25/11/2017

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் பற்றி...


தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் (1984) தங்கியிருந்த போது பெசன்ட் நகரில் ஒரு வீட்டில் முதன் முதலாக நேர்காணல் நடத்த காத்திருந்தார் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்....

சூப்பர்மேன் வருவாரென எதிர்பார்த்திருந்த அனிதா சற்று உயரம் குறைவாக வந்தமர்ந்த தலைவரைப் பார்த்து இயக்கத்தைச் சேர்ந்தவர் என நினைத்த அனிதா, ஜன்னலுக்ரு வெளியே தலைவரைத் தேடி தன் பார்வையை ஓட்டினார்.

புரிந்து கொண்ட தலைவர்., சற்று மௌனத்திற்கு பிறகு 'நான்தான் பிரபாகரன்' என்றவரின் மென்மையான குரலைக் கேட்டதும் அனிதா வியந்தாராம்.

அவரது நேர்காணலில்..

எதிர்காலத்தையும் எதிரிகளையும் நிகழ்வுகளையும் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலும், அவருடைய ஒரே இலக்கு தமிழீழத்தை தவிர வேறில்லை என்பதும், அவர் எவ்வளவு கூர்மையாக உன்னிப்பாக நிகழ்வுகளை விடயங்களை உற்று நோக்குகிறார் என்பதும் புரிந்தது..

மேலும் தலைவர் சொன்ன விடயம், (இந்த விடயத்தை அனிதா பிரதாப் வெளியிடவில்லையாம்) என்றாவது ஒருநாள் நாங்கள் இந்தியாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம்..

(அதாவது இந்திய அமைதிப்படையுடன் பின்னாளில் ஏற்படப்போகும் போரினை முன்கூட்டியே கணித்திருக்கிறார்).

இதைக் கேட்ட அனிதா அதிர்ச்சியடைந்து
இந்தியா உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோறூட்டும் கைகளையே கடிப்பீர்களா? என வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த தலைவர், தமிழீழம் அமைவதை இலங்கையை விட இந்தியா விரும்பாது. ஏனென்றால் இந்தியாவில் ஐந்து கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றாராம்.

- பிரபாகரன் என தலைப்பிடப்பட்ட நூலிலிருந்து....

எடப்பாடி ஒபிஎஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப ஆர்கே நகரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும், திருப்புர் ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் பேச்சு...


மனிதனும் கடவுள் ஆகலாம்...


ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக அடிகளார் அவர்கள் அருளிய உபதேசம்..

மனிதன் கடவுளாக வேண்டுமென்றால் சரியை, கிரியை, யோக, ஞானம் ஆகிய நான்கும் அவன் அறிந்திருக்க வேண்டும். இதை அறியாமல் ஆன்ம லாபம் பெற முடியாது. கிரியை, சரியை, யோக, ஞானம் என்று முன்பு இருந்திருக்கலாம். காலப்போக்கில் சரியை, கிரியை, யோக, ஞானம் என்று மாறிவிட்டது.

சரியை என்பது பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும், நன்நெறியை கடைபிடித்து நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படியாகும்.

கிரியை என்பது கடவுள் ஒருவன் உண்டு என்று அறிவதும், அதற்கு துணையாக இருப்பது உருவ வழிபாடாகும்.

ஆரம்பகாலத்தில் ஒரு உருவத்தை சுட்டிக்காட்டினால்தான் அதை பூஜித்து கடவுள் அருள் பெறுவார். கடவுளை எந்த உருவத்தில் வணங்கினாலும் கடவுள் மனமிரங்கி அருள் செய்வார்.

"எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம்
அன்றேயிரங்கி யீந்தருளும் பதம்.
என்போன்ற வாக்குமிகு பொன்போன்ற
கருணைதந்து இதயத்திருக்கும் பதம்."

-மகான் இராமலிங்க சுவாமிகள் அருளிய
 - அருட்பா - திருவடிப்புகழ்ச்சி.

ஆகவே கடவுள் அருள்பெற வழிபாடு செய்வதே கிரியை மார்க்கமாகும்.

யோகம் என்பது தன் உடல் கூற்றை அறிந்து அதற்குள் இயங்கும் ஆன்மாவை அறிந்து அந்த ஆன்மா இயக்கத்திற்கு மூச்சுக்காற்றுதான் காரணம் என்று அறிந்து அந்த மூச்சுக்காற்றும் நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசமாக (போகின்ற காற்று மற்றும் வருகின்ற காற்று) ஆக 21,600 முறை இயங்கினால்தான் ஆன்மா இயக்கமும் மனித வாழ்க்கையும் நடைபெறும்.

இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றேயாகும். ஆகவே, மூச்சுக்காற்றை அறிந்து அந்த காற்றின் இயக்கமாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகும். இடகலை என்பது இடது மூக்கில் வருகின்ற காற்றும், பிங்கலை என்பது வலது மூக்கில் வருகின்ற காற்றும், சுழிமுனை என்பது புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்றும் ஆகும்.

