29/08/2018

இந்தப் படத்தில் இருப்பவர்தான் ரூட்ஷெல்ட். பிரிட்டனில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்...


பிரிட்டன்  அரசாங்கம், இவரிடமிருந்து கடனாகப் பெற்று, தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு, மகா செல்வந்தராக வாழ்ந்தவர்.

ஒருநாள் தனது பொக்கிஷங்கள்  நிறைந்த, அறைக்குள் நுழைந்து, கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய காற்றில், திறந்து வைத்த கதவுகள், திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன.

அது ரகசிய அறை.ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து,அதற்குள் செல்ல வேண்டும்.நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார்.பொக்கிஷ அறையின் சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது.

பல நாட்கள் பசி ,பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் ,சுவற்றில் சில வரிகளை எழுதினார் ....

"நான் உலகில் , மிகவும் உயர்ந்த மனிதனாக,பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்"

அவர் மரணித்துப் பல வாரங்களுக்கு பின்னரே,அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே மாட்டிக் கொண்டது தெரிய வந்தது.

பணம், பதவி, கெளரவம், அந்தஸ்து, இவற்றைக் கொண்டு, எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு, இச்சம்பவம் ஒரு பாடமாக அமையும்...

புரோக்கர் வைகோ நாயுடு வின் பச்சோந்தி பிழைப்பு....


ஓணம் பண்டிகையும் தமிழர் அறிவியலும்...


இந்நாள் மலையாளிகள், முன்னாள் சேர-தமிழர்களின் விழா ஓணம்...

தமிழர்களின் திருவிழா என்றாலே அது வானியல் திருவிழா தான். ஓணமும் ஒரு வானியல் திருவிழாவே.

ஓணம் பற்றி சொல்லப்படும் வரலாறு...

மகாபலி என்ற அசுர குல (அசுரன் அப்படின்னாலே தமிழன் தான். பலி-பலம் பொருந்திய வலிமையானவன்; மகாபலி, பாகுபலி - மிகுந்த பலமுடையவன்) மன்னன் நல்லாட்சி செய்தவர். இந்த நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்க நினைத்தார் விஷ்ணு என்ற விண்ணவன். 

விஷ்ணு வாமன (குள்ள) அவதாரம் எடுத்து வந்து அரசன் மகாபலியிடம் தனக்கு 3 அடி நிலம் தேவை என கேட்டார். 3 அடி நிலம் தானே என தன் குரு சுக்ர ஆச்சாரியாரின் சொல்லையும் மீறி சரி என்றார் மன்னர். உடனே முழு உருவம் எடுத்த விஷ்ணு ஒரு பாதத்தை விண்ணிலும், மறு பாதத்தை பூமியிலும் வைத்து மூன்றாவது அடி வைக்க இடம் கேட்க, மன்னன் தன் தலையையே கொடுத்தார்.

(கெளரவம் திரைப்படத்தில் பெரியவர் சிவாஜி தனக்குப் போட்டி வக்கீலான இளைய சிவாஜியை நினைத்து பாடும் பாடலில் இந்த வரலாறும் சொல்லப்படும். 
அந்தப்பாடல்: நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?)

மன்னரின் தலையில் பாதம் வைத்து  பாதாள உலகம் செல்லுமாறு அழுத்தினார் விஷ்ணு.

தன் நாட்டு மக்களை நேசிப்பதாக மன்னர் மகாபலி சொல்லவே விஷ்ணுவும் சரி ஒவ்வொரு வருடமும் வந்து விட்டு போ என்றார்.

இந்த நல்ல மன்னரை வரவேற்கவே பூக்கோலம் கொண்டு ஓணம் திருவிழா என விழாக் கொண்டாடுகின்றனர் சேர மக்கள்.

இந்த வரலாறுக்குப் பின் இருக்கும் தமிழர் வரலாறு.

கி. மு 10,000 ஆண்டளவில் சிந்துவெளி முதல் கேரள பகுதி வரை ஆண்ட தமிழின காலக்கட்டத்தில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு சென்று வருவது சாதாரண விசயமாக இருந்தது. அதனால் தமிழர் உலகப்பரப்பை 7 பகுதிகளாக, உலகங்களாக பிரித்து வைத்திருந்தனர்.

பாதாளம் அல்லது படு பாதாளம் என்று இன்றும் நாம் சொல்லும் வார்த்தையின் பொருளும் காலடியில் இருக்கும் நிலத்தின் செங்குத்தான பிளவு, மிக ஆழமான குழி என்பதே. தமிழக பகுதியில் ஒரு பெரிய குழியை தோண்டிக்கொண்டே சென்றால் பூமியின் அடுத்த பகுதியில் நாம் வெளியேறும் இடம் மாயன்கள் (தமிழர்கள்) வசித்த அதே தென், மத்திய அமெரிக்கா பகுதி தான்.

ஆக பாதாளம் என்று மிகச் சரியாக கணக்கிட்டு தமிழர்கள் சொன்ன பகுதிக்கு சென்று வந்த தமிழ் மன்னன் தான் மகாபலி மன்னன்.

(மாயன்கள் பற்றி விளக்கமாக விரைவில் இன்னொரு பதிவில் காண்போம்.)

இந்த வரலாறுக்குப் பின் இருக்கும் தமிழரின் வானியல் அறிவியல்

சேர தமிழர்கள் நிலா சிரவன நட்சத்திரத்திலும், சூரியன் சிங்க நட்சத்திரக்கூட்டத்திலும் இருக்கும் நாளில் ஓணம் கொண்டாடுகிறார்கள்.

பழந்தமிழர் குமரிக்கண்ட அழிவைக் கணக்கில் கொண்டு (கி. மு. 10,000 ஆண்டளவில்) துவங்கப்பட்ட "கொல்ல வருஷம்" என்று இன்றும் அந்தக் கோர நிகழ்வை நினைவு கூர்கிறார்கள் அந்த சேர மலையாளிகள்..

சங்க காலத்தில் தமிழர்களின் திருவிழா இந்த திருவோணம்.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், பாண்டிய மக்கள் திருவோணத்தை பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

"கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

தமிழரின் 10 நாள் திருவிழா :

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.

அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.

நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர்.

ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

ஆறாம் நாள் திருக்கேட்டை (திரிக்கேட்டா) , ஏழாம் நாள்மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

இது பற்றி மேலும் விளக்கம் காண:

பழந்தமிழர்கள் வருடக்கணக்கை ஆவணியில் (ஆகஸ்ட்-செப்டம்பரில்) வரும் சம பகல்-இரவு (Autumnal Equinox) நாளினைக்கொண்டும் தொடங்கி இருக்கிறார்கள்.

மேற்கத்திய வானியலில் (Aquila- பறவை) நட்சத்திரக்கூட்டத்தில் (தமிழில் அக்கிலா என்பதும் பறவையைக் குறிக்கும் சொல். காண்க:) அல்டைர் (Altair) என்றழைக்கப்படும் மைய நட்சத்திரத்தின் இரு புறமும் இரண்டு நட்சத்திரங்கள் காம்மா, பீட்டா என அழைக்கப்படுகிறது.

இந்த அல்டைர் நட்சத்திரத்திற்கு தமிழர் வைத்த பெயர் திருவோணம். திருவோணம் நட்சத்திரம் சிரவனா என்றும் அழைக்கப்படுகிறது.

27 நட்சத்திரக்கூட்டங்களில் 2 நட்சத்திரங்கள் தான் திரு என்ற அடைமொழி பெறுகிறது. ஒன்று திருவாதிரை (Betelgeuse), மற்றொன்று இந்த திருவோணம் (Altair ).

1. காம்மா, பீட்டா இரண்டு துணை நட்சத்திரங்களும் சம அளவில் நிலை நிறுத்தும் தராசு போன்று செயல்படுவதைக் குறிக்கிறது.

2. மகாபலி மன்னனும் தன் குருவின் பேச்சைக்கேட்டிருந்தால் தூர தேசத்துக்கு செல்ல வேண்டி இருக்காது என்றும் பொருள் குறிக்கிறது.

3. சிரவண நட்சத்திரம் என்ற சொல்லின் சமசுகிருத பொருளும் கேட்டல் என்பதையே குறிக்கும். காண்க:

4. காந்தி அடிகளை பாதித்த இரண்டு நாடகங்களில் ஒன்றான சிரவண நாடகத்தின் கருத்தும் கேட்டல் என்பதையே குறிக்கும். (இன்னொரு நாடகம் அரிச்சந்திரன்).

5. அந்த நாடகத்தில் உடற்குறையுள்ள பெற்றோரை இருபக்க கூடையில் சுமந்து சென்ற சிரவண என்ற அவர்களின் ஒரே மகன் பெற்றோருக்கு தண்ணீர் தர குளத்தில் இறங்கியபோது இராமனின் தந்தை தசரத அரசன் ஏதோ விலங்கு என்றெண்ணி அம்பெய்தி கொல்ல, அவனின் பெற்றோர் தசரத மன்னனுக்கு சாபம் விடுக்கின்றனர்: மகனின் பிரிவால் வருந்துவார் என்று. அதன் பிறகே பிறந்த இராமன் வனவாசம், தசரதனுக்கு பிரிவு வலி. காண்க:

இரண்டு நட்சத்திரங்களும் (காம்மா, பீட்டா) காலத்தால் முந்தைய, அழிவு நோக்கிய நட்சத்திரங்கள். மைய நட்சத்திரமோ (அல்டைர் அ  திருவோணம் அ சிரவனா) பிரகாசமானது, காலத்தால் பிந்தியது.

இப்படி தமிழரின் வானியல் அறிவு பல பழங்கதைகளாய், அறிவுரையாய், வரலாறாய், திருவிழாக்களாய் உருமாறி இருக்கிறது.

முன்னாள், இந்நாள் தமிழர்கள் அனைவருக்கும் திருவோண நல் வாழ்த்துக்கள்...

இலுமினாட்டிகளால் முடக்கப்படும் மக்களுக்கான விஞ்ஞானிகள்...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேரளாவிற்கு கண்டனம்...


வெள்ளப் பேரழிவு காலத்திலும்
தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது...

கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள பேரழிவால், அதன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தைப் பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையில் நீர்த் தேக்கும் உயரத்தை 142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்கவும், அவ்வணையில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரத்தை புதியதொரு மேலாண்மைக் குழுவிடம் ஒப்படைக்கவும் கேரள அரசு குறுக்குவழியில் சிந்தித்து செயல்படுவது கண்டனத்திற்குரியது.

கேரளத்தைச் சேர்ந்த இரசல் இராய் என்பவர் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தைக் குறைத்தால்தான் கேரளம் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று உள்நோக்கத்துடன் கூடிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன் விசாரணையின் போக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமிழ்நாட்டுத் தரப்பின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே, “தமிழ்நாடு அரசு மனச்சான்றுக்கு அஞ்சி நீர் மட்டத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்ய வேண்டும்” என்று அறிவுரை கூறினார். அப்பொழுது காணொலி மூலம் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நான் கொடுத்த அறிக்கையில், “காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமையை வெட்டிக் குறைத்து – குறைப்பிரசவம் போல் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இப்போது முல்லைப் பெரியாறு அணை உரிமையிலும் கை வைக்கிறாரே!” என்று கவலை தெரிவித்திருந்தேன்.

அடுத்து, நடுவண் நீர்வளத்துறை தலைவர் யு.பி. சிங் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழு, 139.99 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை வழங்கியுள்ள செய்தி இன்று வந்துள்ளது. இதே யு.பி. சிங்தான், உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்பு கூறிய “ஒரு செயல்திட்டம்” என்பது “மேலாண்மை ஆணையத்தை” குறிக்காது என்று முதன் முதலில் “விளக்கம்” கூறியவர் என்பது கவனத்திற்குரியது! தமிழ்நாட்டிற்கெதிரான அதே மனநிலையில்தான் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் உயரம் தொடர்பாகவும் அவர் சிந்தித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நிலவும் இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள அரசு நேற்று (23.08.2018) அபாண்டமான ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், கேரளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மனித உயிர்களும், பொருட்களும் சேதமானதற்கு முதன்மையான காரணம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாடு அரசு திடீரென்று திறந்துவிட்ட பெரு வெள்ளம் தான் என்று கூறியுள்ளது.

