26/05/2017
நாடு முழுவதும் பசு மாடு , எருமை மாடு, ஒட்டம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்க தடை , மத்திய அரசு அறிவிப்பு...
மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் , இவைகள் விவசாய தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் இறைச்சிக்காக அல்ல எனக் கூறப்பட்டுள்ளது..
பசு மாடு, எருமை மாடு, ஒட்டகம் ஆகியவற்றை வாங்குபவர்கள் நான் இதை விவசாய தேவைக்கு தான் பயன்படுத்துகின்றேன் என அஃபிடவிட் தாக்கல் செய்த பிறகே வாங்கவோ விற்கவோ முடியும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது...
குறிப்பு : மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நான்காவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு இந்தியா வை கொண்டு வந்த பெருமை பாஜக மோடியை சேரும்.. அந்த மாட்டிறைச்சியை தயார் செய்யும் முதல் 6 நிறுவனமும் பாஜக தொடர்புடைய நிறுவனமே ஆகும்... ஆகையால் பாஜக சார்ந்தவர்களை தவிர மற்ற அனைவருக்கும் தடை...
நன்மைகள் பல தரும் நுங்கு...
மறைந்து வரும் பராம்பரியங்களில் பனைரமும் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அறியாமல் இருந்தாலும் அதில் இருந்து கிடைக்கும் நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.
வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம்...
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.
நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே.
மேலும் நுங்கை சாப்பிட்டவுடன் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்த சோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.
நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.
வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.
இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது நுங்கு...
பால் நிறுவனங்களில் ரசாயனம் கலப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது குறித்து தேமுதிக வெளியிடப்பட்ட அறிக்கை...
தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்களில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், அதை ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் பால் நிறுவனத்தில் தண்ணீர் கலப்படம் செய்து குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் வழங்கப்படுவதில் பல முறைகேடுகள் நடந்தது. இந்த முறைகேடுகள் குறித்து பலமுறை தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போதெல்லாம் கண் இருந்தும் குருடனாய், காது இருந்தும் செவிடராய், வாய் இருந்தும் ஊமையாய் இருந்தாரோ? என மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அப்போது செவிசாய்க்காத இந்த அதிமுக அரசு, இப்பொழுது திடீர் என்று ஞானோதயம் வந்தது போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி, ஆதாயம் பெறுவதற்கான முயற்சியோ? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஏற்கனவே ஆவின் பால் நிறுவனத்தில் சுமார் ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அதிமுகவை சேர்ந்த லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் லாரி டெண்டர் விடுவதிலும், பால் கொள்முதல் செய்வதிலும், பால் விற்பனை செய்வதிலும் பல முறைகேடுகள் நடைபெற்றதையும், அதேபோல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், தேமுதிக எதிர்கட்சியாக இருந்த போது பால் விலை உயர்வை கண்டித்து சட்டசபையில் ஏற்பட்ட விவாதத்தை நாடறியும்.
பாலின் தரத்திலும், விற்பனையிலும் ஏற்படும் முறைகேடுகளை தேமுதிக எப்பொழுதும் சுட்டிக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
பாலில் மட்டு்மல்ல அனைத்து உணவு பொருட்களிலும் ரசாயனம் கலக்கப்படுவதையும், முறைகேடுகள் நடைபெறுவதையும் தடுத்து நிறுத்தி தனியார் நிறுவனங்கள் தவறுகள் செய்து இருந்தால் அந்த நிறுவனங்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
உங்களுக்கு தெரியுமா ?
உலகின் எந்த மூளையிலும் இல்லாத ஒரு அதிபயங்கர அணுஉலை கல்பாக்கத்தில் நிறுவப்படுகிறது...
இதன் பெயர் PFBR..
PROTOTYPE FAST BREEDER PLAN... என்ற பெயருடைய இது ..
உலகில் எந்த ஒரு இடத்திலுமே இல்லை ஏன் அமெரிக்கா உட்பட..
சில நாடுகளில் முயன்று பாதுகாப்பு கருதி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்..
தொழில்நுட்பத்தில் அறிவு உள்ள அமெரிக்காவே இதை நிறுவ தயங்கி வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.
ஆனால் நம்ம அரசியல்வாதிகள் அனுமதித்துள்ளனர் காரணம் என்ன தெரியுமா ?
