23/03/2019

இன்று நாம் கொண்டாடும் சுதந்திரம்..


ஆட்சி தான் மாற்றமே தவிர
காட்சி மாற்றமில்லை....

அன்று வெள்ளையர்கள்
இன்று திராவிடர் மற்றும் இந்தியர்கள்..

அன்று அவர்கள் பிடியில் இருந்தோம்
இன்று இவர்கள் பிடியில் இருக்கிறோம்....

சுதந்திரம் என்ற பெயரில் அடிமைகளாக..

நாம் சுதந்திரத்தை எப்போது சுதந்திரமாக கொண்டாடப் போகிறோம்... தமிழா...

ஏக்கங்களுடன்...... தமிழன்...

ஸ்லீப்பர் செல்களால் ஏமாந்த ஸ்டாலின்.. தலையில் அடித்துக் கொள்ளும் திமுக தொண்டர்கள்...


https://youtu.be/JrKKuiI-Ebo

Subscribe The Channel For More News...

குழந்தைத் திருமணம் திராவிட தெலுங்கர் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

சினிமா என்பது நம்மை திசை திருப்பவே...


நெல்லிக்காய்..


மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
-ஆசான் தேரையர்.

முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.  ..

உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவ பெருமான் இருக்கும் இடம்...


https://youtu.be/4WeHjY5KslY

Subscribe The Channel For More News...

தமிழர் கட்டிடக்கலை...


தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.

தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிசுத்(ஸ்)துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள்.

இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின்உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது.

ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டிடக்கலை எனப்படுகின்ற கட்டிடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இத்தகைய எல்லாவகைக் கட்டிடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம்.

தமிழர் கட்டிடக்கலையில் பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் (அல்லது கோபுரம்) ஆகும்...

காலியாகும் டிடிவி தினகரன் கூடாரம்... பின்னணியில் சசிகலா அதிர்ச்சி தகவல்...


https://youtu.be/0YKRKfJMbfs

Subscribe The Channel For More News...

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு...


இதை நாம் முறையாகப் பின்பற்றினால் வைத்தியரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை...

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ச(ஜ)வ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்...

சிந்தித்துப் பார் எம் தமிழினமே...


50 ஆண்டுகளாக திருட்டு திராவிட திமுக செய்யும் ஏமாற்று வேலை...


திமுக சார்பாக போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 14 பேர் தமிழர்கள் அல்ல  வேற்றினத்தார்களே...

https://youtu.be/iqXyK4G923k

(Subscribe The Channel For More News)..

எப்படி தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் 50% தெலுங்கர்கள் ஆக்கரமித்து.. தமிழர்களுக்கு வேலை இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்ல வைக்கிறார்கள் என்பது புரிகிறதா..?

கோடி கோடியாய் ஊழல் செய்த ரெட்டி, ராவ், நாயுடு எல்லாம் தன் மாநிலத்திற்கு கொண்டு சென்று சுக போக வாழ்க்கை வாழ்கிறான்...

சிந்தியுங்கள் தமிழினமே...

அதற்கு காரணம் திராவிடம் எனும் இந்த திருட்டு தெலுங்கள் ஏமாற்று வேலைகள் தான்...

குறிப்பு : கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள்...

விசிக 2 தமிழர்கள்,
ஐஜேகே 1தமிழர்,
கொமதேக 1 தமிழர்,
கம்யூனிஸ்ட் 2 தெலுங்கர்கள்,
கம்யூனிஸ்ட் 2 தெரியவில்லை,
காங்கிரஸ் 10 பாதி தான் தமிழர்கள்...

ஆக மொத்தம் திமுக கூட்டணியில் 40 தொகுதியில் 30 பேர் வேற்றினத்தார்கள் தான்...

எண்ணங்கள் தான் விதை...


நம் எல்லோருக்கும் பிரச்சினை இங்கு தான் உள்ளது..

நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும் தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.

பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.

நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள்.

ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதை விட, எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசி கொண்டிருப்பதும் தெரிய வரும்..

நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை..

அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது.

ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி, அது உங்களது எண்ணங்களை பெற்றுக் கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும்.

நீங்கள் என்ன எண்ணிக் கொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும்.

ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால்...

உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ, அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும், அதற்கு நல்லது, கேட்டது தெரியாது.

நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும் போது அது அப்படியே எடுத்து கொள்ளும்..

அதற்கு சில உதாரணம்...

நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன்.. நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன்..

இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது.. இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும்..

எனக்கு காய்ச்சல் வரகூடாது. எனக்கு காய்ச்சல் வர வேண்டும்..

நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன்.. நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன்..

நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது.

மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்தது தான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.

நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம்..

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், டிவி பார்த்து கொண்டிருக்கும் போதும், கார் ஓட்டும் போதும், வேலை செய்து கொண்டிருக்கும் போதும்..

நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும் தான்..

ஆனால் நாம் தூங்க முயலும் போது கடைசியாக நாம் சிந்தித்தவற்றை ஈர்ப்பு விதியானது.. அசை போட்டு கொண்டிருக்கும்..

அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும்.

இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை, நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும்.

நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள்.

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.

உங்களது எண்ணங்கள் தான் விதை.

உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்து தான் இருக்கும்...

தமிழர் கெட்டது யாரால்?


தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசுகிறவன் அனைவரும் தமிழர்கள் என்று தமிழர்களே நினைத்து கொள்வார்கள்...

தான் யாரென்பதும் தன் இனம் எது என்பதும் தெரியாதபடி சிந்தனை மழுங்கி இருக்கிறான்.

அதனால்தான் தமிழினத் தலைவர் என்று சொல்லி கொள்வோறேல்லாம் மிக நுட்பமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை ஏமாற்றுகின்றனர்.

தமிழர்களிலே இன்னமும் தான் திராவிடன் தான் என்று நினைத்து வாழ்கின்றனர், அதனால் தான் வந்தேறி கூட்டதாரெல்லாம் ஏமாற்றி வாழ்கின்றனர்.

இனமான உணர்வு இல்லாத தமிழர்களிடம் எப்படி புரிய வைப்பது.

முத்துகுமரன் உள்ளிட்டோர் நெருப்பில் மாண்டனர், அவர்களின் மூலம் படிப்பினை பெற்றிருக்க வேண்டும் . அதை உணராமல் ஆளுகிறவர்களின் எண்ணத்திற்கேற்ப தமிழர்கள் குழம்பி விட்டனர்..

தமிழர்களின் நாட்டை தாசி வீடாக கருதிவிட்ட வந்தேறிகளின் அடிமையாக படித்த தமிழர்களே இருகின்றனர்.

சும்மா இருந்தால் சொறிநாய் கூட நம் மீது மூத்திரம் பெய்து விட்டு தான் செல்லும்..

ஈழத் தமிழர்களின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது... அவர்கள் களப் போராளிகள்..

ஆனால் இங்கு நிலைவேறு. தமிழனே தமிழனை பார்த்து தீவிரவாதி, பிரிவினைவாதி, பார்ப்பன அடிவருடி, வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி கொண்டு தமிழகத்தை துண்டாட பார்கின்றனர் என்று தவறான அடையாளமிட்டு அழித்துவிட நினைகின்றனர்.

தமிழர் அல்லதார்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குண்டு கிடக்கிறான் , அதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?

ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவது காலத்தின் கட்டாயம் அது நடக்கும்..

தமிழக தமிழர்கள் விடுதலை பெரும் நாள் எப்போது?

தமிழினமே விழித்துக்கொள்...


பம்பரம் சுழன்று வேறு எங்காவது போய் விடும் போலயே.. சிக்கலில் வைகோ மற்றும் திருமா...


