26/07/2018
மாட்டுக் கறியும் அரசியலும்...
பண்டையக்காலத்திலும் வேதகாலத்தில் மாட்டுக்கறி உட்பட மாமிசம் உண்பது இயல்பாக இருந்தது...
இதை பௌத்த மதத்தின் வரலாறு கூறுகிறது.
பௌத்த மதத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும் .
பசுவை வைத்து தமது இழந்த உரிமையை மீட்கவும் தான் பார்பனியம் பசுவை புனிதமாக அறிவித்தது.
அதற்கு முன்பு வரை மாட்டுக்கறி இந்தியாவில் அன்றாட உணவு.
டாக்டர் அம்பேத்கர்...
சீக்ரெட் கோட் ஆப் நெவஜோ...
உலகில் மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று தாய்மொழி அல்லாத ஒரு மொழியை கற்றுகொள்வது...
அதுவும் அந்த மொழி பாரம்பரியம் மிக்க பழமையானதாக இருந்தால் கடினம் தான்.
எந்த அளவுக்கு பழமையான மொழியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதை கற்றுகொள்வது சுலபமான காரியம் அல்ல..
தமிழை இன்று சீனர்கள் முதற்கொண்டு கற்க காரணம்..
தமிழ் பழமையானதாக இருந்தாலும் பழந்தமிழ் இன்று இல்லை என்று தான் கூற வேண்டும்...
திருக்குறள் தமிழ் தான் பின்னர் எதற்கு விளக்க உரை..
புரநானூரு போன்ற சங்க இலக்கியங்களை எடுத்து தமிழகத்தில் உள்ள 10 வகுப்பு மாணவனிடம் படித்து விளக்கம் கேட்டால் தெரியாது என்று தான் கூறுவான்..
அதே போன்று பழமையான மொழிகளில் ஒன்று நவஜா மொழி.
உங்களுக்கு இந்த மொழியை பற்றி கூறுவதற்கு முன்பு.
இதை பேசியவர்கள் அதபேஸ்கள் என்கிறார்கள்.
அரிஜோனா +அதபேஸ்+ அமெரிக்கா...
பழங்குடியினர் இரண்டாம் உலகப் போரில் எதிரிகளை நிலைகுலைய வைத்தது இந்த நவஜோ மொழித்தான்..
பழங்குடியினர் பேசிய இந்த மொழியை வைத்து அமெரிக்கா இந்த இரகசிய code யை தயாரித்தது.
இந்த மொழியில் தான் தகவல்கள் பரிமாற பட்டது...
ஜப்பானியர்களின் மொழியை புரியாத தவித்த உலகம் இந்த நவஜோ மொழியையும் அதனுடைய code யையும் புரியாமல் தவித்தது ...
நவஜோ இன்றும் அமெரிக்காவில் பழங்குடியினர் பகுதிகளில் பேசப்படும் ஒரு மொழி...
இந்த மொழி பேசப்படுவதை கேட்டீர்கள் என்றால் வித்தியாசத்தை உணர்வீர்கள்...
உதாரணமாக :
zasbas :
THALAITH ih
NAKI h
THAA
DII
ASHTHALA i
HASTHA
TSOSTS I'd
tseebii
nahast ei
neeznah i
மேலே உள்ள எழுத்துக்கள் ஜீரோவில் இருந்து பத்து வரை...
பாஸ்போர்ட் சேவா கேந்ரா.. இது என்ன தெரியுமா ?
பாஸ்போர்ட் சேவை மையத்தில்
சேவை மையம் என்ற இடத்தில் சேவா கேந்ராவாம்..
தமிழகத்தில் தஞ்சையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம் அதாவது பாஸ்போர்ட் அலுவலகம்.
கடவுச்சீட்டு அலுவலகம் என்றால் நமக்கு தெரியாது.
சேவா கேந்ரா என்பதை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. .
அங்கேயுள்ள சிலரில் பலர் வடநாட்டு மனிதர்கள் ஹிந்தியும் ஆங்கிலத்தையும் பேசிவருகிறார்கள்.
நமது வெகுஜன மக்கள் இவர்களிடம் பேச தெரியாமல் கஷ்டப்படுவது வேதனையிலும் வேதனை.
இதையெல்லாம் சிரித்தபடி வேடிக்கை பார்க்கும் எடுபிடிகள் தமிழின் முதல் எதிரிகள்,
ஆண்மையுள்ள அரசு இருந்தால் தானே..
The holy fire என்றால் என்ன?
ஹோலி ஃபைர் என்பதை அறிய 19 ம் நூற்றாண்டிற்கு நாம் செல்லவேண்டும்.
அக்காலத்தில் உணவு வகைகளில் ஒன்று ரை என்ற தாவர உணவு.
இதை புல்லரிசி என்று நாம் அழைக்கின்றோம்.
கோதுமை, வாற்கோதுமை,போன்றவை வரிசையில் ரை,என்று சொல்லக்கூடிய உணவும் உண்டு.