இதன் மதிப்பீடு சொன்னால் புரிந்து கொள்வீர்கள் ஆம் இதன் மதிப்பீடு 56 .77 பில்லியன் ரூபாய் (மில்லியன் அல்ல)..
இப்போது தெரிகிறதா ?
இந்த பரதேசி அரசியல்வாதிகளை நம்பி நாமும் தலைவரே என்று கூப்பாடு போட்டு கொண்டு உள்ளோம்..
இது மட்டும் வெடித்ததால் தமிழகத்தில் பாதி மக்கள் தொகையை காவு வாங்கிவிடும். வீடுகள் நிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் என்று அனைத்தையும் அழித்து விடும் ..
முட்டாள்கள் இவர்கள்..
ஒரு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி கூட கொடுக்காமல் உலகமே யோசிக்கும் ஒரு அதிபயங்கர ஆயுதத்தை இந்தியா அதுவும் தமிழகத்தில் நிறுவியுள்ளது...
வருடத்திற்கு 150 நாட்கள் மட்டுமே சூரியன் உதிக்கும் ஜெர்மன் கூட சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கிறது..
எத்தனையோ சின்ன நாடுகள் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கிறது.. இவனுங்க மட்டும் அணுஉலையை கட்டி பிடித்து கொண்டு இருக்கின்றனர்...
காரணம் கமிஷன்..
அயல்நாடான ரஷ்யாவும் அமெரிக்காவும் தன் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் பாதுகாப்பும் வேண்டும் என்று நினைத்து அடிமை நாடான இந்தியாவில் நிறுவி கொண்டு வருகிறான்..
இதை எதிர்த்து கேட்பது தேசத்துக்கு முரண் என்கிறான்...
இந்த அரசியல்வாதிகள் சம்பாதிக்க எம் மக்கள் பலிகடா ஆக்குகிறான்...
உண்மை உலகிற்கு ஒரு நாள் தெரியும் அப்போது நாயை அடித்து வீதியில் போடுவது போல இந்த இந்தியாவின் அரசியல்வாதிகள் நிலை இருக்கும்...
இந்த நாள் வெகு தொலைவில் இல்லை...
பாஜக வானதி சீனிவாசனின் தம்பி ஒரு நிறுவனத்தின் பெயரில் 60 கோடி ரூபாய் வங்கியில் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடிப் போன நிலையில்...
அந்த நிறுவனத்தின் இயக்குனரான வானதி யின் கணவருக்கு பிடி இருகுகிறது. வானதியும் அதன் பங்குதாரர் தான்..
தனது தில்லி செல்வாக்கை பயன்படுத்தி சி.பி.ஐ யின் முதல் தகவல் அறிக்கை யில் தனது பெயர் வராமல் பார்த்துக் கொண்டார். வங்கி மோசடிகளுக்கு பெயர் போன பாஜக கட்சியின் மற்றுமொரு சான்று இது...
இந்த சம்பவத்தால் தமிழக பாஜக சலசலத்துக் கிடக்கிறது, காங்கிரஸ் கட்சி யை போன்றே குடிமிப்பிடிகள் தொடங்கி இருக்கிறது...
மருது பாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்...
வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை..
வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக் கொண்டு தான் படை உதவி செய்தான்.
வளரி தொழில் நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.
மீ.மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது..
திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன.
வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது.
(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,
அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.
military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49
நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)...
தமிழரின் முக்கிய உணவு நெல்லா?
தமிழரின் உணவுமுறை தானியங்களை பெரும்பாலும் நம்பியிருந்தது...
கூழ் காய்ச்சி உண்பதே நமது வழக்கம்..
நெல்லுச்சோறு ஒரு பண்டிகை உணவாக எப்போதாவது உண்ணும் வழக்கம் தான் 50 ஆண்டுகள் முன்புவரை இருந்தது.
நெல் நமது முக்கிய உணவு இல்லை..
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற பாடல் நினைவு வரலாம். இது தினம் தினம் பண்டிகை என்று மகிழ்வாகப் பாடுவதாகும்.
ஆகவே, நமது பழைய தானிய உணவுமுறை மீட்கப்பட வேண்டும்.
தண்ணீர் குறைவாக எடுக்கும் உணவு வகையைப் பின்பற்ற வேண்டும்...
அந்தரத்தில் தொங்கும் கோட்டை கதவு சங்ககால இலக்கியத்தின் வரலாறு...
சங்ககாலத்தில் மனிதனை கடவுளாக உயர்த்தவில்லை என்பதற்கு ஆதாரம்...