திமுக கூட்டணியில், தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்றவை எல்லாம் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எங்கே நாம் சென்றாலும் இதே உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டுவிடுமோ என்று சில கட்சிகள் திமுகவை கூட்டணியை தவிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

விஷயம் இதுதான்.. வேறு ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டால், அவர்கள் அந்த கட்சியின் உறுப்பினர் ஆகிறார். அந்த கட்சியின் எம்பியாகவே 5 வருடத்திற்கு கருதப்படுவார். இதற்கு நடுவில் யாரும் எதுவும் இதில் செய்யவே முடியாது. பிளாட்டில் குடியிருப்பது போலதான்.. எதுவும் செய்ய முடியாது, உறுப்பினராக இருந்துக்கலாம்.

ஆனால் போன முறை தேர்தலில் ஓரளவு வாக்குகளை வாங்கியிருந்தால் இன்னைக்கு வைகோவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா என்றுதான் கேட்க தோன்றுகிறது. குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறாததால், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை மதிமுக இழந்து இப்போது சின்னத்துக்கு திண்டாடி கிடக்கும்படி ஆகிவிட்டது. கணேசமூர்த்திக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா என்பதுதான் அனைத்து மதிமுகவினரின் கவலையாக உள்ளது.

ஒரு கட்சிக்கு சின்னம் என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுமே அறிந்திருப்பார்கள். அந்த வகையில் பாடுபட்டு கட்சியை உருவாக்கி, தங்களுக்கென்று ஒரு கொள்கை, கோட்பாடுகளை வளர்த்து... இன்று அவை அத்தனையையும் இழப்பது என்பது சுலபம் இல்லை என்பதால்தான் வைகோவும், திருமாவும் அரண்டு கிடந்தார்கள்.

மோதிரம் கேட்டால் இல்லை என்றார்கள்.. வைரம் அல்லது பலாப்பழம் சின்னம் கேட்டால் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.. மேஜை சின்னம் கேட்டால் அதுவும் இல்லை என்றார்கள். கடைசியில் இருக்கும் இரண்டில் ஒருவர் உதயசூரியனுக்கு மாறிவிட, வெறுப்பாகிவிட்ட திருமாவோ, எதையாவது ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கினால் அதில் போட்டியிட்டு கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதில் நேற்றுதான் பானை சின்னம் கிடைத்துள்ளது.

கேட்ட தொகுதிகளோ, தொகுதிகளின் எண்ணிக்கையோ கிடைக்கவில்லை என்றால், சின்னம்கூட கிடைக்கவில்லை என்பது தர்மசங்கடமான நிலைமைதான்! பம்பரம் கிடைக்குதான்னு பார்க்கலாம்னு வைகோ காத்திருக்கிறார்! ஆனால் மறுபக்கம் அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனுக்கு மட்டும் சைக்கிள் டக்கென கிடைத்து விட்டது.. ஆனால் வைகோவுக்கு மட்டும் ஏன் இப்படி இழுத்துக் கொண்டிருக்கிறது. புரியலையே...

இத்தனை ஆண்டுகளாக நாம் கேள்வி கேட்காமல் இருந்ததன் விளைவு தான்...


இன்று அவர்கள் நமக்கு அளிக்கும் பட்டங்கள்.. தேச விரோதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என..

கேள்வி கேளுங்கள் ஏனென்றால் அரசாங்கம் என்றைக்கும் மக்களுக்கானது இல்லை...

தினகரன் பத்திரிக்கை எரித்த திமுக வழக்கின் தீர்ப்பு...


பத்திரிக்கை சுதந்திரம் முகிலன் எங்கே என்று கூறிக்கொண்டு சுத்தும் கனிமொழி & திமுகவினரை யாராவது பார்த்தீங்களா ?

ஈழத்து படுகொலையின் பின்னர்... திராவிட மாயையில் இருந்து வெளியே வந்து தமிழன் என்று பேசுவதற்கே இப்படி எதிர்க்கிறீர்களே ?


100 ஆண்டுகளாக திராவிடம் பேசி..
தமிழ் இனத்தினையும், தமிழ் நாட்டினையும் ஆளும் போது.. உங்களுக்கு இனிப்பாக இருந்தது.. உங்கள் முகமூடி கிழிந்து விட்டதால் தற்போது சகக்கிறதோ...

