09/03/2018

உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை...


இரசாயன ஆயுதங்கள் பிரயோகம் என்பது கி.மு. 400 ஆம் ஆண்டு முதல் பழமையானது.

கிமு 400ம் ஆண்டில் ஸ்பார்ட்டன் கிரேக்கப்படை எதிரிகள் மீது கந்தகப் புகையை பிரயோகம் செய்தது. சாவு விவரம் தெரியவில்லை.

கிபி 256: தற்போதைய சிரியாவில் குறிப்பிட்ட இந்த பண்டைய ஆண்டில் சசானிய பெர்சிய முடியாட்சி சுரங்கத்தில் பதுங்கியிருந்த ரோமானிய வீரர்கள் மீது விஷ புகையை பிரயோகித்துள்ளனர்.

1346: கிரிமியாவில் இத்தாலி வணிக குடியேற்றவாதிகள் மீது பிளேக் நோய் தொற்றிய பிணங்களை கொண்டு போடப்பட்டுள்ளது.

1500களில், ஸ்பானிய அராஜக காலனிய காலக்கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குடிமக்கள் மீது உயிரியல் போர் தொடுத்து லட்சக்கணக்கானோரை அழித்தது.

1763 ஆம் ஆண்டு போன்டியாக் போராளிகள் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் ராணுவ தலைமை ஜெஃப்ரி ஆம்ஹெர்ஸ்ட் அம்மை நோய் ஏற்படுத்தும் ஒரு வித ரசாயனம் தோய்க்கப்பட்ட போர்வைகளை அந்த நாட்டு உண்மையான குடிமக்களுக்கு வழங்க பரிந்துரை செய்தார். ஃபோர்ட் பிட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போது இந்த கொடூரமான போர்வை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1789ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவின் பூர்வ குடிகளை விரட்டியடிக்க அம்மை நோயை பிரிட்டிஷார் பரப்பியதாக கூறப்படுவதுண்டு.

1845ஆம் ஆண்டு நியூசீலாந்தில் மயோரி போராளிகளை அடக்க நச்சு வாயுவை பிரிட்டன் படைகள் பிரயோகம் செய்துள்ளனர்.

1907 ஆம் ஆண்டு ரசாயன ஆயுதங்கள் ஹேக் மாநாட்டில் தடை செய்யப்பட்ட போது அமெரிக்கா அதில் பங்கேற்கவில்லை.

1914 - 18: முதலாம் உலகப்போர் தொடங்கியது. ஒய்பிரஸ் போரில் ஜெர்மானியப்படை குளோரின் வாயுவை எதிரிகள் மீது பிரயோகம் செய்தது. இதில் 85,000 பேர் மரணமடைந்தனர். சுமார் 12 லட்சம் பேர் இனம் புரியாத நோயிலும், காயத்துடனும் வாழ்ந்தனர்.

1919 - 21: ரஷ்ய சிவில் யுத்தத்தில் புரட்சிகர போல்ஷேவிக் சோஷலிஸ்ட்கள் போராளிகள் மீது நச்சு வாயுவை பிரயோகித்தனர். ராயல் விமானப்படை போல்ஷேவிக்குகள் மீது இதே போன்ற தாக்குதலை நடத்தினர்.

1920: ஸ்பானியர்களின் மொராக்கோவில் பிரென்ச் மற்றும் ஸ்பெயின் படைகள் போராளிகள் மீது மஸ்டர்ட் வாயுவை பிரயோகம் செய்துள்ளனர்.

அதேபோல் இதே ஆண்டில் இராக்கின் அராபிய மற்றும் குர்திஷ் விடுதலை போராளிகள் மீது ரசாயன ஆயுதங்களை ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ள பிரிட்டன் அறிவுறுத்தியது. "நாகரிகமற்ற இனக்குழுகள்" மீது நச்சு வாயுவை செலுத்த பிரிட்டன் "அரசியல் மேதை" வின்ஸ்டன் சர்ச்சில் "பலமாக" பரிந்துரை செய்தார்.

1935: எத்தியோப்பியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கிய இத்தாலி மஸ்டர்ட் வாயுவை செலுத்தியது.

1937: சீனாவை ஆக்கிரமிக்க ஜப்பான் படைகள் உள் நுழைந்தது. சீனாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் ரசாயன ஆயுதங்களையும் பிற தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தியது.

1941: அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் தலையிட்டது. அதிபர் ரூஸ்வெல்ட் "நாங்கள் முதலில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம்" என்றார்.

1945ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் மீது வதை முகாமில் சைக்ளன் - பி என்ற ரசாயனப்புகையை செலுத்தினார். ஜப்பானிய ராணுவமும் இதனை பயன்படுத்தியது.

1947: அமெரிக்கா நோய் நுண்மம் அடங்கிய போர் ஆயுதங்களை வைத்திருந்தது. அதிபர் ட்ரூமன் ஜெனீவா உடன்படிக்கையிலிருந்து விலகினார்.

1949: அமெரிக்க நகரங்களில் ராணுவம் உயிரியல் ஆயுதங்களை ரகசியமாக பரிசோதனை செய்தது.

1951: அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியாவில் காளான் ஆயுதங்களைக் கொண்டு ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை கடுமையாக விரட்டி அடித்தனர்.

1952: ஜெர்மானிய கெமிக்கல் ஆயுத ஆய்வாளர் வால்டர் ஷ்ரெய்பர் டெக்சாசில் பணியாற்றி வந்தார். இவர்தான் நாஜி வதைமுகாமின் பிரதான காரணகர்த்தா என்பது தெரிந்தவுடன் அர்ஜென்டீனாவுக்கு தப்பி ஓடினார்.

1956: அமெரிக்க ராணுவ மேனுவல் வெளிப்படையாக உயிர்-ரசாயன போர் முறை தடை செய்யப்படவில்லை என்று அறிவித்தது. ஜெரால்ட் ஃபோர்ட் இது குறித்து கொள்கை அளவில் மாற்றம் கொண்டுவர துணையாக இருந்தார். அதாவது அமெரிக்கா ரசாயன் ஆயுதங்களை முதலில் பிரயோகிக்க அதாரிட்டி வழங்கப்பட்டது.

1959: முதலில் ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவில் தோற்கடிக்கப்பட்டது.

