28/06/2018

தோரணங்கள்....


தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள்.

இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும்.

சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.

தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.

1. மங்கள தோரணம்.
2. அமங்கள தோரணம்.

1. மங்கள தோரணம்

சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.

2. அமங்கள தோரணம்...

மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்க வேண்டும்...

ஒவ்வொரு முறையும் யாரோ சிலரால் விதைகள் விதைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது...


8னு சொன்னாலே கைது செய்கிறது எடப்பாடி பழனிசாமியின் போலீஸ்...


ஊருக்குள்ள இருக்கிற சாலைகளை ஒழுங்கா போட்டுக்கொடுக்க துப்பு இல்லை..

8 வழி சாலை போட்டே தீர்வோம்னு இந்த கமிஷன் மண்டி அரசு துடிப்பதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்..

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிர்ப்பு போல் 8வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு உருவாகிவிடக்கூடாது என்பதற்காகவே கண்ணில் படுபவர்களையெல்லாம் கைது செய்து பொது தளத்தில் மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறது மோடிஎம்கே அரசு.

முக்கியமான குறிப்பு: அந்த  C.M என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம் கமிஷன் மண்டி என்பது தான்.. நீங்க என்னமோ சீப் மினிஸ்டர்னு தப்பா நினைச்சுக்க கூடாதுல..

- கார்ட்டூனிஸ்ட் பாலா

சித்தர்களின் அஷ்டமா சித்திக்கள்...


இட்டிலி. இடியப்பம். புட்டு. என்று நீராவியில் செய்த உணவுப் பொருள்களை உண்டு நமது முன்னோர் தங்கள் ஆவியை நல்ல முறையில் காத்து வந்தனர்...


இன்றோ பொரித்த வறுத்த உணவுகள் மட்டுமல்ல. வெளிநாட்டார் உணவு வகைகளையும் உண்ணுவதில் பெருமைகொள்ளுகின்றோம்

அந்தந்த நாட்டில் தட்ப வெப்ப நிலைகளுக்குத் தேவையான உணவு முறைகளை நமது பெரியவர்கள் கண்டு உண்டும் வந்தார்கள்.

இன்று தனது ஆத்திச்சூடியில் பாரதி ஊண் மிக விரும்பு என்றான். ஒரு இளைஞர் சாப்பிடுவதிலே வரைமுறையே இல்லாமல் சாப்பிடுவார். கேட்டால் பாரதியே ஊண் மிக விரும்பு என்று சொல்லியுள்ளாரே என்று எதிர் வினாத் தொடுக்கின்றார்.

அவன் சொன்னது உண்ணுகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காக.விரும்பி மகிழ்ச்சியோடு உண்ணுகின்ற உணவு தான் உடம்பிலே சேரும் என்பதற்காக. ஆமாம் சிலர் சாப்பிடுவதனைப் பார்த்தால்தெரியும் கடனே என்றுசாப்பிடுவார்கள். சாப்பிட வேண்டுமே என்று எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள்.

நெல்லையில் சாப்பாட்டுக் கடன முடிச்சிட்டுப் போயேன் என்பார்கள். எல சாப்பிட்டியா என்று கேட்டால் என்ன எழவையோ வச்சா அள்ளிப் போட்டுட்டு வந்திட்டேன் என்பார்கள்.சிலர் நேரம் தவறினாலும் மதிய உணவை மாலையில் கூடச் சாப்பிடுவார்கள்.

சிலர் சாப்பிடுவதையே பொழுது போக்காகவும் பெருந்தொழிலாகவும் கொண்டு வாழ்வார்கள். அவர்கள் உண்பதைப் பார்த்தால் நமக்கே அச்சம் வந்து விடும்.

எதுவெனினும் சாப்பிடுவார்கள் எப்போதும் சாப்பிடுவார்கள் உடனுக்குடன் கூட அவர்கள் சாப்பிடுவார்கள். எந்த உணவு விடுதியில் எத்தனை மணிக்கு என்ன கிடைக்கும் என்கின்ற பட்டியலைச் சரியாகச் சொல்லுவார்கள்.சரியான நேரத்திலே அங்கு சென்று அதனைச் சாப்பிடுவார்கள். போக முடியாவிட்டாலும் யாரையாவது அனுப்பி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.

ஏதேனும் ஒரு நேர உணவு உண்ண முடியாமல் போனால் அந்தப்பொழுது உணவை விட்டு விட்டு அடுத்த நேர உணவை உண்பதற்கு முன்னர் ஒரு எலுமிச்சையை சாறாக்கி உண்டு விட்டு உண்டால் நோய் வாராது.

சில பெண்கள் வீட்டில் செய்த உணவுப் பொருள் வீணாகி விடக் கூடாது என்று இயலாமல் கூட அந்த உணவுப் பொருளை உண்பார்கள். நமது உணவுப் பழக்கம் எல்லா நோய்களையும் நம்மிடம் கொண்டு வருகின்றது.

காலையில் சக்கரவர்த்தியைப் போலவும் மதியம் மன்னரைப் போலவும் இரவு சேவகனைப் போலவும் உண்ண வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். அதன் படி வாழ்ந்தார்கள். சர்க்கரை நோய் மிகுந்திருக்கும் இந்த நாட்டில் இத்தனை இனிப்புக் கடைகள்.புரியவில்லை.

அண்ணாச்சி சாகப் போறது உறுதி. தின்னுட்டுச் சாவோமே இதுதிருநெல்வேலி. வயித்துப் பாட்டுக்குத் தான அண்ணாச்சி ஒழைக்கோம்.

அதே பாரதி உடலினை உறுதி செய் என்றான்.ஙப் போல வளை என்றான்.எத்தனை பேர் உடற் பயிற்சி செய்கின்றனர். நமது மகிழுந்திற்கு எண்ணெய் நிரப்புகின்றோம். ஒடவேயில்லை எனில் அந்த மகிழுந்தில் மீண்டும் எண்ணெய் நிரப்ப முடியுமா. ஒடினால்தானே எண்ணெய் செலவழியும்.

புதிதாக எண்ணெய் நிரப்பமுடியும். காலையில் எல்லா ஊர்களிலும் நடைப் பயிற்சி கொள்பவர்கள் ஒருவரை பார்த்தவுடன் சர்க்கரை அளவை விசாரிக்கும் போது பெருமையாகவே கேட்கின்றார்கள். எனக்கு 300 உங்களுக்கு என்றவுடன் 320 என்று அவர் பெருமையோடு சொல்வதும் ஓன்றும் புரியவில்லை.

அவ்வைப் பெருமாட்டி இத்தனைக்கும் காரணமான வயிற்றிடம் கேள்வி கேட்கின்றாள். வயிறே ஒரு நாள் சாப்பிடாமல் இரேன் என்றால் முடியாது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கின்றாய்.

ஒரு நாள் உணவு நிரம்ப கிடைக்க வாய்ப்பிருக்கும் நேரம் இரண்டு நாளுக்கு நிரப்பிக் கொள்ளேன் என்றால் முடியாது என்கின்றாய்.

உணவு உறுதி செய்யப் படாத ஏழைகளின் நிலை. இல்லாத அன்று பொறுத்துக் கொண்டு. கிடைக்கின்ற அன்று அள்ளி திணித்துக் கொள்ளலாமல்லவா. வயிறு ஒத்துழைக்க மறுக்கின்றதே

இப்படிப் பட்ட உன்னோடு வாழ முடியாமல் எத்தனை பேர் துன்புறுகின்றார்கள் தெரியுமா.

பசிப்பிணி போக்குவதே அனைவரின் கடமையும் என்று உணர்த்துகின்றார் ஔவையார்.

செய்யுள்..

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்நோய் அறியா இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது...

நம்ப முடியாத வங்கி உண்மைகள்...


உலக மர்மங்களுக்கு காரணம் தமிழரே - எகிப்திய கல்லறைக்குள் தமிழ் மன்னர்கள்...


இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள்.

கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம்.

தொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே என்ற ஓர் கருத்தை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

எகிப்திய நாகரீகத்தின் மத்தியில் வேற்று சமூகம் ஒன்று குடியேறிய காரணத்தினாலேயே அவர்களுக்கு இப்படியானதொரு அறிவு கிட்டியது என்றும், அது குமரிக்கண்டம் எனப்படும் லொமூரியா கண்டத்தில் இருந்து வந்த தமிழர்களே என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளார்கள்.

அதனை மேலும் வலுப்படுத்துகின்றார் அலெக்ஸ்சான்டர் கெந்தர்தேவ் எனும் தொல்பொருள் ஆய்வாளர்.

அவருடைய கூற்றின் படி எகிப்தியர்கள் வாழ்ந்த காலத்தில் தென் பகுதியில் இருந்து வேறு ஓர் சமூகம் அங்கு வந்து குடியேறி உள்ளது.

அந்த சமூகம் குமரிகண்டமாக தமிழர் வரலாறு குறிப்பிடும் லொமூரியாவில் இருந்து வந்த சமூகம் என்றும் கெந்தர்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று எகிப்துக்கும் இந்தியாவிற்கும் கடல் வழி வியாபாரம் நடைபெற்றுள்ளதாக ஆதாரங்களை கண்டு பிடிக்க பட்டுள்ளது.

இதன் படி எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல ப்ரெந்தர் ஸ்தோதியார் என்ற ஆய்வாளர் Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் எகிப்தில் வாழ்ந்துள்ளார்கள்.

1927ஆம் வருடம் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களின் கலாச்சாரத்தை சேர்ந்தவையுடன் ஒத்துப்போகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்து நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் எனும் மக்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என ஒக்ரான் Autran என்ற தொல் பொருள் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

(நைல் நதி என்பது நீல நதி எனப்படும் தமிழ் வார்த்தையில் இருந்து திரிபு படுத்தப்பட்டு வந்த ஓர் சொல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.).

இறந்தவர்களை புதைப்பதும் எரிப்பதும் ஒருவகையில் தமிழர் மரபே அப்படியான ஓர் வழக்க முறையில் உருவாக்கப்பட்டதே எகிப்திய மன்னர்களுக்காக கட்டப்பட்ட பிரமிடுகள் எனவும் கூறப்படுகின்றது.

இங்கு பெரிய அளவில் எழுப்பப்படும் அடக்கம் செய்யப்படும் இடமான சமாதியே பெரும் இடு (சுடுகாடு) பெருமிடு என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் பிரமிடு ஆக மாறிப்போனது என்ற கருத்தையும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

அதேபோன்று Edward pokoke என்ற வரலாற்று ஆய்வாளர் Indian in Greece என்ற நூலின் ஊடாக சிந்து வெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் எனவும்..,
சிந்து வெளியில் இருந்து, பெர்சிய வளைகுடாவை கடந்து Oman Hadramont, Yeman கடற்கரை வழியாக எகிப்து, நபியா, அபிஸினியா போன்ற பகுதிகளுக்கு பரவிச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் Heinrich Kari Brugsh என்பவர் தனது History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் குடியேறி தமது கலாச்சாரம், கலை மற்றும் தொழில்நுட்ப அறிவினை அங்கு நிலை நாட்டினர் என்று கூறியுள்ளார்.

பாண்டிய நாட்டு தமிழர்கள் எகிப்து நாட்டில் பரவியதோடு எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என Adolf Erkman என்ற ஆய்வாளர் தனது Life in ancient Egypt உன்ற நூலின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகளை கருத்தை Bengsch Bey என்ற எகிப்து நாட்டு வரலாற்று ஆய்வாளரும் ஒத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LIliane Hornbergar என்ற பிரான்ஸ் ஆய்வாளரும் அறிஞருமான ஒருவர் எகிப்தின் முதல் வம்ச மன்னன் சிந்து சமவெளி பகுதியிலிருந்து வந்த தமிழர் ஒருவரே என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சான்றுகள் உலகம் இப்போது வியந்து கொண்டிருக்கும் எகிப்தியர்களின் அறிவியல் என்பது தமிழர்கள் மூலமாகவே உருவாக்கப்பட்டது என்பதை தெளிவு படுத்துகின்றது.