இன்று தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று.. தமிழ் தமிழன் என்று பேசும் போது....

எங்கே ஆளுமை பறி போய் விடுமோ என்று கூப்பாடு போடுபவர்கள் மட்டுமே திராவிடத்தை பேசுவார்கள் இன்னும் கூடுதலாக சிக்கல் வந்தால் இந்தியத்தை பேசுவார்கள்...

தமிழனை நம்ப வைத்து.. கழுத்து அறுக்கின்ற கூட்டம் தான் திராவிடம் பேசுகின்ற கூட்டம்...

தமிழா விழித்து கொள்...

அமமுக வேட்பாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு / ஆரம்பமானது டிடிவி. தினகரனுக்கு குடைச்சல்...


https://youtu.be/kosETDGb_E0

Subscribe The Channel For More News...

ஈர்ப்பு விதி இரகசியம்.. உங்களது மனக்கண்ணில்...


ஈர்ப்பு விதியின் இயக்க நிதிக்கு ஒரு உதாரணம்...

மிகபெரும் பணக்காரர்கள் எல்லோரும் தங்களது செல்வங்களை இழந்தவுடன் , மிக குறுகிய காலத்திலேயே அவைகளை திரும்ப பெற்று விடுகிறார்கள்.

இவர்களை போன்றவர்களை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் , இப்படிப்பட்டவர்கள் உணர்ந்து இருந்தார்களோ இல்லையா தெரியாது.

அவர்களுடைய எண்ணங்கள் முழுவதையும் செல்வங்கள் மட்டும் ஆக்கிரமித்து இருக்கும்.

அதாவது உங்களது எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்விதி அதற்கு ஏற்றவாறே இயங்கும்.

ஒத்தவை ஒத்வைற்றையே ஈர்க்கும் ஈர்ப்பு விதி என்பது என்னை பொறுத்தவரை, நான் என்னை ஒரு காந்தமாக எண்ணி கொள்வதற்கு ஒப்பானது..

உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள், அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள்,

அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சகணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள், இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது.

உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும்.

உங்களுக்கு நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன், அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும்.

நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும் போது ஈர்ர்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும், அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள்.

எந்திரன் படத்தில் உள்ள கிளிமஞ்சாரோ பாடலை நீங்கள் கேட்கும் போது உடனே உங்களது மன திரையில் ரஜினியும் , ஐஸ்வர்யாராயும் ஆடுவதும் , இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் குறித்து டைரக்டர் ஷங்கர் அளித்த பேட்டி உங்களுக்கு எப்படி நினைவுக்கு வருகிறது ?

நீங்கள் எதன் மீது கவனத்தை செலுத்துகிறீர்களோ அது சம்பந்தமாக விசயங்களை ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடும்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு , அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுதி கொள்ள வேண்டும்.

அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள்.

நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் - சுவாமி விவேகனந்தர்.

இன்றைய உங்களது வாழ்க்கை உங்களது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே, அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும்.

நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் , உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம்.

உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்....

எந்த ராசிகாரர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும்.. வீடியோ பாருங்க...


https://youtu.be/IotAYfVns9k

Subscribe The Channel For More News...

உணவே மருந்து...


அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து...

நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்... இது தான் உடலின் சங்கேத பாசை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம்.

ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட..

ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துப்பொருட்களும், உணவுப் பொருட்களும் எந்த அளவிற்கு தேவை, அறுசுவையில் எந்த சுவை குறைவாக இருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம்.

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவையுடன் கூடிய உணவு மட்டுமே நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் நோயிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு உணவுப் பண்டங்களும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் சுவைகளையும் கொண்டுள்ளது...