தூங்கெயில் கதவம்.?
இப்படி ஒரு பெயர் நாம் கேள்விப்பட்டதே இல்லை அப்படித்தானே..
பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்ற இந்த பெயர் நமக்கு தெரியும்.
ஏறக்குறைய மேலே சொன்ன தூங்கெயில் கதவம் என்ற வார்த்தையும் தொங்கும் தோட்டம் என்ற வார்த்தையும் ஒரே அடிப்படை விஷயத்தை சொல்வதாகவே உள்ளது...
சங்க காலத்தில் இந்த தூங்கெயில் கதவம் என்ற ஒரு அரண்மனை கதவு பற்றி வரலாற்றில் உள்ளது..
அதாவது நிறைய பேர் இந்த வார்த்தையை தவறாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதாவது இன்றைய காலத்தில் பாபிலோனில் உள்ள தொங்கும் தோட்டத்தை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் எங்கள் மன்னர்கள் தொங்கும் அரண்மனையே அந்த காலத்தில் காட்டியுள்ளனர் என்று..
இது தவறு சங்ககாலத்தில் பிரமாண்ட அரண்மை கட்டியது உண்மை தான் அதற்கு கதவு இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் கட்டிய பிரமாண்ட கதவு தான் இந்த தூங்கெயில் கதவம்...
இதை கீழிலிருந்து மேல் நோக்கி பார்த்தல் அதன் பிரமாண்டத்தால் தொங்கும் அமைப்பில் இருப்பதால் வரலாற்றில் தொங்கும் கதவு, கால ஓட்டத்தில் வார்த்தை வளர்ந்து தொங்கும் அரண்மை ஆனது..
இப்படியும் இருக்கலாம்...
அடுத்து இன்றைய காலத்தில் மேல்நோக்கி செல்லும் கதவுகள் உண்டு அதாவது லிப்ட்.. அப்படிப்பட்ட ஒன்றாகவும் இது இருந்து இருக்கலாம் என்ற கருதும் உள்ளது..
கோட்டையில் உள்ள பிரம்மாண்ட கதவு திறப்பதற்காக மேல் நோக்கி செல்லும் பொழுது மேலே அந்தரத்தில் தொங்குவது போன்றே இருக்கும் ஒருவேளை இதை வைத்துகூட சங்க கால புலவர்கள் இப்படி தொங்கும் கதவு என்று எழுதி இருக்கலாம்..
இதை கட்டிய அரசனின் பெயர் தான் ஆச்சர்யமானது, அதாவது இன்று சேரன் சோழன் பாண்டியனை கூட நம்மில் சிலர் கடவுளாக வழிபடுகின்றனர்.. அவர்கள் நம் முன்னோர்கள் என்பதை தாண்டி கடவுள் அந்தஸ்தை கொடுப்பது தவறு, இதனால் தான் கடவுள் தன்மையை மனிதனுக்கு கொடுத்து கடவுள் நம்பிக்கையை நாம் கெடுத்துவிட்டோம் ...
ஆனால் இந்த சேர சோழ பாண்டியன் அரசனுக்கெல்லாம் முன்னதாக வாழ்ந்த ஒரு அரசன் தான் இந்த தூங்கெயில் கதவத்தை கட்டினான்...
அவனின் பெயர் என்ன தெரியுமா ?
கடவுள் அஞ்சி ...
இந்த பெயரை இதுவரை நாம் கேட்டது கூட கிடையாது அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களை கடவுளாக சிலர் உயர்த்துகின்றன, அந்த முன்னோர்களுக்கெல்லாம் முன்னாள் வாழ்ந்த மூதாதையர்கள் கடவுள் உள்ளார் என்பதை நம்பி அந்த கடவுளுக்கு நம் பிள்ளை அஞ்சி குற்றமற்றவனாக வாழ வேண்டும் என்று கடவுள் அஞ்சி என்று பெயரிட்ட வரலாறு நம் சிந்தித்தால் விளங்கும்..
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்
பதிற்றுப்பத்து...
யார் தீவிரவாதி?
தீவிரவாதி என்பதற்கு இந்தியாவின் வரையறை என்னவென்றால்..
ஆதிக்க / ஆளும் சக்திகளின் வாதங்களை விவாதிக்காமல்.. ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்...
குறிப்பாக பார்ப்பனிய - பனியா கும்பலின் கருத்தியலுக்கு எதிராக.. இல்லாத இந்திய தேசியத்திற்கு - இந்தி(ய) இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்... தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்படுவார்.