குறிப்பாக மர்மங்கள் அனைத்திற்கும் காரணமாக தமிழர்களே இருந்து வருகின்றார்கள், அந்த வகையில் பிரமிட்டுக்குள்ளே உறங்குவது தமிழ் மன்னர்கள் என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஆக மொத்தம் உலகம் முழுவதும் தமிழரே தமது காலாச்சாரத்தை நிலைநாட்டி சிறப்பு பெற்றிருந்தான் என்றும் உறுதியாகின்றது. என்றாலும் கூட இன்று நிலையற்று சிதறிப்போய் உள்ளது தமிழர் நாகரீகம்.

எவ்வாறாயினும் தமிழரே மூத்த குடி என்பது அனைத்து ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகும் அதனை பேணிக்காப்பது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்று...

புகையிலை பொருட்கள் உபயோகிப்பதை கைவிடுவோம்...


150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ குரங்கு பெண்...


மெக்சிகோ நாட்டின் சினாலோ என்னுமிடத்தில் அபூர்வ மரபு நிலையுடன் முகம் மற்றும் உடல் முழுக்க முடியுடன் ஒரு பெண் வாழ்ந்து வந்தார்.

வித்தியாசமான உடல் அமைப்புடன் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜூலியா பாஸ்ட்ரானா என்ற அந்த பெண்ணை மக்கள் "குரங்கு பெண்” என்றே செல்லமாக அழைத்தனர்.

அப்போது வித்தை காட்டும் ஒருவர், அவரை அமெரிக்க முழுக்க அழைத்து சென்று நிகழ்ச்சி நடத்தினார்.

20 வயதான அந்த புரதான அபூர்வ மெக்சிகன் பெண் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு சென்று மக்களை மகிழ்வித்தார்.

சிறு வயதிலிருந்தே பல்வேறு உடல் கோளாறுகளை சந்தித்த அவர், லென்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்பு ஒரு குழந்தையுடன் ரஷ்யாவில் வாழ்ந்தபோது 1860ம் ஆண்டு அவரும், அவரது குழந்தையும் இறந்துவிட்டனர்.

பின்னர் நோர்வே நாட்டில் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மெக்சிகோ அரசின் வேண்டுகோளுக்கு பின்னர் சினாலோவிற்கு கொண்டு வரப்பட்டது.

காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வ பெண்ணின் உடல் கடந்த செவ்வாய் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அபூர்வ குரங்கு பெண்ணான இந்த பாஸ்ட்ரானாவைப் போல் இனி யாரையும் நாங்கள் பார்க்கப் போவதில்லை என்று மெக்சிகன் மக்கள் கூறினர்...

காவிரிப்படுகையை பாஜக மோடி அரசு அம்பானிக்கு விற்றுவிட்டது...


ஆல்பா நிலை...


இந்த ஆல்பா நிலை தியானத்தின் போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.

மனித உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாத்து என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை.

எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது.

வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.

பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற அறிவியல் கண்டு பிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.

ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம்.

இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாக்க் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும்.

அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.

இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை. நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.

இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை...

ஜெயலலிதா கொலையும் அம்பானி தொடர்பும்...


நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் -உயர்தீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து...


ஒரு லட்சம் வாக்காளர்கள் கையெழுத்திட்டால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என தகுதி நிர்ணயிக்க வேண்டும்.

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த வரவேற்பு போல தற்போது யாருக்கும் இல்லை. நீதிபதி கிருபாகரன்...

விழித்துக்கொள் தமிழா...


தொப்பையை குறைக்க வழிகள்...


உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல.

ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

இந்தியாவில் கட்சிகளும், அரசுகளும் மட்டுமே மாறும் ஆட்சியும், அதிகாரங்களும் மாறாது...


நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணுஆயுதம் பிரம்மாஸ்திரமா?


ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு (சரியாக  72 ஆண்டுகள் ) நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது.

இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர்.

இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர்.

சோதனை செய்யப்பட்டும் மைதானத்தை விட்டு சுமார் 10-20 மைல் தூரத்தில் சோதனையின் பார்வையிடும் பகுதி அமைக்கப்படுகின்றது.

சரியாக 5.29 மணி 45 விநாடிகளில் முதல் அணு ஆயுதம் வெடிக்கச் செய்யப்படுகின்றது.

இது தான் இன்று வரை உலகம் அறிந்த முதல் அணு ஆயுதம் என நினைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இதற்கு முன்னரே அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது.

நியூ மெக்சிகோவில் வெடிக்கச் செய்யப்பட்ட ஆயுத வெடிப்பில் இருந்து நெருப்பு சுமார் 600 அடி அகலத்திற்குப் பரவுகின்றது.

இதன் பாதிப்பு சுமார் 20,000 டன் டிஎன்டி வெடிக்கும் போது ஏற்படுவதைப் போன்று இருந்தது.

இதன் வெடிப்பு துகள்கள் மேகத்தில் சுமார் 7 மைல் உயரத்திற்குப் பறந்து செல்கின்றது.

இதன் நடுக்கமானது சுமார் 100 மைல் தூரத்திலும் உணரப்படுகின்றது. அன்று உலகில் புதிய ஆயுதம் ஒன்று கிடைக்கின்றது.

இதனைக் கண்டறிந்த டாக்டர். ராபர்ட் ஓபென்ஹெய்மர் அதிர்ந்து போனார்.

இச்செய்தியைக் கேட்டு சிலர் சிரித்தனர், சிலர் அதிர்ச்சி அடைந்தனர், ஆனால் பெரும்பாலானோரும் அமைதியாய் இருந்தனர்.

முதல் முறையாக உலகம், மனிதன் கண்டறிந்த மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் மூலம் தாக்கப்படுகின்றது.

ஆனால் இது போன்ற ஆயுதம் முன்பே பயன்படுத்தப்பட்டிருந்தால் பூமியின் வரலாறு எப்படி இருந்திருக்கும்.