1961: அதிபர் கென்னடி நிர்வாகம் ரசாயன ஆயுதங்களுக்கான பட்ஜெட்டை 75 மில்லியன் டாலர்களில் இருந்து 330 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது.

1962: கியூப ஏவுகணை நெருக்கடியின் போது அமெரிக்க விமானங்களில் ரசாயன ஆயுதங்கள் நிரப்பப்பட்டன.

1968: அமெரிக்க ராணுவ தலைமைப்பீடமான பென்டகன் ஆர்பாட்டக்காரர்கள் மீது ரசாயன பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிறதா என்று கோரியது. மேஜர் ஜெனரல் மெடாரிஸ் அப்போது குடிமக்கள் ஆர்பாட்டம் செய்யும்போது ரசாயன ஆயுதங்களை பிரயோகிப்பது இரண்டு விதத்தில் நன்மை பயக்கும் என்றார். ஒன்று அவர்களை பயமுறுத்துவது, மற்றொன்று ரசாயன ஆயுதங்கள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும் அது உதவும் என்று விசித்திர யோசனை ஒன்றை முன்வைத்தார்.

1969: உத்தா ரசாயன ஆயுதங்கள் விபத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி.

1971: வியட்நாம் போரின்போது வியட்நாமில் சுமார் 6 லட்சம் பேருக்கு சோறு போட்ட வயல்வெளிகளை ரசாயன ஆயுதம் கொண்டு அழித்து ஒழித்தது அமெரிக்கப் படை.

தெற்கு வியட்னாமிய போராளிகள் மீது வெள்ளை பாஸ்பரஸ் கிரனேட்கள் பிரயோக்கப்பட்டன. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவிற்கு எதிராக உருவான பாரா மிலிட்டரி படைகளிடம் அமெரிக்கா பன்றிக் காய்ச்சல் வைரஸ்களை கொடுத்து கியூபாவில் பரப்ப சதி செய்ததாக செய்தித்தாள் அறிக்கை ஒன்று தெரிவித்தது.

1979: ஜிம்பாவே விடுதலை போரின் போது கடைசி கட்டத்தில் ருடீசியாவின் வெள்ளை அரசு கறுப்பரின மக்கள் மீது ஆந்த்ராக்ஸ் என்ற கொடிய நோய் கிருமியை பரப்பியது.

1984: இந்தியாவில் போபால் விஷ வாயு துன்பம் நிகழ்ந்தது. காரணம் அமெரிக்க ரசாயன நிறுவனம்.

1985: ஈராக்கிற்கு அமெரிக்கா ஏகப்பட்ட ரசாயன ஆயுதங்களை வழங்கியது.

இப்படியே இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது வரை கூறிகொண்டே போகலாம்.

கடைசியாக சிரியாவில் போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்கள் பிரயோக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

சிரியா போன்ற நாடுகளுக்கு ரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்ய முடியுமா?

உலகின் பணக்கார, ராணுவ பலம் மிக்க நாடுகள் அவ்வப்போது வியாபாரம் செய்ததன் விளைவுதான் இந்த கொடூரம்...

சென்னை மீனாட்சி கல்லூரி மாணவி அஷ்வினியை படுகொலை செய்த அழகேசன் - பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்...


லார்ட் லபக் தாஸ் யார்?


உண்மையில் லார்ட் லபக் தாஸ் ஒரு ஆங்கிலேயர் கிடையாது...

இந்த சொல் 1900 களில் சென்னையில் பெரிய நிலம் வாங்கி வசதியாக வாழ்ந்த குஜராத்திகளைக் குறிக்கும்.

(அந்த நிலம் இன்றும் பார்டர் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. குஜராத்திகள் இப்போதும் இருக்கிறார்கள்).

அவர்கள் பெயர் லாட் என்று தொடங்கி தாஸ் என்று முடியும்.

இன்றும் L.G.N road, V.N.Doss road, Mohan doss road, Gopal doss road ஆகியன இவர்களின் பெயரிலேயே அமைந்துள்ளன...

பள்ளிப்படை என்பது வீரத்துடன் போர் புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும்...


மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது நடுகல் என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து.

ஆனால் படைத் தளபதிகள்
போன்றோர்க்கும் பள்ளிப்படைகள்
அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் காணப்பட்ட கோயில்கள் இறந்த வீரர்களுக்குரிய சமாதிக்
கோயில்களாகவே இருந்ததாகத் தெரிகிறது. இதற்குப் பின்னரே இவைகள் பள்ளிப்படைகள் என அழைக்கப்பட்டன.

இறந்துபோன முன்னோர்களையும்,
வீரர்களையும் வணங்கும் வழக்கத்தில் இருந்தே கோயில்கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகின்றது.

இவ்வளர்ச்சியில் பள்ளிப்படைக் கோயில்கள் ஒரு கட்டமாகும்.

ஆண்களுக்குப் பள்ளிப்படைக் கோயில்கள் எழுப்பப்பட்டது போலவே அரசகுலப் பெண்கள் சிலருக்கும் பள்ளிப்படைகள் இருந்திருக்கலாம்
என்பது சில ஆய்வாளரது கூற்று ஆகும்.

ஆண்களது பள்ளிப்படைகளில் லிங்கம்
வைப்பது வழக்கமாக இருந்தது. இதனால், பிற்காலத்தில் இவை சிவன் கோயில்களாக மாறிவிட்டன.

பள்ளிப்படை அடக்க முறை உடல் புதைக்கப்பட்ட இடத்தில், முதலில்
திருநீரு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்சகவ்யம், நவதானியம், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்பைப் புல்
ஆகியவை அடுக்கப்பட வேண்டும். அதன்
மீது மரணித்தவரின் உடல் வைக்கப்பட்டு,
மீண்டும் மேற்கூறிய பொருட்கள்
அவரது உடல் மீது அடுக்கப்பட வேண்டும்.
இம்முறையை பள்ளிப்படை முறை என்று
அழைக்கிறார்கள். இந்த முறையில் உப்பு ,
மிளகு போடுவதால் மரணித்தவரின் உடல் பதப்படுத்தப்படும். அவரது உடல் மக்காது. என்பது வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும்.

மன்னர்களுக்கு அமைக்கப்படுவதே பள்ளிப்படை என்றும், மற்றவர்களுக்காக அமைக்கப்படுவது நடுகல் என்பதும் சில ஆய்வாளர்களுடைய கருத்து.