அவர்களின் கூற்றுக்கு சான்றில்லை என்றாலும், அவர்கள் வாதத்தில் கூறியுள்ளதை ஏற்றுக் கொண்டால் கூட ஆகத்து 15 அன்று 9,000 கன அடி மட்டுமே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளத்தின் வெள்ளப்பேரழிவு ஆகத்து 8ஆம் நாள் வாக்கிலேயே தொடங்கிவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விட்ட 9,000 கன அடி நீர் இடுக்கி அணைக்குச் சென்று, அதன் மதகுகள் வழியே வெளியேற வேண்டும். 70.5 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையின் வடிகாலுக்கு 9,000 கன அடி நீர் அபாயமான அளவா?

கர்நாடக அரசு முன் கூட்டியே தெரிவிக்காமல், திடீர் திடீரென்று 2 இலட்சம் கன அடி – இரண்டரை இலட்சம் கன அடி என்று காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறது. அதற்காகக் கர்நாடக அரசைத் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டவில்லை!

அடுத்ததாக, 21,450 கன அடி தண்ணீர் திறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தத் தண்ணீர்தான் இவ்வளவு பேரழிவிற்குக் காரணமா? இடுக்கி அணை உட்பட 80 நீர்த் தேக்கங்களிலிருந்து கேரள அரசு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. இந்த உண்மையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தக்கவாறு எடுத்துக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகத்து 16 அன்று, முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தை142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்க வலியுறுத்தி எழுதிய கடிதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய விடை மடலில், இரண்டு துயரச் செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்று, அணைக்கு முன்பாக உள்ள நீர் வரத்துப் பகுதியில் நீர் வரும் அளவு எடுப்பதற்கு தமிழ்நாட்டு அதிகாரிகளை கேரள அரசு அனுமதிக்கவில்லை என்பது. இன்னொன்று, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அணைப் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவால் யானை ஒன்று இறந்ததை சாக்காக வைத்துக் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு அன்று துண்டித்த மின் இணைப்பை இன்றுவரை கொடுக்க மறுப்பது. இவ்வளவு பெரிய முல்லைப் பெரியாறு அணையில் அனைத்துப் பணிகளும் மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலம்தான் செயல்படுகின்றன என்பது வேதனை அல்லவா!

மின் இணைப்புக் கட்டுமானத்திற்காக கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்ட நிலையிலும், மின் இணைப்பு கொடுக்க இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லியிருந்தார்.

இன்று (24.08.2018) உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் எந்தப் பகுதியையும் செப்பனிட்டு வலுப்படுத்த கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி மறுக்கிறது என்ற உண்மையைக் கூறியுள்ளது.

அத்துடன், கேரள அரசு கெட்ட நோக்கத்துடன் சதித்திட்டம் தீட்டுவதுபோல் முல்லைப் பெரியாறு அணை திறப்பினால்தான் கேரளத்திற்கு இவ்வளவு பெரிய வெள்ளமும், இவ்வளவு பேரழிவும் ஏற்பட்டது என்று குற்றம்சாட்டுகிறது என்று தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2014இல் வழங்கிய தீர்ப்பில், முதல் கட்டமாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் மூலம் மாற்றிவிடலாம் என்று கேரள அரசு முனைகிறது. இதில் வெற்றியடையா விட்டால், கேரள அரசு புதிய அரசமைப்பு ஆயம் கோரவும் கூடும்!

கேரள அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தக்க முறையில் எதிர்வினையாற்றி வருவது வரவேற்கத்தக்கது! அதேவேளை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள இந்த வழக்கின் ஊடாக, முல்லைப் பெரியாறு அணையின் சிற்றணைப் பகுதியில் அணையை வலுப்படுத்துவதற்குரிய கட்டுமானப் பணிகளை செய்வதற்கு புதிய ஆணை ஒன்றைப் பெற்றாக வேண்டும். கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு (பணத்திற்குத்தான்) கொடுக்க வேண்டும் என்ற ஆணையையும் உச்ச நீதிமன்றத்தில் பெற வேண்டும்.

நடுவண் நீர்வளத்துறைத் தலைவரின் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைத்து, அது தண்ணீரைத் திறந்து மூடும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ள கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது! 06.09.2018 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, தகுந்த வழக்கறிஞர்களை வைத்து, கேரளத்தின் சதித்திட்டங்களை முறியடிக்க தமிழ்நாடு அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்...

விஷப்பாம்பு ரோகினி...


கிரேக்கமும் தமிழகமும்...


சமீபகாலமாக செய்திகளில் கீரீஸ் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி கேள்வி பட்டிருக்கலாம். பிரச்சனை என்னவென்று சுருக்கமா சொல்கிறேன்..

கீரிஸ்நாடு ஜெர்மன், அமெரிக்கா மற்றும் யூகே நாட்டிடம் இருந்து வளர்ச்சிகாக கடன் வாங்கியுள்ளது. தேதியில் வட்டியும் கட்டவில்லை, அசலும் கட்டவில்லை. வங்கி பணம் இல்லாம திவாலிகிருச்சுன்னு சொல்வாங்களே அதாவது டெபாசிட் கம்மி கடன் மட்டும் அதிகமா கொடுத்து திரும்ப வராமல் போண்டி ஆகுறது, அந்த நிலை தான் கிரீஸுக்கு. காரணம் என்னவா இருக்கும், கேவலமான பொருளாதார கொள்கை தான்.

சரி இங்க ஏன் தமிழகம் வந்தது?

அதிமுக அரசு ஆட்சிக்கு வரும் போது தமிழகதின் கடன் ஒரு லட்சம் கோடி. தற்போதைய அதிமுக சாதனை கடனை ரெண்டு லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அவர்கள் சொல்லும் சாக்கு உள்நாட்டு உற்பத்தில் 20% கடன் வாங்கலாம் என்று. ஆனால் இவர்கள் கொடுக்கும் புள்ளிவிபரம் நம்பக்கூடியதா?

உற்பத்தியை மட்டுமே கணக்கில் காட்டும் அதிமுக அரசு மனிதவள மேம்பாட்டை கோட்டைவிட்டு விட்டதே. மக்களுக்கு வேலை வாய்ப்பில்லாமல் இவர்கள் சொல்லும் உற்பத்தி கணக்கை எதிர்கட்சிகள் கூட கேள்வி கேட்காமல் இருக்கே ஏன்?

