எந்திரங்கள் அக்காலத்தில் மிக அதிக அளவில் செய்யபட்டுள்ளன அவை மனிதர்கள் இயக்கும் எந்திரம் மற்றும் தானியங்கி எந்திரம் என பலவகையாக உருவாக்கியுள்ளனர்.
அரசர்கள் நீராடுவதற்க்கு அரண்மனை பின்பகுதியில் நீர்பொறியமைந்த சோலை அமைந்திருந்தது.அரசன் அங்கு சென்று நின்றவுடன் நீர் தானாக குழாயில் நிறைந்து அவன் மேல் விழும் அவன் சென்றவுடன் நீர் நிறைவது தானாக நின்றுவிடும். இப்போதை AUTOMATIC SHOWER போல இதை இலக்கியத்தில் இலவந்திகை பொறி என அழைக்கிறார்கள்..
கீழே சற்று ஆதாரங்களை காண்போம்...
“ இலவந் திகையின் எயிற்புறம் போகி ”
சிலப்பதிகாரம் புகார்காண்டம் 10:31 ல் இலவந்திகை இருந்ததாக கூறுகிறார் புலவர்.
நிறைகுறின் நிறைத்துப் போக்குறின் போக்கும்
பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை.
என்று கொங்குவேளிர் என்ற புலவர் தனது பெருங்காதை என்ற நூலில் 1:40;311-2 ஆகிய பாடல் வரிகளில்..
(நிறை)ஆள் இருந்தால் நிறைந்து என்றும் போக்குறின் அதாவது சென்றால் போக்கும் பொறி அமைந்த இலவந்திகை என்று குறிப்பிடுகிறார்.
கோட்டைக்கு பாதுகாப்பாக எதிரிகள் யாரும் நுழையாமல் இருக்க எந்திரங்களால் ஆன வாயில் அமைப்புகள் அமைக்கபட்டிருந்தன
மேலும் அவை ஆள் இல்லாமல் இருந்தன. குறிப்பிட்ட தூரத்தில் ஆட்கள் வரும் போது சந்திரனின் ஒளி பட்டு அவர்களுடைய நிழல் தரையில் பதித்து இருக்கும் குறிபிட்ட ஆடியில்விழும் போது அது தானாக அம்புகளை விடுவித்து கொள்ளுமாறு பொறி அமைத்தனர்.
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
- ( பதிற்றுப்பத்து, 53:7)
திங்களும் நுழையா எந்திரப் படுபுழை
- (புறநானூறு 177: 5)
நெடுமதில் நிரைஞாயில்
அம்புஉமிழ் அயில்அருப்பம்
- (மதுரைக்காஞ்சி : 66,67)
நெடிய சுவர்களில் குருவி தலையை போன்ற தனிதனி பகுதிகள் அமைத்து அங்கிருந்து அம்பு,வேல் வீசும் அரண்கள் செய்யபட்டன அதிலுள்ள ஆட்கள் மற்றவர் கண்ணுக்கு தெரியமாட்டார்.
சங்க காலத்தில் கரும்பை பிழிவதற்கு எந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டன. அவை எப்போதும் ஆலைகளில் உபயோகத்தில் இருந்தன. அவ்வாறு கரும்பு ரசம் பிரித்தெடுக்கும் போது எந்திரங்கள் யானை பிளிறுவது போல் சப்தம் வரும் என்பதை கீழ்காணும் நூல்கள் மூலம் அறியலாம்.
கனஞ்சால் வேழங் கதழ் வுற்றாஅங்கு
எந்திரம் சிலைக்கும்
- (பெரும்பாணாற்றுபடை, 259,260)
கரும்பின் எந்திரம் சிலைப்பி னயல
- (புறநானூறு – 322:7)
கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
- (ஐங்குறுநூறூ- 55:4)
இவ்வாறு பல இடங்களில் எந்திரம் அல்லது தானியங்கி எந்திரம் அல்லது பொறிவினை அல்லது பொறிபடை அமைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். எந்திரம் என்பது எப்போதோ கண்டுபிடித்துவிட்டனர்.
இதில் பொறிபடையில் நிறைய பொறிகள் உள்ளன. பதிவின் நீளம் கருதி சிந்தாமணியில் பல பொறிகளும் சிலபதிகாரத்தில் பலபொறிகளும் கூறியுள்ளதை நான் இங்கு கூறவில்லை. மேலும் சிந்தாமணியில் யவனர் அமைத்த பொறி பற்றி கூறுவார் ஆனால் சிலப்பதிகாரம் அதற்கு முன்பே உள்ளது கவனிக்கதக்கது.
அவை சிலபதிகாரம் அடைகலகாதை 207 to 216 மற்றும் சீவக சிந்தாமணி 1ல் 101 முதல் 104 வரை அவற்றின் பொறி பெயரை காணவும்.
எந்திரம் மற்றும் தானியங்கி எந்திரம் அமைப்பதில், நாமே முன்னோர்கள் என்பதை இனி உறக்க சொல்லுவோம்.
பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு கூறும் பொறிகளை கீழே உள்ள திரைபடத்தில் காணலாம்.
திங்களும் நுழையா எந்திரப் படுபுழை..
சந்திர நிழலை வைத்து செய்வது அல்லது தீபந்த நிழலை வைத்து செய்வது கீழே லிங்க்...
https://youtu.be/w_HmOsZbJ7c
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.