01/09/2018

தோழர் தமிழரசன் (இன்று நினைவு தினம்) - உலகத் தமிழர் பேரவை...


மக்கள் புரட்சியை விரும்பியவர்..
மக்களோடு வாழ்ந்தவர்..
முந்திரிக்காடுகளில் விளையும் அனைத்து முந்திரிகளையும் பெரும் முதலாளிகள் சுரண்டி கொழுத்த பொழுது அதற்கு எதிராக மக்களை திரட்டி கூட்டுறவு முந்திரி பண்ணை அமைக்க பாடுபட்டவர்.. பல முறை அரசிடம் போராடியவர்.. தமிழ் நாடு விடுதலையை இலக்காக கொண்டு போராடிய தலைவர் வங்கி கொள்ளை முயற்சியில் படுகொலை செய்யப்பட்டார்.. பின்னர் தமிழரசன் தான் என மக்கள் கண்டு கொண்டதும் கண்ணீர் விட்டு அழுது அவருடைய இறுதி ஊர்வலத்தில் சுமார் 50 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.. ஒரு ஆயுத போராளி மக்கள் மத்தியில் மக்களுக்காக வாழ்ந்தது, மக்களுக்கான அரசியலை முன் மொழிந்தது, மக்களை திரட்டியது எல்லாம்.. அவருடைய இறுதி ஊர்வலத்தின் மூலம் உலகறிந்தது..

மீன்சுருட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சகோதரி கலிங்கராணியை கற்பழித்துப் படுகொலை செய்த சாதிவெறி நிலப்பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த (லிங்கையாத் தேவரின் மகன்) இளவலை அம்பலப்படுத்தியும், தண்டிக்கக் கோரியும் போராட் டங்கள் நடத்தியதோடு மட்டுமல்ல. அதற்காகவே மீன்சுருட்டியில் சாதிஒழிப்பு மாநாட்டை நடத்தி, சாதிஒழிப்புக்கான கொள்கை அறிக்கையையும் வெளியிட்டவர் தோழர் தமிழரசன். தான் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய விடுதலைக்கு சாதிமுறை பெரும் தடையென்பதையும், அதை ஒழிக்க தனித் திட்டமும் வேண்டுமென்றும் உணர்வுபூர்வமாக பாடுபட்டார். அவர் உயிரோடு இருந்தவரை அப்பகுதியில் வன்னியர் சங்கத்தை காலூன்ற விடவில்லை.

தமிழ்தேசியம் தழைத்தோங்கிய பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழ் தேசியம் பற்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் சரியாக வெளிக்கொணரப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல் இதனை திரித்து பொய்க்கதை எழுதி மறக்கடித்தப் பெருமையும் வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு.1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாஇயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழுதோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன.இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் – அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது. நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின.நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் “மக்கள் யுத்தக் குழு” இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின. அவர் மீது கொலைக்குற்றம் போன்ற பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு அரசு அவரை சிறையில் அடைத்தது.நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர்.
இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக “தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)” என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் “தோழர் தமிழரசன்” தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது.

தோழர் தமிழரசன் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதேன் ?

கடந்த எனது பதிவில் தோழர் தமிழரசன் மாவீரர் இல்லையா எனக் கேட்டிருந்தேன். இதைப் படித்த ஒரு அன்பர் மக்களைக் கொன்ற தமிழரசன் ஒருபோதும் மாவீரர் ஆக முடியாது என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் வேடிக்கை என்னவெனில் அந்த அன்பர் பிரபாகரன் மாவீரர் என தனது முகப்பு பக்கத்தில் போட்டிருக்கிறார்.

பிரபாகரன் ஆரம்பத்தில் குரும்பசட்டி என்னும் இடத்தில் ஒரு தனியார் வீட்டில் கொள்ளையடித்த வரலாறு பலருக்கு தெரியவில்லை. குரும்பசட்டியில் ஒரு தனியார் வீட்டில் அடைவு வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு பிரபாகரன் வெளியே வந்தபோது அங்கே சுருட்டு சுற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பிரபாகரனை கல்லால் தாக்கினார்கள். பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றார்.

ஈழத்தில் இருந்த பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் தங்கள் இயக்க செலவுகளுக்காக பணம் கொள்ளையடித்தார்கள். சில இயக்கங்கள் வங்கியில் கொள்ளையடித்தன. சில பெற்றோல் நிலையங்கள், தபாற் கந்தோர்கள், சங்கக்கடைகள் என்பனவற்றில் கொள்ளையடித்தன. இன்னும் சில தனியார் வீடுகளிலும் மட்டுமல்ல கோயில்களிலும் கொள்ளையடித்தன.

ஈழவிடுதலை இயக்கங்கள் கொள்ளையடித்து பணத்தேவைகளை பூர்த்தி செய்ததை அறிந்த தோழர் தமிழரசனும் தமது அமைப்பு செலவுகளுக்காக பணம் கொள்ளையடிக்க முயன்றார். அவர் முதலில் முயற்சி செய்தது உட்கோட்டை வங்கியில் ஆகும். அங்கு கொள்ளையிட முயன்றபோது அந்த வங்கிக் காசாளர் பணத்தை கொடுக்க மறுத்தார். பணப்பையை எடுக்க இழுபறி நடந்தது. அதனால் அந்த காசாளர் சுடப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு மக்கள் கூடிவிட்டார்கள். இதனால் பணம் கொள்ளையடிக்க முடியாமல் தமிழரசன் தன் குழுவினருடன் தப்பி சென்றார்.

இதன் பின்பு தமிழரசன் பணம் கொள்ளையடிக்க முயலவில்லை. அந்த எண்ணத்தை முற்றிலுமாக கைவிட்டிருந்தார். இந்த நிலையில் ஈழவிடுதலை இயக்கம் ஒன்றிற்கு இந்திய உளவுப்படை புலிகளை அழிக்குமாறு ஒரு தொகையான ஆயுதங்களை கொடுத்திருந்தது. அந்த ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த 6 போராளிகள் தலைமையுடன் விரக்தி அடைந்திருந்தார்கள். எனவே அவர்கள் அந்த ஆயுதங்களை இரகசியமாக எம்மிடம் ஒப்படைக்க விரும்பினார்கள்.

எமது இயக்கம் அப்போது நாட்டில் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனவே ஆயுதங்களைப் பெற்றாலும் அவற்றை நாட்டுக்கு கொண்டுபோக முடியாத நிலை இருந்தமையால் நாம் அவ் ஆயுதங்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் இந்த விடயத்தை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் அவ் ஆயுதங்களை தாம் பெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால் ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த போராளிகள் தமிழரசனுக்கு கொடுக்க விரும்பினாலும் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டார்கள். இதனால் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு அவர்களை ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்ல உதவுவதாக தமிழரசன் வாக்குறுதியளித்தார்.

தோழர் தமிழரசன் இந்த விடயத்தை தன்னுடன் உறவு வைத்திருந்த பெருஞ்சித்திரனார் போன்ற தலைவர்களுடன் கலந்தாலோசித்தார். எல்லோரும் “ஆயுதங்களைப் பெற்று போராட்டத்தை ஆரம்பியுங்கள். நாங்கள் ஆதரவாக அரசியல் பிரச்சாரம் செய்கிறோம்” என உறுதியளித்திருந்தனர்.

இதனாலேயே மிகுந்த நம்பிக்கையுடன் பணம் கொள்ளையடிக்க தோழர் தமிழரசன் மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் அவர் கொண்டிருந்த அதீத நம்பிக்கையும் விட்ட சில தவறுகளும் அவரை மரணத்தில் தள்ளிவிட்டன. எதிரி மிகவும் நன்கு திட்டமிட்டு அவரை கொலை செய்துவிட்டான். ஒரு மாபெரும் போராளியை தமிழ்நாடு இழந்துவிட்டது.

தோழர் தமிழரசனால் தகர்க்கப்பட்ட அரியலூர் மருதையாற்று பாலம்

இந்திய அரசு ஈழப் போராட்டத்தை நசுக்குவதை தோழர் தமிழரசன் அன்றே உணர்ந்து கொண்டார். எனவே தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி 1986ல் அரியலூரில் மருதையாற்றுப் பாலத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்தார். “மத்திய மாநில அரசுகளே தமிழீழத்தை அங்கீகரி!” என்ற பிரசுரங்களை தமிழ்நாடு விடுதலைப்படை என்னும் பெயரால் முன்வைத்தார். இது முழு இந்தியாவிலும் எதிரொலித்து. தோழர் தமிழரசனின் தீர்க்கதரிசமான இந்த கோரிக்கை சரியானது என்பதை இந்திய அரசே தமிழ் மக்களின் அழிவிற்கு காரணம் என்ற செய்தி நிரூபிக்கின்றது.

இச் சம்பவத்தில் திருச்சி நோக்கி வந்த மலைக் கோட்டை எகஸ்;பிரஸ் ரயில் கவிழ்ந்து ஏ.சி கம்பாட்மென்டில் இருந்த 35 பயணிகள் மரமணமடைந்ததால் இது முழு இந்தியாவிலும் பர பரப்பான செய்தியானது.

