16/05/2018

பாஜக எடியுரப்பா ரெட்டி ஊழல் வாதிகள் என்று இவர்களே கட்சியை விட்டு தூக்குவார்களாம்...


பின்னர் மன்னித்து கட்சியில் சேர்த்து கொண்டு தேர்தலில் போட்டி இட வாய்ப்பு கொடுப்பார்களாம்.

உடனே மக்களும் இவர்களை மன்னித்து தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைப்பார்களாம்.

அடேய் கேட்க்கிறவன் கேனையனாக இருந்தால்...

என்னதான் சொன்னாலும் எழிதினாலும் பிராடு செய்து தான் வெற்றி பெற்றார்கள் என்று தெரிந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. அவர்கள் நினைத்ததை சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள்...

 இனி இந்தியாவை இறைவன் தான் காப்பாற்றனும்...

கடைசி தமிழனின் ரத்தம் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க கால்பதிக்க முடியாது...


க்வாலிட்டி வால்ஸ் (KwalityWalls) - இது ஐஸ்கிரீமே அல்ல...


இந்திய ஐஸ்கிரீம் நிறுவனமான குவாலிட்டி வால்ஸ் ஐ 1995 ஆம் ஆண்டு யூனிலீவர் வாங்கியது .பிறகு இத்தாலியின் கார்னேட்டோ(cornetto) மற்றும் மேக்னம்(Magnum) நிறுவனங்களையும் வாங்கியது. 2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தனது ஐஸ்கிரீமை கடைபரப்பியது.

கடந்த ஆண்டு அமுல் நிறுவனம் தொடந்த ஒரு வழக்கின் மூலம் தான் ஒரு உண்மை வெளியே வந்தது. அதாவது உலகளாவிய உணவு விதிகளின் படி பால், சர்க்கரை சேர்த்து செய்த பனிக்கூழ் தான் ஐஸ்கிரீம். ஆனால் யூனிலீவர் , பாமாயிலை ஹைட்ரஜனேற்றம் செய்து ( கிட்டத்தட்ட வனஸ்பதி தயாரிப்பதை போல ) , அதற்கு செயற்கை சுவையூட்டி ஐஸ்கிரீம் தயாரிக்கிறது.

 அமுல் தொடர்ந்த வழக்கிற்கு பிறகும் யூனிலீவர் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்கிறது ஆனால் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை சொல்லாமல்.. ஆம் குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் பேக்கிங்கில்  "Icecream" வார்த்தையே இல்லை.KwalityWalls என்ற பெயர் மட்டுமே இருக்கும். அது என்ன பொருள் என்றும் குறிப்பிடப்படவில்லை . ஆனாலும் விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது...

இந்த கொடுமைய எங்க போய் சொல்ல?


சாலையில் அமர்ந்து கெஜ்ரிவால் போராட்டம்...


டில்லியில் துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துகிறார்.

பெண்களின் பாதுகாப்புக்காக டில்லி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த டில்லி அரசு திட்டமிட்டிருந்தது.

இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனை கண்டித்தும் அவரது இல்லத்தை நோக்கி, அரவிந்த் கெஜ்ரிவால், எம்.எல்.ஏ.க்களுடன் பேரணியாக சென்றார்.

இந்நிலையில், துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து, கெஜ்ரிவால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கெஜ்ரிவாலுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்...

எல்லா திருடர்களையும் ஒருங்கிணைக்கும் இலுமினாட்டி கன்னடன் கமல்...


இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த காவிரி திட்ட சரத்துகளை விமர்சித்து ஏமாற்றி கொள்ளாதீர்கள்...


கன்னடனே தருவதாக சொன்னாலும் இந்திய அரசு காவிரியை தமிழ்நாட்டில் விடாது.

விவசாயத்தை அழிப்பது, காவிரி படுகை மக்களை அங்கு வாழமுடியாமல் வெளியேற்றுவது, வெளியேற்றி  சென்னை விரிவாக்க பெருநகரத்தில் 5 கோடி பேரை அடைப்பது, பின் காவிரி படுகையை  ஹைட்ரோகார்பன், நிலக்கரி மண்டலமாக்குவது..

