ஹோலி ஃபைர் என்பதை அறிய 19 ம் நூற்றாண்டிற்கு நாம் செல்லவேண்டும்.
அக்காலத்தில் உணவு வகைகளில் ஒன்று ரை என்ற தாவர உணவு.
இதை புல்லரிசி என்று நாம் அழைக்கின்றோம்.
கோதுமை, வாற்கோதுமை,போன்றவை வரிசையில் ரை,என்று சொல்லக்கூடிய உணவும் உண்டு.
நம்ம இந்தியா போன்ற பகுதியில் இதை உபயோகிப்பது குறைவுதான் என்றாலும் மேலைநாடுகளில் இன்றும் கூட ஒரு முக்கியமான உணவு.
இதன் ஆரம்ப கால வரலாறு சுமார் 2100 ஆண்டுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனாலும் தென்மேற்கு ஆசியா பகுதியில் அதிகம் இந்த ரை பயிர்கள் வளர்ந்து இருந்ததற்கான சுவடுகள் இருந்துள்ளது.
இதன் வயது சுமார் 4 ஆயிரம் வருடங்கள்.
துரதிர்ஷ்டவசமாக அக்காலத்தில் உள்ள மக்கள் இந்த பயிரை பற்றி அறியாமல் இருந்துள்ளனர்.
பல பழங்குடியினர் அவர்களது கலாச்சாரத்தில் இந்த உணவை ஒதுக்கியே வைத்துள்ளனர்.
இதற்கு சரியான காரணம் தெரியவில்லை.. ஆனாலும் யூகிக்க முடியும்?
ஆமாம். காரணம் என்ன?
இப்போதுத்தான் 19 ம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டும்.
19 ம் நூற்றாண்டில் இந்த ரை முக்கிய உணவாக இருந்த காலகட்டத்தில்
ஜெர்மன் பிரான்ஸ் போன்ற
நாடுகளில் திடீரென ஒரு நோய் தாக்க ஆரம்பிக்கிறது.
அதாவது திடீரென கைகளில் கால்களில் தீ பட்டு ஏற்படும் தழும்புகள் போன்று தழும்புகள் ஏற்பட்டு எரிச்சல் ஏற்படும்.
இதன் காரணமாக கை கால்கள் கருப்பு நிறமாக மாறிவிடும்.
இதற்கு பெயர் ஹோலி ஃபயர் என்று பெயரிட்டனர்.
கடவுள் கொடுத்த சாபம் இது என்று பரவியது.
இதையடுத்து அந்த காலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயின் காரணமாக மடிந்துள்ளனர்.
இதையடுத்து 1970 ல் டாக்டர் துள்ளியர் என்பவர் இது சாபமும் அல்ல புனிதமும் அல்ல இது.
ரை, பயிரில் உண்டாகும் பூஞ்சை படிந்த ரை தாணியத்தை உண்பதால் உண்டாகும் பாதிப்பு தான் இது.
என கண்டறிந்தார் இந்த நோய்க்கு எர்கட் என்று பெயரிட்டார்.
இன்று இந்த நோய் அரிதாக இருந்தாலும் இதன் பாதிப்பு அக்காலத்தில் படுபயங்கர விளைவாகவே இருந்துள்ளது.
அதீத ஊட்டச்சத்து நிறைந்த இந்த உணவு ஒரு காலத்தில் மக்களை ஆட்டிவைத்தது.
இதனால் தான் என்னவோ பல பழங்குடியினர் இதை தொடாமல் தவிர்த்து வந்துள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.