50 வருடங்களுக்கு முன்னால் ஒரு மணி நேரத்தில் 100 மீட்டர் துணி நெய்ய 50 ஆட்கள் உழைப்பு இருக்கும். அது ஒரு உதாரண கணக்கு அதே போல் மற்ற உற்பத்திக்கும் ஆனால் இயந்திரமான உலகில் அனைத்திற்கும் இயந்திரம் தான் பிரதானம், மனிதம் வெறும் கண்காணிப்பாளம் மட்டுமே. அதுக்கு எத்தனை ஆட்கள் உழைப்பு தேவைப்படும்? அப்படியானால் நம் மனிதவளம் எந்த லட்சணத்தில் இருக்கிறது?

வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்கள் தகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வேலையில். கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத சம்பளத்தில் ஆனால் அரசு சொல்லும் தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளது என்று.

அந்த புள்ளிவிபரம் அரசு பணியாளர்களின் சம்பள சதவிதம் கொண்டும், நுகர்வோர் பயன்பாடு கொண்டும் அளக்கப்படுகிறது.

அதாவது ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவனையும் ஆயிரம் சம்பளம் வாங்குபவனையும் ஒரே மாதிரியாக பார்க்கும் அரசு.

நிதி நெருக்கடியை சமாளிக்க டாஸ்மாக் என்ற விசத்தை மட்டுமே அரசு நம்பியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

இப்படியே குடிச்சிட்டு போனா எல்லாரும் செத்துபோய் குடிக்க ஆள் இருக்காதே. அப்போ தமிழக அரசு அண்டை மாநிலங்களில் சரக்கு விற்குமோ?

ஒரு அரசு நிதி நெருக்கடியை சமாளிக்கும் லட்சணமா இது?

சாப்பிடுவதற்கு மக்களுக்கு ரொட்டி இல்லை மன்னா என சொன்னதுக்கு ரொட்டி இல்லாட்டி என்ன கேக் சாப்பிட சொல்லுங்கன்னு சொன்னானாம் ஒரு முட்டாள் மன்னன். அந்த லட்ணத்தில் இயங்கிறது அரசு.

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சமமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா?

ஒவ்வொரு சாமான்யனும் பெரும் கடனில் தான் இருக்கின்றான். அவனை சமாதானம் செய்ய இலவச தொலைகாட்சி, இலவச மின் விசிறி, இலவச மிக்ஸி கொடுத்து பின்னாடியே மின்சார கட்டணத்தை நாலு மடங்கு உயர்த்தி வயிற்றில் அடிக்கிறது அரசு.

மின்சாரத்தில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல் (அல்லது இழப்பு. இப்படி தானே 2ஜி அலைகற்றையில் ஜல்லிடக்கிறானுங்க).

பெரும் முதலாளிகள் தன் சொந்த வருமானத்தில் மட்டுமே வருமான வரியாக அரசுக்கு வரி செலுத்துகிறான் ஆனால் ஒவ்வொரு சாமான்யனும் உன்னை போல என்னை போல ஒவ்வொருவனும் உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி, கல்வி கூட நம் காசு தான் வரியாக போகின்றது.

சராசரியாக ஒவ்வொரு பொருளுக்கும் 40%க்கும் அதிகமான அளவு உற்பத்தி விலையை விட வரியாக நாம் கொடுக்குறோம்.

நாம் வரி கட்ட மாட்டோம்னு சொல்லலையே, அப்படி மக்களை காக்க வேண்டிய அரசு தன் நிதி நெருக்கடியை சமாளிக்க மக்களுக்கு விசம் விற்பதை எப்படி அனுமதிப்பது.

அரசு மருத்துவமனையில் மது அடிமைகள் நாய் போல் பார்க்க படுகிறார். திருந்தலாம்னு போறவன் கூட ரெண்டு நாளில் இதுக்கு குடிச்சே சாவலாம்னு ஓடியாறான்.

டாஸ்மாக்கை மூடினால் கள்ளசாரயம் வருமாம். இப்ப மட்டும் என்ன நொள்ளசாராயம் விக்குதாம்.

சட்டபஞ்சாயத்து அமைப்பு மதுவின் தரத்தை சோதிட வேண்டும் என கேட்டத்தற்கு அரசு மறுத்து விட்டது பின் அவர்கள் கோர்ட் அனுமதியுடன் சோதித்து பார்த்ததில் நிர்ணயிக்கபட்ட அளவை விட ஆல்ஹகால் அதிகமாக இருந்தது. அதற்கு அவர்கள் தடை கோரியும் அதே சரக்கு வித்துகிட்டு தான் இருக்கு.

இங்கே பெரும் பணமுதலைகள் மேலும் பண டைனோசர்கள் ஆகவும் ஏழைகளும், சாமானயர்களும் நசுங்கி நாசமாக போகவும் தான் அரசு இயங்கி கொண்டிருக்கிறது.

டாஸ்மாக்கை ஒரேடியாக மூட முடியாது தான். கடைகளை குறைக்கலாமே. நேரத்தை குறைக்கலாமே.

இப்படியான போதை அடிமைகளை உருவாக்கி என்ன செய்ய கனவு கண்டுகொண்டிருக்கிறது. இதுதான் சிறப்பு பொருளாதாரமா?

நிச்சயம் இந்த பதிவு அதிமுக அடிமைகளுக்கு . ஆப்பு சொருகுன மாதிரி தான் இருக்கும்.

நீங்களெல்லாம் நேர்த்து விட்ட எருமைகள், கண்ணை கட்டிய கழுதைகள். இது உங்களாக எழுதப்பட்டதல்ல.

சமூகம்பால் அக்கறை கொண்ட ஒவ்வொரு சாமான்யனுக்காகவும் எழுதப்பட்டது...

சாராய வியாபாரி அதிமுக அரசு...


நல்ல எண்ணங்களை ஏற்படுத்த...


உங்களது எதிர்மறை எண்ணங்களை போக்கி உங்களை சுற்றி எப்போதும் நல்ல உணர்வுகளையும், நல்ல எண்ணங்களையும் ஏற்படுத்த எளிய முறைகள்....

