03/05/2017

சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் ஒன்றான வர்மக்கலை...


வாசி தட்டும் இடமெல்லாம் - வர்மம் அதாவது வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள்.

இதை சித்த மருத்துவத்திற்கும், வர்மக்கலைக்கும் பயன்படுத்தலாம். இடகலை, பிங்கலை, சுழு முனை நாடிகள், தச வாயுக்கள், சரங்களின் ஓட்டமே -வர்மம்.

அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம் அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை.

இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார். காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங்கியுள்ளது.

மனித உடலில் 108 வர்மப் புள்ளிகளாக அதாவது உயிர்நிலை சுவாசமாக ஒடுங்கியுள்ளது. இந்த வர்மப் புள்ளிகளின் ஏதாவது ஒன்று பாதிக்கப் படுமானால் உடலில் நோய் உண்டாகும். இவற்றை சீர் செய்வதன் மூலம் தான் நோயைத் தீர்க்க முடியும்.

உதாரணமாக உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது நோயின் தாக்குதல் இருந்தாலோ அது வர்மப் புள்ளிகளை சார்ந்துதான் இருக்கும்.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

தொடு வர்மம்:

இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

தட்டு வர்மம்:

இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

நோக்கு வர்மம்:

பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

படு வர்மம் :

நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலைப்பகுதி வர்மங்கள் = 37
நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
கைப்பகுதி வர்மங்கள் = 17
கால் பகுதி வர்மங்கள் = 32

தலைப்பகுதி வர்மங்கள் (37)...

திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)...

தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)...

உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)...

மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்
மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)...

வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்
தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)...

முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்
இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார்...

நம்ப முடியாத உண்மைகள்...


நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.. எந்த டெக்னாலஜியும் இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க?


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் .

அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும்.

அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . .
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

மருத்துவர்கள் நூதன போராட்டம்...


கடவுளுக்கு கோரிக்கை மனு அனுப்பி பலூன் விடும் மருத்துவர்கள்...


மருத்துவர்களின் 15ம் நாள் போராட்டம்...

ஆரியர் பற்றி தமிழ் இலக்கியங்களில்..



ஆரியர் பற்றி இலக்கியங்களில்...

மாணிக்கவாசகர் சிவனை 'பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே' என்று அழைத்துள்ளார்.

இராமனுக்காக அனுமன் செய்தசெயலை கம்பர் அழைத்துள்ளார்.

'ஆரியற்காக வேகி' என்று இராமனை கம்பர் வணங்கப் படத்தக்கவன் என்ற பொருளில் எழுதியுள்ளார்.

பெரும்பதும்பனார் (குறுந்தொகை) 'யாரியர் கயிறொடு பறையில் கால்பொரக் கலங்கி' என்று ஆரியர் பறையடித்து நடனமாடுவோராகக் குறித்துள்ளார்

பரணர் (அகநானூறு) என்று பாணனுடன் மல்யுத்தம் புரிந்த ஆரியப் பொருநன் எனும் வீரனைக் குறிப்பிடுகிறார்.

'பாணன் மல்லடு மார்பின் வலியுறவருந்தி யெதிர்தலைக் கொண்ட வாரியப் பொருநன் நிறைதிரள் முழவுத்தோள்'

அதே பரணர் (அகநானூறு) வேறொரு இடத்தில் ஆரியர் பெண்யானைகளைப் பழக்கி காட்டுக்குள் விட்டு ஆண்யானை மயக்கி கூட்டிவரச் செய்வதைக் கூறுகிறார்.'ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு'.

ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவு நெறியைக் குறை கூறினான்.அவனுக்கு அவ்வொழுக்கம் திருமணத்தில் முடியும் என்று கபிலர் 'குறிஞ்சிப் பாட்டு' பாடினார்.

என்றால், ஆரியன் என்றால் சிவனா? இராமனா? பறைக்கூத்தாடியா? மற்போர் வீரனா? யானைப் பாகனா? அரசனா?

ஆரியர் என்பது பல்வேறு காலங்களில் பல்வேறு பொருளில் பல்வேறு மக்களை குறித்துள்ளது.

அதேபோல பார்ப்பனர் ஆரியர் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் எந்த சான்றும் இல்லை.

ஆனால் ஆரியநாடு பற்றி சிற்றிலக்கிய குறிப்பு உள்ளது.

'திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே'
'சந்திர சூடர் தென் ஆரிய நாடே'
'ஈசர் ஆரிய நாடு எங்கள் நாடே'
என்றெல்லாம் குற்றாலக் குறவஞ்சி ஆரியநாடு என்று குற்றால மலையையே கூறுகிறது.

கடைசியாக, தமிழின் முதல் கிறித்துவ காப்பியம் 'ஆரிய வளன்தன் காதை அறம் முதல் விளங்கச் சொல்வாம்' என்று ஏசுவை ஆரியன் என்றுதான் கூறுகிறது...

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


ஏர்டெல் லும் ஏமாற்று வேலையும்...


ஏர்டெல் 4G என்று சிம் கார்டு விற்கப்படுகிறது..

இந்த சிம் 450ரூவா கொடுத்து வாங்கினால் 70 நாட்களுக்கு 70Gp + unlimited calls இலவசம் என்று விளம்பரம் செய்து விற்கப்படுகிறது...

