என் உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்...
உன்னை மீண்டும் பார்த்த பின்
கண் மூடுவேன்...
நீங்க முடியுமா..
நினைவு தூங்குமா...
என் சதிகாரியே...
ஈழத்தையும், ஈழத்தமிழர்களின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் பெயரையும் வைத்து தமிழ்நாட்ல கோடி கோடியா சம்பாதிச்சு செட்டில் ஆனவனுங்களுக்கு கூட இப்படி ஒரு படம் எடுக்கனும் னு தோணல பாருங்க.
இந்த மேதகு படத்தை உருவாக்கிய படக்குவினருக்கு தலை வணங்கி வாழ்த்தி பாராட்டுகிறேன்.
இலங்கையை ஆண்டது பன்னடார வன்னியன் என்ற மன்னன்தான் என்ற மாபெரும் வரலாற்று உண்மையை வெளிக்காட்டிய இயக்குநருக்கு நன்றி..
திரு.பிராபகரன் அவர்களின் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த மேதகு படத்தின் உங்களின் அடுத்த PART-2 க்காக காத்துக் கொண்டிருக்கிறேன்...
டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
‘டெல்டா பிளஸ்' வகை வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது.
கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை காஞ்சிபுரம், மதுரை பகுதிகளில் கொரோனா தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
மருந்து நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காகவே மருந்துகளை உற்பத்தி செய்கின்றன.
நான் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்கிறேன் என்றால் அவை தரமாக இருந்தால் தான் நீங்கள் மீண்டும் அதை வாங்குவீர்கள். அப்போது தான் நான் லாபமடைய முடியும்.
அதுபோல நான் தரமாக ஒரு மருந்தை தயாரிக்கிறேன். அதை உபயோகப்படுத்தினால் மீண்டும் நோய் வராது. அதனால் எனக்கு ஒரு முறை மட்டுமே லாபம். அதனால் எனக்கு பயன் இல்லை.
அதனால் மருந்து நிறுவனங்கள் நோய்களை குணப்படுத்துவதை விட நோயாளின் எண்ணிக்கையை உயர்த்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஏற்றுக் கொள்கிறீர்களா?
யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.
கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றுதான் ‘என்வைன்டினெட்’ என்றழைக்கப்படும் கொஞ்சூண்டு நிலப்பகுதி. துர்கனா ஏரியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்களின் மொழியில் ‘என்வைன்டினெட்’ என்றால், ‘திரும்பி வராது’ என்று அர்த்தமாம். தீவுக்கு இப்படிப் பெயர் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்தது.
1900-களில் என்வைன்டினெட் தீவில் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். மீன் பிடிப்பது அவர்களுடைய தொழில். பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றாலும், வியாபாரத்துக்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு அடிக்கும் விசிட்தான்!
இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை! இது போதாதா? ‘தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள்’, ‘வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்’, ‘திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது’ என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.
1934-ல் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் ‘என்வைன்டினெட்’ தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.
ஆர்வமான விவியன் ‘இந்தத் தீவுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார். மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று ‘என்வைன்டினெட்’ தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.
பிறகு, ஹெலிகாப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் என்ன தெரிந்தது? பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை. என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை எட்ட நின்றே ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்...
உள்ளம் விரும்பும் உறவுகளிடம்
நெருங்கி பழக நினைத்தாலே
நெஞ்சோரத்தில் பயமொன்று
நெருப்பாய் சுட்டெரிக்கிறது..
பிரிவென்ற இறையை கொத்த
விதியென்ற பறவை
வாழ்க்கையென்ற வானில்
சுற்றித் திரிகிறது...
அதனாலே
அன்பானவர்களிடம்
அளவாக பேசி
ஆதரவை பூசி
கைவிடக் கூடாதென்று
கண்ணோரம்
கண்ணீர் வந்தாலும்
கவனமாக
காவல் காத்து வருகிறேன்
சில உறவுகளை...
ஏனெனில்...
வாழ தகுதியற்ற
ராசியில்லாத மனிதன் நான்...
😏😏😏
கோவில் என்பது ஒரு நிறுவனம் என்று எத்தனை முறை சொல்லியும் கேட்க மறுத்தவர்கள் இப்போது இதற்கு பதில் சொல்லுங்கள்...
கோவில்களில் இருந்து மக்களுக்கு 12.5% வட்டிக்கு கொடுக்கப்பட்டிருந்திருக்கிறது...
இப்படி அநியாய வட்டி கொடுக்கும் இடத்திற்கு போய் தமிழர் வழிபட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய்...
பெரும் கோவில்களுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இதற்கு சேர்த்தும் பதில் சொல்லி விடுங்கள்..
பலிகொடுத்து வணங்கும் குலதெய்வ வழிபாடு மட்டுமே மரபுவழி கடத்தப்பட்டது இதுவே தமிழர்களின் மதம் ஆகும்...
BLACK TIGER - Ravindra Kaushik இந்தியா கைவிட்ட வீரர்..
RAVINDRA KAUSHIK இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட (RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்...
1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் , அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு SPY ஆக செல்லுமாறு கேட்டனர். RAW வில் சேர்ந்து 2 வருட கடின பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார். PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் . 1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்.. அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் வைக்கபட்ட பெயர் BLACK TIGER...
26 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து PAKISTAN ல் பல சூழ்நிலைகளில் இருந்தார். INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலால் RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார். இந்தியா , எதுவும் தெரியாதது போல காட்டிகொண்டது. 1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தனைக்கு மனகஷ்டத்திற்கு பிறகும் , அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில்...
"Is this the reward a person gets for sacrificing his life for India? "
என்று எழுதி இருக்கிறார். பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK இறந்தார்...
19 ம் நூற்றாண்டில் இறந்த பிறகு ஒரு வேலை உயிர் வந்தால் மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு சமாதியில் மணியை கட்டி அதன் கயிற்றை இறந்த உடலின் கைகளில் கட்டிவிடுவார்கள்...
உயிர் வந்தால் இழுத்து தகவல் தெரிவிக்க .....
கடவுளின் இருப்பதற்கான முதல் ஆதாரமே மனிதனின் மரணம் தான் .