12/03/2019

வெளிப்படும் விசையே சூறாவளி...


ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வறண்ட காற்று அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து வெளிப்படும் விசையே சூறாவளி எனப்படுகிறது.

இந்த மோதல்கள் அதிகமான அளவு நடை பெறும்போது அந்த சூறாவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் பலமான சுழல்காற்று (Tornado) எனப்படுகிறது. பலமான சுழல்காற்று (Tornado) என்ற பயங்கரமான சூறாவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம். அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளைத் துவம்சம் செய்துவிடுமாம்.

வானத்தில் ஒரு பயங்கரமான சூறாவளி உருவாகிவிட்டால் அந்த சூறாவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ஆம் வினாடியிலிருந்து இந்த சூறாவளி நிலத்தைப் பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராகப் பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூறாவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமளவுக்கு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூறாவளிகள்...

மாதர் சங்கம்... மீடூ எனும் ஏமாற்று பேர் வழிகள்...


ஆல்ஃபா தியானம்...


ஆல்ஃபா நிலையில் ஒரு இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதித்தால் அது நம் வாழ்க்கையில் சுலபமாக நிறைவேறும் என்பதை பார்த்தோம். அந்தக் காட்சியை சரியான முறையில் அமைப்பது மிகவும் முக்கியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.

நமது மூளையின் ஆல்ஃபா நிலை என்பது மிக அற்புதமான, சுகமான நிலையாகும். மூனையின் வேகம் வினாடிக்கு 7லிருந்து 14 வரை இருக்கும் நிலை ஆல்ஃபா நிலை. நாம் சற்று அமைதியாக இருக்கும் நிலை இது. தியானத்தின் மூலம் இந்த நிலையை அடைகிறோம். இதற்கு பயிற்சி தேவை. ஆல்ஃபா நிலையை நாம் அடைந்தவுடன் நமக்குள் இருக்கும் ஆழ்மனம் திறக்கிறது. அங்கிருக்கும் வியக்கத்தக்க சக்தியை அந்த நேரத்தில் நாம் பயன்படுத்த முடிகிறது.

நமது இலட்சியங்களை ஆல்ஃபா நிலையில் மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் காட்சி, ஆழ்மனத்தில் பதிந்து அங்கிருந்து பிரபஞ்ச சக்திக்கே ஒரு செய்தியாகப் போய் சேர்ந்துவிடுகிறது. பிரபஞ்ச சக்தி பல விதத்தில் செயல்பட்டு நமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறது. தகுந்த சூழ் நிலைகளை நமது வாழ்க்கையில் உருவாக்கி, தகுந்த மனிதர்களைச் சந்திக்க செய்து அந்த இலட்சியம் நிறைவேற வழி வகுக்கிறது.

இப்படி ஆல்ஃபா நிலையில், இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதிக்கும் பொழுது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது அந்தக் காட்சிகளின் அமைப்புதான். இலட்சியத்தை மனத் திரையில் உருவாக்கும் பொழுது அந்த இலட்சியம் நிறைவேறிவிட்ட காட்சியை மட்டும் கண்டால் போதும். இதை எப்படி அடையப்போகிறோம், வழிமுறைகள் என்ன, என்பதைப் பற்றி தியானத்தில் யோசிக்க வேண்டாம். வழிமுறைகளை யோசிக்கும் பொழுது நமது மனம் பல இடங்களில் செயல்பட முடியாமல் தடுமாறும்.

சுரேந்திரனின் அனுபவத்தைப் பார்ப்போம். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒருமுறை என்னைச் சந்தித்து தன் பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.
"குடும்பத்தில் செலவு மிகவும் அதிகமாகிவிட்டது. என்னால் சமாளிக்க முடியவில்லை. எப்படியாவது எனக்கு பிரமோஷன் கிடைத்து சம்பளம் உயர வேண்டும் என்று பல மாதங்களாக ஆல்ஃபா தியானம் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை நடக்கவில்லை. என்ன செய்வது?'

"சரி. உங்கள் நிறுவனத்தின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?'

"அதுதான் மேடம் பிரச்னை. எனக்கு மேல் உயர் பதவி எதுவும் இல்லை. எம்.டி. தான் இருக்கிறார். இருந்தாலும் வேறு எப்படி தியானம் செய்வது என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் இந்த வழிமுறையை யோசித்தேன்.'

"நீங்கள் இந்த பிரமோஷன் என்கின்ற வழிமுறையை விட்டுவிட்டு குடும்ப வருமானம் பெருகுவது போல் பார்த்து வாருங்கள். நிச்சயம் நடக்கும்.' என்றேன்.
நாமாக யோசிக்கும் பொழுது நமது இலட்சியம் நிறைவேற ஏதேனும் ஒருவழிதான் நமக்கு புலப்படும். ஆனால் வழிமுறைகளை பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டோமானால் நம் கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் திறக்கும். பல வழிகள் பிறக்கும்.

நான் சொன்னபடி சுரேந்திரன், தியானம் செய்து வந்தார். சில மாதங்கள் கழித்து சுரேந்திரன் தன் மனைவியுடன் என்னை சந்திக்க வந்தார். இருவர் முகத்திலும் பிரகாசமான புன்னகை.

"நீங்கள் சொன்னபடி இருவருமே தியானம் செய்து வந்தோம். அதன் பிறகு என் மனைவி செய்த சில கைவினைப் பொருட்கள், ஒரு கண்காட்சியில் வைத்து விற்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஒரு தொழிலாக அமைந்துவிட்டது. இன்று அதன் மூலம் எங்களது குடும்ப வருமானம் பெருகி மிகவும் சௌகரியமாக இருக்கிறோம்.'

இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். பிரபஞ்ச சக்தி ஒரு தாய் போன்றது. நமக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குழந்தையைப் போல் காண்பித்தால் போதும். அந்தத் தாய் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள். வழிமுறைகளை நாம் தியானத்தில் செல்லும் பொழுது பல சமயம் அது நமக்கு சரியான வழியாக இல்லாமல் போகலாம். அப்பொழுது பிரபஞ்ச சக்தியால் கூட நமது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதனால்தான் இலட்சியம் நிறைவேறும் காட்சியை மட்டும் காண வேண்டும். எந்த நிபந்தனைகளும் இன்றிக் காண வேண்டும். அப்படிச் செய்தால் நமது இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நாம் நினைத்ததைவிட மிகவும் சுலபமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.

பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அவற்றை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள நாம் தான் தயாராக வேண்டும்...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரமும்.. அரசியல் கொலையும்...


தேனீக்கள் பற்றிய தகவல்....


உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு.

மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன.

இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது.

இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன.

இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விசயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன. தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும்.

இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும்.

இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன.

இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும்.

இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.

ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது.

மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இராணித் தேனீ...

இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது.

தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது. அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது.

அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை.

அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது.

ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது.

இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.

ஆண் தேனீக்கள் (Drone)...

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை.

தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை. நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன.

இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான்.

இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

வேலைக்காரத் தேனீக்கள்...

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும்.

இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது.

இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.

தேனின் மருத்துவக் குணங்கள் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது.

உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.

வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும். தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.

இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம். தேன் கூடு தேன் மெழுகாக பயன் படுகின்றது தேனீ பூக்கள் காயாகும் மகரந்த காவுதளையும் செய்கின்றது எம்மோடு வாழும் உயிரினங்கள் வாழ்வு சமநிலைக்கு உதவும் பணிகளை எமக்காக செய்கின்றன.   அவற்றை பாதுகாப்பதும் எங்கள் கடமை...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரமும் அரசியலும்...


பொள்ளாச்சி பயங்கரம் - தொடங்கியது மாணவர்கள் போராட்டம்...


தீவிரமடையும் மாணவர் போராட்டம்...


பொள்ளாச்சி காமகொடூரர்களை தூக்கில் போட கோரி திருச்சி பெரியார் , ஈ.வெ.ரா கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரமும்... திமுக தொடர்பின் சந்தேகமும்...


https://youtu.be/L_zP_VaoCh0

Subscribe The Channel For More News...

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் திராவிடம்...


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ, எங்கும் இல்லை.

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் தமிழ்மொழி அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது.

அது, தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதி அத்திராவிட மொழியாசிரியர்களும், புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல. இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று.

நன்றி: தென்மொழி 1988 நூல், வேண்டும் விடுதலை, பக்.294, 295...

அழியும் தமிழகம்.. மூடி மறைக்கும் எச்ச ஊடகங்கள்...


மார்பகப் புற்றுநோயும் வீட்டு வேலையும்...


இந்த வீட்டு வேலையில இருந்து ஒருநாளு கூட ஓய்வில்ல… என்று அலுத்துக்கொள்வது இல்லத்தரசிகளின் வழக்கம். ஆனால் குடும்பத் தலைவிகள் தொல்லையாகக் கருதும் வீட்டு வேலைகள், அவர்களுக்கு நன்மையே செய்கின்றன.

ஆம், எப்போதும் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்யும் குடும்பப் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 13 சதவீதம் குறைகிறதாம். 

வீட்டு வேலை, நடைப்பயிற்சி, தோட்ட வேலை, உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறது, ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று.

இந்த ஆய்வுக்காக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பெண்கள் ஆராயப்பட்டனர். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள தொடர்பு அலசப்பட்டது.

அப்போது, வேலை குறைந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்களை விட, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் சற்றுக் குறைவு என்று தெரியவந்தது.

அதாவது, 13 சதவீதம். `கொஞ்சம்’ வேலை செய்பவர்கள் அல்லது மிதமாக வேலை செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவீதம் குறைகிறதாம்.

இதுதொடர்பாக இங்கிலாந்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சாரா வில்லியம்ஸ் கூறுகையில், “தற்போதைய கண்டுபிடிப்பு, முற்றிலும் புதிதல்ல.

ஆனால், சுறுசுறுப்பான செயல்பாடு மார்பகப் புற்றுநோய் வாய்ப்பைக் குறைக்கும் என்ற முந்தைய ஆய்வு முடிவுகளை இது உறுதி செய்கிறது.

இப்புதிய ஆய்வில் நல்ல விசயம் என்னவென்றால், இது `உடற்பயிற்சி நிலையங்களில் ’ செய்யும் உடற்பயிற்சியை மட்டும் கவனிக்கவில்லை,

மாறாக, சுவாசத்தை அதிகப்படுத்தும் எந்த வேலையையும் கவனத்தில் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படும் நன்மையைத் தெரிவித்திருக்கிறது” என்கிறார்...