நமது ஆரோக்கியத்திற்கு, இந்த அறுசுவைகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டாலே , அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் எந்த வித ஆய்வு கூடமும் இல்லாமல் , நவீன உபகரணங்களும் இல்லாமல் கண்டறிந்திருக்கிறார்கள் . சுவைகளை வைத்தே அதில் இருக்கும் சத்துக்களையும், அவற்றின் விகிதாச்சாரத்தையும் கண்டறிந்ததே ஒரு மாபெரும் நுண்ணறிவுதான் .

இன்றைய மருத்துவ முறையில் எத்தனை நவீன உபகரணிகள் கொண்டும் அறிய முடியாத சில நோய்களை அவர்கள் வாதம், பித்தம், கபம் எனப் பிரித்து எந்த நாடி மிகுந்தோ/குறைந்தோ உள்ளது என்று கைகளில் உள்ள நாடியைத் தொட்டே கண்டறிந்தார்கள். அதற்கு உணவுமுறை மாற்றம், மூலிகைகள் என தகுந்த தீர்வையும் இயற்கையான முறையில் நமக்கு அளித்து விட்டு தான் சென்றார்கள்.

நவீன மருத்துவம் தான் இன்று நம்மில் பல பேர் கொண்டாடும் வைத்திய முறை. ஆனால் நவீன வைத்தியம் என்ன என்பதை சற்றும் அறியாத நம் முன்னோர்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் படித்து தேர்ந்த மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவற்றை காட்டும் நவீன கருவிகள், எல்லாம் இருந்தும் நவீன மருத்துவம் சாதித்தது என்ன?

இந்த உறுப்பில் இந்த நோய் வந்திருக்கிறது என்று எல்லாவற்றையும் தனித்தனியாய்ப் பிரித்து கண்டுபிடித்த நவீன மருத்துவமுறை பல லட்சங்களை விழுங்கிவிட்டு நம்மில் பலரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.. அல்லது.... லகரங்களில் கடன் வாங்கி உயிர் பிழைக்க வைத்து அவர்களை கடன்காரர்களாக்கி நிம்மதி இல்லாமல் சாகடித்திருக்கிறது....

நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது இரும்பு, சுண்ணாம்புச்சத்து, பல உயிர்ச்சத்து கலந்த பலவிருத்தியோ அல்லது மருந்து-மாத்திரைகளோ இல்லை. உதாரணமாக உப்பில் சோடியம் குளோரைடு அடங்கி உள்ளது.. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையானது..

ஆனால் இது அதிக அளவில் தேவை இல்லாதது. மிளகில் (100Gms ) 240% வைட்டமின் "c ", 39 % உயிர்ச்சத்து B -6 , 13 % இரும்பு சத்து, 14 % தாமிர சத்து, 7% பொட்டாசியம் அடங்கி இருப்பதை நவீன ஆய்வுகள் கண்டறிந்துள்ளன... இந்த கனிம சத்துக்கள், செரிமான சக்திக்கும், உடலில் தேவை இல்லாமல் சேரும் கொழுப்பை கரைக்கவும், தொற்றுக்களை தடுக்கவும் பயன்படும்.....

அதனால் தான் நம் முன்னோர்கள் பத்து மிளகோடு பகையாளி வீட்டில் கூட உணவு உண்ணலாம் (மிளகு விசத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது) என்று இந்த மிளகின் சிறப்பைப் பற்றி அன்றே தெளிவாக உரைத்திருக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.. இதற்கான காரணம் என்னவென்று யோசித்தால்... உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

தேவையறிந்து சமைக்காமல் தேவைக்கு அதிகமாக சமைத்து, பின் அது வீணாகி விடக் கூடாதென்பதற்காக பசி இல்லாமல் சாப்பிட்டோ, அல்லது அதனை அடுத்தவேளைக்கு சாப்பிட்டோ வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்... .

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு...

செந்தில் பாலாஜியால் அலறும் டிடிவி தினகரன்... கலைராஜனை தொடர்ந்து அடுத்தது யார்.?


https://youtu.be/2Hra90dptYg

Subscribe The Channel For More News...

அதிமதுரத்தின் சக்தி..


ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன.

வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும்.

நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே..

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்...

கோபப்படுங்கள் திமுக ஓட்டு கேட்டு வந்தால் கோபப்படுங்கள் தமிழர்களே...


https://youtu.be/NOEWJuqUd2s

Subscribe The Channel For More News...

தமிழ் தேசியத் தலைவர் மாவீரன் வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...


சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால்..

நீ ஏம்மா இங்க எல்லாம் வர பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற...  ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ...

என்று கையில் இருக்கும் காசை கொடுத்து காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு போவாராம் வீரப்பன்..

வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...

1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவு கூற வேண்டும்.

2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்டஈடு தர வேண்டும்.

3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..

4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.

5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.

6. தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...

துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் மட்டுமே தமிழர்களை  வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது திராவிடர்களே...

திமுக ஸ்டாலின் கழற்றி விட்டால் என்னாவது.? பிடிவாதத்தில் வைகோ, திருமா...


 https://youtu.be/V5kaOTT7yno

Subscribe The Channel For More News...

வெளிநாட்டு முதலீடு இல்லை வேலை வாய்ப்பு இல்லை பற்றாக்குறை உள்ளது என குற்றம் கூறும் திமுக... என் உள்நாட்டில் முதலீடு செய்யவில்லை...


தமிழ்நாட்டில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு பற்றி அறிக்கை கொடுக்கும் திமுக...

அடுத்த பக்கம் அதே கட்சி முன்னால் அமைச்சரும் தற்போதைய திமுக வேட்பாளர் இலங்கையில் முதலீடு செய்கின்றார்..

சிந்தித்து ஓட்டு போடுங்கள் மக்களே...

இவ்வளவு பணம் எப்படி வந்தது என அதுவும் வெளிநாட்டில் முதலீடு செய்து உள்ளனர்...

அமமுக டிடிவி தினகரன் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...


https://youtu.be/qkCPQDxNRQA

Subscribe The Channel For More News...

தமிழர் வாணிகம்...


தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்கின்றபடியால் தமிழர் இயற்கையாகவே அயல்நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்வதில் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தனர்.

மேலும், கடற்கரை நிலங்களில் வாழ்ந்தவர்கள் நாள்தோறும் கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கையை நடத்தினார்கள். ஆகையால், கடலில் போய் வருவது தமிழர்களுக்குப் பழங்காலம் முதல் இயற்கையான தொழிலாக இருந்தது.

கடல் வாணிகம் செய்யும் தமிழர்கள் மரக்கலங்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிச் சென்று அயல்நாடுகளில் விற்றனர். அந்நாடுகளிலிருந்து வேறு பொருள்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர்.

இவ்வாறு கொற்கை, தொண்டி, பூம்புகார் போன்ற தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து மரக்கலங்களில் புறப்பட்டுச் சென்று கிழக்குக் கடல் ஓரமாகவே நெல்லூர், கலிங்கம் போன்ற பட்டினங்களுக்குச் சென்று வந்தனர். இவ்வாறு நடைப்பெற்ற வாணிகம் கரையோர வாணிகம் எனப்படும்.

தமிழ் நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தோனேசியத் தீவுகளுக்கும் சென்று தமிழர்கள் வாணிகம் செய்தனர். இந்தத் தீவுகளைத் தமிழர்கள் “சாவகம்” என்று அழைத்தார்கள்.

சாவக நாட்டின் வாசனைப் பொருள்களையும் சீனத்திலிருந்து அங்குக் கொண்டு வரப்பட்ட பட்டுத் துணிகளையும் வாங்கி வந்து தமிழ் நாட்டில் இவர்கள் விற்றனர்.

இவ்வாறு வங்காளக்குடாக் கடலைக் கடந்து நடுக்கடலில் கப்பலோட்டிச் சென்று வாணிகம் நடுக்கடல் வாணிகம் என்றழைக்கப்பட்டது.

