12/09/2018
தமிழனுக்கு ஏன் சாதி அடையாளம் வேண்டும்?
மேனன் இந்த சாதியானது கேளராவில் மட்டுமே உள்ளது.
ராஜகோபல மேனன் என்று ஒருவன் தன்னை அறிமுகம் செய்யும் போது அவனுடைய அடையாளத்தினை கண்டு கொள்ள முடியும்.
இது தமிழ்நாட்டிலும் வழக்கமாக இருந்தது. அதை அழிக்கவே திராவிடர்கள் சாதியை பின்னால் சேர்க்க கூடாது என்று கூறினார்கள்.
இப்போது பாருங்கள் தமிழனை ஆளும் பெருங்கட்சிகளின் தலைவர்கள் யாரும் தமிழர்களே இல்லை.
தமிழ் கட்சிகள் என்பதே இல்லை என்ற நிலைக்கு வழி வகுத்த குள்ள நரிகள் இப்போது மீண்டும் அதையே காரணமாக சொல்லுகின்றன.
சிங்கத்தினைப் பார்த்து நீ ஆடு என்று சொல்லும் திராவிடர்களே, சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும்.
சில சிங்கங்கள் திராவிடர்கள் சொல் கேட்டு தன்னை ஆடு என நினைத்துக் கொள்ளலாம்.
ஆனால் அந்த சிங்கத்திற்கு தான் யார் என்பது தெரிய வரும் போது திராவிட ஓநாய்கள் நாட்டை விட்டு ஓடித்தான் ஆக வேண்டும்.
உங்கள் சாதியை பெருமையாக நினையுங்கள்.
யாரோ சொல்லுவதற்காக நீங்கள் ஆடுகளாக ஆவதில்லை.
சிந்தனை செய்யுங்கள்...
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்...
ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?
ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்..
தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது..
ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.
ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.
தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.
தமிழரசன் வந்தார், கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.
உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.
ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்.
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.
அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது மலையாளி எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து, கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் சூழ்ச்சி வலையிலௌ கொலை செய்யப்பட்டார்...
சமைத்த உணவை ஒரு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் குடும்பங்களின் கவனத்திற்கு...
உணவின் மூலம் பரவும் "லிஸ்டிரியா" என்ற ஒரு நுண்கிருமி பல நாட்களாக குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சமைத்த உணவில் வளரத் துவங்கும். அந்த உணவை உண்ணுபவர்களின் குடல் பாதைக்குள் நுழைந்து "லிஸ்டிரியோசிஸ்" என்ற நோயை உருவாக்கும். இதனால் அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பல அறிகுறிகள் மட்டுமல்லாது சிறிது நாட்களில் குடலை பாழாக்கியதொடு நிறுத்தாமல் இரத்ததின் மூலமாக அருகிலுள்ள உறுப்புகளையும் தாக்கத் துவங்கும்.
இந்தக் கிருமியினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பம் தரித்த பெண்கள்.
லிஸ்டிரியா வளர்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்...
1. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சமைத்த உணவை இரண்டு நாட்களுக்குள் உபயோகப்படுத்தி விட வேண்டும். உபயோகப்படுத்துவதற்கு முன் உணவை சூடாக்குவது மிக அவசியம்.
2. குளிர்சாதனப் பெட்டிக்குள் உள்ள வெப்பநிலை எப்போதும் 4°C கீழே இருத்தல் மிக முக்கியம். உறைவிப்பான் அடுக்கில் இருக்கும் வெப்பநிலை -18°C இருத்தல் வேண்டும். ஏனெனில் அந்த வெப்பநிலையில் லிஸ்டிரியாவினால் வளர முடியாது.
3. வாரத்துக்கு ஒரு முறை குளிர்சாதனப் பெட்டியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சிந்திய உணவுப் பொருட்களை உடனே அகற்றி துடைத்து விடுவதன் மூலம் கிருமி அதில் வளர்ந்து மற்ற உணவுகளில் பரவுவதை தடுக்கலாம்.
முடிந்த வரை.. அன்று சமைத்த உணவை அன்றே முடித்துவிடுங்கள்.. வியாதிகளை நாமே மாலைபோட்டு வரவேற்க வேண்டாமே...
உப்பு நன்மையும் - தீமையும்...
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள் ஆனால் இன்று அந்த உப்பை வைத்து வணிகம் செய்யும் பண்ணாட்டு நிறுவனங்கள் தான் அதனால் உண்டாகும் நோய்க்கு மருந்தும் அவனே தயாரிக்கிறான்.
அயோடைஸ்டு உப்பு எடுத்துக் கொள்வது நல்லதா? என கேட்க்கும் சகோக்களுக்காக...
அயோடின் குறைவாக இருப்பவர்கள் அயோடைஸ்டு உப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க கடலிலிருந்து பிரித்தெடுக்கபப்டும் உப்பை ரசாயான்ங்கள் கலந்து வெள்ளையாக்குகிறார்கள். இதனை ஆரோக்கியம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்...
மனதில் தோன்றுவது உணர்வு...
நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது வெற்றி மனோபாவத்துடன் ஆரம்பிக்கிறோமா?
கண்டிப்பாக அப்படித்தான் ஆரம்பிக்கிறோம்..
ஆமாம் வெற்றி மனோபாவம் என்றால் என்ன? என்று யாராவது கேட்கலாம்.
அவர்களுக்கெல்லாம் நான் இரண்டு வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைந்து சொல்ல வருவது என்னவென்றால்...
அந்த செயல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற உறுதியான உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றதல்லவா? அது தான்.
நண்பர்கள் நன்றாக கவனிக்கவும்...
நான் உறுதியான உணர்வு என்று தான் சொல்கிறேன். எண்ணம் என்று சொல்லவில்லை.
ஏனென்றால் எண்ணம் என்பது நமது மேல் மட்ட மனதில் தோன்றுவது.
உணர்வு என்பது உள்மனதில் ஏற்படுவது. அதற்கு சக்தி அதிகம்..
அந்த சக்தி நம்மை சரியான வழியில் நடத்திச் சென்று நமது குறிக்கோளை அடைய உதவும்.
சும்மா நமது உணர்வு மனதில் அந்த செயலில் ஜெயித்துக் காட்டுவோம் என்று வற்புறுத்தி நாம் நினைக்கலாம்.
ஆனால் சக்தி வாய்ந்த நமது ஆழ்மனக் கிடங்கில் உள்ள நாம் சேர்த்து வைத்த நமது பழைய குப்பைகள் அந்த நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருந்தால் பயனில்லை.
அந்த நீண்ட நாளைய சேமிப்புக்கு தான் சக்தி அதிகம்.
அவை ‘இவரு ஜெயிச்சுருவாரோம்ல…என்ன கொடுமை சார் இது?’ என கேலி செய்யலாம்.
ஆக அந்த குப்பைகளை காலி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வேரோடு பிடுங்கி களைய வேண்டும்.
விழிப்புணர்வுடன் இருந்து மேலும் அவை முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆழ்மனதில் நன்னம்பிக்கைகளை விதைக்க வேண்டும்.
அந்த நல்ல நம்பிக்கைகள் நமக்கு வெற்றி மனோபாவத்தை ஏற்படுத்தும்.
சாதிக்கும் சக்தியை கொடுக்கும்.
வெற்றி மனோபாவத்துடன் நாம் செயல்பட ஆரம்பித்தோமானால் நமது சாதனைகளுக்கு வானமே எல்லை...
பாத வெடிப்பு போவதற்கான டிப்ஸ் - இயற்கை வைத்தியம்...
பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.
தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.
வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்...
பயிர்களும் பட்டங்களும்.. பட்டம் என்றால் என்ன?
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும்.
பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும்.
பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.
ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலான வைற்றைச் சாகுபடி செய்வார்கள்.
மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.
ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம்.
மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.
மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.
நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது.
மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.
நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்த பின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை.
இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.
பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள்..
வெங்காயம் - வைகாசி, புரட்டாசி, மார்கழி
பீர்க்கங்காய், புடலை, பாவை - சித்திரை, ஆடி, ஆவணி
அவரை – சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி
கத்தரி – ஆடி, மாசி
வெண்டை – மாசி, பங்குனி
மிளகாய், கொத்தவரை – வைகாசி, ஆனி, ஆவணி புரட்டாசி, கார்த்திகை. தை, மாசி
முருங்கை – புரட்டாசி, ஐப்பசி
எள் - ஆடி, சித்திரை
சூரியகாந்தி, ஆடி, கார்த்திகை, மாசி
சுண்டல் - ஐப்பசி, கார்த்திகை
நெல் - புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
ஊளுந்து – ஆடி, மாசி
கம்பு – மாசி, பங்குனி
நாட்டுச்சோளம்- சித்திரை, மாசி, கார்த்திகை
தென்னை- ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி
கரும்பு- கார்த்திகை, தை
வாழை - கார்த்திகை, மார்கழி.
மரவள்ளி – கார்த்திகை
பருத்தி - ஆவணி, புரட்டாசி, மாசி
தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை – ஆடி
ஆண்டு முழுவதும் பயிரிடலாம் - ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு, மக்காச்சோளம், பட்டு வளர்ப்பு, கார்/குருவை/சொர்னவரி/ஆடி பட்டம் (வைகாசி – ஆனி முதல் ஆவணி – புரட்டாசி வரை)
சம்பா/தாளாடி/பிஷானம் (ஆவணி – புரட்டாசி முதல் தை – மாசி வரை)
குறிப்பு : மிளகாய், தக்காளி, வெங்காயம், நெல். கொத்தவரை, வாழை, தென்னை, போன்ற பயிர்கள் கார்த்திகை மார்கழி பட்டத்தில் நடவு செய்யலாம்...
பெட்ரோல், டீசல் விலை: வாக்குறுதியை நிறைவேற்றத் தவறுவது மோசடி அல்லவா.? - பாமக அறிக்கை...
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.83.91 ஆகவும், டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.76.98 ஆகவும் உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்வால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 26 நாட்களில் 22 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரூ.80.14 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.77 உயர்ந்து ரூ.83.91 ஆகவும், டீசல் விலை ரூ.72.59-லிருந்து ரூ.4.39 உயர்ந்து ரூ.76.98 ஆகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி முதல் இன்று வரையிலான 40 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.4.71, டீசல் விலை ரூ.5.44 என்ற அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 18.63 ரூபாயும், டீசல் விலை 20.10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதில்லை.
வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அப்பாவி மக்கள் தான் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எரிபொருள் விலை உயர்வின் அடுக்கடுக்கான விளைவுகளால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் வாழ வழி தெரியாமல் தவிக்கின்றனர். இந்தக் கொடுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமானால், எரிபொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்பு கூட்டு வரியை மாநில அரசும் குறைக்க வேண்டும். ஆனால், இரு அரசுகளும் வரியைக் குறைக்க மறுப்பது மக்களால் மன்னிக்க முடியாத மோசடி ஆகும்.
2014-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. மாறாக, பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி அதன் பயன்களை மத்திய அரசு அனுபவித்தது. கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு இணையாக எரிபொருள் விலையை குறைக்காமல், கலால் வரியை உயர்த்துவது குறித்து தில்லியில் கடந்த 17.12.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்ட போது,‘‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு ஒரு கட்டத்தில் குறைக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படும் போது இதை மத்திய அரசு செய்யும். எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மத்திய அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை மத்திய அரசு செய்யும்’’ என்று கூறினார்.