ராவணா - Raavana.. சொல்லிசை புலவர்... தமிழன் கோகுல்...


https://youtu.be/KHVW1StMl6E

Subscribe The Channel For More News...

பசி உண்டாக்கும் சீதாப்பழம்....


அசீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும். சீதாப்பழம் சாப்பிடுங்க.. ஆரோக்கியமா இருங்க...

கசுடர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்கது. குளூகோசு வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது. சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

இதன் தாவரவியல் பெயர் Annona squamosa. சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, எரியம்(Phosphorus), இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

சீத்தாப்பழச் சதையோடு உப்பை கலந்து உடையாத தோலில் ஏற்பட்ட பருக்கள் மேல் பூசிவந்தால் பருக்கள் கொப்புளங்கள் பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும். விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் முடி மிருதுவாகும். ஈரு பிரச்சினையிலிருந்தும் விடுப்படலாம். சீத்தாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்.

சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராது. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்தால் எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்தால் தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் நீங்கும்.

100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்- 70.5%

புரதம்- 1.6%

கொழுப்பு- 0.4%

மணிச்சத்து- 0.9%

நார்ச்சத்து- 3.1%

கால்சியம்- 17 மி.கி

எரியம் (பாஸ்பரஸ்)- 47 மி.கி

இரும்புச்சத்து- 4.31 மி.கி

வைட்டமின் C-37 மி.கி

வைட்டமின் B சிக்கலான (Complex) சிறிதளவு

மாவுச்சத்து- 23.5%

கலோரி அளவு- 10.4%

40 தொகுதிகளைவிட முக்கியமானது 21 தொகுதிகளுக்கான தேர்தல். மூன்றை நிறுத்தி அதிமுக அரசைக் காக்கப் பார்க்கிறது தேர்தல் கமிசன்...


ஆழ்மனசக்தியைப் பெற முடியுமா?


ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதைக் காண்போம் என்று படித்த வாசகர்கள் எத்தனை பேருக்கு அதைப் பெற முடியும் என்ற உண்மையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கக் காரணங்களும் உண்டு.

இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆழ்மனசக்தியாளர்களை நாம் பார்த்தோம். அந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்துபடித்தவர்களுக்கு இரண்டு உண்மைகள் விளங்கி இருக்கும்.

ஒன்று, பெரும்பாலானோருக்கு அந்த சக்தி தற்செயலாக ஏற்பட்டிருக்கிறது. அல்லது அவர்கள் முயற்சியில்லாமலேயே அந்த சக்தி அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு எட்கார் கேஸ் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்குப் போய் திரும்பிய போது அவருக்கு மற்றவர்கள் நோய்கள் பற்றியும், அதன் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்திருந்தது. நினா குலாகினாவிற்குத் தன்னிடம் இயல்பாக இருக்கும் சக்தி ஒரு கட்டத்தில் திடீரென்று தெரிய வந்தது. இவர்கள் ஏதோ பயிற்சி செய்து பெற்றதல்ல இந்த அபூர்வ சக்திகள்.

இரண்டு, நாம் முன்பு கண்ட ஆழ்மனசக்தி வகைகள் அனைத்துமே அனைவருக்குமே இருந்ததில்லை. ஆழ்மன சக்திகள் ஒன்று இருந்தவர்களுக்கு இன்னொன்று இருந்ததில்லை. உதாரணத்திற்கு கிறிஸ்டல் பந்து ஞானியான ஜோசப் டிலூயிஸிற்கு நடக்கப்போகும் விபத்துகள் பற்றி தான் அதிகம் தெரிந்தன. மற்ற சக்திகள் அவரிடம் இருக்கவில்லை. டேனியல் டங்க்ளஸ் ஹோமிற்கு ஆவிகள் தொடர்பு சம்பந்தமான அற்புத சக்திகள் இருந்தன. வேறு சக்திகள் இருக்கவில்லை. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன் நோயையே குணப்படுத்தும் சக்தி இருக்கவில்லை.

அப்படியானால் ஆழ்மன சக்திகள் அபூர்வமான சிலருக்கு மட்டும் தற்செயலாக வாய்க்கக் கூடிய சக்திகளா? எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கை. இவற்றிற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகில் எத்தனையோ அதிசய சக்திகள் விஞ்ஞான விதிகளை அனுசரித்து நடப்பதில்லை. எப்படி அழ்மன சக்திகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத விஞ்ஞானம் அந்த சக்திகள் இருப்பதை முறையாக அளக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனே “விஞ்ஞானத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தியா, திபெத் போன்ற நாடுகளின் மெய்ஞானத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல சித்தர்களும், யோகிகளும் நிறைந்திருந்த இந்த நாடுகளில் இந்த வகை ஞானத்திற்குப் பஞ்சம் இருக்கவில்லை. பால் ப்ரண்டன் என்ற தத்துவஞானி எழுதிய “இரகசிய இந்தியாவில் தேடல் (A search in secret India)” , பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை (Autobiography of a yogi)” போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இதற்கான ஏராளமான உதாரணங்கள் கிடைக்கும்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் கலையை அக்காலத்தில் இந்தியர்கள் “ராஜ யோகம்” என்று அழைத்தனர். பல சித்தர்கள், யோகிகள், திபெத்திய லாமாக்கள், புத்தமதத்தில் சில பிரிவினர் ஆகியோர் இந்தக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் தங்கள் வித்தைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கே கற்றுத் தருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இத்தனை பெரிய சக்திகள் தகுதியற்றவர்களுக்குக் கிடைத்தால் நாசமே விளையும் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அக்காலத்தில் இது போன்ற கலைகள் வாய்வழியாகவே, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு மட்டுமே சொல்லித்தரப்பட்டது. பிற்காலத்தில் எழுத்தில் வந்த காலகட்டங்களில் கூட இவை படிக்க சுலபமாகத் தெரிந்தாலும் பின்பற்ற அனைவராலும் முடியாதபடி இருந்தன. இது குறித்து பல யோகிகள் சொல்லியிருந்தவற்றை எல்லாம் தொகுத்து பதஞ்சலி முனிவர் “யோக சூத்திரங்கள்” என்ற நூலை எழுதினார்.
ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த சூத்திரங்கள், ஆழ்மன சக்தி வகைகள் ஒன்பது மட்டுமல்லாமல் சொல்லப்படாத அனைத்து சித்திகளையும் தக்க பயிற்சியால் பெற முடியும் என்று சொல்கின்றன. ஆனால் அந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவது சாதாரண மக்களுக்கு இமாலய சிகரங்களாகவே இருக்கின்றன.

