12/01/2018

பெர்முடா முக்கோணம் போல பீதியை கிளப்பும் ஜப்பானில் பிசாசு கடல்...


பிசாசின் கடல்.. கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால்.. இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான்
கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’. அதாவது டிராகன் முக்கோணம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசின் கடல்.

ஜப்பானிய மொழியில் ‘மா-நோ-உமி’ என்கிறார்கள். இதன் வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியது இல்லையாம்.

இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை.

இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துகிறது.

அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதி மற்றும் கரீபியன் கடல் பகுதியில் உள்ள பிரபலமான மர்ம பகுதி ‘பெர்முடா டிரையாங்கிள்’. இந்த வழியாக சென்ற கப்பல்கள், இப்பகுதியை கடந்து சென்ற விமானங்கள் போன்றவை இப்பகுதியில் மர்மமான முறையில் மாயமானதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப் பந்தின் மறு புறத்தில்தான் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி இருப்பதால் மக்களை அதிகம் பீதிக்கு உள்ளாக்குகிறது ‘மா நோ-உமி’ முக்கோணம்.

பெர்முடா முக்கோணம் போல, மாநோஉமி வழியாக செல்லும் கப்பல்கள், விமானங்களும் அடிக்கடி மாயமாகி இருக்கின்றன.

1952 - 1954 காலகட்டத்தில் டிராகன் முக்கோண கடல் பகுதி வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த கப்பல்களில் பயணித்த 700 பேரின் நிலை பற்றியும் தெரியவில்லை.

இதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வரவில்லை.

அதற்கு பிறகு, ஜப்பான் அரசு சுதாரித்துக் கொண்டு அப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்தது என்கிறார்கள் டிராகன் முக்கோணம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள்.

விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் வேறு மாதிரி சொல்கிறார்கள்.

ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளிலும் எரிமலைகள் வெடிப்பது, நில அதிர்வு ஏற்படுவது அடிக்கடி நடப்பது தான்.

கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள், நில அதிர்வுகள் காரணமாக கடலின் மேல் பகுதியில் திடீர் அலைகள் உருவாகின்றன. அதில் சிக்கும் கப்பல்கள் விபத்துக்குள்ளாகின்றன.

டிராகன் முக்கோண பகுதியில் சில தீவுகள் கூட திடீர் திடீரென மாயமாகின்றன. திடீரென புதிதாக தீவுகள் உருவாகின்றன.

இதற்கெல்லாம்கூட கடல் அடியில் ஏற்படும் நிலநடுக்கமும் எரிமலைகளும் தான் காரணம் என்கின்றனர். நெருப்பை கக்கும் டிராகன்கள் தான் இதற்கு காரணம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர்.

மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்து விட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன என்கின்றனர் அவர்கள்.

பெர்முடா முக்கோணம் போலவே.. இன்னமும் மர்மமாக இருக்கிறது பிசாசு கடல்...

மனிதர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதி வண்ண பவுடர்கள் வைத்து நடத்தப்படும் வட நாட்டான் ஹோலி பண்டிகையை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்...


திராவிடம் என்பது...


தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் சொல்...

தமிழனை இளித்த வாயாக மாற்ற தேவை திராவிடம் என்ற சொல்..

திராவிட இயக்கத்தின் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...

கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை,
மேலவளவு,
கொடியன்குளம்,
தாமிரபரணி,
பரமக்குடி,

என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும்...

திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக்கொண்டு வந்த திராவிட இயக்கங்கள்..

தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என மதுரை ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு...


போராட்டம் வாபஸ்...


இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு சிவன் அவர்கள் படித்த குமரி அரசு பள்ளியில் இனிப்பு வழங்கி மகிழ்ந்த ஆசிரியர்கள்...


சிவன் அவர்களின் விஞ்ஞாச அனுபவத்தால்  ஒரே ராக்கட்டில் 104 செயற்கைகோள்களை இஸ்ரோ அனுப்பி உலக சாதனை படைத்தது குறிப்பிடதக்கது...

சிந்தியுங்கள் அரசியல் புரியும்.. வேண்டும் என்றே அழிக்கப்படும் அரசு போக்குவரத்து துறை...


சூரியனில் என்ன நடக்கிறது ?


மொத்த சூரிய குடும்பத்தின் நிறையில் 98.8 சதம் நிறை சூரியனின் நிறை தான்.

இந்த அபரிமிதமான நிறை காரணமாக ஏற்படும் ஈர்ப்பின் விளைவாக சூரியனுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் ஹீலியம் அணுக்கள் ஒன்றை ஒன்று இனைந்து புது புது கனமான தனிமங்களை உண்டாக்கி கொண்டு அணு கரு இணைவு காரணமாக ஏற்படும் பெரும் வெப்பத்தை வெளியிடுகின்றன.

சூரியன் ஒரு மெகா சைஸ் ஹைட்ரஜன் பாம்...

தமிழக அரசின் அடுத்த கொள்ளை...


காஞ்சிபுரம் மாவட்டம். பல்லாவரம் தாலுக்கா. கோவூர் தண்டலம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில்...


சுமார் 70 ஆண்டு கடந்த  வில்வ  மரத்தினை அடி யோடு வேட்டி  எடுத்து சென்று  விட்டனர் சமுக விரோதிகள்.

இந்த கோயில் தமிழக அறநிலையத் துறையின் கீழ்  பூஜை  செய்யப்படுகிறது.

