20/06/2021

மருத்துவ குணம் கொண்ட அரச மரம்...

 


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்! , ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?

அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள்.

அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்...

காதலிக்கு நன்றி...

 




முடிவு செய்து

எதிர்பார்த்து காத்திருந்த ஒரு -

செயல் பொய்யாகும் போது

மனதில் தோன்றும் வலியே

உன் வாழ்க்கையின்

வைராக்கியத்தின் ஆயுதம்

என்பதை தோல்வியால் உணர்த்திய

காதலிக்கு நன்றி...

பாஜக சங்கிகளை கதற விடும் நடிகர் சூர்யா...

 


திருடனிடம் திருடிய போலீஸ் ரஞ்சித்...

 


தமிழின் பொருள் என்ன?

 


பல  சினிமா  படங்களில்  தமிழ் மொழி கடினமான  மொழி  என்று காட்டபடுகிறது.

இது வருத்தத்திற்கு உரிய  செயல்.

இன்று தமிழ் நாட்டில் பெரும்பான்மையான  விண்ணப்ப படிவங்கள்  தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளன.

தமிழ்  உலகிலேயே  வேறு  எந்த மொழிக்கும் இல்லாத பெருமை இதற்கு உண்டு.

அது என்னவென்றால் வேறு  எந்த மொழினுடைய  பெயருக்கு  அர்த்தம்  இருக்காது.

ஆனால்  தமிழ் மொழிக்கு  மட்டும் இனிமை  என்ற பொருள் உண்டு...

தர்பூசணி திருடும் போலீஸ்...

 


பாஜக மோடியின் பித்தலாட்டங்கள்...

 


சாப்பிடும் போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

 


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு செரிமானமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை.

ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட காலநிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம்.

அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.

அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை செரிமானம் செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும்

அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் செரிமானத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் செரிமானப் பணியை பாதித்துவிடும்.

இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; செரிமான வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர் என்று ஆதங்கப்படுகிறார்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் நோயாளிகள்தான் என்று கூறுகிறார்வைத்தியர்.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேபோன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள். அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று செரிமான சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால், அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக செரிமானமடைய வைத்து விடும்...

ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார்...

 




நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , 
அவர் கார் முன் நின்றது. 

இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..

'அவர் 'குட் ஈவ்னிங், 
ஏதாவது பிச்சனையா?'. 

போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... 

"நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்,
ஸ்பீட் லிமிட்டை ஒரு 
மைல் கூட அதிகரிக்காமல், 
சக டிரைவர்களை மதித்து 
காரை ஓட்டிய விதத்தை 
நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, 
உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 

10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. 

அவர்  சந்தோஷமாக 
ஒரு பெருமூச்சுவிட்டு 
விட்டு சொன்னார், 
'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். 

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி...

'சாரி சார் தப்பா நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்......

😅😂🤣

பாஜக மோடியின் முதலாளி அதானிக்கு 2 லட்சம் கோடி இழாப்பு...

 


தமிழினத்தை இழிவு படித்தியவர்களை எதிர்த்து கேள்வி கேட்டதால் முடக்கப்பட்டது பேசுதமிழாபேசு youtube channel😠😡

 


ஜவ்வரிசி...

 


இந்த வார்த்தை தமிழும் கிடையாது...

அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..

இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..

ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..

ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது ...

நண்பனும் நானும்...

 




நண்பன் : மனைவி புதிதாக ஒரு உணவு செய்து கொடுத்திருக்கிறாள். உனக்கு வேணுமா... 

நான் : எனக்கு வேண்டாம்...

நண்பன் : ஏன்..?

நான் : நன்றாக இருந்தால்,
             நீ சோதனை எலி...

             நன்றாக இல்லையெனில்,
             நீ பலி ஆடு...

என்னைய ஆள விடுடா சாமி 😁

நண்பன் : 😡😒😳😁

வாங்குன காசுக்கு மேல கூவுறான் வேசி தினமலர் 😂

 


கொரோனா கலாட்டா...

 


நோய்களும் உணர்வுகளும்...

 


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம்.

இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும் (சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் (அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும் (தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள்.

இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...