சில வரி ஆதாரங்களை கொண்டு அணு போர் மற்றும் அணு ஆயுதங்கள் பூமியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் இவை பல ஆண்டுகளுக்கு முன் அரங்கேறியிருக்கலாம் ?

அவற்றை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்.... தொடரும்....

பசுமை வழிச்சாலைக்காக இடிக்கப்படும் புதிய பள்ளிக் கட்டடம்...


உணவாக தன் குடலையே தரும் அரிய இனம்...


எதிரிகளுக்கு உணவாக தன் குடலையே தரும் அரிய இனம்...

எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீன் இனங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.

உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதிலும் பல வினோதங்கள் மீன் இனங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள்.

அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீன்களிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது.

தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளரி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம்...

வாழ்வியலை உணரும் வரை வாழ்க்கை வெறும் பொய்யே...


பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள்...


காஞ்சிமாநதியில் உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்து மக்களே தற்போது உங்களுக்கு குடிதண்ணீரை பிரஞ்சு நாட்டு Suez (சுயஸ்) என்னும் தனியார் கம்பனி வழங்க உள்ளதை அறிவீர்களோ.

ஆம், கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் 3,150 கோடிக்கு பிரஞ்சு நாட்டின் சுயஸ் Suez என்னும் தனியார் நிறுவனத்திற்கு அரசு வழங்கிவிட்டது.

ஆதாரம் இதோ : https://www.suez.com/en/News/Press-Releases/SUEZ-wins-a-contract-worth-near-400-million-euros-to-improve-the-water-distribution-service-in-Coimbatore

இந்தியாவில் மிகப்பெரிய உரிமத்தை பெற்றுவிட்டோம் என அந்நிறுவனம் தனது Website ல் மார்தட்டி சொல்லி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே டெல்லி மாளவியா நகருக்கு பிறகு இரண்டாவதாது கோயம்புத்தூரை கண்டுபிடித்து வந்துள்ளது இந்நிறுவனம்.

இனி இந்த தனியார் நிறுவனம் கொடுக்கும் நீரைத்தான் கோயம்புத்தூர் மக்கள் குடித்தாக வேண்டும்.

தற்போது பொலிவியா Boliva நாட்டில் Cochabamba என்னும் நகரில் நடந்த சம்பவத்தை பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்.

அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை முதலில் SEMAPA என்னும் தனியார் கம்பனிக்கும் பின் இதே SUEZ சுயஸ் என்னும் தனியார் கம்பனிக்கு வழங்கியது.

கார்டை சொருகினால் தண்ணீர். கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லை என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.

இப்படி ஆனதால், மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் கம்பனி. ஆற்று வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்கு தனியார் இரானுவத்தை நிறுத்தி மக்கள் ஆற்றில் நீர் எடுப்பதை தடுத்தார்கள். (இந்நேரம் ஜக்கியின் Rally for River ஐ உங்களுக்கு ஞாபகப்படுத்த விருப்புகிறேன்).

சரி ஆற்றில் தான் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், Bore well ல் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் தடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தார்கள்.

வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த கம்பனி மழை நீரை பயன்படுத்த கூடாது என்று அதற்கும் சரமாரியாக கட்டணம் வசூலித்து.

மழை நீரை கூட விட்டு வைக்கா பாவிகள் என... Even The Rain என்று இச்சம்பவம் ஒரு படமாக உருவானது.

வெகுண்டெழுந்த மக்கள் போர் களத்தில் குதித்தனர். உள்நாட்டு போர் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடி அந்நிறுவனத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர்.

ஆதாரம் :  https://en.m.wikipedia.org/wiki/Cochabamba_Water_War

ஆதாரம் : https://ncla.org/article/bolivia-privatized-water-company-defeated

இனி சுயஸ் க்கு பணம் கொடுத்தால் தான் குடிக்க தண்ணீர். அவன் வைப்பது தான் கட்டணம். கட்டணம் செலுத்தவில்லை எனில் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படும்.

தண்ணீரை சுத்தம் செய்கிறேன் என்ற பேர்வழியில் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது.

மீடியாக்களில் இச்செய்தி திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதை பற்றி நாடாளுமன்றத்திலோ, சட்டசபையிலோ, கோவை மாநகராட்சி கூட்டத்திலோ விவாதம் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை.

இந்தப் பிரஞ்சுக் கம்பெனி தகவல் பெறும் சட்டத்தின் கீழ் வராது. யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது.

இது கோயம்புத்தூரோடு நின்றுவிடப்போவதில்லை இனி அனைத்து பெரு நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தண்ணீர் தொழிலை தடையின்றி செய்வார்கள்.

அதற்காக செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாடு கூட உருவாக்குவார்கள். கட்டணத்தையும் அவர்களே நிர்ணயம் செய்வார்கள்.

குடிக்கும் நீருக்கும், கர்பப்பைக்கும், சிறுநீரகத்திற்கும் குழந்தைப் பேருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை மரபு மருத்துவர்கள் அறிவார்கள்.

நம் கலாச்சாரத்தில் நீருக்கு எந்த அளவு நாம் முக்கியத்துவம் தருகிறோம் என்பதை நீங்களே அறிவீர்கள்.

நீரின்றி அமையாது உலகு - வள்ளுவர்.
தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே - பழமொழி.

Science - Water has Memory.

இன்னும் எத்தனை எத்தனை. நீர் உங்கள் உயிருடன் தொடர்புடைய ஒரு உயிர்ப்பொருள்.

நம் தாய் மண்ணில் உருவான சிறுவானி நீரை, இனி உங்கள் நாவில் நினைக்க, நீங்கள் பிரஞ்சு நாட்டு காரனுங்கு கப்பம் கட்ட வேண்டும்.

தன் சொந்த நாட்டு மக்களுக்கு குடிநீரை கூட விநியோகிக்க துப்பில்லாத இந்த அரசு தான், நாளை அணு விபத்து ஏற்பட்டால் நம்மை காப்பாற்ற போகிறது.

நம்புங்கோள் மக்களே...