ஆனால் ஏர்டெல்லில் 4G நெட் என்ற பெயரில் 3G & 2G வேகம் மட்டுமே கொடுக்கப்படுகிறது..

அதே சமயம் 4G யில் Calls செய்ய முடியாதாம்..

ஆகையால் நீங்கள் எப்போது எல்லாம் call செய்ய வேண்டுமோ அப்போது எல்லாம் Settings சென்று 4G/3G/2G Auto வில் வைத்து தான் call செய்ய வேண்டுமாம்..

அதே நேரம் இந்த settings ல் அப்படியே நீங்கள் நெட் உபயோகிக்க நினைத்தால் அதில் 3G அல்லது 2G மட்டுமே செயல்படும்...

மேலும் ஏர்டெல் 4G க்கு டவர் ( Signal ) கிடைப்பதும் மிகவும் அரிது தான்...

எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கிறது இந்த ஏர்டெல்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


பாஜக மோடி கலாட்டா...


இந்திய எல்லைப் பகுதியில் நுழைந்து ராணுவ வீரர்களின் தலையை கொய்வது நாட்டின் மகாராஜாவின் கிரீடத்தை எடுத்துக் கொண்டு செல்வதற்கு சமம்.நாட்டை ஆளும் அரசனுக்கு சிரசில் இருக்கும் கிரீடம் உயிருக்கு சமமானது.

கிரீடம் களவுப் போனால் என்ன?

மோடியிடம் பெரிய துண்டு இருக்கும். அதை தலையில் போட்டுக் கொண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு உலகத்தை சுற்றலாம்.

மீனவர்களையும் காப்பாற்ற முடியாது. விவசாயிகளையும் காப்பாற்ற முடியாது. ராணுவ வீரர்களையும் காப்பாற்ற முடியாது.

இப்படியொரு பிரதமர் கீழ் தான் நாம் குடிமகனாக இருக்கிறோம்.

இப்போது கவலையெல்லாம் அவரையே அவர் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது.

நாட்டை காப்பாற்றுவதற்கு 56 இன்ச் மார்பு அவசியமில்லை.மூளை என்பதும் வேண்டுமே...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா..


இரு சம்பவங்களும் ஒரே நாளில், அதுவும் ஒரே நாட்டில்தான் நடக்கின்றன...

மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் - எடப்பாடி உத்தரவு...


OPS : படத்துல உங்க வயசு 16, திரிஷாக்கு 17..

எடப்பாடி : அந்த குழந்தையே நீங்க தான் சார்....

அமெரிக்கா ட்ரம்ப் கலாட்டா...


தமிழ் சித்தர்களின் வைத்தியம்...


மறதி தொல்லையா?

ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

இருமலால் அவதியா?

உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சளித் தொல்லையா?

வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

சீதபேதி கடுமையாக உள்ளதா?

ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா?

வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கு ஜாமினில் வெளி வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார் நீதிபதி கர்ணன்...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 53...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ளும் பகுதி 53-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். மக்களின் வாழ்வாதார சூழ்நிலைகள் இவ்வுலகில் பொருளாதாரத்தை சார்ந்தே உள்ளது. அந்த பொருளாதாரம் உடல் உழைப்பின்றி, வெறும் பதிவேடுகளை சார்ந்த ஒரு வேலையாக மட்டுமே இன்று நடைமுறையில் நிலவி வருகிறது. உடல் உழைப்பின்றி வாழும் அத்தனை மனிதகுலமும் இன்று மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் ஒரு அவல நிலை உருவாகிட போவதாக 53-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகின்றது.

53-ம் தீர்க்க தரிசனம் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மக்கள் யாவரும் தன்னுடைய தாய்நாட்டை நோக்கி திரும்பும் ஒரு அவல நிலை உருவாகிட உள்ளதாகவும், அந்த மக்கள் வெறும் கம்யூட்டரை மட்டுமே நம்பி இதுநாள்வரை வாழ்ந்தவர்கள் என்றும், அவர்களால் தன் தாய் நாட்டிற்கு எந்த அளவிலும் உதவ முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், படித்த அத்தனை மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் நிலை அந்த தாய்நாடுகளுக்கு இருக்காது என்றும் 53-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது. இதனால் உடல் உழைப்பால் மட்டுமே ஒருவன் முழுமையான தன்னிறைவை அடைய முடியும் என்று அந்த 53-ம் தீர்க்க தரிசனக் குறிப்பு இங்கு அறிவுறுத்துகின்றது.


தமிழ்நாட்டில் தற்போது உருவாகும் ஒரு அதிர்ச்சியான சூழல் பல கிராமங்களை பீதிக்குள் உள்ளாக்கும் என்றும், கொலை, கொள்ளை போன்றவை அதிகமாக நடைபெறும் என்றும், இதனால் பொதுமக்களே தங்களை காத்துக் கொள்ள புதிய யுத்திகளை ஆங்காங்கே கையாண்டு தங்களை காத்துக் கொள்ளும் நிலை உருவாகிட உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

திருநெல்வேலி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு பல சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதற்கான முகாந்தரங்கள் உருவாகும் என்றும், அதனை தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்ளும் என்று 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

பாதாள சாக்கடை திட்டத்தினால் பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்றும், இதனால் பல திடீர் குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படும் என்று 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