இவையெல்லாம், அமெரிக்க பிரிட்டன் பன்னாட்டு முதலாளிகளின், அதன் தரகனான பார்ப்பன பனியா இந்தியாவின் 50 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள்.

வெகுமக்கள் போராட்டமாக, தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை விரட்டியடியுங்கள். காவிரி தானே வரும்...

பாஜக மோடியும் தேர்தல் வெற்றி இரகசியமும்...


உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம்...


நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும்.

ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.

நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்.. நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது.

பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.. சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும்.

இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பளபளப்பாக்கு (polish) தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.

நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.

இரத்தத்தில் போதிய அளவுக்கு பிராணவாயு இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஒரு ரசாயன மூலகம் (arsenic) என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது.

இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும். சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்...

யார் வீட்டு பணத்த இப்படி செலவு பண்றீங்க?


கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வரலாற்று சிறப்புவாய்ந்த அணை வெலிங்டன் நீர்த்தேக்க அணை...


ஒவ்வொரு வருடமும் அணை பராமரிப்புக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. இந்த பணம் எதுவும் செலவிடப்படாமல் ஒப்பந்தம் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கூட்டுக் கொள்ளை...

சேலம் கலெட்டர் ரோகினி பாஜக பினாமி என்ற உண்மை வெளிவந்ததும்.. பாஜக பத்தாஸ் கதற தொடங்கி விட்டார்கள்...


வெள்ளையர்கள் செய்த அட்டூழியங்கள்...


அமெரிக்காவில் இந்த வெள்ளையர்கள் கருப்பு மக்கள் மீது செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல...

அவர்கள் ஆயிரக்கணக்கான  வெள்ளையர்களை வைத்து கருப்பர்களை கொல்வதற்காகவே அமைப்பை வைத்து இருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இன்றும் கூட அந்த அமைப்பு உள்ளது..

இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பங்களில் கூறுகிறேன்..

இன்று ஆப்பிரிக்காவில் இவர்கள் செய்த அட்டூழியங்களை சொல்கிறேன் வாசியுங்கள் ..

ஹெக்டேர் பீட்டர்சன்...

ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் வெள்ளையர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு கருப்பின மக்களை கொடுமை படுத்தி வந்தனர்.

அவர்களுக்கு உணவு நீர் இடம் எல்லாவற்றிலும் பாகுபாடு நடந்தது...

மீறி தட்டி கேட்பவருக்கு மரணமே பதிலாக வந்தது..

இதை எதிர்த்து இந்த பீட்டர்சன் சாலையில் அமர்ந்து மக்களுடன் போராடினார்.

அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது பொத்தென்று விழுந்தார் பீட்டர்சன்...

ஆம் அவரை இராணுவ குண்டு துளைத்தது.

இன்னொருவர் உடனே கை தாங்களாக பீட்டர்சனை பிடித்து தூக்கி கொண்டு அவரும் உயிர் பயத்தில் கலவர முகத்துடன் அந்த இடத்தில் இருந்து ஓடினார்...

இந்த சம்பவத்தை அருகே இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்..

இது தான் பின்னர் இவர்கள் போராட்டத்தின் சின்னமாக அறிவிக்க பட்டது...

இந்த புகைப்படங்கள் உலகம் எங்கும் அனுப்பப்பட்டு போராட்டம் தூண்டப்பட்டது.

பீட்டர்சனை தூக்கி கொண்டு ஓடியது போன்ற புகைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதே போன்று சிலைகள் வைக்கப்பட்டு போராட்டம் தீவிரப்படுத்த பட்டது...

பிறகு தான் சூழ்நிலையை உணர்ந்த வெள்ளையர் அரசாங்கம் இறங்கி வந்தது..