ஆனால் படைத் தளபதிகள்
போன்றோர்க்கும் பள்ளிப்படைகள்
அமைக்கப்படுவது உண்டு என்று வேறு சிலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் காணப்பட்ட கோயில்கள் இறந்த வீரர்களுக்குரிய சமாதிக்
கோயில்களாகவே இருந்ததாகத் தெரிகிறது.

இதற்குப் பின்னரே இவைகள் பள்ளிப்படைகள்என அழைக்கப்பட்டன.

இறந்துபோன முன்னோர்களையும்,
வீரர்களையும் வணங்கும் வழக்கத்தில் இருந்தே கோயில்கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகின்றது. இவ்வளர்ச்சியில் பள்ளிப்படைக் கோயில்கள் ஒரு கட்டமாகும்.

ஆண்களுக்குப் பள்ளிப்படைக் கோயில்கள் எழுப்பப்பட்டது போலவே அரசகுலப் பெண்கள் சிலருக்கும் பள்ளிப்படைகள் இருந்திருக்கலாம்
என்பது சில ஆய்வாளரது கூற்று ஆகும்.

ஆண்களது பள்ளிப்படைகளில் லிங்கம்
வைப்பது வழக்கமாக இருந்தது. இதனால், பிற்காலத்தில் இவை சிவன் கோயில்களாக மாறிவிட்டன.

பள்ளிப்படை அடக்க முறை உடல் புதைக்கப்பட்ட இடத்தில், முதலில்
திருநீரு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்சகவ்யம், நவதானியம், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்பைப் புல்
ஆகியவை அடுக்கப்பட வேண்டும்.

அதன் மீது மரணித்தவரின் உடல் வைக்கப்பட்டு, மீண்டும் மேற்கூறிய பொருட்கள் அவரது உடல் மீது அடுக்கப்பட வேண்டும்.

இம்முறையை பள்ளிப்படை முறை என்று
அழைக்கிறார்கள்.

இந்த முறையில் உப்பு , மிளகு போடுவதால் மரணித்தவரின் உடல்
பதப்படுத்தப்படும். அவரது உடல் மக்காது...

காவல்துறையினர் மீண்டும் வசூல் வேட்டை.. கொதித்தெழுந்த மக்களால் அலறிய காவலர்...


மனம்...


மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது..

உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்..

எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்..

நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது..

தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்..

தியானத்தின் தொடக்கம் சாட்சி
பாவம்..  தியானத்தின் முடிவு மனமற்ற நிலை..

மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்..

இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்...

தமிழக மக்களுக்கு நல்ல செய்தி...


இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?


இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.

அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.

இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனல் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம்...

அரசியல் மாணவர்களுக்குத் தேவையில்லை - மராட்டியன் ரஜினி...


வழுக்கை தலையில் முடிவளர...


வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
                                       
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

மொழிகளின் முதல் நூல்...


சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'சியபஸ்லகர' 1,000 ஆண்டுகள் பழமையானது.

தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நூல் 'மாபாரதம்' 1,000 ஆண்டுகள் பழமையானது.

கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'கவிராசமார்க்கம்' 1,170 ஆண்டுகள் பழமையானது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் 'தொல்காப்பியம்' 4,100 ஆண்டுகள் பழமையானது...

எங்களின் ஆற்றல்மிக்க அதிகாரத்தை பார்க்க விரும்புகிறீர்களா.?


நினைவுகொள் அரசாங்கமே, நாங்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணித்து உங்களின் அதிகாரத்தை அழிப்பதற்கு வந்து கொண்டிருக்கிறோம்..

பொய்...


நம் அனைவருக்கும் கற்பனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டு, பொய் சொல்வது தான்.

பொய் சொல்பவன் தன கற்பனையைப் பயன் படுத்தத் துவங்குகிறான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் மனம் கற்பனையான நிகழ்வை உருவாக்குகிறது.

பொய்யின் வெற்றியே அதன் உடனடித் தன்மை தான். பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே.

ஒத்திகை பார்த்து சொல்லப்படும் பொய்கள் பெரும்பாலும் இளித்து விடுகின்றன. உண்மை வெளியாகப் பல காலம் தேவைப்படுகிறது.

பொய் எப்போதும் நம் நாக்கின் நுனியில் காத்துக் கொண்டிருக்கிறது.

உலகில் அதிகம் பயன் படுத்தப்படும் பொருள் பொய். இதில் மொழி, தேசம், உயர்ந்தவர், தாழ்ந்தவர், வயது என்ற பேதம் இல்லை.

பொய் என்பது ஒரு ருசி. அது இளம் வயதில் நமக்கு அறிமுகமாகிறது.

பொய்யை மெய்யில் இருந்து  வேறு படுத்திப் பார்க்க முடியாத வயது என்பதால் பொய்யை அப்படியே நம்பி விடுகிறோம்.

அது பொய் என்ற விபரம் தெரிந்ததும், நாமும் அசை ஆசையாய் பொய்களை உருவாக்கத் துவங்குகிறோம்.

நாம் வளர வளர பொய்களும் நம்மோடு வளர்கின்றன. பொய்யை உண்டாக்கவும், உபயோகிக்கவும் தெரிந்தவுடன் அதன் பெயரை திறமை, சாதுரியம், தொழில் தர்மம் என்று பொலிவுடன் கூறுகிறோம்.

பொய் சொல்லத் தயங்காத நாம் மற்றவர்களால் பொய் சொல்லி ஏமாற்றப்படும் போது மட்டும் ஏன் கோபப்படுகிறோம்?

எல்லாப் பொய்களும் ஒரு தற்காலிகமான மகிழ்வையும் தப்பித்தலையும் ஏற்படுத்துகிறது.

பொய் என்ற ஒன்று இல்லாதிருந்தால் வாழ்வு சுவாரஸ்யம்  இன்றிப் போகுமோ?

அற்பப் பொய்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன.

வரலாறு பதிவில் உள்ள பொய்கள், மதத்தின் பேரால் சொல்லப்பட்ட பொய்கள், வணிக நிறுவனங்கள் சொல்லும் பொய்கள், அரசு சொலும் பொய்கள் யாவும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அங்கீகரிக்கப் படுகின்றன.

பொய்யைத் தவிர்ப்பது இயலாது.

