23/12/2017

டிசம்பர் 23 உலக விவசாயிகள் தினம்...


ஆணவம்...


செல்வம், அதிகாரம், ஆள்பலம்...

இவையெல்லாம் தற்காலிகமானவை என்பதை  உணர்ந்தால்..

மனதில்  ஆணவம் உண்டாகாது...

14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் விஞ்ஞானி மாஷா நசீம் தேசிய இளைஞர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்...


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மாஷா நசீம்.
மாஷா நசீம் சிறுவயதில் இருந்தே ஏராளமான அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கி வந்துள்ளார். இதையடுத்து மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் தேசிய இளைஞர் விருதுக்கு இவரை தேர்வு செய்துள்ளது. வரும் ஜனவரி 12 முதல் 17-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

நான் 9-ம் வகுப்பு படித்த போது, 14 வயதில் பர்குலர் அலாரத்தை கண்டு பிடித்தேன். இதன் மூலம் வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்தால் எளிதாக கண்டு பிடிக்கலாம். அப்போதே எனது தந்தை காஜா நஷீம் என்னை ஊக்குவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் இன்று வரை தொடர்வதால் ஆர்வத்துடன் புதிய கண்டுபிடிப்புகளில் இறங்கினேன். எம்.டெக் படித்துள்ள நான் இதுவரை மொத்தம் 14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கியுள்ளேன். எனது முய்சிகளுக்கு கணவர் அப்துல் பாஷிக் உறுதுணை புரிகிறார். இதில் முக்கியமானது நெருப்பு இல்லாமல் மின்சாதனம் மூலம் அரக்கை பயன்படுத்தி சீல் வைக்கும் கருவி. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் இரு வாக்குச் சாவடி மையங்களில் இம்முறை அமல்படுத்தப்பட்டது. எனது கண்டு பிடிப்புகளுக்காக ஜனாதிபதி விருது, சர்வதேச விருது ஆகியவற்றை இரண்டு முறையும், ஐந்து முறை தேசிய விருதும் பெற்றுள்ளேன்.

மறைந்த ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம் தான் எனக்கு ரோல் மாடல். 6 முறை அவரை நேரில் சந்தித்து எனது கண்டுபிடிப்புகள் பற்றி விளக்கியுள்ளேன். உச்சி முகர்ந்து அவர் என்னை பாராட்டினார். குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியும் எனது கண்டுபிடிப்புகளை கண்டு வியந்து என்னை மிகவும் பாராட்டினார். இதுவரை 100-க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பும் எடுத்துள்ளேன்.

கடந்த 2016-ம் ஆண்டு மாநில இளைஞர் விருதை அப்போதைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றேன். இளம் தலைமுறைகளை ஊக்குவிப்பதால் தேசிய இளைஞர் விருதுக்கு என்னை தேர்வு செய்திருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. வருங்காலங்களில் இன்னும் அதிகமான விஞ்ஞானிகளை உருவாக்குவதே லட்சியம் என்கிறார் இந்த இளம்பெண்.

வாழ்த்துக்கள்...

பாஜக மோடியின் திருட்டு அரசியல்...


குஜராத் பாஜக வெற்றியின் ரகசியம் இதோ...


கோத்ரா தேர்தலில் பதிவான வாக்குகள் = 1,76,417
எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை = 1,78,911

2494 வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகளவில் எப்படி வந்தது?

இந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

'தேர்தல் பாதை திருடர்களின் பாதை' என்ற லெனின் கூற்றை அப்பட்டமாக நிருபிக்கிறார்கள் இந்திய அரசியல்வாதிகள்.

இந்தியாவைப் பொறுத்தவரை 'தேர்தல்' கூட மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இனி பாராளுமன்றம் / நாடாளும் மன்றம் உறுப்பினர்கள் 'மக்கள் பிரதிநிதிகள்' என்று சொல்வதைவிட,  'மின்னணு வாக்கு இயந்திரத்தின் பிரதிநிதிகள்' என்று பிரகணப்படுத்திக் கொள்வதே சரியானதாகும்.

இந்தியாவின் 'ஜனநாயகம்' மின்னணு வாக்கு இயந்திரத்தினால் Digital India இருண்ட காலத்திற்கு அரசியல் வாதிகளால் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் உணராத வரை இந்நிலையை மாற்ற முடியாது...