இன்று தென் ஆப்பிரிக்கா சுதந்திரமாக இருக்க காரணம் பீட்டர்சனின் இறப்பு தான்...

போராட்டம் செய்து குண்டடிபட்டு இறக்கும் போது இந்த பீட்டர்சனுக்கு வயது என்ன தெரியுமா ?

வெறும் 12 வயது தான்....

ஸ்டெர்லைட் விவகாரம்.. விஸ்வரூபம் எடுக்க இருக்கும் மக்கள்...


பிரம்மத்தை நோக்கி - 1...


இந்த பிரபஞ்சம் இருவேறு பண்புகளை கொண்டது. ஒன்று அலைப்பண்பு மற்றொன்று துகள் பண்பு.

ஒளியின் வேகத்திற்கு உட்பட்டவை அனைத்தும் துகள் பண்புகளையும், உட்படாதவை அலைப் பண்புகளையும் கொண்டுள்ளது.

எதையும் சாராத ஒரு தனிமுதற் பொருள் உண்டென்றால் அது ஒளி(கடவுள்) மட்டுமே. இது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை. காலம்தான் பிரபஞ்சத்திற்குள் உள்ளது. உண்மையில் காலம் என்ற ஒன்றே இல்லை.

உங்களால் ஒளி வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கே காலம் இருக்காது உறைந்து போகும்.

ஒருசெல் உயிரியாக இருந்தபோது இயற்கை அதற்கு அளித்த பாடம் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும், தகுதியற்றது அழிந்துவிடும்.

எனவே ஒருசெல் உயிரி உணர்ந்தது இந்த மழை வெப்பம் குளிர் புயல் போன்ற கடினமான சூழலில் தனித்து உயிர்வாழ முடியாது என்பதே.

எனவே படிப்படியாக பரிணாமம் அடைந்து தொகுப்பாக பிணைந்து கூட்டு உயிரிகளாக சேர்ந்து வாழ ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிரிக்கும் தனித்தனி தேவைகள் இருந்தது.

அவற்றை பெற்றுக்கொள்ள அவைகளில் இருந்து எண்ணங்கள் தோன்றியது. அந்த எண்ணங்களின் தொகுப்பான மனம் அவற்றை பாதுகாப்பதோடு அவைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லது.

பல கோடி உயிரிகள் சேர்ந்து தொகுப்பாக வாழ்ந்து தத்தம் தேவைகளை மனதின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது.

கடைசியாக பெரிய அளவில் பரிணாமம் அடைந்து அவை சுமார் 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்புகளாக கூடி வாழ்கிறது.

அவைகளை பாதுகாக்கவும் அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் 24/7 மணி நேரமும் அயராது உழைக்கிறது.

ஆனால் அனைத்து உயிரிகளின் நோக்கமும் அவற்றின் பயணமும் சமநிலையை பெறுவதே, அதாவது பிரம்மத்தை அடைவதே.

இந்த 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்பு வேறெதும் இல்லை, அதுதான் மனிதன்...

பாஜக வின் போலி ஐனநாயகம்...


ஏகாதிபத்திய கொடுமை...


இந்த உலகில் ஒருவன் பசிக்காக திருடினாலும் திருடன் என்று சொல்லி தண்டனை தரும் உலகம் தான் இப்படிப்பட்ட வரலாற்றையும் சகித்து கொண்டுள்ளது..

அது என்ன வரலாறு ?

அரசியலுக்காக ஆட்சிக்காக பணத்திற்க்காக கொள்ளை அடிப்பதற்க்காக உலகம் முழுவதும் அமைதியாக வாழ்ந்த மக்களை..

அந்த நாட்டை பிடிப்பதில் மூலம் அடிமையாக்கியது கொன்று குவித்தது
இந்த பிரிட்டிஷ் ..

1783 முதல் 1997 வரை உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு நாட்டை பிடித்து அவர்களை ஆட்சி செய்கிறோம் என்று கொடுமை படுத்தி எதிர்ப்பவர்களை கொலை செய்த கேடுகெட்ட அரசு தான் இந்த பிரிடிஷ்..

ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம்,
ஐரோப்பா கண்டம் என்று உலகின் மூளை முடுக்கெல்லாம் நுழைந்து அவர்களின் காலனியாதிக்கத்தை நுழைத்து எதிர்ப்பவர்களை அங்குள்ள ஆட்சியாளர்கள் பொதுமக்கள் என்று இவர்கள் கொலை செய்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

150 மில்லியன் மக்கள்...

இந்தியாவில் சில பகுதியில் இவர்களால் உருக்குலைந்து போன பகுதியை சீரமைக்கும் நோக்கில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பெற்றது அங்கே இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆயிரம் ...

இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அன்றைய தினம் எடுக்கப்பட்ட கணக்கு மட்டுமே..

ஆமா இவர்கள் எதற்க்கு இறந்தார்கள்
தெரியுமா ?

சாப்பிட ஒன்றும் இல்லாமல் பட்டினியால் துடித்து வயிறு ஒட்டிய நிலையில் இறந்தார்கள்..

இதை உருவாக்கியது தி கிரேட் பிரிட்டன் என்று இன்று சொல்லக்கூடிய கேவலமான நாடு...

நினைத்து பாருங்கள் எம் பிள்ளையோ உங்கள் பிள்ளையோ பட்டினியால் உயிரை மாய்த்து கொண்டதை..

அதை விட முக்கியம் உலகில் 150 மில்லியன் கொலைகள் எதற்க்காக.?

ஒருவன் ஒரு பெண்ணிடம் திருடிவிட்டு அவளை கொலை செய்து விட்டு போனால் என்ன மாதிரியான தண்டனை தரும் இவ்வுலகம்..

இவர்களுக்கெல்லாம் இச்சட்டம் பொருந்தாதா ?

ஒரு கொலைக்கு இத்தனை நாள் கடுங்காவல் தண்டனை என்றால் இவ்வளவு கொலைகளுக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்..

இதெல்லாம் விட கொடுமை அந்த நாடுகளுடன் இன்று கை குலுக்கி சிறிது கொண்டு போஸ் கொடுக்கும் மானங்கெட்ட அரசியல் வாதிகள்.... 

புகைப்படம் : இவர்களால் பாதிக்கப்பட்ட இந்திய நெசவாளர்கள்..

ஆம் புகைப்படத்தில் உள்ளவர்கள்
நம் முன்னோர்கள்...

மூன்றாம் உலகப் போர் நடைபெற்றால் அணு ஆயுத போராகவே இருக்கும்...


உங்களுக்கு கிருஸ்துவ மதத்தையும் கிருஸ்துவ நண்பர்களையும் நன்றாகவே தெரியும்....


ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மோர்மோனிஸம் (mormonism) என்கிற மதம்...

இது கிருஸ்துவ மதத்தில் உள்ள பெந்தெகோஸ்தே போன்ற பிரிவுகள் கிடையாது...

mormonism என்பது ஒரு மதம் அதேசமயம் கிருஸ்துவத்தை தழுவிய ஒரு மதம் என்ன குழப்பமாக இருக்கிறதா?

இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்புவார்கள் அதே நேரத்தில் கிருஸ்துவ மதத்தை நம்பமாட்டார்கள்...

புனித பைபிளை ஏற்று கொள்வார்கள் அதே நேரத்தில் book of Mormon என்கிற புத்தகத்தை வேதமாக கருதுவார்கள்...

1820 களில் தான் இந்த மதம் அல்லது இயக்கம் உருவாகிறது...

இது எங்கயோ நாலு பேர் செய்யிறதை எல்லாம் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டால் அது தவறு..

அமெரிக்கவில் மட்டும் இவர்கள் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இந்த மதம் அல்லது இயக்கத்தில் உள்ளனர்..

மெக்ஸிகோ பிரேசில் பிலிப்பைன்ஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது...