உண்மையில் அன்று நடந்தது என்னவென்றால் தோழர் தமிழரசன் தலைமையில் சென்ற தமிழ்நாடு விடுதலைப் படையினர் மருதையாற்று பாலத்தை குண்டுவைத்து தகர்த்துவிட்டு தமது கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்களை அருகில் ஒட்டியிருந்தனர். பின்னர் அருகில் இருந்த ரயில் நிலையம் சென்று தாம் குண்டு வைத்து பாலத்தை தகர்த்து விட்டதையும் எனவே ரயில் சேவையை நிறுத்தும்படி எச்சரித்துவிட்டு சென்றனர்.

அந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரி உடனே சென்னை உட்பட பல தலைமையிடங்களுக்கு இந்த செய்தியை அனுப்பினார். ஆனால் பல தொலை பேசி உரையாடல்களுக்கு பின்னர் ரயிலை மறிக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படியும் மேலிட உத்தரவு வந்தது. இது அந்த அதிகாரிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருந்தும் மேலதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க வேறு வழியின்றி அடுத்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து செல்ல அனுமதித்தார். ஆனால் நிகழ இருக்கும் ஆபத்தை உணர்ந்தவராய் மனம் கேட்காமல் அந்த ரயில் டிரைவரிடம் “ஏதோ வெடி சத்தம் கேட்டது. மெதுவாக பார்த்து போகவும்” என்று எச்சரித்துள்ளார். சாரதியும் மெதுவாக ஓட்டி வந்ததால் ரயில் பாலத்தில் கவிழ்ந்து 35 பேர் பலியானார்கள். இல்லையேல் அதிகளவில் பலியாகியிருப்பர்.

பாலத்தில் குண்டு வெடித்து மூன்று மணி நெரம் கழத்து வந்த ரயில் கவிழ்து 35 பெர் பலியானார்கள். ஆனால் அடுத்தநாள் பத்திரிகைகளில் “ஓடும் ரயிலுக்கு குண்டுவைப்பு. பல அப்பாவி தமிழர்கள் பலி” என்று செய்தி வெளிவந்தது. மக்களுக்காக போராடியவர்கள் மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டனர்.

தாங்கள் எச்சரித்தும் தங்கள் மீது கெட்ட பெயர் உருவாக்குவதற்காக அரசு வேண்டுமென்றே ரயிலை கவிழ்த்து மக்களைப் பலியாக்கியள்ளது என்பதை தோழர் தமிழரசன் உணர்ந்து கொண்டார். இந்த உண்மையை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அவர் இறக்கும் வரை மட்டுமல்ல அவர் இறந்தபின்பும் கூட இந்த உண்மை மக்கள் மத்தியில் வெளிவரவில்லை.

எந்த மக்களுக்காக தோழர் தமிழரசன் போராடினாரோ அந்த மக்களை குண்டு வைத்து கொன்றார் என்ற அவப் பெயருடனே அவர் மறைந்தார். ஆனால் மக்கள் என்றாவது ஒரு நாள் உண்மையை அறிந்து கொள்வார்கள் என நான் உறுதியாக நம்பகிறேன். அன்று தோழர் தமிழரசன் மீது படர்ந்த அவப் பெயர் நீங்கும். அவர் மக்களின் போராளி என்பது வெளிப்பட்டு மக்கள் மனங்களில் நிறைந்து காணப்படுவார்.

மீண்டும் குண்டுகள் வெடிக்கும்.
எதிரி தூக்கியெறிப்படுவான்.
தோழர் தமிழரசன் கனவுகள் நிறைவேறும்.

இன்று தோழர் தமிழரசன் குறித்து பலரும் வெளிப்படையாக ஆதரித்து பேசியும் எழுதியும் வருகின்றனர். 26 வருடங்களின் பின்னர் தமிழகத்தின் பல பாகங்களில் தோழர் தமிழரசன் நினைவு தினம் கொண்டாடப்படுவது உண்மையிலே மிக்க மகிழ்வு தருகிறது. ஆனால் அன்று அப்படி நிலை இருக்க வில்லை. தமிழரசனின் போராட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட வெளிப்படையாக ஆதரிக்க தயங்கினார்கள். அந்தளவுக்கு கியூ பிராஞ் பொலிசின் அடக்கு முறைகளும் நெருக்கடிகளும் இருந்தன.

தோழர் தமிழரசனின் நெருங்கிய ஆதரவாளர்கள் அவரை காட்டிக் கொடக்கும்படி நெருக்கப்பட்டார்கள். தோழர் தமிழரசன் அடிக்கடி செல்லும் ஒரு ஆதரவாளரை இனங் கண்டு கொண்ட உளவுப்படை பொலிசார் அவரிடம் நஞ்சைக் கொடுத்து அதை சாப்பாட்டில் கலந்து கொடுக்கும்படி வற்புறுத்தினார்கள். இல்லையேல் அவருடைய குடும்பத்தை சின்னா பின்னமாக்குவோம், மனைவியை விபச்சார வழக்கில் கைது செய்வோம், மகளை மான பங்பப்படுத்துவோம் என்றெல்லாம் மிரட்டியிருந்தனர். அந்த ஆதரவாளரும் பயந்து வேறு வழியின்றி சம்மதித்தார்.

வழக்கம்போல் ஒரு நாள் தோழர் தமிழரசன் அந்த ஆதரவாளர் வீட்டுக்கு வருகை தந்தபோது அந்த ஆதரவாளர் சாப்பாட்டில் நஞ்சைக் கலந்து கொடுத்திருக்கிறார். கொடுக்கும்பொது அவரது மனட்சாட்சி உறுத்தியதால் கைகள் நடுங்கியிருக்கிறது. இதை அவதானித்த தோழர் தமிழரசன் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு தனக்கு பசிக்க வில்லை என்று கூறிவிட்டு சாப்பிடாமல் சென்றுவிட்டார்.

அதேபோல் இன்னொரு முறை வேறொரு ஆதரவாளர் வீட்டுக்கு தமிழரசன் சென்றபோது அவரது வருகை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழரசன் தனி ஆள் தானே . இலகுவாக கைது செயயலாம் என்று நினைத்து ஒரு சப் இன்பெக்டரும் நாலு காவலரும் ஜீப் வண்டியில் சென்றுள்ளனர். இரவு நேரம். தமிழரசன் வெளியில் வரட்டும் கைது செய்யலாம் என நினைத்து வீதியோரத்தில் பதுங்கியிருந்தனர். வெளியே வந்த தமிழரசன் தனது மோட்டார் வண்டியில் ஏறு முன்னர் வழக்கம்போல் தனது சப் மிசின்கன் துப்பாக்கியை சரிபார்த்திருக்கிறார்.

அவர் எப்போது பணயம் செய்யும் போது துப்பாக்கியை சரி பார்ப்பது வழக்கம். (லோட் செய்து லாக்கில் தயார் நிலையில் வைத்திருப்பார்). அவர் சப் மிசின்கன் துப்பாக்கி வைத்திருப்பதை பார்த்து திடுக்கிட்ட பொலிசார் பயந்து அவரை கைது செய்ய முயற்சிக்காமல் அப்படியே பதுங்கி இருந்துவிட்டனர். எனெனில் அவர்களிடம் ஒரேயொரு துப்பாக்கி அதுவும் 303 ரைபிள் துப்பாக்கியே அப்போது இருந்திருக்கிறது. அடுத்தநாள் தகவல் கொடுத்தவரை “ஏன்டா, அவன் மிசின்கன் வைத்திருப்பதை எங்களுக்கு முன்னரே சொல்லவில்லை. நல்ல காலம். நேற்று எங்களை கொல்லப் பார்த்தியே” என்று செல்லி அடித்தார்களாம்.

சந்தன வீரப்பன் போல் காட்டில் இருந்தால்தான் பொலிசில் இருந்து தப்பிக்க முடியும் என சிலர் என்னிடம் கூறுவதுண்டு. ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் மக்கள் மத்தியிலேயே இருக்க முடியும் என்பதற்கு தோழர் தமிழரசன் ஒரு நல்ல உதாரணமாக நான் காட்டுவேன். அவர் மோட்டார் சயிக்கிளில் எப்போதும் துப்பாக்கியுடன் செல்வார். அதற்கு லைசென்ஸ் கிடையாது. அது அவருடைய வண்டியும் கிடையாது. ஒரு பண்ணையாரிடம் பறித்தெடுத்தது. இருந்தும் அவர் இறக்கும்வரை பொலிசில் பிடிபட்டது கிடையாது.

தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள் !

செங்கொடி பதிகிறது!
செவ்வணக்கம் செலுத்துகிறது!

தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

சோசலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை பலியாக்கும். இது மனித சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை விதி. பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங்

தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை.

படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.

தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவரை என்றும் நினைவில் கொள்வோம்.

1-9-1987 தோழர் தமிழரசன் உளவுத்துறையின் கைகூலிகளால்
காட்டிக்கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்ட தினம்.!