மிகப்பெரிய இன அழிப்பு நடந்திருக்கிறதா தமிழகத்தில்..?


நீரிழிவைக் கட்டுப் படுத்தும் கரிசலாங்கண்ணி...


கரிசலாங்கண்ணியின் பொதுவான குணம் கல்லீரல், மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்யும் சுரபிகளைத் தூண்டுகிறது.

உடல் தாதுக்களை உரமாக்குகிறது.

உடலை பொன் போல் மாற்றுகிறது.

இரும்பு சத்திக்களை உடையது.

காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது.

நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது.

சளி, இருமல், தோல் பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

சளி கரிசலைச் சாறு, எள் நெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும்.

இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா, சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

நூறு ஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊற வைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்...

பாஜக வும் வாக்கு இயந்திர வெற்றியும்...


தாலி அறுத்தான் சந்தை...



குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்த போது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்து வந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...

பாஜக மற்றும் அதிமுக அரசுகளே பதில் சொல்லுங்கள்...


சித்தர்களைப் பற்றி...


சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா?

இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான்.

ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை.

ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே...

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.

அகத்தியரும்..

"மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா";

"மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே"

என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது?

வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது?

யார் உதவுவார்கள்?

ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி.

அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன.

சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?.

யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே..

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.

ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும். சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.

ஆத்மா என்பது தான் என்ன?

மனித உடலில் அதன் இருப்பிடம் யாது?

மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது?

தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்?

ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன?

மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?

தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?

இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.

சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும்.

ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.

எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்...

தனது அம்மாவை யார் என கண்டுபிடிக்க வழக்கு போட்டுள்ள அம்ருதா ஏன் தனது அப்பாவை யார் எனத் தேடவில்லை - நீதிமன்றம் கேள்வி...


சொடக்கு தக்காளியின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?


கிராமங்களில் உள்ள சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும் சொடக்கு தக்காளியை, சிறுவர்கள் உடைத்து விளையாடுவது வாடிக்கை.

அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களை சிறுவர்கள் பறித்து சாப்பிடுவார்கள்.

அது, வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

மருந்து தயாரிக்கும் தேவையான பொருட்கள் : சொடக்கு தக்காளி செடியின் இலை, மஞ்சள் தூள்.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் நறுக்கிய இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, குடித்து வந்தால், உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாகும்.

அதே போன்று புற்று நோய் இருப்பவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால், புற்று நோய் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும், சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனைத் தரும்.

இது மனக்கத் தக்காளி வகையை சேர்ந்தது என்பதால், அதில் உள்ள அனைத்து மருத்துவ குணங்களும் இந்த சொடக்கு தக்காளிக்கும் உள்ளது...

அம்பானியின் Marketing Manager பாஜக மோடியிடம் BSNL ஊழியர்கள் கேள்வி...


தச்சூர் ஏரியின் அவல நிலை...


தச்சூர் பெரியாயி அம்மன் கோவில் அருகில் உள்ள தச்சூர் ஏரியை பக்கத்தில் உள்ள சில நல்ல உள்ளம் கொண்ட சில மனிதர்கள் ஏரியின் முக்கால் பகுதியை ஆக்கிரமித்து பயிர் செய்கின்றனர் இதனை யார் தான் சரி செய்வது...

இந்திரா காந்தியை போல் பல மாநிலங்களை ஆள்கின்றோம், பாஜக பெருமிதம்...



பல மாநிலங்களை ஆண்டுவிட்டால் இந்திரா போல் ஆகிவிடுவீர்களா?

அந்த அம்மணி இருந்தவரை பாகிஸ்தான் அரண்டு இருந்தது, இலங்கை அவரின் காலடிக்குள் இருந்தது, நேப்பாளம் அஞ்சி இருந்தது, சீனாவே தன் வாலை சுருட்டி இருந்தது.

ஆசியாவின் சக்திமிக்க நாடு என்பதை மிக ஆணித்தரமாக காட்டி நின்றார் இந்திரா. அப்படி ஆளமுடியமா?

அவர் சாதனையில் எதனை நீங்கள் தொட்டுவிடுவீர்கள் சொல்லுங்கள்?