1. உங்களுக்கு என்ன வேண்டுமோ , அதில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்..

2. உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மட்டும் செய்யுங்கள்

3. உங்களை சுற்றி இருக்கும் நல்ல அடிப்படை வசதிகள் ( மின்சாரம், காற்று , தண்ணீர், இருக்குமிடம், சுவாசிக்கும் காற்று, முதலிய) எல்லாவற்றையும் மனதார பாராட்டுங்கள், நன்றி கூறுங்கள்...

4. நியூஸ்பேப்பரில் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....நியூஸ் பேப்பரில் , நகை, வீட்டு உபயோக பொருட்கள், கார் , ஸ்கூட்டி, பைக் , வீடு போன்ற பெரிய விளம்பரங்களை மட்டும் பாருங்கள்..

5. டிவியில் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும் செய்திகளையும், அழுகை சீரியல்களையும் பார்க்காதீர்கள்.

மற்றவர்களை குறைசொல்லி கொண்டிருக்கும் செய்திகளால் , தவறுகளை பெரிதுபடுத்திகொண்டே இருக்கும் செய்திகளால் , விபத்து செய்திகளால் மனதிற்குள் எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும்

6. அறிவு பொக்கிஷங்களையும், நல்ல பாடல்களையும் மட்டுமே கேளுங்கள், பாருங்கள்...

7. நீங்கள் எதற்கெல்லாம் நன்றி உடையவர்களாக இருக்கிறேர்களோ அவற்றையெல்லாம் மனகண்ணில் காட்சியாக உணர்ந்து அதற்கு மனதார அடிக்கடி நன்றி கூறுங்கள்..

உங்களிடம் நன்றியுணர்வு அதிகரிக்க அதிகரிக்க உங்களிடம் நல்ல உணர்வுகள் அதிகரிக்கும்.

8. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்..

9. தினமும் கொஞ்ச நேரமாவது முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து தன்னம்பிக்கையாக பேசுங்கள்... உலகத்தில் சிறந்த நபரிடம் பேசுவதாக உணருங்கள்

10. உங்கள் தன்னம்பிக்கையும், திறமைகளையும் மனதார நம்புங்கள்...

வணிகப் போர்...


நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?


ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.

ருத்ராக்ஷத்தை ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.

ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் என்று நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது.

இதனுடைய அதிபதி சனி.

இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார்.

ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும்.

வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்.

ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.

நட்சத்திரம் - கிரகம் - அணிய வேண்டிய ருத்ராக்ஷம்...

1) அஸ்வினி - கேது - நவமுகம்

2)பரணி - சுக்ரன் - ஷண்முகம்

3)கார்த்திகை - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

4)ரோஹிணி - சந்திரன் - த்விமுகம்

5)மிருகசீரிஷம் - செவ்வாய் - த்ரிமுகம்

6)திருவாதிரை - ராகு - அஷ்டமுகம்

7)புனர்பூசம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்

8)பூசம் - சனி - சப்தமுகம்

9) ஆயில்யம் - புதன் - சதுர்முகம்

10) மகம் - கேது - நவமுகம்

11)பூரம் - சுக்ரன் - ஷண்முகம்

12)உத்தரம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

13)ஹஸ்தம் - சந்திரன் - த்விமுகம்

14)சித்திரை - செவ்வாய் - த்ரிமுகம்

15)ஸ்வாதி - ராகு - அஷ்டமுகம்

16)விசாகம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்

17)அனுஷம் - சனி - சப்தமுகம்

18)கேட்டை - புதன் - சதுர்முகம்

19)மூலம் - கேது - நவமுகம்

20)பூராடம் - சுக்ரன் - ஷண்முகம்

21)உத்திராடம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

22)திருவோணம் - சந்திரன் - த்விமுகம்

23)அவிட்டம் - செவ்வாய் - த்ரிமுகம்

24) சதயம் - ராகு - அஷ்டமுகம்

25)பூரட்டாதி - சனி - பஞ்சமுகம்

26)உத்திரட்டாதி - சனி - சப்தமுகம்

27)ரேவதி - புதன் - சதுர்முகம்...

நாகரிகம் என்ற ஒரு சொல் இன்று நம்மை எங்கே கொண்டு சென்றுள்ளது என புரிகிறதா?


நம் உடலில் உயிர் எங்கு உள்ளது?


எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்...

நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இரு கண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது.

அது துலங்குவது இரு கண்களில்.

நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது.

இவ்விடத்தை லல்லாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.

“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.

மையமர் கண்டன் என்று மாணிக்கவாசகரும் தலையின் மத்தியில் உயிர் உள்ளதை கூறிப்பிடுகிறார்...

பாஜக - திமுக கூட்டணி...


ஆரியமும் திராவிடமும் ஒன்னு.. அதை அறியாதவன் வாயில மண்ணு...

இஎஸ்பி - ESP...


நம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு உணர்ந்து அறிதலை இ.எஸ்.பி (எக்ஸ்ட்ரா சென்செரி பிரசப்ஷன்) என்று அழைக்கிறோம். இதை 'ஏழாம் அறிவு' என்று கூட சொல்லலாம்...

இ.எஸ்.பியின் மூலம் ஒருவர் கடந்த, நிகழ், எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதை 1870ல் பிரிட்டனைச் சேர்ந்த சர்.ரிச்சார்ட் பர்ட்டன், டாக்டர்.ஜே.பி.ரைன் கண்டறிந்தனர்.

