மனிதன் தான் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தை மேம்படுத்துவதாக அனைவரும் எண்ணினாலும், அதீத வளர்ச்சி நம்மை ஒரு நாள் அழித்து விடும்..
என்ன தான் நாம் கண்டுபிடித்த தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்றாலும்,
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் அதிகப்படியான வளர்ச்சி நமக்கு பேராபத்தாகவே அமையும்.
சூப்பர் இன்டெலிஜன்ட் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் நமது பணிகளை எளிமையாக்கினாலும், அவை சீராக ஒருங்கிணைக்கப்படாத போது நமக்கு பிரச்சனை அதிகம் ஆகும்.
அவ்வாறு செயற்கை நுண்ணறிவு தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது அவை நம்மை விட அதிக திறன் கொண்டவையாக இருக்கும் என்பதால் நமக்கு ஆபத்து நிச்சயமே.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் நமக்கு ஆபத்து ஏற்பட்டால், நிச்சயம் மனித சக்திக்கு மீறிய அல்லது அப்பாற்பட்ட சக்தி (வேற்றுகிரகவாசிகள்) ஒன்று நமக்கு உதவலாம்...
ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவை நம்மைவிட அனைத்து வேலைகளையும் சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்று தான் புரியவில்லை.?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.