07/12/2021

மனித மூளையும் அதன் செயல்திறனும்...

 


1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டு செல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்...

பாஜக மோடியின் உ.பி. தேர்தல் கலாட்டா...

அதிமுக இபிஎஸ் - ஒபிஎஸ் கலாட்டா...

கருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும்...

 


கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகள் மிகவும் உறுதியானது. இப்பலகை கருப்பு நிறம் கொண்டது. நூற்றாண்டுகள் கடந்தாலும் சேதம் அடையாதது. இதன் ஆங்கில பெயர் "EBONY" ஆகும்.

இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய இந்த மரத்தின் பலகைகள் மூலம் செய்யப்படும் பொம்மைகள், அலங்கார பொருட்கள், கதவு, ஜன்னல், மர அலமாரிகள், கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை தங்கத்துக்கு இணையான பெறுமதி மிக்கவை.

மருத்துவ குணம்...

கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும்.  பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.. இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  பித்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் அதேவேளை  கிருமி நாசினியாகவும் செயல்படும்.

கருங்காலி மரப்பட்டை...

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும்.  சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.

பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  மலட்டுத் தன்மையைப் போக்கும்.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.  நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.

இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கருங்காலி மரப்பிசின்...

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து  காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால்  உடல் பலமடையும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

கரப்பான் நோயினை போக்கவல்லது.  பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்...

ஐஸ் சாப்பிட்டால், உடல் எடை குறையும்...

 


உங்கள் எடையைக் குறைக்கும் பொருட்களில் முதன்மையான பொருளாக ஐஸ் க்ரீம் உள்ளது என்றும், உங்கள் உடலில் உள்ள அதிகபட்ச கலோரிகளை எரிக்கும் தன்மை ஐஸ் க்ரீமுக்கு உண்டு என்றும் ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இப்பொழுது ஐஸ் க்ரீமுடன் உங்கள் எடை குறைப்பு முயற்சிக்கான உணவை சாப்பிடத் தொடங்கவும் என்று குறிப்பிட்டால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம்.

ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் கலோரிகளை குறைத்து, அதிக பட்ச கொழுப்பை குறைக்கத் தொடங்குங்கள். அதிகபட்ச கொழுப்புகளை குறைக்கும் திறன் ஐஸ் உணவிற்கு உள்ளதால், எடை குறைப்பு ஆசான்கள் அதனை பரிந்துரை செய்கிறார்கள்.

ஐஸ் சாப்பிட ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவோ உங்களால் உங்களுக்குப் பிடித்த உடையை சிக்கென்று அணிந்து கொள்ள முடியும்.

ஐஸ் சாப்பிடுவதன் மூலமாகவே உங்களால் எடையைக் குறைக்க முடியும் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லையா?

மேலும் சில எடை குறைப்பு ஆலோசகர்கள் முழுமையான ஐஸ் டையட் எடுத்துக் கொள்வதையும் பரிந்துரைக்கிறார்கள்.

ஐஸ் கொண்டு கலோரிகளைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்.

ஐஸ் க்ரீம் உங்களுக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், அது உங்கள் இடுப்பின் அளவுகளில் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதில்லை.

எனினும், நீங்கள் அதனை ஒரேயடியாக சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளும் போது, உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

ஐஸ் க்ரீம்கள் சாப்பிடுவதால் உடனடியாக எடை குறையாத போதும், எடை குறையும் போது ஐஸ் க்ரீமின் பங்கும் முக்கியான அளவில் இருக்கும்.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவை ஒரேயடியாக தவிர்ப்பதன் மூலம், அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கக் கூடும்.

இதன் காரணமாக உங்களுடைய எடை குறைப்பு திட்டம் ஒரு தண்டணை என்றும் கூட உங்களுக்குத் தோன்றும்.

இதன் காரணமாக மொத்த திட்டமும் பாழாகி விடும்.

நீங்கள் ஐஸ் கொண்டு கலோரிகளை குறைக்க விரும்பினால், அதனை முழுமையாக சாப்பிடாமல் விட்டு விட வேண்டாம்.

‘ஐஸ் கொண்டு கலோரிகளை எரித்திடுங்கள்’ இதுதான் ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் மந்திர வார்த்தைகள்.

ஐஸ் சாப்பிடுவதால் பெருமளவு எடை வேகமாக குறைந்து விடாமல் போனாலும், ஒரு சில கலோரிகள் குறைய ஐஸ் காரணமாக இருப்பதை மறுத்து விட முடியாது.

ஐஸ் சாப்பிடுவதன் மூலமாக உடலின் தசைகளும் சற்றே இயங்கத் துவங்கும். அவ்வாறு இயங்குவதற்கு சிறிதளவு திறன் தேவைப்படும். இது ஐஸ் கொண்டு கலோரிகளை எரிக்கும் வழிகளில் ஒன்றாகும்.

ஐஸ் சாப்பிட்டுக் கொண்டே நீங்கள் கலோரிகளை எளிதில் எரித்து, எடையை குறைக்க முடியும்.

ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மட்டுமே அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கான வழி கிடையாது. ஐஸ் சாப்பிடுவதாலும் கலோரிகளை எரிக்க முடியும் என்று பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்.

உணவு கட்டுப்பாடு என்று வரும் போது ஐஸ் க்ரீம் மோசமான இடத்தையே பிடிக்கிறது.

ஐஸ் க்ரீம்களில் பருப்புகள் மற்றும் கொழுப்பு மிக்க பொருட்கள் கலந்திருப்பதனால் தான் இந்த மோசமான இடம்.

அரை கப் ஐஸ் க்ரீமை, இது போன்ற பருப்புகள் மற்றும் கொழுப்புகளுடன் சாப்பிட்டால், அது 250 கலோரிகளை சாப்பிட்டதற்கு சமமாகும்.

உங்களுடைய உணவு கட்டுப்பாட்டுத் திட்டத்தில், எவ்வளவு கலோரிகள் உணவை சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு கலோரிகளை வேலை செய்து எரிக்கிறீர்கள் என்றே கணக்கிடப்படும்.

இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் கணக்கில் கொண்டு உணவு உண்டு, வேலை செய்து வந்தால் எடை குறைப்பது மிகவும் எளிமையான பணி தான்...

வீட்டில் உள்ள தரை பளிச்சிட...

 


கீறல்கள் மறைய...

தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

வினைல் தளம்...

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.

காங்கிரீட் தளம்...

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

மார்பிள் தளம்...

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.


எண்ணை பிசுக்குளை நீக்க...

சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்...

அதிமுக எடப்பாடி கலாட்டா...

திமுக ஆட்சிக்கு வருவதற்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது...