28/08/2017
வீரமங்கை செங்கொடியின் நினைவு நாள்...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரின் உயிர் காக்க (மரண தண்டனைக்கு எதிராக) 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட வீரத்தமிழிச்சி செங்கொடியின் 6ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்...
அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை...
அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ததன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் இன்று அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 200 பேர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சியின் பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பரிந்துரைத்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என கட்சி விதி இருப்பதால், அதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது...
தமிழன் அன்றும் இன்றும்...
குளிரால் நடுங்கிய மயிலுக்கு இரக்கக்
குணத்துடன் போர்வை வழங்கிய பேகன் ஒரு தமிழன்..
முல்லைக் கொடிப் படர பயணித்தத் தேரை
மனம் உவந்து வழங்கி பாரி ஒரு தமிழன்..
ஆராய்ச்சி மணி அடித்த பசுவுக்கு
அன்புடன் நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஒரு தமிழன்..
சந்தோசம் இழந்து தவித்த புறாவிற்கு
சதையை அறுத்துத் தந்த சிபிசக்கரவர்த்தி ஒரு தமிழன்..
தமிழ் தமிழர் என்ற சொற்களின்றியே உலகப்பொதுமறையாக்கி
தமிழுக்குப் பெருமை சேர்த்த திருவள்ளுவர் ஒரு தமிழன்..
நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் கல்லணை
நிறுவி இன்றும் நிலைத்து நின்ற கரிகாலன் ஒரு தமிழன்..
உலகம் வியக்கும் வண்ணம் சிற்பங்களுடன் மதுரையில்
உன்னத மீனாட்சி கோவில் கட்டிய பாண்டியன் ஒரு தமிழன்..
கோபுரத்தின் நிழல் விழாமல் பெரிய கோவிலைக்
கட்டி எழுப்பிய இராஜராஜ சோழன் ஒரு தமிழன்..
தவறான நீதி கோவலனுக்கு வழங்கியதற்காக
தன் உயிரையே மாய்த்த பாண்டியன் ஒரு தமிழன்..
முரசுக்கட்டிலில் அயர்ந்து உறங்கிய புலவர்க்கு
மன்னன் சாமரம் வீசிக் காற்று வழங்கியது ஒரு தமிழன்..
நடிகைக்குக் கோவில் கட்டி மோசமான வரலாறு படைத்து
நாட்டிற்குத் தலைக்குனிவைத் தந்தவன் ஒரு தமிழன்..
அரிதாரம் பூசும் நடிகரை எல்லாம் கடவுள் என்றும்
அவதாரப் புருசன் அழைப்பவன் என்றும் ஒரு தமிழன்..
நடிகரின் கட்அவுட்டிற்கு பாலபிசேகம் செய்து மகிழும்
ரசிகனும் இன்றைய ஒரு தமிழன்..
திரையரங்கில் பிடித்த நடிகரின் திரைப்படம் பார்க்கும்போது
திரையரங்கிலேயே சூடம் ஏற்றிக் காட்டுபவனும் ஒரு தமிழன்..
பிடித்த நடிகரின் திரைப்படம் வெளிவராததற்காக
பிடித்த உயிரையே மாய்த்தவன் இன்றைய ஒரு தமிழன்..
தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சியில் நேரத்தை
தொலைத்துவிட்டு வாடி நிற்பவனும் ஒரு தமிழன்..
மதுக்கடையில் மதுக் குடித்து மயங்கி
மண்ணில் விழுந்தக் கிடப்பவனும் ஒரு தமிழன்..
ஆங்கிலவழிக் கல்வியில் பயின்று முடித்துவிட்டு
அன்னைத் தமிழில் பேச வராது என்பவனும் ஒரு தமிழன்..
தந்தையின் பெயரான முன்எழுத்தை ஆங்கிலத்திலும்
தன் பெயரைத் தமிழிலும் எழுதுபவன் ஒரு தமிழன்..
பேசுகின்ற பேச்சில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து
பைந்தமிழைக் கொலை செய்து வருபவனும் ஒரு தமிழன்..
தாய்மொழி தமிழில் பேசத் தெரிந்தும் அரைகுறையாக
தமிழர்களிடையே ஆங்கிலத்தில் பேசுபவனும் ஒரு தமிழன்..
தன்னம்பிக்கையின்றி மூட நம்பிக்கையான சோதிடத்தை நம்பி
தன்மானம் இழந்து ஏமாந்து வருபவனும் ஒரு தமிழன்..
பித்தலாட்டக்காரன் என்று தெரிந்தே சாமியாரிடம்
பணத்தைப் பறி கொடுப்பவனும் ஒரு தமிழன்..
வந்தவர்களை எல்லாம் வலமாக வாழ் வைத்துவிட்டு
வாழ்க்கையைத் தேடி புலம்பெயர்பவனும் ஒரு தமிழன்..
பசித்திருக்கும் தாய் தந்தை மறந்து கோவிலில்
பணத்தைப் போடுபவனும் ஒரு தமிழன்..
தமிழினத்தை ஈழத்தில் படுகொலைகள் செய்தபோதும்
தமிழகத்தில் வேடிக்கைப் பார்த்தவனும் ஒரு தமிழன்..
தமிழனின் நிலையை அன்றும் இன்றும் பாருங்கள்..
தமிழா உன் நிலையை மாற்று..
தமிழரின் பெருமையை நிலை நிறுத்து...
விக்கிலீக்ஸ் இன்றைக்குச் சொன்ன அதிர்ச்சி தகவல் இது... நமது ஆதார் அட்டை விவரங்கள் அனைத்தையும் அமெரிக்காகைப்பற்றி விட்டது...
இந்திய அரசுக்கு 'கிராஸ் மேட்ச்' என்கிற அமெரிக்க நிறுவனம் தான் ஆதார் அட்டை தொடர்பான பதிவு மற்றும் பாதுகாப்பு மென்பொருளை தயாரித்து கொடுத்தது.
அதே நிறுவனம் அந்த ஆதார் அட்டை விவரங்களைத் திருடுவதற்கான மென்பொருளையும் அமெரிக்காவுக்கு செய்து கொடுத்துள்ளது.
இதற்காக கோடி கணக்கில் அந்த நிறுவனம் பணம் பெற்றுளளது.
ஆனால் இந்திய அரசு இதை அலட்சியமாக மறுக்கிறது. விக்கி லீக்சின் இந்த தகவல் பொய்யானது. அப்படி யாரும் நம் தகவல்களை திருடி விட முடியாது என்று சொல்கிறது.
வந்திருக்கிற செய்தி உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்து விட்டு, பிறகு பதில் சொல்லும் போக்கு இந்தியாவிடம் இல்லை. மேம்போக்கான அலட்சியமான பதில்களையே இந்தியா தருகிறது.
நாடு என்னாகுமோ என்ற பயம் நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு இல்லை.. ஐந்து வருடம் ஆளப்போறோம். அப்புறம் யாருக்கு என்னானா நமக்கு என்ன என்று நினைக்கிறார்கள்...