இவர்களுடைய தடுக்கப்பட்ட உணவுகளில் முக்கியமானது...

டீ காபி போன்றவைகள்..

இந்த மோர்மன்ஸ் மதத்தவர்கள் நினைத்து கூட பார்க்க கூடாது.....

முக்கியமாக ஆல்கஹால் எதுவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது....

உருவ வழிபாடு சிலைகளை கடுமையாக எதிர்பவர்கள்..

ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர் என்றே உலக அறிஞர்கள் கூறுகின்றனர்...

உரிமையை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே, நம்முடைய இந்த வாழ்க்கை பிறவி பலனை அடைய முடியும்...


சம்பாதிக்கிறோம், வாழ்கிறோம் என்பதல்ல வாழ்க்கை...

எப்படி வாழ்ந்தோம் என்பதே இங்கு கேள்வி..?

HMS டேடலஸ் ஃபோட்டோ – 1919...


ஆவிகளின் நடமாட்டத்திற்கு மற்றுமொரு கிளாஸிக் உதாரணமாய்த் திகழும் இந்தப்படம் HMS டேடலஸ் என்ற ராயல் நேவிக்கப்பலில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோ.

இந்தப் போட்டாவில் பின்ணனியில் தெரியும் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஃப்ரெட்டி ஜாக்சன் என்ற மெக்கானிக்.

கூடுதல் தகவல் - இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அதேக் கப்பலில் அந்த மெக்கானிக் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார். அதுவுமில்லாமல் இது போன்ற கேளிக்கைகளில் தவறாமல் கலந்து கொள்வது அவரது சுபாவமாம்...

தெலுங்கன் ஸ்டாலின்.. கன்னடன் கமல் சந்திப்பு...


ஜுலியஸ் சீசர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பாக இவர் ஆட்சி செய்தாலும்...


சீசரை பொருத்த வரை நல்ல மனிதர் என்பதை தாண்டி நாம் பேசுவது இல்லை...

ஆயினும் இவருடைய தனிப்பட்ட வாழ்கை முறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

எல்லாவற்றிலும் தன் பெயர் இருக்க வேண்டுமென நினைத்தவர். இவர் கிட்டத்தட்ட இன்றைய அரசியல் வாதிகள் போன்றே தான் என்ற மமதை.

இதன் தாக்கத்தால் தம் மக்களாலே கொலையும் செய்யப்பட்டார்.

அதன் படி தான் ஜுலியஸ் என்ற தமது பெயரையே ஒரு மாதத்திற்கான பெயராக வைத்தார் அதான் ஜுலை மாதம்.

அதே போன்றே கிளியோபாத்ராவுடன் கொண்டிருந்த காதல் போன்ற நிகழ்வுகள்.. அவரை பற்றி தூற்ற ஏதுவாக இருந்தது.

இப்படியான வாழ்கை வாழ்ந்த சீசர் பெருமை வாய்ந்த அரசனாக தான் இருந்தார்...

ஜெர்மனியில் உயர் பதவியில் உள்ள மனிதர்களுக்கு கெய்சர் என்ற அடைமொழியுடன் அழைப்பார்கள்.

அதே போன்று நமக்கு பிரசித்தி பெற்ற வார்த்தையான சார் என்கிற வார்தையும்,

சீசர் என்பதில் இருந்து வந்தவைகள் தான்..

CZAR +சீ சார் = சார்..

இனிமேல் யாரையாவது சார் என்று கூறும் போது நீங்கள் ஜுலியஸ் சீசரின் பெயரை தான் கூப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்....

உசாரய்யா உசாரு...😂😂


பல் மருத்துவ குறிப்புகள்....


சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,வைன் (Wine),அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும்.

 உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் (Enamels) பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பல் தேய்ப்பேன் (brush) கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும், அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும்.

காலை மாலை இருவேளையும் பல் துலக்குங்கள்...

என்ன நடக்கிறது.. யார் தடுப்பது..?