தர்மேந்திரப் பிரதான் இவ்வாறு கூறியதற்கு பிறகும் பல முறை கலால் வரி உயர்த்தப்பட்டது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்ததால் எரிபொருள் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. 2015 ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.20.42, அதாவது 32% அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.30.90, அதாவது 67 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை நினைத்துப் பார்க்க முடியாத விலை உயர்வு ஆகும். இந்த உயர்வுக்குப் பிறகும் கலால் வரியை குறைக்க மத்திய அரசுக்கு மனமில்லையென்றால் எப்போது தான் வரியைக் குறைக்கும்? பெட்ரோல், டீசல் விலை 150 ரூபாயை எட்டிய பிறகு குறைக்கலாம் என காத்திருக்கிறதா? மக்கள் மீதான சுமையை குறைப்போம் என்று கூறிய அரசு அதை நிறைவேற்றாதது மோசடி அல்லவா?
2014, 2015 ஆகிய ஆண்டுகளில் கலால் வரி உயர்த்தப்பட்டதன் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாயும், சுமார் 12 லட்சம் கோடி மொத்த வரி வருவாயும் கிடைத்துள்ள நிலையில், மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல. ஏற்கனவே அளித்த வாக்குறுதியை மதித்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து எரிபொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்...
பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - பொறிவினை அதாவது எந்திரங்கள் (MACHINERY AND ROBOT MACHINERY)...
எந்திரங்கள் அக்காலத்தில் மிக அதிக அளவில் செய்யபட்டுள்ளன அவை மனிதர்கள் இயக்கும் எந்திரம் மற்றும் தானியங்கி எந்திரம் என பலவகையாக உருவாக்கியுள்ளனர்.
அரசர்கள் நீராடுவதற்க்கு அரண்மனை பின்பகுதியில் நீர்பொறியமைந்த சோலை அமைந்திருந்தது.அரசன் அங்கு சென்று நின்றவுடன் நீர் தானாக குழாயில் நிறைந்து அவன் மேல் விழும் அவன் சென்றவுடன் நீர் நிறைவது தானாக நின்றுவிடும். இப்போதை AUTOMATIC SHOWER போல இதை இலக்கியத்தில் இலவந்திகை பொறி என அழைக்கிறார்கள்..
கீழே சற்று ஆதாரங்களை காண்போம்...
“ இலவந் திகையின் எயிற்புறம் போகி ”
சிலப்பதிகாரம் புகார்காண்டம் 10:31 ல் இலவந்திகை இருந்ததாக கூறுகிறார் புலவர்.
நிறைகுறின் நிறைத்துப் போக்குறின் போக்கும்
பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை.
என்று கொங்குவேளிர் என்ற புலவர் தனது பெருங்காதை என்ற நூலில் 1:40;311-2 ஆகிய பாடல் வரிகளில்..
(நிறை)ஆள் இருந்தால் நிறைந்து என்றும் போக்குறின் அதாவது சென்றால் போக்கும் பொறி அமைந்த இலவந்திகை என்று குறிப்பிடுகிறார்.
கோட்டைக்கு பாதுகாப்பாக எதிரிகள் யாரும் நுழையாமல் இருக்க எந்திரங்களால் ஆன வாயில் அமைப்புகள் அமைக்கபட்டிருந்தன
மேலும் அவை ஆள் இல்லாமல் இருந்தன. குறிப்பிட்ட தூரத்தில் ஆட்கள் வரும் போது சந்திரனின் ஒளி பட்டு அவர்களுடைய நிழல் தரையில் பதித்து இருக்கும் குறிபிட்ட ஆடியில்விழும் போது அது தானாக அம்புகளை விடுவித்து கொள்ளுமாறு பொறி அமைத்தனர்.
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
- ( பதிற்றுப்பத்து, 53:7)
திங்களும் நுழையா எந்திரப் படுபுழை
- (புறநானூறு 177: 5)
நெடுமதில் நிரைஞாயில்
அம்புஉமிழ் அயில்அருப்பம்
- (மதுரைக்காஞ்சி : 66,67)
நெடிய சுவர்களில் குருவி தலையை போன்ற தனிதனி பகுதிகள் அமைத்து அங்கிருந்து அம்பு,வேல் வீசும் அரண்கள் செய்யபட்டன அதிலுள்ள ஆட்கள் மற்றவர் கண்ணுக்கு தெரியமாட்டார்.