கிராம்பு...
கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.
என்ன சத்து?
கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
என்ன பலன்கள்?
கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
சருமப் பிரச்னைகளுக்கு..
கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.
திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.
சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்...
இந்தியாவின் உணவு இறையாண்மை பலியிடப்பட்டது, நைரோபி அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தையில் இந்திய உழவர்களை முற்றிலும் அழிக்கும் திட்டமும் (Doha Development Agenda)...
உலக வர்த்தகக் கழகத்தின் அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை 2015 டிசம்பர் 19 அன்று முடிந்தது. கடைசியில் அதன் ஒட்டுமொத்த பலன் – இந்தியாவின் உணவு இறையாண்மை பலியிடப்பட்டது – இந்தியாவை நம்பிய வளர்முக நாடுகளும், வளர்ச்சி குன்றிய நாடுகளும் நட்டாற்றில் விடப்பட்டன என்றானது.
ஒருநாடு விடாமல் ஒத்த கருத்து இருந்தால் தவிர, ஒப்பந்தம் கிடையாது என்ற உலக வர்த்தகக் கழகத்தின் அடிப்படை விதி நைரோபியில் தகர்க்கப்பட்டுவிட்டது.
காட் ஒப்பந்தத்தின் விளைவாக 1995 ஆம் ஆண்டில்உலக வர்த்தகக் கழகம் (WTO) 162 உறுப்பு நாடுகளுடன் உருவானது. இதன் முதல்கட்ட அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்றபோது அமெரிக்க செவ்விந்தியர் களும், உலகெங்கும் இருந்து திரண்ட செயற்பாட்டாளர்களும் நடத்திய கிளர்ச்சியின் விளைவாக அம்மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
எங்கள் உலகம் விற்பனைக்கு அல்ல… என்ற முழக்கத்தின் கீழ் சியாட்டில் நகரெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தபோது இந்தியாவின் அன்றைய வணிகத்துறை அமைச்சர் முரசொலிமாறன் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளின் கொல்லைப்புற கதவைத் திறந்துகொண்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் 2001 ஆம் ஆண்டில் கத்தார் நாட்டுத் தலைநகர் தோகாவில் அடுத்த அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சியாட்டில் கிளர்ச்சி நினைவிலேயே நின்றதால் தோகா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கொஞ்சம் அடக்கி வாசித்தது.
இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளின் வேளாண்மையும், உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப் படாமல் பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என்ற அடிப்படையில் சில வரம்புகள் உருவாக்கப்பட்டன. “தோகாவின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரல்” (Doha Development Agenda) என இது அழைக்கப்பட்டது. இதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்ட செய்திகளில் ஒப்பந்தம் எட்டப்படும் வரை அடுத்தடுத்து தொடரும் பேச்சுவார்த்தைகள் “தோகா சுற்று பேச்சுவார்த்தை” என்றே அழைக்கப்படும் என்பதும் முடிவானது. இந்த ஒழுங்குக்கு உட்பட்டே அடுத்தடுத்து அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
தோகா சுற்றின் அமைச்சர் நிலைப்பேச்சு வார்த்தைகளில், 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்திய வேளாண்மைக்கு எதிரான நெருக்குதல்களை அமெரிக்க வல்லரசும், ஐரோப்பிய ஒன்றியமும் தீவிரப்படுத்தின. வேளாண்மை இடுபொருட்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மானியங்கள் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்றும், வேளாண் விளைபொருட்களுக்கு வழங்கப்படும் ஆதரவு விலை நிறுத்தப்படவேண்டும் என்றும் அழுத்தம் தரப்பட்டது.
அதே நேரம் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தங்கள் நாட்டு வேளாண்மைக்கு அளித்துவரும் மானியங்கள் அனைத்தையும் 2013ஆம் ஆண்டுக்குள் கைவிடுவதாக இந்நாட்டு அரசுகள் ஏற்றுக்கொண்டன.
இது குறித்து விவாதிக்கும்போது மேற்குலக நாடுகளில் இருக்கும் நில உடைமைக்கும், இந்தியாவில் உள்ள நில உடைமைக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்காவிலும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் சிறிய நிலவுடைமை என்பதே சில நூறு ஏக்கர்கள் ஆகும். அங்கு வேளாண்மை என்பது பெரிய நிறுவனங்களால் நடத்தப்படும் குழும உற்பத்தியாகும். அந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்கள் தொகை அந்நாட்டு மக்கள் தொகையில் அதிகம் போனால் 3 விழுக்காடு தான்.
மாறாக இந்தியாவிலோ, சராசரி நிலவுடைமை என்பது இரண்டரை ஏக்கர் ஆகும். இங்குச் சிறு, குறு உழவர்களே அதிகமானவர்கள் ஆகும். ஒரு துண்டு நிலமும் இல்லா உழவுத் தொழிலாளர்களும் ஏராளம்.
இச்சூழலில் உலக வர்த்தகக் கழகம் வலியுறுத்துவது போல் “தடையற்ற வணிகம்” என்ற பெயரால் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும் உணவு தானியங்கள் தாராளமாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டால், கோடிக்கணக்கான உழவர்கள் தங்கள் உழவுத்தொழிலை விட்டுவிட வேண்டியது தான். அது மட்டுமின்றி இந்தியாவின் உணவு இறையாண்மை தகர்க்கப்பட்டு கையேந்தி நாட்டைப்போல, ஆப்ரிக்கா வாரிய நாடுகள் சிலவற்றைப் போல இந்தியாவும் உணவுக்காக வெளிநாட்டுக் கப்பல்களை எதிர்நோக்கி இருக்கும். தற்சார்பற்ற நாடாக மாறும்.
இதனால்தான் உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தை நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் உழவர் அமைப்புகளும், தற்சார்பின் மீது அக்கறை உள்ள செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டங்களின் அழுத்தத்தில் அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசின் அமைச்சர்கள் செயல்படவேண்டிய நிலைமை ஏற்பட்டு வந்தது.
ஆயினும், பொருளாதார அடியாள்களால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசு அமைச்சர் நிலைப் பேச்சுவார்தைகயில் தாங்கள் எதிர்த்த நிபந்தனை களையே தங்களது சொந்த முடிவு போல செயல்படுத்தி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் உரமானியம், மின்சார மானியம் ஆகியவை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. குறைந்த வட்டிக்கடன்கள் உண்மையான உழவர்களுக்குக் கிடைக்காத வண்ணம் வங்கிக் கொள்கைகள் மாற்றப்பட்டன. நெல், கோதுமை, கரும்பு, பருத்தி ஆகியவற்றிற்கு வழங்கப் படும் அரசின் ஆதார விலைகள் மிகப்பெரும் அளவிற்கு மட்டுப்படுத்தப்படுகின்றன. வேளாண்மை இலாபகரமான தொழிலாக இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக உழவர்கள் தங்கள் நிலங்களை விட்டுவிட்டுத் தாங்கலே வெளியேறும் வண்ணம் பிதுக்கப்படுகிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகள் வேளாண் மானியத்தை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் மேற்குலக நாடுகள் தங்கள் நாடுகளில் வேளாண் மைக்குத் தாராளமாக மானியம் வழங்கி வருகின்றன. உலக வர்த்தகக் கழக சட்ட திட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் புதிய, புதிய பெயர்களை தங்களது வேளாண் மானியங்களுக்குச் சூட்டிவிடுகிறார்கள்.