இதை நன்கு அறிந்து ரேசக, பூரக, கும்பகம் ஆகிய தன்மையை உணர்ந்து காற்றை இழுத்தல், ஸ்தம்பித்தல், நிறுத்தல் ஆகிய ரகசியத்தை(காற்றை நிறுத்துதல் என்பது புருவ மத்தியாகிய சுழிமுனையில் காற்றை ஒடுக்குதல்) அறிவதே யோக மார்க்கமாகும். இது அனைத்தும் ஆசான் அகத்தீசன் அருள் இல்லாமல் யோகத்தை அறிந்துகொள்ள முடியாது.

ஞானம் என்பது இயற்கையின் இயல்பறிந்து அது உடம்பினுள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை அறிந்து, அந்த இயற்கை தூலதேகமாகிய புற உடம்பாகவும், சூட்சும தேகமாகிய அகஉடம்பாகவும் இருக்கின்ற இந்த இயல்பை அறிந்து அதே இயற்கை மும்மலமாகிய காமதேகமாகவும், மலமற்ற ஞானதேகமாகவும் அமைந்துள்ளது.

இயற்கையின் இயல்பறிந்து அதனுடைய இயல்பாகிய (மாசு அல்லது களிம்பு) களிம்பு அற்றால் சதகோடி (100 கோடி) சூரியப்பிரகாசமான ஒளி உள்ளே தோற்றும். இதை அறிவதே ஞானமாகும். அந்த ஜோதியை காணவேண்டும் என்றால் ஆசான் அகத்தீசன் அருள்செய்ய வேண்டும்.

"களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே"
-திருமந்திரம் உபதேசம் - கவி 114.

ஆகவே, சரியை, கிரியை, யோக, ஞானமாகிய நான்கும் ஆசான் அருள்கொண்டுதான் அறிய முடியும்.

மேற்கண்ட சரியை, கிரியை, யோக ஞானத்தின் சாரம்

சரியை என்பது நெறியுடன் வாழ்வதாகும். கடவுளைப் புறத்தில் உருவாக நினைத்து வழிபாடுவது கிரியை ஆகும்.

யோகம் என்பது மூச்சுக்காற்றைப்பற்றி அறிந்து, மூச்சுக்காற்றை ஞானபணடிதன் ஆசியோடு புருவ மத்தியில் ஒடுக்குவதே யோகமாகும்.

ஞானம் என்பது எல்லாம் வல்ல பரம்பொருள் உள்ளும் புறமுமாக இருப்பதை அறிந்து உள்ளெழும் ஜோதியை கண்டு தரிசிப்பதே ஞானமாகும்...

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்...


பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர். முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி - அகத்தியர் குணபாடம்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்து விடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய:

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு:

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு:

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு:

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கி விடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை. இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்...

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ராகமோனிகா படுகொலை...


சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)...


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)..

ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள்
சுவாசிக்கின்றீர்கள்?

உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை?

ஆண், பெண், அலியாவது ஏன்?

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்..

உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு?

சிதம்பர இரகசியம் என்றால் என்ன?

இயற்கையின் செயல்பாடுகள்...

ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது (ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்சபூதங்களின் சாரமாகும்).

பின்பு 10 மாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது.

குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும்.

பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது.

பிறகு நாளுக்கு நாள், பாலர் பருவம், வாலிபம், முதுமையுமாக பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு நரை, திரை வரும். உடம்பு தளர்ந்து போகும்.

உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துவிடும்.

உயிர் தோன்றும் போது உடம்பும் உயிருமான சுக்கில, சுரோணிதமாகிய திரவப்பொருளாக இருந்த இந்த உடம்பு, திடப்பொருளாக மாறி இறந்துபோகிறது.

இது மிக நுட்பமான இயற்கையின் செயல்பாடாகும்.

பரிணாம வளர்ச்சியும் அதன் இயல்பும்..

சடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா சீவராசிகளும் அதனதன் அமைப்பின்படி பரிணாம வளர்ச்சிக்குட் பட்டிருக்கும்.

இதை உண்மைப்பொருள் அறிந்தவர்கள் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது.

அதன் போக்கில்தான் சென்று சாகவேண்டும்.

ஆனால் மனிதன் மட்டும் தடுக்கவும் வெல்லவும் முடியும்..

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.

ஊர்வன : 11
மானுடம் : 9
நீர் :10
பறவை :10
நாற்காலோர் :10
தேவர் :14
தாவரம்(4*5) : 20

மொத்தம் = 84

ஆக 84 இலட்ச தோற்றபேத ஜீவராசிகளாகும்.

மேற்கண்ட பாடலில் 7 வகை தோற்றத்தைப் பற்றி உள்ளது.

இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றும்.

குறிப்பாக கருப்பை முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றும்.