சங்க காலத்தில் கரும்பை பிழிவதற்கு எந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டன. அவை எப்போதும் ஆலைகளில் உபயோகத்தில் இருந்தன. அவ்வாறு கரும்பு ரசம் பிரித்தெடுக்கும் போது எந்திரங்கள் யானை பிளிறுவது போல் சப்தம் வரும் என்பதை கீழ்காணும் நூல்கள் மூலம் அறியலாம்.
கனஞ்சால் வேழங் கதழ் வுற்றாஅங்கு
எந்திரம் சிலைக்கும்
- (பெரும்பாணாற்றுபடை, 259,260)
கரும்பின் எந்திரம் சிலைப்பி னயல
- (புறநானூறு – 322:7)
கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
- (ஐங்குறுநூறூ- 55:4)
இவ்வாறு பல இடங்களில் எந்திரம் அல்லது தானியங்கி எந்திரம் அல்லது பொறிவினை அல்லது பொறிபடை அமைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். எந்திரம் என்பது எப்போதோ கண்டுபிடித்துவிட்டனர்.
இதில் பொறிபடையில் நிறைய பொறிகள் உள்ளன. பதிவின் நீளம் கருதி சிந்தாமணியில் பல பொறிகளும் சிலபதிகாரத்தில் பலபொறிகளும் கூறியுள்ளதை நான் இங்கு கூறவில்லை. மேலும் சிந்தாமணியில் யவனர் அமைத்த பொறி பற்றி கூறுவார் ஆனால் சிலப்பதிகாரம் அதற்கு முன்பே உள்ளது கவனிக்கதக்கது.
அவை சிலபதிகாரம் அடைகலகாதை 207 to 216 மற்றும் சீவக சிந்தாமணி 1ல் 101 முதல் 104 வரை அவற்றின் பொறி பெயரை காணவும்.
எந்திரம் மற்றும் தானியங்கி எந்திரம் அமைப்பதில், நாமே முன்னோர்கள் என்பதை இனி உறக்க சொல்லுவோம்.
பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு கூறும் பொறிகளை கீழே உள்ள திரைபடத்தில் காணலாம்.
திங்களும் நுழையா எந்திரப் படுபுழை..
சந்திர நிழலை வைத்து செய்வது அல்லது தீபந்த நிழலை வைத்து செய்வது கீழே லிங்க்...
https://youtu.be/w_HmOsZbJ7c
தமிழன் திராவிடன் அல்ல.. விழித்துக்கொள் தமிழினமே...
கன்னடன் தெலுங்கன் மலையாளி தமிழன் சேர்ந்தது தான் திராவிடன் என்று திருட்டு இனத்தை உருவாக்கிய திராவிட கட்சிகளின் தலைவனே அடி முட்டாத் தொண்டனே...
இதையே பாலாற்றை தடுக்கும்
தெலுங்கனிடம் போய் சொல்லுங்கள் - நாம் அனைவரும் திராவிடன் தண்ணீர் கொடுங்கள் என்று..
காவிரியை தடுக்கும் கன்னடனிடம் போய் சொல்லுங்கள் - நாம் அனைவரும் திராவிடன் தண்ணீர் கொடுங்கள் என்று..
முல்லைப் பெரியணையை தடுக்கும் மலையாளியிடம் போய் சொல்லுங்கள் - நாம் அனைவரும் திராவிடன் தண்ணீர் கொடுங்கள் என்று..
இதை யாரிடமும் சொல்லாத நீங்கள்
இதை எதையும் செய்யாத நீங்கள்
ஏன் தமிழனிடம் மட்டும் இன்னும்
நாம் திராவிடன் என்று சொல்லி வருகிறீர்கள்.?
தமிழா நம் முன்னோர் மறத் தமிழனாக இருந்ததை மறந்து இப்போது மடத் தமிழனாய் (திராவிடனாய்) வாழ்வது சரிதானா.?