இது தான் சுதந்திர இந்தியா.
இது தான் மக்களுக்கான அரசு.

பணப்பேய் பிடித்த பிணந்தின்னிகள் இந்நாட்டை ஆளும் வரை இது தொடரும்...

பாஜக மோடியின் தூய்மை இந்தியா உண்மைகள்...


கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி13000-ஆக இருந்த மலம் அள்ளும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 52,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதுதான் மோடியின் தூய்மை இந்தியா திட்டமா...

கர்மயோகி புத்தகத்தில், மலம் அள்ளுவது வால்மிகி சமுதாய மக்களுக்கு ஆன்மீக அனுபவத்தை தரும் என மோடி குறிப்பிட்டுள்ளார். மலம் அள்ளும் இழிதொழிலை இதன் மூலம் அவர் நியாயப்படுத்த விரும்புகிறார்...

இயற்கையை கற்ப்பித்து தருவோம்...


நம் வாழ்க்கை ஏன்..? இப்படி இருக்கிறது என்பதை ஒருபோதும் நாம் கேள்வியாக கேட்டது இல்லை...


நிதர்சனம் : நம் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன.. நம் பொருளாதாரம் சுரண்டப்படுகின்றன..

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதத்தை எதிர்த்து போராட்டம்...


நமது நிலத்தை அரசாங்கம் தனது திட்டத்திற்காக எடுத்துக்கொள்ள திட்டமிடும் போது அதை முதலில் நம்மிடம் தெரிவித்து நமது அனுமதி பெற்ற பிறகு மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு காவல்துறையை அனுப்பி நிலத்தின் சொந்தகாரர்களை அவர்கள் நிலத்தில் இருந்து துரத்தி விட்டு அளவு எடுக்கிறார்கள். மக்களின் உரிமைகளை துச்சமாக மதிக்கும் அரசாங்கம் தான் இது போன்ற கொடிய வேலைகளை மனசாட்சி இல்லாமல் செய்ய துணியும்.

இத்தனை அக்கிரமங்களையும் செய்துவிட்டு தமிழக முதல்வர் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தை தாங்களாகவே மகிழ்ச்சியுடன் கொடுப்பதாக பேட்டி அளிக்கிறார். நிலத்தை பறி கொடுக்கும் விவசாயிகள் பேட்டி கொடுக்கும் போது காவல்துறையை வைத்து எங்களை மிரட்டினால் நாங்கள் வேறு என்ன தான் செய்ய முடியும் என்று கூறுவது மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

நமக்கும் இந்த பிரச்சனைகள் வரும் வரை காத்திருக்க போகிறோமா அல்லது கண் முன்னே இது போன்ற கொடுமைகள் நடக்கும் போது எதிர்ப்பு குரலை எழுப்ப போகிறோமா?

இந்தியாவில் நிதிப் பற்றாக்குறை அதிகம் கொண்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது தமிழகம்...


ஏது நிதி..? கார்ப்பரேட் பணமா..? உலக அரசியல்...

பரிகாரங்கள்...

         
பரிகாரம் என்ற வார்த்தையைக்  கேட்டவுடன் பலருக்கு ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் பலரிடம் ஆயிரக்கணக்கிலே, லெட்சக்கணக்கிலே ஏமாற்றப்படுவதே காரணமாகும்.

யார் யாருக்குப் பரிகாரம் பண்ணுவது, வேறு ஒருவர் உங்களுக்காக பரிகாரம் பண்ணுகிறேன் என்றால் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.

நாம் அனைவரும் மூன்று விதமான பிரபஞ்ச இயக்கத்திற்கு உட்பட்டவராகிறோம்.
 
      1)      கிரியாச் சக்தி
       2)      இச்சா சக்தி
       3)      ஞான சக்தி.

இம்மூன்று சக்திகள் தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.

கிரியாசக்தி -  என்பது ஒருவர்  பிறக்கும் பொழுது அவர்களின் முன்னோர்களின் பூர்வ புண்ணிய கர்மாவின் நிலையைச் சார்ந்ததாகும். பொதுவாக இது ஏழு தலைமுறையை சார்ந்ததாகும்.

இச்சாசக்தி என்பது இப்பிறவியில் நாம் செய்யும் நன்மை, தீமையைச் சார்ந்ததாகும்.

ஞானசக்தி என்பது ஆன்மீக அருள் சக்தி ஆகும். இது நாம் பிரபஞ்ச இயக்கத்தின் உயர் சக்தியாகிய கடவுளின் அருள் ஆசியின் மூலம் பெறப்படுவதாகும். இந்த சக்தி தியானம், பூஜை, ஜெபம், தவம் ஆகியவற்றால் பெறுவதாகும். 
                                                                 
இவ்வாறு இருக்க எவ்வாறு உங்களுக்காக பரிகாரம் செய்ய முடியும் ?

பிரபஞ்ச உயர்சக்தியான கடவுளை பணமோ, பொருளோ கொடுத்து ஏமாற்ற முடியாது. கடவுள் ஒரு நியாமான வியாபாரி போன்றவர். கடவுள் அவரவர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப தண்டனை அளிப்பவராக இருக்கிறார். தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. சுய ஆதாயத்திற்காகவோ, சுய நலத்திற்காகவோ செய்யப்படும் பாவங்களுக்கு தண்டனை கண்டிப்பாக உண்டு. அது ஏழு தலைமுறை வரைக்கும் விடாமல் துரத்துவதாகும்.
   
நாம் அனைவரையும் நம்மை அறியாத தனிச் சக்தி நமது வினைகளுக்குத் தக்கபடி நவகிரகங்௧ள் மூலம் நமது வாழ்க்கையை இயக்கிக் கொண்டி௫க்கிறது. பூர்வ வினையின் கர்மாவின் அடிப்படையில் நாம் தோன்றுகிறோம்−அதுதான் நமது ஜனன ஜாதகம் அது தான் விதி.
   
தெரிந்து செய்த பாவங்களுக்காக காசிக்குச் சென்றோ, ஜெருசலேமுக்கு சென்றோ, மெக்காவுக்கு சென்றோ புனிதமாக்கிக் கொள்ளமுடியாது.