தலித் தலைமை தமிழகத்தை ஆளவேண்டுமென்று முழங்கிய மாபெரும் போராளி இவர். அரசியல் சந்தர்ப்பவாதங்களுடன் சமரசம் ஆகாதவர். இவருக்கு வண்ணிய சாயம் பூச முயலும் சாதியவாதிகளுக்கு இவர் பெருமைகள் தெரியுமா.?

மக்கள் யுத்தக்குழுவில் இருந்த புலவர் கலியபெருமாள், தமிழரசன் ஆகியோர்களிடம், தனித் தமிழ்நாடு கோரிக்கைகள் வலுபெற்றதை அடுத்து மக்கள் யுத்தக்குழு இவர்களை வெளியேற்றுகிறது. B.E வேதியல் படித்தவர் தமிழரசன். வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுனர். பிரமிக்கத்தக்க வரலாற்று அறிவுபெற்றவர். மீன்சுருட்டி தீர்மாணங்கள் எனும் நூலை படிப்பவர்கள், அந்த ஆயுதப்போராளியின் அரசியல் அறிவை அறியலாம். இருப்பவனிடம் பறித்து இல்லாதவனுக்கு வழங்கும் நக்சல்களின் பிரத்யோக பொருள் திரட்டுதல் முறைப்படி, பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். 1-9-1987 அன்று, பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவர் மக்களால் சுற்றி வளைக்கப்படுகிறார். மக்களோடு மக்களாக காவலர்களும் சாதாரன உடையில் நிற்க, தற்காப்பு நடவடிக்கைக்காக ஆயுதத்தை உபயோகிக்கமுடியாமல் தோழர் தவிக்கிறார். ஆயுத பிரயோகம் மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுமோ என அவர் அஞ்சி நிற்க, அவர் “தோழர் தமிழரசன்” தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் அவரை தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. எச்சரிக்கும் விதமாக துப்பாக்கியை உபயோகித்திருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்கமாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். தோழர் தமிழரசனுடன், தர்மலிங்கம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் என தமிழ்நாடு விடுதலை படையின் ஐந்து தலைமைக்குழு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இதை விட ஒரு சோகமான செய்தி, பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமலே தோழர் மறைந்து போனார். தங்களால்

கொல்லப்பட்டது தமிழரசன் என்று பிறகு கேள்விபட்டவுடன் மக்கள் கதறினர். பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் சோகம் சூழ்ந்தது.

தோழர் தமிழரசனின் வாழ்க்கைமுறை மிகச்சிறந்த போராளிக்கான உன்னத வாழ்க்கை முறை. (அடிமைத்தனத்துக்கு எதிரானவன்தானே போராளியாக இருக்கமுடியும்.?) அவர் ஒரு தலித் என்று கணிக்கக்கூடிய அளவிலேயே அவரது நடவடிக்கைகள் அமைந்தது. அதாவது சேரிகளிலேயே உண்பது, உறங்குவது, பழகுவது என அவரது வாழ்க்கை பெரும்பாலும் தலித்துகளுடனேயே கழிந்தது.

தமிழரசனை பிரசவித்த வண்ணிய சாதியை, வெறும் தலித் எதிர்ப்பாளர்கள் என்ற அளவில் மட்டுமே அவர்கள் அறிவை மழுங்கடித்து வைத்திருக்கக்கூடிய இன்றைய அரசியல் எவ்வளவு மோசமானது.?

தமிழரசன் கொல்லப்படாதிருந்தால் அத்தகைய சுயநல சக்திகள் கிளம்பியிருக்கமுடியாது. மேலும் தமிழ்தேசியம் என்றாலே, திராவிட எதிர்ப்பு என்று மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுபோடும் அரைகுறைகளுக்கும் வேலையிருந்திருக்காது. தமிழரசன் மார்க்சையும், அம்பேத்கரையும், பெரியாரையும் முன்னிறுத்தியே சமத்துவம் பேசினார். சாதிஒழிப்பை வலியுறுத்தியே தமிழ்தேசியமும் பேசினார்.

** சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்”

என்ற

மீன்சுருட்டி மாநாட்டின் அறிக்கையில் அவரது சிறப்பு மிகு பதிவுகள்,

*பிற்போக்கு வாதிகளின் மதவெறி, சாதிவெறி, பிரித்தொதுக்கும் முயற்சிகளை முறியடிப்போம்.

*உழைக்கும் மக்களைச் சாதி ஒழிப்பின்அடிப்படையில் ஒன்றுபடுத்துவோம்.

*வறட்டுவாதிகளின் சீர்திருத்தவாதிகளின் தவறான அணுகுமுறைகளை முறியடித்து சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

*தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா!

*தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடமே சேரிகள்! #

இதுவல்லவா தமிழ்தேசியம்.?

தும்பைவிட்டு வாலைபிடிக்கும் இன்றைய சந்தர்பவாத சாதித் தமிழ்தேசியவாதிகளெ, தமிழரசனின் தமிழ்தேசியத்தை படியுங்கள்.. தமிழரசனின் சாதிஒழிப்பு சித்தாந்தத்தை படியுங்கள். பிறகு நீங்கள் தனித் தமிழகத்துக்காக போராடலாம், ஈழத்துக்கு குரல் கொடுக்கலாம், உலகின் எங்குமுள்ள அடக்குமுறைக்கு எதிராகவும் போராடலாம்.

மாவீரர் தமிழரசனுக்கு வீரவணக்கங்கள்.!!

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!
-தோழர் மாவோ சேதுங்

1984ல் மலையாளப்பட்டியில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அழைத்து சென்றார்.

உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார்.

எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது.

அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று மாவோ கூறினார் “ என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் பரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்து கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.

பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர்களே மாவோ வின் வரிகளை உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.

என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார்.

தோழர் தமிழரசனோடு 1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நெருங்கி பழகிய தோழர் பாலன் அவர்களின் நினைவுக் குறிப்புகளில் இருந்து.. அவர் அனுமதி பெறாத போதும் வரலாற்றின் உண்மைகள் பதியப் பட வேண்டும் என்பதனால் தொகுத்திருக்கின்றேன். நன்றி பாலன் தோழர்.

“பெரம்பலூருக்கு அருகில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் எமது பாசறை இருந்தது. அதை அமைத்து அதில் எம்முடன் தங்கியிருந்து அரசியல் வகுப்பு எடுத்தவர் தோழர் தமிழரசன். அவருடன் அரியலூர, ஜெயங்கொண்டம், பெண்ணாடம், பொன்பரப்பி போன்ற கிராமங்களுக்கு சென்று அடித்தட்டு மக்களை சந்தித்தது மறக்க முடியாதது.”

“இது நடந்தது 1983க்கு பின்பு. அப்போது எல்லா அமைப்புகளுமே தமிழ்நாட்டில் பாசறைகள் வைத்திருந்தன. ஆனால் தனித்தனியாகவே வைத்திருந்தன. எமக்கு மலையாளப்பட்டியில் அரசியல் வகுப்பு பாசறையும் வாடிப்பட்டியில் ராணுவ பயிற்சி பாசறையும் இருந்தது. இதில் வாடிப்பட்டியில் தோழர் தமிழரசனும் அவரது தோழர்களும் பயிற்சி பெற்றனர்.”

“அன்றைய காலப்பகுதியில் பெரும்பாலான அமைப்புகள் இந்திய அரசை நம்பின. எனவே அவை இந்திய அரசுக்கு எதிராக தமிழரசன் போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.”

“இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் காண வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு எதிராக எம்முடன் சேர்ந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று தோழர் தமிழரசன் மிகவும் விரும்பினார். அதற்காக இரண்டு முறை வேதாரணியம் கடற்கரை வரை வந்திருந்தார். ஆனால் துரதிருஸ்டவசமாக அவரது ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை. அவர் இலங்கை வந்திருந்தால் எமது பொராட்ட வரலாறு வேறு விதமாக அமைந்திருக்குமோ என நான் பலமுறை நினைத்ததுண்டு.”

“தர்மபுரியில் நக்சல்பாரிகளை ஒழிப்பதாக கூறி பல தாழ்த்ப்பட்ட மக்களை கொன்றவன் தேவாரம் என்ற பொலிஸ் அதிகாரி. அவனை கொன்று பழி தீர்க்க வேண்டும் என தோழர் தமிழரசன் விரும்பினார். விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு தேவாரம் அடிக்கடி இரவில் தனியாக வருவதை அறிந்த தோழர் தமிழரசன் அவனைக் கொல்வதற்காக இரண்டு முறை வந்து காத்து நின்றார். ஆனால் அந்த இரண்டு முறையும் அவன் வராமல் தப்பி விட்டான். அவனைக் கொல்ல வில்லை என்ற வருத்தம் தோழருக்கு இறுதிவரை இருந்தது.”