விழித்திடு தமிழா விழித்திடு
தமிழனாய் மட்டுமே...
இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்...
இந்த பொருட்களை தோராயமாக 15 முதல் 10 வருடங்களாக அதிகளவில் வீடுகளில் பயன்படுத்துகிறோம்.
இப்பொருட்களின் தாக்கம் நம்மிடம் எப்போது ஆரம்பமாகியது என்று தேடி பார்த்தால் விடை இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மூளை சலவை செய்து புகுத்தி இருக்கிறார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பொருட்களை எப்படி பயன்படுத்தினோம் என்று தேடுங்கள் விடை கிடைக்கும், மாற முயற்ச்சிபோம்...
திராவிடமும் தமிழின அழிப்பும்...
சாதியை ஒழிக்கவும் முடியாது .. வளர்க்கவும் முடியாது இதுவே விதி..
சாதி ஒழிப்பு என்பதே ஒருவித அடையாள அழிப்பு தான்..
நம் அடையாளத்தை அழிப்பதன் மூலம் நம்முடன் கலந்து நம்மை அடையாள அற்றவர்களாக மாற்றுவதே வடுக இனவெறியர்களின் நோக்கம்..
இதைத் தான் வடுக இனவெறியன் மூத்திரப்பை சுமந்து சாதி ஒழிப்பு பேசி தமிழ் சாதிகளுக்குள் பகைமையை வளர்த்தான் ராமசாமி நாயிடு...
ஆந்திராவில் சோழர் கால நடுகல் - தமிழர் வீரம் சொல்லும் சாசனம்...
Chola Hero Stone found in Andhra Pradesh...
சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில், ஆந்திரப்பகுதியில் பண்டையத் தமிழ் எழுத்துக்கள் கொண்ட சோழர்கால நாடுகல்லினை ஆந்திரா தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர் .
சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே, வரலாற்று ஆர்வலர் அளித்த தகவலின் பேரில், மத்தியத் தொல்லியல் துறையினர் கள ஆய்வைனை மேற்கொண்டனர்.
அங்கு, ஐந்தடி உயரமும், நான்கடி அகலமும், கொண்ட நடுகல்லில், ஒருவீரன் வாள் மற்றும் கேடயம் ஏந்தி போர்செய்வது போல சோழர்காலத் தமிழ் எழுத்துக்களோடு கண்டு பிடுத்துள்ளனர். ஆண்டு பற்றி எந்தத் தகவலும் இல்லாதநிலையில், எழுத்து மற்றும் சிற்ப அமைதியைக் கொண்டு அது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கணக்கிட்டுள்ளனர்.
கல்வெட்டுபடி , சித்தன், பெரும்பீமன் எனும் இரண்டு வீரர்கள் நினைவாக எழுப்பப்பட்டாகக் கல்லாக தெரிகிறது. இந்த இரண்டு சோழ வீரர்கள் அழகன் கருப்பாருடையார் எனும் குறுநில மன்னனின் கோட்டையை காக்க, வீரமுடன் போரிட்டு பலரை கொன்று குவித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அப்போரில் இறந்த அவ்வீரர்களின்
நினவாக, கருப்பாருடையார் நடுகல் எழுப்பி, வாகவேடு எனும் பகுதியில் நிலதானங்கள் அளித்தது பற்றி இந்த பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு கூறுகிறது.
இத்தமிழ் கல்வெட்டு, ஆந்திரப் பகுதியில் எல்லைப்புற போர்களில், நம் வீரத்தை வெளிப்படுத்தியதன் சான்றாக அமைந்துள்ளது .
ஹெரிட்டேஜர் தமிழ் மரபுசார் இதழ்
ASI discovers 9th Century Hero Stone with Tamil Inscriptions in Andhra Pradesh
http://timesofindia.indiatimes.com/articleshow/65747775.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
மனிதன் சந்தோஷத்தை தொலைத்த காரணம்...