இதில் வேடிக்கை - உண்மை என்னவென்றால்....
மக்களுக்கு எதிராக தீமை செய்பவர்கள் எல்லாம் 'போராளிகள்' என்றும்....
தம்மின மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் 'தீவிரவாதிகள்' என்றும் வகைப்படுத்தப்படுவது தான்...
சரி.... நம்மின மக்களுக்கு நல்லது செய்வது என்பது,
இந்திய அரசின் 'தீவிரவாதி' பட்டத்தை சுமந்தால் தான் முடியும் என்றால்....
இது நல்ல பேரும் பெருமையும் மிக்கது தானே...
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே..
யார் எல்லாம் தீவிரவாதி?
நான் ஒரு தீவிரவாதி...
வியக்க வைக்கும் செய்திகள்...
யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்து விடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது.
தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 200 முறை மரத்தை கொத்தும்.
நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணி நேரம் பார்க்கும் தன்மையுடையது.
எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால் தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
நாம் நேற்று கட்டிய பள்ளி கூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.
லங்கா வீரன் சுத்ரா என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.
பன்னீர் பூ இரவில் தான் பூக்கும்.
இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம்.
காட்டு வாத்து கருப்பு நிறத்தில் தான் முட்டையிடும்.
குளிர் காலத்தில் குயில் கூவாது.
எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டு பிடிப்புகளை அறிமுக படுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும்.
ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டு பிடித்து விடும்.
மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.
மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.
தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.
புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்து விடும் ஒரே மீன் - சுறாமீன்.
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்.
ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.
துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.
சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாக மாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது...
மனித எலும்புக்கூடுகளில் இருந்து பறவையின் எச்சம் வரை...
நான் ஏற்கனவே சொன்னது போன்று செய்வதறியாது திகைத்த இத்தாலி எடுத்த முடிவு தான் மனித எலும்புகளை
கொள்ளையடிப்பது என்பது..
இதை பற்றி போன பதிவில் கூறினேன் அதன் தொடராக இதை படித்துக் கொள்ளுங்கள்..
மனித எலும்புகளை மண்ணுக்கு கொடுத்து மண்ணை உயிர்பிக்கலாம் என்ற கருத்து சில நாட்களில் முடிந்தது..
காரணம், எவ்வளவு நாளைக்கு தான் மனித எலும்புகளை தேடி அலைவது இதற்காக வேறொரு தீர்வை தேடியது இத்தாலி அரசு இதற்காக அணுகிய நபர் பிரெஞ்சு ஆய்வாளர் அலெஸ்ஸாண்டேர் கோஹெட்..
இவர் ஆய்வு செய்து மண்ணுக்கு உயிரூட்ட அடுத்த பொருள் இது தான் என்று அறிவித்தார்..
இதை கேட்ட அரசு மண்டை குழம்பியது..
காரணம் அவர் சொன்ன பொருள் பறவையின் எச்சங்கள்...
இருப்பினும் தன் மக்களின் வாழ்க்கையில் அக்கறையுள்ள இத்தாலி அரசு பல வணிக கப்பல்களை பல தீவுகளுக்கு அனுப்பி பறவையின் எச்சங்களை தேடி கொண்டு வர அனுப்பியது..
பெரு நாடு கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே...
இந்நாட்டின் அருகே பல குட்டி தீவுகள் இருப்பதையும் அங்கே பல வருடங்களாக கடல் பறவைகள் வாழ்கின்றன என்பதையும் அறிந்து கொண்ட வணிக கப்பல்கள் அவைகளின் திசையை நோக்கி விரைந்தது.
இந்நிலையில் பெரு நாட்டின் அருகேயுள்ள குட்டி தீவில் ஒன்று தான் பாறை தீவு..
இந்த தீவில் மனித நடமாட்டமே பல ஆயிரம் வருடங்களாக இல்லை என்பதே ஒரு தனி சிறப்பு மனித நடமாட்டம் இல்லாத தீவில் பறவைகளின் இராஜ்ஜியம் தான்..
ஆகவே பல ஆயிரம் வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும் [புதையலான] பறவையின் எச்சங்களை தோண்டி வெட்டி எடுத்து கப்பலில் ஏற்றும் பனி தீவிரமானது..