சமுக ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க உதவும் மாறு கேட்டுக் கோள்கிறோம் தண்டலம் கிராம மக்கள்...

அப்படியே ஜனாதிபதி ஆளுநரும் மக்களே தேர்தெடுக்கிற சட்டம் கொண்டு வாங்கடா...


எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?


எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக் கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக் கொண்டே வருவதைப் போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு...

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க சில வழிகள்..

1. தியானம்...

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை...

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்...

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்...

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்...

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்...

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்...

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்...

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்...

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.

உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.

உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.

உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.

உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்...

1970ல் காளைகளுடன் நம் தமிழர்கள்...


பொங்கலை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...


ஒரு நாள் முன் கூட்டியே விடுமுறை அளித்து அரசு உத்தரவு...

ஜல்லிகட்டில் பங்கேற்க ஆதார் காட்டாம் - மதுரையில் மாடுபிடி வீரர்களுக்கு கடும் கெடுபுடி.. விடிய விடிய காத்திருந்து பதிவு...


இசைக்கருவி மிருதங்கம்...


மிருதங்கம் (தண்ணுமை) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும்.

மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும்.

மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது.

இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன.

வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

இது ‘மிருத்’ அல்லது ஒருவித கல்லின் தூளினை முக்கிய அங்கமாக உடையது. அந்த கிட்டாங் கல்லின் மண்ணை பசை சேர்த்து தோலினிடத்தே வட்டமாக பூசி ஒழுங்கு செய்வதால் அதனின்று ஆதார சுருதி ஒலிக்கின்றது.

அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதர்க்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது. இதில் முத்திரண்டு கண்கள் உள்ளன. இந்த கண்களின் பகுதியில் குச்சிப்புல்லைத் தட்டி சுருதியைச் சேர்த்துக் கொள்வர்.

தம்புராவைப் போல் இதுவும் பாடுவோருக்குச் சிறந்த துணையாக அமைகின்றது. தம்புராவானது பாடுவோரின் சுருதி சுத்தத்தையும், சுரத்தானங்களுக்கு அப்பாலாய் விளங்கும் அந்தர அலகு நுட்பத்தின் அறிவையும் விளக்க, மிருதங்கமானது பாட்டின் லய சுத்தத்தையும் லய வின்னியாச நுட்பங்களையும் எடுத்து விளக்க உதவுகின்றது. பாடிவரும் பாட்டுக்களின் தாள அமைப்புகளை லயவிரிவுகள் எடுத்து உணர்த்தி வரும். எடுத்துக் கொண்ட கால பிரமாணம் தவறி வேகமாய் விடாமலும், விளம்பமாய் விடாமலும் தடுத்து வருவது இம்மிருதங்கத்தின் முக்கிய பயன் எனலாம்...

ஒரு மனிதனின் அனைத்து தகவல்களும் மறைமுகமாக சேமிக்கும் கூகுள்...


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...


நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.

எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரிய வைத்தவர்கள்.

அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

மலேசியாவில் பிச்சை எடுக்க சென்ற தமிழக நடிகர் சங்கத்தின் விழா தோல்விக்கு.. சமூக வலைத்தளமே காரணம்...


திருச்சி கரூர் ரயில் நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலம் வரை நீட்டிப்பு - ஜனவரி 17 வரை மட்டும்...


Trichy-Karur DEMU train extended to Salem via Namakkal, Rasipuram - till Jan 17th.

ரயில் 76833 திருச்சி/Trichy  - காலை  புறப்பாடு 09:35 கரூர் 11:35 சேலம்/Salem 13:25 (மதியம் 1.25)

ரயில் 76834 சேலம்/Salem - மதியம் புறப்பாடு 13:30 கரூர் 15:30 திருச்சி/Trichy 17:35 (மாலை 5:35)...

பூமியின் சுற்று வட்ட பாதையை வைத்து கால நிலகளை கணித்த தமிழர்கள்...


தமிழகத்திற்கு தமிழ் தேசியம் மட்டுமே சரியானது...


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ..

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ..

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ..

அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே...

மற்ற எல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம், தமிழகத்தில் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...

தமிழகத்தை சேர்ந்த சிவன்பிள்ளை விண்வெளித்துறை செயலராகவும், இஸ்ரோ தலைவராக நியமனம்...


உங்கள் வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...


உண்மையான கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும்.

மேலும், உண்மையான கொண்டாட்டம் நாள்காட்டியைப் பொறுத்து அமைவதில்லை.

அதாவது ஜனவரி முதல் தேதியில் நீங்கள் கொண்டாடுவீர்கள் என அமையாது. இது விசித்திரமானது...

வருடம் முழுவதும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள்,  ஜனவரி முதலாம் நாள் நீங்கள் சட்டென துயரத்திலிருந்து விடுபட்டு நடனமாடுவீர்கள்.

அன்று உங்கள் துயரம் போலியானதாக இருக்க வேண்டும் அல்லது ஜனவரி முதல் தேதி போலியானதாக இருக்க வேண்டும்.

இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.

மேலும், ஐனவரி முதல் தேதி கடந்து சென்ற பின்னர், நீங்கள் உங்கள் கருங்குழிக்குத் திரும்ப செல்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் தமது துயரத்திற்குள், ஒவ்வொருவரும் தமது கவலைக்குள் செல்கிறீர்கள்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக அமைய வேண்டும். முழு வருடமும் ஒரு தீபங்களின் திருநாளாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்களால் வளரமுடியும்,
மலரமுடியும்.

சிறிய விஷயங்களை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...