நம்ம இந்தியா போன்ற பகுதியில் இதை உபயோகிப்பது குறைவுதான் என்றாலும் மேலைநாடுகளில் இன்றும் கூட ஒரு முக்கியமான உணவு.
இதன் ஆரம்ப கால வரலாறு சுமார் 2100 ஆண்டுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனாலும் தென்மேற்கு ஆசியா பகுதியில் அதிகம் இந்த ரை பயிர்கள் வளர்ந்து இருந்ததற்கான சுவடுகள் இருந்துள்ளது.
இதன் வயது சுமார் 4 ஆயிரம் வருடங்கள்.
துரதிர்ஷ்டவசமாக அக்காலத்தில் உள்ள மக்கள் இந்த பயிரை பற்றி அறியாமல் இருந்துள்ளனர்.
பல பழங்குடியினர் அவர்களது கலாச்சாரத்தில் இந்த உணவை ஒதுக்கியே வைத்துள்ளனர்.
இதற்கு சரியான காரணம் தெரியவில்லை.. ஆனாலும் யூகிக்க முடியும்?
ஆமாம். காரணம் என்ன?
இப்போதுத்தான் 19 ம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டும்.
19 ம் நூற்றாண்டில் இந்த ரை முக்கிய உணவாக இருந்த காலகட்டத்தில்
ஜெர்மன் பிரான்ஸ் போன்ற
நாடுகளில் திடீரென ஒரு நோய் தாக்க ஆரம்பிக்கிறது.
அதாவது திடீரென கைகளில் கால்களில் தீ பட்டு ஏற்படும் தழும்புகள் போன்று தழும்புகள் ஏற்பட்டு எரிச்சல் ஏற்படும்.
இதன் காரணமாக கை கால்கள் கருப்பு நிறமாக மாறிவிடும்.
இதற்கு பெயர் ஹோலி ஃபயர் என்று பெயரிட்டனர்.
கடவுள் கொடுத்த சாபம் இது என்று பரவியது.
இதையடுத்து அந்த காலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயின் காரணமாக மடிந்துள்ளனர்.
இதையடுத்து 1970 ல் டாக்டர் துள்ளியர் என்பவர் இது சாபமும் அல்ல புனிதமும் அல்ல இது.
ரை, பயிரில் உண்டாகும் பூஞ்சை படிந்த ரை தாணியத்தை உண்பதால் உண்டாகும் பாதிப்பு தான் இது.
என கண்டறிந்தார் இந்த நோய்க்கு எர்கட் என்று பெயரிட்டார்.
இன்று இந்த நோய் அரிதாக இருந்தாலும் இதன் பாதிப்பு அக்காலத்தில் படுபயங்கர விளைவாகவே இருந்துள்ளது.
அதீத ஊட்டச்சத்து நிறைந்த இந்த உணவு ஒரு காலத்தில் மக்களை ஆட்டிவைத்தது.
இதனால் தான் என்னவோ பல பழங்குடியினர் இதை தொடாமல் தவிர்த்து வந்துள்ளனர்...
வ.உ.சி யின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்...
வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது.
ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.
கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர்.
நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி.
கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் லஞ்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க முடிவு செய்தது.
இந்த நேரத்தில் வங்க மாநிலத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிபின் சந்திரபாலரின் விடுதலையை கொண்டாட இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் வெள்ளை அரசு தடை விதித்து இருந்தது.
ஆனாலும் விடுதலை நாளான 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணிய சிவாவுடன், வ.உ.சி பேசினார்.
இதற்காக காத்திருந்த வெள்ளை அரசு, உடனடியாக தடையை மீறிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க பணித்தது. இதன்படி 12.03.1908 அன்று நேரில் சந்தித்தார்.
அப்போது,
1. அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது,
2. மக்களை வந்தேமாதரம் கோசமிட தூண்டியது,
3. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது குற்றம் என கண்டித்து #நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து வெளியில் செல்ல ஆணையிட்டது.
இதனை கடுமையாக கண்டித்த வ உ சிக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும், பத்மநாப அய்யருக்கும் 109, 124ஏ பிரிவுகளில் வழக்குப் போட்டு 26.03.1908ல் #பாளையங்கோட்டை #சிறையில் உடனடியாக அடைத்தது.
ஏனெனில் சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் கூறிய கணிப்புதான்.
பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர்.
திடீரென்று விசாரணை முடிவில் கப்பல் தலைமை அதிகாரி அலெக்ஸ் ஃபிளிட் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்குள் ஓர் #இரகசியம்_ஒளிந்து இருந்தது.
வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றதோடு நிற்காமல் சிலர் #ராஜினாமா செய்து ஓடினர்.
அதோடு மட்டுமில்லாமல் இரண்டு கப்பலையும் #விற்று_விட்டனர். இதில் கேவலம் என்னவென்றால் எஸ்.எஸ்.காலியா கப்பலை வெள்ளையருக்கே விற்று விட்டது தான்.
இதனை அறிந்த வ உ சி...