சும்மா கிடையாது.. இதன் தீவிரத்தை அறிய ஒரு தகவலை சொல்லுகிறேன் பாருங்கள்..
உலகின் பணக்கார நாடுகள் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 99 பிரமாண்ட வணிக கப்பல்கள் பெரு நாட்டை நோக்கி வந்ததாக வரலாறு உள்ளது எல்லாமும் பறவையின் எச்சங்களுக்காக தான்..
அப்போதே அமெரிக்கா 66 தீவுகளை கைப்பற்றி அது ஒருபக்கம் எச்சங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டது..
அதில் இன்றும் கூட ஏறக்குறைய 8 தீவுகள் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது..
இங்கிலாந்தில் 1847 ம் ஆண்டு இறக்குமதியான பறவையின் எச்சத்தின் அளவு 2 லட்சத்தி இருவது ஆயிரம் டன்..
அவைகள் அனைத்தையும் அந்நாட்டு விவசாயிகளுக்கு வயலில் உரமாக இட கட்டாய சட்டம் பிறப்பித்தது அரசு..
அடிமை முறைகள் அக்காலத்தில் ஒழித்து இருந்த சமயமானதால் வேளைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது அதாவது பறவைகளின் எச்சங்கள் பலநூறு வருடம் ஒரே இடத்தில இருப்பதால் சின்ன சின்ன பாறைகள் போன்று அழுத்தமாக இருக்கும் உடைத்து எடுப்பது சாதாரணகாரியம் அல்லவே..
இதற்காக சீனா தேசத்தில் இருந்து தொழிலார்கள் கொண்டு வரப்பட்டு ஏறக்குறைய அடிமை போன்றே வேலை வாங்கப்பட்டார்கள்..
வேறொரு நாட்டிற்கு சொந்தமான வளங்களை வேறொரு நாட்டு தொழிளார்களை வைத்து தமது நாட்டிற்கு திருடிய கும்பல்கள் தான் இன்றைய வல்லரசுகள்..
பறவையின் எச்சங்கள் வெறும் நைட்ரைட் தரக்கூடியது மட்டுமல்லவே இதில் இன்னொரு பெரிய பிரச்சனையும் வந்தது அது என்ன தெரியுமா ?
DND என்ற வெடிபொருளுக்கும் நைட்ரேட் தேவை அப்போ இந்த பறவையின் எச்சங்கள் புதையல் தானே பணக்கார நாடுகளுக்கு..
இதன் முடிவு எங்கே போனது என்று அடுத்த பதிவில் கூறுகிறேன்..
நீங்கள் நம்புவீர்களா ? பறவையின் எச்சத்திற்காக ஒரு பெரும் போரே நிகழ்ந்தது.. அடுத்த பதிவில் கூறுகிறேன்...
இத்தாலி செய்த அல்லது திருடிய ஒரு வித்யாசமான நிகழ்வு...
குறிப்பு - 1...
இந்த பதிவுக்கு தலைப்பு வைக்க கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்
அதாவது திருடியாவது தன மக்களை காக்க வேண்டும் என்ற இத்தாலி அரசை பாராட்டுவதா ?
அல்லது இந்திய அரசியல்வாதிகள் சிலரே கொஞ்சம் இவர்களை பார்த்து நீங்களே உங்களை செருப்பால் அடித்துக் கொள்ளுங்களேன் என்று வைக்கலாமா ?
அல்லது இத்தாலியின் கையாலாகாத தனம் என்று வைக்கலாமா என்று யோசித்தி பின்னர் மேலேயுள்ள அத்தலைப்பை வைத்துள்ளேன்..
குறிப்பு - 2...
இந்த சம்பவத்தை படித்தபின்பு இது சம்பந்தப்பட்ட இத்தாலி அரசை புகழ்வதா?
அல்லது இந்திய அரசை காறித்துப்புவதா?
அல்லது கோபம் கொப்பளிக்க அடுத்த பதிவை வாசிப்பதா என்பதை வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்வுக்கும் விட்டு விடுகிறேன் ...
மண்ணுடைய தன்மையை பூச்சிக் கொல்லிகள் தெளித்து அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகள் உதாரணம் நீங்கள் இலண்டனின் வரலாற்றில் இதை காணலாம்..
1830 களில் இந்த சம்பவம் நடந்தது மண்ணில் உயிர் இல்லாததால் விளைச்சல்கள் இல்லாததை கண்டு இத்தாலி அரசே செய்வதறியாது தவித்து கொண்டு இருந்த நேரம்..