“தோழர் தமிழரசன் மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படைக்கு பயிற்சி மற்றும் ஆயுத உதவிகள் செய்தமைக்காக எமது தோழர் நெப்போலியன் அவர்கள் இந்திய உளவுப் படையின் வேண்டுகொளுக்கு அமைய அதன் கைக்கூலிகளால் மலையகத்தில் வைத்து நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். மலைய மக்கள் விடுதலை முன்னியை ஆரம்பித்தவர் தோழர் நெப்போலியன். அதன் வளர்ச்சிக்காகவே பணப் பறிப்பு செய்தார். பின்பு அதனை வைத்து சந்திரசேகரன் அமைச்சராகிவிட்டார். ஆனால் நெப்பொலியன் கொள்ளையர் பட்டம் சுமக்கிறார்.”

“தமிழரசன் கொல்லப்பட்டபோது அவரிடமிருந்த இரண்டு சப் மிசின்கன்களும் 4 கிரினைட் வெடி குண்டுகளும் பற்றி இந்திய உளவுப்படை மூச்சு விடுவதில்லை. ஏனெனில் இவை அவர்களால் ஈழவிடுதலை இயக்கம் ஒன்றிற்கு வழங்கப்பட்டவை. அவை எம் மூலம் தோழர் தமிழரசனுக்கு சென்றதை அறிந்ததும் எம்மை அழிக்க துடித்தன.”

“தோழர் தமிழரசனுக்கு அவரது தாயாரின் நிலத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தோழர் புலவர் கலியபெருமாள் முயற்சி செய்தார். அவர் மரணமடைந்துவிட்டதால் அவரது முயற்சியை தோழர் பொழிலன் தொடர்ந்தார். அவரும் கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் சிறை வைக்கப்ட்டிருப்தால் அவராலும் அதை நிறைவேற்ற முடியவில்லை. தோழர் முகிலன் திண்டிவனத்தில் அமைத்த மண்டபத்திற்கு தோழர் தமிழரசன் மணி மண்டபம் என பெயர் வைத்திருக்கிறார்.”

“தோழர் தமிழரசன் கொல்லப்பட்டபோது ஜயா பெருஞ்சித்திரனார் தவிர வேறு யாருமே பகிரங்கமாக அஞ்சலி செலுத்தவில்லை. அந்தளவுக்கு பொலிஸ் நெருக்கடி இருந்தது. ஆனால் இன்று பலர் பகிரங்கமாக தோழர் தமிழரசன் குறித்து பேசுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பெண்ணாடத்தில் நடந்த புலவர் இரங்கல் கூட்டத்தில் தோழர் தமிழரசன் குறித்து நீண்ட ஒரு புகழ் உரை வழங்கினார். (அதன் வீடியோ விரைவில் இங்கு இணைக்க இருக்கிறேன்) இது இனிவரும் காலம் தோழர் தமிழரசன் காலம் என்பதையே காட்டுகிறது.”

“நாம் இரண்டு தவறுகள் செய்திருக்கிறோம். ஒன்று தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை எமது போராட்டத்தில் இணைத்திருக்க வேண்டும். இரண்டாவது தமிழ்நாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு உதவியிருக்க வேண்டும். இந்த இரண்டும் நடந்திருந்தால் நிச்சயம் முள்ளிவாய்க்கால் அழிவு நடந்திருக்காது. இதற்காக நாமும் தோழர் தமிழரசுனும் முயற்சி செய்தோம். ஆனால் எமது முயற்சி வெற்றி பெறவில்லை. எதிரி இனங்கண்டு அழித்துவிட்டான்.”

“தோழர் பொழிலன் அவர்கள் பெருஞ்சித்திரனாரின் மகன். தோழர் தமிழரசன் மறைவிற்கு பின்பு தமிழ்நாடு விடுதலைப் படையை முன்னெடுக்க நான் தான் அவரை தயார்படுத்தினேன். அதனால் தான் கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் நான் சேர்க்கப்பட்டேன். நான் சிறையில் இருந்தபோது “ உழைக்கும் மக்கள் தமிழகம்” சஞ்சிகை எனக்கு அனுப்பிவைப்பார். நான் லண்டன் வந்தபின்பு அனுப்பி வைத்திருக்கிறார்.

“தோழர் தமிழரசன் பற்றி மட்டும்மல்ல அவரது தலைவர் புலவர் கலியபெருமாள் இன்னும் தோழர்கள் லெனின் , மாறன் ஆகியோர் பற்றியெல்லாம் எல்லாம் என் அனுபவங்களை நிச்சயம் எழுதுவேன். தற்போது நான் என் எட்டுவருட சிறை அனுபவங்களை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இது முடிந்ததும் தொடர்வேன்.”

“அடுத்த போராட்டம் அனைத்து தமிழ் மக்களும் இணைந்து உலகின் அனைத்து பாகங்களிலும் முன்னெடுப்பார்கள். இது உறுதி. தமிழ்மக்களின் போராட்டம் உலகமயமாகிவிட்டது. இனி எமது எதிரிகள் முன்னர் போல் அவ்வளவு இலகுவாக எம்மை அழிக்க முடியாது.”

“பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு தோழர் தமிழரசன் தொடர்பாக சில தகவல்கள் பெற்றார். அவர் எழுதிக் கொண்டிருக்கும் தோழர் தமிழரசன் பற்றிய புத்தகம் விரைவில் வெளிவரும் என நம்புகிறேன்”

தோழர் தமிழரசனுடன் இறுதிக்காலங்களில்(1983 முதல் அவர் இறக்கும்வரை); நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் அவரது பல முக்கிய விடயங்கள் எனக்கு தெரியும். தற்போது நான் மட்டுமே உயிருடன் இருக்கிறேன். எனவே இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவது என் முக்கிய கடமையாகும். அதை நான் உணர்ந்திருப்பதோடு நிச்சயம் நிறைவேற்றுவேன்...

மறக்கலாமா அனிதா படுகொலை...


போன் செய்தால் வீட்டுக்கே பணம் வந்துவிடும் - செப். 1 முதல் அஞ்சல் வங்கித் திட்டம் தொடக்கம்...


போன் செய்தால் வீட்டுக்கே பணம் கொண்டுவந்து கொடுக்கும் வங்கித் திட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

அனைத்து அஞ்சலகங்களிலும் இந்தியன் போஸ்டல் பேமென்ட் பேங்க் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

இந்த வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் போன் செய்தால் வீட்டுக்கே பணம் கொண்டுவந்து கொடுக்கப்படும். அதற்காக 25 ரூபாய் சார்ஜ் செய்யப்படும்...

பாஜக - அதிமுக - ஸ்டெர்லைட் சதி திட்டங்கள்...


பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - மருத்துவ அறுவை சிகிச்சையில் (MEDICAL AND SURGERY OPRATION) நம் பழந்தமிழர்கள் முன்னோடிகள் என அறிவோம்...


ஒவ்வொன்றாக காயத்தை சரிசெய்யும் முறையான கிருமிநாசினி தடவுதல், புண்களை தையல் போடுதல் பின் பஞ்சுவைத்து கட்டுபோடுதல் என வரிசையாக காண்போம்.

ANTISEPTIC CLEAN...

பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்

- (திருவெங்கைக் கோவை - 99)

ஆயுதங்களால் உண்டான காயங்களிலும் அறுவை சிகிச்சை நடத்த இடத்திலும் உலோக  நஞ்சை  முறிக்கும்   (ANTISEPTIC) மருந்தாகவும்,புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப்பால்  பயன்படுத்தினர். மேலும் வேம்பு இலையையும் பயன்படுத்தினர் பதிவின் நீளம் கருதி இங்கு கூறவில்லை.

WOUNDED STITCHES...

மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது

- (பதிற்றுப்பத்து 42: 2முதல்5வரை)

இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல,ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்.அதாவது புண்பட்ட இடத்தில் வெள்ளுசியை கொண்டு தையல் போடும் முறை புலவர் கூறுகிறார்.

இதை செய்து முடித்த பின் இப்போது போடபடும் பஞ்சு கட்டு (band-aid) அப்போதே போட்டுள்ளனர்.

COTTON DRUG PACK...

செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்
- (புறநானூறு-353)

அதாவது, பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரியும் வீரர்கள் வீரத்தை பறை சாற்றுகிறது மேற்கண்ட பாடல்.

அடுத்து நாம் காணபோவது உடலை அறுத்து சிகிச்சை செய்த சான்றுகள்.

BABY CESERIAN...

கொங்கு மண்டல சதகம் என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் மருத்துவச்சி ஒருவர்.

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்
இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்
துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே

- கொங்குமண்டல சதகம்

இப்பாடலில் கூறப்பட்டுள்ள ‘வகிர் துறைவழி’ என்பது வயிற்றை வகிர்ந்து ( கிழித்து) குழந்தையை வெளியில் எடுக்கும் மருத்துவமுறையை குறிக்கிறது. ‘துறை’ என்ற சொல் அக்காலத்தில் அறுவை மருத்துவத்துறை பரவலாக இருந்ததைக் காட்டுகிறது.