இந்தியாவைப் போலவே எகிப்திலும் நெடுங்காலமாக இது போன்ற அதீத சக்திகள் குறித்து ஞானம் கொண்டவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளில் இந்த சக்திகள் குறித்து விவரமாக இரகசிய குறியிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு (Voodoo), பழம் சைபீரியாவில் உருவாகி வட அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் பிரபலமாகியுள்ள ஷாமனிஸம் (shamanism), ஜெர்மனியின் ரோசிக்ரூசியனிஸம் (Rosicrucianism) ஆகியவற்றிலும் அபூர்வ சக்திகள் பற்றிய ஞானம் இருந்திருக்கின்றது. இவற்றிலும் அந்த சக்திகள் பெறும் வழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஓல்காட், ரஷ்யாவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் சேர்ந்து துவங்கிய தியோசபி (Theosophy) இயக்கத்தில் இருந்தவர்களும் இந்த சக்திகள் குறித்து நிறைய உண்மைகளையும், தங்கள் அனுபவங்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆழ்மன சக்திகளைப் பற்றி முழுவதும் அறியும் ஆர்வத்தில் அவற்றை எல்லாம் ஆழமாகப் படித்த போது பிரமிப்பே மிஞ்சியது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் பெற ஒரு வாழ்க்கை போதாது என்று தோன்றியது. அந்த சக்திகள் குறித்து ஒவ்வொன்றிலும் பெயர்கள், பயிற்சிகள், வழிமுறைகள் எல்லாம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தன. சில நேரங்களில் ஒன்றிற்கொன்று எதிர்மறையாகக் கூட இருந்தன. பலதும் தற்காலத்தின் சாதாரண மனிதன் எவ்வளவு முயன்றாலும் தேர்ச்சி பெற முடியாதவையாக இருந்தன.

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது இவையெல்லாம் பலரால் செய்ய முடிந்தவை, அந்த மனிதர்கள் அத்தனை பேரும் யோகிகள், சித்தர்கள் அல்ல என்கிற உண்மையும் உறைத்தது. முன்பு குறிப்பிட்டது போல் ஏதாவது ஒரு கணத்தில் மின்னல் கீற்றுகளாக சின்னச் சின்ன விஷயங்களில் (நாம் நினைத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று நம் முன்னால் நிற்பது, நாம் பேச வேண்டும் என்ற நினைத்த விஷயத்தை நமக்கு வேண்டப்பட்டவர் தானாகவே நம்மிடம் பேசுவது, உண்மையாகிப் போன உள்ளுணர்வுகள் போன்ற நிகழ்வுகளில்) ஆழ்மன சக்தி நம்முள்ளேயும் வந்து போகுமானால் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் முடியாத செயல்களல்ல என்று தோன்றியது.

எனவே மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட தகவல் களஞ்சியங்களை மீண்டும் ஆழமாகப் படித்த போது எல்லாவற்றிலும் பொதுவாக இருந்த பல உண்மைகளையும், தகவல்களையும் பெற முடிந்தது...

எத்தியோபியா பயணிகள் விமானம் விபத்து. அதில் இருந்த பயணிகள் ஊழியர்கள் 157 பேர் பலி...


விமானத்தில் இருந்து யாரும் உயிர் தப்பவில்லை என எத்தியோபியா ஏர்லைன் அறிவித்துள்ளது...

குறிப்பிட்ட வயதுவரை மகளிடம் காதலும், காமமும் தீண்டாத்தகாத என கூறியவர்கள்...


திருமணத்திற்கு பிறகு இதுதான் வாழ்க்கையின் ஆரம்பம் என கூறும்போது அங்கு சில பெண்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்..

குழந்தைகளிடம் அனைத்தையும் மறைக்காமல் கூறு என பெற்றோர்கள் கூற வேண்டும்..

இங்கு நடக்கும் அதிகபட்ச பாலியல் வன்முறைகள் அனைத்தும் குழந்தைக்கு அருகிலுள்ள தெரிந்தவர்களாலே நடக்கிறது என்பதுதான் உண்மை..