இவ்வாறு வாணிக நிமித்தமாகக் கடலில் செல்லுகையில் அவர்களின் மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை மாறிப் போகும்போது கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு, நீரில் மூழ்கியதும் உண்டு. நடுக்கடலில் காற்றினாலும் மழையினாலும் புயலினாலும் துன்பம் நேர்ந்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வணிகர்கள் மரக்கலங்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர்.

இயற்கையாகவே ஏற்படுகின்ற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வணிகருக்குக் கடற்கொள்ளைக்காரர்களாலும் சொல்லொண்ணாத் துன்பங்கள் நேரிட்டன. எனவே, இவர்கள் பாதுகாப்புக் கருதி கூட்டங்கூட்டமாகச் சென்றதோடு, வில் வீரர்களையும் உடன் அழைத்துச் சென்றனர்.

வணிகத் துறையில் இவ்வளவு துன்பங்கள் இருந்தும் அக்காலத்துத் தமிழர்கள் அயல் நாடுகளோடு தரை வழியாகவும் கடல் வழியாகவும் தொடர்புக் கொண்டு பொருள் ஈட்டினர். அவர்களைச் சேர சோழ பாண்டிய மன்னர்களும் ஊக்குவித்தனர்..

குறிப்பாக, கடல் வாணிகத்தின் வழி பெருஞ்செல்வத்தை ஈட்டினவர்களுக்குப் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தனர்...

அணுகுண்டு சோதனைகளும் உண்மைகளும்...


காந்தம் இன்னும் ஈர்க்கும்...


உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் , அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்.

உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால், கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி.

ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன.

எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை, நம்மால் எண்ணத்தை அளவிட முடியும்.

நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணி கொண்டே இருக்க வேண்டும்.

நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும், பெரிய வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், நீங்கள் இது போல் தொடர்ந்து எண்ணி கொண்டே இருக்கும் போது, நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள்.

எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன.

எண்ணங்கள் காந்த சக்தி உடையவை, நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன.

அவை அதே அலைவரிசையில் உள்ள அணைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன, பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும், அந்த மூலம் தான் நீங்கள்.

உதரணமாக நாம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம், அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது, அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து, ஒளிபரப்பபடுகிறது, நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி.

இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான், அதாவது சிக்னல்களை வெளியே அனுப்பி கொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தான்.

நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது.

ஏன் என்றால் நம்மிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ, அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும்.

உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும், உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே.

உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் , முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும்.

எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள். நம் எல்லோருக்கும் பிரச்சினை இங்கு தான் உள்ளது.

பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும் தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.

பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.

இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த தொடரில் பார்க்கலாம் . காந்தம் இன்னும் ஈர்க்கும்...

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பாதியில் எழுந்து சென்ற பொதுமக்கள். கெஞ்சிய திமுக நிர்வாகிகள்...


https://youtu.be/Tlmzs0mJBvQ

Subscribe The Channel For More News...

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை...


கன்னடன் - கன்னடனாக இருக்கும் போது.
தெலுங்கன் - தெலுங்கனாக இருக்கும் போது.
மலையாளி - மலையாளியாக இருக்கும் போது.

தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும்,
ஒகனேக்கல்லும்,
காவிரியும்,
பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும் போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா?

இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா?

அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது.

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும் போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும் போது...

தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு..

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பெயர்..

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்று தான்.

தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்..

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ..

கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ..

மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ..

பர்மாவிலிருந்து தமிழர்
விரட்டப்பட்டபோதோ..

ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ..

ஆந்திராவில் தமிழர்களை சுட்டு தள்ளியபோதோ...

தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை.. காரணம் என்ன?

திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்..

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது..

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது..

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.

மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது.

பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது.

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது.

உலகமே இப்படி இருக்கும் போது,
அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும் போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?

மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால் தான்.

தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்து விட்டார்கள்.

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும்.

இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் எதிரியாகத் தான் இருப்பார்..

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது...