22/09/2020
உலக விஞ்ஞானம் திகைக்கும் நமது மகான்களின் அமானுஷ்யங்கள்...
யோகியின் உடல் ஆதிக்க சக்திகள்...
கேள்விகள் கேட்கப்படும் முன்பே, என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதை
அறியாமலேயே, அவற்றிற்கு முன் கூட்டியே பதில் எழுதி வைக்க முடிவது பேராச்சரியம்...
மென்னிங்கர் பவுண்டேஷனில் தன் யோக சக்தியை விஞ்ஞானக் கருவிகளால் பரிசோதனை செய்ய அனுமதித்திருந்தார் யோகி சுவாமி ராமா.
அவர் யோக சக்தியால் இன்னும் எத்தனையோ விஷயங்களை செய்து காட்ட முடியும் என்று அந்த ஆராய்ச்சியாளர்களிடம் கூறியிருந்தார்.
அவற்றில் முக்கியமானவை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதயத்துடிப்பை நிமிடத்திற்கு இருபது வரை குறைத்து, உடனடியாக அதை நிமிடத்திற்கு 250 வரை அதிகப்படுத்துவது.
இதயத்துடிப்பை ஒரேயடியாக ஒரு நிமிடத்தில் இருந்து மூன்று நிமிடம் வரைvநிறுத்தி வைப்பது.
உடலில் செயற்கையாய் அங்கங்கேvகட்டிகளை ஏற்படுத்துவது, அந்தக் கட்டிகளைக் கரைக்கவும் முடிவது.
உடலில் எந்தப் பகுதியில் ஊசியைக்vகுத்தினாலும், ரத்தம் வெளி வராதபடி ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது.
கண்களை மூடிக் கொண்டு படிக்க முடிவது.
மூடிய புத்தகம் அல்லது உறையில் போட்டு மறைத்திருக்கும் கடிதத்தைத் தொட்டுப் பார்த்தே படிப்பது.
தூரத்தில் இருக்கும் பொருட்களை கண்களை மூடியே பார்க்க முடிவது.
தொடாமலேயே பொருட்களை நகர்த்த முடிவது.
பிராண சக்தியுடன் சூரிய சக்தியையும் இணைத்து அற்புதங்கள் செய்ய முடிவது.
இப்படி ஆராய்ச்சியாளர்களிடம் அவர் சொல்லி இருந்த போதிலும், பின்னர் அவரால் அந்த ஆராய்ச்சிகள் அனைத்தையும் செய்து காட்டும் விஞ்ஞான சூழ்நிலைகள் பல காரணங்களால் அமையவில்லை.
இதற்கிடையில் அவர் இந்தியா திரும்பிப் போய்விட்டார். மறுபடியும் பல சொற்பொழிவுகள் ஆற்றவும், ஆன்மிகப் பணிகளுக்காகவும் அமெரிக்கா வந்த போது சில ஆராய்ச்சிகளை அவரால் செய்து காட்ட முடிந்தது. அவற்றையும் 'Beyond Biofeedback' நூலில் ஆராய்ச்சியாளர்கள் எல்மர் மற்றும் அலைஸ்க்ரீன் (Elmer - Alyce Green) குறிப்பிட்டார்கள்.
அந்த சுவாரசியமான ஆராய்ச்சிகளையும் பார்ப்போம்.
ஒரு முறை எல்மர், சுவாமி ராமாவிடம் உடலில் ஏற்படும் கட்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செயற்கையாய் உடலில் கட்டிகளை ஏற்படுத்தவும், அந்தக் கட்டிகளை கரைத்துக் கொள்ளவும் முடியும் என்று சுவாமி ராமா சொல்லி இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
உடனே தன் உடலில் நான்கு வினாடிகளில் ஒரு இடத்தில் ஒரு பறவையின் முட்டையின் அளவில் ஒரு கட்டியை சுவாமி ராமா உருவாக்கிக் காட்டினார். எல்மர் அந்த கட்டியைக் கையால் தொட்டுப் பார்த்தார். கட்டி உறுதியாக இருந்தது.
அதே போல் வேறொரு இடத்திலும் வேறு வடிவத்தில் இன்னொரு கட்டியை சுவாமி ராமா உருவாக்கிக் காட்டினார். அவற்றை
உருவாக்குவது யோக சக்தியால் என்றாலும் கூட, அந்தக் கட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதை சுவாமி ராமாவால் சொல்லத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தக் கட்டிகளைக் கரைத்தும் காட்டினார்.