“பச்சைப்பெட்டி, பழுப்புப்பெட்டி” என்ற பெயர்களில் விளங்கும் இந்த மானியங்கள் உலக வர்த்தகக் கழக நிபந்தனைகளுக்கு உட்படாதவையாகும். வேளாண் நிறுவனங்களுக்கு, வேளாண் விளை பொருட்களின் விற்பனை விலையை ஏற்றாமல், நேரடியாக அரசு மானியம் வழங்கினால் அதற்குப் பெயர் பச்சைப்பெட்டி. (Green Box). அதேபோல், சந்தைச் சமநிலையை பாதுகாக்கும் நோக்கில் ஒருபோகத் திற்கோ, இருபோகத்திற்கோ தரிசுபோட்டால் அவ்வாறு தரிசு போடும் வேளாண் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தரிசு மானியத்திற்குப் பெயர் பழுப்புப் பெட்டி (Amber Box).
இயற்கையோடு சூதாட்டம் நடத்தி விளைவிக்கப்படும் நெல், கரும்பு, பருத்தி, கோதுமை போன்றவற்றுக்கு அரசு மானியம் தரக்கூடாது என இந்தியாவை வலியுறுத்தும் இந்த மேற்குலக நாடுகள், விளை விக்காமல் இருப்பதற்காகத் தரிசு மானியம் அளிக்கும் கொடுமை இன்றும் தொடர்கிறது. மிகை உற்பத்தி நடந்து அதனால் ஏற்றுமதிச் சந்தையில் தங்கள் நாட்டு வேளாண் விளைபொருட்களுக்கு விலை குறைந்து விடக் கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு!
உலக வர்த்தகக் கழக அமைச்சர் நிலை மாநாட்டில் 2013ஆம் ஆண்டிற்குள் கைவிடுவதாக ஒத்துக்கொண்ட மானியங் களில் மேற்கண்ட மானியங்கள் வராது.
ஆனால், கைவிடுவதாக ஒத்துக்கொண்ட பிற மானியங்களையும் இந்நாடுகள் கைவிடுவதில்லை. மாறாக அதிகரித்தன. எடுத்துக்காட்டாக அமெரிக்க, ஐக்கிய நாடுகளின் வேளாண் சட்டம் 2014 (U.S farm Bill – 2014) வேளாண் நிறுவனங்களுக்கு அளித்துவந்த பலவகையான நேரடி மானியங்களைப் பலமடங்கு அதிகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதுபோலவே நிகழ்ந்தன. பிரிட்டனின் எலிசபெத் மகாராணி குடும்பம்கூட வேளாண்மைக்குப் பல்லாயிரம் கோடி பவுன்ட் மானியம் பெறுகின்றது.
இந்த நிலையின்தான் இதற்கு முன் இந்தோ னேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற அமைச்சர் நிலைப்பேச்சு வார்தையில் தொடங்கி மிகக்கடுமையான அழுத்தங்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டன.
இடுபொருள் மானியம், மின்சார மானியம் ஆகியவை 2017 ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என்றும், வேளாண் விளைபொருட்களுக்கு அரசின் ஆதார விலை வழங்க அறிவிக்கப்படக்கூடாது என்றும் அழுத்தம் தரப்பட்டது.
மக்களுக்கு விலையின்றியே, மலிவு விலையிலோ உணவுப் பொருள்கள் வழங்கும் உணவு பாதுகாப்பு திட்டங்கள் அறவே கைவிடப்பட வேண்டும் என்றும், அரசு உணவு தானியங்களை சேமிப்பில் வைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள இந்திய உணவுக்கழகம் (FCI) கலைக்கப்பட வேண்டும் என்றும் கடுமையான அழுத்தங்கள் தரப்படுகின்றன.
பேச்சுவார்த்தையில் இந்திய அரசுப் பேராளர்கள் இதனை எதிர்த்தாலும், நடைமுறையில் இந்த நிபந்தனைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே வேளாண்மைக்கு விலையில்லா மின்சாரம் வழங்குவது அந்தந்த மாநில அரசின் பொறுப்பு என கைகழுவி விடப்பட்டுள்ளது. உரமானியம், பூச்சிக்கொல்லி மானியம் ஆகியவை பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன. நெல், கோதுமை தவிர பிற விளை பொருட்களுக்கு அரசு ஆதாரவிளை தரக் கூடாது என்பதைக் கொள்கை அளவில் மோடி அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. செயல்படுத்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக இந்திய உணவுக் கழகத்தை கலைத்து கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உணவு தானிய கிடங்குகள் வைத்துக்கொள்வதற்கு இசைவு வழங்கப்பட்டுவிட்டது.
இது போதாதென்றும் இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு திட்டம் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்றும், பாசனத் தண்ணீருக்கு விலை வைக்க வேண்டும் என்றும் அதையும் உடனே செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அழுத்தம் தருகின்றன.
உலக வர்த்தகக் கழகப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஓர் கூட்டணியாக நின்றுகொண்டு தங்கள் தலைமையில் பெரும்பாலான வளர்முக நாடுகளையும், வளர்ச்சி குன்றிய நாடுகளையும் அணி சேர்த்துக்கொண்டு அமெரிக்க வல்லரசுக்கு எதிராக முணுமுணுப்பதைக் கூட வல்லரசுகள் விரும்பவில்லை.
உலக வர்த்தகக் கழகப் பேச்சு வார்த்தைகளை சுற்றி வளைக்கும் வகையில் பல்வேறு துறைசார்ந்த மண்டல ஒப்பந்தங்களை உருவாக்கி வருகின்றன. அண்மையில் அமெரிக்கா ஏற்படுத்திய “பசிபிக் தழுவிய கூட்டாண்மை” (Trans Pacific Partnership- TPP) என்ற ஒப்பந்தம் உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் அமைந்தது.
இந்தப் பின்னணியில் தான் ஆப்பிரிக்க நாடான கென்யா தலைநகர் நைரோபியில் 2015 டிசம்பர் 15 தொடங்கி 18 முடிய உலக வர்த்தகக் கழகத்தின் அமைச்சர் நிலைப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதிவரை முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்ததால் ஒருநாள் கூடுதலாக அமர்ந்து டிசம்பர் 19 அன்று கூட்டறிக்கையோடு முடிக்கப்பட்டது.
உலக வர்த்தகக் கழக சட்ட திட்டங்களின்படி எல்லா உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டாலே தவிர ஒப்பந்தம் கூட்டறிக்கையாக வெளியிட முடியாது. ஆனால், நெய்ரோபி பேச்சுவார்த்தையில் இந்த அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுவிட்டது.
இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட வணிக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியில் வந்து தாங்கள் கருத்து மாறுபடுவதாகச் செய்தியாளர்களிடம் சொன்னாலும் இந்தியாவின் பெயரையும் உள்ளடக்கி டிசம்பர் 19 அன்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு உண்மையில் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால் அந்நாட்டின் பெயரையும் சேர்த்து ஓர் கூட்டறிக்கை வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லை. உள்ளே ஒத்துக்கொண்டுவிட்டு வெளியில் தாங்கள் ஏற்கவில்லை என மோடி அமைச்சரவையின் நிர்மலா சீத்தாராமன் நாடகம் ஆடுகிறார்.
உலக வர்த்தகக் கழக சட்டதிட்டங்களுக்கு உட்படாத நேரடி மானியங்களை 2020க்குள் கை விடுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஏற்கெனவே நாம் குறிப்பிட்ட பச்சைபெட்டி, பழுப்பு பெட்டி மானியங்களை இந்த நிபந்தனை தொடவே தொடாது. அதே நேரம் உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் ஏற்றுமதி மானி யத்தைத்தான் கைவிடுவதாக இந்நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்களுக்கு (Processed Products) ஏற்றுமதி மானியம் உள்ளிட்டு எல்லா மானியங்களையும் தொடரலாம் எனக் கூறப்பட்டுவிட்டது.
அரிசியாக விற்றால் சிலவகை மானியங்கள் அளிக்கக்கூடாது அதற்குப் பதிலாக மாவாக விற்றால் எல்லா மானியங்களும் அளிக்கலாம். கொட்டை நீக்காமல் பஞ்சுக்கு சிலவகை மானியங்கள் நிறுத்தப் படலாம். அதே நேரம் கொட்டை நீக்கி பஞ்சுக்கோ, நூலுக்கோ எல்லாவகை மானியமும் தொடரலாம். இதேபோல் சக்கரைக்கும் பிறவகை பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கும் எல்லா மானியங்களும் தொடரும்.
பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்கள் சந்தையில் தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் கோலோச்சுகின்னறன. நைரோபி ஒப்பந்தம் அதில் ஒரு சிறு துளியைக்கூடக் கட்டுப்படுத்தாது.
இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் 2023 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வகை வேளாண் மானியங்களையும் நிறுத்திவிடவேண்டும் என நைரோபி ஒப்பந்தம் கூறுகிறது.
உணவு பாதுகாப்புச் சட்டத்தை அறவே கைவிடுவது, உணவு தானியங்களுக்கு ஆதார விலை அளிப்பது, இந்திய உணவுக் கழகத்தை கலைத்துவிடுவது போன்றவற்றிற்கு நிர்மலா சீத்தாராமன் அடுத்த பேச்சுவார்த்தைவரை வாய்தா வாங்கி வந்திருக்கிறார்.
தன்னுடைய தலைமையில் ஒருமுனை உலகத்தைக் கட்டி எழுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தபோது அமெரிக்க வல்லரசு உலக வர்த்தகக் கழகத்திற்கு வெளியில் உறுப்பு நாடுகள் எந்தவகை மண்டல ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி வந்தது.
ஆனால் சில ஆண்டுகளிலேயே பலமுனை உலகம் உருவாகி வருவதை உணர்ந்து கொண்ட அமெரிக்க வல்லரசு உலக வர்த்தகக் கழகத்தை சுற்றி வளைக்கும் வகையில் மண்டல ஒப்பந்தங்களில் இறங்கியது.
இவ்வாறான மண்டல ஒப்பந்தங்கள் உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தின் கூறாக இனி மாற்றப்படும் என நைரோபிய ஒப்பந்தம் கூறுகிறது. வளர்முக நாடுகள் ஓர் அணியாகத் திரண்டுநின்று முணுமுணுப்பதைக் கூட தகர்க்கும் சூழ்ச்சி இதில் உள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற பாலி பேச்சுவார்த்தையில் தோகா நிகழ்ச்சி நிரல் முடியும் வரையில் புதிய பிரச்சனைகள் பற்றி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படாது என ஏற்கப்பட்டது. ஆனால், நெய்ரோபிய ஒப்பந்தத்தில் அடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் புதிய சிக்கல்கள் குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்க லாம் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தோகா சுற்று என்ற வகையில் வளர்முக நாடுகளுக்குப் பாதுகாப்பாக இருந்த மெல்லிய அரணும் கிழித் தெரியப்பட்டு விட்டது.
வெள்ளம்போல் இந்தியாவிற்குள் இறக்குமதியாகும் உணவு தானியங்களை தடுத்து நிறுத்தி உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாப்பதற்காக 2001 ஆம் ஆண்டில் சிறப்புப் பாதுகாப்பு பொறியமைவு (Special Safeguard Mechanism – SSM) ஏற்படுத்தப்பட்டது. இதன்படி அமெரிக்கா உள்ளிட்டு பிறநாடுகளிடமிருந்தோ நெல்லோ, கோதுமையோ, சக்கரையோ வேறு பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துவிடாத அளவிற்கு சுங்கவரியை அல்லது இறக்குமதி வரியைத் தற்காலிகமாக உயர்த்திக் கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை அடுத்த பேச்சுவார்த்தைக்குள் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடிப்படைகள் நெய்ரோபி ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப் பட்டுவிட்டன.
உழவர்களிடமிருந்து நெல், கோதுமையை அரசு கொள்முதல் செய்வதும், இத்தானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுவதும் விரைவில் கைவிடப்பட இருக்கின்றன. வேளாண் மையை வாழ்வாதாரமாகக்கொண்ட பலகோடி கிராம மக்களுக்குப் பெரும் துயரை ஏற்படுத்துவதற்கு மோடி அரசு நேரம் குறித்துவிட்டது.
அதன் மறுபக்கமாக உணவு மானியம் அளித்து நியாயவிலையில் மக்களுக்கு அடிப்படை உணவு தானியங்கள் அளிக்கும் பொது வழங்கல் முறையும் (ரேசன் கடைகள்) கைவிடப்படுவதற்கும் நைரோபியில் நிகழ்ச்சி நிரல் தயாராகிவிட்டது. இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்தக் கொடுஞ்செயலுக்கு விரைவில் நேரம் குறிப்பதாக ஏற்றுக்கொண்டுதான் தில்லி திரும்பியிருக்கிறார்.
மொத்தத்தில் இந்திய ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்படாத இந்த நைரோபி அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தையில் இந்திய உழவர்களை முற்றிலும் அழிக்கும் திட்டமும், எளிய மக்களுக்கான உணவுப் பாதுகாப்பு திட்டமும் விரைவில் கைவிடப் படுவதற்கு முடிவுகள் எட்டப்பட்டுவிட்டன.
உழவர் அமைப்புகளும், அக்கறை உள்ள அறிவாளர்களும் முன்முயற்சி மேற்கொண்டு ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி மோடி அரசின் இந்தக் கொலை பாதகத் திட்டத்தை முறியடிப்பதற்கு விரைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்...