கல்வெட்டு ஒன்று கஞ்சமலை அடிவாரத்தில் கிடைக்கப்பெறும் என்றும், அதில் சித்தரின் ஒரு இரகசிய குறிப்பு இடம் பெற்றிருக்கும் என்றும், அதனை கண்டெடுத்த 7-ம்நாள் முதல், அம்மலையில் சித்தர்களின் நடமாட்டத்தை மக்கள் காண உள்ளார்கள் என்று 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

பல புதுமைகளை தமிழகம் விரைவில் சந்திக்க உள்ளதாகவும், ஆச்சர்யங்களும், பல வினோத சம்பவங்களும் தமிழகம் முழுவதும் நிறைந்து காணப்படும் என்றும், இது வரும் ஏப்ரல் மாதம் முதல் நிகழ உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


தங்கத்தின் விலை திடீரென்று வீழ்ச்சி அடையும் என்றும், இதனால் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகள் பொருளாதார பின்னடைவை திடீரென்று சந்திக்க உள்ளதாகவும், ஆனால் மக்களின் நிலை இதனால் சற்று உயர்ந்து காணப்படும் என்றும், உயர்ந்த நிலையில் உள்ள பலரின் நிலை இதனால் பல்வேறு வீழ்ச்சிகளை சந்திக்கும் நிலை உருவாகும் என்று 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சமயம் போற்றும் அன்னை சமயபுரத்தாளின் அற்புதம் உலகம் எங்கும் வெளிப்பட உள்ளதாகவும், அந்த அன்னையின் வெளிப்பாடுகளும், மகிமைகளும் மக்கள் அறியும் அளவிற்கு நிஜமானதாகவும், தத்ரூபமாகவும் அமைய உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. பல புதுமைகளை அன்னை வழியில் இவ்வுலகம் காண உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேல்மருவத்தூர் இனி கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கிருந்து பல நிகழ்வுகள் திடீரென்று நடக்க உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனங்கள் பல குறிப்புகளை தெரிவிக்கின்றன.

பல அதிசய நிகழ்வுகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் நடக்க உள்ளதாகவும், சாமியாடுதல் என்ற நிகழ்வுகள் இனி அதிகமாக மக்கள் நிறைந்த பகுதிகளில் இடம் பெறும் என்றும், அங்கு நடைபெறும் சில வினோத நிகழ்வுகள் காவல்துறையை குழப்பம் அடையச் செய்யும் என்றும், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த கருமாரியம்மன் ஆலயத்தில் ஒரு மகா நிகழ்வு நடக்க உள்ளதாக 53-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

ஏன்டா மோடிய நீங்களே ஓட்டுனா அப்புறம் நாங்க எதுக்குடா இருக்கோம்...


தூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?


இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.

கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.

என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்..

உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது.

பொதுவாக அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும்.

இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே..

என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக் கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது.

இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.

மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

இந்த ரெண்டு பேர்ல யாரு பெரிய திருடன்?


சிலந்தி தண்ணீரில் நடக்கும், நீருக்கு அடியிலும் சுவாசிக்கும் தன்மை கொண்டது...


சிலந்தி தன்னை தானே கோமா நிலைக்கு எடுத்து செண்டு நீருக்கு அடியில் சில மணி நேரம் உயிருடன் இருக்கும்.

சிலந்தி தான் பின்னிய வலையையே மறுசுழற்சி செய்ய உண்ணும்.

ஒரே எடையிலான சிலந்தி வலை மற்றும் இரும்புடன் ஒப்பிடுகையில், சிலந்தி பின்னும் வலை தான் இரும்பை விட வலுமையானது.

சிலந்திகளுக்கு எறும்புகள் என்றால் பயமாம். இதற்கு காரணம் எறும்புகளிடம் இருக்கும் ஃபார்மிக் அமிலம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடைசியாக சிலந்தி கடித்து மரணம் அடைந்த சம்பவம் கடந்த 1981-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது.

சிலந்திகளுக்கு ஆணுறுப்பு  இல்லை. இவை முகத்தை தான் இணை உறுப்புகளாக பயன்படுத்துகின்றன.

கருப்பு பெண் சிலந்திகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டவுடன், ஆண் சிலந்தியை உண்டு விடுமாம்.

இதிலிருந்து தப்பிக்க கருப்பு ஆண் சிலந்திகள், கருப்பு பெண் சிலந்திகளின் பசியை மோப்பம் பிடித்து தப்பித்துக் கொள்ளுமாம்.

சிலந்திகள், நண்டு மற்றும் நத்தைகளுக்கு இரத்தம் நீல நிறத்தில் தான் இருக்கும். இதற்கு காரணம் இவற்றின் இரத்தத்தில் கலப்பு கொண்டுள்ள hemocyanin எனும் காப்பர்.

இதுவரை கண்டறியப்பட்ட 46,000 சிலந்தி வகைகளில். ஒன்றே ஒன்று மட்டும் தான் தாவரங்களை உண்டு வாழும் வகையை சேர்ந்தது ஆகும்...

பாஜக மேடையா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 53...


ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்...

பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான் என்பதையும் ஆழ்மனதில் பதியும் எண்ணங்கள் எப்படி அதிக சக்தி பெறுகின்றன என்பதையும் பார்த்தோம். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.

இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவதால் தான் எல்லாமே ஆழ்மனம் என்று சொல்வதாக வாசகர்கள் நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் உண்மை. சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் மெஸ்மர் (ஆழ்மனசக்தி 18 ஆம் அத்தியாயத்தில் இவர் பற்றி விவரமாய் படித்தோம்) ஹிப்னாடிசம் மூலம் மனிதனின் தீராத நோய்களைக் கூட தீர்க்க முடியும் என்று கண்டு பிடித்தார். ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது என்பதைப் பின்னால் நடைபெற்ற பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின.

1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கமும், 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கமும் ஹிப்னாடிசத்தை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்த பின்னர் உலகெங்கும் பல நாடுகளிலும் அதிகாரபூர்வமாகவே மருத்துவ சிகிச்சைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஹிப்னாடிசம் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டது.

ஹிப்னாடிசம் செய்து ஏர்கண்டிசன் அறையில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சஹாரா பாலைவனத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு வெயில் தாங்க முடியவில்லை என்று சொன்னால் அவருக்கு உடனடியாக வியர்வை கொட்ட ஆரம்பித்து விடும். சாதாரண தரையில் நின்று கொண்டிருக்கும் ஒருவரிடம் நீங்கள் கடலில் படகில் சென்று கொண்டிருக்கிறீர்கள், இப்போது உங்கள் படகு அலைகளில் சிக்கி தத்தளிக்கிறது என்று சொன்னால் அவர் நிஜமாகவே அலையில் சிக்கிய படகில் இருந்தால் எப்படி தள்ளாடுவாரோ அப்படியே ஆட ஆரம்பித்து விடுவார். இது போன்ற ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

அவை அனைத்தையும் எழுதுவதானால் அதற்கே பல தொகுப்பு நூல்கள் எழுத வேண்டி இருக்கும். எனவே உதாரணத்திற்கு நம் தலைப்புக்குத் தேவையான பரிசோதனை ஒன்றை மட்டும் பார்த்து விட்டு மேலே செல்வோம். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சென்ற நூற்றாண்டில் ஹிப்னாடிசம் குறித்து எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி ‘உன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன’ என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார். பின் அவனிடம் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும் செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும் வரை அவன் இருந்தான்.

அவர் செய்த இன்னொரு ஆராய்ச்சி ஐஸ் தண்ணீரில் கைகளை வைப்பதைப் பற்றியது. நல்ல தெளிவு நிலையில் இருக்கும் ஒருவரால் சில வினாடிகளுக்கு மேல் அதில் கைகளை வைத்து இருக்க முடியவில்லை. வலி மிகுதியால் உடனடியாக அவர்கள் கைகளை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஹிப்னாடிசத்தில் சிலரை ஈடுபடுத்தி அவர்களிடம் அது சாதாரண தண்ணீர் என்று அவர்களை கைகளை வைக்கச் சொன்ன போது அவர்களால் பல நிமிடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கைகளை வைத்திருக்க முடிந்தது.

இதிலிருந்து மிகப்பெரிய உண்மை ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். அதன்படியே அவர்கள் உணர்கிறார்கள். அதன்படியே அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே அவர்களுக்கு உண்மையாகிறது. அதன்படியே அவர்கள் அனுபவம் அமைகிறது.

துரதிர்ஷ்டவசமாக இது ஆராய்ச்சிகூடத்தில் ஒரு ஹிப்னாடிஸ்ட் மூலமாகத் தான் செய்யப்படுகிறது என்ற நிலைமை இல்லை. தினசரி வாழ்க்கையில் இது சர்வசகஜமாக நடக்கிறது. ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் கிடைக்கிறார்கள். முதலாமவன் என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்? என்று கேட்கிறான். நம் ஆள் இல்லையே நன்றாகத் தானே இருக்கிறேன் என்கிறான். சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் என்ன உடம்பு சரியில்லையா? என்று கேட்கிறான். இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.

நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும், நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள். நான் பலவீனமானவன், என்னால் இது முடியாது, எனக்கு ஆரோக்கியம் சரியில்லை என்ற ஆழ்மனப்பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே கண்டிப்பாக உருவாக்கும். இதற்கு உதாரணங்களைப் பார்க்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் எல்லாம் படிக்க வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் பார்த்தால் போதும், நூற்றுக் கணக்கான உதாரணங்களை நாமாகவே அறிந்து கொள்ளலாம். அதே போல் வெற்றியாளர்களைக் கூர்ந்து பார்த்தால் அவர்கள் ஆழ்மனப்பதிவுகள் தோல்வியாளர்கள் ஆழ்மனப்பதிவுகளுக்கு நேர் எதிராக இருக்கும்.

நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்.

என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அதிகமாக சிரிக்க மாட்டார். அப்படி யாராவது மிக நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு சிரிக்க நேர்ந்தால் கூட பயத்துடன் சொல்வார். “எவ்வளவு சிரிக்கிறோமோ, அந்த அளவு அழவும் நேரிடும்”. அது போலவே தான் அவருக்கு எல்லாம் அமைவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவருடைய நம்பிக்கைக்கேற்றபடியே ஆழ்மனம் நிகழ்வுகளை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தி வந்தது. அப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான பலமான அபிப்பிராயம் ஒரு வாழ்க்கையின் மக்ழ்ச்சியையே குலைத்த விதத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

நாம் முன்பே பார்த்தது போல ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.

எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.

இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். “ஏன்?” என்று கேட்ட போது ”அது தவறு” என்ற பதில் வந்தது.

நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.

இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.

ஆழ்மன சக்தி பெறத் தடையாக இருக்கும் குணங்களில் மிக முக்கியமானது அவநம்பிக்கை என்று முன்பு சொன்னதன் காரணம் இப்போது மேலும் நன்றாக விளங்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சக்திகள் எல்லாம் நமக்கு வராது என்று ஆழ்மனதில் அழுத்தமான எண்ணம் இருந்தால் அந்த சக்திகள் கண்டிப்பாக கைகூட வாய்ப்பே இல்லை. அது போல் ஆழ்மன சக்திகள் வகைகளில் எதெல்லாம் சாத்தியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களோ அதையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் வெளிப்படுத்த முடியும்.

பைபிளில் இந்த உண்மையை விளக்கும் ஒரு சம்பவம் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. இயேசு கிறிஸ்துவிடம் குருடர்கள் வந்தார்கள். அவர்களிடம் இயேசு கேட்டார். என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் கூறினார்கள். ஆமாம் பிரபு. இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு கூறினார். உங்கள் நம்பிக்கையின் படியே உங்களுக்கு ஆகக் கடவதாக. அவர்கள் கண்கள் திறந்தன (பார்வை பெற்றார்கள்). (மாத்யூ 9:28:30) இங்கு இயேசு பிரான் அவர்களுடைய ஆழ்மன நம்பிக்கையைத் தான் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் பார்வை பெற்றனர் என்பதைக் கவனிக்கவும்.

ஆழ்மன சக்திகளுக்கு எதிரான பண்புகளோ, நம்பிக்கைகளோ உங்கள் ஆழ்மனதில் இருக்கின்றனவா என்று நீங்கள் கணக்கெடுக்க வேண்டிய நேரம் இது. அப்படி இருந்தால் அதற்கு எதிர்மாறான பண்புகளையும், நம்பிக்கைகளையும் சிறிது சிறிதாக வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தேவையான நூல்களைப் படியுங்கள். தேர்ச்சி பெற்ற அறிஞர்களின் அனுபவங்களைப் படியுங்கள். அவர்களது பேச்சுகளைக் கேளுங்கள். வெற்றியாளர்களுடன் தொடர்பு வையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களைப் பதித்துக் கொள்ளும்.

இனி ஆழ்மனதைப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் வேலைகள் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்.....

சேகர் ரெட்டி டைரியை புரட்டினா ஜெயிலுக்கு போவது தி.மு.க.,வினர் தான் - தம்பிதுரை புதுகுண்டு...


கரூர் அண்ணா தொழில்சங்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், தமிழகத்தில் வருமான வரிதுறை சோதனை செய்வதின் பின்னணியில் அதிமுக ஆட்சியை கலைக்க பா.ஜ.,செய்து வரும் சதி என தி.மு.க.,செயல்தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

சோதணையில் சிக்கிய சேகர்ரெட்டியின் டைரியை புரட்டினால் அதில் மாட்டுவது தி.மு.க.,வினர் தான். சி.பி.ஐ.,அறிக்கை வெளியே வரும் போது கம்பி எண்ணபோவது யார் என ஸ்டாலினுக்கு தெரியும். அதில் தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் பலர் பெயர் இடம் பெற்றுள்ளது.

அதிமுக ஆட்சியின் ஊழல் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தது தி.மு.க.,ஆட்சியின் தான்.

அ.தி.மு.க., அணிகள் ஒன்று சேர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பேசி வருகின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து பேசினால் முடிவு எட்டும்.

கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என கையெழுத்து போட்டது பன்னீர்செல்வம்.

ஜெ.,மரணத்திற்கு பிறகு ஓ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்கியது சசிகலா குடும்பம் தான்.

அப்போது வாய் திறக்காத பன்னீர் இப்போது சி.பி.ஐ.,விசாரணை கேட்பது வேடிக்கையாக உள்ளது.

தற்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியை விட்டு ஒதுங்கி விட்டனர்.

அவர்கள் ஆலோசனை கேட்டு நாங்கள் செயல்படுகிறோம் என்பதில் உண்மை இல்லை, என்றார்...

தமிழ் மண்ணில் தெலுங்கர் குடியேற்றம் வரைபடம் (1931)...


மேற்கண்ட படத்தில் முதல் வரைபடம் Eugene F.Irschick என்பவர் எழுதி 1969 ல் வெளிவந்த Politics and social conflict in south india எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்பது..

இதில் தமிழர் பெரும்பான்மைக்கு மத்தியில் ஊடுருவியுள்ள தெலுங்கர் பகுதிகளைப் புள்ளிகளாகக் குறித்துள்ளார்.

இரண்டாவது படம் அதே ஆசிரியர் Dialogue and history எனும் நூலில் 1994 ல் வெளியிட்டது.

இந்த வரைபடங்கள் 1931ல் ஆங்கிலேய அரசு நடத்திய கணக்கெடுப்பில் M.W.M Yeatts என்பவர் எடுத்த கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து வரையப்பட்டன ஆகும்.

இதன்மூலம் 1930ல் தெலுங்கர் 15% க்கு மேல் குடியேறியிருந்த பகுதிகளையும்
10 முதல் 15% வரை குடியேறியிருந்த பகுதிகளையும் அறிந்து கொள்ளலாம்.