அட இந்த‌ இலங்கையினை அடக்கிவிட முடிகின்றதா? திரிகோணமலையில் அமெரிக்கா இறங்கலாம் என்பதால் இந்திரா அடித்த அடியில் ஓடிவந்து காலில் விழுந்தான் ஜெயவர்த்தனே..

இன்று அம்மாந்தோட்டையில் சீனா துறைமுகம் கட்டிவிட்டது என கவலை படுகின்றது மத்திய அரசு..

கவலைபடுவதெற்கெல்லாம் ஒரு அரசா?

இப்படி அண்டை நாடு முதல் உள்நாட்டு சிக்கல் வரை பல விஷயங்களில் சறுக்கிவிட்டு இந்தியாவினை விட அதிக மாநிலம் ஆள்கின்றோம் என பீத்தல் வேறு..

இந்திரா இந்தியா தாண்டியும் ஆண்டார். அதுதான் அவரின் வெற்றி அதனை எல்லாம் இவர்கள் நெருங்க கூட முடியாது..

சிங்கத்தின் நாற்காலியில் நரிகள்  அமர்ந்து விட்டால்.. நரி சிங்கம் ஆகிவிட முடியாது...

திமுக வின் 2G ஊழலும்.. பாஜக மோடியின் நண்பர் அம்பாணி கூட்டணியும்...


2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட வேறு சிலர்....

1. வினோத் கோயங்கா - ஸ்வான்டெக் (2ஜி உரிமத்தைப் பெறுவதற்காகவே ரிலையன்ஸ் உருவாக்கிய நிறுவனம்).

2. கௌதம் தோஷி - ரிலையன்ஸ் குழுமம்.

3. ஹரி நாயர் - ரிலையன்ஸ் குழுமம்.

4. சுரேந்திர பிப்பாரா - ரிலையன்ஸ் குழுமம்.

5. ஷாஹித் உஸ்மான் பல்வா - 2ஜி உரிமத்தைப் பெறுவதற்காகவே ரிலையன்ஸ் உருவாக்கிய நிறுவனம்.

6. சஞ்சய் சந்திரா - யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர்.

7. ஆசிஃப் பல்வா - குசேகுவான் நிறுவனம்.

8. ராஜீவ் அகர்வால் - குசேகுவான் நிறுவனம்.

சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான "நெஞ்சில் துணிவிருந்தால்" படத்தில் ஒரு வசனம் வரும்.
"ஒரு கலெக்டரும் தாசிக்தாரும் கொல்லப்பட்டால், எல்லோரும் கலெக்டர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய இலக்கே தாசில்தாரைக் கொல்வதுதான் என்பது அவர்களுக்குத் தெரியாது."

இந்திய வரலாற்றில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்டனை பெறுவதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமல்ல...

அதுவும் ரிலையன்ஸ் நிறுவனம் மீதே குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், ஆதாராங்களை சமர்ப்பிப்பதில் சிபிஐ சுணக்கம் காட்டியதை தீர்ப்பில் நீதிபதியே சுட்டிக்காட்டியிருக்கிறார்...

கூட்டிக்கழிச்சிப் பார்த்தால் கணக்கு சரியாக வரும்...

பாஜக வும் வாக்கு இயந்திர தில்லு முல்லும்...


12 இடங்களுக்கான கர்நாடக உள்ளாட்சி இடைத்தேர்தலில்...

காங் -9
JDS -2
பாஜக -1

இடங்களில் வெற்றி..

எங்கெல்லாம் வாக்குச்சீட்டு முறை இருக்கிறதோ, அங்கெல்லாம் எதிர்கட்சிகள் ஜெயிக்கிறது...

ஆர்கே நகர் எக்சிட் போல் முடிவுகள் டிடிவி தினகரனுக்கு சாதகமாக உள்ளது நல்ல செய்தி - சுப்ரமணியன் சுவாமி டிவிட்டரில் கருத்து...


இதுவரை இல்லாத அளவு ஆர்கே நகரில் அதிக அளவு வாக்கு பதிவு 77.68% வாக்கு பதிவு, என்ன காரணம் ?


ஆண்களை விட பெண்கள் அதிக அளவு வாக்கு செலுத்தியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என ஆர்கே நகர் வட்டாரங்கள் சில தகவல்களை தெரிவிக்கின்றன.