மண்ணின் சத்துக்களில் முக்கியமான நைட்ரஜன் சத்து சுத்தமாக இல்லை என்பதை கண்டு பிடித்தது ஆய்வுக்குழு ..
இது எப்படி மண்ணிற்கு கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்த குழு பின்னர் லண்டன் [இத்தாலி] அரசிடம் தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது அதை வாசித்த அரசு மிரண்டு தான் போனது..
காரணம், அவர்கள் அதில் எழுதியது நம் மண்ணிற்கு நைட்ரஜன் சத்தை கொடுப்பது பிணமான மனித எலும்புகள் தான்.
ஆகவே இலண்டன் மற்றும் இத்தாலியின் விளைச்சலை விளைவிக்க மனித எலும்பு கூடுகள் தான் வேண்டும் என்றது அந்த ஆய்வு ...?
இப்பொழுது மனித எலும்பு கூட்டுக்கு எங்கே செல்வது ?
லட்சம் டன் கணக்கில் மனித எலும்புக்கு
எங்கே செல்வது ?
யோசித்த அரசு எடுத்த முடிவு தான் மனித எலும்பு கூடுகளை திருடுவது என்ற முடிவுக்கு வந்தது.
[இத்தாலிக்கு திருடுவது கைவந்த கலை தானே]
தம் அருகே உள்ள பகுதியில் எங்கெல்லாம் பெரும் போர்கள் வரலாற்றில் நடந்தேறியது அங்கே இறந்த மனிதர்களின் உடல்களை எந்த இடத்தில புதைத்தார்கள் என்ற ஆராய்ச்சியை செய்தது..
அதில் தேர்தெடுக்கப்பட்ட இடங்கள்...
நெப்போலியனுடன் போர் புரிந்த வாட்டர்லு, ஆஸ்ட்ராஸிஸ், போன்ற பிரமாண்ட போர்க்களத்தையம் லிப்ஸிக், கிரிமியா, போன்ற தீவுகளையும் சுற்றி வளைத்து மனித எலும்புகளை கொள்ளையடிக்க தொடங்கியது.
அதே போன்று சிசிலியின் பாதாள கல்லறையில் பல நூறு ஆண்டுகளாய் கிடைக்கும் எலும்புகள் என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்றது .
இப்படி ஒட்டுமொத்தமாக மனித எலும்புகளை அள்ளிக்கொண்டு லண்டனின் தலைநகர் இங்கிலாந்துக்கு இறக்குமதியான மனித எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?
2,54,600 பவுண்டுகள்...
இதில் ஒரு கணக்கும் உள்ளது.
இவ்வளவு பவுண்ட் எலும்புகளும் அந்த அந்த மண்ணிலையே விட்டு இருந்தால் மக்கி போய் அங்குள்ள மக்கள் சுமார் 35 லட்சம் பேருக்கு உணவு தந்திருக்கும் என்கிறது வரலாறு..
இந்த 35 லட்சம் மக்களின் உணவை கொள்ளை அடித்த நாடு இத்தாலி..
அது மட்டுமல்ல இந்த 2,54,600 பவுண்டுகளும் எவ்வளவு நாளைக்கு தான் அவ்வளவு பெரிய இத்தாலி நாட்டுக்கு போதுமானதாக இருக்கும் ஆகவே இது தீர்வதற்குள் அடுத்த என்ன திட்டத்தை [திருடுவதை] செயல்படுத்தலாம் .
வேறு என்ன செய்யலாம் என்பதை ஒரு ஆய்வு அறிக்கையாக உருவாக்க ஒருவரை தேர்வு செய்தது இத்தாலி அரசு.
அவர் யார் என்பது கூட பெரிய விஷயம் இல்லை இவர் அடுத்து சொன்ன ஒரு பொருள் தான் ஆச்சர்யமானது ?
அது என்ன ? என்பதை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...
காலம் கடந்த மனித உயரம்...
உலகில் தோன்றிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கொள்கையை ஏற்று கொண்டவர்களும், ஏற்று கொள்ள தகுந்த சான்று இல்லை என்று அதை மறுப்பவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்து காலப்போக்கில் மனித சராசரி உயரம் குறைந்து கொண்டே வருவது.
ஆம் நீங்களும் இதை பற்றி யோசித்திருக்கலாம், வரலாற்றில் மிகப் பெரிய ஆதாரங்களும் காணப்படும்.