ஆனால் பொய் சொல்ல வேண்டிய வாய்ப்புகளை குறைப்பது நம் கையில் தான் இருக்கிறது.

பொய்யைப் பொய் என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும்...

உங்களைப் போன்ற நபர்கள்தான் ஐயா தமிழகத்திற்கு தேவை...


இவர் தான் விவசாயிகளை அடித்தவர்.. தூத்துக்குடி பாஜக மகளிர் அணி தலைவர் நெல்லையம்மாள்..


கோவிலில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் பற்றிய நோட்டீஸ் கொடுப்பது தவறில்லையே..

அமைதியாக விழிப்புணர்வு செய்தவரை அசிங்கபடுத்தினால் திட்ட தான் செய்வார்கள்..

அது உன் செயலின் எதிர்வினை...

பாஜக லூசுகளா.. இந்த நோட்டீஸ் கொடுப்பது தவறா...


வாழ்வின் இலட்சியம்...


நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இலட்சியம் என்ன என்று அறிந்தால் தான் அது சார்ந்த அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்ய முடியும்.

பயணம் எங்கே என்று முடிவானால் தான் ரயிலிலா, பேருந்திலா, நடந்தா என்று முடிவு செய்ய முடியும்.

அதனால் முதலில் உங்களுடைய இலட்சியத்தை முடிவு செய்யுங்கள்.

அதன் பின் உங்களுடைய ஒட்டு மொத்தக் கவனத்தையும், ஒட்டு மொத்த நேரத்தையும், ஒட்டு மொத்த பயணத்தையும் அதை அடைவதில் செலவிடுங்கள்.

இதுவே மிக மிக முக்கியமான அடிப்படையான மந்திரச் சொல்.

இந்தச் சொல்லைத் தெரிந்து இருந்திருந்தால் தான் பிற மந்திரச் சொற்கள் உங்களுக்கு அர்த்தம் கொடுப்பவையாக இருக்கும்...

இங்கு ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு காவல்துறையிடம் கொடுக்கப்பட்ட வேலையே தற்போது நடந்தேறியுள்ளது...


கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? -3...


ஐரோப்பிய அரசியல் மதம்...

கான்சுடன்டைன் தன் எதிரிகளை அழிக்க, சிலுவை அடையாளத்தை முதன்முதலில் பயன்படுத்தினான்.

எதிரிகளை அழிக்கச் சிலுவை அடையாளத்தைக் கான்சுடன்டைன் பயன்படுத்தியதில் தவறு ஒன்றும் இல்லை. 

ஏனென்றால் அது ஐரோப்பிய அரசியல் கொலைக்கருவியே ஆகும்.

ஆனால் ஆசியாவில் தோன்றிய ஆன்மீக இயக்கமாகிய கிறித்தவம், கான்சுடன்டைன் வழியில் சென்று சிலுவை அடையாளத்தை ஏற்றுக்கொண்டமையால், அது ஆன்மீக இயக்கம் என்னும் நிலையில் இருந்து தவறி “ஐரோப்பிய அரசியல் மதம்” என்னும் நிலைக்கு வீழ்ந்துவிட்டதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். 

அதனால் தன்னைக் கொலை செய்த பகைஞர்களுக்கும் மன்னிப்பை அருளிய இயேசு கிறித்துவின் ஆன்மீக இயக்கம்  மறைந்து சிலுவை அடையாளத்தை மாட்டிக் கொண்டு மற்றவர்களைக் கொலை செய்த, சிலுவைப் போர் நடத்திய ஐரோப்பிய வழிக் கிறித்தவ மதத்தை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம். 

சிலுவைப் போர்...

ஆகவே, பகைவர்களுக்கும் மன்னிப்பை அருளிய இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீக இயக்கத்திற்கு எதிராக, போர்க்கருவியினால் பகைவர்களை அழிக்கும் ஐரோப்பியக் கிறித்தவ மதத்தின் அடையாளமாகச் சிலுவை விளங்கிக் கொண்டிருக்கிறது. 

சிலுவை கிறித்தவ மதத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் இன்று வரை இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீகம், ஐரோப்பியர்களின் தலைமையின் கீழ்  ஐரோப்பிய அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஐரோப்பிய அரசியல்...

கான்சுடன்டைன் காலம் வரை உரோமப் பேரரசு, கிறித்தவர்களை வேட்டையாடிய நிலையை நாம் திருச்சபை வரலாற்றில் மிகத் தெளிவாகப் பார்க்கிறோம்.  ஆனால்...

1.    கான்சுடன்டைன் காலத்தில் தொகுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டில் அந்த வரலாறு இல்லையே! ஏன்?

2.    திருச்சபை வரலாற்றைக் கூறும் அப்போத்தல நடபடிகளில் பெளல் உரோமபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டதைக் கூறும் இருபத்தெட்டாம் அதிகாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

என்னும் கேள்விகளை எழுப்பினால் இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீக இயக்கம் ஐரோப்பிய அரசியலுக்கு அடிமைப்படுத்தப்பட்டு சிலுவை அடையாளம் சிறப்பிக்கப்பட்டதன் வரலாறு தெளிவாக விளங்கும்.

ஐரோப்பியர்களிலும் ஐரோப்பிய அரசியல் சிந்தனைகளைத் தாண்டிக் கிறித்துவின் ஆன்மீக அனுபவத்தின் அடிப்படையில் செயல்படும் கிறித்துவின் அடியார்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  ஆனால் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே! 

- பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின் கருத்துகளில் இருந்து பதியப்பட்டவை...

தமிழன் அறிவியல் முன்னோடி...


கிராமத்தில் புளிமரத்துக்கு அருகில் சென்றால் காத்து கறுப்பு அண்டிடும் என்று சொல்லி சிறுவர்களை பயமுறுத்துவார்கள் ஏன் என்று தெரியுமா?

காத்து கருப்பு அதாவது..
காற்று கறுப்பு - காற்றில் கறுப்பு..

இதன் அர்த்தம் கருநிற வாயுவான காபனீரொட்சைட்டு..

இதனை அதிகமாக சுவாசிக்கும்
போது மயக்கம் ஏற்படும்.

புளிமரம் இதனை அதிகளவு வெளியிடும். இப்போது புரியுதா?

தமிழரின் அறிவியல்...

இந்துத்துவா உருவான வரலாறு - 3...


இந்துமதம் என்னும் பெயர் வந்த வரலாற்றுப் பின்னணி...

கி.பி. 1750க்குப் பின்னர் ஆங்கிலேயர் இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்து ஆளத் தொடங்கினர். 

அப்போது ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த இந்தியப் பகுதிகளுக்குத் தலைநகராகக் கல்கத்தா விளங்கியது.

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமை ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது.  அதனால் நீதிமன்றங்களை அமைத்தார்கள்.  நீதிமன்றங்களில் நீதி வழங்கச் சட்டம் தேவைப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்களில், கிறித்தவர்களுக்கு நீதி வழங்க பைபிள் அடிப்படையிலான கிறித்தவச் சட்டம் (Christian Law) இருந்தது.

இசுலாமியர்களுக்கு நீதி வழங்க, குரான் அடிப்படையிலான இசுலாமியச் சட்டம்(­Islamic Law) இருந்தது. 

ஆனால் கிறித்தவர், இசுலாமியர் அல்லாத இந்திய மக்களுக்கு நீதி வழங்க, சட்டப் புத்தகம் எதுவும் இல்லை.  இதனால் நீதி வழங்குவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் கல்கத்தாவின் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஆங்கிலேயரான சர் வில்லியம் சோன்சு(Sir William Jones) அமர்த்தப்பட்டார்.

கல்கத்தாவில் இருந்த பிராமணர்கள், தந்திரமாக, மனுநூலை, சோன்சிடம் கொடுத்து அதுவே இந்திய மக்களின் சட்ட நூல் என அவரை ஏமாற்றி நம்ப வைத்தார்கள்.

அவர், பிராமணர்கள் கூறியதை நம்பி, சமற்கிருதத்தில் இருந்த மனுநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  மனுநூலின் அடிப்படையில, கிறித்தவர், இசுலாமியர் அல்லாத இந்திய மக்களுக்கான சட்டத்தை உருவாக்கி, அதற்கு இந்துச் சட்டம்(Hindu Law) எனப் பெயரிட்டார்.

இந்துச் சட்டம் உருவாக்குவதற்கு உதவிய மனுநூலின் கொள்கைகளுக்கு இந்துத்துவம் (Hinduism) என்னும் பெயரைக் கொடுத்தார்.  மனு நூலின் அடிப்படைக் கொள்கை சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கை ஆகும்.

Hinduism அல்லது இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  இது ஒரு வாழ்க்கை முறை.  ஆரிய வாழ்க்கை முறை ஆகும்.

ஆனால் Christian Law, Muslim Law, Hindu Law  என்று குறிப்பிடும்பொழுது Muslim, Christian என்ற பெயர்கள் மதங்களைக் குறிப்பதைப் போன்று Hindu என்னும் பெயரும் ஒரு மதத்தைக் குறிப்பதைப் போன்ற தவறான எண்ணத்தை இந்திய மக்கள் உள்ளங்களில் உருவாக்கி விட்டது. 

இதன் காரணமாகக் கிறித்தவர், முசுலீம் அல்லாதவர் இந்து மதத்தினர் (Hindu Religion) என்னும் தவறான எண்ணத்தை அது ஏற்படுத்தி விட்டது.

இந்திய மதங்களில் ஏற்கெனவே சைவமும் வைணவமும் இந்துத்துவமாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப் பட்டிருந்தமையால் இந்த இரண்டு மதங்களுக்கும் பொதுப் பெயராகப் புதிதாக இந்து மதம் (Hindu Religion) என்னும் பெயர் உருவாகி, இந்திய மக்கள் மத்தியில் வழக்கில் வந்தது. 

ஆகவே சோன்சால் உருவாக்கப்பட்ட Hinduism என்னும் பெயர் வேறு, அதைத் தவறாக மக்கள் புரிந்து கொண்டு அந்தத் தவற்றின் காரணமாகப் பெற்றெடுக்கப்பட்ட Hindu Religion என்னும் பெயர் வேறு. 

- பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது...

தேசம் என்றால் என்ன ?


சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண்..

இரண்டாவது தேவை பொது மொழி..

 மூன்றாவது தேவை பொதுப் பொருளியல்..

நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான நாம் நம்மவர் என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது.

இது போன்ற சில விதி விலக்குகளும் உண்டு...

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? -2...


கிறித்தவம் ஆசிய ஆன்மிக இயக்கம் – சிலுவை ஐரோப்பியக் கொலைக் கருவி...

1. இயேசு கிறித்து ஆசியாவில் பிறந்த ஆசியர்.  இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றவர்கள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ஆவர்.  அந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களால் சிறப்பிக்கப்பட்ட கருவிதான் சிலுவையாகும்.

2. இயேசு கிறித்து ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர் என்பதைப் போலவே இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர்களே..

3. கிறித்தவத்தை விளக்கும் வேத நூலாகிய பைபிளில் உள்ள அனைத்துப் புத்தகங்களும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஆசியர்களாலேயே எழுதப்பட்டவை.  ஐரோப்பியர்களால் பைபிளிலுள்ள எந்த ஒரு புத்தகமும் எழுதப்படவில்லை.

ஆன்மீகத் தலைவர்...

உங்களை வலக்கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் (மத்தேயு 5:39) என்று கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல் கற்றுக் கொடுத்ததைச் சிலுவையில் அவரை அறைந்த பொழுது "தந்தையே இவர்களைப் பொறுத்தருளும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(உலூக்கா 23:24) என்று நடைமுறையில் காட்டிய ஆன்மீகத் தலைவர் இயேசு கிறித்து ஆவார்.

அவர் போதனையில் வன்முறைக்குச் சிறிதும் இடம் இல்லை.  அவரைச் சிலுவையில் அடித்தபொழுதும் வன்முறைக்கு மாறாக மன்னிப்பையே பகைவர்களுக்கும் அருளினார்.

ஆகவே சிலுவை ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவி என்பதையும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறித்து பகைவருக்கும் மன்னிப்பை அருளும் ஆன்மீகத் தலைவர் என்பதையும் ஆழமாக எண்ணிப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும்.

ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவி?

ஐரோப்பிய அரசனாகிய கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவம் வன்முறையற்ற ஓர் ஆன்மீக இயக்கமாக விளங்கியது. 

ஆன்மீக இயக்கமாகிய கிறித்தவத்தைக் குறிக்க, கான்சுடன்டைன் காலம் வரை ஐரோப்பிய அரசியல் கொலைக் கருவியாகிய சிலுவை அடையாளம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை...

காவல்துறையே உங்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல என நினைக்கிறேன்...


ஏனெனில் அரசாங்கத்திடம் நீங்கள் இதையேதான் பல ஆண்டுகளாக செய்கிறீர்கள்...

இந்துத்துவா உருவான வரலாறு - 2...


இந்துத்துவம் வேறு இந்து மதம் வேறு...

சர் வில்லியம் சோன்சு...

மனுநூல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணாசிரமக் கொள்கையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குக் கி.பி.1794இல் சர் வில்லியம் சோன்சு (Sir William Jones) என்னும் ஆங்கில நீதிபதி ‘Hinduism’ என்று புதுப்பெயர் கொடுத்தார். 

‘Hinduism’ என்பது இன்று ‘இந்துத்துவம்’ அல்லது ‘இந்துத்துவா’ என்று அழைக்கப்படுகிறது.

 ‘இந்து மதம்’ – என்னும் பெயர் கி.பி. 1794க்கு முற்பட்ட இந்திய இலக்கியங்கள் எவற்றிலுமே இல்லாத புதுப்பெயர் ஆகும். 

பெளத்தம், சமணம், சைவம், வைணவம், சீக்கியம் ஆகிய ஐந்து இந்திய மதங்களில் சைவம், வைணவம் ஆகிய இரண்டு மதங்களும் ஆதிசங்கரரால் ஆரியர்களின் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டன.

சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு ‘இந்துத்துவம்’ (‘Hinduism’) என்று புதுப்பெயர் கொடுக்கப்பட்ட பின்னர், சாதி ஏற்றத்தாழ்வுக்கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ள சைவ, வைணவ மதங்களுக்கு ‘இந்து மதம்’ (Hindu Religion)  என்னும் புதுப்பெயர் உருவாயிற்று. 

ஆகவே இந்துத்துவா என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.

‘இந்துத்துவா’ என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட மனுநூல் அடிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை.

 ‘இந்து மதம்’ என்பது தமிழனால் உருவாக்கப்பட்ட சைவமும் வைணவமும் ஆகும்.

இந்துத்துவா என்னும் பெயர் ‘இந்து மதம்’ என்று மாறிச் சைவம், வைணவம் ஆகிய மதங்களுக்கு எப்படி வந்தது?

தமிழா விழித்துக்கொள்..


கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? -1...


தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த
கோட்சே என்பவன் தனது கைத் துமுக்கி (துப்பாக்கி)யால் தேசத் தந்தை காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான்.

கோட்சேயையும் அவனுடைய கைத்துமுக்கியையும் யார் பாராட்டுவார்கள்?

அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாராட்டுவார்கள்.

உரோம ஆட்சியாளர்கள் இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.

உரோம ஆட்சியாளர்களையும் சிலுவையையும் யார் பாராட்டுவார்கள்?

உரோம ஆட்சியாளர்கள் பாராட்டுவார்கள்.

உரோமப் பேரரசனாகிய கான்சுடன்டைன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தான்.  அதன் பின்னர் சிலுவை சிறப்பிக்கப்பட்டது.

யாரால்? உரோமப் பேரரசனைச் சேர்ந்த கிறித்தவர்களால்.

கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவத்தைக் குறிக்க சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படவில்லை.  அதற்குப் பின்னரே கான்சுடன்டைனைச் சேர்ந்த கிறித்தவர்கள் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தார்கள்.

சிலுவை “இயேசு கிறித்து கொலை செய்யப்பட்டார்” என்பதைக் குறிக்கும் அடையாளமாகும். 

சிலுவையில் இயேசு கிறித்து மட்டும் கொலை செய்யப்படவில்லை.  உரோமர்களின் ஆட்சிக் காலத்தில் மரணதண்டனையை நிறைவேற்றப் பயன்பட்ட கருவிகளில் சிலுவையும் ஒன்று.  அதனால் உரோமர்களால் ஏராளமானவர்கள் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

உயிர்த்தெழுந்ததன் அடையாளம்
சிலுவை..?

இயேசு கிறித்து உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் அடையாளம் ஆகாது. 

எவ்வாறு எனில் இயேசு கிறித்து சிலுவையில் உயிர்த்து எழவில்லை.  இயேசு கிறித்து உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் அடையாளம் வெறுமையான கல்லறையாகும்.

ஆகவே, இயேசு கிறித்து இறந்து உயிர் பெற்றார் என்பதை சிலுவை அடையாளம் குறிக்க இயலாது.

இயேசு கிறித்து...

1.   இறந்தார்
2.  உயிர்த்தெழுந்தார்
3. பாவத்தை நீக்கி மக்களை மீட்டுக் கொண்டார்

ஆகிய இந்த மூன்று கருத்துகளையும் குறிக்கும் அடையாளமே கிறித்துவின் நற்செய்தியை விளக்கும் அடையாளம் ஆகும். 

சிலுவை அடையாளத்தால் இந்த மூன்று கருத்துகளையும் குறிக்க இயலாது...

காவல்துறை அதிகாரத்தை பறிக்க வேண்டும்...


எந்த காவலர் பொதுமக்கள் மீதோ இளைஞர்கள் மீதோ தாக்குதல் நடத்தினால்... உடனே நிரந்திர பணி நீக்கம் செய்து.. சிறை தண்டனை தர வேண்டும்...

இப்படி ஒரு சட்டத்தை இயற்றினால் மட்டுமே... காவல்துறை மக்களுக்காக சேவை செய்யும்...

இந்துத்துவா உருவான வரலாறு - 1...


நாங்கள் இந்தியாவை இந்து மதச் சார்பான நாடாக்க விரும்பவில்லை.  இந்துத்துவ நாடாக்கவே விரும்புகின்றோம். 

இந்துத்துவம் – என்பது இந்தியப் பண்பாடு.

இந்தியாவை அதன் பழைய பண்பாட்டுக்குக் கொண்டு வரவே விரும்புகின்றோம்.  எங்களை மதவாதிகள் என்பது தவறு. 

இந்து மதம் வேறு. இந்துத்துவம் வேறு.