எப்பொழுதும் பணம் கொடுத்து விட்டு ஓட்டு போட சொல்வார்கள் ஆனால் இந்த முறை டிடிவி அணியினர் 20 ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் 25 ஆம் தேதி நீங்க ஓட்டு போட்ட மைய காட்டி பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என் கூறியதால் ஆர்கே நகர் மக்கள் முன்டி அடித்துக் கொண்டு இந்த முறை அதிக அளவு வாக்கு செலுத்தியிருப்பதாக ஆர்கே நகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டு போட்ட மையை காட்டவில்லை என்றால் பணம் கிடைக்காது என்ற பதட்டத்தில் ஆர்கே நகர் மக்கள் பதறிக் கொண்டு ஓட்டு போட கூட்டம் கூட்டமாய் வந்ததாக ஆர்கே நகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலை 5 மணி ஆகியும் கூட்டம் குறையாமல் இருந்தது குறிப்பிடதக்கது.

நாங்கள் பணம் வாங்கினாலும் யாருக்கு போட வேண்டுமோ அவர்களுக்குதான் போடுவோம் என பல ஆர்கே நகர் வாக்காளர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருப்பது குறிப்பிடதக்கது...

உளவியலில் இருந்து... இலட்சியவாதி எப்படி இருப்பார் ?


தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்க்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்...

ஆடை: உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிகையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.

வேகநடை: வேகநடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.

நிமிர்ந்த நிலை: எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணி விடுவர். நிமிர்ந்து நிற்பது. தலையை தொங்கப் போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்துப் பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும்.

கேட்பது: நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -60 நொடிக்குள் உங்கள் லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்ட வேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.

நன்றி: உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும் அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.

மனதார பாராட்டுங்கள்: நம்மை நாமே “நெகட்டிவ்” வாக நினைக்கும் போது மற்றவர்கள் பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடல்வாகு: நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும், அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்...

உலகின் ஆகச்சிறந்த தற்சாற்புப் பொருளாதாரம் இது தான்...


கடந்த 5 மாதத்தில் பாஜகவிற்கு 80 ஆயிரம் கோடி நன்கொடை என்ற பெயரில் வந்துள்ளது. அண்ணா ஹாசாரே பரபரப்பு குற்றச்சாட்டு...


விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், நாட்டில் மக்கள் எண்ணற்ற துண்பங்களை சந்தித்து வருகின்றனர் பிரதமருக்கு 32 கடிதம் எழுதியிருந்தேன் ஒன்றிற்கு கூட பதில் வரவில்லை, வரும் மார்ச் 23 ஆம் தேதி ஊழலுக்கு எதிராக மீண்டும் மாபெரும் எழுச்சி போராட்டத்தை துவங்க உள்ளேன் என அண்ணா ஹசாரா தெரிவித்துள்ளார்.

ஜன்லோக்பால் சட்டத்தை காங்கிரஸ் கட்சி பலவீனமாக்கிவிட்டது என தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக கூறியது. ஆனால் பாஜக அரசு தற்போது காங்கிரசை விட  பலவீனமாக்கியுள்ளது, அதிகாரிகள் தங்களின் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்ற சட்டத்தை பாஜக அரசு நீக்கி விட்டது.

தனியார் நிறுவனம் வருமானத்தில் 7.5 சதவிகிதம் தான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும் என்ற சட்டத்தை பாஜக அரசு மாற்றி எவ்வளவு வேண்டமானாலும் நன்கொடை அளிக்கலாம் என திருத்தியுள்ளது.

மக்கள் மிகவும் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்,கடந்த 3 ஆண்டு ஆட்சியில் ஆசிய நாடுகளின் பட்டியலில் ஊழலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

எனவே ஊழலை எதிர்த்த மீண்டும் எனது போராட்டத்தை துவங்க உள்ளேன் என அண்ணா ஹசாரா கூறியுள்ளார்...

விழிப்புணர்வு உருவாகட்டும்...


ஆடி மாத மகத்துவங்கள்...


நம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த சாஸ்திரசம் பிரதாயங்களில் நிச்சயம் அறிவியல் காரணங்கள் நிறைந்திருக்கும்..

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்புக்கும் ஒரு முக்கியத்துவம் வைத்திருந்தார்கள்..

அந்த வகையில்,  ஆடி மாதத்துக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன..