மானம் பெரிதென கருதாமல், கூட இருந்த பாவிகளே அற்ப காசுக்காக வெள்ளையனிடமே விற்று விட்டீர்களே, அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் என குமுறினார்.
பெற்ற மகன் செத்துக் கிடந்த போதும், கட்டிய மனைவி கவலைக்கிடமாக இருந்த போதும் நாட்டின் விடுதலைக்காக வாங்கிய கப்பலை #வெள்ளையனிடமே_விற்றதை எண்ணி நொந்து உள்ளம் நொறுங்கிப் போனார்
வ உ சி.
நாட்டிற்காக குடும்பத்தையும், சொத்துக்களையும் இழந்த தியாகிகளை கொண்டாடாமல், வேசதாரிகளையும், பதவிப் பித்தர்களையும் தேசத் தலைவர்களாக கொண்டாடுவது கேவலத்திலும் கேவலம்.
ஓங்கட்டும் உமது புகழ்...
காவிரி நீர் இப்பதான் திருவாரூர் மாவட்ட எல்லையை தொட்டிருக்கு...
கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வீராணம் ஏரியை ஆகஸ்ட் 1ம் தேதிதான் வந்தடையும்.
இன்னும் நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கே காவிரி நீர் போகலை. அந்த பக்கம் காரைக்காலையும் இன்னும் சென்றடையலை. காவிரி தண்ணீர் வானத்திலேயே பறந்துபோய் கடல்ல பாய்ந்திருக்கு. அதை செத்துப்போன ராமசுப்பையர் ஆவி பார்த்துட்டு வந்து தினமாலர்ல எழுத சொல்லியிருக்கு.
மேட்டூர் அணையோட ஒட்டுமொத்த கொள்ளளவுமே 93 டி.எம்.சிதான். கடந்த 5 வருடத்துல நேற்று முன்தினம்தான் மேட்டூர் அணை முழுமையா நிரம்பியிருக்கு.
இந்த லட்சனத்துல மேட்டூருக்கே வராம எப்படி 321 டி.எம்.சி தண்ணீரும் கடலுக்கு போச்சி? ஒரே மாயாஜாலமா இருக்கு.
மேட்டூரில் திறந்துவிடப்படும் நீர் நாகப்பட்டிணம் மாவட்டம்வரை செல்ல 6-7 டி.எம்.சி தண்ணீரை பூமி உரிந்துகொள்ளும். 7 டி.எம்.சி தண்ணீர் போகத்தான் மீதித்தண்ணீரை பயன்படுத்த முடியும்.
இந்த 321 டி.எம்.சி கடந்த 13 வருடமா கடலில் கலந்த காவிரி நீரோட கணக்காம். நல்லவேளை மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்துலேர்ந்து கணக்கெடுக்காம விட்டானுக.
தமிழ்நாடு பாண்டிச்சேரிக்கு (காரைக்கால் காவிரி பாசன பகுதி) ஆண்டுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் கொடுக்கனும். அதுல பாதிக்கூட கொடுக்க மாட்டேங்குறோம்னு பாண்டிச்சேரி பல காலமா நம்ம மேல குற்றம்சாட்டு சொல்லிட்டிருக்கு.
காரணம் என்னன்னா மேட்டூரில் திறந்துவிடப்படும் நீர் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தின் பல பாசன கால்வாய்களில் பிரித்துவிடப்படுவதால் காரைக்கால்வரை தண்ணீர் போவது கிடையாது.
இவனுக என்னடான்னா முன்னுத்தி இருவத்தியொன்னு நானூத்தி இருவத்தியொன்னுன்னு கதை எழுதிட்டிருக்கானுக...
48 வகைச் சித்தர்கள்...
1. பதினெட்டாம்படிக் கருப்புகள்
2. நவகோடி சித்தர்கள்
3. நவநாத சித்தர்கள்
4. நாத சித்தர்கள்
5. நாதாந்த சித்தர்கள்
6. வேத சித்தர்கள்
7. வேதாந்த சித்தர்கள்
8. சித்த சித்தர்கள்
9. சித்தாந்த சித்தர்கள்
10. தவ சித்தர்கள்
11. வேள்விச் சித்தர்கள்
12. ஞான சித்தர்கள்
13. மறைச் சித்தர்கள்
14. முறைச் சித்தர்கள்
15. நெறிச் சித்தர்கள்
16. மந்திரச் சித்தர்கள்
17. எந்திரச் சித்தர்கள்
18. மந்தரச் சித்தர்கள்
19. மாந்தரச் சித்தர்கள்
20. மாந்தரீகச் சித்தர்கள்
21. தந்தரச் சித்தர்கள்
22. தாந்தரச் சித்தர்கள்
23. தாந்தரீகச் சித்தர்கள்
24. நான்மறைச் சித்தர்கள்
25. நான்முறைச் சித்தர்கள்
26. நானெறிச் சித்தர்கள்
27. நான்வேதச் சித்தர்கள்
28. பத்த சித்தர்கள்
29. பத்தாந்த சித்தர்கள்
30. போத்த சித்தர்கள்
31. போத்தாந்த சித்தர்கள்
32. புத்த சித்தர்கள்
33. புத்தாந்த சித்தர்கள்
34. முத்த சித்தர்கள்
35. முத்தாந்த சித்தர்கள்
36. சீவன்முத்த சித்தர்கள்
37. சீவன்முத்தாந்த சித்தர்கள்
38. அருவ சித்தர்கள்
39. அருவுருவ சித்தர்கள்
40. உருவ சித்தர்கள்
பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.