தரையில் ஊர்ந்து செல்வது 11 லட்சம் தோற்ற பேதங்கள் உதாரணமாக பாம்பு, பல்லி, தேள், நட்டுவாக்கிளி, புழு போன்றவைகள்.

மானுடம் 9 லட்சத் தோற்ற பேதமுடைய மனிதர்கள்.

நீர்வாழ் ஜீவராசிகள் பத்துலட்ச தோற்ற பேதமுடையவைகள். உதாரணமாக மீன், திமிங்கலம், முதலை, தவளை போன்றவை.

பறவை இனங்கள் 10 லட்ச தோற்ற பேதமுடையவை. உதாரணமாக புறா, காகம், கிளி போன்றவை.

 நாற்காலோர் (நான்கு காலுடைய ஜீவராசிகள்) பத்து லட்ச தோற்ற பேதங்கள். உதாரணமாக யானை, குதிரை, மான் போன்றவை..

நமது கண்களுக்குப் புலப்படாத 14 லட்சம் தேவர்கள் இருக்கிறார்கள்..

தாவரங்கள் மட்டும் 20 லட்சம் தோற்ற பேதங்கள் கொண்டவை..

மனிதர்கள் உட்பட மற்ற எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ இயற்கை கொடுத்தது. புல், செடி, கொடி, மரம் நான்கு தான்.

புல் வகை என்பது குறுகிய கால பலன் தரக்கூடிய கம்பு, நெல், கேழ்வரகு, சோளம் போன்றவை.

செடி என்பது மிளகாய், தக்காளி, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை.

கொடி வகைகள் : அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், சுரக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் சில கொடி வகை மூலிகைகளும், வேலிப்பருத்தி முதல் உண்டு.

மரம் : மா, தென்னை, பனை ஆகிய கணக்கில் அடங்கா வகைகள்.

குறிப்பு..

மனிதனுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பசி இயற்கையே.

அதனதன் உடல் இயல்புக்கேற்ப உணவும் இயற்கையே, அதை உண்ணுவதும் இயற்கையே, அதை உண்டபின் ஜீரணமாகக்கூடிய இயல்பும் இயற்கையே.

உணவில் உள்ள சத் அசத்தை பிரித்து, அசத்சை நீக்கி, சத்தை மனிதனுக்கு 72 ஆயிரம் நாடி நரம்புகளையும் உரமேற்றுவதும் இயற்கையே.

பின்பு அதன் காரணமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்த கரணங்களும் இயற்கையே. மெய், வாய், கண், மூக்கு, செவி, என்று சொல்லப்பட்ட பொறிபுலன்கள் அடங்கிய தத்துவம் 96ம் இயற்கையின் செயல்பாடுகளே.

நாம் நமக்கு பசி வந்ததாகவோ, நாம் உண்ணுவதாகவோ நினைக்ககூடாது.

பசியும் இயற்கையே, நாம் உண்ணுவதும் இயற்கையே, அறுசுவையும் இயற்கையே, உறங்குவதும் இயற்கையே, உறங்கி விழிப்பதும் இயற்கையே, உடல் இன்பமும் இயற்கையே, கரு கூடி பின் குழந்தை ஆவதும் இயற்கையே.

ஆக அனைத்தும் இயற்கையின் செயல்பாடாகும்...

கூரியர் கம்பெனிகளுக்கு ஆப்பு அடியுங்கள்...


திராவிடத்தால் தமிழ்நாட்டின் அவலம்...


ஜட்டி வாங்க காசில்லை ஆனால் சரக்கு வாங்க காசிருக்கு இவன் தான் ஒரிஜினல் குடிமகன்...

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரனின் சிந்தனையிலிருந்து...


விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை.

இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு.

ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக் கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்..

எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள்..

கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்..

தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல..

அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்று தான் சொல்வேன்..

இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து வரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்...

மதுரை மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு...


தலைமுறை தாகத்திற்கு தீர்வை தேடும் உழவன்...


கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாவத்தூர்ஏரி கடைசி தலைமுறையா?

சீமை கருவேலம் மரம் நிறைந்து அழிவின் விளிம்பில்.

மாவத்தூர் ஏரி சுமார்  650 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவை கடவூரின் மையப்பகுதி தரகம்பட்டி அருகில் உள்ள மாவத்தூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவையாகும்.

கடவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மழைநீர் இங்கு வருகிறது. தற்போது தண்ணீர் பெய்த மழையில் சிறிதளவு தேங்கியுள்ளது.

இவ் ஏரியில் மூன்றுகுமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை ஏரி கரையோரம் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்மூலம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனவசதி செய்வதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.   

தற்போது ஒருகுமிழ்  மட்டுமே பாசனவசதி செய்வதற்கு பயன்படுகிறது.

மற்றொருகுமிழ் கள் மண்ணில் மறைந்து மேடாக முடிக்கிடக்கிறது.