அறுவை மருத்துவத்துறை என்ற ஒரு துறை அக்காலத்தில் தோன்றி வளர்ந்து இருந்ததையும், ‘அங்கலை தோன்றி வளர் நேர் நறையூர்’ என்பது அரிய கலையான இம்மருத்துவ முறை, கொங்கு நாட்டின் நறையூரில் வளர்ந்து இருந்தது என்பதையும் குறிக்கிறது.

DEAD BODY RESEARCH...

செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே.

- செகராசசேகரம்

அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால் (1400களில் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னன்)
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி, உறுப்புகளை எடுத்து, அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெளிவாக கூறுகிறது.

இறுதியாக பதிவின் நீளம் கருதி சில இடங்களில் கண்ட செய்திகளை கூறுகிறேன்.

அம்பு சென்று துளைத்த உடலில் அம்பை எடுக்கும்போது அம்பு முனை உள்ளே சிக்கி குச்சி உடைந்துவிடும் அதன் மேல் நெய்தடவி வேறு ஒரு கத்தியையோ, கூர்மையான ஆயுதத்தையோ வைத்து எடுப்பர் என சீவக சிந்தமணி கூறுகிறது.

மேலும் பெரிய புண்கள் ஏற்பட்ட உடலை எலியின் நுண்மையான மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய போர்வையை கொண்டு மூடுவர். எலி மயிர்போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது; குளிரை நீக்கக் கூடியது; அதனுள் காற்றும் புகாது. மென்மை உடையது என்றும் குறிப்பிடப்படுகிறது.

இறந்து போன தசரதனது உடம்பை, கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது ராமாயணம்.

இதற்கு அப்புறம் தான், இதே மாதிரி இயேசுவின் உடம்பை தைல காப்பு கொண்டு வைத்தனர் என்பது நினைவு கூற வேண்டிய ஒன்று.

இங்கு பழந்தமிழர்களின் புலவர் மருத்துவ அறிவியல் மட்டுமே பகிரப்பட்டது இன்னும் சித்தர்கள் மருத்துவ முறை விளக்கினால் பதிவு பெரிதாகும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்...

விவசாயத்தை முன்னிறுத்தி, தற்சார்பை மீட்டெடுப்போம்...


தற்போதைய சூழலில், நாம் அழித்த தற்சார்பு வாழ்க்கை முறைகளை, மீண்டும் கட்டமைத்து முறையாக அதை செம்மைப்படுத்தி நம் வருங்கால தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது...

இயற்கையின் அற்புதக் கொடை.. மூங்கில் அரிசி...


நெல் போலவே இருக்கும்.பழங்குடி மக்களின் முக்கிய உணவு.

60 வயதான மரத்தில்தான் கிடைக்கும்.
உடலுக்கு ஊட்டம் கொடுக்கும்.

வாழையடி வாழையாக வாழ்க…
மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க என மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு.

அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை.

அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுதலும், வாழை மரம் கட்டுதலும் தவறாமல் இடம் பெறுகின்றன.

அப்படி நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்… தன் வாழ்நாளை முடிக்கும் போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள்.

காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இருக்கும், மூங்கில் அரிசியானது சிங்கவால் குரங்கு, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகளுக்கும் பிடித்தமான உணவு.

பழங்குடி மக்களிடம் இருந்து நாட்டுக்குள்ளும் பரவத் தொடங்கிய மூங்கில் அரிசி, முக்கிய இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மலை, மலை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களிடையே மூங்கில் அரிசி மிகப் பிரபலமாக இருக்கிறது. இயற்கை அங்காடிகள், பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களில் மூங்கில் அரிசியும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லைப் பகுதியில் தேன்கனிக் கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் உள்ள அய்யூர் வனப்பகுதியில் மூங்கில் மரங்களில் நெல் பூத்துள்ளன. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பாக பரவலாக நடப்பட்ட மூங்கில் மரங்கள்தான் பூத்துள்ளன. தற்போது, அப்பகுதி மக்கள் மூங்கில் நெல்லைச் சேகரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இத்தகவல் அறிந்து அய்யூர் வனப்பகுதிக்குப் பயணமானோம். அய்யூர் வனப்பகுதியின் செல்லும் வழியில் மலை அடிவாரங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மூங்கில் காடுகள்தான்.

மூங்கில் பூத்தால் மழை பெய்யாது..

மூங்கில் நெல் குறித்து அரசஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை என்ற பாட்டியிடம் கேட்டபோது, “60 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணமாகி இந்த ஊருக்கு வந்தேன். அப்போ, ஃபாரஸ்ட்டுகாரங்க மூங்கில் கன்றுகளை நட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த மரங்கதான் இப்போ பூத்திருக்கு. நெல் உக்காந்திருக்கிறதைப் பாக்குறப்போ சந்தோஷமாக இருக்கு. மூங்கில்ல இப்படி நெல் உக்காந்தா, அந்த வருஷம் மழை குறைவா பெய்யும், வெள்ளாமை செழிக்காதுனு சொல்வாங்க. ஆனா, இங்க அதையும் தாண்டி மழை பெய்ஞ்சிகிட்டுதான் இருக்கு. மூங்கில் அரிசி கிடைக்கிறப்போவெல்லாம் நாங்க விரும்பி சாப்பிடுவோம். முன்னாடி அந்த அரிசி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும்” என்றார்.

மாடு மேய்த்துக் கொண்டே நெல் பொறுக்குவோம்...

மூங்கில் வனத்துக்குள் நாம் சென்ற போது, அங்கு மூங்கில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தார், பழங்குடி கிராமமான  சித்தலிங்கம் கொட்டாயைச் சேர்ந்த சாமுண்டியம்மா. “எங்க மாமியார்  இருந்தப்போ ‘பிதிரு நெல்லு’ (மூங்கில் நெல்) பொறுக்கிட்டு வருவாங்க. அதை உரல்ல குத்தி அரிசியாக்கி சாப்பிட்டிருக்கோம். இப்போதான், நான் முதல்முறையா இப்பதான் பொறுக்குறேன். போன வருஷமும் இந்தப் பகுதியில நிறைய பேர் பொறுக்கிகிட்டு வந்தாங்க. ஆனா, இந்த வருஷம்தான் அதிகமாக கிடைச்சுகிட்டிருக்கு. நான், 3 மாசமா சேகரிச்சிக்கிட்டிருக்கேன். ஒரு நாளைக்கு 4 கிலோ அளவுக்குக் கிடைக்குது. வீட்டுக்கு வெச்சுக்கிட்டது போக மீதியை விற்பனை செய்வேன். ஒரு கிலோ 40 ரூபாய்னு வாங்கிக்கிறாங்க. ஆடு, மாடுகளை மேய்ச்சிக்கிட்டே பொறுக்கிறதால ஒரு வருமானம் கிடைச்சிடுது. நாங்க கூட்டமாதான் போய் பொறுக்குவோம். மூங்கில் காட்டுல இருக்கிற பொம்மஅள்ளி அம்மன்தான் எங்களுக்கு காவலு” என்றார், சாமுண்டியம்மா.

வீட்டுக்குப்போக மீதி விற்பனைக்கு…

சாமுண்டியம்மாவுடன் இணைந்து நெல் பொறுக்கும் பணியில் இருந்தனர், சிக்கமல்லா-மாதம்மா தம்பதி. அவர்களிடம் பேசியபோது, “போன வருஷத்துல இருந்துதான் இங்க மூங்கில் நெல் கிடைக்குது. மரங்களின் வயசைப் பொறுத்து நெல் கிடைக்கும். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்குக் கிடைக்கும். அடுத்து எப்போ கிடைக்கும்னெல்லாம் உறுதியா சொல்ல முடியாது. கிடைக்கிறப்போ பொறுக்கியெடுத்து வெச்சுக்குவோம். மரத்துல இருந்து உதிருற நெல்லைத்தான் பொறுக்க முடியும்...

அதிமுக எடப்பாடியும் விவசாய அழிப்பும்...


சுங்கச்சாவடி என்பவை ஒரு நவீன வழிப்பறிக் கொள்ளை...


சாலை போடுவது என்பது ஒரு அரசாங்கத்தின் அடிப்படைக்  கடமைகளில் ஒன்று.

சாலை போக்குவரத்தின் மூலமான வியாபார வளர்ச்சி, உற்பத்தி பெருக்கம்... ஆகியவை தேச வளர்ச்சியின் அடிதளமாகவும் உள்ளது. மேலும் சாலை வரியையும் தனியாக  நாம் செலுத்துகிறோம்..

தார்மீக ரீதியாகவும் சரி, சட்டப் பூர்வமாகவும் சரி, வாகன வசூல் என்பது ஒரு போதும் ஏற்புடையது அல்ல..

அறச் சிந்தனை அறவே அற்ற அரசும், கெடு மதி கொண்ட தனியார்களும் இணைந்து நடத்தும் பட்டவர்த்தனமான சூது.

இந்த லட்சணத்தில் சுங்கச் சாவடிகளில் நீதிபதிகளுக்கு தனி வழித்தடம் வேண்டுமாம்.  நீதிபதிகளுக்கும், முக்கிய வி வி ஐ பி களுக்கும் விஷேச சலுகைகள் செய்து தரப்பட வேண்டுமாம்.  அப்படி செய்து தராத பட்சத்தில் கடும் நடவடிக்கையாம்.