“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)”
“எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”
“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”
“விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”
என்று பல குறிப்புகள் உள்ளன...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பொய் வழக்கு அம்பலம்... 18 பேருக்கு பிணை...
மே 22 தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் அரிராகவன் உள்ளிட்ட 18 பேரை இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிணையில் விடுவித்தது.
ஒவ்வொருவர் மீதும் சுமார் 20 முதல் 120 பொய் வழக்குகள் வரையில் பதிவு செய்து ஒரு வழக்கில் தண்டனை கிடைத்தால் இன்னொரு வழக்கில் கைது செய்வது என்ற சட்டவிரோதமான வழிமுறையை பின்பற்றி, அனைவரையும் மாதக்கணக்கில் சிறைவைக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தூத்துக்குடி போலீஸ். இதனை முறியடிக்க சாத்தியமான எல்லா முனைகளிலிருந்தும் சட்ட ரீதியாக இதனை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான வழக்குகளை தொடுத்திருக்கிறோம்.
கைது செய்யப்பட்டவர்களுடைய பிணை மனுக்கள் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், பிணை மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். பிணை மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. கீழ்க்கண்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பரியேறும் பெருமாள், பூவலிங்கம், சிவகுமார், ஆசை, திருமாறன், முத்துக்குமார், வெங்கடேசன், சத்தியசீலன், ராம்குமார், இஸ்ரவேல், பால்ராஜ், செல்வகுமார், சையது முஸ்தபா, கெபிஸ்டன், இசக்கி துரை, அரி ராகவன், அக்பர், இருதய ஜெபமாலை.
மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் பிரபு ராஜதுரை, வின்சென்ட், வாஞ்சிநாதன், சுரேஷ் சக்தி கணேஷ் பிரபு ஆகியோர் வாதிட்டனர். அக்பர், இருதய ஜெபமாலை ஆகியோர் சார்பாக வழக்கறிஞர் ஷாஜி செல்லான் வாதிட்டார்.
இனி விசாரணை என்றால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41 பிரிவின்படி நோட்டீஸ் கொடுத்து விசாரணை செய்து அதன் பின் உரிய முகாந்திரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என்றும் போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொருவர் மீதும் குறைந்தபட்சம் 10 வழக்கில் முதல் அதிகபட்சம் 120 வழக்குகள் வரை போடப்பட்டிருப்பதால் ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியே பிணையம் (Bail Bond) வழங்க வேண்டியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட ஐந்து பேருக்காக சுமார் 500 பிணையங்களை தயார் செய்வதற்காக மட்டுமே 5 வழக்கறிஞர்களும் அவர்களது உதவியாளர்களும் இரண்டு நாட்களாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தது.
எனவே இந்த 18 பேர் மீதான எல்லா வழக்குகளுக்கும் பொதுவான பிணையம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியதையும் நீதிமன்றம் ஏற்றது.
பிணையில் விடுவிக்கப் படுபவர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பு கோரியது.
இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது குறிப்பாக எண்ணற்ற பொய் வழக்குகள் மற்றும் போலீஸ் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிராக பேசுவதையும் தடுக்கின்ற நோக்கத்துடனேயே இந்த நிபந்தனையை போலீஸ் தரப்பு கூறுகிறது என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிணையில் விடப்பட்டிருக்கும் மனுதாரர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் அதே நேரத்தில் போலீஸ் அடக்குமுறை மற்றும் பொய் வழக்குகள் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
வெள்ளிக்கிழமையன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நாம் பிணை உத்தரவு பெற்ற சதீஷ், முருகேஷ் (மக்கள் அதிகாரம்), மகேஷ், ராஜ்குமார் (குமரெட்டியாபுரம்), வியனரசு (நாம் தமிழர் கட்சி) ஆகியோரில், வியனரசு (இவர் மீது 10 வழக்குகள்) மட்டுமே இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் ஒவ்வொருவர் மீதும் 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருப்பதால் பிணையங்களை சரிபார்ப்பது தாமதமாகி வருகிறது.
மேலும் வெள்ளிக்கிழமை பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே, மே 22 க்கு முன் நடைபெற்ற போராட்டங்களின்போது போடப்பட்ட வழக்குகளைக் காட்டி குமரெட்டியாபுரம் மகேஷை மீண்டும் ரிமாண்டு செய்திருக்கிறது போலீஸ். இதற்கான பிணை மனு நாளை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
வழக்குகள் அனைத்தையும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது
தூத்துக்குடி, மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றங்களில் பிணை மனு தொடர்பான பணிகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், முருகானந்தம், மணிகண்டன், பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர்.