இதைக் குறித்து யாருடனும் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன்.

என்று அன்றைய இந்தியத் துணைப் பிரதமர் அத்வானி 25.5.2003இல் வெளியிட்ட கருத்துகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 

இந்துத்துவம் – என்பது ஒரு மதம் இல்லை.  இது ஒரு வாழ்க்கை முறை.  கடவுள் கொள்கைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

என்று அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் வாசபாய் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

அப்படியானால் வாழ்க்கை முறை – என்றால் என்ன?

ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர்,
மற்றவர்கள் பிறப்பால் தாழ்ந்தவர்’ என்பதை ஏற்றுக்கொண்டு வாழும் ஆரிய வாழ்க்கை முறையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்று குறிக்கப்படுகிறது.

இந்துத்துவா என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட மனுநூல் அடிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை.

இது எப்படி, எப்போது, யாரால் இந்தியாவிற்கு வந்தது...

சோழர் ஆட்சியில் மருத்துவம்...



சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.

மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.

மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

கல்வியோடு மருத்துவமும் கற்றுக் கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி?


அலாவுதீனின் பூதத்தை போல ஈர்ப்பு விதியும் உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்..

நீங்கள் விரும்பியவற்றை பெற மூன்று எளிய படிகள் உருவாக்க , படைப்பியக்கச்  செயல்முறை உங்களுக்கு உதவும், அவை கேளுங்கள், நம்புங்கள், மற்றும் பெறுங்கள்  ஆகியவை..

உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடம் கேட்கும் போது , உங்கள் விருப்பம்  குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

நீங்கள் கேட்டது ஏற்கனவே கிடைத்து விட்டது போல நடந்து கொள்வது, பேசுவது மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.

கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் நீங்கள் ஒளிபரப்பும் போது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை ,நிகழ்வுகளை , மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ அத்தகைய மனவுனர்வை உண்டாக்கிக் கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம்.

மகிழ்ச்சியான மன நிலையுடன் இருப்பது, உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்துவிடும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் , கவனத்தை எடைக் குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக, கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக் குவியுங்கள். உங்களுடைய கச்சிதமான எடையை உணர்வுப் பூர்வமாக உணருங்கள், அது உங்களை நோக்கித் தானாகவே ஓடி வரும்.

நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்குச் சொடுக்குப் போடும் நேரம் கூட ஆகாது. ஒரு டாலரைத் தருவிப்பது எவ்வளவு எளிதோ அதே அளவு எளிதானது தான் ஒரு மில்லியன் டாலரைத் தருவிப்பதாகும்.

ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விசயங்களில் துவங்குவது , ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த வழி , ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள்.

ஈர்க்கக் கூடிய உங்கள் சக்தியை நீங்கள் உணர உணர பெரிய விசயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது.

நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ , அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்களது வாழ்க்கையையும் உங்களது நோக்கப்படி உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்...

இதுவே எண்ணம் போல் வாழ்க்கை...

அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்...


ஏனெனில் நாமே இந்த அளவுக்கு ஒடுக்கப்பட்ட அடிமையாக்கப்படுகிறோம் என்றால், அடுத்த தலைமுறை..?

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு...


கல்லணை...

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம்...

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில்...

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில்...

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம்...

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்k முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்...

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும்...

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு...

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக்கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது  என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்.

சித்தர்கள்...

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழ்க அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள்...

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

உலகின் தொன்மையான நகரம் பூம்புகார்...

9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின.

பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்...

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது...

கர்நாடகம் மாநிலத்திற்கு தனி கொடி நிறுவியது கர்நாடகம்... தமிழகத்திலுள்ள திருட்டு திராவிடர்கள் இதை பற்றி வாயே திறக்கவில்லை...


தமிழகத்தில் அடிமைப் பெண்கள் ஏற்றுமதி செய்த திராவிடம் - சொல்லப்படாத வரலாறு..


திராவிடர் ஆட்சிக் காலம், தமிழக பெண்களுக்கு இருண்ட காலமாக அமைந்தது. அதுவரை பெண்கள் அனுபவித்து வந்த உரிமைகள் மறுக்கப்பட்டன.

அக் காலப் பெண்கள் நிலை குறித்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம்.

ஆண்கள் வரதட்சிணை வாங்கும் வழக்கம் திராவிடர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.

வரதட்சிணை -திராவிடர் வழக்கமே

சோழர்காலம் வரை, மணமகளுக்கு மணமகன் பரிசம் போட்டுத் திருமணம் செய்யும் முறையே இருந்தது.இது குறித்து வராற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.

’பெண் வீட்டார் மணமகனைத் தேடிச் செல்லுதல் பழந்தமிழர் பண்பாட்டுக்கு முரணாகும். மணமகன் வீட்டார் பெண்ணை நாடி மணமகள் வீட்டுக்கு வரவேண்டும். மணமகன் பெண்ணுக்குப் ’பரியம்’ (ஸ்பரிசம்) அல்லது தொடுவிலை போட வேண்டும்.
பெண் வீட்டார் மணமகனுக்கு வரதட்சிணை வழங்குதல் தமிழரின் மரபு அன்று.

ஆனால், பெண்களுக்கு நிலங்களைச் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் அந்நாளிலும் உண்டு. தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. விக்கிரமசோழன் காலத்தில் மங்கை நல்லூரில் வாழ்ந்திருந்த அகளங்கராயன் என்பான் ஒருவன் தன் மனைவியின் சீதனச் சொத்தைச் செலவிட்டுவிட்டதற்காக, அவளுக்குச் சிறு நிலங்களை ஈடாகக் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.

எந்தக் காரணத்தாலோ, சில பிராமண குலங்களில் பெண்ணுக்குப் பரியம் கொடுக்கும் பழக்கம் நுழைந்துவிட்டதெனத் தெரிகிறது. அதைக் கண்டித்து ஒரு கிராமத்துப் பிராமணருள் கன்னடியர், தமிழர், தெலுங்கர், இலாடர் ஆகியவர்கள் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அதன்படி, கன்னியாதானமாகவே தம் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டுமென்றும், மணமகளின் தந்தைக்குப் பரியப் பணம் கொடுக்கும் மாப்பிள்ளையும், பரியம் பெற்றுக்கொள்ளும் மணமகளின் தந்தையும் குலத்தினின்றும் தள்ளி வைக்கப்படுவர் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது’
(தமிழர் வரலாறும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை)

ஆக, வரதட்சிணை முறை தமிழர் முறை அன்று என்பதும், அம்முறையை அறிமுகப்படுத்தினோரே, திராவிடர்களாகிய தென்னிந்திய பிராமணர்தான் என்பதும் தெளிவாகிறது. இந்த திராவிடர்களாகிய தென்னக பிராமணர்கள் தமக்கான ஆட்சிக் காலத்தில் ஆடிய ஆணாதிக்கக் கூத்துகளில் சிலவற்றைக் காண்போம்.