தட்டி கேட்க வேண்டியவர்களே இப்படி நடந்து கொள்வார்களேயானால்... என்ன செய்வது..?

திமுக தெலுங்கர் ஸ்டாலினும் ஏமாற்று வேலையும்...


1960களில் ஜப்பான் அரசு கப்பல் ஒன்று திமிங்கலங்களை ஆராய ஆர்க்டிக் கடலுக்கு சென்றது...


அப்போது அக்குழுவினர் ஒரு விசித்திர உயிரினத்தைக் கண்டனர்.

அது மனிதனைப் போன்ற தலையையும், ஐந்து விரல்களைக் கொண்ட கைகளையும், மீன் போன்ற வால் பகுதியையும், வெள்ளைத் தோலையும் கொண்டிருந்ததாக கூறினர் அக்கப்பல் குழுவினர்.

அதனை நிஞ்சன் என அழைக்கத் துவங்கினர் ஜப்பானியர்.

நிஞ்சன் என்றால் ஜப்பானிய மொழியில் மனிதன் எனப் பொருள்.

மேலும் பல கடல் பயணிகளும் அடிக்கடி அந்த உயிரினத்தை பார்த்ததாக கூறியுள்ளனர்.

அது 20 முதல் 30 அடி நீளம் இருந்ததாகவும், இரவில் மட்டுமே அவை தென்படுவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த உயிரினம் கூகுள் எர்த் புகைப்படத்திலும் சிக்கியுள்ளது.

ஆனால் இன்னும் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

ஜப்பான் அரசுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியும் என்றும், இதனைப் பார்த்தவர்களை அதனைப் பற்றி வெளியில் சொல்லக் கூடாது என ஜப்பான் அரசு அடக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இக்கடல்பகுதியில் அடிக்கடி பறக்கும் தட்டுகள் தென்படுவதால், இது வேற்றுகிரக உயிரினமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இதை மையப்படுத்தி சில தொலைக்காட்சி தொடர்களும், படங்களும் ஜப்பானில் வெளிவந்துள்ளன...

வணிகப் போர்...


பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்.....


1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்...

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழி தான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

2. அடியாத மாடு படியாது...

விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி...

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு...

விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு...

விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்...

விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்...

விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை...

விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்...

விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

10. சேலை கட்டிய மாதரை நம்பாதே...

விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே...

விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை...

விவசாய நிலங்களை அழிக்கும் கெயில் நிறுவனம்...


பாஜக ஐடி பிரிவு பயிற்சி உண்மைகள்...


விலைவாசி உயர்வோ , நாட்டின் பிரச்சினைகளோ இவனுங்களுக்கு தெரியாது, மத சம்பந்தபட்ட பதிவுகள் மட்டுமே போடுவானுங்க...

முதல்ல நான் கூட கொள்கைகளை எப்படி மக்களுக்கு சொல்வது , பாஜக கொண்டு வந்த திட்டங்களை எப்படி விவரிப்பது என்று இருக்கும்ன்னு நினைச்சேன்..

ஆனால் இது தான் பயிற்சி...

1. ஒரே ஆள் பத்து ஐடியை ஒரே நேரத்தல் வெவ்வேறு browser ல் பிரைவேட் வின்டோவில் பயன்படுத்துவது எப்படி ?

2. வேறு கட்சி ஆதரவாளர் போல் அவர்களின் வாட்ஸப் குரூப்பிர்க்கு உள்ளே சென்று பகிரங்க ஆதரவு தராமல் நடுநிலையாளர்கள் போல் மக்களை மடை மாற்றுவது எப்படி..

3. இஸ்லாமியர் பெயரில்  , கிருத்துவர் பெயரில்  ஐடி உருவாக்கி ஹிந்து கடவுள்களை தரக்குறைவாக பேசுவது எப்படி..

4. ரஜினி படம் தோனி படம் பிக் பாஸ் படம் என்று சாமானியன் போல் புரோபைல் பிக்சரை வைக்க வேண்டும்

5.  முகநூல் பதிவுகளில்  முதல் கமென்டாக பாஜகவின்  எதிர் கருத்து வருவதர்க்கு அனைத்து பேக் ஐடிகள் பாஜக ஆதரவு  பின்னூட்டத்தை லைக் செய்ய வேண்டும் அல்லது அதிக ரிப்ளை வர வைத்து முதல் கமென்டாக வரவைக்க வேண்டும்..

6. தமிழ் தேசிய முகநூல் பக்கத்திற்க்கு ஒன்றுக்கே இரண்டு பேர் நியமிக்கப்படுவர், கேட்ட கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் , உதாரணத்திர்க்கு சீமான் ஏன் அதிமுக வை ஆதரித்தார் என்னும் கேள்வியை எல்லா  பதிவிலும் கேட்க வேண்டும்  பதில் கொடுக்கப்பட்டாலும் அதை உள்வாங்குவது அல்ல அவர்களது  நோக்கம் ..அந்த கேள்வியை பொது மக்கள் பலர் பார்த்து தவறாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அந்த கேள்வியின் நோக்கம் ...

7. தலைவர்களை ஆபாசமாக சித்தரித்த  படங்கள் பதிவுகளை பின்னூட்டம் இட வேண்டும் எதிர் தரப்பினரும் ஆபாசமாக பேசினால் அதை மட்டும் கத்தரித்து பகிரிகளில் பகிர வேண்டும்

8. பெண்கள் பெயரில் ஐடி உருவாக்கி அதில் ஆண்களை கவரும் வாசகங்களும் இடை இடையில் அரசியல் பதிவுகளையும்  போடுதல் வேண்டும்

9. வாரம் ஒரு 10 புதிய பேக் ஐடிகள் உருவாக்கப்பட்டு பகிரப்படும் அதன் user name password பகிரியில்  அனுப்பி வைக்கப்படும்

10. கட்சிக்கு சாதகமான தவறான புள்ளி விவரங்களை , தவறான செய்திகளை அதிகமாக பகிர  வேண்டும்

இது ட்ரைலர் தான் எப்படி எல்லாம் இணையத்தில்  பிராடு பன்னுவது என்று இன்னும் பல வகைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது..

வெறும் பயிற்சி மட்டும் அல்ல  இதற்கு  சம்பளமும் கொடுக்கப்படுகிறது...மாதம் 3000 தொடங்கி 10000 வரை..

ஆதாரம்...

https://m.huffingtonpost.in/2018/06/13/after-bypoll-losses-bjp-is-training-2-lakh-cyber-sena-for-its-it-cell-in-uttar-pradesh_a_23457592/

https://m.economictimes.com/news/politics-and-nation/bjp-comes-out-with-elaborate-media-mantra-for-members/amp_articleshow/64595938.cms

https://www.thequint.com/news/webqoof/fake-social-media-profiles-muslim-identities-bolster-bjp-case-study-gini-khan-giniromet

இவர்களை பொது மக்களிடத்தில் அம்பலபடுத்த இதனை அதிகமாக பகிருங்கள்...

தலைவன்...


கால் செய்தால் வீடு தேடி போலீஸ் - மதுரை காவல் ஆணையரின் புதிய திட்டம்...


மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில்,  வார்டுக்கு ஒருவர் என்ற கணக்கில் எஸ்.ஐ-களை நியமித்து புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார், கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

மதுரை சிட்டிக்குள் 17 காவல் நிலையங்கள் மட்டுமே  இருப்பதால், பொதுமக்களால் காவல்துறையை உடனே அணுக முடியவில்லை. இதனால், மாநகருக்குள் குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன.  வரும் காலத்தில் குற்றங்களைக் குறைக்கவும், பெண்கள், குழந்தைகள்  பாதுகாப்பாக இருக்கவும், பொது மக்கள்  காவல் துறையை எளிதாக தொடர்புகொள்ள வசதியாக, இந்த புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார், காவல் ஆணையர் தேவாசீர்வாதம். வார்டுக்கு ஒரு எஸ்.ஐ என்ற கணக்கில், மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் எஸ்.ஐ-களை வார்டு ஆபீசராக  நியமித்து, அவர்களின் மொபைல் எண்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் ஏதாவது பிரச்னை எனறால், போலீஸ் ஸ்டேஷனில் காத்துக்கிடக்காமலிருக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வார்டு ஆபீசர்களான எஸ்.ஐ-க்கு போன் செய்தால் போதும். அவர்கள் ஸ்பாட்டுக்கு வருவார்கள். ஒவ்வொரு எஸ்.ஐ-யுடனும் இரண்டு காவலர்கள் இருப்பார்கள். 'இந்த சிறப்பான திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்று கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார்...

பாஜக மோடியின் புதிய இந்தியா...


சுதந்திரம் தருவதற்கு ஆங்கிலேய அரசு ஒப்புதலளித்த பிறகு, காந்திக்கும் வினோபாவுக்கும் இடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது...