மேற்கூறிய வழக்குகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் கட்டணம் ஏதும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி நீதிமன்ற செலவுகள் உள்ளிட்ட பிற செலவுகளை மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் செய்து வருகின்றனர்.
பொய் வழக்குகளுக்கு எதிராகவும், மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான சதிகளுக்கு எதிராகவும், மே 22, 23 தேதி படுகொலைகளுக்குப் பொறுப்பான போலீசு அதிகாரிகளுக்கு எதிராகவும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடும்.
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு...
நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய்...
ஒருமுறை தேரையர் அகத்தியரிடம்...
குருவே.. மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.
அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார்.
சீடனே... உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.
சுவாமி. தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே. இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே. இதெப்படி சாத்தியம்? என்றார்.
சீடனே.. ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.
தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார்.
நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார்.
நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள்.
ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்.
மகனே. ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும்.
மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும்.
எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார்...
பிராணாயாமம்...
நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது..
மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது..
இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன..
உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றை கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்..
மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர்..
இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது..
நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...
குதம்பை சித்தர் பாடலின் சில வரிகள்...
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி - குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி...
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.
பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி குதம்பாய்
மண்ணாலே இல்லையடி..
விந்து விடார்களே வெடிய சுடலையில்
வெந்து விடார்களடி குதம்பாய்
வெந்து விடார்களடி.
காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான் குதம்பாய்
ஏமன் பயப்படுவான்..
கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்திற் தள்ளுமடி.
பொருளாசையுள்ள இப் பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி.
தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ?
போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான்வருமோ? குதம்பாய்
சாம்போது தான்வருமோ?
விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய்
மண்ணாசை ஏதுக்கடி?
தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே.
பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே
ஏழாம் நரகமடி குதம்பாய்
ஏழாம் நரகமடி.
மாரணஞ் செய்துபல் மாந்தரைக் கொல்வது
சூரணம் ஆக்குமடி குதம்பாய்
சூரணம் ஆக்குமடி.
காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ? குதம்பாய்
ஈசனைக் காணுவையோ?
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
தேவன் அவனாமடி குதம்பாய்
தேவன் அவனாமடி.
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.
எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
வல்லார்க்கு முத்தியடி.
பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி.
பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
சந்தத முத்தியடி குதம்பாய்
சந்தத முத்தியடி.
ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.
தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
பின்னாசையேதுக்கடி குதம்பாய்
பின்னாசையேதுக்கடி.
எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி...
என்றும் அழியாம எங்கும்
நிறைவாகி
நின்றது பிரம்மமடி குதம்பாய்
நின்றது பிரம்மமடி...
என்றும் அழியாம எங்கும்
நிறைவாகி
நின்றது பிரம்மமடி குதம்பாய்
நின்றது பிரம்மமடி...
இராசராச சோழன் சிலை போலி...
ஆம். இராசராசன் சிலை தமிழகம் மீண்டது எனும் செய்தி தரும் சிறு மகிழ்ச்சியாவது என் இனத்திற்குக் கிடைக்கட்டுமே என்று இதுவரை அமைதியாக இருந்தேன்.
ஆனால், நம் அறிவு எங்கே செல்கிறது?!
அனைவரும் ஜோசியத்தில் இறங்கிவிட்டோம்.
சோழன் வந்துவிட்டான்.
காவிரி வத்துவிட்டது.
2000 ஆண்டுகள் முன் கரிகாலன்.
1000 ஆண்டுகள் முன் ராசராசன்.
இப்போது சோழன் மறுபடி வருவான் என்றெல்லாம் ஆருடம் நீள்கிறது.
நாம் பழமை பேசிக் கெட்ட இனம் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த உண்மையை இப்போது போட்டுடைக்கிறேன்.
ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை பெரியகோவிலின் ஶ்ரீகார்யமாக 'பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்' என்பவர் இருந்தார்.
இவர் 1010-ல் ராஜராஜ சோழனுக்கு 74 செ.மீ [2.43 அடி] உயரத்திலும் மற்றும் அவனது பட்டத்து அரசியான லோகமாதேவிக்கு 53 செ.மீ. [1.74 அடி] உயரத்திலும் செப்புச் சிலைகளை செய்துள்ளார்.
ராஜராஜனும் தேவியும் நான்கு கைகளைக் கொண்ட சந்திரசேகரரை வழிபடுபது போல் தனித்தனியாக சிலைகளை வடித்திருக்கிறார் கார்யம்.
ஆனால், இப்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளின் உயரமோ மாறுபடுகிறது.
ராசராசனின் சிலையினுடைய உயரமோ 1 செ.மீ குறைகிறது.
உலகமாதேவி சிலை உயரமோ 2 செ.மீ வரை குறைகிறது அத்துடன் வணங்கிய நிலையிலும் இல்லை.