1892ல் டாக்டர்.பால் ஜாய்ன் இதை தன் ஆராய்ச்சியில் அதிகம் உபயோகித்தார். ஒவ்வொரு மனிதனும் இந்த இ.எஸ்.பி., யை வளர்த்துக் கொள்ள முடியும். நம் அன்றாட நடவடிக்கையில் இந்த இ.எஸ்.பி., எப்படி வேலை செய்கிறது, அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்பதை நாம் உணருவதில்லை. உதாரணமாக நாம் வெகு நாட்களாக, ஆண்டுகளாக சந்திக்காத, தொடர்பு கொள்ளாத ஒருவரைப் பற்றி கனவு கண்டிருப்போம். அடுத்த சில நாட்களில் அவரிடமிருந்து இமெயில், போன், நேரில் தொடர்பு கிடைத்திருக்கும். இது எல்லோருக்கும் இ.எஸ்.பி., சக்தி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

ஆழ்மனம் : சிலருக்கு பிறவியிலேயே இந்த சக்தி அதிகமாக இருக்கும். தனக்கு இத்தகைய சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தும் இருப்பார்கள். நாமும் உறுதியுடன் முயற்சித்தால் இ.எஸ்.பி., சக்தி பெறலாம். ஏனென்றால் அதற்குத் தேவையான தனித்திறமை நம்முள் இருக்கிறது. இ.எஸ்.பி., விஷயங்கள் நிகழ நம் ஆழ்மனதை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இ.எஸ்.பி., சக்தியால் வாழ்வில் என்னவெல்லாம் சாத்தியமாகிறது என்று பார்ப்போம்:

டெலிபதி : ஒரு மனதிலிருந்து, இன்னொரு மனதுடன் தொடர்பு கொள்வது டெலிபதி எனப்படுகிறது. இது ஒருவழி, இருவழித் தொடர்பாக இருக்கலாம். இதற்கு துாரமும், நேரமும் தேவையில்லை. முனிவர்கள், யோகிகள் தங்கள் குருவிடமிருந்து டெலிபதி மூலம் அறிவும், ஞானமும் பெற்றிருக்கிறார்கள்.

டெலிபதிக்கு ஒளியை விட வேகம் அதிகம். மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் டெலிபதியைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களுக்கும் இந்த சக்தி இருக்கிறது.

உள்ளுணர்வு : காரணமில்லாமல் ஒரு விஷயத்தை சரியானது என்று தெரிந்து கொள்வதை உள்ளுணர்வு என்று சொல்லலாம். தினமும் வாழ்க்கையில் இந்த உள்ளுணர்வு நமக்கு கார் ஓட்டும் போது, நடக்கும் போது, குளிக்கும் போது, பிரார்த்தனை, தியானம் செய்யும் போது கூட வரலாம்.

கிரேக்க மேதை ஆர்க்கிமெடிஸ் குளிக்கும் போது தோன்றிய புதிய விஷயத்தை உடனே அரசரிடம் போய் சொல்ல 'யுரேகா' என்று கூவியபடி ஓடியதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நமக்கு சவாலான, கஷ்டமான நேரங்களில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றி, நாம் நிலைமையை சமாளித்திருப்போம். இவை நம் உள்ளுணர்வின் வழிகாட்டல் தான்.

சூட்சும திருஷ்டி : நம் உடலில் இருக்கும் கண்களினால் பார்க்க முடியாத விஷயங்களைக் கூட பார்க்கக்கூடிய திறமையே சூட்சும திருஷ்டி. கண்ணுக்குத் தெரியாத இடங்கள், சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள், அவர்களுடைய ஒளி உடல், மனநிலை ஆகியவற்றைப் பார்க்க முடியும். பல சூட்சும திருஷ்டியாளர்கள் விண்வெளியில் உள்ள பல கோள்களைப் பற்றி கூறிய விஷயங்கள் ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேஜாவு : இந்த பிரென்ஞ் மொழி சொல்லிற்கு தமிழில் பொருள் இல்லை. நீங்கள் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது, ஏற்கனவே அந்த இடத்தைப் பார்த்திருப்பதாகத் தோன்றினால், ஒருவருடன் பேசும் போது ஏற்கனவே இந்த பேச்சைக் கேட்டிருப்பது போல் தோன்றினாலோ, அது தான் தேஜாவு. நம்முடைய முந்தைய பல பிறவியில், ஏதோ ஒரு பிறவியில் இது போன்ற நிகழ்ச்சி நடந்திருந்தால், நம் ஆழ்மனது அதை ஞாபகப்படுத்தும்.

டெலிகைனசிஸ் : மனதின் சக்தியால் துாரத்திலிருக்கும் பொருட்களை அசைக்க, இயக்க முடியும். இது விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள, விளக்கம் தர முடியாத விஷயமாக இருக்கிறது. 1973ல் உரிஜெல்லர் என்பவர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மனதின் சக்தியால் துாரத்திலிருந்தே ஒரு சாவியை வளைத்துக் காட்டினார்.

ஒரு குறிப்பிட்ட மனநிலையில் எதிர்காலத்தில் வரப்போகும் விஷயங்களை முன்னரே உணர்தல் முன்னுணர்வாகும். சிலர் தங்கள் குடும்பத்தில் வரப்போகும் விபத்து, இறப்பை கனவில் கண்டிருப்பர். சிலருக்கு இந்த முன்னுணர்வு பிரார்த்தனை, தியானத்தின் போது கிடைக்கக் கூடும்.

இ.எஸ்.பி., திறமைகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள்: நம் ஆழ்மனதுடன் நாம் தொடர்பு கொள்ள, பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்துதல்; ஒருவருடைய கற்பனை சக்தியை கொண்டு ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்தும் போது நாம் வெற்றிகளைக் கவர்ந்திழுப்பவர்கள் ஆகிறோம். நம் எண்ணங்களின் சக்தியையும், உணர்வுகளின் சக்தியையும், ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தும் போது, அந்த சக்தி பிரபஞ்சத்தை எட்டி அங்கிருந்து அந்த எண்ணங்களுக்கு ஏற்ப விஷயங்களை நமக்குப் பெற்றுத்தரும்.

புதிய விஷயங்கள்: நம் அன்றாட வாழக்கையில் பழக்க வழக்கம் காரணமாக தினசரி செய்ததையே ஒவ்வொரு நாளும் அதேபோல் மீண்டும், மீண்டும் செய்கிறோம். இதை தவிர்த்து தினமும் புதுப்புது விஷயங்கள் கற்க, கேட்க, வேண்டும். நம் அன்றாட வேலைகளைக் கூட புது மாதிரி செய்ய வேண்டும். இதுவும் நம் ஆழ்மனதை அணுகுவதற்கு துணைபுரியும். நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே நினைக்கவோ, பேசவோ செய்வது என்று உறுதியாக இருக்க வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்று செயல்பட வேண்டும். உங்கள் நோக்கத்திற்கும், குறிக்கோளை அடைவதற்கும் உதவும் புத்தகங்களைத் தேந்தெடுத்து, அவற்றை இரவு துாங்கும் முன் வாசியுங்கள். துாங்கும் முன், நாம் பெறும் தகவல்கள் நம் ஆழ்மனம் செயல்படுவதற்குத் தேவையான செய்திகளை ஆழ்மனதிற்குக் கொடுக்கும்.