பூர்வ புண்ணியத்தில் பெற்ற தீமையான காரியங்களை இந்தப் பிறவியில் நன்மை செய்து தான் கழிக்க முடியும். நாம் செய்யும் நன்மை நமது வாரிசுகளுக்கும் நன்மை தரும் செயலாக அமைகிறது. நமது குணநலம் அதைச் சார்ந்த நன்மை தீமைகள், உடல் நலம் அனைத்தும் நமது மரபு அணுக்களில் பதியப்பட்டு விடுகிறது. தாயிடம் இருந்து ஏழு மரபு அணுக்களும், தந்தையிடம் இருந்து ஏழு மரபு அணுக்களும் பெற்று மனிதன் உருவாகிறான்.
 
வினை இரு வைகைப்படும் நல்வினை தீவினை பூர்வ வினையில் நல்வினை அதிகம் இ௫ப்பின் இப்பிறவியில் நல்லவைகளே நடக்கும். பூர்வ வினையில் தீயவினை அதிகம் இ௫ப்பின் இப்பிறவியில் தீயவைகளே நடக்கும். அதாவது கிரகங்கள் அவர் அவர் வினைகளுக்குத் தக்கபடி செயல்படுகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த கிரகங்களை நமது விருப்பத்திற்கு செயல்படுத்த முடிமா? நிச்சியமாய் முடியாது. அப்படி எனில் என்ன செய்வது?
     
வினையை வினையால் தான் சரிசெய்ய முடியும்.

பூர்வ வினையில் உள்ள தீவினை இந்த பிறவியில்நன்மை செய்துதான் சரி செய்ய முடியும்.

இத்தகைய மரபு அணுக்களின் தன்மையை நம் செயல்களின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் நன்மையாக மாற்ற முடியும் என்பது உண்மை. ஆகவே நமது வாரிசுகளை வளமாக்க நமது மரபு அணுக்களை வளமாக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம். ஜாதகம் என்பது ஒருவனின் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் ஒரு மனிதன் பிறக்கும் பொழுது நிர்ணயிக்கப்படுவதாகும். ஒரு குழந்தை கரு தரிக்கும் பொழுதே அது எவ்வாறு பிறக்கவேண்டும் என்பது, மற்றும் வாழ வேண்டும் என்பது, இறக்கவேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. இருப்பினும் விதியாகிய சூரியனை மதியாகிய சந்திரனால் வெல்ல முடியும். ஆம் கிரிகையின் சக்தியை இச்சை சக்தி கொண்டும், ஞானசக்தி கொண்டும் மாற்றவேண்டும். இதை நீங்கள் தான் செய்ய முடியும். பொதுவாக நாங்கள் பரிகாரத்தை மூன்று தன்மைகளைக் கொண்டதாக எண்ணுகிறோம்.
   
         
1) உடல் சார்ந்த பரிகாரம் -  உடல் சார்ந்த பரிகாரம் என்பது உணவு முறையைச் சார்ந்ததாகும்.

2) உள்ளம் சார்ந்த பரிகாரம் - உள்ளம் சார்ந்த பரிகாரம் என்பது தியானம், மந்திரங்கள், தெய்வீக சங்கல்பங்கள் போன்றவையாகும்.

3) உடமை சார்ந்த பரிகாரம் -  உடமை சார்ந்த பரிகாரம் என்பது தான தர்மங்களைச் சார்ந்ததாகும். தான தர்மங்கள் மூன்று வகைப்படுத்தலாம்.

1) பொருள்தானம் :-   பொருள்தானம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருள் கொடுத்து உதவுவது.

(உதாரணமாக: சுக்கிர பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு குடம், துணிமணிகளை வாங்கி கொடுத்தலாகும்.

பொருளாதாரத்தில் நீங்கள் சிறப்புடன் இல்லை என்றால்..

2) சிரம தானம் செய்யலாம்.

(உதாரணமாக சனி பகவானால்  பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர், கண்பார்வை அற்றோற்கு உடல் உழைப்பை தானமாகச் செய்யலாம்.

பொருளாதாரமும், உடல் ஆரோக்கியம் அற்றவர்களுக்கு..

3) நல் உணர்வு தானம் செய்யலாம்.

உதாரணமாக நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவருக்கு நலம் பெற வேண்டும் என்று நல் உணர்வு தானம் செய்யலாம்.

நாங்கள் யாருக்கும் பரிகாரம் செய்வதே கிடையாது. ஒருவருக்கு பசித்தால் அவர் தான் உணவு உண்ணவேண்டும். ஆகவே நாங்கள் உங்கள் ஜாதகம் மற்றும் பிரச்சனைகளை ஆய்ந்து அதற்கு ஏற்ப பரிகார முறைகளைக் கூறுகிறோம். ஆனால்

பரிகாரம் அதை நீங்கள் தான் செய்ய வேண்டியதாக இருக்கும்.

இத்தகைய பரிகாரங்களில் கூறப்படும் மந்திரங்கள் பீஜாச்சரங்களுடன் கூடிய சக்தி வாய்ந்த சிறு மந்திரகளாக இருக்கும்,    தவறானவர்கள், தவறான தொழில் செய்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள எண்ணாதவர்கள் தயவு செய்து எங்களை அணுகவேண்டாம்.

 1) தியானம் செய்வது மனச்சாந்தியும் தெளிவான முடிவெடுக்க உதவும்.

  கோடி பூஜைகள் ஒரு தோத்திரத்திற்கு சமம்!
  கோடிஸ்தோத்திரங்கள் ஒரு ஜெபத்திற்குச் சமம்!!
  கோடி ஜெபங்கள் ஒரு தியானத்திற்குச் சமம்!!!
  கோடிதியானங்கள் ஒரு லயத்திற்கு (மோட்சம்) சமம்!!!

