14/07/2017

நடிகை ஒவியாவிற்கு ஒரு கோடி பேர் வாக்களித்ததை பற்றி பாமக அன்புமணி பேசிய வீடியோ.. மிகவும் நியாயமான பேச்சு...


ஒரு பொருளை வாங்கவும், விற்கவும் காசை கண்டிப்பிடித்து பயன்படுத்தியது தமிழனே...


மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவரை ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். . பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறரிடமிருந்து வாங்கினார்.

இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்ட மாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது இந்தக்  காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம்.

அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது.

மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது.


ஆதலால் - சோழிகளை - மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர், சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது.

இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும். அது . மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தை பயன்ப்படுத்த தொடங்கினர். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன.

செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அறிய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர். தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.


இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.
பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள் உண்மையே நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர்.

அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன.

அனைத்துக் குழுத்தலைவர்களுக்கும் தலைவனாக ஒருவன் உருவானான். அவனே வேந்தன் என்று அழைக்கப்பட்டான். அவ்வாறு உருவானவர்களே தமிழக மூவேந்தர்கள்.

அம் மூவேந்தர்களும் தங்களுக்கென சில காசுகளை வெளியிட்டார்கள். அவை சதுரச் செப்புக் காசுகள் என்று வழங்கப் பெறுகின்றன. சேரரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும் மறுபக்கம் வில் அம்பு உருவமும் அல்லது பனை மரம் உருவமும் இருக்கும்.


சோழரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும், மறுபக்கம் புலியினது உருவமும் காணப்படும்.

பாண்டியரது காசில் ஒருபக்கம் யானை உருவமும், மறுபக்கம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

குறுநில மன்னரான மலையமான் காசில் ஒரு பக்கம் குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் சின்னமும் காணப்படும்.

குறுநில மன்னரான அதியமான் காசில் ஒரு பக்கம் நீண்ட கழுத்தையுடைய குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் கரைகள் சின்னமும் காணப்பெறும்.

மேற்குறிப்பிட்ட சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

இதற்கு அடுத்தகட்ட வளர்ச்சி செப்புச் சதுர மற்றும் ஈய முட்டை வடிவக் காசுகளில் பண்டைத் தமிழ் எழுத்தில் மன்னர் பெயர் பொறித்து வெளியிடப்பட்டவை ஆகும். .

இதுவரை பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறிக்கப்பட்ட காசும், அதிய மன்னன் - சேந்தன் அதினன் னெதபிரான் - பெயர் பொறிக்கப்பட்ட  காசும்  புழக்கத்திற்கு   வந்துள்ளன.

அவை கி.மு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை.


காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.

முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.

இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது.

இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்
மலையமான் காசுகள்..

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன்.
இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துள்ளன.

அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன்..

இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்போது நாம் பயன் படுத்தும் காசுகள் பல காலங்களையும் பல நாகரிகங்களை தாண்டி வந்து உள்ளது என்று நினைக்கும் போது சற்று வியப்பாகவே உள்ளது...

விசிக திருமாவும் பகுத்தறிவும்...


இது எந்த ஊரு பெரியார் பகுத்தறிவு கொள்கைனு தெரியல...

இந்து, இந்தியா, திராவிடம் யாவும் கற்பனையே - பாவலேறு பெருஞ்சித்திரனார்...


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ, எங்கும் இல்லை.

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ,
அவ்வாறு, தமிழம் தமிழ்மொழி அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது.

அது, தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது.

இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதி, அத்திராவிட மொழியாசிரியர்களும், புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும்மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல.

இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று.

நன்றி: தென்மொழி 1988 நூல்,
வேண்டும் விடுதலை, பக்.294, 295...

டிடிவி தினகரன் சட்டசபையில் புகழாரம்: அமைதியின் சின்னம் சசிகலா...


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அமைதியின் சின்னம் எனவும். டிடிவி தினகரன் புன்னகை மன்னன் எனவும் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் புகழாரம் சூட்டினார்...

பாஜக வில் கூட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் எச்சைகளை பார்தீர்களா..?


விபச்சார ஊடகங்கள்...


பாஜக காரர்களை தேர்ந்தெடுத்து மோடி யை குஷி படுத்துகிறார் அதிமுக டெட்பாடி...


தமிழ்த் தேசிய போராளி வீரசந்தானம் காலமானார்...


எலிகளுக்காகவே ஒரு அதிசய கோவில்...


ராஜஸ்தானின் பீகானேர் மாவட்டத்தில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையின் அவதாரமான கர்ணி மாதாவின் திருக்கோயில், எலிகளுக்கான ஒரு ஆலயமாகவே கருதப்படுகின்றது.

அரண் போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது கர்ணி மாதாவின் திருக்கோயில்.


இக்கோவிலின் முன்புற நுழைவு வாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது, இக்கோயிலின் வாயிற் கதவுகள் வெள்ளியால் ஆனவை.

அதில் கர்ணி மாதாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள்அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளன.


அதில் ஒன்றில் தேவி கையில் சூழத்துடன் சுற்றி எலிகளுடன் காட்சி தருகின்றாள்.

இங்கு அதிகமாக கருப்பு எலிகள் மட்டுமே காணப்படுவதால், வெள்ளை எலிகள் தப்பித்தவறி கண்களில் பட்டு விட்டால் மிகவும் நல்லது என மக்கள் நம்புகிறார்கள்.


கர்ணி மாதாவின் கோவிலில் காணப்படும் எலிகளும் கர்ணிமாதாவின் சக குடிமக்களாகவே கருதப்படுகின்றன.