தன்னால் தொடாமல் பொருட்களை சுழல வைக்கவோ, நகர்த்தவோ முடியும் என்று சொல்லி இருந்ததையும் சுவாமி ராமா செய்து காட்டினார்.
ஒரு பென்சிலை கயிறில் கட்டித் தொங்கவிட்டு அதை அருகில் உற்றுப் பார்த்து சில மந்திரங்களைச் சொல்லி சுழல விட்டார்.
ஆனால் எல்மர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். 'மூச்சுக் காற்றால் கூட அப்படி சுற்ற வைக்க முடியும்' என்றார். உடனே சுவாமி ராமா, ஆராய்ச்சிகூட சூழ்நிலையிலும் கூட தன்னால் அப்படி செய்து காட்ட முடியும் என்று சொன்னார்.
உடனே வேறொரு சிறிய ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள், ஒரு வட்ட அமைப்பில் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருந்தன.
ஐந்தடி தொலைவில் சுவரை ஒட்டி ஒரு கட்டிலில் சுவாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக் காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி அவருக்குத் தரப்பட்டது. முகமூடி இல்லாமலும் கூட வெறும் மூச்சுக் காற்றால் ஐந்தடி தூரத்தில் இருந்து அந்த ஊசிகளைச் சுழல வைப்பது முடியாத காரியமே அல்லவா? அந்த முகமூடியை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை சுவாமி ராமா, பத்து பத்து டிகிரிகளாக அசைத்துக் காட்டினார்.
இந்த ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் ஆறு பார்வையாளர்கள் முன் நடந்தது.
ஒரு முறை சுவாமி ராமா, எல்மர் மற்றும் அலைஸ் க்ரீனுடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பேட் நோரிஸ் (Pat Norris) என்ற அவர்களுக்குப் பரிச்சயமான பெண்மணி ஒருத்தி, சுவாமி ராமாவை சந்திக்க ஆர்வம் கொண்டு போன் செய்திருந்தார்.
எல்மர், சுவாமி ராமாவிடம் தங்கள் நண்பரான அந்த பெண்மணியைச் சந்திக்க முடியுமா? என்று கேட்டார். சுவாமி ராமா உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் பேட் நோரிஸ் வந்து சேர்வதாகத் தெரிவித்தார். உணவருந்தி முடிந்ததும் சுவாமி ராமா, ஒரு வெள்ளைத் தாளையும், ஒரு பென்சிலையும் தனக்குத் தரும்படி கேட்டார். அவர் கேட்டுக் கொண்டபடியே வெள்ளைத் தாளையும், பென்சிலையும் எல்மர், சுவாமி ராமாவுக்கு கொடுத்தார். சுவாமி ராமா அந்த வெள்ளைத் தாளில் என்னவோ எழுத ஆரம்பித்தார். எழுதி
முடித்து அதை மேசையில் கவிழ்த்து வைத்தார்.
பேட் நோரிஸ் வந்தவுடன் அவரிடம் சுவாமி ராமா, தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்கும்படி சொன்னார். திடீரென்று அவர் கேள்வி கேட்கச் சொன்னதால் திகைத்தார் பேட் நோரிஸ்.
சுவாமி ராமா மேலும் வற்புறுத்தவே 'என்
மகனை தனியார் பள்ளிக்குப் படிக்க அனுப்ப வேண்டுமா?' என்று கேட்டார்.
சுவாமி ராமா இன்னொரு கேள்வி கேட்கச் சொன்னார். பேட் நோரிஸ் 'நான் பி.எச்.டி பட்டம் பெற கல்லூரிக்கு மீண்டும் செல்ல வேண்டுமா?' என்று கேட்டார்.
இப்படியே மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு கேள்வி என்று ஏழு கேள்விகளைக் கேட்கச் சொன்னார் சுவாமி ராமா.
பேட் நோரிஸ் ஏழாவது கேள்வி கேட்டவுடன் தான் முன்பே எழுதி வைத்திருந்த தாளை எடுத்து அவரிடம் தந்தார். அந்தத் தாளில் சுவாமி ராமா, பேட் நோரிசின் ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுதி இருந்தார்.
