01/11/2018
காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் மந்தாரை...
சாலையோரங்களில் காணப்படும் மூலிகை மந்தாரை. இது, இல்லத்தில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.
வெள்ளை மந்தாரை, செம்மந்தாரை, நீலமந்தாரை உள்ளிட்ட வகைகளை கொண்டது.
மந்தாரையின் இலைகள், பூக்கள், மரப்பட்டை ஆகியவை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மந்தாரை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூச்சிகளை அழிக்க கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மாதவிலக்கு, வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. பற்களுக்கு பலம் கொடுக்க கூடியது.
மந்தாரை இலைகளை பயன்படுத்தி அஜீரண கோளாறு, காய்ச்சல், மூட்டுவலிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மந்தாரை இலை, இஞ்சி, பனங்கற்கண்டு.
செய்முறை: மந்தாரை இலையை அரைத்து 10 முதல் 20 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் இஞ்சி துண்டு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி குடித்துவர அல்சர் வராமல் காக்கும். புண்களை ஆற்றுவதுடன் செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளித்தள்ளும் அற்புத மருந்தாக விளங்குகிறது. காய்ச்சல், மூட்டு வலி குணமாகும். மருத்துவ குணங்களை உடைய மந்தாரை இலை பசியின்மையை போக்கும் தன்மை கொண்டது.
மந்தாரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் தேனீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மந்தாரை பூக்கள், பனங்கற்கண்டு.
மந்தாரை பூக்கள் 4 எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிக்கட்டி குடித்துவர மாதவிலக்கு கட்டுக்குள் வரும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். மூட்டுவலியை போக்கும்.
மந்தாரை பூக்களை பயன்படுத்தி கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் தைலம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
மந்தாரை பூக்கள், விளக்கெண்ணெய்.
ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் லேசாக நசுக்கி வைத்திருக்கும் மந்தாரை பூ இதழ்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.
இதை ஆறவைத்து கண்களை சுற்றி இரவு தூங்கப்போகும் முன்பு பூசிவர கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும். கண்கள் குளிர்ச்சி அடையும்.
மந்தாரை பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. தோல்நோய்களை சரிசெய்யும் தன்மை உடையது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. ரத்த கசிவை குணப்படுத்தும்...
பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்துங்கள்...
அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரென்று கேட்டால் உடனேயே கொலம்பசு(ஸ்) என்று பெயரைச் பேரைச் சொல்லிடுவீர்களே.
அதுவே, மிளகாயை அறிமுகப்படுத்தினது யார்? என்று கேட்டால் பெரிதாக யோசியாதீர்கள். அதுவும் கொலம்பசுதான்..
செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பசு என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி!
குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டு விட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம்.
1,493-ம் ஆண்டில் கொலம்பசு மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்சு(ஸ்) சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர்.
அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விசயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர்.
போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது.
இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது.
இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை. மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமே தான்.
காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன.
மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை இந்தியப் பெண்களையேச் சேரும்...
தமிழா தமிழில் பேசு...
நம் வீட்டில் கூட தற்போது தமிழில் பேசுவதை மறந்து விட்டோம்..
குழந்தைகள் பெற்றோரை "மம்மி, டாடி" என்று தான் அழைக்கின்றனர்..
ஆனால், தமிழில் அம்மா எனும் வார்த்தை எப்படி உருவானது என்பது பலருக்கும் தெரியாது.
அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக அ எனும் உயிர் எழுத்தையும்,
உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் "ம்" எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும்,
10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உலவ விடுவதால் மா எனும் உயிர் மெய் எழுத்தை வைத்துள்ளனர்..
அதே போன்று தான் அப்பா என்ற சொல்லும் அமைந்துள்ளது..
இதில் தாய் மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற சொல்லில் ம் எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது.
அப்பா எப்போதும் வன்மையானவர் என்பதால் அதில் ப் எனும் வல்லின எழுத்து பயன் படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழ் மொழி என்பது பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ள மொழி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
நம்மை இயக்கும் நம் உள் மனது...
