இப்படி இவர்கள் தைரியமாக செய்யக் காரணம் என்ன..?
தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.. பணி மாற்றம் அல்லது பதவி உயர்வு தான் வரும் என்ற துணிவில் தான் இந்த மக்கள் விரோத செயல்களில் இடுபடுகிறது இந்த காவல்துறை....
சட்டம் காவல்துறைக்கு இல்லையா...?
லஞ்சம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு..
ஓசியில் பொருள் கேட்டு கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு...
பணம் வாங்கிக் கொண்டு பொய் வழக்கு...
அப்பாவிகளை விசாரனைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி பொய் வழக்கு...
காவல்நிலையத்தில் அடித்து கொலை செய்வது...
புகார் கொடுக்க வந்த பெண்ணின் கற்பை பறிப்பது...
இனி இப்படி நடக்கக் கூடாதென்றால் உடனே காவல்துறைக்கு எதிரான கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும்...
இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால்... அதற்கு ஒரே வழி தான்...
காவல்துறையும் தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற அச்சம் வர வேண்டும்....
இனி காவலர்கள் சாமானிய மக்கள் மீது கை வைக்க கூடாதென்றால்...
இவர்களை எல்லாம் நிரந்தர பணி நீக்கம் செய்து... ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்...
தவறுக்கு ஏற்றாப் போல் தண்டனை இருக்க வேண்டும்..
காவலரால் ஒருவரின் உயிர் போய் விட்டதென்றால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்...
உடனே ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்...
அப்பொழுது தான்....
காவல்துறை மக்கள் நண்பனாக இருக்கும்...
இல்லையெல் காவல்துறை மக்கள் விரோதிகளாக தான் இருக்கும்...
http://www.puthiyathalaimurai.com/newsview/72885/Aranthangi-Woman-accusing-Police-commits-suicide