அவற்றில் ஐந்து கேள்விகளுக்கான பதில்கள் மிகத் துல்லியமாகவும், ஒரு கேள்விக்கான பதில் அந்தக் கேள்வி சம்பந்தப்பட்டதாகவும், ஒரு கேள்விக்கு பதில் சிறிதும் சம்பந்தம் இல்லாததாகவும் இருந்ததாக பேட் நோரிஸ் தெரிவித்தார்.
ஏழு கேள்விகளில் ஐந்து மட்டுமே மிகச்சரியாக இருப்பினும், கேள்விகள் கேட்கப்படும் முன்பே, என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறியாமலேயே, அவற்றிற்கு முன்கூட்டியே பதில் எழுதி வைக்க முடிவது பேராச்சரியமே அல்லவா?
'Beyond Biofeedback' நூலில் சுவாமி ராமா செய்ய முடியும் என்று சொன்ன சில ஆராய்ச்சிகளை, தங்களால் செய்ய முடியாமல் போனதற்கு எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் அவர்கள் அப்படி செய்ய முடியாமல் போன ஆராய்ச்சிகளில் இரண்டு வேறு சில யோகிகளால் செய்து காட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் நினைவு கூரலாம்.
குடா பக்ஸ் கண்களை மூடிக் கொண்டு படித்துக் காட்டியதும், சுவாமி விசுத்தானந்தர் சூரிய சக்தியைக் கொண்டு சில அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள்...
நீங்களே படைப்பாளி...
முதலில் நாம் தேவையை உருவாக்காமலேயே, நமக்கு அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என வருந்துகிறோம்.
இப்போதே உங்கள் தேவைகள் அனைத்தையும் பட்டியல் இடுங்கள்.
அதை மனதில் அடிக்கடி நினைத்து வாருங்கள்.
உங்களுக்கு தேவையற்ற விடயங்களை மனதில் போட்டு உழற்றாமல் மகிழ்ச்சியான மன நிலையில் எப்போதும் இருங்கள்.
உங்கள் எண்ணம் ஒவ்வொன்றாக நிறைவேற துவங்கும்.
ஆம் மனதால் ஆழ்ந்து நினைப்பதை பிரபஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதே அதன் நியதி.
அப்படி மனதால் படைக்கப் பட்டதே பிரபஞ்சம். ஆம் உங்கள் மனதால் வேண்டியதை படைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும் சக்தியே நீங்கள்தான்.
வாழ்க்கை அற்புதமானது. அதை கொண்டாடுங்கள். அன்பு என்கிற விசைதான் அனைத்தையும் இயக்குகிறது.
உங்கள் வாழ்க்கையை வழக்கம் போல் நகர்த்தாமல் சற்று மாற்றி பாருங்கள், அனைத்தும் மாறும் இது சத்தியம்...
சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...
இளம் வழுக்கையா? இதோ தீர்வு...
இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு உன்னத பலனைத் தருவதாக இருக்கும்.
புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்...
முதுகுத் தண்டு என்பது உடலின் வேர்...
முதுகுத் தண்டு என்பது உடலின் வேர். வேரை நலமாக வைத்திருந்தால், உடல் என்னும் மரம் மிகச்சிறப்பாக இருக்கும்..
முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்...
1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது).
2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
3. அமரும்போது வளையாதீர்கள்.
4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.
6. சுருண்டு படுக்காதீர்கள்.
7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.
8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.
9. பளுவான பொருட்களை தூக்கும் போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.
10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்...
வெள்ளைக்காரன் கலப்பில் உருவாக்கிய.. இந்தி.. இந்தியாவின் தேசிய மொழியாம்...
சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்...
மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்..
மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்..
ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்..
பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும்..
கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக் கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்..
இலங்கையில் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ் இருக்கிறது.
மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.
சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.
கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது..
ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரே இந்திய மொழியாக அந்தஸ்த்துடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.
12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்திருக்கின்றன.
உலகத்துடன் உண்மையாகவே இணைந்திருந்து இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் இந்தியா நாடு முழுவதும் பாட மொழியாக தமிழை வையுங்கள். இந்தியாவை உலகிற்கு தமிழ் அடையாளப்படுத்தும்...
பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?
மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும்.
வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்?
அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும்.
எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.
உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான் எனபது நினைவு கூறத்தக்கவை.
ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?
கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும்.
யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்ற போது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது.
அதனால், வருபவர் கோபம் தணிந்து தான் வீட்டுக்குள்ளே வருவார்.
இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்...
தட்டார்மடம் அருகே வாலிபர் கொலை : அதிமுக பிரமுகர் உட்பட 2 பேர் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சரண்...
தட்டார்மடம் அருகே வாலிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அதிமுக பிரமுகர் உட்பட 2பேர் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17-ம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்து குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மீது பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர். இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் மற்றும் சுடலைக் கண்ணன் ஆகிய இருவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரன் அடைந்துள்ளனர். சரண் அடைந்த இருவரையும் 3 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு...
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் சஸ்பெண்ட்...
தூத்துக்குடி: தட்டார்மடம் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவு...
நியூட்டன் விதியும் கர்மவினையும்...
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.
இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.
வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.
நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.
மனதின்கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.
இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.
எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.
ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில்தான் கர்மாவே செயல்படுகிறது.
ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி...
விவசாயிகளுக்கு எதிரான மோடியின் புதிய சட்டங்கள் 😡
இந்திய நாட்டின் உழவர்களை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொருள் வணிகம் மூன்றையும் பன்னாட்டு மற்றும் இந்திய நாட்டுப் பெருங்குழுமங்களிடம் (கார்ப்பரேட்டுகளிடம்) ஒப்படைக்கும் தொலை நோக்குடன் மோடி அரசு மூன்று சட்டங்களை நிறைவேற்றுகிறது.
இன்றியமையாப் பண்டங்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்திலிருந்து நெல், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை நீக்கும் சட்டம், இந்தியா முழுவதையும் ஒரே வேளாண் வணிக மண்டலமாக்கும் சட்டம், வேளாண் நில ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஆகிய மூன்றையும் கடந்த சூன் 3ஆம் நாள் அவசரச் சட்டங்களாகப் பிறப்பித்தது மோடி அரசு. அவற்றை இப்போது நிரந்தரச் சட்டங்களாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது.
உணவுப் பொருட்களை இன்றியமையாப் பண்டங்கள் கட்டுப்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தவர்கள் யார்? உழவர்களோ, உழவர் சங்கங்களோ இக்கோரிக்கை வைக்கவில்லை. உலக வணிக நிறுவனமும் (WTO), பெருங்குழும வணிகத் திமிங்கிலங்களும் தாம் இந்தக் கோரிக்கையை வைத்தன.
அதேபோல், நிலங்களைப் பெருங்குழுமங்களிடம் ஒப்பந்தப் பண்ணையத்தின் கீழ் ஒப்படைத்து அவற்றின் அதிகாரத்தின் கீழ் வேளாண்மை செய்ய வேண்டும் என்று எந்த உழவரும், உழவர் அமைப்பும் கோரிக்கை வைக்கவில்லை. இதுவும் மேற்படி பன்னாட்டு - உள்நாட்டு வணிகத் திமிங்கிலங்களின் கோரிக்கையே.
வணிகப் பெருங்குழுமங்களின் இலாப வேட்டைக்காக உழவர்களைப் பலியிட இந்தச் சட்டங்களை நிறைவேற்றுகிறது மோடி அரசு.
இந்தக் கொரோனாக் காலத்தில் இந்தியத் தொழில் உற்பத்தித் துறையும் வணிகத் துறையும் வீழ்ச்சியடைந்து, அவற்றில் ஈடுபட்டிருந்த பல கோடி மக்களைக் கொடிய வறுமையிலும் வேலையின்மையிலும் வீழ்த்திவிட்டன. இந்த நிலையில் இன்று இந்திய மக்களைத் தாங்கிப் பிடித்துப் பாதுகாப்பது வேளாண்மைத் துறை மட்டுமே! உழவர்களும் உழவுத் தொழிலாளிகளும் மட்டுமே!