அதில், சுதந்திர இந்தியாவுக்கான தனிக்கல்வியை வடிவமைக்கும்வரை என்ன செய்வது? எந்தமுறையை பின்தொடர்வது? என பல்வேறு விதமான ஐயப்பாடுகள் எழுந்தன.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட வினோபா, "சுயராஜ்யத்துக்கான புதிய கல்வியை வடிவமைக்கும் காலம்வரைக்கும் இந்தியப் பிள்ளைகள் அனைவருக்கும் விடுமுறை அளித்துவிடலாம். பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்துக்குமே இதை முன்னெடுக்கலாம்" என தன் தரப்பை முன்வைக்கிறார்.

அங்கிருந்த எல்லாரும் அதிர்ந்து, "அதற்கு வருடக்கணக்கு ஆகுமே?" என அச்சமுறுகையில், "ஆமாம், ஆகட்டுமே. ஏற்கனவே இருக்கும் தவறை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் விளைவை விட, அவசியமானதை உருவாக்க நாம் எடுத்துக்கொள்ளும் இந்த நிதானத்தின் விளைவு குறைவாகவே இருக்கும்" என தீர்க்கமாகச் சொல்கிறார் வினோபா.

ஏதோவொருவகையில், இந்த நுண்ணறிதலைத்தான் கல்விக்கான கண்திறப்பாக நாங்கள் அறிகிறோம். இந்திய நிலப்பரப்பெங்கும் பூமிதான இயக்கத்துக்காக அலைந்துதிரிந்த அதேசமயத்தில் ஆன்மமலர்வு கல்விக்காக தன்னுடைய சுயசிந்தனைகளை ஆற்றுப்படுத்திய வினோபா பாவேவின் கல்விசார் கோட்பாடுகளைத் தொகுத்து "கல்வியில் மலர்தல்" என்கிற நூல் உருவாகிறது.

குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக அக்டோபர் 2, காந்தி அவதரித்த தினத்தன்று வெளியீடடையும் இந்த முதற்பதிப்பு நூல், கல்விகுறித்தான நோக்கத்தோடு இயங்கும் எத்தனையோ மனதுகளின் ஏக்கக்குறைகளை தீர்த்துத் தெளிவுபடுத்தும் புத்தகமாக நிச்சயமிருக்கும். கீதா மற்றும் மாசிலன் இவர்களிணைந்து இந்நூலை எழுத்தாக்கமாக தொகுக்கிறார்கள்.

"கோடைகாலத்தில் விடுமுறை அளித்தால்... ஒன்று, உச்சி தகிக்கும் வெயிலில் பிள்ளைகள் அலைவார்கள். அப்படியில்லையென்றால் வீட்டுக்குள் முடங்கிக்கொள்வார்கள். எப்படியாயானும் இளையோர்களின் செயல்சக்தி வீணாகும். அதற்குப்பதிலாக, மழைக்காலத்தில் விடுமுறை அளிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் நிலத்தில் வேலைசெய்யும் விவசாயியிக்கு உதவியாக மாணவப்பிள்ளைகள் சேற்றில் இறங்குவார்கள். அங்குதான் அவர்கள் வாழ்வைக் கற்பார்கள்

இந்திய நிலப்பரப்பினையும் அதன் மனிதயுழைப்பையும் ஆன்மத் தேடலையும் உள்வாங்கிக் கொண்ட ஒரு உள்ளத்திலிருந்து உதித்த இந்தக்ருத்துக்கள் எங்களை ஒட்டு மொத்தமாக நிலைகுலையச் செய்கிறது.

எதுவெல்லாம் கல்வி? என்கிற அறதரிசனத்துக்கான பாதையில் இப்புத்தகத்தின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எறும்பென ஊர்கிறது.

-குக்கூ காட்டுப்பள்ளி

பாஜக மோடியும் சர்வதிகாரமும்...


நவ பாஷாணம் என்பது என்ன?


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்று விடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்...

சிலை கடத்தல் சீனிவாசன்...


முன்பு போல இப்போது வரும் ஊதுபத்தி் இயற்க்கையான முறையில் தயாரிப்பது இல்லை...


பெரும்பாலும் அனைத்து மதங்களின் வழிபாட்டிலும் பயன்படுத்தப் படும் பொருள் ஊதுபத்தி. இதன் மணம், புகையால் எவ்வளவு தீங்கு நேரும் தெரியுமா?

இந்தியர்களின் அனைத்து கோயில்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஊதுபத்தி. வீட்டிலும் பூஜையறையில் இந்த பொருள் இல்லாமல் இருக்காது நிச்சயம் இருக்கும். இது இல்லாமல் பூஜையறை நிறைவு பெறாது.

நறுமணம் மட்டும் தராமல் நல்ல சிந்தனைகளையும், தெளிவான புத்துணர்ச்சியையும் அளிக்கிறது என்று சமிபத்திய விளம்பரங்கள் மூலம் நம்பவைக்ப்படுகிறது.

ஆம், ஊதுபத்தியின் புகையால் சிலர் சுவாசிக்க சிரமப்படுவர், மூச்சுவிட முடியாது, இருமல் வரும். இந்த புகை சில சமயம் சிகரட் புகைக்கு இணையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் நுரையீரலை பாதிப்படைய வைக்கும் என்பது போல ஊதுபத்தியின் புகையும் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நுரையீரல் புற்றுநோய் வரக்கூட வாய்ப்புள்ளது. ஊதுபத்தியின் புகை நேரடியாக நுரையீரலுக்கு சென்றடைகிறது. அதித ஊதுபத்தி புகையை சுவாசித்தால் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில நண்பர்கள் கேட்டார்கள் நான் மது அருந்தவதில்லை புகைபிடிப்பதில்லை வேறு எந்த கெட்டபழக்கங்களும் இல்லையே எனக்கு எப்படி புற்றுநோய் வந்தது அதற்க்கு இதுவும் ஒரு காரணமாக கூட இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் அதிகம் ஊதுபத்தி உபயோகிக்காமல் இருப்பது நல்லது. முடிந்தவரை ஊதுபத்தி உபயோகிக்காமல் இருக்கலாம். இந்த புகையை குழந்தை வயிற்றில் இருக்கும்போது சுவாசிப்பதால் பிறக்கும் குழந்தைக்கு லுக்கேமியா (ஒரு வகையான புற்றுநோய்) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

வீட்டிற்குள் ஊதுபத்தி உபயோகிப்பதால் அந்த மணம், புகை குறைந்தது 2 மணி நேரத்திற்கு மேலாவது வீட்டிற்குள் இருக்கும். இதனால் வீட்டிற்குள் அதிகம் கார்பன் மோனாக்சைடை சுவாசிக்க செய்கிறது. இதனால் நரம்பு மண்டலத்தை மட்டும் பாதிக்காமல் ஞாபக சக்தியை குறைக்க செய்யும், கவனசிதறலையும் உண்டாக்கும் என்கிறார்கள்.

இனிமேலாவது ஊதுபத்தி பயன்பாட்டை குறைத்து உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்காமல் இருங்கள்...

அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பின்னால் ஓடும் எச்ச ஊடகங்களே...


கொஞ்சம் இவர்களின் பின்னாலும் ஓடுங்கள்... புண்ணியமாவது கிடைக்கும்.....

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்...


எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது.

எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 900 மைக்ரோகிராம் செம்பு அவசியமானது.

இத்தகைய செம்பு தினமும் 2-3 டம்ளர் நீரை செம்பு பாத்திரத்தில் குடிப்பதன் மூலம் எளிதில் கிடைக்கும்.

செம்பு உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் செயலில் முக்கிய பங்கை வகிக்கிறது.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செம்பு பாத்திரத்தில் நீரைக் குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

மேலும் செம்பு கொழுப்புக்களை உடைப்பதில் இடையூறை உண்டாக்கும் நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும்.

கர்ப்ப காலத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால், கருவில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருந்து, பிறப்பு குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்கலாம்.

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.

செம்புவில் ஆற்றல்மிக்க உயிர்க் கொல்லி பண்புகள் உள்ளதால், இது உடலினுள் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுக்களை அழித்து, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

செம்பு இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுவதால், உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதோடு இரும்புச்சத்து குறைபாடும் ஏற்படும்.

மேலும் செம்பு புதிய இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவி, இரும்புச்சத்தின் அளவை சீராக பராமரிக்கும்.

உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும்.

செம்பு இயற்கையாகவே ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இது தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் புரோஸ்டாகிளான்டின்ஸ் உற்பத்தியை அதிகரித்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்...

சிலை கடத்தல் முக்கிய புள்ளிகள்...


திராவிடம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...


தமிழ் மொழியை பழித்தது- ஈரோடு திராவிடம்.

தமிழின கொள்கையை திரித்தது- காஞ்சி திராவிடம்.

தமிழினத்தையே அழித்தது- திருக்குவளை திராவிடம்.

நான் ஒரு பாப்பார்த்தி என்று சட்டமன்றத்திலே முழங்கி தமிழின ஆரிய பகையை வளர்த்தது- போயஸ் கார்டன் திராவிடம்.