உடலை விட்டு வெளியேறும் ஆத்மா...
மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.
சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.
ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.
ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.
ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.
ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.
ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்.
நாம் அடுத்த பயிற்சிக்குச் செல்லும் முன் இதை எல்லாம் மனதில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கொள்வது நல்லது. அடுத்த பயிற்சிக்குச் செல்வோமா?
மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....
திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...
நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ...
திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர்.
அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர்.
இவை எதுவுமே உண்மை இல்லை.
அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள்.
வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள்.
அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை.
அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது.
வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான்.
அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது.
அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது.
மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான்.
கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது.
ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன.
வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.
அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.
இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.
ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள்.
ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள்.
இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர்.
அறிவியல் கண்டு பிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது...
பாஜக மோடியின் சிபிஐ இயக்குநரின் மனைவி நிதி மோசடி செய்தது அம்பலம்...
சிபிஐ இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் மோதலால் புதிதாக தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வரராவ் சங் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர். ரஃபேல் ஊழல் தொடர்பான ஆதாரங்களை மூடி மறைப்பதற்காக பாஜக திட்டமிட்டு இவரை தற்காலிக இயக்குநராக நியமித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நாகேஸ்வர ராவின் மனைவி நிதி மோசடி செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
சிபிஐ தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர ராவின் மனைவி சந்தியா, இல்லாத நிறுவனம் ஒன்றில் ரூ. 1 கோடியே 14 லட்சம் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தியது போல போலியான கணக்கைக் காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டிலும் நாகேஸ்வர ராவின் தலையீடு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரைத்தான் சிபிஐ-யின் தற்காலிக இயக்குநராக நியமித்திருக்கிறது ஊழல்கள் நிறைந்த பாஜக அரசு...
கீரைகளின் மருத்துவ குணங்கள்...
வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்டது.
அரைக்கீரை: உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும்.
பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும்.
முருங்கைக்கீரை : உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம். ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்யும். மாத விலக்கு வரும் போது ஏற்படும் வலியை குறைக்கும்.
சிறுகீரை: மலச்சிக்கலை குறைக்கும். உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். உடல் தளர்ச்சியை போக்கும்.
மணத்தக்காளி கீரை: வயிற்று புண், குடல் புண்ணை குணப்படுத்தும்.
அகத்திக்கீரை: உடல் வெப்பத்தை குறைக்கும். குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம் தலை சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகளை போக்கும்...
சிலந்தி உண்மைகள்...
சிலந்தி தண்ணீரில் நடக்கும், நீருக்கு அடியிலும் சுவாசிக்கும் தன்மை கொண்டது.
சிலந்தி தன்னை தானே கோமா நிலைக்கு எடுத்து செண்டு நீருக்கு அடியில் சில மணி நேரம் உயிருடன் இருக்கும்.
சிலந்தி தான் பின்னிய வலையையே மறுசுழற்சி செய்ய உண்ணும்.
ஒரே எடையிலான சிலந்தி வலை மற்றும் இரும்புடன் ஒப்பிடுகையில், சிலந்தி பின்னும் வலை தான் இரும்பை விட வலுமையானது.
சிலந்திகளுக்கு எறும்புகள் என்றால் பயமாம். இதற்கு காரணம் எறும்புகளிடம் இருக்கும் ஃபார்மிக் அமிலம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடைசியாக சிலந்தி கடித்து மரணம் அடைந்த சம்பவம் கடந்த 1981-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது.
சிலந்திகளுக்கு ஆணுறுப்பு (Penis) இல்லை. இவை முகத்தை தான் இணை உறுப்புகளாக பயன்படுத்துகின்றன.
கருப்பு பெண் சிலந்திகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டவுடன், ஆண் சிலந்தியை உண்டு விடுமாம்.
இதிலிருந்து தப்பிக்க கருப்பு ஆண் சிலந்திகள், கருப்பு பெண் சிலந்திகளின் பசியை மோப்பம் பிடித்து தப்பித்துக் கொள்ளுமாம்.