சிலைகள் மட்டுமின்றி ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்துள்ளார் ஶ்ரீகார்யம்.
இந்தக் தகவல்கள் அனைத்தையும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு இன்றைக்கும் பேசுகிறது.
தற்போது மீட்கப்பட்ட சிலை ராசராசன் சிலை என்பதற்கு நாகசாமியின் புத்தகத்தை ஆதாரமாகக் காட்டுவோர்,
ஏற்கனவே குஜராத் சென்ற தமிழகத்தின் குழு அப்போதைய முதலமைச்சர் மோடியிடம் கேட்டு சிலையைப் பெறும் கடைசி நேரத்தில் அக்குழுவில் ஒருவராக இருந்த நாகசாமி உயரத்தை அளந்து பார்த்துவிட்டு இந்த சிலை இல்லை என பல்டி அடித்தார் என்பதை மறக்கவேண்டாம்.
(தகவல்களுக்கு நன்றி: சிலை சிலையாம் காரணமாம் - 22 - தி ஹிந்து 05.08.2016)..
நாம் பழமையில் மூழ்கி இன்றைய இழிநிலையை மறக்கமுயல்கிறோம்.
நாம் பழைய வரலாற்றில் பெரிய சாதனைகள் செய்தோம்தான்.
ஆனால் நாம் மட்டுமே பெரிய பிடுங்கி இல்லை.
பாரோ மன்னர்கள் கட்டிய பிரமீடு முன்பு இராசராசன் கட்டிய பெரியகோவில் ஒன்றுமேயில்லை.
சைருஸ் எழுப்பிய பாரசீகப் பேரரசுக்கு முன் சோழப் பேரரசு ஒன்றுமேயில்லை.
நம்மை காக்க சோழனும் வரப்போவதில்லை எவனும் வரப்போவதில்லை.
வரலாறு அறிக..
அத்துடன் நடைமுறையும் உணர்க..
தமிழ் இனமாக எழுக...
96 தத்துவங்கள்...
ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு).
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்.
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்...
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும் போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்...
மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்...
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம்பூவின் பயன்கள்...
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...
அமைதியான மனதை அடைய என்ன வழி ? தியானம் தான்...
தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இப்போது "விடக்கா" என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன். பாலி மொழியில் "டக்கா" என்றால் தர்க்கம் எனப்படும். "
விடக்கா" என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும்.
அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம்.
இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது.
பிரமிட் தியானம் இந்தச் சக்தியைக் கொடுக்கிறது.
இதை ஆனாபானா சதி என்ற பெயரில் அழைக்கின்றனர்.
இதை ஒழுங்காகச் செய்தால் இந்த விடக்கா என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.
ஆனாபானாசதி, பாலி மொழியில் "ஆனா" என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. "அபானா" என்றால் வெளியே விடும் முச்சு. "சதி" என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
இதைச் செய்யும் முறை...
வசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.
மூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்து போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.
நம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம்.
இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.
எகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.
விஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது.
பிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.
தலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது.
சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள்.
தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான்.
இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும்.
இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே...
மிகப்பெரிய மாஃபியா அரசியல் இல்லை. அதை விட பெரியது மருத்துவ துறை...
உலகில் நாளுக்குநாள் புதிது புதிதாக நோய்கள் கண்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் புற்றுநோய் பல வருடங்களாக மனிதர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பல வகைகள் உள்ளன.
இதற்கு அதிகம் பயன்படுத்தும் முறை கீமோதெரபி. பல்வேறு வேதி பொருள் கலவை இதில் பயன்படுத்தப்படுகிறது.
நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என கூறவில்லை. நம் அனைவருக்கும் பகுத்தறிவு உள்ளது. அதை பயன்படுத்துங்கள்...
ஆதாரம்...
https://www.google.com/patents/US20130059018
https://www.leafly.com/news/health/can-cannabis-cure-cancer
http://chemocare.com/chemotherapy/what-is-chemotherapy/types-of-chemotherapy.aspx
https://www.cancer.org/treatment/treatments-and-side-effects/treatment-types/chemotherapy/chemotherapy-side-effects.html
http://scienceblog.cancerresearchuk.org/2014/08/27/mustard-gas-from-the-great-war-to-frontline-chemotherapy/
செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி -3...
ஒரு கேள்வி... உயிர் இன்றி உடல் தனித்து இயங்குமா?
என்னங்க கேள்வி இது... அது எப்படி உயிர் இல்லாம உடல் மட்டும் தனித்து இயங்கும். சின்னப் புள்ளைய கேட்டாக் கூட உயிர் இல்லாம உடல் இருக்காதுன்னு தெளிவா சொல்லிடுமே" என்று நீங்கள் கூறலாம்.
உண்மையும் அதுதான். உயிர் இன்றி உடல் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இது பலருக்கும் தெரியும்.
ஆனால் இதே உண்மையை நமது மொழி மௌனமாய் பறைசாற்றிக் கொண்டு இருப்பதை நாம் அறிந்தும் அறியாமல் இருக்கின்றோம். நம் மொழி எவ்வாறு அந்த உண்மையைத் தன்னுள் அடிப்படையாகக் கொண்டு உள்ளது என்றுப் பார்ப்போம்.
தமிழ் எழுத்துக்கள் இரு வகைப்படும்.
௧) முதல் எழுத்துக்கள் - அ , ஆ என்று ஆரம்பிக்கும் 12 உயிர் எழுத்துக்களே முதல் எழுத்துக்கள் ஆகும்.
௨) சார்பு எழுத்துக்கள் - க், ங், என்று ஆரம்பிக்கும் 18 மெய் எழுத்துக்களே சார்பு எழுத்துக்கள் ஆகும்.
மெய் எழுத்துக்களால் தனித்து இயங்க முடியாது. அவை முதல் எழுத்துக்களான உயிர் எழுத்துக்களைச் சார்ந்தே இயங்குவன. எனவே தான் அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.
இப்பொழுது அந்த 'மெய்' என்னும் சொல்லை நாம் சற்று கூர்ந்துப் பார்ப்போம்.
தமிழில் 'மெய்' என்னும் சொல்லுக்கு 'உடல்' என்னும் அர்த்தமும் உண்டு.
மெய் = உடல்.
எனவே, மெய் எழுத்துக்களில் 'மெய்' என்பதற்கு பதிலாக 'உடல்' என்று வைத்துப் பார்த்தோமானால், உயிரைச் சார்ந்தே உடல் இருக்கும் என்பதே தமிழ் கூறும் எழுத்துக்களின் விதி என்று நாம் அறியலாம்.
இவ்வாறு மெய் எழுத்துக்களை உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இருக்கும் எழுத்துக்கள் என்றும் அவை தனித்து இயங்கும் தன்மையை பெற்றவை அல்ல என்றும் தனது அடிப்படை எழுத்துப் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருக்கும் தமிழ் , அதன் மூலம் 'உயிர் இன்றி மெய் (உடம்பு) இல்லை' என்ற அறிவியல் கருத்தினை அமைதியாக உரைத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.
மேலும் இந்த உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேருவதன் மூலம் நமக்கு உயிர்மெய் எழுத்துக்கள் என்னும் 216 எழுத்துக்கள் கிடைக்கின்றன.
இந்த உயிர்மெய் எழுத்துக்களை நாம் உணர்ச்சிகள் என்று வைத்துப் பார்த்தோம் என்றால் இன்னொரு உண்மை நமக்கு விளங்கும்.
உயிரும் உடலும் இணைந்து இருந்தால் தானே உணர்ச்சிகள் தோன்றும், அதேப் போல் தான் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து உணர்ச்சியான உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. உயிரோ அல்லது மெய்யோ இல்லாது போனால் உயிர்மெய் எழுத்துக்கள் இருக்காது... அதேப்போல் உணர்ச்சியும் இருக்காது..
இதுவே நம் தமிழ் கூறும் உண்மை...
அறிவியல் ஆராய்ந்துக் கூறும் ஒன்றை நம் மொழி அதன் ஆதாரமாகவே வைத்து இருக்கின்றது.
நினைக்கவே சிலிர்க்கின்றது....
மழைநீர் சேகரிப்பின் மகத்துவம்...
வீட்டுக்குள் குளம் வெட்டிய ஆசிரியர்...
கிராம மக்கள் பாராட்டு : கேரள மாநிலம், மலப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் மழைநீரைச் சேகரித்து, வீட்டின் வளாகத்தில் மினி டேம் போல வெட்டி நீரை சேகரித்து வைத்துள்ளார். இந்தச் சிறிய குளத்தின் மூலம் அந்தக் கிராமத்தில் உள்ள மக்களின் வீடுகளின் கிணற்றுநீரின் மட்டம்உயர்ந்துள்ளது.
மலப்புரம் அருகே மக்காரபரம்பா கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பெரும்பள்ளி அகமது. இவரை அந்தக் கிராமத்து மக்கள் அகமது மாஸ்டர் என்றே அழைக்கிறார்கள்.
ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், பெரும்பள்ளி மாஸ்டர், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். அதில் முக்கியமானது மழைநீர் சேகரிப்புத் திட்டமாகும். இந்த கிராமத்து மக்களுக்கு மழை நீரி சேகரிப்புத்திட்டத்தின் மகத்துவத்தைத் தொடர்ந்துவலியுறுத்தி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் தனதுவீட்டின் வளாகத்தில் சிறிய செக்டேம் , அல்லது குளம் போன்று அமைத்து அதில் ஒருலட்சம் லிட்டருக்கும் அதிகமான மழைநீர் சேமித்து வைத்துள்ளார். தனது வீட்டு வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குளத்தால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருக்கும் நிலத்தடி நீர் மட்டம் அனைத்தும் உயர்ந்துள்ளது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மகத்துவத்தை உணரத் தொடங்கியுள்ளனர். இதற்காக பெரும்பள்ளி மாஸ்டரின் இந்த செயலைப் பார்த்த கிராம மக்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
சிறிய செக்டேம் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்தக் குளத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் வரை குளித்து மகிழவும் அனுமதித்துள்ளார்.