சேற்றில் முளைத்த செந்தாமரை என்றாலும் வழக்கொழித்து போன திராவிடத்திற்கு வக்காளத்து வாங்கும்- கலிங்கப்பட்டி திராவிடம்.

இதற்கிடையே நடுவில் வந்து பம்பரம் விடும்- கோயம்பேடு நாக்கு துருத்தி திராவிடம்.

எத்தனை திராவிட கூத்தடா எங்கள் தமிழ் திருநாட்டில்..

தமிழ்நாடு தமிழர்களின் தாய்நாடா? இல்லை வந்தேரி திராவிட மந்தைகளின் மேய்ச்சல் காடா?

திராவிடனே வெளியேறு
தமிழனை ஆளவிடு...

திருட்டு திராவிடத்தின் பரிணாமங்கள்...


தன்னை உணர்வது எப்படி?


வினை கழித்து  தன்னை உணர்வது எப்படி?

வெவ்வினைக்  கீடான காயம் இது மாயம்...

நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்.

இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே.

வினைப்பயனே இப்படியே போனால் அழிந்து விடும் உடல். அழித்து விடுவர் உடலை.

சுட்டோ.. இட்டோ.. அழியும் உடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்.

ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்.

"வினை போகமே ஒரு தேகங்கண்டாய்" என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே.

தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்.

அதற்க்கு தான் ஞான சாதனை- தவம் - சும்மா இருக்க வேண்டும்.

கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும். வினை தீரத்தீர  ஒளி மிஞ்சும். மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும். ஊன  உடலே ஒளி உடல் ஆகும். பிறவி கிடையாது. வினை இல்லையெனில் பிறவி இல்லை.

வினைகள் மூன்று. பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம். குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம்  முதலில் கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.

குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது. தோன்றினால் குரு தடுத்து காத்தருள்வார். "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும்" தொடர்ந்து தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்து தீரும்.

நைந்து பியந்து போனாலும் நாதன் கை விடமாட்டான். நான் மறைதீர்ப்ப கர்மம் தொலையவே காரியம் செய்யணும். சிவகாரியம் - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம். அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும். நாமும் வாழலாம். எல்லோரையும் வாழ வைக்கலாம். குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்.

மரணம் எப்படி இருக்கும்?

மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று நிலை உள்ளது.

மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது. 

தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல். மரணம் நம் கையில். தடுக்கலாம்?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெற வேண்டும். உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ? அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை. தவம்.

பிறந்தது இறப்பதற்கல்ல. இறப்பை வெல்வதற்கு. அதுவே ஞானம். இதை உரைத்ததுவே சனாதானதர்மம்.

எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். "தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு  சாப்பாடு என அலைகிறான். சாப்பிடதான் வாழ்கிறான் அதற்கு தான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான். பிறப்பதே சாப்பாட்டுக்காகத் தான்.

சாப்பாடு அல்ல. சாவுக்கான பாடு சா- பாடு.. சாவதற்காக படாத பாடுபடுகிறான்.  எப்படியோ சாகிறான்...

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்.. சாகாதவனே சன்மார்க்கி...

விவசாயி சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்குங்கள்...


ஊடக உளவியல் அரசியல்...


என்றைக்காவது இந்த மூன்றையும் தாண்டி யோசித்து இருக்கிறீர்களா..?

ஒரு ஊடகம் தன் கட்சி சார்ந்து நடக்கும் எந்த கெட்டதையும் ஒளிப்பரப்பாது..

ஊடகம் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் கள்ள வணிகனை பற்றி ஒருபோதும் மக்களிடம் கூறாது..

ஆனால் அனைத்து ஊடகங்களும் கூறுவது நடுநிலை ஊடகங்களில் முதல் ஊடகம் எங்கள் ஊடகம்..

நடுநிலை என்பதே அவர்கள் தவறாக புரிந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்..

அரசியல்வியாதி - ஊடகங்கள் - வணிகர்கள்..

இதுதான் அவர்களின் ️ நடுநிலை...

மாட்டு சாணியும் பாக்கெட் ஆக்கி கொச்சி லூலூ மாலில் விற்பனை.. விலை 70 ரூவா...


இறப்பது என்பது என்ன ?


நாம் இறக்கும் பொழுது உடல் இறக்கிறது..

அப்பொழுது மனமும் இறக்கிறதா ?
ஆத்மாவும் இறக்கிறதா ?

இறப்பு என்பதன் அர்த்தம் உங்கள் உயிர்த் தன்மைக்கு ஓய்வு கொடுப்பது தான்..

உங்கள் உயிர்த்தன்மைக்கு இறப்பு என்பதே கிடையாது.. அழிவே கிடையாது..

இந்த பிறவியில் நீங்கள் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்து விட்டீர்கள்..

ஆகவே உங்கள் உடலுக்கு ஓய்வு
தேவைப்படுகிறது..

இறப்பு உங்கள் உடலுக்கு ஓய்வு
கொடுக்கிறது..

இந்த உலகத்தில் உடல் தோற்றுவிக்கப்படுகிறது..

பிறகு நீங்கள் உங்கள் மனதை
தோற்றுவித்துக் கொள்கின்றீர்கள்..

ஆனால் உங்கள் உயிர்த்தன்மை என்பது
தோற்றுவிக்கப்படாதது..

அது எங்கும் எப்போதும் எதிலும் நிறைந்தது.. அதற்கு இறப்பும் இல்லை . பிறப்பும் இல்லை..

ஆகவே இறப்பு என்பது உடலுக்கும்
மனதுக்கும் தான்..

ஆனால் ஆன்மாவுக்கு அழிவு இல்லை....

ஆன்மா என்றால் என்ன ?

மனதோடு அதாவது ஆசைகளோடு கலந்த. உயிர்த்தன்மை தான் ஆன்மா என்பது..

ஆன்மா மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறந்து அதன் ஆசைகளை
நிறைவேற்றிக் கொள்கிறது..

அப்பொழுதுதான் கலப்பட உயிர்த்தன்மை சுத்த ஆன்மாவாகி பிறவியை அறுக்கும்..

இந்த சுத்த ஆன்மா மீண்டும் பிறக்க
வேண்டிய தேவை இல்லை..

அது பிரபஞ்ச உயிரத்தன்மையோடு
கலந்து விடுகிறது...

குகை ஒவியங்களின் ஆச்சரியம்...


இன்றைய விண்வெளி வீரரின் உருவ அமைப்பில் இருக்கும் இந்தச் சிற்பங்கள், ஒரு மனிதன் தலைக்கவசத்துடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சிற்பம் இன்றைய நவீன விண்வெளி வீரரை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது போல் உள்ளது.

மேலும் ஒரு சிலையில் விண்வெளி ராக்கெட் வடிவங்கள் பல உள்ளது. இதற்கான காரணம் அன்றைய மனிதர்கள் விண்பயணம் செய்ததை தான் சிற்ப்பமாக செதுக்கியுள்ளனர் என்பதை தான் வெளிபடுத்துகிறது.

இந்த குகை ஓவியங்கள், சிற்பங்கள், விண்வெளி ராக்கெட் போன்ற ஊர்திகள் போன்றவற்றை எப்படி ஒரே மாதிரியாக வரையவும், செதுக்கவும் முடியும்? அவையெல்லாம் கற்பனை ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் என்று எடுத்துக் கொண்டாலும்கூட, எப்படி ஒரே மாதிரியான வடிவங்களைக் கற்பனையாக வரையவோ அல்லது செதுக்கவோ முடியும்?

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் எதை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்? யாரைப் பார்த்து மனிதர்கள் இவற்றை உருவாக்கி இருப்பார்கள்.? என்பதே ஆராய்ச்சியாளர்களின் மிகப்பெரிய ஆச்சர்யம்...

மனிதன் கண்டு பிடிப்பும் ஆபத்தும்...


மனிதன் தான் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தை மேம்படுத்துவதாக அனைவரும் எண்ணினாலும், அதீத வளர்ச்சி நம்மை ஒரு நாள் அழித்து விடும்..

என்ன தான் நாம் கண்டுபிடித்த தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்றாலும்,
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் அதிகப்படியான வளர்ச்சி நமக்கு பேராபத்தாகவே அமையும்.

சூப்பர் இன்டெலிஜன்ட் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் நமது பணிகளை எளிமையாக்கினாலும், அவை சீராக ஒருங்கிணைக்கப்படாத போது நமக்கு பிரச்சனை அதிகம் ஆகும்.
அவ்வாறு செயற்கை நுண்ணறிவு தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது அவை நம்மை விட அதிக திறன் கொண்டவையாக இருக்கும் என்பதால் நமக்கு ஆபத்து நிச்சயமே.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் நமக்கு ஆபத்து ஏற்பட்டால், நிச்சயம் மனித சக்திக்கு மீறிய அல்லது அப்பாற்பட்ட சக்தி (வேற்றுகிரகவாசிகள்) ஒன்று  நமக்கு உதவலாம்...

ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவை நம்மைவிட அனைத்து வேலைகளையும் சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்று தான் புரியவில்லை.?