ஏலியன் உண்மையா?
இப்போது சில வருடங்களாக ஏலியன்கள் தென்படுவதாக இணையத்தில் செய்திகள் வெளிவருவது அதிகமாகி வருகிறது..
ஏலியன் என்ற எந்த ஒரு வெளிஉலக உயிரினமும் இல்லை என்பது என்னுடைய கருத்து...
இந்த உலகை ஆளும் மன்னர் குடும்பம் 6000 வருடங்களுக்கு முன்பு எழுதிய உலகாயத்தம் என்ற தத்துவத்தில் உலகத்தை எப்படி ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என்ற பல வழிகளை வகுத்த போது.
கடைசியில் One world Order ஐ நடைமுறை படுத்த பயண்படுத்த வகுத்த யுக்தி தான் வேற்று கிரகவாசிகள்..
இந்த உலக மக்களை பண பரிவர்த்தனையில் இருந்து நகர்த்தி மின்னணு பரிவர்த்தனைக்கு முழுமையாக நகர்த்திய பிறகு.
இது வரை உலகத்தின் கண்களுக்கு காட்டாத பல தொழில்நுட்பங்களை ஒரே நேரத்தில் வெளியே விட்டு இந்த மொத்த இணையத்தையும் கட்டுப்படுத்தி நவீன ஆயுதங்களையும் பயண்படுத்தி இந்த உலகத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.
அப்போது மின்னனு பணபரிவர்த்தனை முழுமையாக ஒழிக்கப்பட்டு உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சொந்தமாக எதுவுமே இல்லாத சூழ்நிலை உருவாக்கப்படும்.
அந்த உலக பொது எதிரியாக ஏலியன்களை காட்டும் போது எந்த விதமான இடைஞ்சலும் செய்யாமல் உலகமக்கள் அனைவரும் ஒரு தலைமையின் கீழ் வருவார்கள்.
அப்போது தான் அந்த மன்னர் குடும்பம் வெளியே வந்து ஏலியன்களை அழிப்பது போல் அழித்துவிட்டு உலகத்தை காத்த ரட்சகர் என்பது போல தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் இதை தான் பைபிளில் கடவுள் வருகை என்று குறிப்பிடுகிறார்கள்.
இது 6000 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட திட்டம் என்பது தான் அதிர்ச்சியே...
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை...
மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது" என்றார்.
தஞ்சை "பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்" - இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து...
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?
வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.
வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.
இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், "சாப்பிட்டது போதும்" என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.
வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.
வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.
நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.
ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.
வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?
தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.
எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.
கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.
ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையே சாப்பிட வேண்டும்....
விக்கல் வருவது ஏன்?
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.
சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.
அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.
என்ன காரணம்?
வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.
இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.
நிறுத்த என்ன செய்வது?
மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.
வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.
அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது...
குரு என்பது தமிழ்ச் சொல்லேயன்றி வடமொழிச் சொல் அல்ல...
குரு என்ற சொல் சமக்கிருதம் தமிழிலிருந்து இரவல் வாங்கிய சொல்லேயன்றி தமிழ் வடமொழியிலிருந்து இரவல் வாங்கியதல்ல. குரு என்ற சொல்லுக்கான வேர்ச்சொல் தமிழிலேயே உள்ளது.
“குருவுங் கெழுவும் நிறனா கும்மே” என்கிறார் தொல்காப்பியர்
குரு > குருத்தல் > தோன்றுதல்
குருப்பது > குருத்து (முளைப்பதற்குரிய ஆரம்பம் - கரு)
குருத்து > குருத்தோலை = கருவோலை = இளம் ஓலை, ஆரம்ப ஓலை
(காவோலை = முதிர்ந்த ஓலை - பழமொழி: ‘காவோலை விழக் குருத்தோலை சிரித்ததாம்.’ )
குரு = வெப்பம், வெப்பத்தால் தோன்றும் கொப்புளம்
குரு= ஒளி, ஒளிவடிவான (அறிவு மிகுந்த, இருளை(அறியாமையை)ப் போக்கும் ஆசிரியன்.
குரு = சிவப்பு (செழுமை) > குருதி > உடலில் ஓடுகின்ற செந்நீர் – உயிரின் அடிப்படை.
குருதிக் காந்தள், குருதிவாரம் என்னும் சொற்களை நோக்குக.
“சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே” (குறுந்தொகை, 1: 3-4)
The hill of (the red coloured god) Murukan is full of the red flower bunches of Kaantha'l (Gloriosa superba)
குருந்த மரம் = எப்போதும் செழிப்பாக இருக்கக் கூடிய மரம். குருந்த மர நிழலில் குருக்கள் அல்லது குரவர்களிடம் கல்வி கற்பது தமிழர்களின் மரபு.
பழந்தமிழர்கள் குரு என்ற சொல்லை அரசன், தலைவன், தாய் தந்தையர், ஆசிரியர், மூத்தவன் (தமையன்) என்போரைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் உண்டு.
1. புறநானூறு பாடல் 16 - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகற்
கரும்பல்லது காடறியாப்
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே
முருகற் சீற்றத்து உருகெழு குருசில் – முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா! இப்பாடலில் ‘குருசில்’ என்ற சொல் தலைவன், அதாவது அரசன் என்ற பொருளில் இடம் பெறுகிறது
இப்பாட்டில் பாண்டரங் கண்ணனார் சோழன் பெருநற்கிள்ளியை நோக்கி, ‘முருகன் போலும் குருசில் நீ, பகைவர் நாட்டுள் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது ஒளி செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது. இவ்வாறு தீயிட்டுக் கொழுத்திய அந்நாடு ‘கரும்பல்லது நாடறியாப் பெருந்தண் பணை’ பொருந்திய நன்னாடு. ஆனால் நீ எரியூட்டிச் செய்த போரில் உன் களிறுகளும் உன் கருத்துக்கு ஒப்பப் போர் மலைந்தன’ என்று கூறுகின்றார்.
2. பாடியவர்: கோவூர் கிழார்.. பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான்ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.
கொண்டு கூட்டு: பாண, நீ செலின், நெடுந்தகை, பொருநன் குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ எனக் கூட்டுக.
வரைப்பு = எல்லை; ஓர்த்தல் = கேட்டல்.
குருசில் = அரசன்
'வேல் கெழு குருசில்' - புறநானூறு
(வேலையுடைய தலைவா)
குரு > குரு+ அவர் > குரவர்
3. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குரவன் என்றால் ஆசிரியர் என்கிறார்.
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளிஇறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் 185
சிலப்பதிகாரம் - நாடுகாண் காதை
இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்.
4. அடியார்க்கு நல்லார் தனது உரையில் ’குரவர்’ என்றால் அரசன், ஆசிரியர், தாய் தந்தையும், தனக்கு மூத்தோனும் என்கிறார்;
அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே
யாவருங் கண்ட நெறி.
