டில்லியில் துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துகிறார்.
பெண்களின் பாதுகாப்புக்காக டில்லி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த டில்லி அரசு திட்டமிட்டிருந்தது.
இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனை கண்டித்தும் அவரது இல்லத்தை நோக்கி, அரவிந்த் கெஜ்ரிவால், எம்.எல்.ஏ.க்களுடன் பேரணியாக சென்றார்.
இந்நிலையில், துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து, கெஜ்ரிவால் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கெஜ்ரிவாலுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.