அதனால் தான் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளுக்கு இந்த ஆலயத்தில் ராஜமரியாதை அளிக்கப்படுகிறது.


இவ்வாலயத்தில் விக்ரகம் முழுவதும் குங்குமத்தால் மூடப்பட்டிருக்கிறது, பெரிய தட்டுக்களில் லட்டுகள், பால் பிரசாதங்கள் போன்ற தின்பண்டங்கள் எலிகளுக்கு வழங்கப்படுகின்றது...

ராஜஸ்தானில் வசித்து வரும் தமிழர்களான துரைராஜ்-லீலா தம்பதியினரின் மகளான மிதலி ராஜ் இந்திய அணி மகளிர் கிரிக்கெட் போட்டியின் தலைவராகவும் உலகின் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார் - வாழ்த்துக்கள்...


பாஜக வின் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு... அருண் ஜேட்லிக்கு சானிடரி நாப்கின்களை பார்சல் அனுப்பிய மாணவிகள்...


http://tamil.oneindia.com/news/india/kerala-students-posted-sanitary-napkins-minister-jaitley-289371.html

திமுக கருணாநிதி - பதவிக்காக 2 இலட்ச்சம் ஈழ தமிழர்களை கொன்ற எனக்கு பணத்துக்காக தமிழை கொலை செய்ய முடியாதா? வாழ்க திராவிடம்...


திமுக, அதிமுக கொள்ளையர்களால், தமிழ்நாடு அழிவது உறுதி... தமிழ் இனமே.. கோபம் கொள்...


கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு: 10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்...


ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய 10 பேரை விடுதலை செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் அறிவித்துள்ளனர்....

திருப்பூர் பெருமாநல்லூரில் புதிய டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்...


16 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பிஜேபி ஆட்சியில் இந்த உயிரிழப்புகள் நடந்திருப்பது கலவரத்தை தூண்டும் பாஜக அரசின் நாடகம் போலவே இருக்கிறது...


தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி பக்தர்களின் உயிர்களை பலி கொடுக்கும் இவர்கள் கையில் தான் இன்று தமிழக ஆட்சியாளர்களின் குடுமி சிக்கி இருக்கிறது என்பதை நினைக்கும் போது கவலைகள் அதிகமாகிறது.

இந்த காட்டுமிராண்டி காவி கும்பலிடம் இருந்து தமிழகம் எப்படி தப்பிக்க போகிறது?

காயத்ரி போன்ற ஆட்கள் நிறைந்த கட்சி தான் பாஜக...


அவர்களின் உண்மை முகம் பிக் பாஸில் காண்பிப்பதை விட மிகவும் கொடுமையானது.

இது போன்ற நபர்களின் கையில் அதிகாரம் சென்றால் என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்...

பணம் பெற்றுக் கொண்டு சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றது, சிறைதுறை DIG ரூபா பரபரப்பு புகார்...


கர்நாடக சிறைதுறை DIG ரூபா இது குறித்து எழுதிய கடிதத்தில் உயர் அதிகாரிகள் 2 கோடி பணம் பெற்றுக் கொண்டு சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து வருகின்றனர். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது உரிய முறையில் இதை அரசு விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சிறை துறை DG சத்தியநாராணய ராவ் இதை மறுத்துள்ளர். மேலும் அவர் கூறுவது உண்மை எனில் ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்...

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு , காவல் நிலைய சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல், 4 தனிப் படை அமைத்து போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்...


சுபாஷ் சந்திர போஸ் தொடங்கி யாசின் மாலிக் இப்ப ஐரோம் ஷர்மிளா என போராளிகளுக்கு எல்லாம் தமிழ்நாடுதான் இரண்டாவது வீடு...


போராட்ட வாழ்க்கையில் இருந்து மண வாழக்கைக்கு போகும் மணிப்பூர் போராளி ஐரோம் ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள்...

டேய் எவன் பாத்த வேலைடா இது...


உங்களுக்கு தெரியாத அதிசய பல்லி...


பல்லிகளை நீங்கள் சாதாரணமாக அறிவீர்கள். ஆனால் நாம் இங்கு அறிமுகப்படுத்தப் போகின்ற பல்லி இனம் நீங்கள் காண்கின்ற பல்லிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டது.

ஆர்மடில்லோ பல்லி என்பது இதன் பெயர்.

தென்னாபிரிக்க பாலைவனங்களில் வாழ்கின்றது. சுற்றி வளைக்க கூடிய வாலை உடையது.

ஆர்மடில்லோ பல்லி குஞ்சுகள் 6 முதல் 8.5 அங்குலம் வரை இருக்கும். இவ்வகை பல்லிகளின் நடத்தைகள் மிகவும் வித்தியாசமானவை.

உதாரணமாக கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் 60 பல்லிகள் வரை இருக்கும். பெண் பல்லிகள் குஞ்சு ஈனும். முட்டை இடாமல் குஞ்சு ஈனுகின்ற ஒரே ஒரு பல்லி இனம் இது தான்.

ஆனால் இப்பல்லி இனத்தின் தற்காப்பு நடவடிக்கைதான் விசித்திரமான நடத்தைகளில் குறிப்பிடத்தக்கது.

ஏதேனும் ஒரு ஆபத்து நேர இருக்கின்றது என உணர்கின்றபோது வாலை வளைத்து வாய்க்குள் கொண்டு வந்து பந்து போல சுருண்டு விடும்.

வாலில் உள்ள செதில்கள், கூர்முனைகள் எதிரியிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். பாதுகாப்பு கவசம் மாதிரியான ஏற்பாடு...