மனித வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனதற்கு மிகப்பெரிய காரணம் இந்த தத்துவமே...
காலம் பொன் போன்றது..
நேரம் காலம் உணரா வாழ்க்கையே நிம்மதியை தரக்கூடிய வாழ்க்கை..
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது..
உயிர்களுக்கான லட்சியமே உயிர்வாழ்வதே (Survival of the fittest).
உயிர் வாழ இயற்கையும் அது தரும் உணவுமே போதுமானது.
அப்போ வாழ்க்கையை மற்ற விசயங்களில் கவனம் செலுத்தாம நேரடியா உயிர் வாழ என்ன தேவையோ அதை உருவாக்கு (விவசாயம்).
அதே வேலையில் கொடுக்கப்பட்ட கருவியையும் காப்பாற்று (இயற்கை) மிதம் உள்ள அனைத்தும் போலியான கட்டமைப்பு தான்.
யாரோ ஒருவனுக்கான கட்டமைப்பு தான்..
உன்ன ஒருவனுக்காக வேல செய்ய வைக்குறான் அதுக்கு பணம்னு கட்டமைப்பு ரெடி பண்ணான் அதுக்குள்ள உன்ன வேகமாக ஈர்க்க நேரம் என்ற கருவிய பயன் படுத்துறான்..
ஏன் குழந்தை பருவங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷத்தை தந்த நாட்களாக இருக்கு யோசியுங்க ?
இரண்டே பெரும் காரணங்கள்...
1) வயதை உணரா மூளை..
2) நேரத்தை கணக்கில் எடுக்காத வாழ்க்கை...
வேற்றுக் கிரகவாசி உண்மைகள்...
துருக்கியில் கோப்கெலி டெபே எனும் இடத்தில் உலகின் மிக தொன்மையான கோயிலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சாதா கோயில் இல்லை, மிக விஸ்தாரணமாக கட்டபட்டுள்ளது.
லேயர் லேயராக இதை அகழ்ந்தெடுத்த ஆய்வாளர்கள் பல ஆயிரம் வருடங்கள் இது தொடர்ந்து கட்டபட்டிருக்க வேண்டும் என்கின்றனர். இதை கட்ட துவங்கிய வருடம் கிமு 9,600 எனவும் இதில் கடைசியாக கிடைத்த கட்டிடம் கிமு 7000 வருடம் கட்டபட்டது எனவும் கூறுகின்றனர்.
கிமு 9600 ஆண்டளவில் மனிதன் கற்காலத்தில் இருந்தான்.சக்கரம், இரும்பு, செம்பு என எந்த உலோகமும் கண்டுபிடிக்கபடவில்லை. விவசாயம் உருவாகவில்லை. மிருகங்களை மனிதன் வளர்க்க துவங்கவில்லை. அன்று சில லட்சம் மனிதர்களே பூமியில் இருந்தனர்.
இந்த காலகட்டத்தில் கடவுள் வழிபாடும் அதற்கு இத்தனை விஸ்தீரணமான கோயிலும் உருவாக்கபட்டது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.இந்த கோயிலை அந்த காலத்தில் இருந்த டெக்னாலஜியை வைத்து உருவாக்குவது இன்று ஒரு போயிங் 747 விமானத்தை காயலான் கடை சாமானங்களை வைத்து நம் வீட்டில் உருவாக்குவதுக்கு சமமாம்.
அந்த காலத்தில் இருந்த மனிதர்களுக்கு இந்த கோயிலை உருவாக்குவதில் வேற்றுகிரகவாசிகள் பங்கெடுத்திருக்க வேண்டும் என கருதும் ஆய்வாளர்கள் கோயிலில் விசித்திரமான மனித சிலைகள், ஸ்டோன் ஹெஞ்ச், ஊர்வன(Reptilian) வேற்று கிரகவாசிகளின் சிலைகள் உள்ளதால் வேற்றுகிரகத்தில் இருந்தது வந்தவர்களின் உதவியால் தான் கட்டியிருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்...
Subscribe to:
Posts (Atom)