகாவிஷ்ணு. பஸ்மாசுரன் எரிந்து சாம்பலானான். இந்தப் புராண நிகழ்வு நடந்த இடம் இதுதான் என்கிறார்கள்.
இந்தக் குகைக்குள் வேறொரு வழியும் உள்ளது. அது அமர்நாத் குகையில் சென்று முடிவ தாகக் கூறுகிறார்கள். இதன் வழியேதான் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்களாம். தற்போது இந்தக் குகைவழியை அரசாங்கம் தடைசெய்துள்ளது.
மகாசிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப் பாகக் கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் இங்கு திரளுவார்கள். சிவன் சிலை யின்மீது, குகையின் மேற்புறத்திலிருந்து எப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று யாருக்கும் தெரியாது.
சிவராத்திரியன்று இது பால்போன்ற வெள்ளை நிறத்தில் விழுந்து சிவனை அபிஷேகிப்பதும் அதிசயமே.
சித்தர்களும் ரிஷிகளும் தவமிருந்த மிகப்பழமையான இந்தக் குகைக் கோவிலை, 2003-ஆம் ஆண்டு முதல் ஒரு திருப்பணிக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார்கள்.
குன்றின்மீது ரன்சோகௌன் என்னும் கிராமம் உள்ளது. அந்த கிராமம் வரை வாகனப் போக்குவரத்து உண்டு. அங்கி ருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துசென்றுதான் குகையை அடையவேண்டும். பேட்டரி கார் இயக்குவதற் கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.
சென்னை- டெல்லி- ஜம்மு- கட்ரா வழியாக சிவன் குகை செல்லலாம். வைஷ்ணவா தேவி கோவில் வழியாகவும் செல்லலாம்...
திருட்டு தெலுங்கு திமுக வின் உறுப்பினர் கணக்கு இப்படித் தான் ஓடிட்டு இருக்கு...
அதிமுக எடப்பாடியாரே திமுகவில் சேர்ந்துட்டார்...
அந்த ஈ பாஸ் குளறுபடிக்கும் இதுக்கும் சரியா போச்சு...
ஒரு வேளை ரெண்டு பேருக்கும் ஒரே கம்பனிக்காரன் வேலையை செய்து கொடுக்கிறாங்களோ என்னவோ.....