தொழில் உற்பத்தித் துறையில் இன்றும் வல்லரசு நாடுகளைச் சார்ந்திருக்கிறது இந்தியா. ஆனால் வேளாண் உற்பத்தித் துறையில் இந்தியா உபரி உற்பத்தி நாடாக உள்ளது. இதை வீழ்த்தி வேளாண் துறையிலும் தங்களை அண்டி வாழும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற உத்தியுடன் உலக வணிக நிறுவனத்தின் மூலம் வல்லரசு நாடுகள் – இந்தியாவின் வேளாண்மையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டிச் செயல்படுகின்றன. அந்த வல்லரசுகளின் நம்பிக்கைக்குரிய நண்பராகச் செயல்பட்டு நரேந்திர மோடி சொந்த நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்கிறார்.
வேளாண் உற்பத்திப் பொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு போய்த் தாராளமாக விற்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது. அதனால் பேரம் பேசி அதிக விலைக்கு விற்று அதிக இலாபம் அடையலாம் என்று உழவர்களுக்கு ஆசை வார்த்தை கூறுகிறது மோடி அரசு.
அவ்வாறு இந்தியா முழுவதும் சென்று விற்கும் வசதியும் வாய்ப்பும் உழவர்களுக்கு இல்லை. தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை தங்கள் பொறுப்பில் சேமித்து வைக்கும் வாய்ப்புகூட இல்லை. பெருங்குழும நிறுவனங்களுக்கே அவ்வாய்ப்புகள் உள்ளன. எனவே அந்நிறுவனங்கள் வேளாண் விளை பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் குவித்து, பதுக்கி, செயற்கையாகக் கட்டுப்பாட்டை உண்டாக்கி பின்னர் அதிக விலைக்கு விற்பதற்காகக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.
வேளாண் விளைபொருட்களை விற்பதற்கு இப்போதுள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்ற தற்சார்பு அமைப்பை நடைமுறையில் செயலற்றதாக முடக்கப் போகிறது மோடி அரசு! அதற்காகவே, இன்றியமையாப் பண்டங்களிலிருந்து இப்பொருட்களை நீக்கி, எவ்வளவு வேண்டுமானாலும் தனிநபர் குவித்துக் கொள்ளலாம் என்று திறந்துவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெருங்குழுமங்கள் வேளாண் விளைபொருட்களை குவித்து வைத்துக் கொள்வதற்கும், விற்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளது இப்புதிய சட்டம்!
இதற்கேற்ப ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தையும் கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான உழவர்களின் நிலங்களைப் பெருங்குழுமத்திடம் உழவர்கள் ஒப்பந்தம் செய்து வேளாண்மை செய்ய வேண்டும் என்கிறது இத்திட்டம். அந்த ஒப்பந்தப் பெரு நிறுவனம் சொல்கின்ற பயிரைத்தான் தனிநபராய் உள்ள உழவர்கள் சாகுபடி செய்ய வேண்டும். அப்பெருநிறுவனத்துடன், சாதாரண உழவர்கள் பேரம் பேசி விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்கிறது மோடி அரசு. அது முடியவே முடியாது! பெருநிறுவனங்கள் அடிமாட்டு விலையை நிர்ணயிக்கும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்று இப்போது அரசு நிர்ணயித்து வழங்கும் விலை இனி வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக் கிடையாது. ஒப்பந்த நிறுவனங்கள் கடைபிடிப்பதற்குக் குறைந்தபட்ச விலைத் திட்டம் எதையும் இப்புதிய சட்டம் கூறவில்லை.
கட்டுப்படியில்லாத விலைக்குத் தங்கள் உற்பத்திப் பொருளை விற்கும் கட்டாயத்தை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. காலப்போக்கில் உழவர்கள் ஓட்டாண்டிகளாகி, அந்தந்த நிறுவனங்களிடம் நிலத்தை விற்றுவிட்டு ஓட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு!
இந்தச் சட்டங்கள் உழவர்களை மட்டும் பாதிக்கும் என்று மக்கள் கருதக் கூடாது.
ஒப்பந்தப் பண்ணையம், பெருங்குழும வணிகம் என்று வந்து விட்டால் அதன்பிறகு நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுவிடும். இந்திய உணவுக் கழகத்தை (FCI) மூட வேண்டும் என்று உலக வணிக நிறுவனம் (WTO) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மோடி அரசு 2015இல் அமைத்த சாந்தகுமார் குழு, படிப்படியாக இந்திய உணவுக் கழகச் செயல்பாட்டைக் குறைத்து மூடிவிட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியுள்ளது.