மெஸ்மெரிஸம் : மெஸ்மெரிஸம் என்பது பிரான்ஸ் அன்டன் மெஸ்மர் என்பவரால் கண்டறியப்பட்டது. அவர் மனிதர்களின் உடலுக்குள் காந்த சக்தி மிகுந்த திரவம் ஓடுவதாக நினைத்தார். அதன் ஓட்டம் தடைபடும் போது நோய்கள் உண்டாவதாகவும், இதனால் காந்த சக்தி கொண்டு சரிப்படுத்தினால், நோய்கள் சரியாகிவிடும் என்றும் நினைத்தார். பின், காந்த சக்தியை பயன்படுத்தாமல் மனதின் சக்தி கொண்டு குணப்படுத்த முடியும் என்று கண்டார்.

ஹிப்னாடிஸத்தை மெஸ்மெரிசத்திலிருந்து வேறுபடுத்தி, பழக்கத்தில் கொண்டு வந்தவர்

ஜேம்ஸ் பிரைய்டு. இதில் சிகிச்சை அளிப்பவர் நோயாளியிடம் பேசி சில கட்டளை, யோசனைகளைக் கூறி நோயாளியின் மனதில் குறிப்பிட்ட எண்ணங்களை துாண்டிவிட்டு, ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு செல்கிறார். பின் நோயாளியின் ஆழ்மனதிலிருக்கும் விஷயங்களை பல கேள்விகள் கேட்பதன் மூலம் வெளிக்கொண்டு வருகிறார். இது போன்ற சூழ்நிலைகளில் தான் பலர் தனக்கு தெரியாத மொழியிலும், தெரியாத நபர்கள் குறித்தும் பேசுகின்றனர்.

நம் ஆழ்மனம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு அறிவு, மனம் சார்ந்த தகவல்களைப் பெறுவதால், நம்முடைய இ.எஸ்.பி., சக்தி துாண்டி விடப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும்.

ஆழ்மனதின் உதவியுடன் போட்டி, பொறாமை, வருத்தம், பயம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை விஷயங்களைக் களைந்து விட்டு, துாய்மையான மனதுடன் முயற்சியும், பயிற்சியும் செய்தால் இ.எஸ்.பி., திறமைகளை பெற்று சமூகத்திற்கு நன்மை செய்ய முடியும்...

பாஜக - திமுக கூட்டணி...


ஆரியமும் திராவிடமும் ஒன்னு.. அதை அறியாதவன் வாயில மண்ணு...

ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்களை தவிரித்திடுங்கள்...


கடந்த பிப்வரியில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழு 12 மாதங்களாக ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

அரசின் அறிக்கையின்படி, இம்மாற்று செயற்கை இடுப்பு எலும்புகள் 3,600 பேருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வைக்கப்பட்டன. ஆனால், இவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 254 பேருக்கு மறுபடியும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 2017இல் அமெரிக்காவில் இக்கம்பெனியின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் 8,000 பேருக்கு 2.47 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக அளிக்கப்பட்டது. ஆனால், இதே இழப்பீடு இந்தியாவிலுள்ளவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு அந்த கம்பெனி எந்தத் தகவலும் அளிக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் தரப்படவில்லை...

பாஜக பினாமி சேலம் கலெட்டர் ரோகினியை வருத்தெடுக்கும் தமிழர்கள்...


விஜய் மல்லையா இன்று ஆஜர்?


வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பியோடிய, தொழிலதிபர் விஜய் மல்லையா, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், இன்று நடக்கும் விசாரணையில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா, 'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் துவங்க, நாட்டின் பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அதை திருப்பிச் செலுத்தாமல், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பியோடினார். அவருக்கு எதிராக, அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, இரு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது...

பாஜக ஆதரவு பக்கங்கள்...



K7 NEWS - BJP
நாட்டு மாடு - BJP
VECHI SENJING - BJP
மாவு பாக்கேட் 2.0 - BJP
ஆமைகறி சைமன் - BJP
மோடி சேனை - BJP
பதிலடி மீம்ஸ் - BJP...

மூலிகை நீர்...



ஆவாரம்பூ நீர்:

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்:

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்:

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.

காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்:

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்:

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்:

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்...

பாஜக மோடியும் நாடகமும்...


சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை...


மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது" என்றார்.

தஞ்சை "பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்" - இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து...

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.

வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.

இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், "சாப்பிட்டது போதும்" என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.

எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.

ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையே சாப்பிட வேண்டும்....

தமிழனுக்கு காவு. வந்தேறிக்கு வாழ்வு...


வாசுதேவ நல்லூர்ப் போரின் வரலாறு...


தமிழ் மக்கள் உண்மையில் பெருமைப்படக் கூடிய ஒரு வீர காவியமாகும்...

அப்போரில் ஈடுபட்ட தமிழர்களின் வீரத்தை கண்டு வெள்ளைத் தளபதியாகிய காம்பெல்லே வியப்பில் ஆழ்ந்தான்..

28. 5. 1767 ல் அவன் சென்னையிலுள்ள கும்பினி கவர்னருக்கு எழுதிய ஒரு கடிதம்..

இன்றளவும் அந்த கடிதம் எழும்பூர் ரிகார்டு ஆபீசில் உள்ளது...

வாசுதேவ நல்லூர் என்ற புலித்தேவன் கோட்டையை தாக்குமாறு இன்று நம் படைக்கு உத்திரவிட்டேன் . பீரங்கிக் குண்டுகளாகலேயே கோட்டையைத் தகர்க்க முடியவில்லை.

குண்டுப்பட்ட இடங்களில் ஓட்டைகள் மட்டுமே விழுந்தன.

ஓட்டைகளைப் புலித்தேவன் வீரர்கள் பச்சை மண்ணும் பனைநாரும் கொண்டு அப்போதைக்கப்போது அடைத்து விட்டார்கள். விடாது சுட்டுத்தள்ளச் சொன்னேன்.