(அவ்வளவு தெளிவாக இல்லாத படத்தை நான் சிறிது மேம்படுத்தி வரைந்துள்ளேன். 10% க்கு குறைவாக தெலுங்கர் வாழ்ந்த பகுதி தெளிவாக இல்லை. அதனால் அதை விட்டுவிட்டேன்)

எனக்குத் தெரிந்து தெலுங்கர் மேற்கண்ட பகுதியிலேயே இன்றும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.

தெலுங்கர் தொடர்ந்து தமிழகத்தில் குடிவந்த வண்ணம் உள்ளனர்.

எனவே குறிக்கப்பட்டுள்ள பகுதி வடக்கில் சற்று விரிவடைந்து அப்பகுதியில் தெலுங்கர் சதவீதம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

இதிலே வடக்கே ஓசூரும் தெற்கே தூத்துக்குடி அருகே விளாத்தி குளமும் முழுக்க தெலுங்கு மயமாகிவிட்டது என்பதை இங்கே கூற வேண்டும்.

மேற்கே உதகமண்டலத்தில் தெலுங்கர் எண்ணிக்கை தமிழரை மிஞ்சிவிட்டது என்பதையும் அறியத்தருகிறேன்...

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்...


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம்.

மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்க விடாமல் செய்யலாம்.

இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்...

தமிழக அரசின் கலாட்டா...



திராவிட திருடர்களை வீழ்த்துவோம்...


நமது தேசிய தலைவர் திராவிடத்தை ஆதரித்தது கிடையாது...

ஈழத் தாய் நாட்டில் திராவிடம்
என்ற வார்த்தையே கிடையாது...

85% இந்துக்கள் மீதி கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இவர்களில் ஒருவர் கூட  திராவிடர் கிடையாது..

சிந்தி தமிழா..

தமிழகத்தில் மட்டும் ஏன் திராவிடம்?

தமிழன் அல்லாதோர் சூழ்ச்சி செய்து நம்மை ஆளவே தேவைப்படும் வார்த்தை திராவிடம் என்பதை நினைவில் கொண்டு திராவிடத்தை புறக்கணி...

திராவிடம் என்றால் என்ன?


திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ?

ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது?

திராவிடர் என்றால் யார்?

திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பு என்ன ?

ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்ப்பவர்கள் தமிழர்களாக ஒரு போதும் இருக்க வாய்ப்பில்லை.

நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும், ஆள்பவர்கள் தமிழர்களும் இல்லையே ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து கொண்டிருக்கிறோம்..

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம்
அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிக்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர். வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட.நாங்கள்  அனைவரும்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு விடை அளித்து புரிய வைக்கவும்.

அப்படி நாம் அனைவரும் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாங்கள் அனைவரும் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாங்களும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்ப்பவர்கள் தமிழர்களாக ஒரு போதும் இருக்க முடியாது...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 52...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 52-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். 52-ம் தீர்க்க தரிசனப் பகுதியானது இவ்வுலகில் திடீரென்று நடக்ககூடிய பலச்சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் என்று எடுத்துக் கூறுகிறது.

52-ம் தீர்க்க தரிசனப் பகுதியானது முதலில் இந்திய தேசத்தின் இமயமலையின் தென்பகுதியில் ஒரு விபரீத சம்பவம் நடைபெறும் என்றும், சாதுக்கள் நிறைந்த அந்த பகுதியானது மக்கள் அறிய முடியாத அளவிற்கு பெரும் சேதத்தை சந்திக்க உள்ளதாக எடுத்துக் கூறுகிறது.

52-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் அடுத்ததாக காண உள்ள பகுதி இந்திய மண்ணில் ஒரு அதிசய கனிமம் கிடைக்க உள்ளதாகவும், இதனால் இந்திய தேசத்தின் பொருளாதார நிலை உயரும் அளவிற்கு இந்த கனிமத்தின் மதிப்பு இருக்கும் என்றும், இதனால் பல்லாயிரம் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பும், இந்த கனிமத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி ஒரு தொழிற்புரட்சியை உலகில் ஏற்படுத்தும் நிலை இந்திய தேசத்திற்கு உருவாகும் என்று 52-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


52-ம் தீர்க்க தரிசனக் குறிப்பில் அடுத்ததாக இடம்பெறும் குறிப்பானது மிக, மிக முக்கியத்துவம் பெற்ற குறிப்பாகும். அதாவது வான் மண்டலத்தில் நிகழும் ஒரு அதிசய நிகழ்வினைப் பற்றி எடுத்துக் கூறுகிறது. கோள்களின் வரிசைப்பட்டியலில் ஒரு புதிய கிரகம் கோளாக ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு அதிசய நிகழ்வு நடக்க உள்ளதாகவும், அந்த கிரகம் நமது 9 கோள்களின் இடைப்பட்ட சுற்று வட்டப்பாதையில் திடீரென்று நுழைந்து நிலைப்பெற்று இயங்கும் ஒரு மகா அதிசயம் நடக்க உள்ளதாகவும் இந்த 52-ம் தீர்க்க தரிசனப் பகுதி எடுத்துக் கூறுகிறது.