நெல் கொள்முதல், வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆகியவை இல்லையென்றால் நியாய விலைக் கடைகளும் மூடப்படும்!
இந்த மூன்று சட்டங்களும் ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பெருங்குழுமங்கள் வேட்டையாடி, வறுமையிலும் பட்டினிச் சாவிலும் வீழ்த்தும் தன்மை கொண்டவை.
“மோடி அரசே, இம்மூன்று சட்டங்களையும் நிறைவேற்றாதே! நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டாலும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல் கிடப்பில் போடு” என்று முழங்கி வீதிக்கு வந்து போராடுவோம்! வெல்வோம்!
உழவர் விரோதச் சட்டங்களை ஆதரித்து
தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்து விட்டார் எடப்பாடி!
ஒட்டுமொத்த உழவர்களுக்கும் மக்களுக்கும் எதிரான மோடி அரசின் பெருங்குழும வேட்டைச் சட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதன் மூலம் சொந்த மக்களுக்குத் துரோகம் செய்து விட்டார். தம்மை விவசாயி என்று கூறிக் கொள்ள எடப்பாடி வெட்கப்பட வேண்டும்!
நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொருள் விற்பனை ஆகியவை அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கின்றன. தனது அரசின் அதிகாரங்கள் பறிபோவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல், இச்சட்டங்களை ஆதரிக்கிறார்.
பஞ்சாபிலே பா.ச.க. கூட்டணியில் பல்லாண்டு காலமாக இருந்து வரும் சிரோன்மணி அகாலிதளம், இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என்று கூறி நடுவண் அரசிலிருந்து விலகிவிட்டது. அக்கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவூர் நடுவண் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். வடமாநிலங்களில் உழவர்கள் போராடு கிறார்கள்.
இந்தச் சட்டங்களால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவதன் உட்பொருள் – “பா.ச.க.வால் தனக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது” என்ற தன்னலம் கொண்டதே!
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகத் தமது பதவிப் பாதுகாப்புக்காகத் துரோகம் செய்வதைக் கைவிட்டு, இந்தச் சட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.
- காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது...
முலாம்பழத்தின் மகிமை...
நீர்த்தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு; அதில் முக்கியமானது முலாம்பழம்.
உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.
கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.
முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.
சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை. இதற்கு முலாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.
புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ',"சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன.
முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்...
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்...
உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு சிறுநீரகக் கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால், அத்தகைய சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
மேலும் சிறுநீரகம் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அவ்வாறு நச்சுக்களை வடிகட்டும் போது, அந்த நச்சுக்களானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடுவதால், அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற சரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.
மேலும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன. இத்தகைய உணவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை மட்டுமின்றி, ஆபத்தான பல கெமிக்கல்களை முற்றிலும் வெளியேற்றிவிடும். அதிலும் பூண்டு, வெங்காயம் மற்றும் மீன் போன்றவை சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.
ஆனால் பலர் இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக சைவ உணவாளர்கள், இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஆகவே தான், அத்தகையவர்களுக்காக மிகவும் சிறந்த சைவ உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளோம்.
அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது தண்ணீரையும் அதிகம் பருக வேண்டும்.
முட்டைகோஸ் : இந்த பச்சை இலைக்காய்கறியானது சிறுநீரகத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின் கே அதிகமாகவும் நிறைந்துள்ளது.
சிவப்பு திராட்சை : சிவப்பு நிற திராட்சையில் ஒருசில ஃப்ளேவோனாய்டுகள் நிறைந்துள்ளன. அதிலும் ரெஸ்வெராட்ரால் என்னும் இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் ஃப்ளேவோனாய்டு அதிகம் நிறைந்துள்ளது.
ஸ்ட்ராபெர்ரி : ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
பார்ஸ்லி : சைவ உணவாளர்கள், இந்த கீரையை அதிகம் உணவில் சேர்த்தால், சிறுநீரகம் மற்றும் உடல் முழுவதுக்கும் நல்லது. அதிலும் இதனை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட்டால், சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்.
காலிஃப்ளவர் : இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு உணவுப் பொருளாகும். ஏனெனில் காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்கும்.
ஆப்பிள் : ஆப்பிள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி அதிகம் நிறைந்திருப்பதால், அது உடல் முழுவதுக்கும் மிகவும் நல்லது.
