இயற்கை மனிதருக்கு அளிக்கும் பல அரிய கொடைகளில் ஒன்று மரங்கள். இவை உடலுக்கும், மனதுக்கும் பலவித நன்மைகள் தருவதாக அமைந்திருக்கும்.
சில மரங்களின் பயன்கள், சாப்பிடும் மருந்தாகவும், சில வெளி உபயோகத்துக்கும் என்ற வகையில் இருக்கும். சில மரங்கள் உள்ளுக்கும் மேலுக்கும் பயன்கள் தரும் வகையில் இருக்கும். அப்படி ஒரு பயன்தரும் மரம்தான் பூசாமரம்.
நவீன உலகில் வாழ்கிற பெயரில் இன்று துனிகள் சலவை செய்ய மண்ணுக்கு கேடுவிலைவிக்கும் சோப்புகளை பயண்படுத்தி தவளை மற்றும் மண்ணில் வாழும் நுன் உயிரணங்களை அழித்த பெருமை நம் தலைமுறையையே சேரும்.
நம் முன்னோர்கள் இந்த மரங்களை வீட்டின் அருகிலும் ஆற்றங்கறையோரங்களிலும் வளர்த்து வந்தனர்.
சோப்புகாய் அரப்புகாய் போன்ற இயற்யாக கிடைக்க கூடிய பொருள்களில் இருந்து தமது உடலை தூய்மைபடுத்தியும் துனிகளை வெண்மை படுத்தியும் வந்தனர்.
அதுமாதிரியான அழுக்குகளை மீன்களும் தவளையும் இன்னும் பிற உயிரினங்களும் உன்டு வாழ்ந்தன ஆனால் இன்று நிலைமை வேறு தவளைகள் அழிவால் பெருகியது கொசுக்கள் தான்.
நிறைய நுரை வர சோப்பா கடையில கேட்டு வாங்குகிறோம் ஆனால் எந்த அளவுக்குகெடுதல் என்று யாருக்கும் தெரிவதில்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.