25/09/2020

இலுமினாட்டி யும் 666 இரகசியமும்...

 


கிறிஸ்த்துவம் அரசியல் ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை முதலிலே பார்த்தோம்..

கிறித்தவம் கொள்கை ரீதியாக எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்..

ஈசா நபி உயர்த்தப்பட்டு முதல் நூற்றாண்டிலேயே அவர் கொண்டு வந்த தூய மார்க்கத்தின் கொள்கை மாற்றியமைக்கப் பட்டுவிட்டது..

கிறித்தவத்தை இந்த அளவு கொள்கை ரீதியாக மாற்றியதில் மிக அதிக பங்கு இருப்பது பவுல் என்பவருக்கே..

யார் இந்தப் பவுல்?

வரலாற்றில் இவர் ஒரு மர்மமான மனிதர்..

இவரின் உண்மையான பெயர் Saul of tasus..

இது கிரேக்க மொழிப் பெயராகும்.

கிறித்தவத்தை ஏற்க முன்னர் இவர் நசாராக்களுக்கு அதிகம் அநியாயம் செய்த ஒருவராவார்.

இவர் டமஸ்கஸ் நகரத்துக்கு பிரயாணம் போகும் வழியில் இவரில் அதிக மாற்றம் காணப்பட்டது.

திரும்பி வந்த பின்னர் திடீர் என கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்.

ஏற்றது மட்டுமன்றி மும்முர பிரச்சாரகராகவும் மாறி தனது மொத்த வாழ்க்கையையும் கிறித்தவத்துக்காக அர்ப்பணம் செய்கிறார்.

தனது வசதிக்காக இவருடைய பிரச்சார அமைப்பு எப்படி இருந்தது என்றால் தான் பல கடவுள் ரோமனியர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு ரோமானியர் என்றும், யூதர்களைச் சந்திக்கும் போது தான் ஒரு யூதன் என்றும் கூறுவார்.

கிறித்தவர்களிடம் கிறித்தவராகவும் நடந்து கொள்ளுவார்.

இவர் தெளிவான நயவஞ்சகனாகவே நடந்து கொண்டு அதை சரிகாணவும் செய்தார்.

இதுதான் அவரது வாக்குமூலம்..

நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.

யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன்.

அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன்.

பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன்.

எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.

சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். (முதலாம் கொரிந்தியர் 9:19-23).

கிறித்தவ மதத்தில் உண்டான அதிக மாற்றங்களுக்கு இவரே காரணம்.

நசாராக்களின் மதக் கலாச்சாரம் யூதர்களைப் போலவே இருந்தது. (யூத வம்சத்தில் வந்ததால்) இதனை முற்றாக மாற்றி வேறு விதமான மதக் கலாச்சாரத்தை நுழைத்தவர் இவரே.

இதற்கான தெளிவான சான்று இப்போதைய பைபிளை பார்த்தவுடன் விளங்கும்.

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கும்.

புதிய ஏற்பாடு மொத்தமாக இந்த பவுலின் கைவரிசையினால் ஆனது.

லூசிபரிஸத்தை பின்பற்றும் சைத்தானியக் கூட்டம் வேதங்களை மாற்றியமைக்கும் ஒழுங்கு ஒன்று உள்ளது..

1. முதலில் நல்லது என்ற போர்வையில் பித்தத்தை (நவீனம்) தோற்றுவித்தல்.

2. இந்த விரிசலுக்குள் இணைவைப்பை நுழைத்தல்.

3. அப்படியே குப்ருக்கள் (இறை மறுப்பு) கொண்டு செல்லல். அத்தோடு அவ்வேதம் அழிந்து விடும்.

இதனால் தான் இறுதி வேதமான இஸ்லாத்தைப் பாதுகாக்க அல்லாஹ் பித்அத் சம்பந்தமாக அதிக எச்சரிக்கை செய்துள்ளான்.

இனிமேல் நபி வரமாட்டார்கள் என்பதால்தான் கடைசி நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் பித்அத் பற்றி எச்சரித்தார்கள்.

வேதங்களை அழிக்கும் முதல் படிதான் இந்த பித்அத்.

தூய கொள்கைக்குள் பித்அத்தை தோற்றுவிப்பது எவ்வாறு?

மனிதர்கள் மீது அதிக பற்றை ஏற்படுத்துவதன் மூலமே பித்அத் நுழையும்.

அப்பற்றின் காரணமாக அவர் என்ன சொன்னாலும் கேட்கும் கூட்டம் உருவாகும்.

ஈசா நபி மீதும், அவரது தாயார் மீதும் அளவு கடந்த சென்டிமன்ட் பாசத்தை உண்டாக்கியவர் இந்த பவுல்.

ஈசாவோடு எப்போதும் அம்மாவையும் சேர்த்தே பவுல் காயை நகர்த்துவார்.

இதன் காரணம் பின்னர் விளங்கும்.

