பல மாநிலங்களை ஆண்டுவிட்டால் இந்திரா போல் ஆகிவிடுவீர்களா?
அந்த அம்மணி இருந்தவரை பாகிஸ்தான் அரண்டு இருந்தது, இலங்கை அவரின் காலடிக்குள் இருந்தது, நேப்பாளம் அஞ்சி இருந்தது, சீனாவே தன் வாலை சுருட்டி இருந்தது.
ஆசியாவின் சக்திமிக்க நாடு என்பதை மிக ஆணித்தரமாக காட்டி நின்றார் இந்திரா. அப்படி ஆளமுடியமா?
அவர் சாதனையில் எதனை நீங்கள் தொட்டுவிடுவீர்கள் சொல்லுங்கள்?
அட இந்த இலங்கையினை அடக்கிவிட முடிகின்றதா? திரிகோணமலையில் அமெரிக்கா இறங்கலாம் என்பதால் இந்திரா அடித்த அடியில் ஓடிவந்து காலில் விழுந்தான் ஜெயவர்த்தனே..
இன்று அம்மாந்தோட்டையில் சீனா துறைமுகம் கட்டிவிட்டது என கவலை படுகின்றது மத்திய அரசு..
கவலைபடுவதெற்கெல்லாம் ஒரு அரசா?
இப்படி அண்டை நாடு முதல் உள்நாட்டு சிக்கல் வரை பல விஷயங்களில் சறுக்கிவிட்டு இந்தியாவினை விட அதிக மாநிலம் ஆள்கின்றோம் என பீத்தல் வேறு..
இந்திரா இந்தியா தாண்டியும் ஆண்டார். அதுதான் அவரின் வெற்றி அதனை எல்லாம் இவர்கள் நெருங்க கூட முடியாது..
சிங்கத்தின் நாற்காலியில் நரிகள் அமர்ந்து விட்டால்.. நரி சிங்கம் ஆகிவிட முடியாது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.