ப்ளூபெர்ரி : ப்ளூபெர்ரியில் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் அந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது.
இஞ்சி : சைவ உணவாளர்கள் உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது, சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, இரத்தத்தையும் சுத்திகரிக்கும்.
தயிர் : தயிரும் செரிமானத்தை அதிரிக்கும் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா இருப்பதால், அது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. முக்கியமாக இந்த உணவை சைவ உணவாளர்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.
ஆலிவ் ஆயில் : ஆலிவ் ஆயில் நிறைந்துள்ள நன்மைக்கு அளவே இல்லை. ஏனெனில் அத்தகைய எண்ணெயை உணவில் சேர்த்தாலும், சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது...
நாம் தமிழர் கட்சியில் இணைந்தால் அந்நியனும் தமிழன் ஆகிவிடலாம்...
சாதியை பேசினால் தமிழ் தேசியம் கறை படுமாம்...
ஆனால் சாதியை ஒழித்து தெலுங்கரை, கன்னடரை , தமிழராக்கினால் தமிழ் தேசியம் கறை படாமல் தூய்மையாக இருக்குமாம்..
யாருக்காக டா ஒங்க அற்ப அரசியல் ?
அப்படியே ரஜினிகாந்தை மட்டும் தமிழனா மாத்திருங்கடா நல்ல நடிகர்...
திலீபனின் இறுதி உரையிலிருந்து…
என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது..
நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.
நான் திருப்தி அடைகிறேன்.
இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.
ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.
நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.
நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.
நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.
ஆனால் பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.
நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.
நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.
மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..
இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.
எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல் தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்..
எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது..
இதில் பிழைகள் இருக்கலாம்.. இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்..
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...
மத்திய மாநில அரசுகள் தமிழக விவசாயத்தை முழுவதும் அழிக்காமல் விடமாட்டார்கள்...
விவசாய பொருட்களை அடிமட்ட விலைக்கு வாங்குவார்கள்,
இல்லையேல்...
நம் விவசாய நிலங்களை நம் நாட்டு பெரு முதலாளிகளுக்கும், வெளிநாட்டு முதலாளிகளுக்கும் குத்தகைக்கு விடப்படும் அனைத்தும் அவர்கள் கையில் அடிமையாக
விவசாயிகள் வேலை செய்ய கூடிய நிலை,
முழுக்க முழுக்க மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும் நிலை வரும்..
இனியும் இது போன்ற திட்டத்தை செய்தியாகவே பார்த்துக் கொண்டு இருந்தால் நாமும் நம் குடும்பமும் அழிந்து போகும்..✊😠
சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்...
நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து, வென்று சிவத்தை (கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை (சித்தர்களை) வழிபட்டு இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை.
ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.
"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- ஆசான் திருமூலர்
என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,
"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!
என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.
உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது.
ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-ஆசான் வள்ளலார் - 14.
குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-ஆசான் கருவூர் முனிவர் -11-
மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம்..
சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள்.
அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும்.
மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள்.
என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது.
அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.
எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள்..
அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.
இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.
இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.
எனவே, ஞானிகளை பூஜிப்போம், நலம் பெற்று வாழ்வோம்..
ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும்.
நம் உள்ளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும்.
ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும் தான். எனக்கும் சேர்த்துத் தான்...
திடீர் கோடீஸ்வரி பாஜக வானதி சீனிவாசன்...
ஊழலை ஒழிக்க வந்த ஆர்எஸ்எஸ் உத்தமர்களில் தமிழக உத்தமர் வானதி சீனிவாசனின் ஊழல்கள்..
வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார்.
அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.
ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.
கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.
அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.
அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.
யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...
அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ. 50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...
அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.
ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது.
குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன?
அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும். வழக்கறிஞர் ஊதியம் எவ்வளவு...? மத்திய அமைச்சர் பினாமி என்ற கருத்து வேறு..? உறுதிப்படுத்துவதாக உள்ளது வருமானம்.
ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.
சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார். வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.
சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.
சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.
மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.
சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.
மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள்.
கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.
மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.
மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.
இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.
இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.
அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள்.
ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்...