இம்மாதத்தில் தான் தட்சியாயண புண்ணிய காலம் துவங்குகிறது..

இம்மாதத்தில் தான் அம்பிகை தவமிருந்து சிவபெருமானோடு இணைந்தாள் என புராணங்கள் கூறுகின்றன..

இந்த மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு (ஆடி 18) உள்பட பல்வேறு விசேஷங்கள் வருகின்றன..

ஆடி என்றதும் நம் நினைவில் வந்து நிற்பது, அம்மன் கோயில்களும், வேப்பிலையும், கேழ்வரகு கூழும் தான்..

இந்த மாதத்தில் செவ்வாய் அன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால்..  திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும், கன்னி பெண்களுக்கு திருமண யோகமும் கைகூடும் என்பார்கள்..

ஆடி வெள்ளியன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு சகல தோஷங்களும் விலகி, கன்னி பெண்களுக்கு திருமணம் தடையின்றி நடைபெறும்.. திருமணமான பெண்களுக்கு புத்திரப்பேறு உண்டாகும்.

கூழ் வார்த்தல்...

ஆடியில் அம்மன் கோயில்களில் மஞ்சள், குங்குமத்துடன் கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கின்றனர்.

இந்நாட்களில் ஒரு சில குடும்பங்களில் சகோதரர்கள், தங்கள் உடன்பிறந்த சகோதரிகளை விருந்துக்கு அழைத்து உபசரிப்பதுடன், அவர்களை அம்மனாக கருதி மஞ்சள், குங்குமம், வளையல்களுடன் புடவைகளையும் அளித்து மகிழ்கின்றனர்.

ஞாயிற்று கிழமைகளில் தங்களது வீடுகளை சுத்தம் செய்து, தங்கள் குலதெய்வம் மற்றும் அம்மனை நினைத்து பிரார்த்தித்து, வழிபாடு செய்கின்றனர்.

பின்னர், தங்கள் நேர்த்திக் கடன்கள் நிறைவேறும் பொருட்டு, அப்பகுதி மக்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்குகின்றனர்.

ஆடிகிருத்திகை..

வாரம், திதி, நட்சத்திரம் என மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உள்ளன.

முருகனுக்கு செவ்வாய்கிழமை உகந்தநாள்.

திதிகளில் சஷ்டி திதி முக்கிய விரதம்.

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு விசேஷம். அன்று முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வகை அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

ஏராளமான பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.

அடுத்து வரும் ஆடி அமாவாசை தினத்தில், நம் முன்னோர்கள் மற்றும் பித்ருக்களை நினைத்து, தந்தை இல்லாதவர்கள் புனித நீர் நிலைகளில் நீராடி, திதி தர்ப்பணம் அல்லது பித்ரு தர்ப்பணம் அளிப்பது மிகவும் சிறப்பு.

அவ்வாறு செய்ய இயலாதவர்கள், ஏழை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உணவு மற்றும் உடைகளை தமது வசதிக்கேற்ப வழங்கலாம்.

இதன் மூலம் அவர்களது வருங்கால சந்ததிகள் எவ்வித குறைபாடும் இல்லாமல், வளமான வாழ்வோடு சிறந்து விளங்கும் என்று சொல்வார்கள்.

ஆடிப்பெருக்கு..

ஆடி 18-ம்தேதி ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.

இந்நாளில் வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறு, குளம், நதி போன்ற முக்கிய நீர்நிலைகளில் நீராடுவர்.

புதுமணப் பெண்கள் அணிந்திருக்கும் தாலியைமாற்றி, புதிய மஞ்சள் சரடுடன் புதிய தாலியை மூத்த பெண்கள் அணிவிப்பர்.

கன்னி பெண்களுக்கும் புதிய மஞ்சள் கயிறு அணிவிப்பர்.

மேலும், எலுமிச்சை, தேங்காய் மற்றும் பலவகை சாதங்களை உண்டு, ஆடி பாடி மகிழ்வார்கள்.

தம்பதியருக்குள் அற்ப விஷயங்களுக்காக பிரிவினை ஏற்பட்டாலும், கருத்து வேறுபாடுகளை களைந்து, மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பதற்கான காரணமாக புராணங்கள் கூறுகின்றன.

புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற தனது பெண்ணை, இம்மாதத்தில் தான் ஒரு தாய் சீர் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வருவாள்.