பொதுவாக பெற்றோர்கள் தங்களின் மகள்களைப் பாரமாகவே கருதினர். அவர்களுக்கு விரைவில் மணமுடிக்க விரும்பினர்.

பெண்கள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

மனுதர்ம அடிப்படையில் நடந்துகொள்ள பெண்கள் வலியுறுத்தப்பட்டனர்.

பொதுமகளிர் எனப்பட்ட விபசாரிகள் முறை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.

உடன்கட்டை ஏறும் வழக்கமிருந்தது.

அரசர்கள் இறந்தால் அவர்களுடைய மனைவியர், காமக்கிழத்தியர் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தீயில் விழுந்து மாண்டனர்.

உடன்கட்டை ஏறாத பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்கள் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். ஆபரணங்களைக் களைந்து வெள்ளை நிற ஆடை அணிந்தனர்.

உணவுப்பழக்கமும் மாற்றப்பட்டது.பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி/ சரசுவதிமகால் வெளியீடு 2007/ பக் – 106, 107, 108)

மேற்கண்ட பெண்ணடிமைத்தன வழக்கங்கள் குறித்து திராவிடக் கோட்பாட்டாளர்கள் கடந்த 100 ஆண்டுகளாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

ஆனால், அவர்கள் பேச்சின் சாரமாக, தமிழர்கள் ஆணாதிக்கவாதிகள் என்ற கருத்து இருக்கும். இதற்காக, கண்ணகியின் வீரத்தைக் கொச்சைப்படுத்தவும் அவர்கள் தயங்குவதில்லை. ’திருவள்ளுவர், தொல்காப்பியர் ஆகியோர் ஆணாதிக்கவாதிகள்’ என்ற அடாத பழியைப் போடவும் அவர்கள் தயங்குவதில்லை. ஆனால், விஜயநகர, நாயக்கர் காலத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய சான்றுகளை அவர்கள் முன் வைப்பதே இல்லை.

திராவிடர் ஆட்சியில் தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத களங்கமான போக்கும் உருவாக்கப்பட்டது. ‘அடிமைப் பெண்கள் பெண்களை ஏற்றுமதி’ செய்யும் வணிகம்தான் அது. விஜயநகரப் பேரரசில், பெண்கள் ரோமப் பேரரசுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். (மேலது நூல் / 76)

பெண்களை அடிமைகளாக்கும் விதிகளை உருவாக்கியது மனுநீதி. பெண்களைப் பண்டங்களாக்கி ஏற்றுமதியும் செய்த மனிதகுல விரோத ஆட்சிதான் திராவிடராகிய தென்னிந்திய பிராமணர்ஆட்சி என்பதை உணர வேண்டும். பெண்கள் வணிகம் என்பது ஒரு குறியீடுதான். பெண்கள் ஏற்றுமதியே செய்யப்பட்டார்கள் என்றால், சமூகத்தில் பெண்கள் நிலை எந்தளவு மோசமாக இருந்திருக்கும் எனக் கற்பனை செய்தால் வேதனையே மிஞ்சும்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சமூகநிலையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஆட்சி முறை திராவிட அரசர்கள் காலத்தில் உருவானது.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005)

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை அல்லவா காட்டுகிறது...

- ம.செந்தமிழன்...

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?



ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்?

ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
             
இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர்! தமிழர்கள் பெரும்பான்மையர்!

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்.

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

கன்னட மலையாளி தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்!

இப்போது புரிகிறதா திராவிடம் ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்...

தந்திடிவி பாண்டே திருட்டு பய மாட்டிக்கிட்டான்...


எழுத்தி வெச்சுக்கோ.. அடுத்தது ரஜினிக்கும் கமலுக்கும் சொம்படிக்க போகும் Rss காரன் தான் இவன்...

தமிழக செய்தி சேனல்களும் உரிமையாளர்களும்...


நியூஸ் 7 : வைகுண்டராஜன் (தாது மணல் கொள்ளை).

புதிய தலைமுறை : பாரி வேந்தர் (கல்வி கொள்ளை).

தந்தி டிவி : ஆளுங்கட்சி ஜால்ரா (பாஜக + அதிமுக பினாமி).

சத்யம் நியூஸ் : டேவிட் லிங்ஸ்டோன் (கிறிஸ்துவ பாஸ்டர் - மதவாதம்).

நியூஸ் 18 : முகேஷ் அம்பானி (அகில இந்தியா கொள்ளை).

கலைஞர் செய்திகள் : திமுக ஊதுகுழல்.

சன் நியூஸ் : திமுக ஊதுகுழல்.

ஜெயா நியூஸ் : அதிமுக (சசிகலா பிரிவு ) ஊதுகுழல்.

பாலிமோர் நியூஸ் - பி.வ. கல்யாணசுந்தரம் (2014 வரை திமுக அமைப்பு செயலாளர்).

இவனுங்க தான் நமக்கு உண்மை  செய்திகளை சொல்வது...

ஆரியம் திராவிடம் திருட்டு அரசியலை புரிந்துக் கொள் தமிழா...


திருவெறும்பூரில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது...


போலீஸாரின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது,- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்...

இதெல்லாம் எம்ஜிஆர் காலத்து டெக்னிக் இன்னுமா செய்றிங்க.. விட மாட்டோம்...


பாஜக அரசின் போக்கை கண்டித்து 2 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா, தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...


சந்திரபாபு நாயிடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் வைத்த உறவை துண்டித்துள்ளது.

இதை தொடர்ந்து தங்களது கட்சிக்கு அளிக்கப்பட்ட 2 மத்திய அமைச்சர் பதிவயை தானே ராஜினிமா செய்துள்ளது அந்த கட்சி...