மன்னர்களில் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்திய கரிகால் சோழனின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு கல்தூண் இந்தி தேசத்தின் மண்ணிலிருந்து கண்டெடுக்கப்பட உள்ளதாகவும், அதன் வழியாகத்தான் இராஜஇராஜசோழனின் உண்மை வரலாற்றை உலகம் அறிய உள்ளதாகவும், இச்சம்பவம் நடைபெறும் அதேசமயத்தில் திருச்சி சமயபுரம் பகுதியில் ஒரு வினோத நிகழ்வு நடைபெறும் என்று 52-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் உள்ள குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்திய தொல்லியல் துறையானது தருமபுரி மாவட்டத்தில் ஒரு அகழ்வராய்ச்சி மேற்கொள்ளும் அளவிற்கு ஒரு பூமி சம்பந்தப்பட்ட நிகழ்வு மிக, மிக அருகில் நடைபெற உள்ளதாகவும், இச்சம்பவத்தால் தமிழனின் மரபுச் சார்ந்த ஒரு தொன்மை இரகசியம் இவ்வுலகிற்கு தெரியவர உள்ளதாகவும், தமிழகத்தின் தனித்திறன் இதன்மூலம் உலக மக்கள் அறியும் வகையில் இச்சம்பவம் நடைபெற உள்ளதாக 52-ம் தீர்க்க தரிசனம் அரிய ஒரு தகவலை நமக்கு வழஙகுகின்றது.


ஏற்கனவே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் உள்ள சில ஊர்களின் பெயர்களை குறிப்பிட்டு எழுதியுள்ளதாகவும், அந்தந்த ஊர்களில் திடீர், திடீர் என பல துயரச்சம்பவங்கள் நடைபெற்று வருவதை மக்கள் அறியாமல் விட்டுவிடுகின்றனர் என்றும், இனி அவ்வாறு இல்லாமல் நம்மைச் சுற்றி நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் ஆழ்ந்து கவனித்து புரிந்து கொள்ள வேண்டும் என 52-ம் தீர்க்க தரிசனப் குறிப்பில் இக்கருத்து வெளிப்படுத்தப் படுகிறது என்றும், அதேசமயத்தில் கொல்லிமலை அரபளீஸ்வரர் ஆலயத்திற்கு இடப்புறமாக ஓடும் ஒரு ஓடையில் ஒரு அதிசயம் நடைபெற உள்ளதாக 52-ம் தீர்க்க தரிசனப் பகுதியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


இவ்வுலகில் உள்ள அனைத்து யோக மார்க்கங்களும் ஒன்றிணையும் ஒரு மகா அதிசய சம்பவம் ஒன்று தற்போது நடைபெறும் என்றும், யோகத்தின் பயன்பாட்டினை அனைத்து நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளும் மகா சம்பவம் ஒன்று இந்திய தேசத்தின் ஒரு மாநிலத்தில் மாநாடாக துவங்கிட உள்ளதாக 52-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் வடஇந்தியவில் ஒரு யோகா அமைப்பு காவல் துறையினாரால் ஆய்வு செய்யும்படியான சூழலுக்கு தள்ளப்பட்டு, அதன் நிர்வாகி யார்? என்பதனை கண்டு வியப்படையும் ஒரு நிகழ்வு நடக்க உள்ளதாக 52-ம் தீர்க்க தரிசன குறிப்புகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

துன்பத்திலும் இன்பத்தை தேடு என்ற பொன்மொழிக்கு ஏற்ப தமிழக அரசியல் அமைப்பில் ஒரு மாற்றம் உடனே நடக்க உள்ளதாகவும், இது இந்திய தேசம் முழுவதும் அதிகம் கவனத்தை ஈர்க்கும் என்றும் 52-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றன...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க...


இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்...

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….

சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

நம்முடைய மின்சாரத்தை நமக்கே கொடுக்க கோரிக்கை வைக்கிறோம்...


தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் வேற்று மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்குகிறது..

முதலில் அதை நிறுத்தினாலே நமக்கு மின் பற்றாக்குறை என்பது வரவே வராது..

அப்படி இருக்க எதற்கு இந்த உயிர் கொல்லி அணுஉலை நமக்கு..

ஆகவே இந்திய அரசு நெய்வேலியில் உற்பத்தியாகும் நம்முடைய மின்சாரத்தை நமக்கே கொடுக்க கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்...

மகாபாரதமும் தாமிரபரணி நாடும்...


குறவருக்கும் (கௌரவர்)
பாண்டியருக்கும் (பாண்டவர்)
நடந்த போரே மகாபாரதம்...

இந்த பகையை முடித்து இருவரையும் சேர்த்து வைக்கத்தான் பாண்டிய மன்னனான முருகன் குறவர்களிடம் பெண் எடுத்தார்.

 சேரர் நடுநிலை வகித்தனர்.

இரு படைகளுக்கும் உணவு கொடுத்தவன் உதியஞ்சேரலாதன்.

இதனாலே இவனை பெருஞ்சோற்று தியஞ் சேரலாதன் என்பர்.

இவனை புகழ்ந்து முரஞ்சியூர்முடி நாகராயர் பாடிய பாடலில் இதை அறியலாம்.

யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி யைவரோடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலப்பூந் தும்பை

யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்.

அப்போது இலங்கைத் தீவும் தமிழகமும் ஒன்றாக இருந்தன.

பொதிகை மலையில் தோன்றி நடு இலங்கை வரை பாய்ந்தது தென்பொருநை (தாமிரபரணி).

2000 ஆண்டுகள் பழமையான தாலமியின் (Ptelomy) உலக வரை படத்தில் இலங்கைத் தீவு தாப்ரபேன் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்...

குந்தியின் மகனே..
மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு.