இது குறித்து இந்த மழைநீர் சேகரிப்பால் பலன் அடைந்த பி.ஷமீர் கூறுகையில், பெரும்பள்ளி மாஸ்டர் இந்தக் குளத்தை உருவாக்குவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கிராம மக்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகளையும் நடத்துவார். இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு அறிவுறுத்திவந்தார். மழைநீர் சேமிப்பு குறித்து மாநில அரசு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பெரும்பள்ளி மாஸ்டர் தனி ஆளாகச் சாதித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
தனி ஆளாக இருந்து மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மகத்துவத்தை உணர்த்திய பெரும்பள்ளி மாஸ்டருக்கு கிராம பஞ்சாயத்து சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. பஞ்சாயத்துத் தலைவர் கருவல்லி ஹபிபா, நிலைக்குழுத் தலைவர் பி.பி.ரம்யா ராம்தாஸ், செயலாளர் பி.கே.ராஜீவ், உள்ளிட்டோர் நினைவுப்பரிசை வழங்கி பெரும்பள்ளி மாஸ்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்...
தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர்கள்...
சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது. ஆன்மீகத்திலும், அறிவியல் சாதனைகளிலும் முழுமை பெற்ற நிலை தான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர்.
தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர் என்பார் திருமூலர்.
சித்தர்களை “அறிவன்” என்றும் “நிறைமொழி மாந்தர்” என்றும் குறிப்பிடும் தொல்காப்பியம்.
”அவிர்சடை முனிவர்”என்கிறது புறநானூறு.
அழியக்கூடிய உடம்பின் அசுத்தமான மூலகங்களை இரசவாதத்தின் மூலம் தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள் சித்தர்கள்.பொருளை சக்தியாக்குகிற வித்தை. அதன் மூலம் சுத்த தேகம் பெற்றனர். மீண்டும் அதனை மாற்றி பிரணவ தேகம் ஆக்கினர். அதனுடைய அடுத்த கட்டம் உருமாற்றும் ஞான வடிவு.
சித்தர்களின் தேகம் நுட்பத்திலும் அதி நுட்பம், கடினத்துவத்திலும் அப்படித்தான். அவர்கள் தங்கள் மனம் போல் உருமாறுவர். நோய்களுக்கும் மரணத்திற்கும் அப்பாற்பட்டது அவர்களுடைய அமைப்பு. மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.
சித்தர்களிடம் அனுபவம், ஆற்றல் எல்லாவற்றுக்கும் மேலாக இறையருள் இருந்தது. உயர்ந்த சிந்தனை உடையவர்கள் அவர்கள். எளிய வாழ்க்கை முறை அவர்களுடையது. அதனால் தான் அவர்களூடைய வாக்கு பலித்தது. காரிய சித்தியில் அவர்களால் பெரும் புகழ் பெற முடிந்தது.
சித்தர்களின் வலிமை தூய்மையின் வலிமை. அவர்களின் மன உறுதி ஒருமுகப்பட்டது. வார்த்தைகள் சக்தி மிக்கவை. சித்தர்கள் இன்றும் நம்மிடையே இல்லாமல் இல்லை. நாம் தான் அவர்களை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். பார்த்தால பிச்சைகாரர்கள் போலவும் பித்தர்கள் போலவும் தோற்றமளித்தாலும்-அவர்கள் தேகத்தில் தனி தேஜஸ் கண்களில் சக்தி (காந்தம்) ஒளி தெரியும். தேகத்தில் நறுமண வாடை மிதக்கும். அவர்களை உணர்ந்து கொள்ள இறையருள் வேண்டும். அவர்களை தரிசிக்கவும், உணரவும் பாக்கியம் செய்திருந்தால் தான் அது வாய்க்கும்...
பூமியுடன் தொடர்பில் இருங்கள்...
நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வேறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.
வேறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும், பெருமிதமாகவும் கொள்கிறோம்.
சரி இப்போது university of California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வேறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்ப்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்.
ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வேறும் கால்களுடன் நடப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்...
புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வேறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல் முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C" கிடைக்கிறது.
உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பரமரிக்கபடுகிறது.
எலும்பு,கல்லிரல்,மூளை(பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
மற்றும் வேறும் கால்களுடன் நடப்பதன் மூலம் chronic stress, உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது..
தொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்தஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் சீராகபராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது. (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது).
மிகமுக்கியமாக blood viscosity (இரத்த பாகுத்தன்மை) குறைக்கப்படுகிறது இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.
எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலை தரும் மற்றும் நாகரிகத்தால் வரும் நோய்களை களையெடுக்கும்.
முடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்.
Regenerate & Save forest...
Subscribe to:
Posts (Atom)