இன்னொரு குமிழ்கள் முழுவதும் மறைந்தது. இவை படத்தில் காணலாம்.

ஏரியை ஒருமுறை கூட தூர்வாரியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சப்பட்டிஏரி சம்பந்தாமாக லஸ்கர் ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முயற்ச்சி செய்துள்ளார். அது தோல்வியில் முடிந்துள்ளது. அவரும் தற்போது இல்லை இறந்து விட்டார் போல.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் சிறிது நாள் செய்ததாக தகவல்.


இந்த ஏரியை இப்பகுதிவாழ் விவசாய மக்கள் தூர் வார வேண்டும் என கூறுகின்றனர்.

இவ்வேரியில் நீர் இருக்கும் பட்சத்தில்
சிந்தமாணிப்பட்டி குளம்
காணியாளம்பட்டி குளம்
உடையாப்பட்டி குளம்
பஞ்சப்பட்டி ஏரி
இறுதியாக  அடைகிறது.

முக்கிய நீரோட்டமாக உள்ள ஓரே ஏரி இந்த மாவத்தூர் ஏரி ஆகும்.

இதில் நிரம்பி வரும் தண்ணீர் ஏறக்குறைய 40 கி.மி பயணம் செய்து அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயரால் அன்றே வடிவமைக்கப்பட்டது.

பஞ்சப்பட்டி ஏரியும் நிரம்பும் பட்சத்தில் குளித்தலை தென்கரை வாய்க்கால் காவிரி கரையோரம் கலக்கிறது.

நிதிகளை ஒன்றிணைப்பதை விட
ஏரிகளை ஒன்றிணைத்தாலே. எதிர் வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை குறையும்.

மாவத்தூர் ஏரியை மீட்போம்...

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை...


எதைச் செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால் தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வாய்கிழிய பேசுபவர்களிடம், வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள்.

அப்படி இருக்கக்கூடாது. என்ன நோய்க்கு, என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக முதல்-உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது.. நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்...

ஆஸ்த்துமா:

கடினமான மூச்சு, சத்தத்துடன் சுவாசம் விடுதல். மூச்சிழப்பு ஏற்படுதல், இருமல் வரலாம். மார்பு இருக்கமடைந்து சுவாசம் கடினமாதல், பேச முடியாமை, உதடு, முகம்-நீல நிறமாதல்.

சிகிச்சை:

சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீது முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். அவரிடம் உறிஞ்சும் மருந்து இருந்தால் ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி-வாயில் வைத்த 3 அல்லது 4 முறை உள்ளே உறியச் சொல்லவும்.  மருந்து ஏதும் இல்லையெனில் அல்லது மேற்சொன்ன முறையில் பலனில்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்..

மின்சாரம் தாக்குதல்:

சுவாசமும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு சுய நினைவு இழத்தல். மின்சாரம் நுழைந்த - வெளிப்பட்ட இடங்களில் தீக்காயங்கள்.

சிகிச்சை:

சுவிட்ச் தெரிந்தால் - அணைத்து விடவும். இல்லையெனில் மரக்கட்டை போன்ற மின்சாரம் புகாத பொருள்கொண்டு மின் இணைப்பிலிருந்து அவரைத் தொடாமல் அப்புறப்படுத்தவும். சுய நினைவு இழந்திருந்தால் - சுவாசமும் ரத்த ஓட்டமும் உள்ளதா? என்று கண்டறிந்து உடனே சி.பி.ஆர். கொடுக்க தயாராக இருக்கவும்.
தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை 10 நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால் மூடி கட்டுப் போடவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

நீரில் மூழ்குதல்:

சுவாசத்தடையும், உடல் குளிர்ந்து போதலாலும் உயிரிழக்க நேரிடும். தக்க பாதுகாப்பு முறைகளை கையாண்டு நீரில் மூழ்கியவரை வெளியில் கொண்டு வரவும். தரையில் இரண்டு கால்களுக்கு இடையில் குப்புற படுக்க வைக்கவும். உங்கள் இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில் தூக்கவும்.

இரண்டு, மூன்று தடவைகள் அவ்வாறு தூக்கி இறக்கினால் நீரும் தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும். பிறகு அவரை மல்லாந்து படுக்க வைத்து, வாய், நாசிதுவாரங்களை சுத்தம் செய்து, சி.பி.ஆர். முறையைக் கையாளவும். அருகில் உள்ளவர்கள் ஈரத்துணிகளை கழற்றி எடுத்து விட்டு உலர்ந்த துணியால் கீழும் மேலும் முழு உடலையும் சுற்றி வைக்கவும்.

மூச்சுக் குழாய் வழியாக நீர் செல்லும்போது அவை பாதிக்கப்பட்டு வீக்கமடைந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பிறகு, சுவாசக் குழாயை அடைத்து தடையை உண்டாக்கும். ஆகவே அவரை மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்தப் பின் சேர்க்க வேண்டும். நீரில் மூழ்கி சுயநினைவு இழந்தவர்கள் அவசியம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும்.

