16/05/2018

ஏகாதிபத்திய கொடுமை...


இந்த உலகில் ஒருவன் பசிக்காக திருடினாலும் திருடன் என்று சொல்லி தண்டனை தரும் உலகம் தான் இப்படிப்பட்ட வரலாற்றையும் சகித்து கொண்டுள்ளது..

அது என்ன வரலாறு ?

அரசியலுக்காக ஆட்சிக்காக பணத்திற்க்காக கொள்ளை அடிப்பதற்க்காக உலகம் முழுவதும் அமைதியாக வாழ்ந்த மக்களை..

அந்த நாட்டை பிடிப்பதில் மூலம் அடிமையாக்கியது கொன்று குவித்தது
இந்த பிரிட்டிஷ் ..

1783 முதல் 1997 வரை உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு நாட்டை பிடித்து அவர்களை ஆட்சி செய்கிறோம் என்று கொடுமை படுத்தி எதிர்ப்பவர்களை கொலை செய்த கேடுகெட்ட அரசு தான் இந்த பிரிடிஷ்..

ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம்,
ஐரோப்பா கண்டம் என்று உலகின் மூளை முடுக்கெல்லாம் நுழைந்து அவர்களின் காலனியாதிக்கத்தை நுழைத்து எதிர்ப்பவர்களை அங்குள்ள ஆட்சியாளர்கள் பொதுமக்கள் என்று இவர்கள் கொலை செய்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

150 மில்லியன் மக்கள்...

இந்தியாவில் சில பகுதியில் இவர்களால் உருக்குலைந்து போன பகுதியை சீரமைக்கும் நோக்கில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பெற்றது அங்கே இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆயிரம் ...

இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அன்றைய தினம் எடுக்கப்பட்ட கணக்கு மட்டுமே..

ஆமா இவர்கள் எதற்க்கு இறந்தார்கள்
தெரியுமா ?

சாப்பிட ஒன்றும் இல்லாமல் பட்டினியால் துடித்து வயிறு ஒட்டிய நிலையில் இறந்தார்கள்..

இதை உருவாக்கியது தி கிரேட் பிரிட்டன் என்று இன்று சொல்லக்கூடிய கேவலமான நாடு...

நினைத்து பாருங்கள் எம் பிள்ளையோ உங்கள் பிள்ளையோ பட்டினியால் உயிரை மாய்த்து கொண்டதை..

அதை விட முக்கியம் உலகில் 150 மில்லியன் கொலைகள் எதற்க்காக.?

ஒருவன் ஒரு பெண்ணிடம் திருடிவிட்டு அவளை கொலை செய்து விட்டு போனால் என்ன மாதிரியான தண்டனை தரும் இவ்வுலகம்..

இவர்களுக்கெல்லாம் இச்சட்டம் பொருந்தாதா ?

ஒரு கொலைக்கு இத்தனை நாள் கடுங்காவல் தண்டனை என்றால் இவ்வளவு கொலைகளுக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்..

இதெல்லாம் விட கொடுமை அந்த நாடுகளுடன் இன்று கை குலுக்கி சிறிது கொண்டு போஸ் கொடுக்கும் மானங்கெட்ட அரசியல் வாதிகள்.... 

புகைப்படம் : இவர்களால் பாதிக்கப்பட்ட இந்திய நெசவாளர்கள்..

ஆம் புகைப்படத்தில் உள்ளவர்கள்
நம் முன்னோர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.