(இ-ள்.) அரசன் - அரசனும், உவாத்தியான் - உவாத்தியும், தாய் தந்தை - தாயும் தந்தையும், தம்முன் - தனக்கு மூத்தோனும், இவர் - என இவர்கள், நிகர் இல் குரவர் - தமக்கு நிகரில்லாக் குரவராவார், இவரை - இவர்களை, தேவரைப் போலத் தொழுது எழுக - தேவரைப்போலத் தொழுது எழுக, என்பது - என்று சொல்லப்படுவது, யாவரும் - எல்லாரும், கண்ட - வரையறுத்துக் கூறிய, நெறி - வழி.
(ப. பொ-ரை.) அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவர்.
5. ‘குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ’ - (புறஞ்சேரியிறுத்த காதை) என்கிறது சிலப்பதிகாரம்.
ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது 90
கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய
குரவனும் நோயும் நிறமும் பாரமும் அரசனும் குரு எனலாகும் - (பிங்கல நிகண்டு, 10: 370)
Teacher, disease (of the pox or blister type), colour, heaviness and king are termed as Kuru...
இதயம் - சமஸ்கிருதம் இரவல் வாங்கிய தமிழ்ச் சொல்...
சில சமஸ்கிருதவாதிகள் இதயம் என்ற முக்கியமான அங்கத்துக்கே தமிழில் சொல் கிடையாது. ஹிர்தயம் என்ற சமக்கிருதச் சொல்லைத் தான் தமிழ் இரவல் வாங்கியுள்ளது என்கிறார்கள்.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
(திருமந்திரம் : யாக்கை நிலையாமை : பாடல்148).
இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டு விட்டு எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு, இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு அப்படியே போய்ட்டாரு" என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது.
இதில் இடப்பக்கமே இறைநொந்தது என்ற சொற்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான். இறைவனே உயிர்களின் இயக்கம். அந்த இயக்கம் நடைபெறுவது இறையத்தில். அந்த இறையம் நின்றால் அதாவது இறைவன் வெளியேறினால் அது வெறும் உடலாகி விடுகிறது.
இறைவன் எங்கு குடியிருக்கிறான் என்றால் எல்லோரும் நெஞ்சில் குடியிருக்கிறான் என்று தான் சொல்வார்கள்.
இன்னொரு பொருளும் இதற்கு ஏதுவாகவே இருக்கிறது. இறைத்தல் என்றால் நீரை அள்ளி அல்லது முகந்து இறைப்பது/வீசுவது.
இறை என்ற கருவி செய்யும் வேலையும் அதே. குருதியை இழுத்து/அள்ளி பல இடங்களுக்கும் தள்ளி/வீசி விடுவதே அதன் தொழில்.
ஆகவே, இறை யோடு, அம் விகுதி சேர்ந்து இறையம் ஆகிறது.
இறை + அம் = இறையம் > இதயம்
இறை என்றால் முக்கியமான, உயர்ந்த என்ற பொருள்களும் உண்டு.
உடலுறுப்புகளில் இறை என்பது ஒரு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த உறுப்பு.
ஆகவே திருமூலர் சொல்லே மிகச் சரியாக இருக்கிறது. இதயம் என்பது நமது சொல்.
இதன் மருவலை நீக்கி இறையம் என்று புழங்க வேண்டும்.
வடமொழிக்கு தமிழ் தந்த கொடைகளில் இதுவும் ஒன்று...
சமஸ்கிருதம் தமிழிலிருந்து எவ்வளவோ சொற்களை இரவல் வாங்கியுள்ளது, ஆனால் அதை மறுப்பவர்கள் எவருமே எப்படி அந்தச் சொற்கள் சமஸ்கிருதத்தில் உருவாகின என்பதைக் காட்டும் சமஸ்கிருத வேர்ச்சொற்களைக் காட்டுவதேயில்லை.
தமிழ் பேசும் உலகில் தமிழைத் தாழ்த்தி, சமஸ்கிருதத்தை உயர்த்தி அதைப்பற்றிப் பீற்றிக் கொள்பவர்களில் பெரும்பாலானோர் (எல்லோரும் என்று கூடக் கூறலாம்) பார்ப்பனர்கள் தான் என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்த விடயமே.
சும்மா பரம்பரை பரம்பரையாக வயிற்றுப் பிழைப்புக்காக, ஒரு சில மந்திரங்களை அவற்றின் பொருள் தெரியாமலே, பாடமாக்கி காலத்தையோட்டிய காரணத்துக்காக, சமக்கிருதத்துக்கும் 'அவாளுக்கும்' ஏதோ ‘Special’ தொடர்பு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் வேடிக்கை.
அதிலும் வேடிக்கை என்னவென்றால் முழு உழுந்துக்கு எண்ணெய் தடவின மாதிரி கரு கருவென்றிருக்கிற தமிழ்நாட்டுச் சூத்திர திராவிடப் பார்ப்பனர்கள் கூட ஏதோ இப்ப தான் ஈரானிலிருந்து ஹைபர் கணவாய்க்கூடாக வந்த ஒறிஜினல் ஆரியன் மாதிரி சமக்கிருதத்தின் மீது அவ்வளவு பற்றும், பாசமும் காட்டுவது தான்.
சமக்கிருதத்தின் மீது இவ்வளவு பற்றுக் கொண்டுள்ள இவர்களுக்கு பரம்பரை, பரம்பரையாக இவர்களுக்குச் சோறு போட்ட தமிழின் மீது பற்றில்லாமல் போனது ஏனென்று தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்கு அவர்களின் மேட்டிமை நினைப்பும் காரணமாகும், ஏனென்றால் தமிழை விட சமஸ்கிருதம் உயர்ந்தது என்று பீற்றிக் கொண்டால் அல்லது ‘நிரூபித்தால்’ அல்லது அப்படி வாதாடினால், தமிழை இழிவுபடுத்தினால், தமிழை மட்டுமல்ல தமிழர்களையும் அடக்கிவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களின் நினைப்பை பெரும்பாலான தமிழர்கள் அதிலும் சைவத் தமிழர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
அதிலும் சிலர் “சமஸ்கிரிதம் என்னும் மொழியில் எல்லா விதமான நூல்களும் உண்டு” என்றும் பீற்றிக் கொள்கிறார்.
இக்காலத்தில் என்ன காரணத்தால் ஆங்கிலத்தில் எல்லா நூல்களும் இருக்கின்றனவோ அதே காரணத்தால் தான் சமக்கிருத்திலும் எல்லா நூல்களும் இருக்கின்றனவே தவிர சமக்கிருதம் அறிந்தவர்கள் (பேச்ச ுமொழியல்ல) அல்லது இக்காலத் தமிழ்ப் பார்ப்பனர்களின் முன்னோர்கள் எல்லோருமே அறிஞர்கள் என்று கருத்தல்ல.