குழந்தைகளிடம் கற்றுகொடுங்கள், தாய்-தந்தையை தவிர வேறெவரும் அந்தரங்க பாகங்களை தொட்டால் அவர்களை விட்டு விலகிவிடு என்றும், அவர்கள் யார் என எங்களிடம் கூறு என்று..

நோட்டாவிற்கு கீழ் உள்ள இவர்களை தேட டார்ச் லைட் உதவும்.. சின்னத்தை வைத்து கலாய்த்தவர்களை கலாய்க்கும் கமல்...


https://youtu.be/Q4U1zyU1qY0

Subscribe The Channel For More News...

சர்க்கரை நோயாளிகளுக்கு இனி அரிசி சாத(க)ம்...


சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம். சர்க்கரை நோய், உடல் பருமன், அதிகப்படியான கொழுப்பு இப்படி எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலில் நாம் தவிர்க்க நினைக்கும் உணவு அரிசி.

ஆனால் ஒட்டுமொத்தமாக அரிசியை வில்லனாகப் பார்க்க வேண்டிய அவசியம் இனி நமக்கு இல்லை. ஏனென்றால் இந்தியாவில் விளையும் அரிசி, சர்க்கரை நோய்க்குப் பாதகமானது அல்ல என்று சர்வதேச ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம்.

200க்கும் அதிகமான நெல் வகைகள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன.

இதில் இந்தியாவில் விளையும் நெல் வகைகளிலிருந்து பெறப்படும் அரிசி உடல் பிரச்சினைகளுக்கு எதிரி இல்லை என்று சமீபத்தில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute - IRRI ), ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் கிளைசீமிக் குறியீடு (Glycemic index - GI) இந்தியாவில் விளையும் அரிசியில் குறைவாகவே உள்ளது.

இந்த GI குறியீட்டை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள்.

55 அல்லது அதற்கும் குறைவான அளவில் உள்ளது முதல் வகை.

56லிருந்து 69 வரை உள்ளவை 2வது வகை.

கிளைசீமிக் அதிகமாக உள்ள 3 வது வகை 70க்கும் அதிகமாக GI குறியீடு உள்ளவை.

சுவர்ணா, சம்பாவில் மேம்படுத்திய மக்(ஹ்)சூரி போன்ற நாம் பயன்படுத்தும் பெரும்பாலான அரிசி வகைகளின் GI குறியீடு 55க்கும் குறைவாகவே உள்ளது.

அதேபோல பாசுமதி அரிசி 2வது பிரிவில் (gi 60) வருகிறது. அதுசரி, நாம் சாப்பிடும் உணவு உடல் பிரச்சினையை உண்டாக்குமா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

உணவு சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்து குறிப்பிட்ட உணவில் உள்ள கிளைசீமிக் அளவு (glycemic index GI கணக்கிடப்படுகிறது. உணவுப் பொருளில் உள்ள சர்க்கரைத் தன்மை கிளைசீமிக்.

குறிப்பிட்ட உணவை சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்தால் அதில் GI அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம். ரத்த சர்க்கரையின் அளவு மிக மெதுவாக ஏறினால் அந்த உணவில் குறைந்த அளவு கிளைசீமிக் உள்ளது.

கிளைசீமிக் அளவு 55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகளே நல்லது. GI 55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகள் பெரும்பாலான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகள், அவரை வகைகள் அனைத்தும்.

இந்த ஆய்வு குறித்து கோவை கே.ஜி.மருத்துவமனை மூத்த டயட்டீஷியன் சுபத்ரா சுந்தர் கூறும்போது, “இந்திய அரிசியில் கிளைசீமிக் குறியீடு குறைவாக உள்ளது என்பது நல்ல விசயம். குறைவாக உள்ளது என்பதற்காக 3 வேளையும் அரிசியையே சாப்பிடுவது கூடாது.

அவரவர்களின் உடல் உழைப்பைப் பொறுத்து தினமும் 1800லிருந்து 2400 கலோரி தேவை. 100 கிராம் அரிசி சாதத்தில் 360 கலோரி உள்ளது. ஒரு வேளை மட்டும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 100 கிராம் சாதம் சாப்பிட்டால் போதும்.

நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் என்று உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசியில் (பிரவுன் ரைஸ்) வைட்டமின்கள் அதிகம் என்பதால் அதையும் அவ்வப்போது சாப்பிடலாம்.

திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, கேரட் போன்றவற்றில் GI மிகக் குறைவு. எனவே இவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம். அதேபோல கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள்.

கிளைசீமிக் அளவு குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்ற பொதுவான உடல் பிரச்சினைகள் வராது.

உடற்பருமன் உள்ளவர்கள், கிளைசீமிக் குறைவாக உள்ள உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதிகப்படியான உடல் எடை குறையும்...

தமிழர்கள் போருக்கு பயன்படுத்திய அலங்கு நாய் - பாரிசாலன்...


https://youtu.be/eQpBUsgguAM

Subscribe The Channel For More News...

சூலம்புளி (மங்குசுத்{ஸ்}தான்) பழம்...


நீண்ட கால இடைவெளி  அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குசுத்(ஸ்)தான்(தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.

இந்த பழமானது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்.

இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இதன் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு.

இதன் மருத்துவ குணங்கள் சில...

இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன்படுத்தி வந்தனர்.

சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரசுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு சூலம்புளி பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கண் எரிச்சலைப் போக்க கணனியில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு சூலம்புளி பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க சூலம்புளி பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் சூலம்புளி பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது சூலம்புளி பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சூலம்புளி தேநீர் செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற சூலம்புளி பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,மாதவிடாய்  வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.

சூலம்புளி பழத்தில்...

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி

சூலம்புளி தேநீர் : இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த சூலம்புளி தேநீர். இந்த தேநீர் குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தடுக்கப்படும்...

பாஜக மோடியின் திருட்டு அரசியல்...


தமிழ் தேவையில்லை - தமிழுக்கு எதிராக முஸ்லீம் மாணவர்கள்...


பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில் 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் ஆண்டுதோறம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகளில் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளித்து 2016ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விருப்பமுள்ளவர்கள் தமிழிலும் மற்றவர்கள் அவரவர் தாய் மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து வரும் 14ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் மஜ்ஹருள் உலூம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகம் முன் மார்ச் 9 ந்தேதி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 200 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நின்றவர்கள், தங்களுடைய தாய்மொழியான உருது மொழியில் பொதுத்தேர்வு எழுதவும், தமிழ் மொழித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சம்பவ இடத்திக்கு வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், இதுப்போன்ற போராட்டங்கள் உங்களை திசை திருப்பிவிடும். அதனால் போராட்டத்தை கைவிட்டு களைந்து செல்லுங்கள், கல்வித்துறையின் உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையை கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்...

குறிப்பு : இந்த முஸ்லீம் அனைவரும் தமிழர் போர்வையுள்ள உருது மொழி இஸ்லாமியர்கள் என்பதை அறிக...

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.. தமிழினமே விழித்துக்கொள்...


எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து...


தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.

இதே போல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கிண்ணம் (cup) தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம்.

இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது.

ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக் கொள்ளலாம்...

கன்னடன் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்து உள்ளது...


குலம் தழைக்க நடத்தப்படும் நிகழ்வான திருமணங்களை இப்போதெல்லாம் மண்ணையும் தன்னையும் மலடாக்கும் நெகிழிகளால் நிறைத்துக் கொண்டிருக்கிறோம்...


இதில் ஏழை - பணக்காரன், படித்தவன் - பாமரன் என்ற வேறுபாடும் இல்லை. போலிப் பெருமை காட்டும் நுகர்வு வெறி மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

இலையில் ஊற்றிய பாயாசத்துக்கு ருசி அதிகம். ஆனால் சமையல்காரர்கள் தங்கள் சௌகரியத்துக்கு பரிமாறுவதற்காக அதற்கு ஒரு குவளை பழக்கினார்கள். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு இலைக்கும் ஐந்து நிமிடம் தண்ணீர் குடிக்கவும் தனிக்குவளை வைத்து உவகையடைகிறோம்.... அதற்காக பல மரங்கள் அழிக்கப்பட்டு பூமி மீது குப்பைகளை நிறைக்கிறோம் என்ற உண்மை தெரியாமல். அதிலும் பிளாஸ்டிக் குவளைகள் என்றால் இன்னும் கேடு அதிகம். கணக்கு போட்டு பார்த்தால் தண்ணீர், பாயாச குவளைகளை எவர்சில்வர் டம்ளர்களில் வைத்து அதை கழுவ தனியாய் ஒரு ஆளை நியமித்தாலும் அதற்கு ஆகும் செலவும் குறைவாகவே இருக்கும்.

சாப்பிட்டு முடித்த பிறகு குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்பது அடிப்படை உடலியல் விதி. ஆனால் இன்று கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும் ஐஸ்க்ரீம் தருவது ஒரு பெருமையாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வாழ்த்த வந்தவர்களின் வயிற்றைக் கெடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஐஸ்க்ரீம் போட்டுத்தரும் குவளைகளால் உருவாகும் குப்பை மலை ஒரு பக்கம்.

இது எல்லாம் போதாதென்று சாப்பிட்டு முடித்த இலைகளை எடுத்துப் போடுவது பெரிய பெரிய கருத்த நெகிழிப் பைகளில். இலைகளையும் மட்க விடாமல் செய்து அதிலும் அறியாமை.

சாமானியரும் சரி, லட்சங்களில் ஏன் கோடிகளில் கூட ஒரு திருமணத்துக்கு செலவழிக்கும் நல்லோரும் சரி, பல கோடிகளுக்கு அதிபதிகளான திருமண மண்டப முதலாளிகளும் சரி இந்த விசயத்தில் காட்டுகிற அலட்சியம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

ஆறு, குளங்களில் கொட்டி நீர் நிலைகளை அழிப்பது, தீ வைத்து எரித்து காற்றை சுவாசிக்கத் தகுதியற்றதாக்குவது என இப்போதெல்லாம் ஒவ்வொரு திருமணமும் நாம் வாழும் பூமியை மூச்சு திணறத் திணற அடிக்கிற தாக்குதல்களாக மாறி வருகின்றன. அந்த நிகழ்வுகள் மூலம் வாரிசுகள் உருவாவதும், செயற்கைக் கருவூட்டல் மூலம் அடுத்த ஆணின் விந்து, வேறொரு பெண்ணின் கருமுட்டை மூலம் குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைகளின் ஆரோக்கியமும் பெருத்த கேள்விக்குறியாகி வருகிறது...

திராவிடம் Vs தமிழ்தேசியம்...


தமிழகத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு ஆளான சமூகம் இன்றைய நிலை அனைவருக்கும் தெரியும்...