ஓட்டைகளை தமிழர்கள் தங்கள் உடல்களாலேயே அடைத்து நின்றார்கள்.

சுட்ட இடங்களிலெல்லாம் மண்ணும் நாரும் எப்படிச் சிதறுமோ, அப்படியே புலித்தேவன் வீரர்கள் அஞ்சாமல் தங்கள் பணியைச் செய்வதைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

நாகரிகம் குறைந்தவர்கள் என்று நம்மால் கருதபடுகிற தமிழர்களின் வீரம் நம் ஐரோப்பியர்களின் வீரத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல…

திருப்பூரில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் புதிய பாலத்திற்கு சளி பிடித்துள்ளது. விரைவில் காய்ச்சல் வந்து உடையப் போகின்றது...


எகிப்த்தை ஆண்ட தமிழன்...



எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டார்...

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார்.

அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர் காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வழிப்பட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர்.

இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும்.. பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்கள்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

பிரியாணி அரிசி விதைத்து விட்டு பழைய சோறு சாப்பிடும் தெய்வங்கள் விவசாயிகள்...


தமிழக வீரரின் வெற்றி செல்லாது...


ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் லட்சுமணனின் வெற்றி செல்லாது என அறிவித்துள்ளனர். ஓட்டப்பந்தய தடத்திற்கு வெளியே கால் வைத்ததால், தமிழக வீரர் லட்சுமணன் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் வெண்கலப்பதக்கம் வென்றது செல்லாது என அறிவித்துள்ளனர்...

பாஜக ஆதரவு பக்கங்கள்...


நோக்கு வர்மம்... non detailed post...


நோக்கு வர்மம் என்பது ஒருவகையான எண்ண புகுத்தல் தான்...

சின்னதா ஒரு explanation..

பார்வையால் தாக்குவதுனு நினைப்போம். ஆனால் எதிரில் உள்ளவனை இயக்கவும் முடியும். இதை ஏழாம் அறிவு திரைப்படம் நல்லாவே காட்டிருச்சு. அப்போ இது தாக்குவது என்பதை விட நமது எண்ணங்களை பார்வைவழியாக எதிரில் இருப்பவரின் மூளையில் நாம் நினைப்பதை விதைப்பது தான். அதன் மூலம் அவன் உடலை இயக்குவது.

மூளையில் உதிக்கும் எண்ணங்களை மற்றவர்களுக்கு பலமுறையில் விதைக்கலாம் (இதை தொடு மொழி, உடல் மொழி , முத்த மொழி  பல சொல்லியாச்சு).

எண்ண மற்றும் ஆற்றல் கடத்தலை உடலில் உள்ள எந்த பாகத்தை வைத்து வேண்டும் என்றால் பயன்படுத்தலாம் ஆனால் பாகத்திற்கு ஏற்ப ஆற்றல் மாறும்..

இதே விசயம் தான் இங்கேயும் நடக்கிறது....

எதிரில் இருப்பவன் இப்படி தான் செய்ய வேண்டும் என்று நினைத்து  ஒரு அலைவரிசை உருவாகும் (செய்தி ) ஒவ்வொரு செயலுக்கும் ஓவ்வொரு விதமான அலைவரிசை..

அதை நாம் பார்வையின் வழியாக அனுப்புகிறோம்.

(Remote = body , remote LED = eye ,
Battery= heart )

நோக்கு வர்மத்தில் எதிராளியின் கண்களை தான் பார்ப்பாங்க காரணம்

(அது ஒரு நல்ல receiver , பார்ப்பதை live la mind la காட்டுது அவ்வளவு நெருக்கமாக மூளையோடு இணைந்திருக்கு)

நமது கண்கள் வழியாக நமது மூளையில் எதிராளி என்ன செய்ய வேண்டும் என்று அலைவரிசையை அனுப்புது (remote LeD) எதிராளியின் கண் இந்த வேலையில் tv sensor pola வேலை செய்யும்... அந்த கண் அலைவரிசை வாங்கி மூளைக்கு அனுப்பிவிடும் பின் அதை உணரும்.

அணுப்பிய waves/செய்தி அலைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தால் எதிராளியின் மூளையில் புகுத்தி விடும்.  செய்ய சொல்லி அந்த அலைவரிசையில் சொன்ன விசயங்களை மூளை உடலுக்கு கட்டளை போட துடங்கும். அதை எதிராளியின் உடல் கேட்டுரும்.

இதை செய்ய ஒன்று கட்டாயம் அவசியம் இரண்டு பொருளுக்கும் ac/dc current vennum (உயிர்) அலைவரிசையை அடர்த்தியாக அனுப்ப வேண்டும்.

அதற்கு remote la battery la naalla power இருக்கனும் அதாவது உடலில் அதிக அளவில் மின்னோட்டங்கள் இருக்கனும்.

இன்னும் ஆழமாக தெரிய வேண்டும் என்றால் (if u have any doubts tv  remote working method uh paarunga)..

33 ம் எண்ணும் உண்மைகளும்...


எகிப்திய நாகரீகமும் வேற்றுகிரக வாசிகளும்...


பண்டைய எகிப்திய நாகரீகம் ரெப்டாலியன்கள் என்ற வேற்றுகிரக இனங்களால் உருவாக்கப்பட்டது என்று கோட்பாடு உள்ளது.

அதை உண்மையாக்கும் விதமாக புராதன எகிப்திய கல்வெட்டுகளில், சான்றுகள் காணப்படுகின்றன, அங்கு வானங்களையும், பிரகாசமான ஒளியையும் சூழ்ந்துள்ள பொருட்கள் மற்றும் மக்கள் பெரும்பாலும் விவரிக்கப்படுகின்றன.

"பரலோக மக்கள்" எகிப்தியர்களுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வந்தனர், அவர்களுக்கு போதனை செய்தனர் மற்றும் ஃபாரோனிச வம்சத்தை நிறுவினர். இந்த ஊர்வன இனத்தவர்கள் எகிப்தியர்களுக்கு கல், மண், மற்றும் நீர் ஒரு பிரமிடு கட்டும் தொழில்நுட்பத்தை எவ்வாறு அளித்தார்கள் என்பதை விவரிக்கும் கதைகளை எகிப்தியர்கள் கல்வெட்டுகளில் செதுக்கி உள்ளனர்...