லம்டா எனும் புதிய வைரஸ் 29 நாடுகளில் பரவல்...

 


அடுத்த 100 நாள் திட்டத்தை தொடங்கினார்கள்...

 



தேவை...

 


காட்சிக்கும் பார்வைக்கும்  வித்தியாசம் இருக்கிறது.

மனித கண்களால் காண கூடியவை அனைத்துமே காட்சியாகும்.

ஆனால் எது தேவை என்பதை பொறுத்துத்தான் பார்வை முடிவாகும்.

பார்வை நம் மனதின் தேவையால் கிடைப்பது.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை உணர்ந்து அறிந்தோர்க்கு, தேவையானவை தெரியும்.

தேவையானவை மட்டுமே தெரியும்...

பெரியார் எனும் ஈ.வெ. ராமசாமியின் சாதி வெறியும்.. தமிழின அழிப்பும்...

 


என் கல்லறையிலும் காத்திருப்பேன் உனக்காக..

 




உதிரத்தோடு இணைந்தவள்
உதடுகளோடு பிணைந்தவள்
சத்தமின்றி மனதை
சஞ்சலப் படுத்தியவள்
சிரிப்புகளில் இருதயத்தை
சிதறடித்தவள்
எங்கு போனாள்..?

கண்ணை இமை
மறக்கும்வரை
கண்ணீர் மண்ணில்
கலக்கும்வரை
இமைக்காது பார்த்த
நொடிகளை எண்ணி
காத்திருக்கிறேன்
கொள்ளையிட்ட
விழிகள்
எங்கு போனது....?

வசியம் தடவிய
வார்த்தைகள் கொண்டு
என் இரவுகளை
பகலாக்கியவள் எங்கே..?

வானோடு பறந்த
என் சிறகுகளை வெட்டி
கூண்டுக்குள் அடைத்தவள்
எங்கே.?

அவள் வருகைக்காக
ஒருத்துளி அழுகைக்காக
இன்னும் காத்திருக்கிறேன்
கல்லறையிலும்
விழித்தபடி...

௮ப்படியே என் வூட்டு பக்கத்துல ஒரு # ௭ய்ம்ஸ் ஒன்னு.. ☺

 


வெண்டைக்காய்...

 


இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்...

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு.

ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும்.

நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.

உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்...

காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது..

 


பல பரிமாணங்களில் உலாவி வருவது..

உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது..

மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது..

காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது..

ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது..

காதலே செய்யாமல்  வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது..

காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது..

எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது...

இறைவன் Vs நான்...

 




அனல்கக்கும் பார்வைகள்...
வலி தரும் வர்த்தைகள்...
தொடரும் தோல்விகள்...
துரத்தும் துரோகங்கள்...
முதுகில் குத்தும் முகமூடிகள்...
ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்...
அழ வைக்கும் அன்புக்குரியவர்கள்...

இறைவா வேண்டும் எனக்கு
மரணம் என்றொரு வரம்...

நரக பூமியிலிருந்து
நான் தப்பித்து செல்ல...

இறைவன் : உன்னை தப்பிக்க விட்டா அப்புறம் சோதனைகளையும், வலிகளையும் யாருக்கு கொடுத்து நான் விளையாடுவது... 

😒😒😏

வேசி ஊடகத்தை செருப்பால் அடித்த மதன்...

 


ஆபாசமாக பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்த மதனும் அவன் மனைவியும்...

 


தோல்வியுற்றது என்னிடம்.. காதல் தோல்வி....

 




என் காதல் தோல்வி அடையும் 
என்று கனவிலும் எண்ணாதே...

நான் அவளை மறந்தால் மட்டுமே.. 
காதல் தோல்வி அடைந்ததாகும்...

ஆனால் எந்த ஜென்மத்திலும்
இது நடக்க போவதில்லை
என்று தெரிந்த பிறகு...

காதல் தோல்வியே தன் தோல்வியை
என்னிடம் ஒப்புக் கொண்டு 
பதினொன்று ஆண்டுகாலம் ஆகிவிட்டது...

திமுக சாராய ஆலைய வியாபாரிகள் பித்தலாட்டம்...

 


சாமானிய மக்களின் எதிரி பாஜக மோடி கலாட்டா...