அரவமும் வடுகும்...


சங்ககாலத்தில் தமிழகத்தில் இருபத்துநான்கு நாடுகள் இருந்தன. அவற்றில் வட ஆர்க்காடு செங்கல்பட்டு ஆகிய பிரதேசங்கள் அடங்கியது அருவாநாடு.

அதற்கும் வடக்கே இருந்தது அருவா வடதலை நாடு என்பது. இதற்கும் வடக்கே இருந்தவர்கள் தெலுங்கர். அவர்கள் அறிந்த தமிழர்கள் அருவர்கள் அல்லது அரவர்கள்.

ஆகவே தமிழர்களுக்குப் பொதுவாக அந்தப் பெயர் தெலுங்கில் ஏற்பட்டது. நமக்கும் வடக்கே இருந்ததனால் அவர்கள் வடுகர். அவர்கள் பேசும் மொழியை 'வடுகு' என்று தமிழர்கள் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணியருக்கு நாம் வடக்கே இருப்பதால் நாம் அவர்களுக்கு வடக்கத்தியார்.

தஞ்சாவூர்க்காரர்களுக்கு மதுரை/திருநெல்வேலிக் காரர்கள் தெங்கணத்தார் -தென்கணத்தார்கள் என்றால் தெற்கில் உள்ளவர்கள்.

மதுரைக் காரர்களுக்குத் தெருநெல்வேலிக்காரர்கள் 'தெற்கத்தியான்'கள்...

Beetroot Salad / பீட்ரூட் சாலட் செய்வது எப்படி..?


https://youtu.be/4i2qT0v7SeE

Subscribe The Channel For more Recipes...

குடல் புண் (அல்சர்) பற்றி தெரியுமா உங்களுக்கு ?


வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்.

குடல் புண் என்றால் என்ன?

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் கைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.

புண் எதனால் ஏற்படுகிறது?

குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள், ஆசுப்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

குடல் புண் வகைகள்

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண்.

2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.

ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

மருத்துவம் செய்யாவிட்டால்...

குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதிரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆசுப்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும்.

ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..

செய்யக்கூடாதவை

1. புகைபிடிக்கக் கூடாது.

2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது.

4. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

5. சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.

6. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

7. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.

8. மனநிலையை தடுமாற விடக் கூடாது.

9. அவசரப்படக் கூடாது.

10. கவலைப்படக் கூடாது.

11. மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. செய்ய வேண்டியவை

12. குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்

13. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

14. அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

15.தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லசி(ஸ்ஸி) போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

16. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

17. இடுப்பில் உள்ள பட்டி மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.

18. இருக்கமாக உடை அணியக் கூடாது.

19. மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.

20. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.

21. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

22. அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.

23.முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.

24. சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?

அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.

இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், •பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.

குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன? பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம். சத்தான சரிவிகித உணவு.

1. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

2. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

3. தேநீர் தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத தேநீரைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் தேநீரின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

4. வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

5. மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

7.பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

8. பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை...

ஆரியம் திராவிடம் திருட்டு அரசியலை புரிந்துக் கொள் தமிழா...


திமிங்கிலம்....


திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.

திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன இவை வெப்ப இரத்த விலங்குகள். தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன.

உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புற ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது.

இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.

திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன.

இத்துளைபலீன் திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது.

திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும்.

இசுப்பெர்ம் திமிங்கலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும் ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்...

உலக மக்களின் எதிரி தான் அமெரிக்கா...


செவ்வாயில் நிறைய தண்ணீர் இருக்கிறதா.?


செவ்வாய்க் கிரகத்தில் பூமி அளவுக்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிட்டியிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் சிலர் கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பூமியின் உட்புறப் பகுதியைப் போல செவ்வாய்க் கிரகத்திலும் பெரும் தேக்கங்களாய் தண்ணீர் காணப்படலாம் என்கிறார்கள்.

செவ்வாயில், புறக்கணிக்கத்தக்க மிகச் சிறிய அளவிலேயே தண்ணீர் காணப்படக்கூடும் என்று முந்தைய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதுகுறித்து வாசி(ஷி)ங்டனின் கார்னகி நிறுவன ஆய்வாளர் எரிக்
க(ஹா)ரி கூறுகையில், “செவ்வாயின் உள்பகுதி மிகவும் காய்ந்து போயிருக்கும் என்று முந்தைய ஆய்வுகளில் எப்படி முடிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

ஆனால் தற்போதைய ஆய்வு முடிவு அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்புக்குத் தண்ணீரைக் கொண்டு வந்ததில் அக்கிரகத்தின் எரிமலைகள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம்” என்கிறார்...

இனி வெயிற்காலம்...


தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்...


ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை -

அவநம்பிக்கை..
அவசரம்...
அமைதியின்மை...

அவநம்பிக்கை...

அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது. இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப் பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. மேலும் இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பர்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.

இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரம்மாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்பிற்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).

அவசரம்...

அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் ”தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?” என்று தோண்டிப்பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை...

மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்திற்காவது மனதை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.
நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனதை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மனசக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்...

நீங்கள் 8, 17, 26 எண்ணில் பிறந்தவரா... தவறாமல் பாருங்க...


https://youtu.be/88D_kddTZ94

Subscribe The Channel For More News...