சிலந்திகள், நண்டு மற்றும் நத்தைகளுக்கு இரத்தம் நீல நிறத்தில் தான் இருக்கும். இதற்கு காரணம் இவற்றின் இரத்தத்தில் கலப்பு கொண்டுள்ள hemocyanin எனும் காப்பர்.
இதுவரை கண்டறியப்பட்ட 46,000 சிலந்தி வகைகளில். ஒன்றே ஒன்று மட்டும் தான் தாவரங்களை உண்டு வாழும் வகையை சேர்ந்தது ஆகும்...
தைராய்டு தொல்லைக்கு தீர்வு...
எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார்.
மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது...
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.
தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.
தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.
உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.
உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
ரெசிபி..
கோதுமை பால் பர்பி: முழு கோதுமை இரண்டு கப் எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். அதை நன்றாக அரைத்து இரண்டு கப் கெட்டிப் பால் பிழியவும். அடி கனமான பாத்திரத்தை எடுத்து இரண்டு கப் சர்க்கரை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோதுமைப் பால் சேர்த்து பின்னர் நெய் மற்றும் முந்திரி சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பால் கெட்டியான பின் ஒரு தட்டில் ஊற்றி பர்பிகளாக வெட்டி சாப்பிடலாம்.
அவல் பக்கோடா: அவல் இரண்டு கப், வெள்ளை ரவை கால் கப், பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் தேவையான அளவு, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை. அவலை இரண்டு நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து கொள்ளவும். ரவை, பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை பக்கோடா பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
தேங்காய் பால் உருளை கறி: வேகவைத்த உருளைக் கிழங்கு & 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன், வெங்காயம் ஒரு கப், தக்காளி ஒரு கப், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு எடுத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் 2 கப் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் சிறிது. அரிசி மாவு அல்லது பொரி கடலைத் தூள் 2 டீஸ்பூன். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பிரியாணி பொருட்களைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கை உதிர்த்துப் போடவும். தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அரிசி மாவு, புளி அல்லது எலுமிச்சை சாறு சிறிதளவு விட்டு புதினா கொத்தமல்லி, பொரி கடலைப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தலாம்.
டயட்..
உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.
தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.
உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்‘ என்கிறார் சங்கீதா.
பாட்டி வைத்தியம்..
தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.
ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
உடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.
அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குணமாகும்.
அடிக்கடி சளித்தொல்லையால் அவதியுறுபவர்கள் அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி சரியாகும்.
தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.
தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்...
பிரம்மத்தை நோக்கி - 5...
இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் சமநிலையுறவே தவிக்கிறது. அதுவே பிரபஞ்ச பொது இயல்பாகவும் இருக்கிறது. இச்சமநிலையை அடைவதே ஒவ்வொரு பொருளின் முடிவான நோக்கு.
ஏனெனில் இந்த பயணம் அங்கிருந்தே துவங்கியது. ஒவ்வொரு பொருளும் தனது மூல இருப்பை நோக்கி இன்பமாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் கலைந்து செல்கிறது.
பொருள் நிலை என்பது எல்லைக்கு உட்பட்ட தனித்தன்மை வாய்ந்தது. சமநிலை என்பது எல்லையில்லா தன்மையுடையது. ஒவ்வொரு பொருளுக்கும் தன் மூல இருப்பை நோக்கி நகர்ந்து செல்வதே ஆனந்தமானது.
எனவே தான் நாம் உருவாக்கி வைத்த கோயில்கள் கட்டிடங்கள் பொருட்கள் எல்லாம் படிப்படியாக சிதைந்து தனது மூல இருப்பை நோக்கி ஆனந்தமாக நகர்கின்றன.
நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுமே தனித்தனி பொருள் தான். உயிரற்ற பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில்..
உயிரற்ற பொருள் இயற்பியல் வேதியியல் வினைகளின் விதிப்படி நடந்துகொள்கின்றன. தமக்கென்று எந்த இச்சையும் இல்லாது கிடக்கின்றன. இவை எந்த தடையுமின்றி தன் மூலநிலைக்கு இயல்பாக நகர்ந்து சென்று விடும்.