எலும்பு முறிவு:

பாதிக்கப்பட்ட இடத்தில் வலி (முக்கியமாக அசை ஏற்பட்டால்) சில நேரங்களில் உருமாறி, வீக்கமும் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு உண்டாகியிருக்கும். அசைவுகள் பாதிக்கப்பட்டு, எலும்பு அசைந்தால் தாங்க முடியாத வலி உண்டாகும்.

சிகிச்சை :

அசைவு கொடுக்காமல் இருக்கச் சொல்லவும். உடைந்த எலும்புக்கு மேலும் கீழும் உள்ள மூட்டுகள் அசையா வண்ணம் ஆதரவு கொடுத்து கட்டு போடவும். மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும்.

கீழ்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் சிம்புகள் வைத்து கட்டு போடவும். முக்கியமாக இரு கால்களையும் பாதங்களையும் சேர்த்து வைத்து 8 வடிவகட்டு போடவும்.

சுளுக்கும் - சதை பிடிப்பும்:

வலி, மூட்டின் அசைவுகள் குறைந்தும், வீக்கம், ரத்தக்கட்டு ஏற்படும்.

சிகிச்சை:

ஆர்.ஐ.சி.இ. ஆர்-ஓய்வு, ஐ-பனிக்கட்டி, ஈரத்துணி, சி-அழுத்தமான கட்டு, இ-உயர்த்திப் பிடித்தல். பாதிக்கப்பட்ட இடத்திலுள் இருக்கமான ஆடை, காலணிகள் எடுத்து விடவும். அந்த இடத்தின் மீது அதிக பளுவு தாங்கும்படியாக வைக்க வேண்டாம். ஓய்வு கொடுக்க வேண்டும்.

பனிக்கட்டி ஒரு துணியில் சுற்றியோ அல்லது ஈரத் துணியோ வீக்கத்தின் மீது வைத்து இறுகக்கட்டு போடவும். அதிகமாக இறுக்க வேண்டாம். உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும்.

மருத்துவ உதவிக்கு நாடவும். கை, கால் வலிப்பு (காக்காய் வலிப்பு):

கை, கால்கள், உடலும் முறுக்கினால் போல் இருக்கும். குழப்பம், கை கால்கள் வலிப்புடன் அசைந்து காணப்படும், சுவாசம் முரடாக இருக்கும்; பற்களை கடித்துக் கொண்டு சில நேரங்களில் நாக்கும் கடிபட்டு இரத்தம் சேர்ந்து நுரை கலந்த எச்சில் வெளிப்படும்; சுயநினைவு இழந்தும் காணப்படுவார்கள்.

சிகிச்சை:

கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த தலையில் அடிபடாமல் படுக்க வைக்கவும். தலைக்கடியில், கை, கால்கள் அசையும் போது தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்படாமல் இருக்க துணிகளைப் போடவும். அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள் படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவைகளை அப்புறப்படுத்தவும். கை, கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம்.
கழுத்தில் மார்பில் உள்ள துணிகளை தளர்த்தி விடவும். வலி நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து, சுவாசமும் இரத்த ஓட்டமும் இருந்தால் அவர்களை மீட்பு நிலையில் படுக்க வைக்கவும் பற்களுக்கு இடையில் எதையும் வைக்க முயல வேண்டாம்.

பக்கவாதம்:

மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டாலோ அல்லது ரத்தம் அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் பரவி அமுக்குதல் ஏற்படும். முகத்தில் வலுவிழந்த நிலை (சிரிக்க முடியாமை), கை, கால்களில் சோர்வு, நாக்கு குழறுதல்-பேச்சில் குழப்பம், தள்ளாட்டமுடன் நடை, கண்களில் பார்வை பாதிப்பு, தாங்க முடியாத தலைவலி, போன்றவை ஏற்படும்.

சிகிச்சை:

இந்த அறிகுறிகள்- தெரிந்தவுடன்-நேரத்தை குறித்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். வாயில் வரும் எச்சில் போன்றவற்றை துடைத்து விட்டு தலையை உயர்த்தி தலையணை மீது படுக்கவைக்கவும். டோலியில் எடுத்துச் செல்லவும்.

இதயக் கோளாறுகள் மார்பு வலி:

மார்பின் அடிபாகத்தில் பிழிவது போன்ற வலி எடுத்து அது மேல் நோக்கி பரவுது போல் தெரியும்- தாடை- கைகள் வழியாக வலி, நடுக்கம் கைகளில் எடுக்கும். சுவாசமும் கடினமாகும். திடீரென்று வலு விழந்தது போல் தோன்றும். மேல் மூச்சு வாங்கும்.