பொள்ளாச்சி குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்தார்கள்...


இங்கு நம்மால் கதற மட்டுமே முடியும்..

ஏனெனில் இந்தியா அரசு சட்டங்களை உருவாக்கும் போது,

பொது மக்களை காப்பாற்றுவதே விட,

அதிகாரத்தில் இருப்பவனை காப்பாற்றுவதற்காக மட்டுமே பெரும்பாலும் எழுதப்பட்டது அல்லது எழுதிய பிறகு மாற்றியமைக்கப்பட்டது...

இந்த வணிக இந்தியாவில் தான் வாக்களித்தால் மாற்றம் வரவைக்க முடியும் என இன்னும் நம்புகிறீர்கள்..

உங்களின் இந்த அறியாமை தான் அவர்களின் பலம்...

பொள்ளாச்சி கொடூரம்...


ஊர்ப்பெயரை அடைமொழியாகக் கொண்ட ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரின் மகன்கள் இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.

அதில் இளைய மகன், வால்பாறையில் இதேபோன்று ஒரு பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த போது, அந்தப் பெண் சத்தம்போட்டதில் மக்கள் கூடிவிட்டனர். அவன் தப்பிவிட்டான்.

பெண்கள் விஷயத்தில் படு வீக்கான நகராட்சியின் முக்கியப் பிரமுகருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதனால் தான், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி–க்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்தப் போராட்டத்துக்கு அ.தி.மு.க., பி.ஜே.பி இரு கட்சிகள் மட்டும் ஆதரவு தரவில்லை. இதுவே சந்தேகத்தை வலுப்படுத்துகிறது...

பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, இந்து அமைப்புகள் எல்லாம் எந்த முட்டு சந்தில் இருக்கீங்கடா...


நான்கு கொம்புகள் கொண்ட ஆடுகள்...


பொதுவாக இறைவன் படைத்ததில் அனைத்து உயிர் இனங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பை பெற்று இருக்கிறது.

பொதுவாக நாம் இரண்டுகொம்புகள் உள்ள மிருகங்களைத்தான் பார்த்திருப்போம். இப்போது நான்கு கொம்புகள் உள்ள இந்த ஆட்டைப் பாருங்கள்.

இது “மான்க்சு(ஸ்) லோகாட்டன்’ எனும் இனத்தைச் சேர்ந்த ஆடு. இது நம் நாட்டில் இல்லை. பிரிட்டனுக்குப் பக்கத்தில் உள்ள “மான்’ தீவில் இருக்கிறது.

சில லோகாட்டன் ஆடுகளுக்கு நான்கு முதல் ஆறு கொம்புகள் வரை இருக்கும். இந்தக் கொம்புகளில் இரண்டு கொம்புகள் மட்டும்தான் வலிமையாகவும் பெரிதாகவும் இருக்கும்...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் / Pollachi Rappist Horror...


https://youtu.be/cdF2qPjX4w4

Subscribe The Channel For More News...

எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை...


எண்ணங்களை கவனமுடன் தேர்வு செய்யுங்கள்...

நம் வாழ்வு சிறப்புற வேண்டுமெனில் நமது எண்ணங்களை நாம் சீர்செய்தாக வேண்டும்.

எண்ணங்களை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.

கோபம், குரோதம், பொறாமை, பிறரை வசை பாடுதல், கவலை, துக்கம், சோகப் பாடல்கள் கேட்பது, பிறரது அனுதாபத்தை எதிர் பார்ப்பது, சோம்பேறித் தனம், மனதை எப்போதும் இறுக்கமாக வைத்திருப்பது, சுத்தமில்லாதிருப்பது.

சுருங்கச் சொன்னால் மனதை எதிர் துருவத்தில் வைக்காதிர்கள் {negative} காரணம் நாம் எந்த எண்ணங்களைக் கொண்டோமோ அதே எண்ணங்களைச் சார்ந்த சம்பவம் நம் வாழ்வில் நிகழும்.

"கெட்டதை நினைத்தால் கெட்டது தான் வந்து சேரும்" நம்மிடமிருந்து புறப்பட்ட எண்ணங்கள் பிறரை தாக்கலாம் அல்லாது தாக்காமலும் போகலாம் { அது அந்த எண்ணங்களை எதிர்கொள்பவர்களின் மன வலிமையைப் பொருத்தது}.

ஆனால் எவரிடதிளிருந்து அந்த எண்ணம் புறப்பட்டதோ அந்த நபரை அந்த எண்ணம் நிச்சயம் தாக்கியே தீரும்.

நல்ல எண்ணம் நன்மையை பயக்கும்,
தீய எண்ணம் தீமையை பயக்கும்.

ஒருவன் தன் வாழ்வில் கெட்டுப்போவதற்கும், சிறப்பாக வாழ்வதற்கும் இதுதான் காரணம் என்பதனை உணர்வீராக.

இதனை உணர்த்தவே "வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு" என்ற சிவவாக்கியமும் இதனை மீண்டும் உறுதி செய்கின்றது.

எண்ணங்களை வானை நோக்கி உயர்த்துங்கள், உங்கள் வாழ்வும் வானவு உயர்ந்து செல்வதை உணர்வீர்கள். எண்ணங்களின் துணை கொண்டு, கொண்ட இலட்சியத்தில் சிறிதும் மனம் தளராது தொடர்ந்து முன்னேறுங்கள்...