27/06/2021

எந்த நாய் கேட்கப் போகுது...

 




பாரீஸ் நகரில் ரயில் நிலையம் அருகில்
ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு
சம்பவம் நடந்தது. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.

ஆனால் அவர்களுடன் அந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி *நாய்* மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது. ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை!

எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை கைது செய்ய
முயற்சி செய்தது போலீஸ்.  ஒரு வழியாக, ஒரு பன்மொழி கலைஞரை அழைத்து வந்தனர். அவருக்கு 60 மொழிகள்வரை அத்துப்படி. அவர் ஒரு புரஃபெஸரும் கூட.
.
அவரும் வந்து வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை. அந்த நாய்க்கு ஒன்றும் புரியவே இல்லை.

கடைசியில் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான *ஹிப்ரு* என்ற மொழியில் அவர் பயிற்சியை துவக்கியதும்  நாய்க்கு புரிய ஆரம்பித்தது. உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு, உடன் கைதும்  செய்தது பாரீஸ் போலீஸ்.

அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது. பெரிய விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தது. விருந்தில் அவரிடம், 

உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது.  உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள் வழங்கபடும்.* என்றனர்....

பணம் வேண்டுமா.....?
விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?

அனைத்தையும் அவர் மறுத்துவிட்டார்...

*எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்* என்றார்...

அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.  சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்.

ஒரு அதிகாரி,  ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு அவர் சொன்னார்...

இந்த நாயை என் வீட்டிற்கு கொண்டு போய் என் மனைவி முன் நிறுத்தவேண்டும். ஏன் என்றால்,  நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம் அவள் சொல்வாள் "எந்த நாய் கேட்க்க போகுதுன்னு இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு. அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு"
சொன்னவுடன்...

பாராட்டக் கூடிய மக்கள் அரங்கமே பலத்த  சிரிப்பொலியில் மூழ்கியது..

🤪😁🤣😜

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.