சோழர்கள் இலங்கையை ஆண்டபோது குற்றால குறும்பலா ஈஸ்வரர் கோயிலுக்கும் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கும் நித்திய தீப நிவந்தம் போன்ற ஆன்மீக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பழ.நெடுமாறனின் ஈழப் போர்முனையில் புலிகளுடன் என்ற 1985 ம் ஆண்டுகால புத்தகத்தில் படித்ததாக நினைவு...

தமிழக படகுகள் இயங்காது, கேரள படகுகளே இயங்கும்...


தமிழகத்தின் பொறுப்பில் இருக்கும் நீர்ப்பரப்பில் தமிழக படகினை இயக்கக்கூடாது என அடாவடி செய்து வரும் கேரளா அரசு, தனது மாநில படகுகளை இயக்கத் தொடங்கியுள்ளது..

விபரமான பதிவுக்கு,
தேடுக : இனவெறிக்கு இலக்கணம் வரையும் மலையாளிகள்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 52...


தீய பழக்கங்களில் இருந்து விடுபட ஆழ்மனப்பயிற்சி...

ஆழ்மனதின் அற்புத சக்திகளை ஆரம்பத்தில் இருந்து விளக்கமாகப் பார்த்தோம். அந்த சக்தியை அடைய உதவும் பயிற்சிகளை அறிந்து வரும் இந்த வேளையில் ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் உணர வேண்டும்.

ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
ஆனால் அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி என்பதையும் அதை சாபமாக்கிக் கொள்ளாமல் வரமாக்குவது என்பதற்கான பயிற்சியையும் இப்போது பார்க்கலாம்.

மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.

ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.

இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.

தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை
என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.

மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.

ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.

நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.

நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.

நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.

எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.

சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.

முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.

பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள். அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.

அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.

இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள். இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம்.

(மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.)

எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.

மேலும் பயணிப்போம்.....

திமுக எனும் டூபாக்கூர் கட்சி...


எவ்வளவு தான் அசிங்கப்பட்டாலும், ஒன்னுமே தெரியாத மாதிரியே தொடைச்சிப் போட்டு போய்கிட்டே இருப்பானுக இந்த பிராடு திமுக காரனுக.....

ஆளும் வர்க்கத்திற்கு இரக்கமே இல்லையா? நெடுவாசலில் மக்கள் குளத்தில் இறங்கி நூதனப் போராட்டம்...


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்று வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் இன்று 21வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக மோடி Vs அதிமுக எடப்பாடி...


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு - அமலாக்கத்துறை மேல்முறையீடு...


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கறுப்புப் பணம் பற்றி சிபிஐ நீதிமன்றத்தில் சரியாக பரிசீலிக்கப்படவில்லை என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதையடுத்து, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது...

அதிமுக செல்லூர் ராஜூ Vs விஷால் ரெட்டி கலாட்டா...


மரணத்திற்கு பின்...


மனிதன் மரணத்தை கண்டு பல கோடி ஆண்டுகளாக அஞ்சி வந்ததன் காரணம், இறந்தபின் இருக்கும் நிலையை அறியாததே.

ஆம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என்பதை அறியாமலேயே இருப்பதால்தான் அந்த பயம்.

மரணம் மனிதனின் ஆட்டத்தை முடிப்பதாக கருதப்படும் ஒன்று.

ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்ற கோட்பாடே அவர்களை குழப்பம் அடைய செய்தது.

ஆனால் உண்மை அதுவல்ல, உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி விழிப்பது போலாம் பிறப்பு.

மரணம் என்பது ஆன்மா எடுத்துக் கொள்ளும் தற்காலிக ஓய்வே.

நாம் ஒவ்வொரு பிறவியிலும் பலவித சிக்கலான அனுபவங்களை பெறுகிறோம்.

மரணத்திற்கு பின் நாம், செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இனிமையான மற்றும் துக்கமான எண்ணங்களால் அலைக்கழிக்கபடுகிறோம்.

ஆவி நிலையில் நாம் பெற்ற அனுபவங்களை நினைத்து நினைத்து சுகதுக்கங்களை அடைகிறோம்.

ஆம் அதிகம் பாவம் செய்த ஆன்மா கேட்பாரற்று ஆதரவற்று நிர்கதியாக தனிமையில் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி தவிக்கிறது.

புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவோ சொர்கம் எனும் பரிமாணத்தில் நிறைய ஆன்மாக்களோடு கூடி மகிழ்கிறது.

வாழ்க்கை ஒரே முறை தான். தயவு செய்து வாழ்க்கையை வாழுங்கள்...

பூமி மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக மாறப்போகுதாம்...


மேற்பரப்பில் உள்ள நிலம் முழுவதும்
மறைந்து பூமி மீண்டும் ஒரு தண்ணீர்
உலகமாக மாறிவிடும் என்று
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற
ஆய்விதழில் வெளியிட்டுள்ள
ஆராய்ச்சி முடிவில், கண்டங்களின்
மேலோட்டின் தடிமன் குறைந்து
வருவதாகவும் இதனால் இன்னும் 2
பில்லியன் ஆண்டுகளில் பூமி
மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக
மாறிவிடும் எனவும்
கூறப்பட்டுள்ளது...

இன்னைக்கு நான் தான் கிடைச்சனா உங்களுக்கு - தீபா குமுறல்...