ஈசா நபியினதும் அவர் தாயினதும் கலங்கத்தை நீக்க கடவுளையே ஈசா நபியின் அப்பாவாக்கியவர் இவரே.

ஈசா நபியின் மீது அதிக பாசம் ஏற்படுத்தியதும், இதனுடன் அம்மாவை சேர்த்துக் கொண்டதும், கடவுளை ஈசா நபியின் தந்தையாக்கியதும் கிறித்தவத்தில் திரித்துவத்தை ஏற்படுத்தவே.

இணைவைப்பை நுழைப்பது எவ்வாறு?

வரலாற்றில் சைத்தானியர்கள் (லூசிபரிசம்-இலுமினாடிகள்) ஒரு கடவுள் கொள்கையை அழித்து இணைவைப்பை உருவாக்க எடுத்த முதல் ஆயுதம் திரித்துவம் தான்.

ஈசா நபி தந்தையின்றிப் பிறந்ததை சாதகமாக்கி முதலில் கடவுளை ஈசா நபிக்குக் தந்தையாக மாற்றுகிறார்.

ஈசா நபியின் கலங்கத்தைத் துடைக்க இதுவே நல்லது என்ற போர்வையில் நுழைகிறது.

தந்தை கடவுள் என்றால் மகன் கடவுளாக இருக்க வேண்டும் என்று ஒரு கடவுள் இரண்டாகிறது.

அதேபோல் கடவுளைப் பெற்றவளும் கடவுள்தானே என்ற லாஜிக்கின் அடிப்படையில் மரியமும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார்.

கடவுள் ஒன்று என்பதை உறுதியாக நம்பும் மக்களிடம் சென்று அதை உடைக்க ஒரேயடியாக 3 கடவுள் என்று சொல்ல முடியாது.

முதலில் மூடலாக ஆரம்பிக்க வேண்டும். மூன்றும் ஒன்றல்ல. ஒன்றுக்குள் ஒன்று. ஆனால் மூன்று. முன்றும் ஒன்று என்ற குழப்பமான கொள்கைதான் பல கடவுள் கொள்கையின் ஆரம்பம்.

பிதா, சுதன், ஆவி என்ற தற்போதைய திரித்துவம் Tertullian (155-230) என்பவரால் தோற்று விக்கப்பட்டது..

திரித்துவம் கிறித்தவத்துக்கு மட்டும் உரிய கொள்கை அல்ல. காலத்துக்குக் காலம், ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வழங்கப்பட்ட மார்க்கங்கள் இந்த திரித்துவத்தின் மூலமாகவே இணைவைப்புக் கொள்கையாக சைத்தானியர்களால் மாற்றப்பட்டது.

உதாரணமாக..

1. பண்டைய கிரேக்கத்தில் Zeus, Athena, Apollo. இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

2. மகாயானா என்ற புத்தமதப் பிரிவில் த்ரிகாய (புத்தரின் 3 உடம்பு).

3. பண்டைய எகிப்தில் Osiris, Isis, Horus இதுவும் அம்மா, மகன், தந்தை திரித்துவம்.

4.இந்து மதத்தில் பிரம்மா, விஸ்னு, சிவன்.

5. மேலும் இந்து மதத்தில் சக்தி, சரஸ்வதி, லக்ஷ்மி.

6. பண்டைய பாரசீகத்தில் மித்ரா, இந்ரா, வருணம்.

7. பண்டைய அரபுகளிடம் லாத், உஸ்ஸா, மனாத்.

8. டாவோசியத்தில் Fu, Lu, Shou.

இவ்வாறு இஸ்லாம் தவிர அனைத்து மதங்களிலும் திரித்துவம் உண்டு.

இஸ்லாத்திலும் திரித்துவத்தை ஏற்படுத்தி இணைவைப்பைப் புகுத்த இலுமினாடிகள் முயன்று உருவாக்கப்பட்டதே ஷீயா மதமாகும்.

ஆனால் அதை வேறுபடுத்தி மார்க்கத்தை அல்லாஹ் பாதுகாத்தான்.

ஷீயாவில் உள்ள திரித்துவம் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்கள் தேடிப்பாருங்கள்..

இவ்வாறு மதங்களில் பித்அத்தை புகுத்தி பின் திரித்துவத்தை ஏற்படுத்தி அதில் இணைவைப்பை நுழைத்து கடைசியில் குப்ருக்கு இட்டுச்செல்லும் வேலையை கச்சிதமாக செய்தவர்கள் வரலாற்றில் சைத்தானியர்களே.

இதே வேலையை பவுலும் செய்ததால் இவர் ஒரு தெளிவான இலுமினாட்டி என்றே கருதவேண்டும்.

பவுல் இலுமினாட்டி என்பதற்கு இது தவிர வேறு ஆதாரங்களைத் தேடுமாறு வாசகர்களைப் பணிக்கிறேன்..

நீங்கள் தேடும் போது தான் இன்னும் நிறைய படிப்பீர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.