சிகிச்சை: உடனே உட்கார வைத்து கழுத்து மார்பு, இடுப்பிலுள்ள துணிகளை தளர்ச்சி நிதானமாக ஆழ்ந்த மூச்சு வாங்கும்படி சொல்லவும். தைரியம் சொல்லி ஆசுவாசப்படுத்தவும். அவரிடம் ஏதாவது மாத்திரை இருந்தால் நாக்குக்கு அடியில் வைத்து சாரினை உறிஞ்சும் படி சொல்லவும்.

அல்லது ஆவியாக இரசாயன கலவை இருந்தால் அதனை உறிஞ்சச் சொல்லவும். ஓய்வுக்குப் பின் வலிகுறைந்தால் அவர் செய்து கொண்டிருந்த வேலைகளை நிதானமாக செய்யச் சொல்லவும். மறுபடியும் வலி உண்டானால் மருத்துவரை நாடவும்.

இதயத்தில் திடீரென்று கோளாறு:

அடிப்பாகத்தில் பிழிவது போன்று எடுக்கும் வலி நேரமாக அதிகரித்துக் கொண்டே போகும். இடது தாடை-இடது கை, சில நேரங்களில் வலது பக்கமாக ஓடுவது போல் தோன்றும். மார்பு இறுக்கமடைந்து சுவாசம் விடுவது கடினமாகும். மயக்கமும் தலைசுற்றலும் ஏற்படும். தனக்கு ஏதோ ஆபத்து நிகழ இருக்கென்ற அச்சம் உண்டாகும். முகம் வெளுத்து, உதடுகள் நீலமாக காணப்படும். வழுவிழுந்த, ஒழுங்கீனமான வேகமான நாடி; அதிக அளவு வியர்த்து கொட்டுதல்; காற்றுக்கு கதறுவது போல் ஆழ்ந்த சுவாசம், குழப்பம்-கை, கால், விரல்களிலிருந்து குளிர்ந்து கொண்டே இதயம் நோக்கி வரும். குமட்டல், வாந்தி உண்டாகும் கைகள் நடுங்கும்.

சிகிச்சை:

மருத்துவ ஊர்திக்கு அழைப்பு கொடு; அவரிடம் ஏதாவது மருந்து இருந்தால் உடனே கொடுக்கவும். தைரியம் சொல்லி ஊக்கம் அளிக்கவும் ஓய்வு எடுக்கச் சொல்லவும்.

பின்புறமாக சாய்ந்து உட்கார வைத்து கழுத்து, மார்பில் உள்ள துணிகளை தளர்த்தவும், முட்டியை மடக்கி தொடைகளுக்கு அடியில் தலையணைகளை வைக்கவும். மருந்து ஏதும் இல்லையெனில் ஒரு ஆஸ்பிரின் (300கிராம்) மாத்திரை அவர் நாக்குக்கு அடியில் வைத்து உறிஞ்சி சாரை விழுங்கச் சொல்லவும். ஊர்திக்கு செல்ல நடக்காமல் உட்கார வைத்து எடுத்துச் செல்லவும். ஊர்தியினுள் சாய்ந்து உட்கார்ந்தபடியே அழைத்துச் செல்லவும்.

நாய்கடி:

வெறி நாய் எச்சலில் "ரேபிஸ்'' என்ற மிகச் சிறிய கிருமிகள் மனித நரம்பு மண்டலத்தையும் மூளையினையும் தாக்கி உயிரை போக்கக் கூடிய சக்தி கொண்டது.

சிகிச்சை:

கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த காயங்கள் இருந்தால் அதன் மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவும்.

நாயை கால் நடை மருத்துவமனையில் ஒப்படைத்தால் அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன் மூளையை சோதித்து "ரேபிஸ்'' தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும்.

நாசியிலிருந்து ரத்த ஒழுகல்:

வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல் உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற காரணங்களினால் மூக்கின் முன் பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும்.

சிகிச்சை:

உடனே உட்கார வைத்து தலையை முன்பக்கமாக குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். பேசுவது, விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மூக்கெலும்பின் கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10 நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். மீண்டு ஒழுகல் ஏற்பட்டால் மருத்துவரை நாடவும்.

நீரிழிவு வியாதி :

சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி.

சிகிச்சை:

மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்.

சர்க்கரை குறைந்து விட்டால்:

வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம்.

சிகிச்சை:

உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம்...

ஒரு தலைப்பட்சமான செயலால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழந்தது - பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை...


எந்த துறையில் ஊழல் என்று கமல் நிருபிக்க வேண்டும். இல்லையேல் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் -- ஜெயக்குமார்...


பத்திரப்பதிவு துறையில் ஊழலும் லஞ்சமும் அதிகமாக உள்ளது சொன்னது நானல்ல பெரிய நாட்டாம  கிருபாகரன் இப்ப என்ன பண்ணுவ அமைச்சு?

எகிப்தில் மசூதி அருகே நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்வு...