இம்மாதத்தில் தனது தாய் வீட்டில் இருக்கும் பெண், அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் கற்று கொள்வார்கள்.

கட்டுப்பாடாக குடும்பம் நடத்துவது எப்படி, எல்லோரையும் அனுசரித்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் தாய் சொல்லி கொடுப்பார்.

அதன்படி, அந்த பெண், புகுந்த வீட்டில் செயல்பட்டு பிறந்த வீட்டுக்கு பெருமை தேடித் தருவார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க ஆடி மாதத்தை நாம் தள்ளுபடி திருவிழா காலமாக கருதாமல், ஆடிமாத அருமை, பெருமைகளைப் புரிந்து கொண்டு, அம்மனின் மகத்துவங்களை மனமுவந்து அறிந்து கொள்வோம்.

பெரியோர்கள் வழிகாட்டிய விரத மற்றும் வழிபாடுகளையும் மேற்கொண்டு, நம் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவோம்.

அடுத்த தலைமுறையினரையும் வழி நடத்துவோம்...

ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது , தேசிய பேரிடராக அறிவிக்கக் கூடிய அளவிற்கு பாதிப்புகள் ஏற்படவில்லை, அதற்கென வரையறைகள் உள்ளது - பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...


இலுமினாட்டி நரகத்தார் செட்டி இரகசியம்...

திருவண்ணாமலையில் கிடைத்த செப்பேடு ஒன்றில் கிடைத்த செய்தி...


சாலிவாகன சகாப்தம் வருஷம் 1613 மேல் பிரசோத்பத்தி வரு.தைமாதம் 3 தேதிசுபமஸ்து ஸ்ரீமது சகலகுண சம்பண்ணரான. அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சு அவந்திகாபுரி தவராள்பதி சப்தநகரப் பிரதாபரான கிஸகிந்த மலைக்குடையவரான. பம்பாநதிக்கு அதிபரான வைகுண்ட வளநாதரான. மாருதப் புரவிக்குடைய வரான கமலாகாந்தி கெய்ட் தேருக்குடையவரான. கெருடக்கொடிக்கு உடையவரான. பஞ்ச காவியத் தலைவரான எற்றா கைக்கு மாற்றாடவரான. தன்மதா வளரான. மணலூர்ப்பேட்டை பச்சையப்ப செட்டியாரய்யன் முதலான ஆயிரவர் நகரத்தாரும் திருவண்ணாமலை அருணாசலேசுவர. சுவாமியாருக்கு உச்சிக்கால கட்டளைக்கும் மடத்து தர்மத்துக்கும் மகமை உண்டுபண்ணி அம்பத்தாறு தேசத்து நகரத்தாறும் சித்திலிங்கப் பண்டாரத்தின் கையில் தாம்பிர சாசனம் எழுதிக் குடுத்த விபரம்.

கேள்விகள்...

1) இதுவரை கிடைத்த கல்வெட்டுகள் அனைத்திலும் மன்னர் மற்றும் இந்த (நகரத்தார் செட்டி) வணிகர் பற்றிய குறிப்புகள் மட்டுமே கிடைக்கிறதே ஏன்?

2) இதுவரை தமிழர் வரலாறு என்பது ஏன் கல்வெட்டுகளை வைத்தே எழுதப்படுகிறது?

3) கல்வெட்டுகளில் நகரத்தார் செட்டி பற்றிய குறிப்புகள் மட்டுமே இருக்கிறதெனில் ஏன் அதை மொத்த தமிழர்களுக்கான வரலாறாக குறிப்பிடுகிறீர்கள்?

4) நகரத்தார்கள் தமிழர்கள் அதனால் மொத்த தமிழர்களுடைய வரலாறாக எடுத்துகொள்ளக்கூடாதா என கேள்வியேலுப்பினால் " இந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் எந்த வார்த்தையாவது பாமரமக்கள் பேசிய வார்த்தைகளாக உள்ளதா?  பிறகு எப்படி அவர்களை தமிழர்கள் என்கிறீர்கள்?

5) "அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சு அவந்திகாபுரி தவராள்பதி சப்தநகரப் பிரதாபரான " - இந்த 7 நகரங்களுக்கு அதிபதியான பச்சையப்பன் செட்டியாரும் தமிழர் ஆனால் குடிசையிலும் மண்வீட்டிலும் வாழ்ந்த உன் தாத்தனும் என் தாத்தனும் தமிழர்கள் அப்படி தானே ?

