22/09/2020

முலாம்பழத்தின் மகிமை...

 


நீர்த்தன்மை மிகுந்த சில பழங்கள் உண்டு; அதில் முக்கியமானது முலாம்பழம்.

உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம்.

கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது.

முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து.

சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை. இதற்கு முலாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலே போதும்.

புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ',"சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன.

முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.