ஆனால் ஒரு உயிருள்ள பொருள் அப்படி இயல்பாக மூலத்தை அடைய முடியாமல் தடுப்பது அதன் அறிவுதான். ஆம் அறிவு அதனை மூலத்தை நோக்கி அழைத்து செல்வதாக தவறாக நினைத்து கொண்டு அடுத்த பரிணாமத்திற்கு இட்டு சென்றுவிடுகிறது.
நம் உடலில் உள்ள பலகோடி உயிரிகளுக்கும் சுதந்திரம் கொடுங்கள். அவைகள் தத்தம் ஆனந்தமயமான மூலத்தை அடையட்டும். உங்கள் அறிவால் அவற்றை கொடுமைப்படுத்தாதீர். அறிவு ஜடப்பொருளுக்குள் புகுந்த நோக்கமே அவைகளை பிரம்மத்தை அடைய வைக்கவே.
பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...
இங்கிலாந்தில் நிலநடுக்கம்: தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடுக - பாமக அன்புமணி எம்.பி...
இங்கிலாந்து நாட்டின் லங்காஷையர் மாவட்டத்திலுள்ள லிட்டில் பிளம்ப்டன் நகரில் பாறை எரிவாயு (Shale Gas) எடுப்பதற்காக பூமியைத் துளையிட்ட போது அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டாவில் அடுத்தடுத்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இங்கிலாந்தின் லிட்டில் பிளம்ப்டன் பகுதியில் பாறை எரிவாயுத் திட்டங்களை செயல்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியதுடன், நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர்ந்தனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி முதல் பிளம்ப்டன் பகுதியில் பாறை எரிவாயு எடுப்பதற்காக பூமியை துளையிடும் பணிகள் தொடங்கின. அதன்பின் கடந்த ஐந்து நாட்களில் அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் கடந்த 26-ஆம் தேதி வெள்ளிக் கிழமையும், அதன்பின்னர் 27-ஆம் தேதி சனிக்கிழமையும் தலா 0.80 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 29-ஆம் தேதி திங்கட்கிழமை 1.10 டிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து அங்கு துளையிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
1.10 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்பது உண்மை தான். ஆனால், அதிக இடங்களில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் போது நிலநடுக்கத்தின் வீரியம் அதிகரிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இங்கிலாந்தில் இந்த அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் 2016&ஆம் ஆண்டில் கனடாவில் இதைவிட அதிக சக்தி கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தால் ஏற்படும் ஆபத்தைக் கருதி தான் கடந்த அக்டோபர் 13&ஆம் தேதி உலகம் முழுவதும் பூமியை துளையிட்டு எரிவாயு எடுக்கும் முயற்சியை கண்டித்து சுற்றுச்சூழல் மற்றும் பசுமை அமைப்புகளின் சார்பில் அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், இதையெல்லாம் உணராமல் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தைக் கொண்டு நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களிலும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்துக்கு கடலில் 170 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உயர்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளிலேயே இத்தகைய பாதிப்புகள் ஏற்படும் நிலையில், பழங்காலத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை நினைத்தாலே மிகவும் அச்சமாக உள்ளது.
இந்தியாவைத் தவிர்த்த பிறநாடுகளில் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகும். இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளில் ஒரு குடியிருப்புக்கும், இன்னொரு குடியிருப்புக்கும் இடையிலான தொலைவு மிகவும் அதிகம் ஆகும். அதனால் அங்கு நில நடுக்கம் ஏற்பட்டால் கூட பாதிப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால், மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள காவிரி பாசன மாவட்டங்களில் இத்தகைய பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். காவிரி பாசன மாவட்டங்கள் பாலவனமாகிவிடும் ஆபத்தும் உள்ளன.
காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டேன். நான் சந்தித்த லட்சக்கணக்கான மக்களில் ஒருவர் கூட அத்திட்டத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, அனைத்து மக்களுமே ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்; காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.
பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்தும், காவிரி டெல்டா மக்களின் உணர்வுகளை மதித்தும் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
https://www.bbc.com/news/uk-england-lancashire-46017252
வேற்றுக்கிரகவாசி களும் ஸ்வஸ்திக் சின்னமும்...
ஸ்வஸ்திக் என்ற 12,000ஆம் ஆண்டுகள் வயதான வரலாற்று சின்னம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சீனாவில் 'வான்', ஜப்பானில் 'மன்ஜி', இங்கிலாந்தில் 'ஃபில்போட்', ஜெர்மனியில் 'ஹேக்கன்க்ரூஸ்' மற்றும் 'டெட்ராஸ்கிலியன்' அல்லது கிரேக்கத்தில் 'டெட்ராம்மாடியன்'.
ஸ்வஸ்திக் என்பது பூமியிலுள்ள மிகவும் வெறுக்கப்பட்ட மனிதர்களில் ஒருவரினால் பயன்படுத்தப்பட்ட சின்னமாகும், அடோல்ப் ஹிட்லர் இந்த சின்னத்தை முதலில் பயன்படுத்தவில்லை. சொல்லப் போனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல கலாச்சாரங்களையும் கண்டங்களையும் கடந்து அது ஒரு சக்தி வாய்ந்த சின்னமாக பயன்படுத்தப்பட்டது.
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஸ்வஸ்திகாவை தங்கள் குறியீடாகப் பயன்படுத்தினர், இதில் முக்கியமாக ஜெர்மன் போர்க் காலங்களில் நைட்ஸ் டெம்ப்ளர்கள் பயன்படுத்தினர். ஏன் இந்த சின்னம் மிகவும் முக்கியம், ஏன் அடால்ஃப் ஹிட்லர் அதை பயன்படுத்த முடிவு செய்தார்?
"நோர்டிக் பழங்குடியினரின் நாட்டுபுறக் கதைகளில் இந்த ஸ்வஸ்திக் சின்னம், உலகெங்கிலும் பறக்கும் ஒரு சுழல்காற்று தட்டுகளின் குறியீடு என்கின்றனர்".
இந்த நோர்டிக் நாட்டுபுற கதையில் வருவதை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்தள்ளது. அதுவும் ஹிட்லர் நாஸிகளுடன் தொடர்புடையது.
யுஎஃப்ஒ சதி கோட்பாட்டாளர்கள், இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை 70 மைல்கள் தொலைவில் அமெரிக்காவில் 1947ல் ராஸ்வெல் பாலைவனத்தில் பறக்கும் தட்டுகள் விபத்து நடந்த பகுதிகளில் உள்ள சிதிலங்களிலும், பிரமாண்ட நாஸ்கா கோடுகள் போலவும் காணப்படுவதாக கூறுகின்றனர்.
ஹிட்லரும் நாஜிகளும் மறைந்திருப்பதைப் பற்றியும், அண்டார்டிக்கா உட்பட, இரகசிய தளங்களில் வேற்று கிரகவாசிகளுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதையும் பற்றி பல சதித்திட்ட கோட்பாடுகள் உள்ளன, அவை இந்த ஸ்வஸ்திக் சின்னம் புதிய கண்டுபிடிப்பு பற்றிய ஊகங்களை ஊகித்துள்ளன.
"ரோஸ்வெல்லுக்கு அருகில் காணப்படும் புதிரான சின்னமாக ஸ்வஸ்திக் நாசி மறைநூல் மற்றும் வேற்றுகிரக வணக்கத்தின் விளைவாக இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். உண்மையில் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை சாம்பல்நிற வேற்றுகிரகவாசிகளின் போர்கால சின்னமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.
அவர்களிடம் தொடர்புடைய ஹிட்லர். தானும் அதை பயன்படுத்தி இருக்க வேண்டும். இவர்கள் யாருடனான போர் அழைப்பாக இந்த சின்னத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என்று தெரியவில்லை.
GREY'S vs REPTILIANS...
Subscribe to:
Posts (Atom)