தியானத்தினால் பாதை தெரியும். தியானத்திற்கு உயிர் ஓட்டமான மந்திரங்கள் தேவை. அத்தகைய மந்திரங்௧ளில் பீஐமந்திரங்கள் இடம் பெற வேண்டும். அத்தகைய மந்திரங்௧ள் உங்களுக்கு ஜதக ரீதியாலும் அனுபவரீதியாலும் உதவுவதாக அமைய வேண்டும். அத்தகைய மந்திரங்கள் உங்கள் குரு மூலமோ அல்லது எங்௧ளிடமோ பெற்றுக் கொள்ளுங்௧ள்.

இவைகள் அனைத்தும் எந்த ஒரு பிரதி உபகாரம் இன்றி செய்யப்பட வேண்டும்.  மனச்சாந்தியும் தெளிவான முடிவெடுக்க உதவும்.

 3) நேர்மையான நெறி முறையில் வாழ்வது மூலம் நாம் கிரகங்களின் தீமைகளிடமிருந்து விடுபடலாம்.
   
இம்சையைச் செய்யாதவர்௧ளுக்கும், இந்திரியங்களை அடக்கியவர்௧ளுக்கும், தர்மத்தால் சம்பாதிக்கப்பட்ட தனத்தை உடையவர்௧ளுக்கும், தர்ம சாஸ்த்திரங்௧ளை ௧டைப்பிடித்து நடப்பவர்௧ளுக்கும் நவகிரகங்௧ள் நன்மையைச் செய்யும்.

பாலதீபிகை என்ற சோதிட நூலில் மந்தேஸ்வர மகாரிஸி கூறியுள்ளர்...

அடுத்த 8 வழி சாலை பாஜக - அதிமுக வின் திட்டம்...


இலுமினாட்டி - பிரிஸ்மாவிற்கு பின்னால் யார் ?


பிரிஸ்மா எனும் வாசகம் ஸ்பானிய வார்த்தை ஆகும் இது 'ஒளியை கண்டுகொண்டேன்' என பொருள்படுகிறது. அத்தோடு இது பிரிஸ்ம் எனும் மூல சொல்லிலிருந்து புறப்படும் சொல்லாகும்.

பிரிஸ்ம் என்றால் 6 முகங்களை கொண்ட படிக முக்கோண அச்சு என்பதை பறை சாற்றுகின்றது . இஸ்ரேலிய கொடியில் 6 முக்கோண முகங்கள் உள்ளது என்பதை கவனத்தில் தற்போது கொள்வோம்.

இஸ்ரேலிய தொழிநுட்ப வல்லுனர்களால் இஸ்ரேலிய கொடியை பிரதிபலிக்கும் ஒரு புகைப்பட தொழிலநுட்ப திட்டம் ஆகும் .

பிரிஸ்மா என்ற பெயர் புதிய பெயர் அல்ல. யூதர்கள் தங்களது கடவுளை புகழ்வதற்காக பயன்படுத்தும் வார்த்தை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இது கூச்ச சுபாவம் கொண்ட பெண்கள் ஆண்கள் என இருபாலரும் தங்கள் உருவங்களை மாற்றி ஆபாசமற்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற ஏதுவான திட்டத்தை கொண்டதாகும்.

ஆடைக்கு கட்டுப்பாடு மற்றும் சுதந்திர பெண்களுக்கு வரப்பிரசாதமாக ஈர்க்கும் வகையில் புகைப்பட தொழில் நுட்பத்தை அமைத்துள்ளனர்.

இச்செயலி மூலம் தன்னை உருமாற்றி முற்றிலும் காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

யூதர்களான இலுமினாட்டியர்களின் சதி இது அதன் யதார்த்தமான விளைவு என்றாலும்.இதுவரை அனேகமான முஸ்லிம்களுக்கு பாலஸ்தீன நாட்டின் கொடி எப்படி இருக்கும் என்பது தெரியாது.

இவ் புகைப்பட தொழில் நுட்பத்தின் மூலம் இஸ்ரவேல் கொடியின் ( ♢ ) முக்கோண வடிவமான யூத இனத்தை பிரதிபலிக்கும் சின்னத்தை நாளடைவில் மக்கள் இனம்கண்டு கொள்வர்.

அத்தோடு பிரிஸ்மா தொழில் நுட்பத்தில் உங்கள் புகைப்படத்தில் உள்ள நிறங்கள் ஓர் அரியத்தினூடாக அனுப்பப்பட்டால் எவ்வாறு நிறமாற்றத்தை தரும்.

அரியம் யூதர்களின் பார்வையயில் கடவுளின் இயல்பை கொண்டஓர் உபகரணம் மற்றும் பிரமிட்டுக்களின் வரப்பிரசாதம்.

கடவுளின் அன்பளிப்பாக அரியம் பயன்படுவதும் யூதக் குறியீட்டில் பிரமிடும் அரியமும் முக்கிய இடத்தை வகிப்பதை பார்க்க முடிகிறது.

பலஸ்தீனம் ஒரு மாயை இஸ்ரவேல் மட்டுமே உண்மை என ஒப்புக்கொள்ளும் நிலைக்கு நாளைய தலைமுறையை வாதிட வைக்கும் தொழில் நுட்ப மற்றும் மனோவியல் தந்திரம் இது.

இந்த தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்படும் ஒவ்வொரு புகைப்படத்தின் மூலையிலும் குறிப்பிட்ட நபர் அறுகோண நட்சத்திர ஒளியை ஒப்புக்கொண்டார் என்பதாக அந்த புகைப்பட நுட்பம்.

தானாகவே செயல்படுகின்றது .
யூதர்களின் கடவுளுக்கு (தஜ்ஜால்) ஒப்பாக உங்கள் முகம் மாற்றப்பட்டு அக் கடவுளை வரவேற்பதறகாக இந்த புகைப்பட தொழில்நட்பம அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தஜ்ஜாலின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் யூதாஸ் தங்களுக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்க துடிக்கின்றனர்.

இலுமினாட்டிகளின் சதிகளும் மக்களை ஒவ்வொன்றாக கவருகின்றது...

இலுமினாட்டி கன்னட ஜக்கி நீ மூடிட்டு போடா...


நெஞ்சை நெகிழ்த்தும் புகைப்படங்கள்...