6) " கிஸகிந்த மலைக்குடையவரான"
கிஸ்கிந்த மலைக்கு சொந்தகாரரான பச்சையப்பன் செட்டியும் தமிழர் நீயும் நானும் தமிழர்கள்?

எனக்கு மிச்சத்தை எழுதவே கடுப்பாக இருக்கிறது நீங்களே யோசித்து கொள்ளுங்கள்...

மறுபடியும் சொல்லுகிறேன்... இப்போது இருக்கும் காரைக்குடி நகரத்தார்கள் உண்மையானவர்கள் அல்ல.. இவர்கள் போலிகள் வெள்ளாளர்கள்...

300 வருடங்களுக்கு முன்புவரை உண்மையான நகரத்தார்கள் இந்த போலிகளுக்கு நடுவில் தான் வாழ்ந்தார்கள்..

இப்போது அந்த உண்மையான நகரத்தார்களை தான் இலுமினாட்டி என சொல்கிறது உலகம்.

One world order என்பதை 4000 வருடத்திற்கு முன் உலகாய்த்தம் என்ற வார்த்தையை பயண்படுத்தி இந்த உலகத்தை எப்படி ஒரு குடையின் கீழ் ஆளுவது என திட்டம் தீட்டிய அந்த கூட்டம் இப்போது திடிரென நொடிந்து போய்விட்டதாம்..

எல்லாருமே முட்டாளா?  உலகம் முழுக்க தமிழ் இருக்க காரணம் இந்த சாத்து வணிகர்களால் தானே ஒழிய நம்முடைய மரபணுவுக்கும் வேறு எவனுக்கும் சம்பந்தம் இல்லை..

அயோத்திக்கும் காரைக்குடி செட்டிக்கும்.. காசிக்கும் காரைக்குடி செட்டிக்கும்.. என்னடா சம்பந்தம்.. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டிங்களா....

உன் தாத்தன் அவன் தாத்தன் வாழ்ந்த வீட்டை யோசித்து பார்.. உண்மை தெரியும்.

அதற்கு மேலும் புரியவில்லை எனில் வெகு சீக்கிரமாக செத்து விடுங்கள் அடுத்த தலைமுறை தயாராகி வரட்டும்....

எந்த நிலத்தில் இந்த உலகாய்த்த சிந்தனை உதித்ததோ.. அதே இடத்தில் அது உதிர்ந்து போகட்டும்...இது இயற்கையின் வலிமை....

தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள் நேரம் குறைவே....

குறியீடு இரகசியம்...


இந்த குறியீடு 30,60,90,120 டிகிரியை குறிப்பது ஆகும்.

மனிதனின் பார்வை கோணமும் இதும் ஒன்று தான்.

மனிதனின் அதிகபட்ச பார்வை கோணம் 120 டிகிரி.

30 டிகிரி ஒரு குறிப்பிடட்ட பொருளின் மீதான குவிக்கும் அளவு.

60 டிகிரி பொருளை சுற்றியுள்ள இடத்தை  மீதான குவிக்கும் அளவு.


3 dimensional வரைபடங்களின் அடிப்படை என்பது 30, மற்றும் 120 டிகிரி தான், இன்று உலகில் பிரமிப்பை ஏற்படுத்தும் கட்டிடங்களின் அடிப்படை இவைதான்.

மனிதனை போலவே பார்வை கோணம் கொண்ட உயிரினங்கள் கழுகு, பாம்பு, மற்றும் ஓநாய்.

இந்த மூன்று உயிரினமும் ஒரு பொருளை பார்க்கும் என கொண்டால் அவை இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு view மாறும் வரைபடம் மாறும்.


எ-கா : கழுகின் பார்வை என்பது  உயரத்தில் இருந்து  பொருளை பார்ப்பது அதன் கோணம் top view மட்டுமே காட்டும், அதே போல் பாம்பு மற்றும் ஓநாயின் பார்வைகள் அவை இருக்கும் இடத்திற்கு தங்குந்தார் போல் மாறுபடும் அனால் பொருள் ஓன்று தான் வரைபடம் (planning) மட்டுமே மாறுபடும்...