அக்காலத்தில் ஐரோப்பாவில் எவ்வாறு சட்டம், மருத்துவம், விஞ்ஞானம், தெய்வீகவியல், கல்வெட்டுகள் போன்ற அறிவியல் சம்பந்தமான எல்லா விடயங்களுக்கும் லத்தீன் மொழி, அறிஞர்களால் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பயன்படுத்தப் பட்டதோ. அதே காரணத்துக்காகத் தான் சமஸ்கிருதமும் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமன்றி, தமிழரசர்கள் படையெடுத்த நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது.
இன்று அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, சீன,பன்னாட்டு விஞ்ஞானிகளும் கூட தமது ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் தான் செய்கிறார்கள். அதைக் காரணம் காட்டி இன்னும் ஆயிரம் வருடங்களின் பின்னால் ஒரு அரைவேக்காடு, சீன மொழியை விட ஆங்கிலம் உயர்ந்தது ஏனென்றால் ஆங்கில மொழியில் எல்லா நூல்களும் உண்டென்றால், அது எவ்வளவு முட்டாள் தனமானதோ அது போன்றது தான் சமஸ்கிருதவாதிகளின் “சமஸ்கிருதத்தில் எல்லா விதமான நூல்களும் உண்டு" என்ற வாதமும்.
உண்மையில் சமஸ்கிருதத்தில் உள்ள நூல்களை இயற்றியவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல. வால்மீகியோ அல்லது வியாசர் கூட பிராமணரல்ல.
சமக்கிருத்திலுள்ள பல நூல்கள் பிராகிருதம், தமிழ், மகதி போன்ற இந்தியாவின் பழமையான மொழிகளிலிருந்தும், கல்வியிலும், ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கிய பெளத்தர்களிடமிருந்தும் இரவல் வாங்கியும், திருடியும் மொழி பெயர்க்கப்பட்டவை என்கிறது Plagiarism by Sanskrit Authors என்ற கட்டுரை...
எகிப்த்தை ஆண்ட தமிழன்...
எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டார்...
அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார்.
அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.
இவர் காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வழிப்பட்டார்கள்.
ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.
இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர்.
இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..
இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..
எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும்.. பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்கள்..
உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...
வலிப்பு நோய் என்றால் என்ன? வரக்காரணம் என்ன?
வலிப்பு அல்லது ’காக்கா வலிப்பு’ என கூறப்படும் நோய் மூளையை தாக்கும் ஒரு நோயாகும்.
மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் மூலம் உடலின் பல உறுப்புகளுக்கு வரும் நரம்புகளில் ஏதேனும் சிறிது நேரம் தடங்கள் ஏற்படும் போது ஒருவித இழுப்பு ஏற்படும் இதனையே வலிப்பு என்பார்கள்..
வலிப்பு நோய் வர காரணம்:
மைய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சேதங்கள், பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள் மற்றும் நரம்புமண்டலக் குறைப்பாடு, விபத்தினால் தலையில் ஏற்படும் பாதிப்புகள், மூளையில் ஏற்படும் கட்டிகள், ஆல்கஹால் மற்றும் போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் சிதைவு, மூளைக் காய்ச்சல் ஆகியவற்றால் வலிப்பு வர காரணமாக உள்ளது..
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:
வலிப்பு நோய் உள்ளவர்கள் சாதாரணமாகப் பிறரைப் போலவே வாழ்க்கை நடத்தலாம். இருப்பினும் வாகனங்கள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல், உயரமான இடங்களுக்குத் துணையின்றிச் செல்லுதல், கனரக வாகனங்கள், கேட்டர்பில்லர், பொக்லைன் போன்ற மலை உடைக்கும் மண் அள்ளும் கருவிகளை இயக்குதல், போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது..
வலிப்பு நோயின் அறிகுறிகள்:
உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடல் உதறுவது போன்ற அசைவுகள்.
நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
வலிப்பு நோய் உள்ளவரை பார்க்கும் போது செய்ய வேண்டிய முதலுதவி:
வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவரின் அருகில் கூரான பொருட்கள் ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேசையின் கூரான முனைகள், சுவர் விளிம்புகள் இவற்றின் அருகில் அவர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அமைதியாக அவரை ஓரிடத்தில் அமர வைக்க முயலலாம், ஆனால் கட்டாயப் படுத்துதல் கூடாது.
தரையில் விழ நேரிட்டால் அவரை ஒருக்களித்து இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வலிப்பால் வெளிப்படும் உமிழ்நீர் எச்சில், மூச்சுக் குழலுக்குள் புகுந்து மூச்சுத் திணறலோ மரணமோ ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தலையில் மிருதுவான பொருட்களை வைக்க வேண்டும். இது, தலை வேகமாக தரையோடு முட்டிக் கொள்வதைத் தடுக்கும்.
வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது எனச் சரியாகக் கணக்கிட வேண்டும்.
பொதுவாக 5 நிமிடங்களுக்குள் எல்லா வலிப்புகளும் அடங்கி விடும். அவ்வாறு அடங்காவிட்டாலோ, மீண்டும் மீண்டும் வலிப்பு வந்தாலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
வலிப்பு நோய்க்கு இயற்கை மருத்துவம்:
அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வலிப்பு நோய் குணமாகும்...
வாசுதேவ நல்லூர்ப் போரின் வரலாறு...
தமிழ் மக்கள் உண்மையில் பெருமைப்படக் கூடிய ஒரு வீர காவியமாகும்...
அப்போரில் ஈடுபட்ட தமிழர்களின் வீரத்தை கண்டு வெள்ளைத் தளபதியாகிய காம்பெல்லே வியப்பில் ஆழ்ந்தான்..
28. 5. 1767 ல் அவன் சென்னையிலுள்ள கும்பினி கவர்னருக்கு எழுதிய ஒரு கடிதம்..
இன்றளவும் அந்த கடிதம் எழும்பூர் ரிகார்டு ஆபீசில் உள்ளது...
வாசுதேவ நல்லூர் என்ற புலித்தேவன் கோட்டையை தாக்குமாறு இன்று நம் படைக்கு உத்திரவிட்டேன் . பீரங்கிக் குண்டுகளாகலேயே கோட்டையைத் தகர்க்க முடியவில்லை.
குண்டுப்பட்ட இடங்களில் ஓட்டைகள் மட்டுமே விழுந்தன.
ஓட்டைகளைப் புலித்தேவன் வீரர்கள் பச்சை மண்ணும் பனைநாரும் கொண்டு அப்போதைக்கப்போது அடைத்து விட்டார்கள். விடாது சுட்டுத்தள்ளச் சொன்னேன்.
ஓட்டைகளை தமிழர்கள் தங்கள் உடல்களாலேயே அடைத்து நின்றார்கள்.
சுட்ட இடங்களிலெல்லாம் மண்ணும் நாரும் எப்படிச் சிதறுமோ, அப்படியே புலித்தேவன் வீரர்கள் அஞ்சாமல் தங்கள் பணியைச் செய்வதைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
நாகரிகம் குறைந்தவர்கள் என்று நம்மால் கருதபடுகிற தமிழர்களின் வீரம் நம் ஐரோப்பியர்களின் வீரத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல…
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 12...
ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க விமானம் ஒன்று ஆப்பிரிக்கா பகுதிக்கு சென்று பின் காணாமல் போயிற்று. ஆப்பிரிக்கக் காடுகளில் எங்கோ விபத்தில் சிக்கி இருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் அமெரிக்க உளவு விண்வெளிக்கலங்கள் ஆன மட்டும் முயன்றும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அமெரிக்க உளவுத்துறை (CIA)யின் தலைவராக இருந்த ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னர் தொலைநோக்கு சக்தி படைத்த ஒரு அபூர்வப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன் அபூர்வசக்தி மூலம் விமானம் இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சொன்னார். விண்வெளிக்கலத்தின் காமிராக்களை அந்த இடத்தில் மையப்படுத்தி கூர்ந்து பார்த்த போது அந்த விபத்துக்குள்ளாகி இருந்த விமானத்தைக் கண்டு பிடித்தனர்.
இந்தத் தகவலை ஜிம்மி கார்ட்டர் அட்லாண்டாவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது வெளியிட்டார். ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னரும் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட போது அதை ஒத்துக் கொண்டார். ஜிம்மி கார்ட்டர் வெளிப்படையாகச் சொல்லும் வரை இது போன்ற அதீத மனசக்திகளைப் பற்றி மேல் மட்டத் தலைவர்களோ, அதிகாரிகளோ இது பற்றி வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டியது.
உண்மையில் 1981 முதல் 1995 வரை அமெரிக்க அரசாங்கம் மனோசக்திகளைப் பரிசீலிக்க ஐந்து விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்களை நியமித்தது. அந்த ஐந்து அறிக்கைகளுமே முழுமையாக இல்லா விட்டாலும் பல கேஸ்களில் அசாதாரண நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டன. மனித மனம் மற்ற மனித மனங்களுடனும், ஜடப்பொருள்களுடனும் கூட ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத அந்த விளைவுகளால் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
அதிகமாய் விளம்பரம் செய்யாத, அடக்கி வாசித்த ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கழகத்தை (SRI) அமெரிக்க உளவுத் துறையான CIA மனோசக்தி ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் எட் தாம்ஸன் என்பவர் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் SRIயின் சில ஆராய்ச்சிகள் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஞான திருஷ்டி எனப்படும் தொலை நோக்குப் பரிசோதனைகள் செய்யத் தான் முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.
SRI யின் ஆரம்பகால (ஜூன் 1972) ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட அபூர்வசக்தி மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் இங்கோ ஸ்வான் என்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வரவழைத்தனர். அவர் வருவதற்கு முன் ஒரு புதிய வகை மேக்னட்டோமீட்டர் ஒன்றை ஆராய்ச்சிக்கூடத்தின் தரைக்கும் கீழே உள்ள ரகசிய இடத்தில் அனுமினியப் பெட்டியில் செம்பு மற்றும் வேறொரு உலோகத்தால் கவசமாக நன்றாக மறைத்து வைத்தனர். அந்த மேக்னட்டோமீட்டரின் செயல்பாடுகளை ஸ்வானுக்குத் தெரியாமல் கண்காணிக்க மறைவாக வேறு ஒரு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.
ஆனால் இங்கோ ஸ்வான் வந்தவுடனேயே அந்த மேக்னட்டோமீட்டர் தாறுமாறாக செயல்பட ஆரம்பித்தது. ஸ்வான் தரையின் அடியில் ஏதோ ஒரு கருவியை உணர்வதாகக் கூறினார். அந்தப் புதிய கருவியின் வடிவம் இன்னும் வெளியுலகிற்குப் பிரசுரமாகாதது என்றாலும் ஸ்வான் ஏறத்தாழ சரியாகவே அந்தக்கருவியினை வர்ணித்தார்.
அதைக் கேள்விப்பட்ட அமெரிக்க உளவுத்துறையினர் இருவர் SRI க்கு வந்து சில சிறிய பரிசோதனைகளை ஸ்வானிடம் செய்தனர். அவர்கள் ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிறு பொருள்களைக் கண்டு பிடிக்கச் சொன்னார். ஸ்வான் பெரும்பாலானவற்றைச் சரியாகச் சொன்னார். ஒரு பெட்டியைக் காண்பித்தவுடன் "வெளிர் காவி நிறத்தில் இலை வடிவமுள்ள பொருள் உள்ளது. அது அசைவது போலத் தெரிகிறது". அந்தப் பெட்டியில் இருந்தது அவர் கூறிய எல்லா அமசங்களும் நிறைந்த ஒரு அந்துப் பூச்சி.
SRI ஸ்வானைப் போலவே வேறு சிலரையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியது. சிலருக்கு உண்மையான பெயர்களைத் தவிர்த்து எழுத்துடன் எண்ணை இணைத்து அடையாளப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்டவர்கள் V1 என்பவர் வெகு தொலைவில் இருந்த குறியிலக்குகளை கிட்டத்தட்ட மிகச்சரியாகவே வரைந்தார். அந்தப் படங்களும், குறியிலக்குகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன.
சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் டிஸ்கவரி சேனலிலும் மனதின் சக்திகள் பற்றிய ஆதாரபூர்வ நிகழ்ச்சிகள் பற்றி சில நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அப்போது அமெரிக்க உளவுத் துறை ஒரு அதீத சக்தி படைத்த நபரைக் கொண்டு ரஷ்ய அணு ஆயுத உற்பத்திக் கிடங்கு ஒன்றின் படத்தை வரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது போல விண்வெளிக் கலங்கள் வசதி இல்லாத காலக் கட்டத்தில், ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சியில் அந்த நபர் வரைந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாகவே பொருந்தி வந்ததாக அந்த நிகழ்ச்சியாளர் கூறினார். பனிப்போர் முடிவடைந்து பின் நேரடியாக அந்த கிடங்கைப் படம் எடுத்து ஒப்பு நோக்கிய போது அதிகாரிகள் அசந்து போனதாக நிகழ்ச்சியாளர் கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அபூர்வ சக்தி மனிதர் பெயரை வெளியிட மறுத்த நிகழ்ச்சியாளர்கள் அவர் பெயரை எக்ஸ் என்றே அழைத்தார்கள். சில நாட்களுக்கு தினமும் அவரை ஒரு குறிப்பிட்ட ராணுவ ரகசிய அறைக்கு அழைத்து வந்து உட்கார வைத்து அதை வரைந்ததாகச் சொன்னார்கள்.
இப்படி விஞ்ஞான வளர்ச்சியில் சிகரத்தையே எட்டியிருந்த வல்லரசு நாடான அமெரிக்கா கூட, முக்கியமாய் CIA போன்ற உளவுத்துறை கூட ஆராய்ந்து ஆழ்மனதின் அற்புத சக்திகளைப் பயன்படுத்தியுள்ளது என்னும் போது அதன் பெருமையையும், உண்மையையும் உணர முடிகிறதல்லவா?
மேலும் பயணிப்போம்....
Subscribe to:
Posts (Atom)