ஹிரோசிமா நாகசாஹி மீதான அணுகுண்டுத் தாக்குதல் ஹிரோசிமா ஆவணி 6 ஆம் திகதி (80,000 உயிரிழப்புக்கள்) நாகசாஹி ஆவணி 9 ஆம் திகதி (15 மில்லியன் உயிரிழப்புக்கள்)..

எது உண்மையான அனைவருக்கும் கிடைக்க கூடிய நிம்மதி...


(மக்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்க இந்த பதிவு பக்கம் திசை மாறுதுனு நினைக்க வேண்டாம் நல்ல சமூகத்தை உருவாக்குவதில் எங்களுக்கும் பங்கு இருக்கு).

பூமியில் மனிதனுக்கான உண்மையான சந்தோஷம் எது தெரியுமா ?

உன் இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

இதுல நடக்கும் magical moment என்னனா பதிலுக்கு அவர்களும் நமது இன்ப துன்பங்களை பங்கு போட்டு கொள்வது.

இப்படி நம்மோடு பங்கு போடும் ஒவ்வொரு உயிரும் அந்த நேரத்தில் கடவுளை போன்றவர்கள் சில கடவுள்கள் நிரந்தரமாக நம்ம கூடவே இருப்பாங்க
அப்படி நாம் கருவில் ஒரு புள்ளியாக தோன்றிய முதல் தங்களின் வாழ் நாள் முடியும் வரை நம்மக்காக இன்ப துன்பங்களை பங்கு போடும் நம்ம அம்மா மிக பெரிய கடவுள்.

தாய்யிடம் பகிர முடியாத விசயங்கள் ஆயிரம் இருக்கும் ஆனால் துணைவியோடு பகிரமுடியாத விசயம் என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை அப்படி நமது இன்ப துன்பங்களில் பங்கு போடவே இறைவனால் தரப்பட்ட இறைவி நமது துணைவியே.

அதனால்  எப்பவும் நம்மோடு வாழும் கடவுளோட இன்ப துன்பங்களை பகிர்ந்து சாந்தோஷமா இருங்க நமக்காக சிரிக்கவும் அழுகவும் ஆள் இருக்காங்கனு. எது உண்மையான அனைவருக்கும் கிடைக்க கூடிய நிம்மதி..

பூமியில் மனிதனுக்கான உண்மையான சந்தோஷம் எது தெரியுமா ?

உன் இன்ப துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

இதுல நடக்கும் magical moment என்னனா பதிலுக்கு அவர்களும் நமது இன்ப துன்பங்களை பங்கு போட்டு கொள்வது.

இப்படி நம்மோடு பங்கு போடும் ஒவ்வொரு உயிரும் அந்த நேரத்தில் கடவுளை போன்றவர்கள் சில கடவுள்கள் நிரந்தரமாக நம்ம கூடவே இருப்பாங்க
அப்படி நாம் கருவில் ஒரு புள்ளியாக தோன்றிய முதல் தங்களின் வாழ் நாள் முடியும் வரை நம்மக்காக இன்ப துன்பங்களை பங்கு போடும் நம்ம அம்மா மிக பெரிய கடவுள்.

தாய்யிடம் பகிர முடியாத விசயங்கள் ஆயிரம் இருக்கும் ஆனால் துணைவியோடு பகிரமுடியாத விசயம் என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை அப்படி நமது இன்ப துன்பங்களில் பங்கு போடவே இறைவனால் தரப்பட்ட இறைவி நமது துணைவியே.

அதனால்  எப்பவும் நம்மோடு வாழும் கடவுளோட இன்ப துன்பங்களை பகிர்ந்து சாந்தோஷமா இருங்க நமக்காக சிரிக்கவும் அழுகவும் ஆள் இருக்காங்கனு...

வாசனை திரவியம்...






பூசாமரம் - பூந்திகாய் அல்லது சோப்புகாய் மரம் இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும்...


இயற்கை மனிதருக்கு அளிக்கும் பல அரிய கொடைகளில் ஒன்று மரங்கள். இவை உடலுக்கும், மனதுக்கும் பலவித நன்மைகள் தருவதாக அமைந்திருக்கும்.

 சில மரங்களின் பயன்கள், சாப்பிடும் மருந்தாகவும், சில வெளி உபயோகத்துக்கும் என்ற வகையில் இருக்கும். சில மரங்கள் உள்ளுக்கும்  மேலுக்கும் பயன்கள் தரும் வகையில் இருக்கும். அப்படி ஒரு பயன்தரும் மரம்தான் பூசாமரம்.


நவீன உலகில் வாழ்கிற பெயரில் இன்று துனிகள் சலவை செய்ய மண்ணுக்கு கேடுவிலைவிக்கும் சோப்புகளை பயண்படுத்தி  தவளை மற்றும் மண்ணில் வாழும் நுன் உயிரணங்களை அழித்த பெருமை நம் தலைமுறையையே சேரும்.

நம் முன்னோர்கள் இந்த மரங்களை வீட்டின் அருகிலும் ஆற்றங்கறையோரங்களிலும் வளர்த்து வந்தனர்.

 சோப்புகாய் அரப்புகாய் போன்ற இயற்யாக கிடைக்க கூடிய பொருள்களில் இருந்து தமது உடலை தூய்மைபடுத்தியும் துனிகளை வெண்மை படுத்தியும் வந்தனர்.


அதுமாதிரியான அழுக்குகளை மீன்களும் தவளையும் இன்னும் பிற உயிரினங்களும் உன்டு வாழ்ந்தன ஆனால் இன்று நிலைமை வேறு தவளைகள் அழிவால் பெருகியது கொசுக்கள் தான்.

நிறைய நுரை வர சோப்பா கடையில கேட்டு வாங்குகிறோம் ஆனால் எந்த அளவுக்குகெடுதல் என்று யாருக்கும் தெரிவதில்லை...

குடிகெடுத்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள்...





இவையனைத்தும் நீரை #வணிகமயமாக்குதல் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே திட்டமிட்டு நடத்தப்படத்து என்பதை யாராலும் மறுக்க முடியாது...