டார்வின் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் ஒரு உயிரினம் பரிமாண வளர்ச்சிப்படி ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு பல மில்லியன் வருடமாக வளர்சிதை மாற்றங்கள் நிகழ்ந்து மற்றொரு நிலையை எட்டும் அல்லது மாறும் அதனடிப்படையில் அது பெற்ற புதிய தகவமைப்பு அதற்கு நன்மை பயக்கும் பட்சத்தில் அது தொடரும், இல்லையேல் அது நீக்கப்படும்.
இக்கண்ணோட்டத்தில் காண்போமானால் மனித வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது.
ஆம் இதுபற்றி பல ஆதாரங்கள் நம் பூமியில் உண்டு.
ஆதி மனிதன் மற்றும் நம் முன்னோர்கள் அனைவரும் பத்தில் இருந்து (11,12) அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் உடையவர்கள். அதற்கு ஆதாரமாக பல எலும்புக்கூடுகளும், பல கால் தடங்களும் கிடைத்துள்ளது.
மனிதன் பத்து அடிக்கு மேல் உயரமாக முன்பு இருந்துள்ளான் என்பதற்கு இன்றும் சாட்சியாக சவுதி அரேபியாவில் அல் ஊலாவில் உள்ள 'மத்யன் சாலிஹ்' என்ற கிராமத்தை சொல்லலாம்.
இந்த கிராமத்தில் உள்ள மலை வீடுகள் (படத்தில் காணலாம்) சதாராண மனிதர்களால் வசிப்பதற்கு அது ஏற்றதல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட மலை வீடுகள் என்பது நிரூபிக்கப்பட்டது.
பல வருடங்களுக்கு முன்பு உயரமாக இருந்த மனிதர்களின் சராசரி உயரம் தற்போது ஏன் குறையப்படுகிறது..
ஒரு வேளை நாம் உயரமாக இருப்பது அதாவது நம் உயரமான உடலை ஏந்தி வாழ்வது கடினமாக இருப்பதால் தான் நம் வளர்ச்சி குறைகிறதோ என்னவோ..
அல்லது நாம் அடுத்த பரிமாணத்திற்கு மாறி கொண்டிருக்கிறோமா..
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் தாக்கம் நம் உடலில் தெரிகிறது. இந்த அறிவியல் உலகில் பொதுவாக உடலால் செய்யப்படும் வேலையின் அளவு (தசைகளுக்கு கொடுக்கப்படும் கடின வேலை) குறைந்து கொண்டே வருவதால் இந்த மாற்றம் மற்றும் அறிவியல் வளர்ச்சியால் நம் கால சூழ்நிலைகள், உணவு பழக்க வழக்கங்கள்,நம் உழைப்பின் திறம், பூமியில் ஏற்படுத்தப்பட்ட மாசு இப்படி பல காரணங்கள் கூறலாம்.
என்ன தான் ஜீன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறினாலும் மேலே சொன்ன கருத்தே உண்மை.
நீங்கள் வேற்று கிரக வாசிகளின் படத்தை பழைய எகிப்திய கல்வெட்டுகள் மற்றும் இதுவரை பார்த்த கேள்வியுற்ற அனைவரும் கூறுவது ௩ (3) லிருந்து ௪ (4) அடி தான்.
மேலும் வேற்று கிரகவாசிகள் நம்மை விட அறிவியலில் மேம்பட்டவர்களே இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பை தான் நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோமோ அல்லது மற்றொரு சாரர் கருதுவது போல் வேற்று கிரக வாசிகள் அனைவரும் காலப்பயணம் செய்த எதிர்கால மனிதர்கள் என்ற கருத்தை முன் வைத்தாலும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனித உயரம் குறைந்து காணப்படலாம்.
எது எப்படியாயினும் நம்மை சோம்பேறியாக மாற்றும் இயந்திரங்கள் நம் முன்னோர்களின் கம்பீர, பிரமிப்பூட்டும் உயரத்தையும், ஆரோக்கியத்தையும் நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
இது என் அனுமானமும், உண்மையும் கலந்து உருவாக்கப்பட்டு எழுதப்பட்ட கருத்தே ஆனால் இது உண்மைாகும் வாய்ப்புகள் அதிகம்...
காரணகுரு, காரியகுரு...
'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.
காரியகுரு...
காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)..
காரணகுரு...
எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.
அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.
காலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும் போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ள வேண்டும்...
Subscribe to:
Posts (Atom)