ஜெ கைரேகை வழக்கு : ஜெயலலிதா வைத்த கைரேகையை அனுப்ப பெங்களூரு சிறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை துளி...


சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்..

தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும்..

படிப்படியாக அழிந்து போக வேண்டும்..

ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை...

இவர் என்ன தீவிரவாதியா? இல்ல திருடனா? கேவலம்... ஒரு ஹெல்மெட் போடலைங்கிறதுக்காக இப்படி வெறிகொண்டு அடிச்ச காவலரே... உங்க சர்வீஸ்ல ஒரு திருடன், ஒரு கொலைகாரன், ஒரு ரேபிஸ்ட புடிச்சிருப்பீங்களா?


அப்பாவி மண்டைய உடைக்கிறது வீரமில்ல... அடிதடி பண்றவனை பின்னி எடுக்கிறது தான் வீரம்.

இதுக்கெல்லாம் வெட்கப்படணும் காவல்துறை.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த காவலரை டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்...

திமுக தெலுங்கர் கருணாநிதியும் தமிழின அழிப்பும் : மறைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...



(16.5.96)கர்நாடகா தேவ கௌடாவை தலைமையமைச்சராக்க எப்படி ஆதரிக்கலாம் என்ற பா.ம.க வின் கேள்விக்கு..

திமுக தலைவர் கருணாநிதி தேவ கௌடா தென்னாட்டுக்காரர் பின்தங்கிய குமூகத்தைச் சேர்ந்தவர் என பாமக’வுக்கு தெரியவில்லை போலும் என்று பதில் அளித்துள்ளார்,

அதாவது தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதுனு பாலத்துல குத்தவச்சு உட்கார்ந்திருந்த, தேவ கௌடாவை தென்னாடு பின்தங்கிய குமூகம் என சப்பைக்கட்டு கட்டி ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வாயடைத்துள்ளார் கருணாநிதி.

இவருடைய ஆட்சிக்காலத்தில் தான்(18.5.96) காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கித்தரனும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்க..

காவிரி வறண்டு கிடக்கிறது மழைப்பெய்து நீர்மட்டம் ஏறியவுடன் தண்ணீர் வாங்கித் தருகிறேன் என்று மடையடைக்கும் சமயத்தில்,

காவிரியின் பிறப்பிடமான குடகில் நாளெல்லாம் மழைப்பெய்து அணை நிரம்பியிருந்தது..

இவ்வாறாக தான் அனைத்து விடயங்களிலும் திமுக கருணாநிதியின்  செயல்பாடு இருந்துள்ளது...

உலகத்திலேயே மூத்த மொழி தமிழ்.. மூத்த குடி தமிழன்.. அயல்கிரக வாசிகளின் ஆதாரம் இதோ…


பிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர்.

இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது.

மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர்.

உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது.

இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர்.

இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார்..

அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார்.

பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார்.

தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்..

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார்..

அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல..

அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது..

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ..

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்..

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்..

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்..

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு (தெலுங்கு), தா (இலத்தின்)].

5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல் (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை).

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்து கொண்டிருத்தல். [எ.கா: இல் (தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்)].

13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன].

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத் தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்...

பாஜக அமித்ஷா வுக்கு உத்தரவிட்ட நீதிபதி மர்மச்சாவு...


தமிழ் சித்தர்கள் அருளிய நீண்ட நாள் வாழ்வது எப்படி?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை).

இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான்.

இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்..

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும்.

இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம்..

சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர்..

64 விதமான மரத்தாலான வேலைப் பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்.

21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித் துடிப்பையும் குறிக்கும்..

திருமூலர் தனது பாடலில்..

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும்.

இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும்.

இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும்.
இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள்..

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்..

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்..

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு.

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை..

(இது சித்தர்களால் மட்டுமே முடியும்).

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்..

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம்..

ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்...

அப்பல்லோவில் இருக்கும் போது ஜெ கவர்னருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் உள்ள கையெழுத்தும் போலியானது , அன்று அவர் வென்டிலேட்டரில் சுயநினைவற்று இருந்தார் - திமுக சரவணன் விசாரனை ஆணையத்தில் இன்று தகவல்...


சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்...


சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும்.

உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்..

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்..

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்..

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய்..

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள்..

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம்..

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய்..

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து..

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய்..

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை..

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை..

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய்..

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன..

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன.

இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும்.

அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்..

ஒபிஎஸ் இபிஎஸ் அணிக்கு 111 எம்எல்ஏக்கள் தான் ஆதரவாக உள்ளார்கள் எனத் தேர்தல் ஆணையமே இன்று கூறியுள்ளது. ஆட்சி நடத்தும் பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையமே ஒத்துக் கொண்டுள்ளது , பிறகு எப்படி எடப்பாடி அரசு ஆட்சியை தொடர்கின்றது ? - தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...


தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை இன்றைய தீர்ப்பில் தேர்தல் ஆணையம் எம்எல்ஏக்களாகவே கணக்கிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மத்திய அரசு நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதையே இது காட்டுகின்றது -  தங்க தமிழ்ச் செல்வன் பேட்டி...

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


பாஜக மோடி சன்யாசியாக போகவில்லை...


வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி  கொண்டு ஓடிப்போனார் - மோடியின் அண்ணன் பிரஹலாத் மோடி...

அரக்கோணம் அருகே 4 பள்ளி மாணவிகள் மரணம்...



வேலூர் மாவட்டம் அரக்கோணம் ராமாபுரம் அருகே பணப்பாக்கம் அரசுப் பள்ளியில் படித்து வந்த பதினோராம் வகுப்பு மாணவிகள் தீபா, சங்கரி, ரேவதி, மணிஷா நான்கு பேரும் ஆசிரியர் திட்டியதால் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை எண்ணங்கள் தமிழகத்தில் அதிகரிக்க என்ன காரணம் ? எங்கு பார்த்தாலும் தற்கொலைகள் ?
நேற்று சத்யபாமா பல்கலையில் ஒரு மாணவி தற்கொலை இன்று நான்கு மாணவிகள் ?

பாஜக தமிழகத்தில் 1000 ஓட்டுக்கு மேல் வாங்கினாலே அது இயந்திர தில்லு முல்லு தான்...


இனப்பெருக்கத்தை கட்டுபடுத்ததான் ஐயப்பன் வழிபாடு...


தமிழர்களிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐயப்பன் என்றால் யார் என்றே தெரியாது.தமிழர்களிடம் குலதெய்வ வழிபாட்டை தவிர வேறு அனைத்து வழிபாடுகளும் திணிக்கப்பட்டதே.

இது அனைவருக்கும் தெரியும். ஒரு வேலை மாட்டுவண்டி காலத்தில் கூட கேரள எல்லைக்குள் மலைகளை கடந்து சென்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அப்படியிருக்கையில் ஏன் இந்த ஐயப்பன் வழிபாடு வழிந்து திணிக்கப்பட்டது?

அந்த காலத்தில் எந்த வித கருத்தடை சாதனங்களும் இல்லை இருந்திருந்தால் இந்த ஐயப்பன் வழிபாடு வந்தே இருக்காது.

ஐயப்பன் என்பது இரு ஆண்கடவுளுக்கு பிறந்த குழந்தை என சொல்லும் போதே தமிழர்கள் மனத்தில் ஒரினசேர்க்கை சரி தான் போலும் என்ற சிந்தனை தோன்றும்.

மேலும் கார்த்திகை மார்கழி மாதங்கள் தான் இயற்கை இனப்பெருக்கம் செய்வதற்காக மனிதனுக்கு கொடுத்த மாதங்கள். இந்த நேரத்தில் ஆண் பெண் இருவரின் உடல் வெப்பமும் சீராக காணப்படும். கர்ப்பப்பை குளிர்ச்சியாக காணப்படும்.

குழந்தையின்மைக்கு காரணம் ஒரே ஒன்று தான் அது தான் அதிக வெப்பம் ஆணின் உடலில் வெப்பம் அதிகம் என்றால் விதையாகிய விந்து இறந்து விடும். என குழந்தை பிறக்காது...

பெண்ணின் உடலில் அதிக வெப்பம் என்றால் நிலமாகிய கருப்பை சூடாகி விதையை ஏற்றும் கொள்ளாமல் கழித்து விடும். நிலம் குளிர்ந்தால் தான் விதை முளைக்கும்.

எனவே வெப்பம் சீராக இருக்கும் நேரம் கார்த்திகை மார்கழி மாதங்கள் அந்த நேரம் ஒரினசேர்க்கை கடவுளாகவும், பெண்களை ஒதுக்கும் கடவுளாகவும் ஐயப்பனை உருவாக்கி அவனை வழிபட இந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் விரதம் இருந்து வரவேண்டும் என்பது எவ்வளவு இயற்கைக்கு எதிரான செயல்.

இந்த செயலை அவர்கள் நம்மை செய்ய சொல்லி 30 வருடங்களுக்கு முன் நிறைய படங்களின் மூலம் எவ்வளவு விளம்பங்களை கொடுத்தனர் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள்.

மேலும் பெண்களுக்கு உடல் தாகம் வரும் இந்த குளிர்நேரத்தில் விலகி இருப்பதால் அவர்கள் வழிதவறி போவதற்கும் அதுவே வாய்ப்பாக அமையும்.

இயற்கை நம்மை கூடிமகிழவே விதித்துள்ளது அதை தடுப்பவன் எவனும் இயற்கைக்கு எதிரியே...

குறிப்பு : ஐயப்பன் என்பது நம் ஐய்யனார் தான்.. அதை மாற்றி நம்மை முட்டாளாக்கியுள்ளனர்...